Sunday, August 07, 2011

கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்


நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது. 

நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.  இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.  

மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன்.  ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது. 

பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும்.  ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது. 

சும்மா சொல்லக்கூடாது?  

அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே?  எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார்.  ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.

விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது.  ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.

வாழ்க் இந்தியா.  வளர்க இந்திய ஜனநாயகம்.




39 comments:

 1. இந்தியா ஏழை நாடு அதுதான் கம்மியா கொள்ளை அடித்து உள்ளார்கள்.
  நல்ல வேலை தாத்தா ஆட்சியில் இல்லை இருந்திருந்தால், உடன்பிறப்புகள் இதற்கும் பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள்.
  பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 2. நல்லவேளை INR Cr என்று பூஜ்ஜியங்களை குறைத்துக்காட்டியதால் அதை எண்ணிக்கொண்டிருக்க தேவையில்லை. இந்திய அரசு கறுப்புப் பணம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜூலியன் அசான்ஞ்சே தன் வேலையை செய்வாராம்.

  அதிலயும் பாத்தீங்களா பெண்களை அடிக்க ஆளே இல்லை. நீரா ராடியா தான் மிகப்பெரிய இலக்கங்களை கொண்டிருக்கிறார். தமிழர்களின் பெருமையையும் சிலர் பட்டியலில் காப்பாற்றிவிட்டார்கள் :))))

  இன்னும் நிறையப் பேர்களை எதிர்பார்த்தேன் காணவில்லை. அந்தப் பட்டியலை நிறையவே படிக்கவேண்டியுள்ளது அப்புறமா வாறன்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. தெகா இன்று கூகுள் பஸ்ஸில் கலைஞர் அருமை பெருமைகளை நண்பர் எழுத வாசித்த போது இது என் கைக்கு வந்து சேரவில்லை. ஆனால் ஜெயலலிதா இதிலும் கலைஞரோடு போட்டி போட முடியவில்லை பார்த்தீயளா? இந்தம்மா பப்பு உள்ளூருக்குள் மட்டும் தான் போல. பாருங்க தலைவரை. ஸ்விஸ் வரைக்கும் கொடியை நாட்டியிருக்கிறார். மகனும் தெளிவானவர் தான் போல. அப்துல்லா வந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 7. இந்த பொது வாழ்வு தலைவன்களின் ப்ற்றிய மாயைகள் இப்படி உடையும்போது மாரடைப்பே வந்து விடும் அப்பாவி மக்களுக்கு.பார்ப்போம் அடுத்த பட்டியலை.

  ReplyDelete
 8. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. ஜோதிஜி, இது மின்னஞ்சலில் வரும் போலிகளில் ஒன்று. இன்னும் அதிகாரப்பூர்வமாக விக்கிலீக்ஸ் இது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. ஜோதிஜி!சீக்கிரம் சுடுதண்ணிய துரத்திப்புடிங்க!செய்யறதையும் செஞ்சுட்டு இப்ப களவாணிகளுக்கு சாதகமா அப்ரூவரா மாறுகிறாரே!

  பிரணாப் வெளிநாட்டில் இருக்கும் கள்ளப்பணக்காரன்களை காட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொல்லும் போதே ஸ்விஸ் லிஸ்ட்டு காங்கிரஸ் தலைகள் முதற்கொண்டு இன்னும் பெரிதாக இருக்குமென தெரியும்.

  அதிகார பூர்வமா செய்தியை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 18. //எந்த வித வண்ணமும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை நோக்கி பூசப்பட்டதல்ல. நாடு தழுவிய முறையில் ‘தேர்ட் க்ரேடட் க்ரானிக் கரப்டிவ் மெண்டல் சிக்னெஸ்” ஆட்களை உள்ளடக்கியதே!//

  தெகா!அடைப்பானை மூன்றாம் தர நீண்ட ஊழல் மனநோயென்றோ(Third graded Chronic corruptive mental sickness)அல்லது ஊழல் மனநோய் என்றே சொல்லியிருந்தால் மன அகராதியில் நிரந்தரமா பதிவாகியிருக்கும்:)

  Stage actorsன்னு முகமூடி போட்டுகிட்டு தேச சேவையாளன் போர்வையில் நிறைய பேர் உலா வருகிறார்கள்.இதற்கு முட்டுக்கட்டையாகப் போய் விடுமென்றே கபில் சிபல் போன்ற கபோதிகள் மக்கள் சார்பாக எழும் அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

  ஸ்விஸ்ல பதுக்கி வைக்கும் பணத்துல தனி விமானம்,Porsche,”குட்டி” தீவுல உலகின் the best wines என்ற கேளிக்கை அல்லது தான் சார்ந்த மண்ணை வளப்படுத்தும் நோக்கில் மனித மேம்பாடுகள் என்ற மனதிருப்தியோ இல்லாமல் வங்கியில் எதுக்குப் பணத்தை பூத காப்பகம் நடத்துகிறார்களோ?

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. //அபி அப்பா said - ஜோதிஜி! ஒரு ஃபேக் நியுஸ் கூட உங்க பதிவுக்கு பஸ்க்கு பயன்படுதா? உணமை என்னான்னு தெரிஞ்சுக்க முயற்சி செய்யலாமே? ஏன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை அந்த லிச்டில் இப்போ சமீபமா மாட்டின மெடிக்கல் அதிகாரி.... அதாவது 6 டன் தங்கத்தை அடகு வைத்தோமே இந்தியா... ஆனா ஒரே ஆள் கிட்டே 2 டன் பிடிச்சோமோ.... அந்த ஆள் பெயர் இல்லை? அந்த துறை அமைச்சர் அன்புமணி பெயர் இல்லை... அம்பானி பெயர் இல்லை, டாட்டா பெயர் இல்லை.. ஆனா கருணாநிதி குடும்ப பெயர் இருக்கு? சசிகலா பெயர் ஏன் இல்லை? சசிகலா, ஜெயா தானே இப்போ 1000 கோடி சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிகிடு 140 தடவை வாய்தா வாங்கியது? அவங்க பெயர் ஏன் இல்லை? விக்கிலீக்ஸ் என்பதே பொய். அதிலே ஃபேக் வச்சுகிட்டு ஆளாளுக்கு ஆடிகிட்டு இருக்கீங்க? உங்க மதிப்பு இவ்வளவு தான்! ( விக்கிலீக்ஸ் பொய் என்றால் பொய் இல்லை... அது பத்தி தனியா விவாதிக்கலாம்)//

  போய்ட்டு திரும்ப வாரேன்!கருணாநிதி மட்டுமா திருடன்,சசிகலா,ஜெயா,அம்பானி,அன்புமணி,டாட்டாதிருடவில்லையா என்று எதிர்க் கேள்வி நல்லாவேயிருக்கு:) திருடர்களை அடையாளப்படுத்துவதே பதிவின் நோக்கம்.எவ்வளவு விவாதங்களைப் பொதுவில் வைத்தாலும் தி.மு.க தொண்டன் என்ற ஒற்றைப்பார்வை செக்குமாட்டுதனத்தைக் கடந்து ஏன் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள் என்பது இன்னும் ஆச்சரியமளிக்கும் விசயம்.

  ReplyDelete
 24. எவ்வளவு விவாதங்களைப் பொதுவில் வைத்தாலும் தி.மு.க தொண்டன் என்ற ஒற்றைப்பார்வை செக்குமாட்டுதனத்தைக் கடந்து ஏன் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள் என்பது இன்னும் ஆச்சரியமளிக்கும் விசயம்.

  இது தான்? இதுவே தான்? நான் ஆச்சரியப்பபடுவது,

  ReplyDelete
 25. //தி.மு.க தொண்டன் என்ற ஒற்றைப்பார்வை செக்குமாட்டுதனத்தைக் கடந்து ஏன் வரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார்கள் என்பது இன்னும் ஆச்சரியமளிக்கும் விசயம்.//

  கேள்வியில் இருக்கும் அடிப்படை நியாயத்தை தொண்டன் கேட்பதால் புறந்தள்ள வேண்டியதில்லை.

  ReplyDelete
 26. வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம். good punch.

  ReplyDelete
 27. இது முற்றிலும் போலி செய்தி, can you give a valid link as profe for the so called wikileaks black money list..

  ReplyDelete
 28. அடப் பாவிகளா? இப்படியுமா பொய்யையும், புரட்டையும் போடுவீங்க? ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் மொத்த கருப்புப் பணமே 11,000 கோடி என்று தினமணியில் போட்டிருந்தார்கள். தமிழ்நாட்டுக் குழந்தைகள் எல்லாம் இரண்டு மாதங்களாக புத்தகங்கள் இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.இந்த பற்றி எரியும் அவலத்தை மூடி மறைக்க இப்படி கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுக்றீர்களா? தமிழ்நாடு இனி உருப்பட்ட மாதிரி தான்.

  ReplyDelete
 29. வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்

  Good.

  ReplyDelete
 30. ஜோதிஜி!விஜயகாந்தையெல்லாம் இனி கணக்குப் போட விடக்கூடாதுன்னு தோராயமா எவ்வளவு டாலர் தேறும்ன்னு கணக்கு போட்டுப்பார்த்தா இந்திய ரூபாய் 15,67,265 கோடி.யாராவது இந்திய கணக்குல ஸ்விஸ் கணக்கு வைப்பாங்களான்னு டாலர்ல கூட்டிப்பார்த்தா 35352.186 கோடி டாலர்.ரொம்ப கம்மியா இல்ல:) உண்மையான கணக்கு வெளியாகட்டும் பார்க்கலாம்.

  ReplyDelete
 31. ammavukku oru kanakkum illayo.pavam pulaikka theriyathava pola.................

  ReplyDelete
 32. அடேயப்பா.....

  ReplyDelete
 33. அது பொய் செய்தி..Pls check...

  http://www.facebook.com/wikileaks

  ReplyDelete
 34. setha paamba ethanavaati sir adipeenga. ithu polinu kooda theriaatha ungalakku..sari vidunga..neenga enna pannuveenga unga pathivuku votu vilanum itha vitta vera enna panna mudiyumm...naan dmk support panala anaa athukaaka admk support panrathu romba chinna pulla thanamaa irukku sir.

  ReplyDelete
 35. இதையெல்லாம் நாங்க நம்பனுமா? கொஞ்சம் ஓவரா தெரியுது.
  நன்றி,
  பிரியா
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 36. கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.