Monday, September 26, 2022

கோவை கண்டன ஆர்ப்பாட்டம் 26 செப் 2022

தமிழகத்தை இருட்டாகும் திருட்டுக் கும்பலைத்

தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

திருட்டு திராவிட தீய சக்திகளின் அசிங்கங்களை அரங்கத்திற்குக் கொண்டு வருவோம்.

ஒவ்வொன்றாக வரப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்குள் தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்...

தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. கு. அண்ணாமலை தமிழர்களுக்கு அறைகூவல் அறிக்கை.
ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்தவர்களும், வரிகட்ட மறுக்க,  நினைத்தபடி முறையற்ற வாழ்க்கை வாழ்ந்த கொளுத்த பணக்கார பன்றிக்கூட்டமும் தொடங்கிய நீதிக் கட்சியின் அடி நாதமே மக்களை ஏமாற்றுவது. சமூகத்தைத் தவறாக வழிநடத்துவது.  தமிழக மக்களைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்வது என்ற நோக்கத்தில் தான் ஈவேரா வரைக்கும் வந்து நின்றது.

இதை விட முக்கிய நோக்கம் என்பது சாதிப் பிரிவினைகளை வளர்த்து அதில் குளிர் காய்ந்து அதனை வாக்கரசியலாக மாற்றி வெற்றி கண்டனர்.

கொள்கை என்ற பெயரிலும் இயக்கம் என்ற நோக்கத்திலும் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்குள் உழன்று வந்த ஈவெரா வின் ஆணவப் போக்கு  என்பது அண்ணாதுரை அவர்களால் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இது தான்  திமுக என்ற தீயசக்தி உருவான வரலாற்றின் தொடக்கம்.

ஒரு நாளைக்கு நாற்பது முறையேனும் திராவிட மாடல் என்ற வார்த்தையை உச்சரிக்கும் திமுக வில் உள்ள மூடர் கூட்டம் திமுக உருவான கதை உண்மையான சம்பவங்களை இனியாவது  சரியான புத்தகங்கள் வாயிலாக படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று ஒரு நாளைக்கு இத்தனை கோடி என்று தமிழகத்தைச் சூறையாடி அனைத்தையும் கோபாலபுரம் கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் 1949 முதலே உருவானது என்பது தான் உண்மை.

திமுக என்ற கட்சியின் தொடக்க முதல் புள்ளியே திருட்டுத் தனத்தில் இருந்தே தொடங்கியது. திராவிடர் கழகத்தில் இருக்கும் திரண்ட சொத்துக்கு ஆசைப்பட்டுக் காய் நகர்த்திய அண்ணாதுரையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

அது இனி நம் கைக்குக் கிடைக்காத விரக்தியில் இருந்த சிஎன். அண்ணாதுரை அவர்களால் தொடங்கப்பட்டது தான் தொடக்க காலத் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் அது மக்கள் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் போட்ட பிச்சையினால் கருணாநிதி அவர்களின் கைக்கு வந்து சேர்ந்தது. 

கடந்த 50 ஆண்டுகளாக திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியாகவே இருந்தது.  அதாவது தன் குடும்பம். தன் மக்கள். தாங்கள் சேர்க்க வேண்டிய சொத்து என்ற இந்த மூன்று கொள்கைக்குள் நின்று தமிழகத்தைக் கொள்ளையடிப்பதே முதன்மையாக கருணாநிதி உருவாக்கி இருந்தார்.  

பாயாச வார்த்தைகளில் ஆயாசம் இல்லாமல் ஆட்டுவிக்கும் கலையிலும் சரி கருணாநிதிக்கு நிகர் அவரே.  வெள்ளந்தி தமிழர்களிடத்தில் சொல் ஏந்தி வந்து தமிழக உரிமைகளை பறிகொடுத்த கருணாநிதியின் வாரிசு இன்று முதல்வரான கொடுமையினால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் எங்கும் பெட்ரோல் வெடிகுண்டுகளும், கொழுந்து விட்டு எரியக் காத்திருக்கும் கலவரங்களை அடக்கத் தெரியாமல் வார்த்தை விளையாட்டைத் தொடங்கியுள்ளார் 

இது கருணாநிதி அய்யா வாழ்ந்த காலம் அல்ல. பத்திரிக்கையாளர்களை மிரட்டி வைத்திருந்தால் போதும் என்பதற்கு. இது சமூக வலைதளம் காலம்?

உங்கள் நிறைவேற்ற முடியாத போலி தேர்தல் வாக்குறுதிகள் அல்ல தமிழக நிர்வாகம் என்பது.

 ஒடுக்கப்பட்டோருக்கான சமூக நீதி என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு கருணாநிதி அடித்த கொள்ளையில் சேர்த்த கோடிகள் எண்ணிக்கையில் அடக்க முடியுமா? அவர் வாரிசு கடந்த 14 மாதங்களில் மொத்தத் தமிழகத்தையும் இண்டு இடுக்கு விடாமல் சூறையாடிக் கொண்டே பழைய பல்லவியைப் பாடிக் கொண்டு இருப்பதை எங்கே போய்ச் சொல்வது?

ஒரு பக்கம் நிலம்.  ஒரு பக்கம் சினிமா. இது தவிர தினசரி வசூல்.  

ஆனால் உண்மை முகம் வெளியே வந்து தீரும் என்பதனை ஒரு பக்கம் பொன்முடியும் மற்றொரு பக்கம் சாத்தூர் ராமச்சந்திரனும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  தாழ்த்தப்பட்ட சாதி என்றாலே திராவிட கும்பலுக்கும் ஏனிந்த ஒவ்வாமை? இன்று இந்தியா முழுக்க தேசிய ஊடகங்கள் வரை உங்கள் திராவிட மாடலின் உண்மையான சொரூபம் சிரிப்பாய் சிரிக்கின்றது.

தமிழர்களுக்குத் தொடர்பில்லாத திராவிடம் என்ற திருட்டுத் தனத்தை உள்ளே கொண்டு வந்து தமிழர்களின் உண்மையான சமூக வாழ்க்கையைச் சீரழித்து இன்று திமுக என்ற கட்சியே சின்னாபின்னாபட்டு நிற்கின்றது.

தேர்தலில் திமுக என்ற கட்சி தொடங்கிய நாள் முதல் 2021 தேர்தல் வரை தனித்து நின்று வெற்றி பெற்றதாக எந்த சான்றுகளும் இல்லை. யாரோ ஒருவர் முதுகில் தொத்திக் கொண்டு தொங்கிக் கொண்டு வளர்ந்த கட்சி தானே திமுக.  ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட வேண்டியவர்கள், சந்துக்கு வெளியே நிறுத்தக்கூடியவர்கள், வீட்டுக்குப் பின் பக்கம் வா என்று சொல்லக்கூடியவர்கள்  என்ற பட்டியல் தயாரிக்கப்படும் கட்சி தானே திருட்டு திராவிடத்தின் அடிப்படை.  

திமுக வின் ஸ்டார் பேச்சாளர்களான தீப்பொறி ஆறுமுகமும், வெற்றிகொண்டானும் மேடையில் பேசிய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் இருந்திருக்குமேயானால் இன்று ஒரு கிராமத்திற்குள் கூட ஒரு திமுக கட்சியில் இருப்பவர் நுழைந்திருக்க வாய்ப்பே இல்லை.  ஆ. ராசா இன்று அம்பலப்பட்டு தமிழகத் தாய்மார்களிடம் கேவலப்பட்டு நிற்பதற்குக் காரணம் அடுத்த நொடியில் அத்தனை பேர்களின் பார்வைக்கும் சென்று விடுவதால் தானே? நாங்கள் வெட்டி ஒட்டத் தேவையில்லை.  உங்கள் வெட்டி வீரர்களின் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகளே போதும் தானே?

எங்களை மதவாதக் கட்சி என்று அழைக்கும் திமுக தமிழகத்தை வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும் நாசகார சக்தியைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நடத்திக் காட்டிக் கொண்டு இருப்பவர்களைக் கைது செய்யாமல் சாக்குப் போக்கு சொல்வது தான் திருட்டு மாடலோ?

வெட்கம் மானம் சூடு சொரணையைப் பற்றி யார் பேசுவது? ஒரு சுவரொட்டிக்காகக் கைது, பொதுக்கூட்டப் பேச்சுக்காகக் கைது, வலைதள எழுத்துக்காகக் கைது என்று நின்றால் குற்றம்? அமர்ந்தால் குற்றம்? எழுதினால் குற்றம்? என்று தமிழக காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி வைத்திருக்கும் உங்கள் கையில் உள்ள உள்துறை அதிகாரிகளே வெந்து நொந்து வெம்பியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? 

ஆமாம். பாஜக தமிழகத்தில் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமரத் தான் நினைக்கின்றது?  என்ன காரணம்?  ஒரு கோடி தமிழர்களை நிரந்தரக் குடி நோயாளியாக  மாற்றி வைத்திருக்கும் திருட்டு மாடல் கும்பலிடமிருந்து இவர்களைக் காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.  தமிழக கஜானாவுக்குப் போய்ச் சேர வேண்டிய பணம் அனைத்தும் கோபாலபுரம் கொள்ளைக்கூட்டத்திடம் சொல்வதை நிறுத்துவதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் ஆக வேண்டும். மாவட்டம் தோறும் கனிம வள கடத்தால். தாலுகா வாரியாக கமிஷன் கேட்டு அடிதடி போடுவதை நிறுத்த நாங்கள் வந்தே ஆக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெற்ற இரண்டு லட்சம் கோடி எத்தனை விதமாக எத்தனை பேர்களின் பாக்கெட்டுக்கு சென்றுள்ளது என்பதனை உங்கள் ஓராண்டு கால அரசியல் பயணம் தமிழக மக்களுக்குப் புரிய வைத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு என்பதற்கும் திமுக விற்கும் தொடர்பே இல்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அகப்பையைப் பற்றிப் பேசும் நீங்கள் அகப்பட்டது வரைக்கும் லாபம் என்பது போலத் தினமும் சுருட்டும் கணக்கு தமிழக மக்களுக்கு மலைப்பாக உள்ளது.

மானமும் ரோஷமும் இருப்பவனுக்குப் பணத்தாசை இருக்காது.  ஆனால் பணவெறி இருப்பவனுக்கு அரசு பணமும் ஒன்று தான். அடுத்தவன் பணமும் ஒன்று தான். ஈனத்தனமான செயல்கள் வரைக்கும் செய்து எப்படியாயினும் அபகரிக்கவே எண்ணம் செல்லும்.  மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்களிடம் ஆயிரம் முறை கருத்தியல் ரீதியாக மோதலாம். அதனால் மக்களுக்குத் துளியேனும் நல்லது நடக்கும் என்றால்?  ஆனால் பணத்திற்காக ஈனத்தனம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆட்சிக்கட்டிலில் இருக்கும் மானமிழந்த ஒருவர் முதல்வராக இருந்தால் அவரிடம் நீங்களும் நானும் என்ன தான் கேட்பது? எப்படித் தான் எதிர்பார்ப்பது?

அப்பா திமுக இன்று மகன் திமுக வாக மாறியுள்ளது.  லட்சத்தில் ஊழல் செய்தவர் இன்று இல்லை. பதிலாக தினமும் கோடிகளில் ஊழல் செய்யும் மகன் தமிழக பாஜக விற்கு அறிவுரை சொல்லும் காலக் கொடுமையை எப்படித்தான் சகித்துக் கொள்வது என்பது தான் எனக்குப் புரியவில்லை.

வாழ்க பாரதம்.

பாரத அன்னையின் புகழ் ஓங்குக.

No comments: