Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, October 24, 2023

தரமான உணவென்பது இங்கே கனவு தான்.

நேற்று பூஜைப் பொருட்கள் வாங்கச் சென்ற போது தான் கவனித்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் இருந்தது.  ஆனால் எள் போட்டாலும் எண்ணெய் ஆகின்ற அளவு என்பது போலக் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை.  காய்கறிகளின் விலை மட்டும் நூறு சதவிகிதம் வியாபாரிகள் ஏற்றியுள்ளனர்.  கத்திரிக்காய் ஒரு கிலோ ரூபாய் நாற்பது என்று இருந்தது. நேற்றும் இன்றும் ரூபாய் 110. முருங்கைக்காய் இந்த பருவகாலத்தில் குப்பையில் கொட்டும் அளவுக்கு ஒரு கிலோ முப்பது ரூபாய்க்குள் இருந்தது. இப்போது ஒரு காய் பத்து ரூபாய். நான் ஏற்கனவே எழுதியது போல மளிகை சாமான்கள் விலை அனைத்தும் டபுள் ட்ரிபிள்.  



Sunday, October 01, 2023

இங்கே நாய்கள் குலைக்கும்....

நேற்று காலையில் மகள் வந்து சொன்னார். பெல்ட் குட்டி போட்டுள்ளது என்று.  யாரோ ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயது.  கழுத்தில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் உடன் வெளியே வந்து விட்டது.  

Tuesday, February 22, 2022

தொடர்ந்து பயணிக்கின்றேன் 2022 02 22

வேர்ட் ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய போது எழுத்துலகம் பற்றி எனக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது.

ப்ளாக்ஸ்பாட் வந்த போது எழுத்தாளர் என்பதற்கு உண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளவே முயன்றேன்.

சென்ற வருடம் ஜூலை மாதத்தில் 13 ஆம் ஆண்டு தேவியர் இல்லம் பயணம் குறித்து எழுதியிருந்தேன்.

2022 என்பது என் எழுத்துப் பயணத்தில் 14 ஆம் ஆண்டு.  

இன்று வரையிலும் எழுதுகிறேன்.


Thursday, November 25, 2021

*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*

*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*

1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.*

Wednesday, November 17, 2021

உயிருடன் நடமாடுவது முக்கியமா? வாழ்வது முக்கியமா?

ஒரு நாள் முழுமையாக முடியும் போது குறைந்த பட்சம் இணையத்தில் ஏதேனும் ஒரு பெரிய கட்டுரை வாசிக்க வேண்டும். 



Wednesday, November 10, 2021

'சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்' மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

 'சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்' மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

'கோயம்புத்தூர் கியர் மேன்' என்று அன்புடன் அழைக்கப்படும் சுப்ரமணியன், சாந்தி கியர்ஸ் நிறுவனர் மற்றும் ஆதரவற்றோருக்கான இலவச மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் சாந்தி சமூக சேவை என்ற அறக்கட்டளைக்கு மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி காலமானார்.



சுப்ரமணியன், அல்லது பி சுப்ரமணி, 1960 களில் PSG பாலிடெக்னிக்கில் டிப்ளமோ பட்டதாரி ஆவார். அவர் 1960 களின் பிற்பகுதியில் PSG பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக சேர்ந்தார். அங்கு பணிபுரியும் போது, ​​இயந்திரங்கள் மீதான ஆர்வத்தைத் தொடர ஒரு பட்டறையைத் தொடங்கினார். இது 1969 ஆம் ஆண்டில் சிறிய கியர்களை உற்பத்தி செய்வதற்காக கோயம்புத்தூரில் சாந்தி இன்ஜினியரிங் மற்றும் டிரேடிங் கோவை நிறுவ அவரைத் தூண்டியது. 

1972 ஆம் ஆண்டில், சுப்ரமணியன் அதை சாந்தி கியர் புராடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றினார், இது ஜவுளித் துறைக்கு சேவை செய்ய கியர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தியது. 200களில் கியர்ஸ் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக அவர் நிறுவனத்தை வளர்த்தார். இந்த நிறுவனம் பவர் ஸ்டீல் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற தொழில்களுக்கான கியர்களை உற்பத்தி செய்தது. 

பின்னர் 2012ல் முருகப்பா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சுப்ரமணியன் தனது முழு ஆற்றலையும் சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற லாப நோக்கமற்ற, தொண்டு அறக்கட்டளையை நடத்தி, 1996 இல் தொடங்கினார். இந்த அறக்கட்டளை தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள், ஆம்புலன்ஸ் சேவைகளுடன் தரமான சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க உதவியது. இந்த முயற்சியால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர், இன்னும் பலர் இந்த முயற்சியின் பலனை அறுவடை செய்து வருகின்றனர்.

வணிகர்கள் - உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள்.

எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு

திராவிட கூலிப்படை

இது தவிர, மற்றவர்களுக்கு பெயரளவு விலைக்கு உணவை விற்பனை செய்வதைத் தவிர, ஒவ்வொரு நாளும் 300 மூத்த குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் கேன்டீனையும் அறக்கட்டளை நடத்துகிறது. இந்த அறக்கட்டளை ஒரு நோயறிதல் மையம், இரத்த வங்கி, கண் பராமரிப்பு மையம் மற்றும் எல்பிஜி தகனம் ஆகியவற்றையும் நடத்துகிறது. சுப்பிரமணியன் டிசம்பர் மாதம் தனது கடைசி மூச்சு வரை, இந்த தொண்டு நிறுவனத்திற்காக அயராது உழைத்தார்.


Saturday, October 23, 2021

"விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது


22/10/2021 கோவையில், "விஷ்வ சம்வாத் கேந்திரா" சார்பாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
"இங்க விருது வாங்குன மத்தவங்கள்ளாம் ஊடக துறையில ஒரு நீண்ட கால அனுபவம் உள்ளவங்க, ஆனா வலைமனைகளிலும், சமூக ஊடகங்களிலும் எழுதிகிட்டிருக்க என்னை போன்றவர் களையும் கவுரவிச்சு விருது வழங்குனது பெருமை.

மொதல்ல நான் பொதுவான பல விஷயங்களை பத்தி தான் எழுதிட்டிருந்தேன்.  அப்புறம் இந்த மோடிங்கற மனிதர் பத்தி தெரிஞ்சுக்க  ஆரம்பிச்சு, அவரோட அசாத்திய செயல்களாள ஈர்க்கப்பட்டு, ஏன் இவருக்கு எதிரா தமிழ்நாட்ல மட்டும் இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்யறாங்க என யோசிக்க ஆரம்பிச்சேன்.  

ஒரு சாமானியனா, ஒரு இந்திய குடிமகனா இவரை ஆதரிக்கறது என் கடமைனு உணர ஆரம்பிச்சு அவரோட சாதனைகள் பத்தி நிறைய எழுத ஆரம்பிச்சேன்.  

எனக்கு விருது வாங்க தகுதியிருக்கானு தெரியல.  ஆனா இனிமே அந்த தகுதிய வளர்த்திக்க கடுமையா உழைப்பேன்.




**************

சென்ற வருடம் 2020 ஜனவரி 6 அன்று நான் 1 முதல் 8 வரை படித்த பள்ளியில் அழைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரை பேச வைத்து அங்கீகரித்தார்கள்.  என் எழுத்தைத் தொடர்ந்து படித்து வந்த பள்ளி தாளாளர் மகன் அப்பாவிடம் சொல்லி அதன் பிறகு நான் பள்ளியில் படித்த பழைய மாணவன் என்று அறிந்து ஆச்சரியப்பட்டனர்.  எதிர்பாராத நிகழ்வு. 1922 முதல் நடந்து வரும் பள்ளி. அரசு உதவி பெறும் பள்ளி. அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் பள்ளி.  அடுத்த வருடமும் பேச அழைத்து உள்ளனர்.  ஆனால் சென்ற வாரம் தாளாளர் உடல் நலக்குறைவால் வயது முதிர்வால் காலமானார். வருத்தமாக இருந்தது.

இந்த வருடம் இந்த விருது மற்றும் அங்கீகாரம். 

என் எழுத்துப் பணியைக் கவனித்து அழைத்துப் பேசினார்கள். அப்போது நான் சென்னையில் இருந்தேன்.  தகவல் சொன்னதும் "நீங்கள் தவறாக அழைத்து உள்ளீர்கள். நான் பெரிதாக எந்தச் சாதனையும் செய்யவில்லை" என்று சொல்லிவிட்டு அலைபேசியை நிறுத்த முயன்ற போது மேலும் பல தகவல்கள் சொன்ன போது சற்று நம்பினேன்.

சிறிது நேரத்தில் நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார்.  அதன் பிறகு தான் புரிந்தது.  யாரிடமும் சொல்லவில்லை.  சொல்வதற்கு என்ன இருக்கின்றது? என்றே தோன்றியது.  இப்போது வரைக்கும் அந்த எண்ணம் தான் மனதில் உள்ளது.  இந்தப் படத்தை இங்கே போடலாமா? வேண்டாமா? என்ற எண்ணம் மாறி மாறி வர சில தகவல்களைத் தெரிவிக்கும் பொருட்டு இதனை இங்கே போட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.



என்னுடன் நிற்கும் பெண்மணி தி ஹிந்து வில் பணிபுரிபவர்.  மற்றொருவர் தமிழ் இந்து திசையில் பணிபுரிபவர்.  

ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கும் இந்தப் பத்திரிக்கைகளும் தொடர்பு இல்லையே என்று உங்களுக்குத் தோன்றும்.  

கள அரசியல் வேறு.  எதார்த்த அரசியல் வேறு.  

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த, நடத்திய, வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

*************

Listen to "பெருமிதம் கொள்கிறது தேசம். மோடி அவர்களின் மக்கள் நேசம் - 33" by JothiG ⚓


*******

மோடி அரசின் காப்பீடு திட்டங்கள்-பகுதி 2- கேசவன் சிதம்பரம்

Wednesday, October 20, 2021

October 18 - மகளின் கல்லூரி வாழ்க்கைப் பயணம் தொடங்கியது

நான் சென்னைக்கு முதல் முறையாக கல்லூரி முடித்து ஒரு வருடத்தில் சென்றேன். பள்ளித் தோழன் சொக்கலிங்கம் எனக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தான். எழும்பூரில் இன்னமும் பிரபல்யமாக இருக்கும் ஆம்னி பேரூந்து அலுவலகத்தில் அதிகாலையில் சென்று சேர்ந்தேன். விடியாமல் இருந்தது. சொக்கலிங்கம் வருகைக்காகக் காத்திருந்தது இன்னமும் என் நினைவில் உள்ளது.  



Saturday, August 21, 2021

"ஏன் திட்டிக் கொண்டே இருக்குறீங்க?"

சிலரின் எழுத்தை வாசிக்கும் போது, சிலரின் தொடர் அணுகுமுறையைப் பற்றி யோசிக்கும் போது மனதில் இடைவிடாத சப்தம் உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.  எழுதி முடித்து விட்டால் அந்த இரைச்சல் அடங்கி விடும் அல்லவா? அதன் பொருட்டு இந்தப் பதிவு.


Sunday, August 15, 2021

ஆகஸ்ட் 15 2021 இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா

 இந்திய சுதந்திரப் போராட்டம் - மறைக்கப்பட்ட உண்மைகள் என்று செய்தியோடையில் 50 அத்தியாங்களுக்கு அருகே சென்ற வருடம் பேசி பதிவு செய்து இருந்தேன். வளரும் தலைமுறைக்கு இது மிகவும் உதவும். கேட்க சுவராசியமாக இருக்கும். கூகுள், ஸ்பாட்டிபை தொடங்கிப் பல செயலிகள் வாயிலாக கேட்க முடியும். தினசரி சமூகப் பார்வையை நேரம் கிடைக்கும் போது இதில் பதிவு செய்து வைத்து விடுகின்றேன். இதிலும் சந்தாதாரர் ஆகிக் கொள்ளும் வசதிகள் உண்டு. புதிய பேச்சு வரும் போது உங்கள் அலைபேசியின் கதவைத் தட்டும்.

சிறிய செயலி. சிந்தனைக்கு உகந்தது.
(கீழே இணைப்பு)

செய்தியோடை

Tuesday, August 10, 2021

அதுவொரு பக்கா கிரிமினல் பிளானிங்.


கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நண்பர் சுபி தளபதி வெடிகுண்டு சமாச்சாரங்களை போகிற போக்கில் அள்ளித் தெளித்து விட்டுக் கொண்டே சென்றார். கேட்கும் நமக்கும் தான் வியர்த்தது.  ஒரு தகவல் மட்டும் இங்கே...

கடந்த இருபது ஆண்டுகளில் விவசாய கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்கிற பெயரில் அரசு 45000 கோடியை (திமுக மற்றும் அதிமுக) தள்ளுபடி செய்து மக்களுக்கு வழங்கி உள்ளது.  மக்கள் என்றால் பத்தில் இரண்டு பேர்கள்.  மற்றபடி அனைவரும் கட்சிக்காரர்கள் மட்டுமே. அதிமுக ஆட்சியில் இருந்தால் கணக்கீடு ஒரு மாதிரியாகவும், அவர்கள் ஆட்சியில் இருந்தால் வேறு விதமாகவும் இருக்கும்.  பால் கூட்டுறவு சொசைட்டி முதல் பல ஆச்சரியமான அதிர்ச்சிகரமான தகவல்களை கேட்க கீழே இரண்டு இணைப்பு கொடுத்துள்ளேன்.

இது போல நிலம் சார்ந்த விசயங்கள் எங்கே எப்போது யாரால் தொடங்கப்பட்டது. அதுவொரு பக்கா கிரிமினல் பிளானிங்.

(இணைப்பு கீழே)

https://youtu.be/_JiYWcCiOvw


https://youtu.be/8nHZikaP2Dk

Sunday, August 01, 2021

ஆகஸ்ட் 1 2021

எப்போதும் பக்கோடா சுவைப்பது போல கலவையாக நடந்த சம்பவங்களைச் சுவராசியமாக வாசிக்கும்படி அவ்வப்போது எழுதி வைப்பேன். இன்று அதிகாலை நேரம் இருந்த காரணத்தால் இதனை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது.



மகள் ஒருவர் கல்லூரிக்குச் செல்ல ஆயத்தப்பணி குறித்த அக்கறையின்றி தினமும் ஓர் இணைய நெடுந்தொடர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். நான் தான் பதட்டத்தில் உள்ளேன். புதிய வாழ்க்கை. புதிய கலாச்சாரம். புதுப்புது மாற்றங்கள். இதுவரையிலும் நாம் வளர்த்த வளர்ப்பின் வெளிப்பாடு என்பது என்ன? என்பதனை இனி வரும் வருடங்களில் தான் நாங்கள் பார்க்கப் போகின்றோம்.

அடுத்த வரிசையில் இருப்பவர் 2022ல் நடக்கப் போகும் நுழைவுத் தேர்வுக்கு இப்பொழுதே அதிகாலை முதல் இரவு வரை உழைத்துக் கொண்டு இருக்கின்றார்.  பார்க்கும் நமக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக உள்ளது. மறுபக்கம் இந்த அளவுக்குக் கஷ்டப்பட வேண்டுமா? என்று தோன்றுகின்றது. மகள்கள் மூவருக்கும் அடுத்தடுத்து வரும் ஐந்தாண்டுகள் கல்லூரிப் பருவமாக மாறப் போகின்றது. 

நான் தமிழ்த் திரைப்படங்களில் மூன்று படங்களை மட்டுமே மகள்களிடம் சொல்லி உள்ளேன். இன்னும் 50 வருடங்கள் கழித்துக் கூட இந்தத் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள். கற்றுக் கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளது என்பேன். 1. ஹே ராம். 2. விருமாண்டி. 3. தீரன் அதிகாரம் ஒன்று.  ஆனால் இவற்றைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் படம் சார்பேட்டா பரம்பரை. நீங்கள் நம்ப மறுப்பீர்கள். என்னால் இருபது நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த நாளில் அரை மணி நேரம். இது சார்ந்து எழுதக்கூடியவர்களின் விமர்சனங்கள் என்று கலவையாக இந்தப் படம் என் மனதில் 200 சதவிகிதம் ஆக்கிரமித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பாதி தான் பார்த்து முடித்துள்ளேன்.  

மகள்கள் ஆச்சரியப்படுகின்றார்கள்.  காரணம் சமீபகாலமாக தெலுங்கு ஜுனியர் என்டிஆர் கூத்துக்களைத்தான் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தலையில் அடித்துக் கொள்கின்றார்கள்.


ஜூலை 22 அன்று மஞ்சுளா ஈன்றெடுத்த ஏழு குட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு இறந்து போனது.  ஒரு குட்டி இயற்கையாகவே அடுத்த நாள் இறந்து போனது. என்ன காரணம் என்று யூகிக்க முடியவில்லை. ஆனால் மற்றொரு குட்டி இறப்பு இன்று வரையிலும் எங்களுக்கு இயற்கை குறித்த சூட்சமத்தைப் புரிய வைக்க முயல்கின்றது.

சந்துக்குள் குட்டிகளுடன் மஞ்சுளா இருந்தது. அருகே இரண்டு தென்னை மரங்கள் உள்ளது. முதல் தென்னை மரம் சந்தின் தொடக்கத்தில் உள்ளது. இரண்டாவது தென்னை மரம் சந்துக்குள் இருக்கும் மஞ்சுளா மற்றும் குட்டிகளுடன் தொடர்பு இல்லாமல் குறைந்த பட்சம் இருபது அடிக்கு மேல் இருந்தாலும் இரண்டாவது தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய் தரையில் பட்டுக் குதித்து அப்படியே சந்துக்குள் இருந்த ஒரு குட்டியின் மேல் பட்டு இரவு முழுக்க ரத்தம் வடிந்து மறுநாள் இறந்து கிடந்தது. அடுத்த சில நாட்கள் இந்த ஆச்சரியத்தை வருத்தமாக நினைத்து அனைவரும் கவலைப்பட்டோம்.  இறப்பு என்பது நெருங்கி விட்டால் அது உறுதி என்பது இதன் மூலம் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாயின் கர்ப்பகாலம் 60 நாட்கள். 61 வது நாளில் பிரசவமாகி விடுகின்றது. மஞ்சுளா எட்டு வாரங்கள் முடிந்தவுடன் குட்டி போடப் போகின்றது என்றவுடன் தனக்கான இடத்தை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொண்டது என்பது தனியாக எழுத வேண்டிய பதிவு.

உயிருடன் இருந்த ஐந்து குட்டிகளை முதல் மூன்று வாரங்கள் எங்களால் முழுமையாக பார்க்க முடியவில்லை. பயந்து பயந்து தான் அணுகினோம். அந்த அளவுக்கு மஞ்சுளா குட்டிகள் மேல் மிக மிகக் கவனமாக இருந்தது. எங்களை நெருங்க அனுமதிக்கவில்லை.  நான்காவது வாரத்தில் தான் பார்த்தோம். ஒரு குட்டியின் ஒரு கால் மட்டும் அதன் பாதம் இல்லாமல் பிறந்து இருந்ததைப் பார்த்து அதிக வருத்தமாக இருந்தது.  அதாவது மூனே முக்கால் கால்.  

குட்டிகள் பிறந்து நான்காவது வார இறுதியில் மஞ்சுளா பால் கொடுப்பதிலிருந்து தன்னை மெது மெதுவாக விடுவித்துக் கொண்டது. குட்டிகள் அருகே வந்தாலும் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகே குட்டிகளை நாங்கள் எளிதாக கையாள முடிந்தது.

மகளின் தோழிகள் மூலம் மூன்று குட்டிகள் வெவ்வேறு வீட்டுக்குக் கொடுத்து அனுப்பினோம். எங்கள் வீட்டுக்கு அருகே இருப்பவர் எங்களை விட மஞ்சுளா மேல் அதிக அக்கறை கொண்டு என்னன்ன தேவையோ அனைத்தையும் தினமும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து மஞ்சுளாவும் குட்டிகளும் ஆரோக்கியமாக வளர்வதில் அதிக அக்கறை காட்டினார். அவர் உறவினர் ஒரு குட்டியை எடுத்துச் சென்றனர். இறுதியில் பாதம் இல்லாமல் பிறந்த குட்டி மட்டுமே மிஞ்சியது. இவனுக்கு பாதமகன் என்று பெயர் வைத்து இருந்தோம். கடைசி வரைக்கும் எத்தனை ஆண் எத்தனை பெண் என்பதனை நாங்கள் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டுக் காரர் தான் ஐந்தில்  மூன்று பெண் குட்டிகள் என்றார்.  

பாதம் இல்லாமல் பிறந்த ஆண் குட்டியை திருப்பூரில் வீரபாண்டி பகுதியில் உள்ள ஆத்தாள் தோட்டம் என்ற இடத்தில் நாய்க் காப்பகம் கொண்டு போய் விட்டு வந்தோம்.  அங்கிருந்த சூழல், எங்கள் மனநிலை எல்லாம் கடந்து போன நாட்களில் எங்களை அதிகம் பாதிப்படையச் செய்தது.  மிகையுணர்ச்சிகள் என்பதனை அதிகமாக வாழ்க்கையில் பொருட்படுத்தாத எனக்குக் கடந்த 40 நாட்கள் மிகப் பெரிய தாக்கத்தையும் உளவியல் மாறுபாடுகளையும் உருவாக்கியது.

கற்றுக் கொள் களத்தில் இறங்கு என்ற குழுமம் என்பது பாஜக ஆதரவு தளத்தில் உள்ள நண்பர்களுடன் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் வெள்ளிக் கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்கும் நடக்கும். ஒருவர் பேசுவார். இறுதியில் கேள்வி பதில் என்பதோடு முடியும். வெற்றிகரமாக ஆறுவாரங்கள் முடிந்து விட்டது. 

இதன் நோக்கம் கற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் முகம் சுழிக்காத வண்ணம், கட்சி சார்ந்த ஜால்ரா அதீத இல்லாமல் அனைவருக்கும் விரும்பும் வண்ணம் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். வெற்றி பெற்றுள்ளோம்.

இணையம் வழியே பேசக்கூடியது காற்றில் கரைந்து போய்விடக்கூடாது. ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக யூ டியூப் சேனல் துவங்கினேன்.  கடந்த ஐந்து வாரங்களில் 1200 மணி நேரம் கேட்டு உள்ளனர்.  இதுவரையிலும் 130 சந்தாதாரர்களாக வந்து சேர்ந்து உள்ளனர்.

100 ஆளுமைகள் இதில் பேச வைக்க வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கம்.  இதன் மூலம் சமூகம், அரசியல், பண்பாடு, கலாச்சாரம், தேசிய மற்றும் மாநில அரசியல் பற்றி எளிய தமிழ்ப்பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். கனவு நனவாக வேண்டும்.


தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பிரபல்யமாக மாறியுள்ள யூ டியூப் சேனல் வரைக்கும் அனைவருக்கும் தெரிந்த முகங்களை வைத்துப் பேசுவது போல இருக்கக்கூடாது. இணையம் வழியே அறிமுகமான எந்தக் கட்சிக் கொள்கை சித்தாந்தத்தை நம்பக்கூடியவராக இருந்தாலும் அவர் சமூகத்திற்கு நல்ல கருத்துச் சொல்லத் தயாராக இருந்தால் அவரை இங்கு நாங்கள் அறிமுகம் செய்து வைக்கின்றோம்.  இப்படித்தான் இதன் பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழக பாஜக தலைவராக திரு. அண்ணாமலை அவர்களை நியமித்தது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் ஏற்கனவே இங்கே இருந்த எலும்பு பொறுக்கிகளைப் பற்றி அவசரப்பட்டு எழுதி விடக்கூடாது என்பதற்காகவே மனதிற்குள் தெரிந்த பலவற்றை எழுதாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

மார்ச் 2020 முதல் ஜூலை 2021 வரைக்கும் முதல் அலை மற்றும் இரண்டாவது கொரோனா மூலம் நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று. உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் முற்றிலும் மாறியுள்ளது. நாம் ஆரோக்கியம் என்று நம்பியிருந்ததைக்கூட அடித்து நொறுக்கியுள்ளது.

தொலைக்காட்சி விவாதங்கள் எதையும் நான் எப்போதும் பார்ப்பதே இல்லை. முக்கியமான விவாதங்கள் என்று பலராலும் சொல்லப்படும் போது யூ டியூப் வழியாக கேட்பேன். சரியாக இல்லாதபட்சத்தில் இரண்டு நிமிடங்களில் நிறுத்தி விட்டு நகர்ந்து விடுவேன். ஆனால் படித்த நண்பர்கள் கூட தொலைக்காட்சி முன்னால் கிடையாய் கிடப்பதும், உடனே இவர்கள் பேசுவதை நம்பி உணர்ச்சி வசப்படுவதும் ஆச்சரியமாகவே உள்ளது.

மது மற்றும் புகையிலையின் பல வடிவம் போன்ற போதைக்கு நீண்ட நாட்களாக ஆட்பட்டு இருப்பவர்கள் ஒரு வாரம் இதனை முழுமையாக நிறுத்தி விட்டு வெளியே வாருங்கள். உங்கள் மன உறுதியின் தன்மை உங்களுக்குப் புரியும். 80 சதவிகித மக்களால் முடியவில்லை என்பதே உண்மை.

ஆகஸ்ட் 1 2020


கடந்த 15 மாதங்களில் அரசு ஊழியர்கள், தரமான தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவர்களைத் தவிர இங்கு வாழும் அத்தனை பேர்களும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து உள்ளனர். என்னையும் சேர்த்து. மீண்டு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி திருப்பூர் அரசு பொது தலைமை மருத்துவமனையில் தான் போட்டுக் கொண்டேன்.  நான் கஷ்டப்பட்டதை விட மனைவி இரண்டு ஊசிகளும் போட அதிக அவஸ்தைப்பட வேண்டியதாகிவிட்டது.  தடுப்பூசி டோக்கன்களை விற்றுச் சம்பாதிக்கும் நல்லாட்சியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

Saturday, July 31, 2021

மகாராணி மஞ்சுளா

 

முதல் பகுதி வாசிக்க

****

(2)

நாலைந்து மாதங்களுக்கு முன்னால் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் குட்டி நாய் ஒன்று எங்கள் வீட்டின் முகப்பு பகுதியில் பயத்துடன் ஒதுங்கித் தடுமாறிக் கொண்டிருந்தது. சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி உள்ளே அழைத்து வந்து துடைத்து பெண்கள் நலக்கூட்டணிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சில தினங்கள் கழித்து மஞ்சுளா என்ற பெயரும் வைத்தேன். மகள் ஒருவர் காரணம் கேட்டார். 


Friday, July 30, 2021

2029

கேள்வி...

இங்கு எல்லாமே பத்து ஆண்டுகளுக்குள் தனியார் மயம் ஆகும் வெளிப்படையாக. 



Wednesday, July 28, 2021

தமிழக மத நல்லிணக்கம் + தமிழக இளைஞர்களின் தொழில் ஆர்வம் = 50 ஆண்டு கால ஆட்சி

என் யூ டியூப் சேனலில் கடந்த ஒரு வருடத்தில் அரசியல் சார்பான எந்த காட்சி வடிவத்தையும் நான் பதிவேற்றவில்லை. இங்கு தொடர்ந்து வாசித்து வருகின்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

நான் பாஜக வின் ஆதரவாளன். அதனையும் வெளிப் படையாகவே அறிவித்து உள்ளேன். அது சார்ந்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்னமும் எழுதுவேன். 

எந்த இடத்தில் அரசியல் பேச வேண்டும்? யாருடன் அரசியல் பேச வேண்டும்? ஏன் அரசியல் பேச வேண்டும் என்பதனை நான் நன்றாக அறிந்தவன் என்ற முறையில் இது நாள் வரைக்கும் முடிந்தவரைக்கும் நாகரிகத்தை கடைப்பிடித்தே வந்துள்ளேன். ஆனால் நெருங்கிய நண்பர்கள் தெரிந்தே இங்கே நடக்கும் அவலங்களைப் பதிவு செய்ய மறுப்பதும், மட்டையடியாக பாஜக எதிர்ப்பு தளத்தில் செயல்படுவதும், படித்தவர்கள் கூட பல படிகள் கீழ் இறங்கி தன்னை ஏமாற்றிக் கொள்வதோடு எதிர் காலத் தமிழ்ச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள் என்பதனை நினைத்து நினைத்து வருத்தப்படுகின்றேன். 

நீங்கள் நிகழ் கால சமூகத்தை எழுதாமல் தவிர்க்கும் உங்கள் செயல்பாடுகள் உங்களை சாவு வரைக்கும் துரத்தும் என்பதனை நன்றாக நினைவில் வைத்திருக்கவும். 

படித்தவர்களின் கள்ள மௌனம் என்பது மிக மிகக் கொடுமையானது. 

சமூக சீரழிவுக்கு அதுவே முக்கிய காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

கடந்த 10 வார திமுக ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் எதிர்கால நம் தலைமுறைகளின் வாழ்க்கையோடு தொடர்புடையது. 

ஊடக மௌனம், பத்திரிக்கையாளர்களின் பாரபட்சம், அரசு ஊழியர்களின் அமைதி என்று எல்லாப் பக்கமும் இருட்டாகவே உள்ளது. 

லியோனி போன்றோர்களைப் பாட நூல் நிறுவனத்தில் கொண்டு அமர்த்திய பின்பு அப்படிப்பட்ட ஓர் அமைப்பே இங்கே தேவையில்லை என்பதே என் கருத்து. ஏற்கனவே அதிமுக வளர்மதி இருந்த போதும் இதையே சொன்னேன். 

சென்ற வாரத்தில் அருமனை என்ற ஊரில் நடந்த விழாவில் ஒரு பாதிரியார் பேசிய பேச்சை நீங்கள் வலைதளங்கள் வாயிலாக கேட்டு இருக்க வாய்ப்புண்டு. 

திருப்பூர் ஏற்றுமதியாளர் கொடுத்த பேட்டி. 

இவை இரண்டு கடந்த ஒரு வாரத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களிடம் சென்று சேர்ந்தது. 

ஏன் திமுக அரசு பாதிரியாரைக் கைது செய்ய உத்தரவிட்டது என்பதற்குப் பதில்? 

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் என்றால் என்ன? 

தமிழ்ப்பிள்ளைகள், வளர்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் பெற்ற சிறப்பான தகுதி? 

இந்த மூன்றையும் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்பு யாராவது 2021 ல் தமிழகம் எப்படி இருந்தது என்பது பற்றி யோசித்துத் தேடிப் பார்த்தால் பார்வையில் பட வேண்டும் என்பதற்காக நான் பதிவேற்றி உள்ளேன். 

மதுரையில் இருக்கும் என் பொன்மனச் செல்வன், சொல் ஆற்றல் மிகுந்த கருணாநிதியின் வளர்ப்பு மகன், பாஜக வந்துரும் என்ற சங்கத்தின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் இந்த மூன்றையும் பார்த்து இங்கே விமர்சனம் எழுதுவார் என்று நம்புகிறேன். 
 
    






Tuesday, July 27, 2021

மின்சார (திருத்தம்) மசோதா 2021

மீன்பிடித்தல் தொடர்பான புதிய மசோதா மற்றும் மின்சாரத் துறை சார்ந்த மசோதா இரண்டும் இப்போது பொது விவாதம் ஆகி உள்ளது.

இப்போது மின்சார (திருத்தம்) மசோதா 2021 பார்க்கலாம்.

Friday, July 23, 2021

மகள் செய்த சாதனை 19 ஜுலை 2021

இதுவரையிலும் வாழ்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் உறவாடிய விதமும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழில் நுட்ப உலகம் உருவாக்கிய மாற்றங்களுக்குப் பின்பு தங்கள் குழந்தைகளுடன் உறவாடும் விதமும் முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளது என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்தே இருக்கக்கூடும். 

இதை உணராதவர்கள் பெருந்துன்பத்தைப் பெற்று அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

நொடிக்கு நொடி செய்திகள், விரல் நுனியில் உலகம், உண்மைகள் எங்கே உள்ளது? என்பதனை தேடித்தான் பார்க்க முடியும்? என்கிற அளவுக்கு எத்தனை விதமான கற்பனைகள் உண்டோ அத்தனையும் நம் கண்ணில் தெரிந்து நம்மைக் கதற வைத்துக் கொண்டு இருக்கின்றது.

அனுபவம் இருப்பவர்களுக்கே உருவான, உருவாகிக் கொண்டு இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் சவாலாக இருக்கும் போது 15 முதல் 25 வயதுள்ள முதல் தலைமுறைக்கு எப்படியிருக்கும்.

மொழி, நாகரிகம், கலாச்சாரம் என்று எல்லாமே மாறியுள்ளது.

பிழைப்பதே முக்கியம் என்பதாக வாழ்க்கை தத்துவம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தியுள்ளது. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதும் மாறியுள்ளது. 

இதற்கிடையே தான் உங்கள் குழந்தைகள் உங்களுக்குப் பல பாடங்கள் நடத்துகின்றார்கள்.

மகளைப் பத்தாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டிருந்த தனியார்ப் பள்ளியிலிருந்து நகர்த்தி புதிய அரசுப் பள்ளியில் சேர்த்த போது அவரிடம் சேர்த்த தினத்தில் சொன்னேன்.

"இங்கு உனக்குப் புதிய அங்கீகாரம் தேடி வரும். மாவட்ட கல்வி அதிகாரி உன்னைத் தேடி வந்து பார்ப்பார். பத்திரிக்கையாளர் உன்னிடம் பேட்டி எடுத்து பத்திரிக்கையில் பிரசுரம் செய்வார்கள்" என்றேன்.

அது அப்படியே நடந்துள்ளது.

வாய்ப்பு இருந்தால் இந்த வலையொளியைக் காண அன்போடு அழைக்கின்றேன்.

மாதா, பிதா இவர்களுக்குப் பின்பு தான் ஆசிரியர். அதற்குப் பின்பு தான் தெய்வம்.

உங்கள் கைகளில் தான் எல்லாமே உள்ளது.  

Monday, July 12, 2021

கிறுக்குக்கூட்டம்

வளர்ச்சி என்பதற்கு அடையாளமே தமிழகம் தான் என்று இன்று வரையிலும் ஒரு பெரிய கிறுக்குக்கூட்டம் இன்று வரையிலும் அலப்பறை செய்து கொண்டு இருக்கின்றது.



Thursday, July 01, 2021

குடிகார சமூகத்தை வளர்க்கும் பாவிகள்

தமிழகத்தின் மதுபான சந்தை உத்தேசமாக 50 000 கோடி முதல் 60 000 கோடி வரைக்கும் உள்ளது என்று பத்திரிக்கை யாளர்களிடம் பேசும் போது தமிழக நிதியமைச்சர் அறிவித்தார். ஆனால் நமக்கு வர வேண்டிய கலால் வரிகள் அரசுக்கு வருவதில்லை என்றும் கூறினார். என்ன? எப்படி? ஏன் என்ற கேள்வியை மூனா கானாவும் கேட்கவில்லை. அவரும் அது குறித்துப் பேசவும் இல்லை.


Thursday, June 17, 2021

IL&FS Group தலைவர் திரு. பார்த்தசாரதி ஒரு லட்சம் கோடி மோசடி

தமிழகத்தில் பஞ்சாயத்துக் கோஷ்டிகளிடம் வாழ்நாள் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் இன்று வரையிலும் ஸ்ரீராம ஜெயம் எழுதுவது போல இரண்டு வார்த்தைகளைப் பற்றித் தவறாமல் எழுதுவதை நீங்கள் கவனித்து இருக்க வாய்ப்புண்டு. 

ஒன்று நீட். மற்றொன்று பணமதிப்பு இழப்பு.