Sunday, May 31, 2020

தொற்று நோய் அரசியல்குரல்  வழிப் பதிவு - 4 

தொற்று நோய் அரசியல்

மே 31 2020

நான்காவது ஊரடங்கின் கடைசி நாள் இன்று.  

68 நாட்கள் ஊரடங்கென்பது 73 வருட சுதந்திர இந்தியாவிற்குப் புதிது. இந்தியர்களுக்கு விருப்பமில்லா அனுபவமிது. 

Saturday, May 30, 2020

கொரானா - மகள் வரைந்த ஓவியங்கள்


கொரானாவிற்கு ஊரடங்கு தொடங்கி நாளை (31.05.2020) மொத்தம் 68 நாட்கள் முடியப் போகின்றது. 

67 நாட்கள் - கற்றதும் பெற்றதும்Friday, May 29, 2020

குடிகார கொரானா அவஸ்த்தைகள்

சுய ஊரடங்கு 4.0 - 71


Corona Virus 2020


(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

தமிழகத்தில் சென்னை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில் கடந்த 16ம் தேதி 3,600 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டு மதுவிற்பனை செய்யும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வந்தது. மணிக்கு 70 டோக்கன்கள் வீதம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறையை ஊழியர்கள் பின்பற்றவில்லை. இதேபோல், டோக்கன் உள்ள நபர் எவ்வளவு வேண்டுமானலும் மதுபானம் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததால் கடைகளில் சரக்கு விரைவில் விற்றுத்தீர்ந்தது. இந்தநிலையில், இதை சரிகட்டவும், வருவாயை மேலும் அதிகரிக்கவும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை காலை 10ல் இருந்து இரவு 7 மணி வரையில் நீட்டித்தது.

இதேபோல், 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 109.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் - 28.6 கோடி, திருச்சி மண்டலத்தில் - 27.4 கோடி, சேலம் மண்டலத்தில் - 24.3 கோடி, கோவை மண்டலத்தில் - 22.5 கோடி, சென்னை மண்டலத்தில் 6.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

5 நாட்களில் விற்பனை எவ்வளவு?
7ம் தேதி 172.59 கோடி
8ம் தேதி 122 கோடி
16ம் தேதி 163.5 கோடி
17ம் தேதி 130.1 கோடி
18ம் தேதி 109.3 கோடி
மொத்த விற்பனை 697.49 கோடிThursday, May 28, 2020

அதிகாரிகளுக்கு மனசாட்சி இருந்தால் போதும்.

சுய ஊரடங்கு 4.0 - 70


Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 31 வரை)புலம்பெயர் தொழிலாளர்களின் அவஸ்தைக்கு யார் காரணம்? 

மோடி.

தூங்கும் போதே தண்டவாளத்தில் இறந்தார்கள். இதற்கு யார் காரணம்? 

மோடி.

தமிழகத்தில் நோய்த் தொற்று இன்னமும் அதி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கு யார் காரணம். 

நிச்சயம் மோடி பெயரைச் சொல்வோம்.

அவர் தான் தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லையே?

ஆக காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் கடந்த 7 வாரங்களில் என்ன பிரச்சனை நடந்தாலும் எல்லாவற்றுக்கும் காரணம் மோடி மட்டுமே.இந்தியாவில் வறுமையை ஒழிப்போம்.

சுய ஊரடங்கு 4.0 - 69

Corona Virus 2020


(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

கொரானா காலத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்த இருபது லட்சம் கோடி திட்டங்களின் விபரங்கள்.

முதல் கட்ட அறிவிப்பில் ரூ.5,94,550 கோடி,

2ம் கட்ட அறிவிப்பில் ரூ.3,10,000 கோடி,

3ம் கட்ட அறிவிப்பில் ரூ.1,50,000 கோடி,

4 மற்றும் 5ம் கட்ட அறிவிப்பில் ரூ.48,100 கோடி மதிப்பிலான திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

மேலும், பிரதமர் முன்கூட்டி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.1,92,800 கோடியும்,

ரிசர்வ் வங்கி அறிவித்த திட்டங்களுக்கு ரூ.8,01,603 கோடியும் என மொத்தமாக ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன.
Wednesday, May 27, 2020

ராகுல் மற்றும் பிரியங்கா

சுய ஊரடங்கு 4.0 - 68

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)


கொரானா காலத்தில் கூட ராகுலும் பிரியங்காவும் மக்களுக்கான அரசியல் செய்ய முன் வரவில்லை. அவர்களின் பாட்டி அரசியல் போலவே கௌரவ அரசியல் எண்ணத்திற்குள் தான் இன்னமும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.  

ராஜீவ் காந்தி நல்லவரா? கெட்டவரா? ஊழல் செய்தவரா? அல்லது ஊழல் செய்தவர்களுக்குத் துணை புரிந்தவரா என்று தெரியாது. எங்கள் ஊரில் என் அருகில் நள்ளிரவில் வந்து நின்றார். அவர் போட்டு இருந்த செண்ட் வாசம் கூட என் நினைவில் உள்ளது. பாதுகாப்பு என்பது இல்லவே இல்லை. அவர் ட்ரேட் மார்க்கான கையை உயர்த்திக் காட்டுவது. அங்கு கூடியிருந்த ஐம்பது பேர்களை மதிப்புடன் பார்த்து அருகே சென்று சுற்றிச் சுற்றி வந்தார்.

Tuesday, May 26, 2020

"விகடன் வீழ்ச்சி"

நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் கொரானா பழிவாங்கிய துறை பத்திரிக்கை துறை.  தினசரிகள் முதல் வார இதழ்கள் வரைக்கும் பல விதங்களில் பல கோடிகளை இழந்துள்ளார்கள்.  இதன் அடிப்படையில் ஒவ்வொரு பத்திரிக்கை நிர்வாகமும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.  இப்போது விகடன் விவகாரம் இணையத்தில் பெரும் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஏன்?

சாதி, மதம், கட்சி, மற்ற கொள்கைகள் என்று ஒவ்வொரு நிலையிலும் முரண்பாடுகளுடன் நின்ற அனைவரும் தற்போது "விகடன் வீழ்ச்சி" என்ற நிலையில் ஒரே அணியில் நிற்கின்றார்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

சந்தோஷம் என்று கொண்டாடித் தீர்க்கின்றார்கள். திருமாவேலன் விகடன் குழுமத்தை விட்டுச் சென்றதும் விகடன் வாங்குவதை நிறுத்திவிட்டேன். வாரம் 200 ரூபாய்க்கு வார இதழ்கள் வாங்கிக் கொண்டிருந்தேன்.

Sunday, May 24, 2020

புலம்பெயர்த் தொழிலாளர்கள் - அகதியா அனாதையா (JothiG's Voice)

குரல்வழிப் பதிவு -  3

ஜோதிஜியின் வாரம்தோறும் ஒரு செய்தி.

"தமிழகத்தின் தலைப்புச் செய்தி"க்கு ஆதரவளிக்கும் உலகத் தமிழர்கள்  அனைவருக்கும் வணக்கம். 

இன்று இந்தியாவில், கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.  

ஏதாவது நல்லது நடந்துருக்கும் என்று நம்புகிறீர்களா? வாருங்கள் பேசுவோம்.  


Saturday, May 23, 2020

இயங்கலாம். சென்னை தவிர்த்து மே 23 2020

சுய ஊரடங்கு 4.0 - 67


Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் நாளை முதல் காலை 7 மணி - மாலை 7 மணி வரை இயங்க அனுமதி.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது.


Friday, May 22, 2020

ஆசிரியர், நண்பர் : திரு.ஜோதிஜி திருப்பூர்

Chakkravarthy Mariappan
11 April at 13:31 ·
"#டாலர்_நகரம்".

ஒரு விவசாயியின் நிலத்தில் விளைந்த பருத்தி, பஞ்சாகி, பிறகு ஒரு நூல் கடையில் நுழைந்து வெளியேறி, நூற்பாகி, ஆயத்த ஆடைகளுக்கு அடிப்படையாக மாறி பின்னர் ஏற்றுமதி செய்து வெளிநாடு செல்கிறது.

இதே போல ஒரு விவசாய குடும்பத்தவர் செல்லும் வணிக வாழ்க்கைப் பயணத்தில் வழியில் வாகனச் சக்கரம் பழுதாகி, டயர் பஞ்சராகி, ஆனால் இதற்கெல்லாம் நொந்து போகாமல் அனுபவத்தால், கற்றலால் முன்னேறி படைத்திருப்பது வாசிக்க அருமையான ஒரு நூல்.

Thursday, May 21, 2020

மறைந்த நடிகர் இர்பான் கானின் கடிதம்.

எனக்கு 'நியூரோ எண்டோக்ரைன்' புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் 'நியூரோ எண்டோக்ரைன்' புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.

Wednesday, May 20, 2020

இயக்குநர் வெற்றி மாறன் - நிகோடின் பழக்கம்

என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்' என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது. `நிகோடின், பிரவுன் சுகரைவிட அடிக்‌ஷனான விஷயம்' என்கிறார்கள்.


திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் திறக்கப்பட்டது

சுய ஊரடங்கு 4.0 - 66

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

#Tiruppur Guidelines for the functioning of industries in tiruppur district  3/5/2020

Tuesday, May 19, 2020

CORONA - கேள்வி பதில்

சுய ஊரடங்கு 3.0 - 65
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

சமூகப் பரவல் என்றால் என்ன?

கொரோனா சமூகப்பரவல் என்பது வெளி நாட்டில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து கொரோனா பரவாமல் உள்ளூர் தொடர்புகளில் பரவுவதுதான். ஆனால் அதன் எண்ணிக்கை வேறு மாதிரி இருக்கும். அதாவது கோடிக்கணக்கான மக்கள் வாழும் நமது தேசத்தில் நூற்றுக்கணக்கில் இருக்கும் நோய்த் தொற்று பல்லாயிரங்களில் மாறி லட்சங்களில் சில நாட்களிலேயே மாறுவதுதான் சமூகப்பரவல்.

2020 மே மாதம் சென்னையில் உள்ள சமூகப் பரவல் குறித்து?

Monday, May 18, 2020

கொரானா தமிழ்நாடு மே 18

சுய ஊரடங்கு 3.0 - 64

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

Tamil Nadu - Corona -update - May 2020 -18

தமிழகத்தில் இன்று 536 புதிய கரோனாவைரஸ் வழக்குகள்.

மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை-11,760.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கும் 20 லட்சம் கோடி

சுய ஊரடங்கு 3.0 - 63
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


மே மாதம் மூன்றாவது மாதம்.  இன்று முதல் நான்காவது ஊரடங்கு தொடங்குகின்றது.

Sunday, May 17, 2020

மறுபடியும் முதலில் இருந்து தொடங்கனுமா? - 31ஆம் தேதி வரை ஊரடங்கு


சுய ஊரடங்கு 3.0 - 62

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


தமிழகத்தில் வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் செயல்படுவதற்கான தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

கொரோனா என்பது நோய் அல்ல..! | 4TamilMedia


குரல்வழி பதிவு (ஜோதிஜி பேசுகிறேன்) - 2

கொரானா கால நினைவுகள்

வணக்கம்.

கோடைக் காலம், குளிர்காலம் என்று நாம் இதுவரையிலும் சொல்லி கொண்டிருந்த காலத்தோடு இனி கொரானா காலம் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரையிலும் பேசியுள்ளோம். ஆனால் அடுத்த 25 வருடங்கள் கழித்துக்கூட இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் கொரானா காலத்தை தலைமுறைகள் பேசப் போகின்றார்கள்.

தமிழகத்தில் 1980க்கு முன்னால் பிறந்த அனைவருக்கும்  வறுமை, பசி, பட்டினி, என்று எல்லாமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கலந்து இருந்தது. கடைசியாக 1974 ல் பஞ்சம் ஒன்று வந்தது.  அதற்குப் பின்னால் சூழல் மாறியது.  தமிழகம் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்தது.  1990க்கு பிறகு மொத்த இந்தியாவின் முகமும் மாறியது.  ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் முகம் முழுமையாகவே மாறியது. 

"20 லட்சம் கோடி".

சுய ஊரடங்கு 3.0 - 61

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

இப்போது நிர்மலாக்காவின் "20 லட்சம் கோடி".

கொஞ்சம் முன்னால் அருண் ஜேட்லி "கரை கண்ட வித்தகர்".

அதற்கு முன்னால் ப.சிதம்பரம் "ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர்".

அதற்கு முன்னால் மன்மோகன்சிங் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? "கண் கண்ட கடவுள்" போல வந்தார்?

சரி இவர்கள் யாருக்கு உழைத்தார்கள். என்ன செய்தார்கள்? இவர்களின் புத்திசாலித்தனம் யாருக்குப் பயன்பட்டது. இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டதா? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?

Saturday, May 16, 2020

உள்நாட்டில் அகதிகளாக அலையும் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள் - 2

சுய ஊரடங்கு 3.0 - 60
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தொழில் இன்மையால், சமீபகாலமாக தமிழகத்திற்கு அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஒடிஷா, ஜார்கண்ட், அசாம், பீகார், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.


கொரானா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 59

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படாத, இணையத்தை எப்போதும் பொழுது போக்கு என்கிற நிலையில் எடுத்துக் கொள்ளும் எனக்கு, கடந்த இரண்டு நாட்களில், ஆங்கில தளங்களின் வாயிலாக, இந்தியா முழுக்க கடந்த ஒரு வாரமாக, புலம் பெயர் தொழிலாளர்களின், அவஸ்த்தைகளை படங்களாகப் பார்க்கும் போது..........

என் மகள்களிடம் சொன்னேன்.

"நீங்களும் நானும் தமிழகத்தில் பிறந்ததற்கு முன் ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருக்கோம்".

07 05 2020 டாஸ்மாக் திறப்பு விழாப் படங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 58
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


07.05.2020 அன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  காட்சிகள் இங்கே புகைப்படமாக.  கொரானா என்பது பெரும் தொற்று நோய். வெளியே வரக்கூடாது. தனித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தான் மக்களிடம் அன்போடு சொன்னது என்பதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் படங்களைப் பார்க்கவும். மற்றவற்றை மறந்து விடவும்.  நன்றி.


மது வாங்க குடை பிடித்து வாருங்கள்.

சுய ஊரடங்கு 3.0 - 57
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


"காலைல 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரைக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.

மதியம் 1 மணி முதல் 3 மணிவரையிலும் 40 முதல் 50 வயதுவரையிலும் இருக்கும் குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.

மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் 40 வயதுக்குக் கீழான குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.."

Friday, May 15, 2020

கொரானா காலத்தில் திறக்கப்படும் மதுக்கடைகள்

சுய ஊரடங்கு 3.0 - 56

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

மே 4 2020

வாடிவாசல் திறந்தது போல உற்சாகம் தான். ஆனால் காற்பங்கு மகிழ்ச்சி மட்டுமே. என் வீட்டிலிருந்து அருகே உள்ள முக்கிய சாலைக்கும் 200 அடி தொலைவு தான். ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் ஒரு முறை தான் அந்தப் பக்கம் சென்றுள்ளேன். சந்தைக்காக வெளியே செல்லும் தருணம் தவிர வேறெங்கும் செல்லத் தோன்றியதே இல்லை. பயமில்லை. பொறுப்பு.

ஆனால் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முழு மனதோடு திருப்பூர் இயங்கலாம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மென்று விழுங்கி சென்னையிலிருந்து விபரமான அறிக்கை வரும் என்று தான் சொன்னார்.
கொரானா காலத்தில் காய்கறிகளின் விலை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்காக


ஜனத்தொகை அதிகம். குறைந்தால் பரவாயில்லை - May 2020

சுய ஊரடங்கு 3.0 -  55
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


மார்ச் 24 அம்மாவாசை தினம்.

மோடி காரண காரியத்தோடு அறிவிப்பு வெளியிட்டாரா? இல்லையா? என்று தெரியவில்லை. இந்தியா என்பது முதல் முறையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டது.கொரானா என்ற கண்களுக்குத் தெரியாத சிறிய கிருமி காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் முடக்கியது.

நாளை தினம் என்பது ஊரடங்கு தொடங்கி 44வது தினம். ஊரடங்கு, சுய ஊரடங்கு, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று ஒவ்வொரு கோட்டையும் கடந்து வந்தோம்.

Thursday, May 14, 2020

உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளுங்க.

சுய ஊரடங்கு 3.0 - 54
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

தமிழகத்தில் சிவப்பு குறி என்று அடையாளம் காட்டப்பட்ட சில மாவட்டங்களுக்கு மொத்தமாக 72 மணி நேரம் ஊரடங்கு என்றவுடன் மக்கள் அனைவரும் அங்கங்கே கூட்டமாகக் கும்மி தட்ட நம்மவர்கள் எப்போதும் போல அரசுக்கு அறிவே இல்லை என்கிற ரீதியில் படத்தையும் போட்டு பாடம் வேறு நடத்துகின்றார்கள்.

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை வாய்ப்பிருந்தால் இன்று செய்ய முடியுமா? என்று பாருங்கள்?

எவற்றை பயன்படுத்தக்கூடாது ?

சுய ஊரடங்கு 3.0 - 53
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


முகக்கவசங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .....

இந்தியா ,அமெரிக்கா உட்பட பல நாடுகள் இப்போது வெளியில் செல்பவர்கள் ,வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள் ,நெரிசலான குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ,பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் தன்னார்வலர்கள் உட்பட பொது இடங்களில் புழங்குபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருக்கிறது.

Wednesday, May 13, 2020

"நான் சாதிக்கப் பிறந்தவன்"

சுய ஊரடங்கு 3.0 - 52
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

இது கொரானா காலம்.
எல்லாத் தினமும்
ஞாயிற்றுக் கிழமையே.
இரவென்றால் விடியுமென்பது நம்பிக்கை.
கொரானா விடியல் என்பது
அவநம்பிக்கையாகவே உள்ளது.
இப்போது 56 நாட்கள் என்கிற அளவுக்கு வந்து நிற்கின்றது. வருகின்ற 17 அன்று மேலும் நீடிக்குமா? என்பது நமக்கு புரியும்.பழக்கங்கள் இனி தேவையில்லைசுய ஊரடங்கு 3.0 - 51
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


இன்று வரையிலும் மொத்தமாகப் பட்டியலிட்டுப் பார்த்தேன்,

பார்த்த, பழகிய, கேட்ட, விரும்பிய, பழகிய, விலகிய, வெறுத்த, ஆதரித்த, ஏக்கத்துடன் பார்த்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு உள்ளேன்.

காரணம் கொரானா காலம் மிகப் பெரிய பாடத்தையும், படிப்பினையும், வாய்ப்பை, வசதிகளை, வரத்தையும் கொடுக்க வந்துள்ளது.

Tuesday, May 12, 2020

Cartoonist Mathi - கருத்துச் சுதந்திரம்

சுய ஊரடங்கு 3.0 - 50
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

கருத்துச் சு’தந்திரம்’! #Thuglak #Statue #CartoonistMathi

கருத்துச் சு’தந்திரம்’!

தூங்குபவர்களை எழுப்ப முடியும்; தூங்குகிறவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இதில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!

அண்மையில் நான் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.


அது ரொம்ப முக்கியம்.

சுய ஊரடங்கு 3.0 - 49
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


அரசு எந்திரமென்பது நீங்களும் நானும் நினைப்பது போல மிக எளிதாக அவர்களை ஆட்சியாளர்கள் வேலை வாங்கிவிட முடியாது. அது சாதாரணமான காரியமும் அல்ல. எளிதும் அல்ல.

அரசியல்வாதிகளுக்கு துறை சார்ந்த அறிவு இருக்கும் பட்சத்தில் கேள்வி கேட்க முடியும். குறிப்பு எழுதிக் கோப்பில் மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்ப முடியும். ஆனால் இது எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே? ஒரு அளவுக்கு மேல் அமைச்சர் ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாகக்கூடும். கட்டாயம் என்பது புற அழுத்தங்களின் மூலம் உருவாக்கப்படும்.


Monday, May 11, 2020

ரம்ஜான் விருந்துக்காக 2020

சுய ஊரடங்கு 3.0 - 48
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

ரம்ஜான் விருந்துக்காக ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் 2,895 மசூதிகளுக்கு 5,450 டன் மூல அரிசியை மாநில அரசு வழங்கும் என்றும், பயனாளிகளுக்கு நேரடியாக அரிசி தங்கள் வீடுகளில் விநியோகிக்கப்படும் என்றும் தலைமை செயலாளர் கே.சண்முகம் தெரிவித்தார்.


தமிழகத்தின் தலைப்புச் செய்தி- என் குரல் வழிப் பதிவு

10-05-2020

2020 ஜூன்/ஜூலையுடன் எழுதத் துவங்கி 11 ஆண்டுகள் முடியப் போகின்றது. 

கடந்து போன 11 ஆண்டுகளில் தொழில் நுட்ப ரீதியாகப் பல மாற்றங்கள் நடந்துள்ளது.  ஆனால் நான் எந்தப் பக்கமும் செல்லவில்லை. அமேசான் தளம் எனக்குப் போதுமானதாக இருந்தது.

நேற்றைய முன்தினம் திரு. மலைநாடன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது சின்னதாகப் பொறி ஒன்று உருவானது.  அதன் விளைவு தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

வாரந்தோறும் தமிழகத்தில் நடந்த, நடக்கும் முக்கிய நிகழ்வுகளை என் குரல்வழியே உலகத்திற்குத் தெரிவிக்கப் போகின்றேன்.  

4 தமிழ் மீடியா தளத்தில் தான் என் டாலர் நகரம் தொடர் வந்து பலத்த வரவேற்பைப் பெற்றது.  திரு. மலைநாடன் தான் இதனைப் புத்தகமாகக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்று சாதித்தும் காட்டினார்.

இப்போது வேறொரு பாதையில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றார்.  

ஆறு நிமிடப் பேச்சு.  

உங்கள் விமர்சனங்களை அறியத் தாருங்கள்.


Sunday, May 10, 2020

முதலாளித்துவ கொரானா

சுய ஊரடங்கு 3.0 - 47
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

மிக மிக அதிக சுயநலம் கொண்ட முதலாளித்துவ அமெரிக்காவில் கொரானா

என் மகன் நிறுவனத்தின் கோ ஃபவுண்டருக்கு பாசிடிவ். அவர் நியூயார்க் நகர் மருத்துவமனையில் ஐ.சி.யூ.பிரிவில் அதி தீவிர சிகிச்சை தருகிறார். அங்கு வரும் மக்கள் கொசுப்போல் மடிகிறார்கள் என்றார் அவர் வீட்டில் ஏழு மாத குழந்தையை தவிர எல்லாருக்கும் பாசிடிவ். அதனுடந்தான் மருத்துவ பணியும் செய்கிறார்.

ஏன் இந்தியா தப்பிக்கிறது என்னும் குழப்பம் பின் இது புரிகிறது.. அடி வயிற்றில் பயம் பரவாமல் இல்லை

இங்கிலாந்து மருத்துவ கட்டமைப்பு

சுய ஊரடங்கு 3.0 - 46
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


கொரானா நோய் தொற்றால் லண்டன் மான்செஸ்டர் நகரில் பாதிக்கப்பட்ட எனது நண்பர், LONDON NHS Admission கிடைக்காமல், சித்தமருத்துவத்தின் மூலமாக மீண்ட அனுபவம்.‌

எனக்கு அனுப்பிய‌ வாட்ஸ்ஆப் தகவலை அவரது பெயர் மறைக்கப்பட்டு அவரது ஒப்புதலோடு இங்கு பகிற்கிறேன்.
---------------------------------------------------
வெ. பொன்ராஜ்/
12 APR 2020
---------------------------------------------------


முன்பு பஞ்சம். இப்போது வைரஸ்

சுய ஊரடங்கு 3.0 - 45
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

முன்பு பஞ்சம். இப்போது வைரஸ்

கொரானா குறித்து அச்சம் கொள்பவர்கள், என்ன ஆகப் போகிறதோ? என்று கவலை கொள்பவர்கள் அவசியம் (சற்று நீளமான பதிவு) வாசிக்கவும். ஆனாலும் இன்றும் இந்தியா முன்னேறிக் கொண்டே தான் இருக்கின்றது. வெறுமனே பயப்படாதீர்கள் என்று சொல்வதை விட எப்படிப்பட்ட இடர்களைக் கடந்து வந்துள்ளோம் என்பதனை உணர்ந்து கொண்டால் போதும்.
•••
மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றது. எல்லாத்துறைகளும் தமிழகத்தில் முதல்முறையாக ஒருங்கிணைந்து தெளிவாகச் செயல்படுகின்றது. ஓய்வு பெற்ற மருத்துவர்கள், நிபுணர்கள், இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரையும் பணி செய்ய தமிழக அரசு வரவழைத்து உள்ளனர். தன்னாலான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. எல்லைப்புற மாநிலங்கள் மூடப்பட்டுள்ளது. இது தான் முக்கியம்.

***

Saturday, May 09, 2020

ஏப்ரல் 26 - ஊரடங்கு ஆலோசனைகள்

சுய ஊரடங்கு 3.0 - 44
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)மேல்தட்டு வர்க்கப் பார்வையில், வாழ்க்கையில் அறிவுரைகள் சொல்வது எளிது. ஊரடங்கும், முழு ஊரடங்கு என்று சுனாமி போல நம்மைத் தாக்கி, சிறையில் இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய சொந்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியுமா? என்று மைண்ட் வாய்ஸ் ல் யோசிக்கும் நண்பர்களுக்காக சில ஆலோசனைகள்.

தற்போதைய சூழலில் எப்படி வாழ வேண்டும்? வாழ முடியும்? நான் வாழ்கிறேன்?


மக்கள் கடைபிடித்த சமூக விலக்கப் படங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 43
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

நம் மக்கள் ஊரடங்கு சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சமூக விலக்கத்தை எப்படி கடைபிடிக்கின்றார்கள் என்பதனை இந்தப் படங்கள் மூலம் பார்க்கலாம்.  ஏன் சென்னையில் மட்டும் கொரானா கூத்தாடியது என்பதற்கு இந்தப் படங்கள் சான்று.

இந்தப் (25/04/2020) படம் தமிழ் இந்து திசை நேற்று எடுத்த படம். ஆயிரம் வார்த்தைகள் எழுதி புரிய வைப்பதை விட ஒவ்வொரு்படமும் நமக்கு உணர்த்தும் விசயங்கள் ஏராளம்.

திருப்பூர் மூன்று நாட்கள் முழு அடைப்பு - ஏப்ரல் 2020

சுய ஊரடங்கு 3.0 - 42
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 3 நாட்கள் முழு ஊரடங்கு திருப்பூரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு வெளியில் செல்வதை தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மூன்று நாட்களும் முழுமையாக அடைக்கப்பட்டன. பொதுமக்களும் பெரும்பாலோனோர் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 30 நாள் ஊரடங்கை விட இன்று திருப்பூர் மிகவும் அமைதியான நகரமாக இருந்தது.

திருப்பூரில் கறிகடைக்காரர்கள் நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர். வீடுகளுக்கு இறைச்சி டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், போன் செய்தாலும் யாரும் இறைச்சி டெலிவரி செய்யவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். 

மருந்துக்கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், மருந்து வாங்க கூட ஆட்கள் வராமல் திருப்பூர் முழு அமைதி கொண்டிருந்தது.  கீழே உள்ள படங்கள் நண்பர் பத்திரிக்கையாளர் மணி அவரது தமிழ் அஞ்சல் இணைய தளத்திற்காக எடுக்கப்பட்டது. நன்றி.


Friday, May 08, 2020