Showing posts with label கொரானா வைரஸ். Show all posts
Showing posts with label கொரானா வைரஸ். Show all posts

Wednesday, July 08, 2020

கொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)


1 மதுக்கடைக்கு அருகே புத்தகக் கடை வைத்திருக்கும் கடைக்காரர் முகத்தில் எல்ஈடி பல்பு வெளிச்சம் தெரிந்தது. காரணம் கேட்டேன். உள்ளே நின்று கொண்டே பாரில் குடிக்கின்றார்கள். கூட்டம் அதிகமாக வருகின்றது. எனக்கும் வியாபாரம் பரவாயில்லை என்றார்.

2, அழைக்க மறந்த நண்பர்களைத் திடீரென்று அழைத்துப் பேசலாம் என்று அழைக்கும் போது அவர்கள் தொடர்ந்து எடுக்காமலிருந்தால் மனதில் பயம் வருகின்றது. சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் குடும்பமே கொரானாவில் தாக்கி அப்பா இறந்த தகவல் ஒரு வாரம் கழித்துத் தான் தெரியவந்தது. வேறு யாருடனுமாவது தொடர்பு கொண்டு அவர்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் தானே? என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

Wednesday, June 17, 2020

கொரானா நினைவுகள் - June 2020

சுய ஊரடங்கு 5.0 - 73

Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் ஜுன் 30  வரை)

கொரோனா தொற்று நோயினால் அரசாங்கம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இந்த நேரத்தில் தளர்வு இருந்த போதிலும் இது போன்ற சமயங்களில் நடக்கும் மரணம் என்னுள் அதிகப் பாதிப்புகளை உருவாக்குகின்றது.

சமூகத்தில் பிரபல்யம், அதிகப் பொருளாதார வசதிகள் கொண்டவர் என்ற பாரபட்சமின்றி அனைவரும் அனாதை போலவே மாறுகின்றார்கள். வசதிகள் இல்லாத வீட்டில் ஈமச் சடங்கு எப்படியிருக்குமோ? அப்படித்தான் உள்ளது. வீட்டுக்கருகே மிகப் பெரிய கோடீஸ்வரன் குடும்பத்தில் ஒரு பெண்மணி சில தினங்களுக்கு முன் இறந்தார். வகைவகையான வெளிநாட்டுக் காரர்கள் வந்து கொண்டேயிருந்தது. வந்தார்கள். வெளியே நின்றார்கள். தூரமாக நின்று கொண்டார்கள். முகத்தில் கட்டியுள்ள முகக் கவசத்துடன் நான் வந்தேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே பறந்து சென்று விட்டார்கள்.

பிணம் ஏற்றப்பட்ட வாகனத்தில் உள்ளே எவரும் அமர முடியாது. பின்னால் சில நபர்கள் மட்டுமே செல்கின்றார்கள். குறுகிய நேரத்திற்குள் மொத்த வீட்டையும் மருத்துவமனையைச் சுத்தம் செய்வது போலவே செய்கின்றார்கள். நம்மோடு வாழ்ந்தவர், நம்மோடு ஒன்று கலந்து இருந்தவரின் உடல் என்பது கொரானா பயத்தால் எடுத்தால் போதும் என்கிற அளவிற்குக் கணவனை, மனைவியை, சகோதரர்களை, மற்ற உறவினர்கள் அனைவரும் மாற்றிவிடுகின்ற சோகத்தைப் பல இடங்களில் பார்த்தேன்.

***

கொரானா காலத்தில் நான் வியந்த மற்றொரு விசயம் முகக் கவசம். அரசாங்கம் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்கிறார்கள். அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் என்கிற வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். ஆனால் இந்த முகக் கவசம் படும் பாடு சொல்லி மாளாது. எதில் தயாரிக்கின்றார்கள் என்பது முதல் எதற்காக அணிகின்றோம் என்பதனைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மக்கள் முகக் கவசத்தையும் கையாள்வதைப் பார்க்கும் சிரிக்கத் தான் தோன்றுகின்றது.

1. பத்து ரூபாய்க்கு மூன்று என்கிற ரீதியில் விற்கப்படுகின்றது. அந்தத் துணி கவசமே ஆரோக்கியமாக இருக்குமா? என்பதே பெரிய கேள்விக்குறி.

2. தரமான முகக் கவசம் என்பதனைப் பற்றி எவருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் ரூபாய் 100க்கு மேல் அதனை வாங்கி அணிய எவரும் விரும்பவில்லை.

3. முகத்தில் பாதுகாப்பு (முக) கவசம் உள்ளது என்கிற பெயரில் வாய்க்குக் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது.

4. முகக் கவசத்தை விட அருகே செல்லாதே. தொட்டுப் பேசாதே என்பது தான் முக்கியம் என்பதனை மறந்து வாகனங்களில் மூன்று பேர்கள் நெருக்கியடித்துப் பயணிக்கின்றார்கள்.

5. என்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிமிடம் வரைக்கும் கொரானா குறித்து, வைரஸ் குறித்து, எப்படிப் பரவுகின்றது, என்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதனைப் பற்றி அறிந்தவர்கள் பத்து சதவிகிதம் கூட இருப்பார்களா? என்பது சந்தேகமே.

6. முகக் கவசம் தயாரிப்பு என்பது மிகப் பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதில் உருவான இடைத் தரகர் கூட்டம் என்பது மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

7. சீனாவுடன் முட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமயம் வரைக்கும் தரமான முகக் கவசமென்பது சீனாவை நம்பித்தான் இந்தியச் சந்தை உள்ளது தான் முக்கியமான ட்விஸ்ட்.😏

***
தற்போதைய நீதிமான்களுக்கு இபிகோ விற்கும் தொடர்பில்லை என்பது போல அவர்களின் தீர்ப்புகளுக்கும் பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பதாகத்தான் சமீப டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்ற உத்தரவும், ஆன் லைன் வழியாக விற்பனை செய்வதை மாநில அரசாங்கமே முடிவு செய்து கொள்ளலாம் என்பதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் தமிழக அரசு ஊரடங்கு சமயத்தில் மதுக்கடைகளைத் திறந்தது? 
1. கள்ளச்சாராயம் விற்பனை உருவாகத் தொடங்கியது. 
2. அரசு நிர்வாகத்திற்குப் பணம் தேவை. 
3. மது ஆலைகள் இயங்க வேண்டும். 
4. சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முக்கியம். 
5. அரசியல்வாதிகளின் மறைமுக வருமானம் பாதிக்கப்படக்கூடாது 
என்பது போன்ற பல விசயங்களை அடுக்க முடியும்.

ஆனால் மதுக்கடைகளைத் திறக்கும் போது நீதிமன்றம் போட்ட ஒவ்வொரு உத்தரவுகளும் இப்போது நகைப்புக்குரியதாக மாறிவிட்டது. 
1. இந்த நேரத்தில் தான் கடை திறக்க வேண்டும். 
2. ஆதார் அட்டை எண் வாங்க வேண்டும். 
3. வயதுக்குத் தகுந்தாற் போல ஒதுக்கப்பட்ட நேரத்தில் மது வழங்க வேண்டும். 4. குடைபிடித்து வர வேண்டும். 
5. இரவு ஏழு மணிக்கு மேல் விற்பனை கூடாது.
ஆனால் நடைமுறைச் சிக்கல் பின்வருமாறு உள்ளது.

1. பார் திறக்கக்கூடாது என்ற காரணத்தால் கூட்டமில்லை. 
2. வாங்கிச் செல்லும் மதுப் பாட்டில்களை இருட்டாக இருக்கும் இடங்களில் கும்பலாக உட்கார்ந்து அங்கேயே அருந்தி அங்கேயே தூக்கி எறிந்து விட்டுச் செல்லும் போக்கு உருவாகியுள்ளது. 
3. இரவு 7 மணிக்கு மேல் பார் களில் பணிபுரிந்த நபர்கள் மூலமாக ஒரு பாட்டிலுக்கு 50 முதல் 100 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யும் போக்கு.
அரசாங்கத்திற்கு வரக்கூடிய வருமானம் அனைத்தும் தனிநபர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

மதுக்கடைகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகள் ஸ்டாக் வைக்கும் இடமாக மாறியுள்ளது. எந்த மதுக்கடைகளிலும் செயல்படும் நேரங்களில் கூட்டம் இல்லை என்பதற்கு முக்கியக் காரணம் அதனை வாங்கிக் கொண்டு சென்று அருந்துவதற்குள் பாதிப் போதை இறங்கி விடுகின்றது என்கிறார்கள் மதுப்பிரியர்கள்.

பிரியமான நீதிமான்களே உங்களின் பார்வையும், நீங்கள் வாழும் வாழ்க்கையும் நிஜமான இந்தியக் குடிமகன்களுக்குத் தொடர்பில்லாத சமாச்சாரம் என்பதால் எப்போதும் போல கோக் பெப்ஸி பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர் மேல் 5 லட்சம் அபராதம் என்று சொல்லி எவரும் இந்தப் பக்கம் இனி வருவீர்களா? என்பது போலவே இருக்கட்டும்.

இந்தியாவில் கடைசி நம்பிக்கையாக இருக்கும் உங்கள் கட்டிடம் இன்றைய நிலையில் நீதி என்ற வார்த்தைக்கும் நிதி என்ற வார்த்தைக்கும் இடையே தொங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.


பத்தாம் வகுப்பு - Corona Batch 2020



Saturday, June 13, 2020

பத்தாம் வகுப்பு - Corona Batch 2020

சுய ஊரடங்கு 5.0 - 72



Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் ஜுன் 30  வரை)

கொரானா குறித்து 71 பதிவுகள் எழுதி முடித்த போது ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியது.  தொடங்கி இன்றோடு 13 நாட்கள் முடியப் போகின்றது. குரல் வழிப் பதிவு என்றொரு புதிய பாதை அறிமுகம் ஆனதால் தொடர்ந்து எழுதாமல் இருந்த விசயங்களை இப்போது பதிவு செய்து விடுகின்றேன்.

இந்த வருடம் கிண்டில் போட்டியில் கலந்து கொள்ளும் போது நிச்சயம் நம் கல்வித்துறை, கல்விமுறை, ஏற்கனவே இருந்த அமைப்பு, மாறிய அமைப்பு, சாதகம், பாதகம், எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தையும் ஆவணப்படுத்தி பெரிய புத்தகமாக எழுத நினைத்து இருந்தேன்.  ஆனால் இந்த வாரம் குரல் பதிவில் ஆன் லைன் கல்வியும் ஆஃப் லைன் தமிழகக் கல்வித்துறையும் என்ற தலைப்பில் இந்த வாரத் தலைப்புச் செய்தியாகப் பேசியுள்ளேன். ஞாயிறு அல்லது திங்கள் அன்று வெளிவரும்.


Friday, June 05, 2020

ஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........



17 நாட்கள்  என்று இயல்பாகத் தொடங்கியது. அடுத்தடுத்து தொடர்ந்து இன்று ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியுள்ளது. மூன்று அட்டைப்படங்கள் உருவாக்கியிருந்தேன். கடைசியாக 68 நாட்கள்.  அறிவிப்பைக் கேட்டவுடன் எரிச்சலுடன் சிரிப்பு வந்து விட்டது.  ஆர்வம் போய்விட்டது.  அடுத்த மாதத்திற்குப் பின்பு இது தொடருமா? இல்லையா என்பது இப்போது உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காத்திருப்போம்?



Saturday, May 23, 2020

இயங்கலாம். சென்னை தவிர்த்து மே 23 2020

சுய ஊரடங்கு 4.0 - 67


Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர பிற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் நாளை முதல் காலை 7 மணி - மாலை 7 மணி வரை இயங்க அனுமதி.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது.


Tuesday, May 19, 2020

CORONA - கேள்வி பதில்

சுய ஊரடங்கு 3.0 - 65
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

சமூகப் பரவல் என்றால் என்ன?

கொரோனா சமூகப்பரவல் என்பது வெளி நாட்டில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து கொரோனா பரவாமல் உள்ளூர் தொடர்புகளில் பரவுவதுதான். ஆனால் அதன் எண்ணிக்கை வேறு மாதிரி இருக்கும். அதாவது கோடிக்கணக்கான மக்கள் வாழும் நமது தேசத்தில் நூற்றுக்கணக்கில் இருக்கும் நோய்த் தொற்று பல்லாயிரங்களில் மாறி லட்சங்களில் சில நாட்களிலேயே மாறுவதுதான் சமூகப்பரவல்.





2020 மே மாதம் சென்னையில் உள்ள சமூகப் பரவல் குறித்து?

Monday, May 18, 2020

கொரானா தமிழ்நாடு மே 18

சுய ஊரடங்கு 3.0 - 64

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

Tamil Nadu - Corona -update - May 2020 -18

தமிழகத்தில் இன்று 536 புதிய கரோனாவைரஸ் வழக்குகள்.

மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை-11,760.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கும் 20 லட்சம் கோடி

சுய ஊரடங்கு 3.0 - 63
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


மே மாதம் மூன்றாவது மாதம்.  இன்று முதல் நான்காவது ஊரடங்கு தொடங்குகின்றது.





Sunday, May 17, 2020

மறுபடியும் முதலில் இருந்து தொடங்கனுமா? - 31ஆம் தேதி வரை ஊரடங்கு


சுய ஊரடங்கு 3.0 - 62

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


தமிழகத்தில் வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் செயல்படுவதற்கான தடையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.

கொரோனா என்பது நோய் அல்ல..! | 4TamilMedia


குரல்வழி பதிவு (ஜோதிஜி பேசுகிறேன்) - 2

கொரானா கால நினைவுகள்

வணக்கம்.

கோடைக் காலம், குளிர்காலம் என்று நாம் இதுவரையிலும் சொல்லி கொண்டிருந்த காலத்தோடு இனி கொரானா காலம் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரையிலும் பேசியுள்ளோம். ஆனால் அடுத்த 25 வருடங்கள் கழித்துக்கூட இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் கொரானா காலத்தை தலைமுறைகள் பேசப் போகின்றார்கள்.

தமிழகத்தில் 1980க்கு முன்னால் பிறந்த அனைவருக்கும்  வறுமை, பசி, பட்டினி, என்று எல்லாமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கலந்து இருந்தது. கடைசியாக 1974 ல் பஞ்சம் ஒன்று வந்தது.  அதற்குப் பின்னால் சூழல் மாறியது.  தமிழகம் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்தது.  1990க்கு பிறகு மொத்த இந்தியாவின் முகமும் மாறியது.  ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் முகம் முழுமையாகவே மாறியது. 

"20 லட்சம் கோடி".

சுய ஊரடங்கு 3.0 - 61

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

இப்போது நிர்மலாக்காவின் "20 லட்சம் கோடி".

கொஞ்சம் முன்னால் அருண் ஜேட்லி "கரை கண்ட வித்தகர்".

அதற்கு முன்னால் ப.சிதம்பரம் "ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர்".

அதற்கு முன்னால் மன்மோகன்சிங் இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? "கண் கண்ட கடவுள்" போல வந்தார்?

சரி இவர்கள் யாருக்கு உழைத்தார்கள். என்ன செய்தார்கள்? இவர்களின் புத்திசாலித்தனம் யாருக்குப் பயன்பட்டது. இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டதா? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?

Saturday, May 16, 2020

உள்நாட்டில் அகதிகளாக அலையும் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள் - 2

சுய ஊரடங்கு 3.0 - 60
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

வட மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தொழில் இன்மையால், சமீபகாலமாக தமிழகத்திற்கு அங்கிருந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஒடிஷா, ஜார்கண்ட், அசாம், பீகார், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.


கொரானா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவஸ்த்தை பயணப் படங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 59

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படாத, இணையத்தை எப்போதும் பொழுது போக்கு என்கிற நிலையில் எடுத்துக் கொள்ளும் எனக்கு, கடந்த இரண்டு நாட்களில், ஆங்கில தளங்களின் வாயிலாக, இந்தியா முழுக்க கடந்த ஒரு வாரமாக, புலம் பெயர் தொழிலாளர்களின், அவஸ்த்தைகளை படங்களாகப் பார்க்கும் போது..........

என் மகள்களிடம் சொன்னேன்.

"நீங்களும் நானும் தமிழகத்தில் பிறந்ததற்கு முன் ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்து இருக்கோம்".

07 05 2020 டாஸ்மாக் திறப்பு விழாப் படங்கள்

சுய ஊரடங்கு 3.0 - 58
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


07.05.2020 அன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.  காட்சிகள் இங்கே புகைப்படமாக.  கொரானா என்பது பெரும் தொற்று நோய். வெளியே வரக்கூடாது. தனித்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தான் மக்களிடம் அன்போடு சொன்னது என்பதனை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் படங்களைப் பார்க்கவும். மற்றவற்றை மறந்து விடவும்.  நன்றி.


மது வாங்க குடை பிடித்து வாருங்கள்.

சுய ஊரடங்கு 3.0 - 57
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


"காலைல 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரைக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.

மதியம் 1 மணி முதல் 3 மணிவரையிலும் 40 முதல் 50 வயதுவரையிலும் இருக்கும் குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.

மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் 40 வயதுக்குக் கீழான குடிகாரர்களுக்கு மட்டுமே அனுமதி.."

Friday, May 15, 2020

கொரானா காலத்தில் திறக்கப்படும் மதுக்கடைகள்

சுய ஊரடங்கு 3.0 - 56

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

மே 4 2020

வாடிவாசல் திறந்தது போல உற்சாகம் தான். ஆனால் காற்பங்கு மகிழ்ச்சி மட்டுமே. என் வீட்டிலிருந்து அருகே உள்ள முக்கிய சாலைக்கும் 200 அடி தொலைவு தான். ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் ஒரு முறை தான் அந்தப் பக்கம் சென்றுள்ளேன். சந்தைக்காக வெளியே செல்லும் தருணம் தவிர வேறெங்கும் செல்லத் தோன்றியதே இல்லை. பயமில்லை. பொறுப்பு.

ஆனால் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முழு மனதோடு திருப்பூர் இயங்கலாம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மென்று விழுங்கி சென்னையிலிருந்து விபரமான அறிக்கை வரும் என்று தான் சொன்னார்.
கொரானா காலத்தில் காய்கறிகளின் விலை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்காக


ஜனத்தொகை அதிகம். குறைந்தால் பரவாயில்லை - May 2020

சுய ஊரடங்கு 3.0 -  55
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


மார்ச் 24 அம்மாவாசை தினம்.

மோடி காரண காரியத்தோடு அறிவிப்பு வெளியிட்டாரா? இல்லையா? என்று தெரியவில்லை. இந்தியா என்பது முதல் முறையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டது.கொரானா என்ற கண்களுக்குத் தெரியாத சிறிய கிருமி காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் முடக்கியது.

நாளை தினம் என்பது ஊரடங்கு தொடங்கி 44வது தினம். ஊரடங்கு, சுய ஊரடங்கு, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று ஒவ்வொரு கோட்டையும் கடந்து வந்தோம்.

Thursday, May 14, 2020

உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளுங்க.

சுய ஊரடங்கு 3.0 - 54
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

தமிழகத்தில் சிவப்பு குறி என்று அடையாளம் காட்டப்பட்ட சில மாவட்டங்களுக்கு மொத்தமாக 72 மணி நேரம் ஊரடங்கு என்றவுடன் மக்கள் அனைவரும் அங்கங்கே கூட்டமாகக் கும்மி தட்ட நம்மவர்கள் எப்போதும் போல அரசுக்கு அறிவே இல்லை என்கிற ரீதியில் படத்தையும் போட்டு பாடம் வேறு நடத்துகின்றார்கள்.

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை வாய்ப்பிருந்தால் இன்று செய்ய முடியுமா? என்று பாருங்கள்?

எவற்றை பயன்படுத்தக்கூடாது ?

சுய ஊரடங்கு 3.0 - 53
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


முகக்கவசங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .....

இந்தியா ,அமெரிக்கா உட்பட பல நாடுகள் இப்போது வெளியில் செல்பவர்கள் ,வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள் ,நெரிசலான குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ,பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் தன்னார்வலர்கள் உட்பட பொது இடங்களில் புழங்குபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருக்கிறது.