Monday, September 26, 2022

கோவை கண்டன ஆர்ப்பாட்டம் 26 செப் 2022

தமிழகத்தை இருட்டாகும் திருட்டுக் கும்பலைத்

தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

திருட்டு திராவிட தீய சக்திகளின் அசிங்கங்களை அரங்கத்திற்குக் கொண்டு வருவோம்.

ஒவ்வொன்றாக வரப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்குள் தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்...

தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. கு. அண்ணாமலை தமிழர்களுக்கு அறைகூவல் அறிக்கை.Saturday, September 17, 2022

மோடி அவர்களின் பிறந்த நாள் தகப்பன் பிறந்த நாள் Modi 72-Sep 17 2022

இன்று அதிகாலையில் தேதித் தாள் கிழிக்கும் போதே மோடியின் பிறந்த நாள் என்று மனதில் ஒரு புன்னகை வந்து மறைந்தது. Thursday, September 08, 2022

மேலே முழு நேர குடிகாரன் கீழே ரசிகர் மன்ற தலைவன்- தமிழக கல்வித்துறை

 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தால்...' அது பழமொழி; 'பொய்யை புள்ளி விபரங்களுக்குள் புதைத்தால்...' அதன் பெயர் திராவிட மாடல். சமீபத்தில் ஒரு மாணவனை கல்லுாரியில் சேர்க்க, திருநெல்வேலி கோட்டத்திற்கு உட்பட்ட அரசு கல்லுாரி ஒன்றுக்கு சென்றிருந்தேன். தெரிந்த முகம் என்பதால் சில மாணவர்கள் வந்து பேசினர். பேசினர் என்பதைவிட அழுது புலம்பினர் என்பதே சரி.தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியபடி இருக்கிறது. தரம், திறன் என, அனைத்தும் கூடியபடியே இருக்கிறது.

Wednesday, September 07, 2022

அழுது புலம்பும் மாணவியர்களின் கூக்குரலை யார் கவனிப்பது?

மிக நீண்ட கட்டுரையிது.  நேரம் இல்லாதவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். ஆனால் முக்கியமான கட்டுரையிது.Monday, September 05, 2022

ஆசிரியர் தினம். என் பள்ளி. என் ஆசிரியர்கள்.

இன்று ஆசிரியர் தினம்.  ஒரு வருடத்தில் வருகின்ற வெவ்வேறு தினங்கள் குறித்து நான் அக்கறைப்பட்டுக் கொள்வதில்லை.  அம்மா தினம். அப்பா தினம் என்று மேற்கத்திய கலாச்சாரம் உருவாக்கித் தந்ததை அப்படியே பற்றிக் கொண்டு பொய்யாய் அன்பு செலுத்துவது நம் பண்பாடு அல்ல.  ஆனால் தொடக்கம் முதல் நேற்று வரை தேவியர் இல்லத்தில் என் ஆசிரியர்கள் குறித்து எழுதியது இல்லை என்பதால் இன்று இதனை எழுதி வைத்து விடலாம் என்று தோன்றியது.Sunday, September 04, 2022

அன்புடன் அண்ணாமலை /அண்ணாமலை தொடர் பேட்டி/ புதிய சிந்தனைகளுடன்

தமிழ் தேசியம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த பேசு தமிழா பேசு குழுவினர், திரு, ராஜவேல் அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் திரு, கு. அண்ணாமலை அவர்கள் நீண்ட உரையாடல் நடத்தியுள்ளார். 

 மிக மிக அழகாக வந்துள்ளது. 

 தன் சிந்தனை, நோக்கம், எதிர்கால தமிழகம், திமுகவின் மாறாத கொள்கை, திமுக தற்போது செய்து கொண்டிருக்கும் வெளியே தெரியாத வேலைகள் என்று அனைத்தையும் விரிவாக விளக்கமாகத் திரு. அண்ணாமலை அவர்கள் இந்த நேர்காணலில் பேசியுள்ளார். 

 கீழே இணைப்பு கொடுத்துள்ளேன். முழுமையாக நிதானமாக அண்ணாமலை அவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.

Radio City interview cont...

ஒரு மீம்ஸ்.  அதனை வைத்து திரு. அண்ணாமலை அவர்களிடம் ஒரு கேள்வி.  அதற்கு பதில்.

ரேடியோ சிட்டி தொடர்ச்சி

கேட்க சுவாரசியமாக உள்ளது.

கீழே இணைப்பு உள்ளது.

Thursday, September 01, 2022

காத்திரு பகையே...காலம் கவனிக்கும்

மானங்கெட்ட மனிதர்களும் மரியாதையான பதவிகளும் 

கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்தார். அவமானம் பொறுத்து கட்சிப் பணி ஆற்றினார். நான் இன்று என்ன வேலை செய்தேன்? என்பதனை அறிக்கையாக அனுப்பினார். ஊழல் புகார் இல்லை. அநாகரிகமான செயல்பாடுகள் செய்ததாக எவரும் குற்றம் சாட்ட முடியாது என்புதனையெல்லாம் வைத்துக் கொண்டு மோடி இன்ப அதிர்ச்சி கொடுத்து தெலுங்கானா அனுப்பினார். காலம் மற்றொரு பரிசு கொடுத்தது. புதுச்சேரி வரைக்கும் தனி அதிகாரத்துடன் கோலோச்சக் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் என்ன பிரயோஜனம். பதவிக்கு உண்டான மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை.