Tuesday, January 04, 2022

காலம் கவனிக்கும்.

திமுக என்ற கொள்ளை கூட்டத்திற்கு  தமிழகத்திற்குள் தங்களைக் காப்பாற்றக் கார்த்திகை செல்வன்  (புதிய தலைமுறை)மற்றும் குணசேகரன் (சன் நியூஸ்) இருவரின் தலைமையில் பின்னால் அணிவகுக்கும் பெரும் படை பட்டாளங்கள்.....
தேசிய அரசியலில் செய்தி ஊடகம் வழியாக ஷபீர் அகமது (டைம்ஸ் நவ்) மற்றும் திமுக விற்கு கிறிஸ்துவ மிஷனரிகளின் வழிகாட்டுதலின் படி டைம்ஸ் ஆப் இண்டியாவில் பணியாற்றும் ஜுலி மாரியப்பன் (?) பின்னால் உள்ள படை பட்டாளங்கள்...

சில தினங்களுக்கு டைம்ஸ் ஆப் இண்டியா தவறான செய்தியைத் தொடங்கி வைத்தது. எழுதியவர் ஜுலி மாரியப்பன். அண்ணாமலை எப்போதும் போல இயல்பாக நாகரிகமாக தொடங்கி வைத்தார்.  மென்மையாக சுட்டிக் காட்டினார்.  பன்றிகளுக்குப் பாடம் நடத்தினால் மண்டையில் ஏறுமா?

இதற்கு முன்னால் இருந்த பாஜக தலைவர்கள் யாராக இருந்தாலும் சாக்கடையில் ஏன் கல்லெறிய வேண்டும் என்று ஒதுங்கியிருப்பார்கள்.  ஆனால் அண்ணாமலை அவர்கள் வித்தியாசமானவர் ஆயிற்றே.  குச்சியை விட்டு ஆட்டத் தொடங்கினார்.  

பாப்பா உன் கணக்கு தப்பு.  மத்திய அரசு கொடுத்த கணக்கு இது. திமுக வாங்கிய கணக்கு இது. வாங்குவதற்கு முன்பே வாயில் போட்ட கணக்கு இது என்று படிப்படியாக அக்குவேறு ஆணி வேறாக பிரித்துக் கட்ட ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து பெண் பத்திரிக்கையாளரை அண்ணாமலை மிரட்டுகின்றார் என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

அங்கீகாரம் பெற்ற அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் தான் இந்த நிலைமை என்றால் இணையம் என்பது படு கேவலம்.

யூ டியூப் என்று எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ண முடியாது.  அது நீண்ட பட்டியல்.   கொஞ்சம் கூட சங்கோஜமின்றி கெட்ட வார்த்தைகளைச் சகஜமாகப் பேசி தொடர்ந்து ங்கொத்தா ங்கொம்மா என்று இருவர் தொடர்ந்து பெருமையுடன் கத்திக் கத்தி பேசி கருத்துச் சுதந்திரம் என்று பேசும் மதம் மாற்றி கிறுக்கன்களை ஆளுநர் மாளிகையில் சத்திய பிரமாணம் எடுத்த முதல்வர் சந்தித்து ஆதரவுக் கரம் நீட்டுகின்றார். கூச்சமின்றி இது போன்ற பன்னாடைகளுடன் குழு புகைப்படமும் எடுக்கப்படுகின்றது.

இவர்கள் அத்தனை பேர்களும் வெவ்வேறு வகையில் ஒவ்வொரு நாளும் அண்ணாமலையை ஏதோவொரு வழியில் சிக்க வைத்து அசிங்கப்படுத்தி விட முடியுமா? தூக்கமின்றி தவிப்பது கண்களுக்குத் தெரிகின்றது.  சிறுநரிகளுக்குச் சிங்கத்தின் குணம் தெரியாமலா இருக்கும்?

இப்போது அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் கூட்டத்திலும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி என்று குறிப்பிட்டு அவர்களுக்கென்றே தனி செய்தி போலப் பேசப் பதட்டப்படுகின்றார்கள். ஆத்திரமாக அவசரமாக அப்படி எங்கள் நிறுவனத்தைக் குறிப்பிட்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று குதியாட்டம் போடுகின்றார்கள்.

வைரஸ்களாகப் பரவும் புரளிகள் 

அண்ணாமலை அவர்களோ உன் பாணி உனக்கு.  என் பாணி எனக்கு. வந்தால் வா. போட்டால் போ.   டோண்ட் ஒர்ரி முஸ்தபா என்று மூன்று இன்ஞ் ஆணியை உச்சந்தலையில் நச்சென்று இறக்க மற்ற அத்தனை பேர்களும் நுனி நாக்கு வரை வந்த கேள்விகள் அனைத்தும் காணாமல் போய் எக்ஸ்யூஸ்மீ வாஷ் ரூம் எங்கேயிருக்கிறது? என்று ஓடுகின்றார்கள்.

காரணம் என்னவாக இருக்கும்?

***

தமிழக முதல்வர் பதவி என்பதனை நீங்கள் எட்டுக் கோடி தமிழர்களுக்குத் தலைமைப் பொறுப்பு என்று நீங்கள் நம்பினால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.  காரணம் மு. கருணாநிதி அவர்கள் தொடக்கம் முதல் அப்படி நம்பவே இல்லை என்பது தான் எதார்த்த உண்மை.  அவர் அந்தப் பதவியை அடைந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்தப் பதவியை ஏற்கனவே இருந்தவர்கள் எப்படிக் கையாண்டார்கள்? எப்படிப் பயன்படுத்தினார்கள்? நாம் அதனை அடைந்தால் எப்படி மாற்ற வேண்டும் என்பதனை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வைத்திருந்தார்.

இனி வருங்காலம் தாமரைக்காலம்

முதல் தடவை எம்ஜிஆர் உதவியால், ஆசீர்வாதத்தால், அக்கறையால், அன்பால், அவருக்கு் முதல்வர் பதவி  கிடைத்தது.  அன்று எம்ஜிஆர் மட்டும் கருணாநிதிக்குப் பதிலாக வேறொரு நபரை சத்யா படப்பிடிப்பகத்தில் இருந்து அறிவித்து இருக்கும் பட்சத்தில் இன்று கோபாலபுரம் என்ற வார்த்தையே தமிழக அரசியல் வரலாற்றில் வந்து இருக்க வாய்ப்பே இல்லை.  பத்தோடு ஒன்றாக சாதாரண சமஉ போல வாழ்க்கைப் பாதை மாறியிருக்க வாய்ப்புண்டு.  

முதல் முறை எம்ஜிஆர் உதவியால் அண்ணா இறந்தவுடன் முதல்வர் சீட்டை அடைந்த கருணாநிதி இரண்டாவது முறை அசாத்தியமான உயரத்தை அடைந்தார்.  அதற்கும் எம்ஜிஆர் உதவினார். பட்டி தொட்டியெங்கும் கிராமங்கள் அதிகமாக இருந்த அன்றைய (1972) தமிழகம் எம்ஜிஆரைத் தெய்வம் போலவே பார்த்தது. எம்ஜிஆர் சொன்னபடி உதயசூரியனுக்கு வாக்களித்தார்கள்.

மு. க வின் சுயரூபம் இதற்குப் பின்னால் தான் எம்ஜிஆருக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் தெரிந்தது. 

அன்றே (1972) தன் எதிர்காலம் தன் குடும்பம் வாரிசுகளின் வாழ்க்கைப் பாதை என்று அனைத்தையும் தீர்மானித்து இருக்கக்கூடும்.  அதில் தான் அதிகம் கவனம் செலுத்தினார்.  

மு.க முத்து தொடங்கி அவர் எதிர்பார்த்த எந்த வாரிசும் அவர் எண்ணத்தை நிறைவேற்றவே இல்லை.  அவரின் கடைசிக் காலம் வரைக்கும் அவர் எதிர்பார்த்த திறமைகளில் ஒன்று கூட அவர் வாரிசுகளுக்கு வந்து அமையவே இல்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் பாதையில் கிடந்த வைகோ போன்ற முட்களை தூக்கியெறிந்தார். 

ஒரு குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களால் விரும்பப்பட்டதற்கு நீங்கள் ஐம்பது காரணங்கள் சொன்னாலும் அதில் முதன்மையான முக்கியமான காரணம் என்பது கவர்ச்சி. நிறம். பேச்சு. திரைப்படங்கள் உருவாக்கிய மாயத் தோற்றம் என்று பல விசயங்கள் உள்ளே இருந்தது.  ஆனால் மு. கருணாநிதி முழுக்க முழுக்க தன் திறமையால் மட்டுமே படிப்படியாக நகர்ந்து வந்தார் என்பதனையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

கருணாநிதியின் திறமை என்பது எந்த அளவுக்குச் சிறப்பானது என்றால் அது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கோட்டை விட்ட சில விசயங்கள் மூலம் கண்டு பிடிக்க முடியும். 

அரசு என்ற அச்சாணியின் சக்கரமாக இருக்கும் அனைத்துத் துறை அரசு ஊழியர்களை எந்தக் காலத்திலும் பகைத்துக் கொள்ளாதே. 

அரசு கடன் சுமையில் தள்ளாடினாலும் அவர்களை எப்போதும் சுகமாக வைத்துக் கொள். 

அப்படியே ஒத்து வராத சங்கங்களை உடைத்து சின்னாபின்னமாக்கு. யார் யாருக்குத் தலைவர் என்பது தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் இருந்தால் எல்லாவகையிலும் நமக்குச் சாதகம்.

வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் ஒரு பக்கம். மற்றொரு குரூப் வேறொரு பாதை. (மகன் இன்று திமுக சமஉ).

கிறிஸ்துவ இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை வேறொருவர் அபகரிக்க முடியாத அளவுக்குப் பாத்தி கட்டி பக்குவமாகப் பேசு.  

அதிலும் உடைக்கும் திருவிளையாடல் நடத்து.

திமுக வை விட்டு நகர விடாத அளவுக்கு உள் அரசியலைப் பூசலை அதிகப்படுத்து. தொங்கிக் கொண்டே இருப்பார்கள். 

இன்று வரையிலும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.

இதைவிடக் கருணாநிதி செய்த முக்கியமான இரண்டு விசயங்கள் தான் இன்று அவர் வாரிசுகளை வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது.

நீதித்துறை, பத்திரிக்கைத்துறை இரண்டையும் தன் கைக்குள் வைத்துக் கொள்ள எத்தனை வாய்ப்புகள் வழிகள் உள்ளதோ அத்தனையையும் பயன்படுத்தி அவர் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் பல சித்து விளையாட்டுகளைக் காட்டி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக அரசியல் என்பது தன்னை மட்டுமே சார்ந்து இருப்பதான பிம்பத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றார்.

ஏன் டைம்ஸ் நவ் ல் பணிபுரியும் தரகர் ஷபீர்  திமுக வினரிடம் அடிவாங்கி அவமானப்படுத்தி வெளியேறியவர் இன்று வரையிலும் வெறித் தனமாக திமுக நிலைப்பாடு எடுத்துள்ளார்? 

ஷபீர் எங்கேயிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார்? ( முதலில் தீக்கதிர், நக்கீரன், விண் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, என்டிடிவி, கடைசியாக இப்போது டைம்ஸ் நவ்)

எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பாருங்கள்.

பாஜக வை எதிர்ப்பது திமுக வின் நிலைப்பாடு அல்ல.  பாஜக மட்டுமல்ல வேறு எவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவே கூடாது. அது எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே உரியது என்பது மூனா கானா சொல்லிவிட்டுச் சென்றதைத்தான் வாரிசுகள் கடைப்பிடிக்கின்றார்கள்.

இது திராவிடப் போர் அல்ல.  திருட்டுத்தனத்தை விட்டு வெளியே வந்தால் உழைத்து வாழ வைத்து விடுவார்கள். அடைந்திருக்கும் பல ஆயிரம் கோடிகளைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமே என்ற அச்சத்தினால் உருவாகியுள்ள பதட்டப் போர்.

இதில் முன்னால் வந்து நின்று எங்கள் தலை போனாலும் பரவாயில்லை. நாங்கள் தறுதலையாக வாழ்வதே எங்கள் பெருமை என்று பல பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் பலரின் பெயரும் வந்து வந்து போகும்.

காலம் கவனிக்கும். 

அண்ணாமலை அவர்கள் பின்னால் இவர்கள் வந்து நிற்கும் காலம் வரும்.


No comments: