Sunday, May 30, 2021

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி - ஏழாண்டு ஆட்சி காலம்

 ஏழு வருடங்கள்.. ஏழு காரணங்கள்..

கற்றதும் பெற்றதும்.......

1. இந்து என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இந்திய அரசியல்வாதிகள் சந்துக்குள் சிந்து பாடிக் கொண்டிருந்தார்கள். இன்று நாங்கள் இந்து சமூகத்திற்கு எதிரியல்ல என்று தேர்தல் சமயங்களில் (மட்டும்) கதறுகின்றார்கள். ஆனால் மோடி நீங்கள் மாற வேண்டும் என்று எந்த அரசியல்வாதிகளையையும் சொல்லவே இல்லை என்பதனையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.    



Saturday, May 29, 2021

அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடு.

கோவிட் -19 சீனாவில் உருவானது, இனம், மதம் மற்றும் அதிகார வரம்புக்கு இடையில் எந்தப் பாகுபாடும் செய்யாமல் உலகம் முழுவதையும் தாக்கியது. இந்தத் தொற்றுநோய் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும்.

ஆனால் இப்போது இது சிறிய கிழக்கு ஆப்பிரிக்கத் தீவு நாடான சீஷெல்ஸுக்குப் பிறகு, உலகிலேயே அதிக தடுப்பூசி போடப்பட்ட நாடு.



Friday, May 28, 2021

ஆங்கிலேயரின் அடிவருடியா PTR குடும்பம்.? திருமாறன் ஜி சிறப்பு பேட்டி..

அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் என்ன செய்வார்கள்?

அதிகாரத்தில் இருப்பவர்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டேயிருப்பார்கள். கண்டது காணாதது என்று அனைத்தையும் மக்கள் நம்பும்படி பேசுவார்கள்.

ஊசி மோடியே போடவில்லை. அப்புறம் எப்படி மக்கள் நம்புவார்கள்? என்றவர்கள் இப்போது மக்கள் ஊசி போட வரமாட்டேன் என்ற பூமராங் போலத் தாக்கத் தொடங்கியதும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றார்கள்.

மே 2க்கு பிறகு ஊரடங்கு வர வாய்ப்பில்லை என்றவர்கள் இப்போது விழிபிதுங்கி டெட்பாடிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறந்து மக்கள் உயிரோடு விளையாட வேண்டுமா? அறிவுரை சொன்னவர்கள் தினசரி மது விற்பனையைக் கண்காணிக்கின்றார்கள். விரைவில் மது விலைகளை உயர்த்த ஆலோசனை செய்து கொண்டு இருக்கின்றார்கள். 

இது அரசியலில் இயல்பு தான்.  இந்தியா போன்ற நாடுகளில் இது தான் அரசியல். காரணம் இங்கே 90 சதவிகிதம் பேர்களுக்கு அரசியல் அரசியலுக்குப் பின்னால் நடக்கும் சமாச்சாரங்கள் எதுவும் தெரியாது.  அவன் திருடினான். இவனும் திருடுவான். நாம் உழைத்தால் தான் வாழ முடியும் என்ற எளிய நம்பிக்கையுடன் கண்டும் காணாமல் கவனிக்காமல் கடந்து சென்று கொண்டேயிருப்பார்கள்.

இல்லாவிட்டால் தமிழக மக்கள் மனதில் பாஜக வந்துரும் என்பதனை ஆழமாக விதைத்து அதை வைத்து மட்டும் ஓட்டு வாங்கி வென்று வர முடியுமா?  முடிகின்றதே?

நான் கோடீஸ்வரன் ஆகி விட்டால் ஆக முடியாதவர்கள் அத்தனை பேர்களும் என் மேல் புழுதிவாரித் தூற்றத்தான் செய்வார்கள். அவன் எப்படிச் சம்பாதித்தான் தெரியுமா? என்று புனைவுகளை அள்ளித் தெளிக்கத்தான் செய்வார்கள்.  

சிறந்த அரசியல்வாதிகளும், சிறந்த தொழில் அதிபர்களும் என்ன செய்வார்கள்?

பேச்சைக் குறைப்பார்கள்.
பழகும் நபர்களைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
என்ன பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? 
அதனை எப்போது பேச வேண்டும்? 
என்பதில் கவனமாக இருப்பார்கள். 
காரியத்தில் மட்டும் கவனமாக இருப்பார்கள்.

தொடர்ந்து பிடிஆர் மகன் தப்பு மேல் தப்பு செய்து கொண்டே வருகின்றார். அவர் துறையை மற்றும் கல்வித்துறைதான் அதிகம் கவனித்து வருகிறேன். இரண்டின் செயல்பாடுகளும் இந்த நிமிடம் வரைக்கும் திருப்தி இல்லை. இன்னமும் காலம் உள்ளது. மாற்றம் வரும் என்றே இந்த நாள் வரைக்கும் நம்பிக் கொண்டேயிருக்கிறேன் என்பதனை தொடர்ந்து எழுதி வருகிறேன்.

ஆனால் பத்திரிக்கையாளர்களைப் பார்த்ததும் பிடிஆர் மகனுக்கு நியூரான்கள் அனைத்து புது வேகம் எடுத்து விடுவதால் வார்த்தைகள் தடித்து விழ கடைசியில் கீழே உள்ள வலையொளிக் காட்சி வரைக்கும் வந்து நிற்கின்றது.

மூன்று தலைமுறைகளை நோண்ட ஆரம்பித்து விட்டார்கள். 

இனிமேலாவது பத்திரிக்கையாளர்களைக் கண்டால் வாகனத்தை வேறு பக்கம் திருப்பிச் சென்று விட அய்யா தியாகராஜன் அவர்களுக்குக் கோரிக்கை வைக்கின்றேன்.

அடுத்த 12 மாதங்களுக்கு செயல்படுங்கள். பேசாதீர்கள். 

உங்களை நிரூபித்துக் காட்டுங்கள். 

செயல்பாடுகள் பேசட்டும்.

  

Thursday, May 27, 2021

மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு

மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு

சென்னையைக் கடந்து நேற்று கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளைப் பார்வையிட்டதற்கு வாழ்த்துகள்.


Wednesday, May 26, 2021

குருவை பழித்தால் குலநாசம்.

நாம் சும்மாயிருந்தாலும் தம்பிமார்கள் நம்மை சும்மா இருக்கவிடுவதில்லை என்பது வரமா? சபமா? என்று தெரியவில்லை.

"அண்ணே பள்ளிக்கூடம் பற்றி நீங்கள் ஏன் ஒன்றும் எழுதவில்லை?" என்று ஒர் கோரிக்கை மனு ஒன்றைத் தம்பி ஒருவன் கேட்டதற்காக....



Tuesday, May 25, 2021

இரண்டாவது கொரோனா அலை (படங்கள் மட்டும்)

இன்னும் பத்து வருடங்கள் கழித்து இளைஞர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து நிச்சயம் இப்படியொரு கேள்வி ஒன்றைக் கேட்பார்கள். (இதுவும் எஸ்டிமேட் பில் தான். தொகை மாறும் என்று வேறு சொல்லியுள்ளனர்)

😊 யோவ் நீயெல்லாம் லூசா? அவன் தான் உன்னை ஏமாத்துறான்னு தெரிஞ்சு அவன்கிட்டே கொண்டு போய் உன்னை ஒப்படைத்துருக்கிறாய்?

உள்ளே படுக்க வச்சு ரெண்டு சத்து மாத்திரை கொடுத்து உம் பணத்தையெல்லாம் கொரோனாங்ற பேர்ல புடுங்கியிருக்கான். உனக்கு அறிவுன்னு ஒன்று இருந்ததா?

தமிழ்நாட்டில் வாழ்கின்றவர்கள், வெளிநாட்டில் வாழ்கின்றவர்கள் எவராயினும் தடுப்பூசி குறித்து எழுத விரும்பினால், தமிழக நிலவரம் குறித்து கருத்து சொல்ல விரும்பினால் கவனமாக எழுத முடியுமா? என்று பாருங்கள்.
நீங்கள் விரும்பும், விரும்பாத அனைத்து தகவல்களையும் சோதித்து அதற்குப் பிறகு நீங்கள் விரும்பும் தகவல்களை அதனை உண்மைத்தன்மையுடன் இங்கே எழுதுங்க.
மோடி ஏற்றுமதி மட்டும் செய்து விட்டார்.
நான் கட்சி சார்பற்றவன். மோடி வஞ்சகம் செய்யக்கூடாது.
மோடி அரசு தோற்று விட்டது என்பது போன்று நீங்கள் எழுத விரும்பினால் அது உங்கள் கருத்து சுதந்திரம். ஒன்றும் சொல்ல மாட்டேன்.
ஆனால் அத்துடன் ஒரே ஒரு ஆலோசனையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
அது போன்று எழுதும் நேரத்தில் நான்கு "பிட்" படம் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லது. உலகத்திற்கும் நல்லது.






இந்தியா 2020-21 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 81.7 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது, கடந்த ஆண்டை விட 10% இரட்டை இலக்க வளர்ச்சி.






Monday, May 24, 2021

தமிழக அரசு மருத்துவமனைகளின் நிலைமை

பீகாரைப் பார்.

உபி யைப் பார்.

அப்படியே

இந்தப் படத்தையும் பார். 


Sunday, May 23, 2021

காங்கிரஸ் கிருமிகள் உருவாக்கிய டூல்கிட்

ராகுல், சோனியா மற்றும் காங்கிரஸ் கிருமிகள் உருவாக்கிய டூல்கிட்

கடந்த மே 18 அன்று மத்திய அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தடுப்பூசி வழங்கப்பட்டது என்பதனை பட்டியலை வெளியிட்ட அதே தினத்தில்  எதிர்க்கட்சியாக இருக்க 57 இருக்கைகள் பெற முடியாமல் 52 இருக்கைகள் மட்டுமே பெற்று தகுதியில்லாமல் இருக்கும் காங்கிரஸ் செய்து இருந்த புனித காரியம் ஒன்று வெளி வந்தது.  



Saturday, May 22, 2021

தடுப்பூசி அரசியல்

தடுப்பூசி சார்ந்து இடைவிடாது ட்விட்டரில் அரசியல் செய்து கொண்டிருக்கும் கல்லுப்பு என்ற ராகுல் ராஜாவும், உலக உத்தமர் அய்யா ப.சி மற்றும் நாட்டு நலனில் மட்டுமே அக்கறை கொண்டு வாழ வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் உயர்மட்டக் காங்கிரஸ் படை பட்டாளங்களும் ஏன் இந்த அளவுக்குக் குதியாட்டம் போடுகின்றார்கள் என்பதனை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் அடேங்கப்பா என்று மூக்கில் விரல் வைப்பீர்கள்?



Friday, May 21, 2021

முதல் அலை முதல் இரண்டாவது அலை வரை

முதல் அலை முதல் இரண்டாவது அலை தொடக்கம் வரை தமிழ் நாட்டில் நடப்பது என்ன?

கடந்த மார்ச் 2020 முதல் 2021 ஏப்ரல் வரைக்கும் உண்டான 13 மாதங்களில்..........



Thursday, May 20, 2021

புகழ் போதை

மது, மாது போதையை விடப் புகழ் போதை கொடூரமானது. முதல் இரண்டும் ஆரோக்கியமே குறிப்பிட்ட காலத்திற்குள் தடுத்து நிறுத்திவிடும். உங்களைச் செயல்படாத முடியாத அளவிற்கு மாற்றி விடும். ஆனால் புகழ் என்பது சாவதற்கு முதல் நாள் வரைக்கும் வெறி கொண்டு வேட்டை நாய் போலவே அலைய வைக்கும்.



Wednesday, May 19, 2021

பிணியூர்த்தி கட்டண அரசியல்

நான் இந்த விசயத்தில் கட்சி சார்ந்து யோசிக்க விரும்பவில்லை. எதார்த்தம் சார்ந்தே யோசிக்க விரும்புகிறேன்.  ஆனால் இங்குள்ளவர்களின் மனோநிலை குறித்து அதிகம் வியப்படைகின்றேன்.

Tuesday, May 18, 2021

அரவிந்த் கேஜ்ரிவால் என்ற அக்மார்க் கிரிமினல்

என் மேல் தனிப்பட்ட முறையில் அன்பு வைத்துள்ள நெருங்கிய நண்பர்கள் வருத்தப்படுகின்றார்கள்.  என் எழுத்தை வரிக்கு வரி வாசிக்கின்றேன் என்கிறவர்கள் சங்கடப்படுகின்றார்கள். நீங்கள் இப்படி எழுதலாமா? இதனைப் பகிரலாமா? என்று உரிமையுடன் தனித் தகவல்களில் கேள்வி எழுப்புகின்றார்கள். ஆனால் இங்கு அரசியல் என்பதே அநாகரிகத்தின் உச்சம் தொட்டவர்களால் மட்டுமே இயக்கப்படுகின்றது என்பதனை உணர மறுக்கின்றார்கள்.

Sunday, May 16, 2021

கதியற்றவர்களின் கங்கை நதி அரசியல்

 எச்சரிக்கை குறிப்பு

(1000 வார்த்தைகள் கொண்ட மிக முக்கியமான கட்டுரையிது. வேறு வேலையிருந்தால் கடந்து சென்று விடுங்கள்.)

ராகுல் ராஜாவும் அதன் பரிவாரங்களின் கங்கை நதி அரசியல்

உலகம் முழுக்க இந்துக்களுக்கு காசியும் இராமேஸ்வரமும் முக்கியமான புனித தலங்கள். கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் இங்கு ஒரு முறையேனும் சென்று வந்து விட வேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கும். தென் இந்தியர்களை உத்திரப்பிரதேசத்தோடும் வட இந்தியர்களைத் தமிழகத்தோடு இணைக்கும் வல்லமை கொண்டது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவில் நகரங்களும்.



Saturday, May 15, 2021

எது வாழ்க்கை?

இன்றைய தினம் வித்தியமான தினம். இதுவரையிலும் கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ நெருக்கடிகள், அவமானங்கள், ஏளனங்கள், அவமரியாதை சம்பவங்கள் நடந்துள்ளது. 90 சதவிகிதம் மறந்து விட்டது. சில தினங்கள் நினைவில் இருக்கும். அடுத்தடுத்த முயற்சியில் அதனை விட மேலே வந்து விடுவேன். பழைய மறந்து விடும். என் அடிப்படையில் மனநிலையில் எவ்வித மாற்றமும் உருவாக்காத எத்தனையோ நெருக்கடிகள் இன்று வரையிலும் என் நினைவில் இருந்தாலும் இன்றைய தினம் உருவாக்கிய தினம் என்னை ஒவ்வொரு நொடிப் பொழுதும் யோசிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. இன்று  காலையிலிருந்து மதியம் வரைக்கும் உருவாக்கிய தாக்கமும், கடந்த சில தினங்களாக நான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.



Tuesday, May 11, 2021

ஞானக் கண்

நடந்து முடிந்த தேர்தல் என் ஞானக் கண்களைப் பல விதங்களில் திறந்துள்ளது. 

அவினாசியிலிருந்து வீட்டுக்குத் தினமும் வந்து காய்கனிகள் வழங்கும் நபர் அவினாசி தொகுதியில் நடந்த சிலவற்றை எனக்குப் புரிய வைத்தார். எனக்கு குழப்பமாக இன்னமும் விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளது.


Friday, May 07, 2021

மரண பயத்தைக் காட்டிய தேர்தல் 2021

மூன்று வருடங்களுக்கு முன்பு தினமும் ஒரு மணி நேரமாவது சுபவீ அவர்களின் வலையொளி பேச்சைக் கேட்டதுண்டு. அதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி என்று தொடங்கி திராவிடம் என்ற வார்த்தையை மட்டும் வைத்து நம்பி தங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்  ஒவ்வொருவரின் பேச்சைப் பல நூறு மணி நேரம் பொறுமையாக கேட்டுள்ளேன். தொடக்கத்தில் கவர்ச்சியாக இருந்தது. அடுத்து நம்பிக்கையை உருவாக்குவது போல இருந்தது. அடுத்து இவர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சைத் தொடர்ந்து கேட்கத் தொடங்கினேன்.


Thursday, May 06, 2021

பாஜக வாங்கிய வாக்குகளும் வென்ற 4 வேட்பாளர்களும் 2021

நரேந்திர மோடி என்ற தனி மனிதரைத் தமிழகத்தில் உள்ள சமூக வலைதளங்கள் முதல் அங்கீகரிக்கப்பட்ட தொலைக்காட்சிகள் வரைக்கும் அவமானப்படுத்தியது போல வேறு எந்த மனிதருக்கும் இங்கே இதுவரைக்கும் நிகழ்ந்தது இல்லை.  


Wednesday, May 05, 2021

அடையாளச் சிக்கலுடன் வாழும் அனாதை பிம்பங்கள்

இருபது வருடமாக இங்கு என் தொடர்பில் இருக்கும் நண்பர் நேற்று என்னை அழைத்திருந்தார். நான் தொடக்க காலத்தில் பணி புரிந்த நிறுவனத்தில் ஒரு சாதாரணக் கூலியாக சேர்ந்து டைலராக மாறி ஒப்பந்தக்காரர் என்று உயர்ந்து இன்று தனியாக உள்நாட்டு வர்த்தகம் என்ற நிலையில் வளர்ந்து இருப்பவர்.