Sunday, October 30, 2022

டாஸ்மாக் விற்பனை

 உ

சிவமயம்

2022 October 24

மதிப்பிற்குரிய அய்யா

(தீபாவளி மது விற்பனை கணக்கு தங்கள் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. எந்த அளவுக்கு விற்பனை நடந்தாலும் தமிழக அரசுக்குப் பல ஆண்டுகளாக நஷ்டம் என்பதனை தங்கள் அன்பான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்)



Tuesday, October 25, 2022

இறையருள் என்பது கடையில் வாங்கும் சமாச்சாரம் அல்ல.

கீழே உள்ள தகவல்களை வாசித்த போது என் நெருங்கிய நண்பர் சொன்ன தகவல் என் நினைவில் வந்து போனது.  

கடந்த   முப்பது வருடங்களில் தமிழகத்தில் இந்து இயக்கங்கள் சார்பாக பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு குடும்பங்கள் நிர்க்கதியாக ஆதரவற்று இருப்பவர்களும், இன்னும் சிறையில் வாழ்கின்றவர்களையும் பதவியில் இருப்பவர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரைக்கும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை.  

கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்த வழக்கில் ஆயுள் தண்டனை ( அப்பவும் தூக்குத் தண்டனை இல்லை என்பதற்குப் பின்னால் உள்ள நீதிமன்ற விசயங்களை நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டும்) பெற்ற அதிமுக நபர்களை ஆளுநர் கையெழுத்துடன் வெளியே கொண்டு வந்த எடப்பாடி செய்த காரியங்களை திமுக கூடக் கண்டு கொள்ளவில்லை என்பதனை அவர்கள் இருவருக்கும் உள்ள புரிதலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆனால் பாஜக சார்ந்து இயங்குபவர்களின் சூழலை மனதில் யோசித்துப் பார்க்கலாம் தவறில்லை.

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி அம்மையாரை வலுக்கட்டாயமாக தூக்கி எறியப்பட்ட பின்னரும் ஆளுநர் மாளிகையில் இருந்தபடியே தனக்கு வேண்டிய வட இந்திய நபர்களைக் கொண்டு வந்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அரசு ஊழியராக நியமித்து சாதனை புரிந்தார்.  

அதாவது அந்த சமயத்தில் அவர் பதவியில் இல்லை.  ஆனால் அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சமையல் முதல் அலுவலகம் வரைக்கும் சிலரைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டுச் சென்றார்.  

கூடுதல் பொறுப்பு என்று அறிவிப்பு வந்து பதவியேற்க தயாராக இருந்த நம்  கரிசல் காடு அம்மையார் கிரண் பேடி அவர்கள் வெளியே செல்வது வரைக்கும் பொறுமை காத்திருந்தார்.  அதன் பிறகே சென்னையில் இருந்தே சென்றார்.

மணிப்பூருக்குச் சென்றாலும் கூடுதலாக மேற்கு வங்கத்திற்குள் சுற்றி வா என்றாலும், இல்லை அஸ்ஸாமில் வேலை என்று அனுப்பி வைத்தாலும் நம்மவர்கள் சென்னையில் இருப்பதே சிறப்பு என்பதாக கருதுகின்றார்கள்.  காலையில் எழுந்தவுடன் தன் பெயர் பத்திரிக்கைகளில் ஊடகங்களில் வரவில்லை என்றால் கக்கா  வராமல் முக்குவதையே முழுநேரமாக வைத்துள்ளார்கள் என்றே கருதுகிறேன்.  

சென்னையிலிருந்து வேலையைப் பார் என்று மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கிய அண்ணாமலை அவர்களுக்கு இந்த நிமிடம் வரைக்கும் தனியான அறை இல்லை.  மற்றவர்களையும் தன் அறையில் வைத்துப் பகிர்ந்து கொண்டு தான் வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றார். 

தன் வீட்டில், தன் குழந்தைகள், தன் மனைவியுடன் நேரம் செலவிடுவதை விட தமிழகம் முழுக்க சுற்றி வருவதையே கடமையாக வைத்துள்ளார்.  ஆனால் அத்தனை பக்கியும் கமலாயம் வந்து உட்கார்வதையே ஜென்ம சாபல்யமாக கருதுவதை என்னவென்று சொல்வது?

ஏன் காலையில் இதனை எழுதுகின்றேன் என்றால் விளம்பரப் பைத்தியம் அனைவரும் உண்டு. மனிதன் என்பவன் பலகீனமானவன் மற்றும் சல்லிப்பயல் என்பது சாதாரணமாகவே நமக்குத் தெரியும்.  ஆனால் தமிழன், தமிழச்சி என்றால் படு மட்ட ரக கேவலமான ஜென்மமாக இருப்பார்களோ? என்று எனக்குத் தோன்றுகின்றது.

தனக்கு வழங்கப்பட்ட பதவியில் மூலம் என்ன சாதித்து உள்ளார்.  மோடி அவர்கள் பாவம் பரிதாபம் பார்த்துக் கெடுக்கப்பட்ட இந்த உயர்ந்த பதவியின் மாண்பை எந்த அளவுக்குச் சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளார்.  அதனை உணராமல் இன்னமும் செய்து கொண்டே இருப்பதைப் பார்த்து வருத்தமாக உள்ளது.

பத்திரிக்கையாளர் பேட்டியில் எதுகை மோனையில் பேசுகின்றேன் என்பது போலப் பல வித்தைகளைக் காட்டுகின்றாரே ஒழியத் தமிழக பாஜக வளர தன்னால் ஆன உதவி என்பதனை செய்யத் தயாராக இல்லை.  

கேரளா ஆளுநர் வைத்த ஆப்பில் பிண விஜயன் எந்த அளவுக்குத் தெறித்துப் போய் உள்ளார் என்பதாவது தெரியுமா?

பீகார் என்ற பின் தங்கிய மாநிலத்திலிருந்து வந்த ஒருவர் தமிழக கோமாளியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதும், எதைப் பேசினால் பலருக்கும் பேக் கில் காரமான பச்சை மிளகாய் வைத்தது போல இருக்குமோ அத்தனை பேர்களும் தினமும் கதறி அழும் அளவிற்குத் தினமும் கலக்கிக் கொண்டு இருக்கும் ஆர். என். ரவி என்பவரின் செயல்பாடுகள் இந்த அம்மையாரின் கண்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

இந்த பாராட்டு விழா என்ற கலாச்சாரம் என்பது கருணா தமிழகத்திற்கு வழங்கிய கொடை.  

முதல் வாரத்தில் கருணா மகள் செல்வியைச் சந்திக்கின்றார். செல்பி எடுத்து போடுகின்றார். அடுத்த வாரம் அப்பாவை வீடு கேட்டுப் பிச்சையெடுக்க அனுப்புகின்றார். 

தன் பதவிக் காலம் முடிந்ததும் இவரும் நாகரிகம் கருதி அங்கே சென்று அரசியல் நாகரிகம் பற்றிப் பேசுவார். கூடவே உங்களுக்கும் எனக்கு மோட்டிவேசன் ஸ்பீச் தருவார் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

நிச்சயம் மோடி தான் செய்கின்ற காரியத்தை எந்த அளவுக்கு ரகசியம் காப்பதில் வல்லவராக இருக்கின்றாரோ அதே போல இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து என்ற குறளின்படி நடப்பவர்.  ஆனால் இந்த காரியத்தில் மனதளவில் வருத்தப்பட்டு இருப்பார் என்றே நினைக்கின்றேன்.

•••••

நான் தனிப்பட்ட முறையில் வருந்துகிறேன். பேய்த்தனமான கோபத்தை உள்ளே வைத்துக் கொண்டு தடுமாறுகிறேன்.

•••••••

நாள் : 20.10.2022

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்... 

தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டு பணியினை தொடங்கியுள்ளேன். 

ஏற்கனவே எனது இரண்டு ஆண்டுகள் பயணம் குறித்த புத்தகம் வெளியிட்ட நிலையில் எனது மூன்றாம் ஆண்டு பயணம் குறித்த  புத்தகம் (Coffee table book) வெளீயிட்டு விழா  மற்றும் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி (20.10.2022) வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் சென்னை ராயல் லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. 

அதன்பின்னர் நடைபெறும் விருந்தோம்பலிலும், ஊடக,பத்திரிகைச் சகோதர,சகோதரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

-என்றும் உங்கள் அன்புமிகு சகோதரி

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்...

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்.

நிகழ்ச்சி நிரல்

12:00- தமிழ்த்தாய் வாழ்த்து

12:05 - சாதனை விளக்க காணொளி

12:15 - விருந்தினர் உரை

01:00 - பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல்

01:15 - தேசிய கீதம் 

01:20 - மதிய உணவு

( குறிப்பு : 20/10/2022 வியாழக்கிழமை காலை 11:50 மணிக்குள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)

••••••

மன உறுதியோடு மேலே  உள்ள தகவல்களைப் படித்து  இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் அருகே உள்ள சுவரில் தலையை முட்டிக் கொள்வீராக.

எந்த ஹோட்டல் எத்தனை மணி என்பதனை கவனித்துப் படித்துப் பார்க்கவும்.  வண்டிக்கடையில் சாப்பிடவே யோசிக்கும் ஜந்துக்களுக்குக் கொண்டாட்டம் தானே?

நிச்சயமாக இந்த ஹோட்டல் வழங்கும் பில் என்பதனை இந்த அம்மா தான் கட்டுவார் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு என் அன்பு முத்தம்.  உத்தேசமாக எத்தனை லட்சம் மற்றும் 40 சதவிகித லக்சுரி டேக்ஸ் வரும் என்பதனை யோசித்து எழுதுகின்றவர்களுக்கு ஒரு கிலோ அல்வா அனுப்பி வைக்கின்றேன்.

நான் ஏன் மோடியை கன்னா பின்னாவென்று புகழ்ந்து எழுதுவதையே காரண காரியமாக வைத்துள்ளதற்கு ஒரே காரணம் அவர் இதே போல எச்சை பிழைப்பு பிழைப்பதில்லை.  ட்ரைலர் வெளியிடுவதில்லை. ப்ரிவ்யூ ஷோ போவதில்லை.  சுற்றுலா செல்வதில்லை. தன்னை புகழ ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து வாய் ஒழுக கீழே இருந்து பார்த்துக் கொண்டு இருப்பதில்லை.

++++++

இன்று காலை முதல் வரிசையாக நண்பர்களின் அழைப்புகள், அறிவுரைகள் என்று கரிசல் காட்டு அம்மையார் குறித்துத் தொடர்ந்து எழுதுவதைப் பற்றி பலரும் அவரவர் கருத்தைத் தெரிவித்தனர்.  என் உள்ளுணர்வு உறுத்தும். உணர்த்தும்.  நிச்சயம் தைரியமாகவே எழுதி விடுவேன்.  அப்படித்தான் எழுதினேன்.  என் தரப்பு நியாயங்கள் சிலவற்றை இங்கே உங்கள் புரிதலுக்காகத் தந்து விடுகின்றேன். 

ஆளுநராக இருந்தவர் சமஉ ஆகியிருக்கிறாரா? 

மத்திய பாஜக அனுமதியளிக்குமா? 

வாய்ப்புண்டு. இருக்கின்றார். 

இப்போது யோகியார் (உபி) தலைமையில் அமைச்சராகவும் உள்ளார். பேபி ராணி மவுரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.  

ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில ஆளுநராக இருந்தவர். 

இங்கு அம்மையாரை ஆதரிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஏதோவொரு வழியில் அண்ணாமலை அவர்களிடமிருந்து பதவியைப் பெற முடியாமல் இருப்பவர்கள். அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள். கூடவே  நாடார் என்ற சமூகம் சார்ந்த வார்த்தையைப் பலரும் பயன்படுத்தி வருகின்றார்கள். பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 70 வயது ஆன காரணத்தால் இவர் தான் இனி காப்பாளர் என்பதாகவும் முடிக்கின்றார்கள்.

நேற்றும் இன்றும் கரிசல் காட்டு அம்மையார் உருவாக்கிய அலை இணையம் எங்கும் பரவி உள்ளது.  குறிப்பாக திமுக வை ஆதரிக்கும் இணைய பொறுக்கிக்கூட்டம் அம்மையாரை உயர்த்திப் பிடிக்கின்றது.  கூடவே அண்ணாமலைக்கு ஆபத்து என்பதனை அலறலாகவும் ஒலிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏற்கனவே எல். முருகன் அவர்களை வைத்து அலறினார்கள். செல்ப் எடுக்கவில்லை. இப்போது இவர் அட்மிட் ஆகியுள்ளார்?

அம்மையாரை நம்பும் விரும்பும் எதிர்பார்க்கும் நண்பர்கள் பல்வேறு காரணங்களால் வரப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நிற்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதை என்னால் உணர முடிகின்றது. தந்தி தொலைக்காட்சி பேட்டி முதல் அவர் புத்தகம் வெளியிட்டுப் பேசிய பேச்சு முதல் முழுமையாகப் பார்த்தேன். நான் ஒன்றை மட்டும் உறுதியாக இப்பொழுதே இங்கே சொல்கின்றேன். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.   

+++++++

திமுக, அதிமுக என்று இரண்டு நிறுவனங்களில் சமீபத்தில் ஷேர் ஹோல்டர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.  ஒவ்வொரு கூட்டத்திலும் 5000 பேர்கள் கூடினார்கள்.  எடப்பாடி 5000 கோடி வரை செலவழித்து இருக்க வாய்ப்புண்டு என்று கிசுகிசுத்தார்கள்.  திமுக வில் வந்தவர்கள் தங்கள் பையில் வைத்துள்ள பணம் பத்திரமாக உள்ளதா? என்று பார்த்துக் கொண்டு ஊருக்கு வெறுங்கையோடு திரும்பியிருப்பார்கள்.  இரண்டு கூட்டங்களிலும் இருந்த தலைகளின் எண்ணிக்கை மொத்தம் பத்தாயிரம். இவர்கள் முக்கியமான தலைகள்.  சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் அரசு எந்திர கட்டுப்பாடு என்பது இவர்கள் கையில் தான் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  மண் எடுப்பது முதல் மலையைப் பிளந்து பொடி ஜல்லி உருவாக்குவது வரை இவர்கள் உருவாக்குவது தான் நிஜமான தமிழக நிர்வாகம்.   

அடுத்த கட்டத்தில் உள்ள பாமக.  

இவர்கள் அன்புமணியை தேர்ந்தெடுத்த நாடகக் கூட்டத்திலும் மேலே சொன்ன எண்ணிக்கைக்குச் சமமாகவே இருந்தது.  தமிழகம் எங்கும் எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் கோலோச்ச முடியாத சூழல் இருந்தாலும் இரண்டு கட்சிகளிடம் பேசி, மிரட்டி, உருட்டி தங்களுக்கான இடத்தைப் பெற்று வந்து இன்று இந்த கட்சியில் உள்ள முக்கிய ஐந்தாயிரம் பேர்களின் சொத்து எந்த அளவுக்கு இருக்கும் என்பதனை தெரிந்தவர்கள் வாயிலாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.  குறிப்பாக ராமதாஸ் அய்யா கட்டுப்பாட்டில் உள்ள அறக்கட்டளைகள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவும்.

கடைசியாக இரண்டு பேர்கள்.  

ஒன்று  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் சமீப காலத்தில் விருந்தோம்பப்படும் திருமாவளவன் அவர்கள். 

மற்றொருவர் தேமுதிக பிரேமலதா அம்மையார்.  இவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை.  

ஆனால் பாமக போலவே திருமா கட்சியில் உள்ள வரவு செலவு என்பது நீங்களும் நானும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரியது.

மொத்தமாக கூட்டிப் பார்த்தால் 25 000 பேர்கள் வருவார்கள். இவர்களைத் தவிரப் புரட்சி பாரதம் என்று தொடங்கி புழுதிப் புயல் என்பது வரைக்கும் மாவட்ட ரீதியாக ஆளுமை செலுத்தக்கூடிய கட்டப் பஞ்சாயத்துக் கோஷ்டிகள் என்று இன்னொரு 5 000 என்று சேர்த்துக் கொண்டால் இறுதியாக முப்பதாயிரம் பேர்கள் தேறுகின்றார்கள்.

இவர்கள் தான் தமிழ்நாடு. தமிழக நிதிநிலை என்பது ( வருடம்) இரண்டரை லட்சம் கோடி என்பது இந்த மொத்தக் கூட்டத்தின் ஒரு மாத வருமானமாக இருக்கும் என்றே நான் யூகித்து வைத்துள்ளேன்.  இது தவிர ஒவ்வொரு கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் வரவு செலவு என்பது மில்லியன் டாலர் என்பதில் தொடங்கி பில்லியனில் முடியக்கூடிய வாய்ப்பதிகம்.

நான் கதை எழுதுகின்றேன் என்று நீங்கள் சிரித்தால் நீங்கள் என்னைப் போல நாளை காலை டிபன் தோசையா? அடையா? என்று கேட்டுக் கொண்டு பத்து மணி ஆனால் தூங்கி எழுந்து  மாத இஎம்ஐ கட்டும் சாதா குடும்பஸ்தன் என்று அர்த்தம்.

இத்தனை பேர்களும் நிச்சயம் இனி வரும் காலங்களில் நம்மைப் போல எந்த வேலைக்கும் சொல்ல மாட்டார்கள். செல்ல முடியாது.  மாதம் குறைந்த பட்சம் ஒரு கோடி கொடுக்கக்கூடிய நிறுவனம் தமிழகத்தில் இன்று வரையிலும் இல்லை.  50 லட்சம் ரூபாய் கொடுத்து புது மாடல் இன்னோவா கார் வாங்கித் தரவும் மாட்டார்கள். 

தங்கள் இடம் பறிபோக, அஷ்டலக்ஷ்மி அருள் பாலிப்பதை அண்ணாமலை போன்றவர்கள் தத்துவம் பேசி அழிக்க நினைத்தால், முடிக்க நினைத்தால் என்ன செய்வார்கள்?  அதிலும் திமுக என்ற நிறுவனம் என்ன செய்யும்?

அம்மையார் தான் நல்லவள் என்று உருக்கமாகச் சொல்கின்றார்.  99 பேர்களும் எதிரே இருக்க அண்ணாமலை ஒருவர் மட்டும் தனியாக இருக்கின்றார்.

என்னால் முடிந்தால் உதவுவேன்.

கட்டாயம் உபத்திரம் செய்ய மாட்டேன்.

அப்படியே நான் செய்கின்றேன். செய்யக் காரணமாக இருக்கின்றேன் என்றால் வேறு ஏதோ காரணத்தின் தொடக்கமாகவே இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

ஆனாலும் நிச்சயம் அண்ணாமலை வெல்வார். 

மோடி இந்த இடத்துக்கு வருவதற்கு முன் அவருக்கு முன்னால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டியலில் இருந்தார்கள். அத்தனை பேர்களையும் மோடி அவித்துச் சாப்பிட்டாரா? இல்லையோ?  அதே போல அண்ணாமலை அவர் வர வேண்டிய இடத்திற்கு வந்தே தீருவார்.

அண்ணாமலை உரையாடல் - தமிழக (Off-Mode) போராளிகளும் திமுக அரசியலும் - K.Annamalai Interview - Part II

இறையருள் என்பது கடையில் வாங்கும் சமாச்சாரம் அல்ல. கர்மவினை தொடர்பானது. இல்லாவிட்டால் நேரு, இந்திரா செய்த பாவத்தை ராகுல் நடந்து கழிக்க வேண்டிய சூழல் வந்திருக்குமா?

ஊழல், போதை என்பதனை முழுமையாக தமிழகத்தில் ஒழித்து விடவே முடியாது என்ற எதார்த்தத்தை நான் உணர்ந்தே வைத்துள்ளேன்.

அரசியலிலிருந்து கொண்டு நூறு சதவிகிதம் நேர்மையாளனாகவும் வாழ்ந்து விட முடியாத என்பதனையும் தெரிந்தே வைத்துள்ளேன்.

ஆனால் குஞ்சு குளுவான் வரைக்கும் அள்ளும் மடிவலை போல இந்த வெறி பிடித்த நாய்கள் தமிழகத்தைச் சூறையாடிக் கொண்டிருப்பதை எத்தனை நாள் தான் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கப் போகின்றீர்கள்?  என்னால் என்ன செய்ய முடியும்? என்பதனை விட அப்படிச் செய்ய ஒருவர் வந்துள்ளார்? நம்பிக்கை வைத்து அவர் பின்னால் இருப்போம் என்ற எண்ணத்தை உருவாக்குவது தவறா?

பேராசை கலந்த நயவஞ்சகம் மற்றும் பொறாமை என்பது நம் உடல்நலத்திற்கு மிகக் கேடானது.

Sunday, October 23, 2022

தீபாவளி குறிப்புகள் 24 அக்டோபர் 2022

தீபாவளி குறிப்புகள் 24 அக்டோபர் 2022


கடந்து போன இரண்டு கொரோனா, உருவான பொருளாதார இழப்புகள், இறப்புகள் என்று பல துயரங்களைக் கடந்து இந்த தீபாவளி சமூகத்தை மூச்சு விட வைத்துள்ளது. எங்கு திரும்பினாலும் கூட்டம்.  எதற்குள் நுழைந்தாலும் பல மணி நேரம் காத்திருப்பு. ஓடவும் முடியல.. ஒழியவும் முடியல.

Friday, October 21, 2022

செய் அல்லது செத்து மடி.

மன முதிர்ச்சியற்றவர்கள் கீழே நான் எழுதியுள்ள செய்திகளைப் படிக்காமல் கடந்து சென்று விடுங்கள். மனதிற்குள் என்னைத் திட்டிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் அவசியம் பின்பற்ற முடியுமா? என்று முயன்று பாருங்கள்.  


Monday, October 17, 2022

மக்களை இனியும் இவர்கள் ஏமாற்ற முடியுமா?

ஒரு தரமான பொருள் என்றால் தரம் என்பதற்கு உதாரணமாக உள்ள அத்தனை தகுதிகளும் அந்த பொருளில் இயல்பாகவே இருக்கும்.  15 வருடத்திற்கு முன் வாங்கிய பல பொருட்கள் இன்னமும் நான் அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருப்பதை யோசித்துப் பாருங்கள்.  



Saturday, October 15, 2022

நுண்ணறிவு

"உளவியலாளர்களின் கூற்றுப்படி, நுண்ணறிவு நான்கு வகையான உள்ளன:

1) நுண்ணறிவு மேற்கோள் (IQ)

2) உணர்ச்சிகரமான மேற்கோள் (EQ)

3) சமூக மேற்கோள் (SQ)

4) விபரீத மேற்கோள் (AQ)

Wednesday, October 12, 2022

திருமா தனியாக குலைத்துக் கொண்டு இருக்கின்றார்.

கருணா வை முழு மூச்சாக எதிர்த்து அரசியல் செய்த வைகோ மனதிற்குள் நினைத்த ஒன்றே ஒன்று என்னவெனில்  தன்னை எம்ஜிஆராக கற்பனை செய்து கொண்டார்.  


Saturday, October 08, 2022

கொத்தடிமைகள் கதறும் கதறல்கள் தொடரும்.

அப்பாவுடன் போராட முடியாமல் புத்தகம் எழுதுவதையே தன் முழு நேரப் பணியாக வைத்திருந்தார் சுற்றுலாத்துறையைக் கவனித்துக் கொண்டு இருந்த இறையன்பு அவர்கள். இப்போது தன் அரசுப் பணியின் இறுதிப் பகுதியில் இருப்பதால் கிடைத்துள்ள தசெ பதவியின் பொறுப்புகளை உணர்ந்து இருந்தாலும் ரவுடிக் கூட்டம் என்ன செய்யும் என்பதனை உணர்ந்து,  காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு தன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார்.



Thursday, October 06, 2022

OPS.பன்னீர்செல்வம் சொத்துக்கள்.

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகையில் தனது சொத்தாக பன்னீர்செல்வம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்த சொத்துக்கள் ஒரு ஏக்கர் விவசாய நிலம்.  ஒரு டீக்கடை. 25 சவரன் தங்க நகை மற்றும் தன் மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள 7.61 லட்சம் மதிப்புள்ள வீடு.

2016 தேர்தலில் போட்டியிடுகையில் பன்னீர்செல்வம் வெளியிட்ட சொத்துக்கள்.   அசையும் சொத்துக்கள் 8.6 லட்சம்.  அசையா சொத்துக்கள் 33.20 லட்சம்.   கடன் 25 லட்சம்.   மனைவியின் சொத்துக்களாக 200 கிராம் தங்கம், 26.32 அசையும் சொத்துக்கள்,  26,32 லட்சம்.   27 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2000 சதுர அடி வீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

Tuesday, October 04, 2022

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - ஜெயகாந்தன்

 திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது

இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது.

Sunday, October 02, 2022

ஜெயமோகன் ஏன் பாம்பு புற்றுக்குள் கையை வைக்கின்றார்?

 கடந்த ஒரு மாதத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பேச்சுகளை ஒன்று விடாமல் தொடர்ந்து முழுமையாக கவனித்த போது ஒன்றைப் புரிந்து கொண்டேன்.  அவர் தமிழக அரசியல் களத்தை 1990 என்பதாகவே கருதிக் கொண்டு இருக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.