Monday, January 31, 2022

இருமொழிக் கொள்கை

கருணாநிதி திமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தொடங்கியது அண்ணாதுரை காலத்திலேயே தொடங்கிவிட்டது.

ஈவேகி சம்பத் - அண்ணாதுரை மோதல், வேலூர் பொதுக்குழுவில் சம்பத்தின் சட்டை கிழிப்பு, பிறகு சென்னையில் சம்பத் உண்ணாவிரதம், திருச்சியில் கண்ணதாசன் மீது செருப்பு வீச்சு... இவற்றை கண்ணதாசனின் "வனவாசம்" மூலம் அறியலாம்.

பிறகு கழக "ஆதரவாளர்கள் பேரவை"- ஒன்று நடத்தி சம்பத்துக்கும்- அண்ணாதுரைக்கும் சமரச முயற்சி...

தப்பித் தவறி இந்த சமரசம் ஏற்பட்டுவிடவே கூடாது - ஈவேகி சம்பத் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் கருணாநிதி!

காரணம் சம்பத்துடன் நின்ற கண்ணதாசன், கோவை செழியன், கண்ணப்பா வள்ளியப்பா, சென்னை மாவட்டச் செயலாளர் நீலமேகம்... போன்ற பலரும் கழக அணிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்குள்ளவர்கள்.

இவர்கள் எல்லாரும் வெளியே(ற்)றி விட்டால் மீதமிருக்கும் அடிப்பொடிகளை வைத்துக் கட்சியைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டார் கருணாநிதி!

சம்பத் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறிய பிறகு அண்ணாதுரையை முழுக்க முழுக்க தனது "வளையத்துக்குள்" வைத்துக் கொண்டார் கருணாநிதி!

அப்போதிருந்த திமுக கட்சி அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைவு! மாவட்டத்துக்கு மாவட்டம் தனது "முரட்டு பக்தர்களையே" மாவட்டச் செயலாளராகக் கொண்டுவந்து தனது கைப்பிடியில் வைத்திருந்தார் கருணாநிதி!

திருச்சி - அன்பில் தர்மலிங்கம்; தஞ்சை - மன்னை நாராயணசாமி; மதுரை- மதுரை முத்து (அன்றைய மதுரை மாவட்டம் என்பது இன்றைய மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கியது), சேலம்;- வீரபாண்டி ஆறுமுகம், திருநெல்வேலி - தூத்துக்குடி பெரியசாமி... என்று மாவட்டச் செயலாளர்/ முக்கியப் பொறுப்பாளர் என்ற நிலையில் வைத்தார்!

மேலுக்கு - "அண்ணா! அண்ணா!"- என்று உருகினாலும் தங்கக் கூண்டில் வைக்கப்பட்ட கிளியாகத்தான் அண்ணாதுரையே இருந்தார்!

கருணாநிதி கண்ணசைவு இல்லாமல் அந்த மாவட்டச் செயலாளர்கள் அண்ணாவையே தங்கள் பகுதிக்கு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய மாட்டார்கள்! மேலோட்டமாகப் பார்ப்பவருக்கு இந்த நுட்பமான வலைப்பின்னல் தெரியாது.

தாங்கள் குறிப்பிடும் 1972 காலம் - கருணாநிதி 1971 ல் பிரமாண்ட மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த காலம்! டெல்லியில் இவருக்கு நெருக்கமான இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த காலம்!

இப்போது கருணாநிதியின் டில்லி Connections பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அண்ணாதுரை 1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது தென்சென்னை MP ஆகத்தான் ஜெயித்து இருந்தார். (அப்போது சட்டமன்றம் & நாடாளுமன்றம் 2 க்கும் ஒரே நேரத்தில் தேர்தல்)

பிறகு முதல்வராகப் பதவி ஏற்றதும் தனது தென்சென்னை MP பதவியை ராஜினாமா செய்தார்!

அந்த இடைத்தேர்தலில் முரசொலி மாறனைப் போட்டியிட வைத்து வெற்றிகரமாக MP ஆக்கினார் கருணாநிதி!

எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டதும் நாஞ்சில் மனோகரன் வெளியேறினார். 

ஒரு லைன் க்ளியர்!

பிறகு இரா.செழியன், ஜி.விஸ்வநாதன் என்று திமுகவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த "பார்லிமெண்டேரியன்" களை ஒவ்வொருவராகக் கட்சியை விட்டு வெளியேறும் சூழலை உண்டுபண்ணி - டெல்லியில் திமுகவின் முகமாக "முரசொலி" மாறனைக் கொண்டுவர கருணாநிதி காய் நகர்த்திய காலம் 1972 முதல் தொடங்கியது!

•••••••••••••••இருமொழிக் கொள்கை என்பதனை கடந்த சில வாரங்களாக கோமாளிக்கூட்டம் கூறிக் கூத்தாடிக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற சமயங்களில் நான் இருக்கும் ஊரில் என் முன்னால் நடந்து கொண்டிருக்கும் சமூக மாறுதல்களை ஒரு கணம் யோசித்துப் பார்ப்பேன். அதன் பொருட்டே இன்று தினமலரில் விளம்பரம்.

அதாவது கால் பக்கம் அளவில் ஒரு பக்கமாக முழுமையாக ஹிந்தி மொழியில் மட்டும் வட இந்தியப் பத்திரிக்கைகள் போலத் தமிழ் மொழி பத்திரிக்கையான தினமலரில் விளம்பரம் கொடுத்து இருக்கின்றார்கள்.

கொடுத்தவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து இங்கே துணைத் தொழில்கள், நேரிடையான தொழில்கள் நடத்திக் கொண்டு இருக்கும் சிறு குறு தொழில் அதிபர்கள். அவர்கள் இந்தி மொழியில் வாசிக்கத் தெரிந்தவர்களின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்துள்ளார்கள்.  

அவர்கள் தமிழர்களை வேலைக்கு எடுக்க விரும்புவதில்லை.  அது போலத் தமிழ் மொழி பேசும் மண்ணின் மைந்தர்களும் இந்தி வாலாக்கள் என்றால் விருப்பமாகவும், நம்மவர்கள் என்றால் கொஞ்சம் யோசித்துச் செயல்பட வேண்டிய நிலையில் தான் இருக்கின்றார்கள்.

காரணம் நம்மவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் அப்படியுள்ளது. முழுமையாக அனைவரையும் குற்றம் சொல்ல முடியாத போதும் கூட இது நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றது என்பது தான் உண்மை.  

இதன் காரணமாக நம்மவர்கள் நடத்தும் நிறுவனங்களில் உனக்கு இந்தி மொழி பேசத் தெரிந்தால் வேலை என்பதனை முழுத் தகுதியாக வைத்து இப்போது வேலைக்கு எடுக்கின்றார்கள்.  அப்போது தான் இந்தி வேலையாட்களை வைத்து வேலை வாங்க முடியும்.

நமக்கு பார்த்தவுடன் அதிர்ச்சி ஆச்சரியம் வியப்பு எது வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் எதார்த்த சமூக மாற்றங்களை உணர மறுத்தால் நாம் தான் முட்டாள் என்று அர்த்தம்.  

காரணம் ஆட்சியில் இருக்கும் கோமாளியும் சரி, சுற்றியுள்ள சொறி நாய்களும் சரி இன்று வரையிலும் இந்த மொழியை வைத்து நமக்கு தொடர்ந்து விளையாட்டு காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். குலைக்கும் ஒவ்வொரு நாயும் நாலைந்து பள்ளிகள் வைத்து கல்லா கட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு மொழி அழியும் போது, அழிக்கப்படும் போது அங்கு நிலவும் கலாச்சாரம், பண்பாடு முற்றிலும் புறக்கணிக்கப்படும் என்பது பொதுவான உண்மை.  ஆனால் இவர்கள் ஹிந்தியை எதிர்த்தார்கள். உள்ளே நுழைய விடாமல் தடுத்தார்கள். 

ஆனால் தமிழ் மொழி வளர என்ன செய்தார்கள்? 

ஒன்றுமே செய்யவில்லை. 

இதன் விளைவு இன்றைய 12 ஆம் மாணவர்கள் (தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள்) 85 சதவிகித மாணவ மாணவியர்களுக்குத் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் சரி வரப் பேச எழுதத் தெரியாது. வராது.  

அதிலும் தனியார்ப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள் படித்த ஹிந்தி மொழியும் பேச எழுதத் தெரியாது.  

மீதம் உள்ள 15 சதவிகிதம் விதிவிலக்கு.

இன்று புழங்கும் தமிழ் மொழி என்பது உச்ச கட்ட கேவலமான மொழி.  காரணம் இவர்களின் பணத்தாசையின் விளையாக செயற்கையாக உருவாக்கப்பட்டது. இப்படித்தான் மாணவர்கள் இங்கே இருக்க வேண்டும் என்று இவர்களே விரும்புகின்றார்கள்.  பீகார் போலவே கேள்வி கேட்க கூடாது. அறிவு முழுமையாக தேவையில்லை. பகுத்தறிவு வேண்டாம்.  ஆனால் இவற்றை மேடைப் பேச்சியில், அறிக்கையில் கடைசி வரைக்கும் குறிப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  இது தான் இவர்களின் நோக்கம்.

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. 

இப்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடந்து வருகின்றது.  வீட்டிலிருந்து எழுத வேண்டும். பள்ளி திறந்தவுடன் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.  மகள்களின் வாட்ஸ்அப் உரையாடல்கள், ஆசிரியர்களுடன் பேசிய வகையில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டது என்று எல்லா வகையிலும் கடந்த சில வாரங்களாக கவனித்தது என்னவெனில் பத்து முதல் 12 வரைக்கும் பயிலும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களின் முழுமையாக தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் பத்து சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள்.  

தள்ளித் தள்ளி கடைசியில் இங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.

பாடப் புத்தகத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதனையும் ஸ்கெட்ச் வைத்துக் குறித்து அனுப்பிய பின்பு கஷ்டப்பட்டு இவ்வளவு எழுதனுமா? என்று ஒரு கேங் மாணவிகள் குரூப் கேட்கின்றது?

இது தான் நம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி.  இப்படித்தான் இவர்கள் வெற்றிகரமாக உருவாக்கி வைத்து உள்ளனர்.  அரசு பள்ளிக்கூடம் என்றாலே ஒதுக்கி வைத்தவர்கள் வாழுமிடமாக மாற்றி வைத்து விட்டனர். 

தமிழர்கள் உடல் உழைப்புக்கு மேம்பட்ட வேலைக்குச் செல்ல விரும்புகின்றார்கள்.  வட இந்தியர்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலைக்கு எளிதாக உள்ளே வந்து விடுகின்றார்கள் என்று நாம் நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.

வட இந்தியத் தொழிலாளர்களை வைத்துத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் வேலை வாங்க விரும்புகின்றார்கள்.  

காரணம் கடந்த 25 ஆண்டுகால தமிழக  அரசியல் சூழல் சமூகத்தைப் பெரிய அளவில் பாதித்து உள்ளது. மாற வேண்டும் என்று நினைக்கும் சாதாரணக் குடிமகன் கூட நாம் மாறத் தேவையில்லை என்பதாகவே அவன் விரும்பிய வண்ணம் வாழ விரும்புகின்றான்.  அப்படித்தான் வாழ்கின்றான்.

இது சார்ந்த காரணத்தை இங்கே எழுத விரும்பவில்லை.


Sunday, January 30, 2022

திருடர்கள் அழிந்தால் நல்லது.

1990 ஆம் ஆண்டு வரை மதமாற்றம் என்பதனை நான் கேள்விப்பட்டதில்லை. பார்த்தது இல்லை. பாரபட்சம் இருந்ததும் இல்லை. காரணம் கல்லூரியில் பணியாற்றிய கிறிஸ்துவப் பேராசிரியர்கள் மற்றும் கிறிஸ்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவம் என்பது வழிகாட்டி. அவர்கள் வணங்கக்கூடிய தெய்வம். கிறிஸ்துமஸ் என்பது வருடத்தில் ஒரு முறை கொண்டாட வேண்டிய பண்டிகை. வேறு ஒன்றுமில்லை.Saturday, January 29, 2022

வெட்டி கடிதாசி சீனு

வணக்கம் சீனி

உனக்கு கடிதம் எழுதத் தொடங்கிய போதே உன் முழுப் பெயர் என்று நீ எழுதியுள்ள சீனிவாசன் பாலகிருஷ்ணன் என்று எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் நீ செய்து கொண்டிருக்கின்ற அயோக்கியத்தனத்திற்கு உன் அப்பன் ஆத்தாளை எல்லாம் ஏன் வைய வேண்டும் என்பதற்காகவே வெறும் சீனி.Friday, January 28, 2022

கிறிஸ்துவ மதமாற்றிகளால் பலியான லாவண்யா

 திமுக என்ற கட்சிக்கு அரசியல் செய்வதற்கு ஆயுதம் என்பது பொருட்டல்ல. ஒரு சமயம் மொழி முன்னிறுத்தப்படும்.  மற்றொரு சமயம் அதுவே சமூகநீதியாக மாறும்.  நிதி என்பது சரி பார்க்கப்படும் போது சுதி மாறும். இது கருணாநிதி காலத்து அரசியல். 

ஆனால் அவர் மகன் காலத்தில் இதையே இவர்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது.  இப்போது பேரன் வேறு வரிசையில் வந்து நிற்கின்றார். தமிழகம் நம்  கைக்கு வந்து விடும் என்று உறுதியாகவே நம்புகின்றார்.  வயதான அமைச்சர்கள் முதல் வயது குறைந்த தோழர்கள் வரைக்கும் அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று சொல்லியே இப்போது ஒத்திகை இல்லாத நாடகம் போலவே நடந்து வருகின்றது.

திமுக என்ற கட்சி பதவிக்கு வந்து 250 நாட்களுக்கு மேலாகி விட்டது.  என்ன தமிழகத்தில் மாற்றம் நடந்துள்ளது?

கிறிஸ்துவ மத நிறுவனங்களில் வாழும் பங்குத் தந்தையர்களின் எல்லையில்லா அதிகாரம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.  அவர்களின் அதிகாரம் தமிழக அரசின் அதிகாரவர்க்கத்திற்குள் படிப்படியாக ஊடுருவி கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் பயமில்லாமல் மதமாற்றம் விரைவு படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த விசயத்தில் ஒரே அணியில் உள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.  காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை.

முக்கியமான கிறிஸ்துவப் பிரிவுகள் (பிராட்டஸ்டண்ட், கத்தோலிக், சிஎஸ்ஐ, பெந்தகோஸ்தே) எத்தனை சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது இன்று வரையிலும் புரியாத புதிராகவே உள்ளது. 

கை வைக்கவே பயப்படும் வெடிகுண்டு போலவே ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இதைக் கையாள்கின்றார்கள். எப்போது தேர்தல் வருகின்றதோ அதற்குத் தகுந்தாற் போல அந்தந்த பகுதியில் உள்ள பங்குத் தந்தைகளிடம் ஆசீர்வாதம் வாங்குவது முதல் காசு கொடுத்து ஓட்டுக்களை விலை பேசுவது வரைக்கும் வெளிப்படையாகவே நடந்து வருவதால் தமிழகத்தில் பல இடங்களில் கிறிஸ்துவம் என்பது பெரும்பான்மை யினராகவே உள்ளனர்.  

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் உண்டான முக்கியமான வித்தியாசம் என்னவெனில் கிறிஸ்துவம் அதிகாரம் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களில் பரவி இருப்பதோடு மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் ஊடகத்தையே தங்கள் கைக்குள் வைத்திருப்பதும் இங்கே மிகப் பெரிய  சவால் என்பதாகவே பார்க்கப்படுகின்றது.  

கடந்த 30 வருடத்தில் கிறிஸ்துவம் இரண்டு தலைமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது.  இவர்கள் உருவாக்கும் ஒவ்வொன்றும் அடுத்த ஒரு முழுத் தலைமுறையையும் பாதிக்கும் தன்மை கொண்டது.  

மாற்ற முடியாது. மறுக்க முடியாது.

ஆனால் இவற்றை விட இங்கே இப்போது முக்கியமான பிரச்சனை என்னவெனில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சாதாரண பொதுமக்கள் வரைக்கும் இவர்கள் இந்து பெயரில் வாழும் பெந்தேகொஸ்தே வா? அல்லது இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சபைக்கு கட்டுப்பட்டவர்களா?  

சபை வழங்கும் பணத்தைத் தங்கள் தொழிலில் முதலீடு செய்து நன்றியுடன் இருப்பவர்களா? 

வெளியே அரிதாரம் பூசி உள்ளே அழுக்கோடு வாழும் சபையின் மைந்தர்களா?

எவரையும் உங்களால் இன்றைய சூழலில் கண்டு பிடிக்க முடியாது. 

கணிக்கவே முடியாது.

இவ்வளவு பெரிய வலைபின்னல் கொண்ட கிறிஸ்துவ மாபியா கூட்டத்தை எதிர்த்துத் தான் அண்ணாமலை அவர்கள் களம் இறங்கியுள்ளார்.  

இன்று டெல்லி முதல் கன்யாகுமரி வரைக்கும் ஒற்றை மனிதன் எழுப்பி குரல் மாபியா கும்பலைக் கலங்க வைத்துள்ளது.

பாம்புக்குப் பயந்து கொண்டு தூரத்திலிருந்து கொண்டு பலவிதமான கதைகள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

முதல் முறையாக அண்ணாமலை புற்றுக்குள் கைவிட்டு பாம்பின் தலையைக் கெட்டியாக பிடித்துத் தூக்கிக் காட்டியுள்ளார்.

பாம்பு கதறுவதை விட அதனை வளர்த்தவர்களின் கண்ணீர் தான் பார்க்க கொடுமையாக உள்ளது.

அடுத்த சில வாரங்களில் கோமாளியின் கூடாரத்தில் உள்ள குட்டி பாம்புகள் எத்தனை? வெளியே வரப் போகின்றது என்பதனை நாம் பார்க்கப் போகின்றோம்.  

ஒரு வேளை சிபிஐ கைக்கு இந்த வழக்கு சென்றால் அய்யாதுரையின் ஆட்டம் அடித்தளம் வரைக்கும் அதிரக்கூடிய வகையில் இருக்கும். 

அண்ணாமலை  அவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பதனை இவர்கள் இனி மேல் தான் பார்க்கப் போகின்றார்கள் என்பதனை உணரும் நாள் மிக அருகில்.

காத்திருப்போம்.


Thursday, January 27, 2022

73ஆவது குடியரசு தின அணிவகுப்பில்

புது தில்லியில் 73ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற / (பெறாமல் போன) மாநில மற்றும் அமைச்சக ஊர்திகள் குறித்து பரபரப்பான, எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே நம்முன் வைக்கப்பட்டுள்ளன. 

இன்றைய கண்காட்சியில் இடம் பெற்ற ஊர்திகள் மூலம் சில புதிய வரலாற்றுத் தகவல்களை அறியப் பெற்றேன். Tuesday, January 25, 2022

இணையதள கைக்கூலிகளுக்கு

அண்ணாமலையும் பாஜகவும் வளர்ந்து வருவது சவுக்கு போன்ற இணையதள கைக்கூலிகளுக்கு

✅
எரிச்சலை கொடுக்கிறது,
✅
தூக்கத்தை கெடுக்கிறது
✅
வாழ்வாதாரத்தை அழிக்கிறது.
அதனால்தான் கட்டுகதைகளை தினசரி அவிழ்த்து விடுகிறார்கள்.


Sunday, January 23, 2022

ஜோஜிலா திட்டம் Zojila Project என்றால் என்ன?

 ஜோஜிலா திட்டம் Zojila Project என்றால் என்ன? சிறப்பு அம்சங்கள் என்ன?

1. ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள மலை சுரங்கப்பாதை அமைக்கும் பணி 14 மாதங்களில் நிறைவடைந்தது உள்ளது.


Friday, January 21, 2022

மோடியின் 5 ஆண்டு ஆட்சி சாதனைகள்

#நவோதயா பள்ளிகளை திறந்து மிச்சமிருக்குற L.K.G சீட் பிசினசையும் படுக்க வெச்சிருவானுங்க.
என்னா...... அடி!
மோடிய தோற்கடிச்சே ஆகணும்...ஜெயிக்க வச்சே ஆகனும்..னும் மோதுகிறார்கள். !
பிரதமா் மோடி ஆட்சியில் நாடு அடைந்த முன்னேற்றம்.

Tuesday, January 18, 2022

தமிழக கல்வித்துறையின் எதிர்காலம்?

உங்கள் வீட்டு அறையில் கிழக்குப் பார்த்த ஜன்னலை சூர்யோதய நேரத்தில் திறந்து வையுங்கள்.


Thursday, January 13, 2022

பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா?

துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு,

பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா?Monday, January 10, 2022

நீட் மசோதா -கவர்னர் காலம் தாழ்த்துவது ஏன்?

தந்தி தொலைக்காட்சியில் நேற்று அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டியைப் பார்த்தேன். அது குறித்த என் கருத்தைத் தனியாக எழுதுகிறேன். ஆனால் பேட்டி எடுத்த பாப்பா கட்டக் கடைசியாக கேட்ட கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. 

கேள்வி (அண்ணாமலைக்குத் தமிழகப் பத்திரிக்கையாளர்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம்?) 

அண்ணாமலை அவர்கள் நாகரிகமாக பதில் அளித்து அடுத்த கேள்விக்குக் கடந்து சென்றுவிட்டார். இவர் எப்போதும் இப்படித்தான். மேலே குத்திய அம்புகளை எடுத்து அடுத்த அம்புக்காகக் காத்திருக்கக்கூடியவர். 

ஆனால் இந்தச் சமயத்தில் நான் சிலவற்றை அப்பட்டமாகவே எழுத விரும்புகின்றேன். 

1. அச்சு ஊடகம் (தினசரி மற்றும் வார மாத இதழ்கள்)/செய்தி ஊடகம் (மக்கள் ஆதரவு பெற்ற பிரபல்யமான செய்தி சேனல் மற்றும் இணையம் வழியே செயல்படும் பெரிய சிறிய யூ டியூப் சேனல்). இது தவிர சமுக வலைதளங்களில் மட்டுமே செயல்படும் பல்வேறு விதமான எழுத்தாளர்கள் அல்லது ஓரளவுக்கு எழுதத் தெரிந்தவர்கள். 

2. இதில் அரசு மற்றும் மக்கள் அங்கீகாரம் பெற்ற அச்சு மட்டும் செய்தி ஊடகங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இந்த இரண்டு துறைகளிலும் 100 பேர்கள் பணியாற்றுகின்றார்கள் என்றால் அதில் பத்து பேர்கள் மட்டுமே 40 வயதைக் கடந்தவர்கள். மற்ற அத்தனை பேர்களும் 23 முதல் படிப்படியான வயதைக் கொண்டவர்கள். அதாவது படித்தது ஆங்கில வழிக் கல்வி. தமிழ் முழுமையாக எழுதப் படிக்க தெரியுமா? என்றால் சந்தேகம். 

தமிழக அரசியல் வரலாறு, சமூக, நிலவியல், புவியியல், பூகோள வரலாறு என்று கோர்வையாக ஏதாவது தெரியுமா? என்றால் உறுதியாகச் சொல்வேன். நிச்சயம் தெரியாது. 

காரணம் பணியாற்றும் நிர்வாகம் வழங்கும் 14000 முதல் 25000 வரைக்கும் உள்ள சம்பளத்தில் இங்கே இதழியல் படித்து முடித்து விட்டு வேலைக்கு வரக்கூடியவர்கள் எப்படி இருப்பார்கள்? 

3. பத்திரிக்கைத் துறையில் ஏன் சேர்ந்தாய் என்று கேட்டுப் பாருங்கள்? இயக்குநர் ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் 70 சதவிகிதம். மீதி நடிகர் முதல் மற்ற துறைகள் வரைக்கும். 

அதாவது கல்லூரியில் எதார்த்தத்தைப் படிக்கவில்லை. பணிபுரியும் இடங்களில் இயல்பான நிஜ விசயங்களில் கவனம் செலுத்த வழியில்லை. கண்டதே காட்சி. கொண்டதே கோலம். 

4. இவர்களைப் போன்றவர்களை எளிதாக மடை மாற்ற முடியும். இது தான் சரி என்று நம்ப வைக்க முடியும். பணத்திற்காக மதம் மட்டுமல்ல மற்ற விசயங்களைப் பரிமாறிக் கொள்ள தூண்ட முடியும். இப்படித்தானே இங்கு நடந்து கொண்டு இருக்கின்றது. இதை தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளிப்படையாக அந்த அம்மிணியிடம் சொல்ல முடியுமா?. 

பேட்டி எடுத்த பாப்பாவுக்கு நன்றாகவே தெரியும். 

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இங்கே பெரும்பாடு என்று நிச்சயம் தெரியும் தானே? 

வரலாறு தெரிந்தால் தான் ஊழல் உருவாக்கிய ஓட்டைகள் பற்றிப் புரியும். ஓட்டைகள் தெரிந்தால் நிர்வாகத்தில் யார் இருக்க வேண்டும்? என்பது தெரியும். 

இவையெல்லாம் அண்ணாமலை முதல்வராக வரும் சமயத்தில் மாறும். 

எனக்கு முழுமையாக நம்பிக்கையுண்டு.

Sunday, January 09, 2022

7 இலவச அமேசான் கிண்டில் மின் நூல்கள்

நம் வாழ்க்கையின் மிகப் பெரிய முரண்பாடு என்னவெனில் செய்ய வேண்டியதைப் பேச வேண்டியதை ஒதுக்கி வைப்போம்.  இது தவறு என்ற போதிலும் அதனைக் கூச்சமின்றி செய்வோம்.

நாம் அந்தரங்கமாய் செய்யக்கூடிய விசயங்களை மிகப் பெரிய 70 எம் எம் அகன்ற திரையில் ஓர் ஆணும் பெண்ணும் செய்வதை நாம் குடும்பத்துடன் சங்கோசமின்றி ரசித்துப் பார்ப்பதோடு அவர்களைப் பெருமைக்குரியவர்களாகவும் நம் வாழ்வில் அங்கீகரிப்போம்.

ஆனால் நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் ஓர் அரசியல் உண்டு.  அதனைப் பேச மறுப்போம். குடும்பத்தினருடன் உரையாட வெறுப்போம். மகன் மகளுக்கு அது தேவையில்லை என்றே நகர்ந்து செல்வோம்..

பாலிடாயில் குடித்தவன், துரத்தித் துரத்தி விரட்டி சாதித்தவன் என்று கோமாளிகள் எல்லாம் புனிதமான பதவிக்கு வந்ததும், வரத்துடிப்பதும், நான்கு படங்கள் நடித்து முடித்தவுடன் நான் முதல்வரானால் என்று புரட்சி பேசுவதும் நாம் நல்ல பாதையில் தானே சென்று கொண்டு இருக்கின்றோம்.

மொத்த ஏழு புத்தகங்கள்.  ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் வாசிக்கக் கூடிய அமேசான் கிண்டில் மின் நூல்கள். இன்று(ம்) இலவசமாக வாசிக்க தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

பாஜக கொள்கைகள், திட்டங்கள், தமிழகத் தேர்தல் முன்னும் பின்னும் என கடந்த ஒரு வருடத்தில் நடந்த அனைத்தும் சுவராசியமான கட்டுரைகளாக மாற்றப்பட்டுள்ளது.

அமேசான் கிண்டில் மின்னூல் இன்று(ம்) இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு நூலும் ஒரு மணி நேரம் படிக்கக்கூடியது. சுவராசியம். மொத்தம் 7 நூல்கள். அனைத்தும் இலவசம்.

1. திமுக வின் வசூல் ராஜாக்கள்: டிசம்பர் 2021 https://amzn.to/332iGd1

2. விடியல் ஆட்சி - 200 நாட்கள் (கரப்ஷன், கமிஷன், கலெக்சன்) https://amzn.to/3HTxzgJ

3. திராவிட வெள்ளை அறிக்கை: ஜோ பக்கம் - ஆகஸ்ட் 2021 https://amzn.to/3HLLCET

4. தேதி போட்டு கொடுத்துருக்கோமா?: ஜுலை 2021 https://amzn.to/3JSQSs8

5. மரண பயத்தை காட்டிய தேர்தல் (Tamil Nadu Political History) https://amzn.to/3Gavuwp

6. ஒன்றியம் என்ற அரசியல் நாடகம்: ஜுலை 2021 - https://amzn.to/3Gcs6kq

7. ஜோ பக்கங்கள் - https://amzn.to/3f5uSw1

Saturday, January 08, 2022

தமிழக அரசு பள்ளிக்கூடங்கள் 2022

நெருங்கிய நண்பர்கள் என் மேல் அக்கறையும் மரியாதையும் உள்ள நண்பர்கள் தனிப்பட்ட உரையாடலில் ஏன் பாஜக வை ஆதரிப்பதில்லை என்று கேட்டால் அவர்கள் சொல்லும் காரணம் பிராமணர்கள் மற்றும் பிராமணியம் என்று தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றார்கள்.  கூடவே படிக்கக்கூடாது என்று மற்றவர்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தார்கள் என்று பல விசயங்களைச் சொல்கின்றார்கள்.மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன்

நமது நிதியமைச்சர் அம்மையார் மேல் எனக்குத் தொடக்கத்தில் கொஞ்சம் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.  காரணம் இதுவரையிலும் நிதித் துறையில் பக்கா கிரிமினல் மட்டுமே இருந்துள்ளனர்.  Thursday, January 06, 2022

சவுக்கு சங்கர் என்ற இணையப் பேராளிக்கு ஒரு கடிதம்......

சென்ற வாரத்தில் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஜுலி மாரியப்பன் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட கட்டுரை ஒரு நீண்டதொரு பெரிய விவாதத்தைச் சலசலப்பை உருவாக்கியது.  அண்ணாமலை அவர்கள் எப்போதும் போல பொளோர் என்று சாத்து சாத்தினார்.  Tuesday, January 04, 2022

காலம் கவனிக்கும்.

திமுக என்ற கொள்ளை கூட்டத்திற்கு  தமிழகத்திற்குள் தங்களைக் காப்பாற்றக் கார்த்திகை செல்வன்  (புதிய தலைமுறை)மற்றும் குணசேகரன் (சன் நியூஸ்) இருவரின் தலைமையில் பின்னால் அணிவகுக்கும் பெரும் படை பட்டாளங்கள்.....Sunday, January 02, 2022

2022 முக்கிய கடமை

சமூக வலை தளங்கள் என்பது பொழுது போக்கிகள் அல்ல. அதுவொரு கனா காலம். மாறி விட்டது. பலரும் முயன்று படிப்படியாக மாற்றி விட்டார்கள். இப்போது அரசியல் ஆயுதம் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.