Tuesday, January 25, 2022

இணையதள கைக்கூலிகளுக்கு

அண்ணாமலையும் பாஜகவும் வளர்ந்து வருவது சவுக்கு போன்ற இணையதள கைக்கூலிகளுக்கு

✅
எரிச்சலை கொடுக்கிறது,
✅
தூக்கத்தை கெடுக்கிறது
✅
வாழ்வாதாரத்தை அழிக்கிறது.
அதனால்தான் கட்டுகதைகளை தினசரி அவிழ்த்து விடுகிறார்கள்.
பத்திரிகையுலகில் ஆந்தையார், பூனையார், கழுகார் போல இணையத்தில் சவுக்காராக வாழ்ந்து கொண்டிருக்கும் யூ டியூப் தோழர் அடியாளுக்கு என் இனிய காலை வணக்கம்.
யூ டியூப் ல் பேசினால் போதும். கார்ப்ரேட் பாணியில் அலுவலகமும் கூடவே ஆடி கார் என்று வாழ்க்கை வாழ முடியும் என்று என்னைப் போன்ற கிராமத்தானுக்கு கற்றுத் தந்த சவுக்காரே என் நமஸ்காரம்.
தினமும் உயர் ரக மதுவுடன் உல்லாசமாய் மாதுக்களுடன் கும்மியடிக்கும் நேரம் தவிர தமிழக அரசியல் சாணக்கியனாய் இருப்பதாய் நினைத்து மாமா பணி செய்து கொண்டு இருக்கும் மகத்தான சவுக்காரே மீண்டும் என் வந்தனம்.
நீங்க இங்கீலிஸ்ல கடிதம் எழுதியிருக்கீங்கன்னு எங்க பக்கத்து வூட்டு அம்மணி தோட்டத்துலயிருந்த எனக்கிட்டே கொண்டு வந்து காமிக்க மெரண்டு போயிட்டேனுங்க. பொறியியல், ஐஐஎம்,இந்திய காவல் பணியில் இந்திய அளவில் மதிப்பீடு பெற்று கூடவே ஒன்பது ஆண்டுகள் நேர்மையை விலை பேச முடியாத நெருப்பு போல வாழ்ந்து காட்டிய எங்கள் அண்ணா வைப் பற்றி எழுதியிருக்கிறதாக சொன்னாங்க.
அண்ணா என்றதும் நீங்க பாரதிதாசன் புகழ்ந்த அண்ணா என்று நினைத்து விட வேண்டாம். "எங்க அண்ணா" அவ்வளவு திறமை இல்லாதவர். பலகீனம் இல்லாதவர். பலகலைகள் கற்றாலும் இன்னமும் தொப்பம்பட்டி கிராமத்தானாகவே வாழ வேண்டும் என்று நினைப்பவர். கல்லூரிப் பருவம் முதல் இன்று வரை மற்றவர்களுக்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அப்படி என்ன தான் இங்கீலிஸ்ல எழுதியிருக்கீங்கன்னு பக்கத்துவூட்டு காலேஜ் பாப்பா வாசிச்சு காட்டுச்சுங்கோ.
கிறிஸ்துவம் இந்திய எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை இலவசமாக கொடுத்தது. கிறிஸ்துவம் வந்த பிறகு தான் இந்தியாவே பாம்பாட்டி தேசத்திலிருந்து பல்துறை வித்தக தேசமாக மாறியது என்று உங்களைப் போலப் பல கேனக்கிறுக்கணுங்க சொல்லிக் கொண்டே இருப்பது குறித்து எங்களுக்கெல்லாம் ஓர் ஆட்சேபனையும் இல்லைங்கோ.
கூலி வாங்கினால் கூவித்தான் ஆகனும். ஆனால் அன்னை தெரசா என்று கூறப்பட்ட கல்கத்தா வலைபின்னல் தொடங்கி சில நாட்களுக்கு முன்னால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கேரளா பாதிரியார் வரைக்கும்
மதம் மாறவில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக கொன்ற லாவண்யா வரைக்கும்
இது போன்ற உண்மையான நிகழ்வுகளை உங்களைப் போன்றவர்கள் பேச மாட்டீங்க. ஒற்றைச் சார்பு கொண்டு ஊடகங்களும் பேசாது.
மேலே சொன்ன அத்தனை பேர்களும் உண்மையான கிறிஸ்துவம் காட்டிய பாதையில் செல்லாதவர்கள். செல்லரித்த சிந்தனைகளுடன் வாழ்ந்து நாட்டையும் சமூகத்தைச் சீரழித்துத் தனி மனித வக்கிரங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித மிருகங்கள் என்பதனை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.
தசம பாகம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களிடம் சுருட்டும் கோடிக்கணக்கில் கொள்ளை. அனைத்து மதங்களையும் சாத்தான் என்ற துர்போதனையின் மூலம் மடையர்களாக மாற்றுவது. கிறிஸ்துவம் தவிர மற்ற மதங்களை ஏளனப்படுத்தி மனநோயாளிக்கூட்டமாக மாற்றும் வக்கிரவாதிகள். இவர்களை நீங்கள் மனிதர்களாக மதிப்பது எங்களுக்கு ஆச்சரியமல்ல.
நடக்காத ஒன்றை ஜெய்பீமாக்கி உண்மை சம்பவம் என்று மடை மாற்றி உலகத்தை ஏமாற்றிய கூட்டத்தை உச்சி முகரும் உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தில் பிறந்த பாவத்தை உங்கள் குடும்பத்தினர் எத்தனை தடவை காசி, இராமேஸ்வரம் போய் பாவத்தைக் கரைக்க வேண்டுமோ?
உங்களைப் போன்ற அடியாள் கோஷ்டி முதல் தமிழக பாஜக விற்கு எதிராக களத்தில் அத்தனை பேர்களுக்கும் இப்போது முன்னால் இருக்கும் ஒரே சவால் என்ன தெரியுமா?
அண்ணாமலையைத் தமிழக அரசியல் களத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
அண்ணாமலையை ஏற்கனவே ஒரு நடிகரை ஊடக மூலம் கோமாளியாக்கி மூலையில் உட்கார வைக்க முடிந்தது போல ஐபிஎஸ் மூளையைச் செய்ய முடியாத ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தனி மனித பலகீனங்கள் இல்லாத அண்ணாமலை அவர்களை எப்படிச் சாய்ப்பது என்று ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு பிரபகண்டாகவாக வந்து கொண்டே இருக்கிறது.
அண்ணாமலையை மாற்றப் போகின்றார்கள். தமிழக பாஜக வில் கோஷ்டி பூசல், தமிழக பாஜக வில் பின்னடைவு என்று நீங்களும் புலனாய்வு புளி எலியென்று எத்தனையே அவதாரம் எடுத்தாலும் அண்ணாமலை முன்னால் எதுவும் செல்ப் எடுக்கவே மாட்டேன் என்கிறது. பேசக்கூடிய யூ டியூப் களின் எண்ணிக்கை தான் கூடிக் கொண்டே தான் இருக்கின்றதே ஒழிய அண்ணாமலை அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் இளைஞர்களின் கூட்டத்தை உங்கள் கூட்டத்தால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே?
இணையம் முழுக்க இன்று அண்ணாமலை என்றால் அண்ணா என்று தங்களை ஒப்படைக்கத்தயாராக உள்ள பல லட்சம் இளையர் படை விரைவில் சில கோடிகளாக மாறும் போது நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்று நான் வணங்கி வந்த சபரிமலை சாஸ்தாவிடம் மீண்டும் ஒரு மனமுருகி பிரார்த்தனை வைக்கின்றேன்.
கொங்கு மண்டலம் மட்டுமல்ல எல்லா மாவட்டத்தின் அடித்தட்டு மக்கள் முதல் அவலக்குரல் எழுப்பும் அத்தனை ஏழை எளிய ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமல்ல அத்தனை தமிழ்ச் சமூகத்திற்கு எங்க அண்ணா நிஜமான அண்ணாவாக மாறிக்கொண்டு இருப்பது உங்களுக்குத் தெரிந்தாலும் அதனை வெளியே சொல்ல முடியாமல் தடுமாறுவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.
தொடர்ச்சியாக பேசத் தெரியாது. எழுதத் தெரியாது. கோப்பில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது கூடப் புரிந்து கொள்ள முடியாத கோமாளிகளை வைத்து பெருங்கூட்டம் ஆட்டம் போடும் கயவர்களிடம் தமிழகத்தை மீட்க வந்துள்ள எங்கள் அண்ணாமலை பாஜக தலைவர் அல்ல. அதர்மம் தலைதூக்கும் போது வந்து நிற்கும் அவதாரம். இது மிகையல்ல. அடுத்த இரண்டு வருடங்களில் உங்களுக்கே புரியும்.
எங்களுக்கு, எங்கள் அண்ணாமலைக்கு சவுக்காரே நீங்கள் எதிரியல்ல. நீங்கள் கூலியாள். உங்க ஓனர் கண்ணில் பயம் தெரிகிறது அல்லவா?
அது போதும் எங்களுக்கு
இப்படிக்கு
சவுக்கு கட்டை.

No comments: