Saturday, November 30, 2019

"சுட்ட வடு"

சுதந்திரக் கருத்து என்றால் என்ன?

முதல் இருபது வயதில் வறுமையால், சாதி சார்ந்த இழிவுகளால், மதம் சார்ந்த ஒதுக்கல்களால், உறவுகள் சார்ந்த புறக்கணிப்புகளால் வெந்து நொந்து தன் இடத்தை அடைய, அடைந்த இடத்தை தக்க வைக்க, மற்றவர்களை விடப் பல மடங்கு போராடிப் பெற்ற பின்பு உருவாகும் வாழ்க்கையின் இறுதியில் என்ன கிடைக்கும்? உருவாகும் எண்ணங்களில் நீங்கள் என்ன மகிழ்ச்சியான கருத்தை எதிர்பார்க்க முடியும்?

"சுட்ட வடு" என்று அய்யன் வள்ளுவர் இதைத்தான் ஆழமாக நமக்குப் புரிய வைக்கின்றார். அது மாறாது. கடைசி வரையிலும் மறையாது. எந்தந்த வயதில் எவையெல்லாம் இயல்பாகக் கிடைக்க வேண்டுமோ அது கிடைக்காத பட்சத்தில் உள்ளே வன்மமாகத்தான் எரிமலை போல உள்ளே கனன்று கொண்டேயிருக்கும். வெளியே துப்புவதற்கு சமய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.

இழிவுகளைத் துடைத்தெறிந்து விட முடியும். புறக்கணிப்புகளை மறந்து விட முடியும். நான் வென்று விட்டேன் பார்த்தாயா? என்று மறைமுகமாக வாழ்ந்து காட்டி பழிவாங்கி விட்ட திருப்தி மனதிற்குள் கிடைத்து இருந்தாலும் அது ஆறாத, ஆற்ற முடியாத வன்மமாக உள்ளே இருப்பதைச் சிலரால் மட்டுமே ஆக்கப் பூர்வமாக மாற்ற முடியும்.

அதற்குப் புத்தகங்கள் உதவும். பழகும் மனிதர்கள், சந்திக்கும் சூழல் உதவும். ஆனால் பலரால் பழசை மறக்க முடியாமல் உள்ளே வைத்துக் குமைந்து குமைந்து இணையப் பெருவெளியில் கொட்டத் துவங்குகின்றார்கள். மனித மனதில் வித்தியாசங்களை அளவிட முடியாது. நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

எத்தனை தத்துவங்கள் சொன்னாலும், உணர்த்தினாலும், புரியவைத்தாலும் வலித்தவனுக்குத் தான் வலியின் சொரூபம் புரியும். தெரியும்.

காலம் கற்றுக் கொடுக்கும்.

டாலர் நகரம் (DOLLAR NAGARAM)

Friday, November 29, 2019

வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 

அன்புள்ள ஜோ

எவரும் வாசிக்க விரும்புவதே இல்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளதே?

உண்மையிலேயே மக்களிடம் வாசிப்பு பழக்கம் உள்ளதா? இல்லையா?

அன்புள்ள ஜா

சில வாரங்களுக்கு முன் பிறந்த ஊருக்குச் சென்று இருந்தேன். ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக் கொண்டே வந்த போது நான் ஒரு காலத்தில் விரும்பிச் சென்ற அண்ணா படிப்பகம் உள்ளே சென்று அரை மணி நேரம் அமர்ந்து இருந்தேன். அதே இருபதுக்கு இருபது சதுர அடிப் பரப்பு. அதே கீற்றுக் கொட்டகை. அதே முரசொலி. இன்னும் கொஞ்சம் திமுக ஆதரவு பத்திரிக்கைகள், புத்தகங்கள். 29 வருடங்களுக்குப் பின்பு நான் அங்கே சென்றேன். உள்ளே எப்போதும் போல நாலைந்து பேர்கள் நெருக்கியடித்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரி விடாமல் படித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். அடுத்தவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.


Wednesday, November 27, 2019

ரயில் நிலையம்

ஊர்ப்பயணம் என்று திட்டமிட்டாலே மனைவி கதிகலங்குவார்.  காரணம் பேருந்துப் பயணம் என்றால் அரை மணி நேரம் முன்னால் சென்று அமர வேண்டும்.  ரயில்ப் பயணம் என்றால் முக்கால் மணி நேரம் முன்னதாக சென்று இருக்க வேண்டும் என்ற என் கொள்கை அவரை மட்டுமல்ல மகள்களையும் எரிச்சலூட்டும். 

அவர்கள் எனக்குப் புரிய வைக்க முயல்கின்றார்கள். நானே அவர்களை மாற்ற முயல்கின்றேன்.  இரண்டு தண்டவாளம் போலவே செல்கின்றது.  இன்று வரையிலும் இந்தப் பஞ்சாயத்து முடியவே இல்லை.
Tuesday, November 26, 2019

நல்லாசிரியர் கரந்தை ஜெயக்குமார் பார்வையில் 5 முதலாளிகளின் கதை

ஆறாவது முதலாளி


குமார் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயல்பாடுகளும், அவரின் வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொண்டே வந்தன. ஆனால் அவரின் முறையற்ற காமம், படிப்படியாக வளர்ந்து, நிறுவனத்தில் உள்ள சின்னஞ் சிறுசுகள் வரைக்கும் பதம் பார்த்தது.

 பலப் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன.

நான் வெளியே வந்து, சில வருடங்கள் கழித்து, குமார் குறித்து, அங்கு பணிபுரிந்த டைலரிடம் கேட்டபொழுது, அவர் இப்படிச் சொன்னார்.

 நமது முதலாளி, என்னுடன், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், டைலராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

  இப்படியும் ஒரு முதலாளிகிருஷ்ணா பார்வையில் 5 முதலாளிகளின் கதை.

Krishna Dvaipayana

5 November at 15:01 · 

முதலாளி/நண்பர் ஜோதிஜி திருப்பூர் எழுதிய "ஐந்து முதலாளிகளின் கதை" படித்தேன். எளிமையான மொழியில் நல்ல பொதிந்த கருத்துக்கள் சொந்த அனுபவங்களுடன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். திருப்பூர் நகரில் தன் வேலையை ஆரம்பித்ததிலிருந்து தொழில்முனைவராக ஆனது வரை தான் சந்தித்த முதலாளிகளில் ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாக விதமாக இருப்பதை எந்த ஒரு மனதீர்ப்பும் இல்லாது தன் நம்பிக்கை விழுமியங்களை கொண்டு கடந்து சென்றதை சிறப்பாக சொல்லியிருக்கிறார். 


Monday, November 25, 2019

என் குரு -திரு மலைநாடன் விமர்சனம்

டாலர் நகரம்' 4தமிழ்மீடியாவில் முதல் தொடராகவும்,  வெளியீட்டில் முதலாவதாக வந்த புத்தகம். புத்தகத்தின் ஆசிரியர் 'ஜோதிஜி' யின் முதலாவது புத்தகம். திருப்பூர் பின்னாலாடை தொழில் தொடர்பாக விரிவாக எழுதப்பெற்ற முதல் புத்தகம். அது வெளிவந்த 2013ம் ஆண்டில் சிறந்த புத்தகங்கள் வரிசையில், 'விகடன்' சிறப்புத் தெரிவில் இடம்பெற்றது.

ஏனிந்த படம் என்று குழம்ப வேண்டாம்.  கீழே உள்ளது. புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.தமிழாற்றுப்படை-- வைரமுத்து (பேச்சுத் தொகுப்பு)

கவிஞர் வைரமுத்து கடந்த சில வருடங்களில் அளவுக்கு அதிகமாக விமர்சிக்கப்பட்டார். அமைதியாக ஒவ்வொன்றாக உள்வாங்கிக் கொண்டே வந்தேன். மனிதனின் பலகீனங்களை நான் நன்றாகவே அறிவேன். பலகீனங்களின் மொத்த உருவமான கவிஞர் கண்ணதாசனை ஒப்பிடும் போது வைரமுத்து மிகச் சாதாரண நபர் தான். இருவரும் இரண்டு மலைகள். அவரவர் வாழ்ந்த காலத்தில் தங்களால் எந்த அளவுக்குச் சாதிக்க முடியுமோ? எந்த அளவுக்கு இந்தச் சமூகப் பரப்பளவில் ஊடுருவ முடியுமோ? அந்த அளவுக்கு, அதற்கு மேலாகத் தமிழர்களின் ஆழ்மனதில் ஊடுருவியவர்கள்.

அண்ணாவிற்குக் கிடைக்காத அத்தனை அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கலைஞருக்குக் கிடைத்தது. நான்கு தலைமுறைகளை உள்வாங்கி கடைசி வரைக்கும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருந்தார் கலைஞர். அவர் பயணம் இறுதியாகத் தொழில்நுட்ப வசதிகளைக் கையாள்வது வரைக்கும் நின்றது. அதே போலக் கண்ணதாசனுக்குக் கிடைக்காத நல்வாய்ப்புகள், தொழில் நுட்ப வசதிகளை வைரமுத்து பயன்படுத்திக் கொண்டார். தன் பலவீனங்களை அளவாக வைத்துக் கொண்டார்.

ஆனால் தொழில் நுட்ப உலகில் வைரமுத்துவின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கூடவே ஆண்டாள் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.
நான் என் மகள்களுக்காக ஒவ்வொரு சமயமும் என்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பேன். அவர்களுடன் உரையாட அவர்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் உள்வாங்குவேன். அவர்களுடன் உட்கார்ந்து ரசிப்பேன். அது குறித்துப் பேசுவேன்.

அவர்கள் எந்தச் சமயத்திலும் என்னை ஒதுக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அவர்கள் எதை ரசிக்கின்றார்கள்? எதை வாசிக்க விரும்புகின்றார்கள்? என்ன காரணம்? என்பதனை ஆராய்வதுண்டு.

ஆனால் என்னால் அவர்களுடன் முழுமையாக ஒன்ற முடியவில்லை என்பது அப்பட்டமான உண்மை. அவர்களுக்காக மாற விரும்புகிறேனே தவிர அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை கொடுத்த அனுபவங்களும் நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குக் கொடுத்த அனுபவங்களும் வெவ்வேறு புள்ளியாகவே உள்ளது என்பதனையும் என்னுள் குறித்து வைத்துக் கொண்டு தான் வருகிறேன். இந்த தலைமுறையின் தமிழ் அறிவு என்பது முற்றிலும் வேறு விதமாக உள்ளது. ஆழ்கடலின் மேற்பரப்பளவில் மட்டுமே உள்ளது என்பதனையும் புரிந்து கொள்ள முடிந்தது.

நமக்கு கிடைத்த தமிழாசிரியர்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதும் உண்மை. மகள் நான் சொன்னேன் என்பதற்காக கேட்டார். ஆனால் முழுமையாக ரசிக்க முடியவில்லை என்றார்.

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. திருப்பூரில் கூட விழா நடத்தினார்கள். நல்ல விற்பனை. ஒவ்வொரு வீடுகளிலும் முதலாளிகள் அதற்கான பதாகைகளை ஒட்டி விற்பனையில் ஈடுபட்டனர். எனக்கு ஆர்வம் உருவாகவில்லை. 500 ரூபாய் புத்தகத்தைத் திருப்பூர் விழாவில் 300 ரூபாய்க்குக் கழிவு விலையில் வழங்கினார்கள். அப்போதும் ஆர்வம் உருவாகவில்லை.

ஆனால் தமிழாற்றுப்படையில் எழுதிய விசயங்களை தன் குரலில் வைரமுத்து அவர்கள் பதிவு செய்துள்ளார்.

உங்களுக்கு நீண்ட பயணம் செல்ல வேண்டிய வாய்ப்பு இருந்தால் இதனைச் சேமித்துக் கேட்டுப் பாருங்கள்.

மெய் மறந்து போவீர்கள் என்பதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். காலத்தை முன்னும் பின்னும் அளந்து அப்படியே நம் கண் முன்னால் நிறுத்தியுள்ளார். இதற்கான அவரின் உழைப்பைப் பற்றி மனதில் சற்று நேரம் யோசித்துப் பார்த்தேன்.
அவரின் பலகீனம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

அவரின் கவிதை வரிகள் பாடல் வரிகளாக வந்து கொண்டிருந்த போது வந்த பாடலையும், தமிழே தெரியாமல், தமிழ் இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத கவிஞர்கள் என்ற பெயரில் காதை அடைக்கும் இசைக் கோர்வைகளை உள்வாங்கும் போது உண்டான கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

வலைதளம் வந்தாலே எரிச்சலாக இருக்கின்றது என்பவர்கள் இதில் உள்ள ஒவ்வொன்றையும் கேட்டுப் பாருங்கள் என்று உங்களை அழைக்கின்றேன்.

கவிஞர் கண்ணதாசன் https://youtu.be/RAAibSo8cbE

திருமூலர் https://youtu.be/4_lGgM0lByQ

அறிஞர் அண்ணா https://youtu.be/Lp8OXYtyisI

திரைத்தமிழ்; https://youtu.be/AtAsqjqdr4k

கலைஞர் மு.கருணாநிதி https://youtu.be/KlEngeYpVHs

மகாகவி பாரதியார் https://youtu.be/nJ3XjZOoUow

தொல்காப்பியர் https://youtu.be/QPbTMzUs_bQ

Sunday, November 24, 2019

மகராஷ்டிரா மைனர் குஞ்சுகள்


சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?

இன்று பாஜக - தேசியவாத காங் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். இதனைச் சந்தர்ப்பவாதம் என்கிறார்கள். 2014 பாஜக பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சி அமைக்க மற்ற கட்சிகள் (122 சீட்டு) உதவி தேவைப்பட்ட போது அன்றே சரத்பவார் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கின்றேன் என்று முதலில் துண்டு போட்டு வைத்தார்.Saturday, November 23, 2019

ஊர் நினைவுகள் 3நாம் வாழ்ந்த ஊரில் இடைவெளி விட்டுச் செல்லும் போது நம் உணர்வு எப்படியிருக்கும்? திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து  தன் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணின் மனம் போல இருக்கும் என்பதனை நீங்கள் உணர்ந்து இருக்கின்றீர்களா?

ஊர் குறித்து, உறவுகள் நினைத்து வருத்தங்கள், கோபங்கள் இருந்தாலும் உள்ளுற வாஞ்சையும் இருக்கத்தானே செய்யும். 

நம்முடன் படித்தவர்கள் முதல் நம்மோடு பழகியவர்கள் வரைக்கும் இன்னமும் அதே ஊரில் இருந்தாலும் அவர்கள் நமக்கு அன்னியமாகத்தான் தெரிகின்றார்கள்.  காரணம் வாழ்க்கை முறை மாறியிருக்கும். சிந்தனைகள் முற்றிலும் மாறியிருக்கும்.


Friday, November 22, 2019

சீனிவாசன் பார்வையில் 5 முதலாளிகளின் கதை

சிறுவயது முதலே எனக்கு என் வயது தோழர்களை விட சில வயது மூத்தவர்களே அதிகம் நட்பானவர்கள். அவர்கள் சொல்லும் அனுபவக் கதைகளே என்னை அதிகம் செதுக்கியவை. கல்விக் காலங்களில், டியூஷன், பள்ளி, கல்லூரி நேரம் போக அதிகமாய் அங்கு இருந்தது அவர்களுடன் பொது விஷயங்களைப் பேசுவதற்கே. வேலைக்குப் போன பின்னும் எனக்கு அமைந்த மேனேஜர்கள், டேமேஜர்களாக இல்லாமல் அண்ணன்களாகவே அமைந்தனர். 

பணியிடங்களை விட, மைதானங்களிலும், மலையேற்றங்களிலும், சுற்றுலாக்களிலும் அவர்களிடம் கற்றவையே மிக அதிகம். பெரும்பாலும் அவர்கள் சொல்பவை சுயபுராணங்களே. நீண்ட, தனிமையான தருணங்களில் மட்டுமே, மனதின் அடிவாரத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்துத் தருவர். தோல்விகள், உறவுகள், வெற்றிகள், இனிய தருணங்கள் என மனித வாழ்வின் பல முகங்களைக் காட்டி, என்னைப் பண்படுத்தியுள்ளனர். Thursday, November 21, 2019

இளம் படைப்பாளர் விருது 2019


வாழ்க்கை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பாடங்கள் நடத்திக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வித்தியாசமான அனுபவங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.  

பார்வையாளர் போலவே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கூடவே அதனை இங்கே பதிவு செய்து விட வேண்டும் என்பதனை கடமையாகவும் வைத்துள்ளேன்.

நெருங்கிய நண்பர் பேசும் போது இதனைத் தவறாமல் குறிப்பிடுவார்.

"கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே" என்பதன் உண்மையான அர்த்தம் "கடமையைச் செய் பலனில் பற்று வைக்காதே" என்பார்.  

இதனை உணர நமக்கு வாழ்க்கையின் பிற்பகுதி தான் சரியாக இருக்குமோ? என்று தோன்றுகின்றது.

திருப்பூரில் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 2013 அன்று நடந்தது.  அதற்குப் பிறகு அந்தப் புத்தகம் சார்ந்த எந்த சந்தைப்படுத்துதல், விழாக்களில் கலந்து கொள்ளுதல், விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் போன்ற எதிலும் கவனம் செலுத்தவில்லை.  Wednesday, November 20, 2019

மதுரை சம்பத் பார்வையில் 5 முதலாளிகளை கதை

Sampath Srinivasan

4 November at 21:58 ·

Kindle E book 5 Muthalaleegalin Kathai Review

புத்தக விமர்சனம்

நண்பர் ஜோதி கணேசன் ஏற்கனவே காரைக்குடியிலிருந்து புலம் பெயர்ந்து திருப்பூர் வந்தது முதல் ஒரு சாதாரண தொழிலாளியாக கால்பதித்து பின்னலாடை நிறுவனத்தில் பொதுமேலாளராக நிலை நின்றது வரை டாலர் நகரம் என்ற புத்தகத்தில் சொல்லி வந்த போது, அந்த தொழில் சார்ந்து பணிகள், இயந்திரங்கள், பணியாளர்கள், உற்பத்தி முதல் விற்பனை வரை என பல விபரங்களை கட்டுரைகளாக சொல்லிச் சென்றிருப்பார்.

அத்தகைய நகரத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, மீண்டெழுதல், மீண்டும் வளர்ச்சி என காலச்சக்கரமாக சுற்றிக் கொண்டிருக்கிற அந்த தொழிலைப் பற்றி இன்னும் ஆவணப்படுத்த வேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளது என்ற அடிப்படையில் தற்போது சில முதலாளிகளை அவர்களின் குணாம்சங்கள், தனிமனித ஒழுக்கங்கள் சார்ந்து நின்று, அதோடு பின்னலாடை தொழில் சார்ந்து மேலும் பல செய்திகளை சுவாரசியமாக அடுக்கிக் கொண்டே சென்றுள்ளார்.
Tuesday, November 19, 2019

Kindle சின்னச் சின்ன விளையாட்டு


அமேசான் போட்டியில் என் வெற்றி தோல்வியை விட யாருடன் மோதுகின்றோம் என்பதனைத் தான் அதிகம் பார்க்கிறேன். இவரை நேற்று தான எனக்குத் தெரியும். இரண்டாம் இடத்தில் நேற்று இருந்தார். மதியம் பார்த்த போது 18 இடத்தில் இருந்தார். ஆனால் இவர் புத்தகத்திற்கு கொடுத்த முன்னுரை மிக கிளாஸ் ஆக இருந்தது. அப்போதே முடிவு செய்தேன். இவரை முழுமையாக உள் வாங்க வேண்டும் என்று. ஸ்டாக் மார்க்கெட் போல நம்நிலை மேலே ஏறுகின்றது. மாலை அதளபாதாளத்தில் சென்று சேர்கிறது.

ஆனாலும் நம் மக்கள் இடைவிடாமல் புனிதப் பணியை செய்து கொண்டே இருக்கின்றார்கள். தொழில் நுட்ப அறிவு அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக இருப்பதால் அவர்கள் களத்தில் புகுந்கு விளையாடுகின்றார்கள். என் புத்தகத்திலும்? இவர் சொல்லும் குற்றச்சாட்டை செய்து இருந்தார்கள். ஆனால் மறைமுகமாக அவர்கள் நல்லது தான் செய்கின்றார்கள் என்றே எடுத்துக் கொண்டேன். திருத்தி வெளியிட்டேன். யார்? என்பது வரைக்கும் என்னால் யூகிக்க முடிந்தது.

Monday, November 18, 2019

பிறந்த ஊர் நினைவுகள் 2

வாழ்ந்த ஊரில்
வசதியான வீடுகள்
உள்ளது.
ஆட்கள் யாருமில்லை.
ஆட்கள் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு சொந்தமான
வீடுகள் இல்லை.Sunday, November 17, 2019

பிறந்த ஊர் நினைவுகள்

ஒவ்வொரு சமூகமும் தமிழகத்தில் தனக்கென தனித்த அடையாளங்களைக் கொண்டு, வாழ்க்கை முறையை அமைத்துள்ளார்கள். அந்த முறையைக் கொண்டு தான் வாழ்ந்தும் வருகின்றார்கள்.

அதுவே தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றது. நாம் விரும்பலாம். விரும்பாமல் புறக்கணிக்கலாம். கண்டு கொள்ளாமல் தவிர்க்கலாம். ஒவ்வொரு ஊரிலும் இதற்கென வருடம் தோறும் கூடுவார்கள். கூடுகிறார்கள். இன்னமும் இங்கே இப்படித்தான் உள்ளது. புலம் பெயர்ந்து வந்தாலும் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் நாம் தவிர்க்கலாம். எதிர்க் கேள்விகள், நக்கல், நையாண்டிகள் செய்யலாம்.


Saturday, November 16, 2019

4 பேருக்கு நன்றி.


"இன்றைய ஒரு நாள்" என்பது தான் எனக்கு மிகவும் முக்கியம். 

இந்தக் கொள்கை தான் என்னை இன்று வரையிலும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனால் இன்று நான் செய்ய வேண்டிய வேலைகள், இன்றைய நிலையில் நான் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்? யாரெல்லாம் எனக்கு உதவி உள்ளனர் என்பதனை அவ்வப்போது பதிவு செய்துவிடுவது வாடிக்கை.  அதன் பொருட்டு இந்தப் பதிவு.

()()()()

மகாகவி பாரதி முதல் நேற்று நீங்கள் பார்த்து வருத்தப்பட்ட பக்கத்து வீட்டுத் தாத்தா மரணம் வரைக்கும் யோசித்துப் பாருங்கள். தன் குடும்பம், தன் பெண்டிர் என்று வாழாமல் அதற்கு மேலாகத் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் சேர்ந்து வாழ்ந்த, வாழும் மனிதர்களை நம் சமூகம் எளிதில் அங்கீகரிக்க விரும்புவதில்லை.  

காரணம் மனிதர்களின் தோற்றமும் வளர்ச்சியும் நாகரிகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே வந்தாலும் அவனுக்குள் இருக்கும் பொறாமையும், வன்மமும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே, வெவ்வேறு விதமாக வளர்நது கொண்டே தான் வருகிறதே ஒழிய அது முற்றிலும் அவனை விட்டு மறைந்து விடுவதில்லை.  

மனிதர்களைக் கவனிப்பது ஒரு கலை.  எப்போதும் மகள்களிடம் நான் சொல்வதுண்டு.

கவனி. 
கண்காணித்துக் கொள். 
கற்றுக் கொள்

இந்த மூன்றையும் இறப்பு வரும் வரைக்கும் தொடர்ந்து கடைபிடி. 

இது தான் வாழ்க்கை முழுக்க பயன்படும் என்று சொல்வதுண்டு.மற்ற இனங்களை விடத் தமிழர்களின் மனத்தடை என்பது பிரசித்தி பெற்றது.

ஏன் இந்த மனத்தடை நமக்குள் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிக் கொள்ள விரும்புவதில்லை.  காரணம் அது தான் தனக்கு வசதியாக உள்ளது என்று அவர்களே ஆழ்மனதில் நம்புகின்றார்கள்.  

அது தான் சரி என்றும் உளப்பூர்வமாக உறுதியும் எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை தங்களுக்குத் தோன்றியபடி வாழ்ந்தும் முடித்து விடுகின்றார்கள்.

நன்றாகப் புத்திசாலித்தனத்தோடு வாழத் தெரிந்தவர்கள், நல்ல திறமை கொண்டவர்கள், உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு அறிவுப்பூர்வமாக வாழத் தெரிந்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோற்றுப் போனவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஒரே காரணம் இவர்கள் காலம் முழுக்க சிறுபான்மையாகவே இருக்கின்றார்கள்.  இவர்கள் தான் சமூகம் அடுத்த கட்டத்திற்கு நகர உதவுகின்றார்கள். 

புதிய மறுமலர்ச்சியை அடையாளம் காட்டக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். 

ஆனால் அங்கீகாரம் இன்றி இறந்தும் போய்விடுகின்றார்கள்.  

நாம் இன்று பெற்றுள்ள வசதிகள் யாரோ சிலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கியது என்பதனை அனுபவிப்பவர்கள் கூட உணர மறுப்பது தான் ஒவ்வொரு இனத்திலும் நடந்து கொண்டிருக்கும் கொடுமையான உண்மை.

()()()()()

ஒவ்வொருவருக்கும் இங்கே ஒவ்வொரு கொள்கையுண்டு.  

இந்த கொள்கையில் மதம், சாதி, கட்சி அரசியல் மற்ற விருப்பங்கள் கலந்தே இருக்கும். அத்துடன் உங்கள் கொள்கை கலந்து இருந்தால் உங்களுக்கு உடனே அங்கீகாரம் கிடைக்கும்.  உடனடி அங்கீகாரத்திற்கு ஏங்குவது மனித மனத்தின் இயல்பு. அதையும் மீறி வென்று விடுவேன் என்று துணிந்து நிற்பது தான் நமக்கு முன்னால் வாழ்ந்த சாதனையாளர்களின் வாழ்க்கைச் சுவடுகள்.  இவர்களைத் தான் எப்போதும் நான் கருத்தில் கொள்வேன். 

இப்படிப்பட்டவர்களைத் தான் என் அருகில் வைத்திருப்பேன்.  அவர்கள் தான் என் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றார்கள். 

()()()()()()

அப்படிப்பட்ட 4 பேர்கள் என் 5 முதலாளிகளின் கதைக்கு வலையுலகம் சார்பாக நான் கேட்காமல் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இப்படியொரு புத்தகம் மின்னூலாக அமேசான் போட்டிக்கு வெளிவந்துள்ளது என்று உலகத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  மகிழ்ச்சி.


நான் வெளியிட்ட பல இலவச மின்னூல்களுக்கு இவர் தான் அட்டைப்படம்  வரைந்து கொடுத்தார். மணிக்கணக்கில் என் அவசர வேகத்தைப் பொறுத்து வரைந்து கொடுத்து என்னை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.  இன்னமும் சந்திக்கவில்லை. அலைபேசியில் பேசியுள்ளேன்.  

நான் வெளியிட்ட இலவச மின்னூல்களுக்கு இவர் உழைத்து உழைப்பிற்கு நான் கொடுக்க வேண்டிய காணிக்கை நன்றிக்கடன் என்கிற ரீதியில் அப்படியே என்னிடம் உள்ளது. இன்று வரையிலும் இவரின் புனிதப் பணி என்பது எனக்காகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நன்றி.


நான் அமேசான் நடத்தும் பெண்டூபப்ளிஷ் 2019 ல் கலந்து கொள்கிறேன். 5 முதலாளிகளின் கதை என்ற பெயரில் வருகின்றது என்பதனை நண்பர்களிடம் சொன்னது போலத்தான் சொன்னேன். 

அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர் போலச் செயல்படத் தொடங்கி விட்டார். இவர் எனக்கு மட்டும் அல்ல. உலகம் முழுக்க இருக்கும் வலையுலக நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் இதே உதவியை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொண்டு வந்தவரிடம் உலகம், சமூகம், மனிதர்கள், மனித இயல்பு போன்றவற்றைப் பல தடவை பல மணி நேரம் பாடம் நடத்தி உள்ளேன்.

காற்றில் கரைந்து போன பெருங்காய வாசனை போலவே ஆனது.  

சமீப காலமாகக் காலம் அவருக்குப் பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறது.  


நான் இன்னமும் சந்திக்கவில்லை. சென்னை சென்று இருந்த போது சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். வாய்ப்பு அமையவில்லை. கோபிச் செட்டி பாளையம் தான் அவரின் சொந்த ஊர் என்றாலும் இருவருக்கும் உண்டான தொலைவு அமெரிக்காவிற்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை விட அதிகமாக உள்ளது.  அதனால் என்ன? அலைபேசி அவ்வப்போது தொலைவைக் குறைத்து விடுகின்றது.  

நிதானமான மனிதர்கள் எதிலும் அவசரம் காட்டமாட்டார்கள்.  அவர் எழுதிய 5 முதலாளிகளின் கதையின் விமர்சனமும் நிதானமாகவே இருந்தது.


என்னை விட வயது மூத்தவர். எனக்குத் தெரிந்து நான் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்றவன் நான் ஒருவன் தான் என்றே நினைக்கிறேன். இப்போது ஃபேஸ்புக்கில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.  மதுரை போக்குவரத்துத் துறையில் உயர்பதவியில் பணியாற்றி, தொழிற்சங்கத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். எழுத்துலகிலும் ஆர்வமாக இன்று வரையிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தன் குடும்பக் கடமைகளை மிக அழகாக செய்துள்ளார்.  கூடவே சமூக கடமைகளும் மிகத் தெளிவாக செய்து கொண்டு வருகின்றார்.

டாலர் நகரம் விழாவிற்கு ஓடி வந்து கலந்து கொண்டார்.  எனக்குத் தெரிந்த அத்தனை பேர்களையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளேன். 

அவரும் பல பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டு வருகின்றார்.  சட்டக்கதிர் என்ற பல உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட நீதிமான்களின் கட்டுரைகளை அழகாகத் தமிழில் மொழி பெயர்த்துப் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவர் தான் முதல் ஆளாக 5 முதலாளிகளின் கதைக்கு ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதியவர்.  தனிப்பட்ட உரையாடலில் இருப்பவர்.  புத்தகம் குறித்துச் சிலாகித்துத் தள்ளிவிட்டார்.  மனம் தூய்மையாக இருந்தால் பாராட்டுவது எளிது. உதவுவதும் எளிது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இந்த சமயத்தில் நண்பர்களுக்கு நன்றி என்ற வார்த்தையைப் பதிவு செய்து விட வேண்டும் என்று தோன்றியது. 

()()()()()

ஒரு பக்கம் கட்சி சார்பாக மிகப் பெரிய லாபி, சந்தைப்படுத்துதல் நடந்து கொண்டே இருக்கின்றது.  அதன் மூலம் தங்களுக்கான இடத்தை எளிதில் அடைந்து விடுகின்றார்கள். விடமுடியும். உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்சி, சாதி, இயக்கம், சித்தாந்தம், கொள்கை என்று ஏதோவொன்றில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்க வேண்டும். எதிர்காலம் இன்னமும் மோசமாக இருக்கப் போகின்றது. நம் தலைமுறைகள் குப்பைக்குள் தான் நீந்தி வர வேண்டும். தங்களை நிரூபிக்க வேண்டும். ஒழுக்கம் உயிரினும் பெரிது என்ற குறளின் கருத்து முற்றிலும் மாறியிருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட நண்பர்கள், எதிர்பாராத ஃபேஸ்புக் நண்பர்கள் ஒவ்வொருவரும் உண்மையிலேயே விலை கொடுத்து வாங்கி, முழுமையாகப் படித்து முடித்து விட்டு இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டிய புத்தகம் என்கிற அளவிற்கு அவரவர் மனதைத் திறந்து விமர்சனமாக எழுதி உள்ளனர். 

அவர்கள் அனைவரும் வலையுலகத்திற்குத் தொடர்பு இல்லாதவர்கள்.  அல்லது நம்மைப் போன்று இன்னமும் வலையுலகத்தில் தொடர்ந்து செயல்படுபவர்களும் அல்ல.

()()()()()

பங்குச் சந்தை போல அமேசான் தளத்தில் என் புத்தகம் தரம் மேலேறி கீழ் இறங்கி மேலேறி என்று மாய வித்தையைக் காட்டிக் கொண்டு இருக்கிறது.

ஆச்சரியப்படத்தக்க வகையில் பலமுறை வர்ணஜாலம் காட்டி மயக்குகின்றது. வலையுலகம் போல் இல்லாமல் ஃபேஸ்புக் தளம் உலகத்து தமிழரிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றது. இதில் அதிக விற்பனை என்கிற ரீதியில் வேறொரு கணக்கும் உள்ளே வந்து நின்று அதற்குத் தனியாக ஒரு பட்டியல் போட்டு அமேசான் நம்மை பயமுறுத்துகின்றது.

நல்ல மனம் படைத்த நண்பர்கள் மூலம் தற்போது 5 முதலாளிகளின் கதை இன்றைய நிலையில் முதல் நூறு இடத்தில் வந்து நிற்கின்றது.  பல சமயம் 51வது இடத்திற்குள் வந்து உள்ளது.

டிசம்பர் 15 வரைக்கும் நேரம் உள்ளது.

உள்ளூர் போட்டி, மாவட்ட போட்டி, மாநில போட்டி, இந்தியப் போட்டி என்பதனைக் கடந்து இப்போது உலகப் போட்டியில் நான் நீந்தி வர வேண்டியதாக உள்ளது. ஆமாம். உலகப் போட்டியில் 50 வது இடத்தைப் பெற்றுள்ளேன் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

()()()()()

படிக்க விருப்பம் இருப்பவர்கள் ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் விமர்சனம் எழுதத் தெரிந்தவர்கள் உங்கள் மொழி அறிவைச் சோதிக்கக் கூகுள் மொழி பெயர்ப்பு கருவி மூலம் செய்து பார்க்கலாம்.

உங்கள் தளம் வாயிலாக நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்கலாம். 

நாமும் இவரைப் போல எழுதி அடுத்த முறை அமேசான் தளம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத் துணிவு கொண்டவர்களை என் புத்தகம் உருவாக்கினால் அதுவே எனக்கு என் புத்தகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுவேன்.

நன்றி.

Friday, November 15, 2019

கிரியின் பார்வையில் 5 முதலாளிகளின் கதை

திருப்பூரைச் சேர்ந்த வலைப்பதிவர் (Blogger) ஜோதிஜியை பற்றிப் பலருக்கு தெரிந்து இருக்கும்.
இத்தளத்தை Blog சாராத பொது வாசகர்கள் தான் அதிகம் படிக்கிறார்கள் என்பதாலே இந்த அறிமுகம், மற்றபடி வலைத்தளத்தைத் தொடரும் அனைவருக்கும் ஜோதிஜியைத் தெரியும்.
ஏராளமான புத்தகங்கள் சரமாரியாக எழுதித்தள்ளுவார். அதாவது ஒரு கட்டுரை எழுதுற மாதிரி ஒரு புத்தகத்தையே எழுதி விடுவார். எப்படிடா இத்தனையை எழுதித் தள்ளுறாரு! நம்ம ஒரு புத்தகத்தையே எழுத முடியலையே என்று நினைப்பேன் 🙂 .Wednesday, November 13, 2019

KINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை


Kovai Neram
51 mins · 

12/11/2019
KINDLE unlimited

ஐந்து முதலாளிகளின் கதை.

இந்த டிஜிட்டல் லைப்ரரியில் முதன் முதலாய் வாசித்த புத்தகம் ஐந்து முதலாளிகளின் கதை.நம்ம பக்கத்து ஊரான திருப்பூரை சேர்ந்த எழுத்தாளரும், தொழிலதிபருமான திரு ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதிய ஒரு சுய முன்னேற்ற நூல் என்றும் கூட சொல்லலாம்.தம் வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவங்களை அழகாய் பதிய வைத்துள்ளார்.புத்தகம் எந்த ஒரு வர்ணனைகளும் இல்லாமல் மிக மிக சுவராஸ்யமாக செல்கிறது.எந்த சாயமும் பூசாத எதார்த்த வரிகளுடன் கொஞ்சம் வேகமாகவே செல்கிறது.Tuesday, November 12, 2019

கிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்KINDLE  (சில ஆச்சரியமான) குறிப்புகள்.

நான் அமேசான் போட்டிக்காக என் 5 முதலாளிகளின் கதையை வெளியிட்டு பத்து நாட்கள் முடியப் போகின்றது. என் முக்கிய நோக்கம் பலரையும் கிண்டில் பக்கம் திருப்ப வேண்டும் என்பதே.

ஆனால் எதார்த்தம் எப்படி உள்ளது?

1. பத்து நாட்களில் மொத்தம் இதுவரையிலும் 9500 பேர்கள் வாசித்து உள்ளனர். 90 சதவிகிதம் கிண்டில் அன்லிமிட் மூலமாக வாசித்து உள்ளனர். மீதி விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.

2. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், பெரும் படிப்பு படித்தவர்கள், நாற்பது ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி வைத்திருப்பவர்கள் என்று என் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு கிண்டில் குறித்து அறிமுகம் இல்லை. ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள்.


Monday, November 11, 2019

5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்

Chakkravarthy Mariappan 
.
7 November at 21:57 · 

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் திரு.கே.எஸ்.ரவிக்குமார் ஒரு வெற்றி பெற்ற இயக்குநர். அவரது முதல் படமே தன் சொந்தக் கதையை இயக்க முடியாமல் "புரியாத புதிர்" எனும் வேறு இயக்குநர் கதையை இயக்கி, பின்னர் "சேரன் பாண்டியன்" படம் மூலம் தன் கற்பனைக் கருவை உருவாக்கி வென்றவர். "சரவணா" எனும் மொழி மாற்றுப்படத்தின் தெலுங்குப் படக் காட்சிகளை ஒட்டி வைத்து பிற்காலத்தில் தயாரிப்பாளரின் செலவை வெகுவாகக் குறைத்து எடுத்துக் கொடுத்தார்.

Sunday, November 10, 2019

5 முதலாளிகள் கதை - விமர்சனம் - Rs. Prabu

RS Prabu
11 hrs

Face Book
10/11/2019

5 முதலாளிகளின் கதை.
ஆசிரியர்: ஜோதிஜி.
கிண்டில் மின்னூல் பதிப்பு.

முதலாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பைக் கண்ட தொழிலாளி படிப்படியாக வளர்ந்து வந்ததே அத்தனை முதலாளிகளின் கதையும் என்றாலும் நாம் கடைசியில் காட்டப்படும் பிரமாண்ட பங்களா, சொகுசு காரை மட்டும் பார்த்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமலேயே இருந்துவிடுகிறோம்.Monday, November 04, 2019

நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள்?என்னால் இனி முடியாது என்பதற்கும் எனக்கு இது இனி தேவையா? என்பதற்கு உண்டான வித்தியாசத்தை உங்களால் உணர முடியுமா?

கடந்த பத்தாண்டுகளாக வலைபதிவில் ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பார்த்து விட்டேன். பழகியுள்ளேன். 


Sunday, November 03, 2019

அமேசான் ஐந்து முதலாளிகளின் கதை - Pen to Publish 2019

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இங்கே ஒவ்வொரு கதையுண்டு. 
இதைப் போல ஒவ்வொரு தொழிலுக்கும் உண்டு.
தொழில் அதிபர்களின் வரலாற்றுச் சுவடுகளையும் நாம் படித்து இருப்போம். 

ஆனால் தொழில் நகரங்களின் கதைகள் அதிகம் இல்லை. 
திருப்பூர் ஆடைத் துறையில் சாதித்தவர்கள் அநேகம் பேர்கள். 
இன்று வருடம் 3500 கோடி வரவு செலவு செய்பவர்களும் இருக்கின்றார்கள். 

வருடம் ஒரு கோடி வியாபாரம் செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
சாதித்த சறுக்கிய முதலாளிகளின் கதைகளின் கதையை உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன். 

உங்கள் விமர்சனங்கள் எதிர்பார்க்கிறேன். நன்றி.I want to recommend this product at Amazon.com 

5 முதலாளிகளின் கதை: 

சாதித்த சறுக்கியவர்களின் கதைகளின் கதை (திருப்பூர் கதைகள் 

Book 15) (Tamil Edition) 

by Amazon  Digital Services  LLC 

Learn more: (அமேசான் கிண்டில் சார்பாக நடத்தப்படும் உலகளாவிய போட்டிக்காக எழுதப்பட்டது. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். உங்கள் நண்பர்கள், கிண்டில் கருவி மூலம் வாசிப்பவர்கள், கணினி மூலம் வாசிக்க முடிந்தவர்கள், அலைபேசி செயலி மூலம் வாசிக்க முடிந்தவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும்.  உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இதனை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி.


* இவற்றையெல்லாம் ஏன் நீ எழுதுகின்றாய்? என்று கேட்காதீர்கள்? இங்கே இன்னமும் ஆவணப்படுத்த வேண்டிய விசயங்களை எழுதாமல் இருப்பதை நான் தொடங்கி வைக்கின்றேன் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

* என் அந்தரங்கம் புனிதமானது என்பது போன்ற எந்த அந்தரங்கமும் என் வாழ்க்கையில் இல்லை. என் வாழ்க்கை. நான் உலகத்திற்குத் தெரிவிக்க வேண்டிய செய்தியாகத்தான் பார்க்கிறேன்.

* என் எழுத்துக்கள் இருபது வயதிற்குக் கீழுள்ளவர்கள் இன்னும் பத்தாண்டுகள் கழித்துப் படித்தாலும் அவர்களுக்குப் பிடிக்க வேண்டும். புதிதாகப் படிக்கத் தொடங்குபவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதே என் லட்சியம்.

*       நான் என்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள   விரும்ப மாட்டேன். என்றும் விரும்பியதும் இல்லை. மனதில் நினைப்பதை சுமாராக கோர்வையாக எழுதத் தெரிந்தவன் என்றே உங்களிடம் அறிமுகம்    செய்து கொள்ளவே  விரும்புவேன்

5 முதலாளிகளின் கதை

Friday, November 01, 2019

அகதி சமூகத்தை தமிழக அரசியல் பாழ்படுத்தியிருக்கிறது

1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. 

குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத  காலிக்கட்டிடங்களில்,  கோழிப் பண்ணைகளில் என கிடைக்கிற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

கூட்டம் கூட்டமாகத் தங்கும்போது ஏற்படுகிற உளவியல் பிரச்னை, பாலியல் பிரச்னைகள், அடிப்படை வசதிகளின்மை என இம்மாதிரி பல பிரச்னைகள் உருவாகிய வண்ணம் இருந்தது. அந்தச் சூழ்நிலையில், வாழ்ந்துகொண்டிருந்த அகதிகளின் நிலை, ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு ஒரே நாளில் மாறியது.

அதன் பின்பு, இலங்கையில் போர் உக்கிரமடையும்போதெல்லாம் அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இப்படி அகதிகளாக 1983 - 2012 வரை 3,04,269 பேர் தமிழகம் வந்தார்கள் என்றும், தற்போது 2016 அரசு கணக்குப்படி 107 முகாம்களில் 64,144 நபர்களும், முகாமிற்கு வெளியே 36,861 நபர்களும் இருப்பதாகச் சொல்ல்லப்படுகிறது. இடப்பெயர்வில் அரசுகளின் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிது. 

சமீபத்தில் விடுதலைப்புலிகள் / இராஜீவ் காந்தி /  சீமான் / ஏழு பேர் விடுதலை / தமிழ் ஈழம்  என விதவிதமான டிரெண்ட் போய்கொண்டிருக்கிறது, இதில் நகைமுரணை கவனித்தால் மேற்சொன்னவை மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புள்ளது போலவும் அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளாக  தமிழகத்தின் முகாம்களில்  இருக்கும் ஈழ அகதிகளுக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாததுபோல் உரையாடல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் இந்த உரையாடல்களுக்குள் அகதிகள் வரமாட்டார்கள் என்று எண்ணுவதற்கில்லை. 

மாறாக, திட்டமிட்டு யாரும் அதைப் பேச  வேண்டாம் எனத் தவிர்க்கிறார்கள். ஊடகமும் சரி, ஊடகவியலாளர்களும் இதில் விதிவிலக்கல்ல, எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப்பேச வேண்டாம் என்று தெளிவாகவே திட்டமிடுகிறார்கள். நுணுக்கமாக கவனித்தால், பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் பற்றிய உரையாடல்களுக்கு வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது 

ஆனால் அதை யாரும் மறந்தும் பயன்படுத்துவதாயில்லை.

இலங்கை, ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள், ராஜபக்ஷே, ராஜீவ்காந்தி, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், இந்திய அரசு இலங்கையில் கட்டும் வீடுகள் இப்படி அத்தனை உரையாடல்களும் தமிழகத்திலுள்ள  அகதிகளைத் தவிர்த்துவிட்டு அல்லது நிராகரித்துவிட்டு முழுமையடைய வாய்ப்பில்லை; ஆனால் அத்தனை உரையாடல்களும் அகதிகளை தவிர்த்துவிட்டுத்தான் நடக்கிறது. 

அகதிகளாக இந்த தேசத்தில் காலடி வைத்தவர்கள் பொது சமூகத்தின் பார்வைக்கு வேண்டுமானால் அகதிகள் என்று அடையாளப்படுத்தப்படலாம், ஆனால் உண்மையில் இவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகத்தான் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகளைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகள் தங்களது விடயத்தில் கரிசனையோடு நடந்துக்கொள்ளும் என்று நம்புகின்றனர். 

30 ஆண்டுக்காலமாக இந்தியாவில் தமிழகத்தில் வாழ்ந்துவிட்ட தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகின்றனர். ஆனாலும், தொடக்கத்தில் தாய் தந்தையருடன் வந்தவர்களுக்கு திருமணமாகி இன்று அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களும் பதின்ம வயதைத் தொட ஆரம்பித்து விட்டனர். அதாவது தந்தை மகன்/ள் பேரப்பிள்ளைகள் இப்படி மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருப்பதில் பல்வேறு சமூகச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லோருமே  நினைப்பதுபோல் அகதிகள் முகாம்களில் இருக்கும் 63000 நபர்களும், இலங்கை அகதிகள் இல்லை. அதில் கிட்டத்தட்ட 30000 பேர் இந்திய வம்சாவழித்தமிழர்கள், அதாவது தேயிலைத் தோட்ட தொழிலாலர்களாக இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். போரினால் பாதிக்கப்பட்டுப் புறப்படும் ஒவ்வொருவரும் எந்த அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு பயணப்பட வாய்ப்பில்லை . 

அப்படிச் சான்றுகள் ஏதுமின்றி வந்த அத்தனை பேரையும் (இந்திய வம்சாவழித் தமிழர்கள் உட்பட) சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்றே அணுகுகிறது பாரத தேசம் /தொப்புள்கொடி உறவுள்ள தேசம்.

சட்ட விரோத குடியேறிகள் என்பதால் இந்திய குடியுரிமைச்சட்டப்படி அவர்களோ அவர்களுடைய குழந்தைகளோ இந்தியாவில் எவ்வித உரிமைகளையும் அனுபவிக்க இயலாது- அடிப்படை சலுகைகளைத்தவிர. உண்மையில் முகாம்களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் கூட அருகிலிருப்போருக்கு அல்லது அவர்களது வாழ்வியலை உணராதவர்களுக்கு பெரும் கோவத்தை உருவாக்குகிறது. 

இலவச மினாரம், தொகுப்பு வீடுகள், அரசு பணக்கொடை போன்றவை இதைவிட வறுமையிலுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை எனும் ஆதங்கத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதுவே ஒருசில நேரம் முகாம்களின் அருகில் இருப்போர்களிடம் பகைமையை வளர்க்கவும் காரணமாக இருக்கிறது.

ஆனால் உண்மை நிலை அப்படியில்லை- இச்சூழ்நிலை அகதி சமூகத்தை பாழ்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை, (குடும்பங்களையும்தான்) அமர்த்தும்போது அங்கு உண்டாகும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பள்ளிகல்வி இடை நிறுத்தலில் ஆரம்பித்து இளவயது திருமணம், விவாகரத்து, உடனே மறுமணம், போதைப்பழக்கம், குற்றச்செயல்கள் என அதன் நீட்சி அதிகமாகி அது மாற்றான் துணையை அபகரித்தல் வரை வந்து நிற்கிறது. 

ஒழுக்கம் என்பது இயல்பாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை என்பது மாறி இன்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற சூழல் வந்துவிட்டது. 

முகாம்களில் வாழ்வதால் பிள்ளைகளின் படிப்பு வீணாகிறது, தீயப்பழக்கங்களில் அடிமைப்பட்டுவிடுகறார்கள் என்று அருகாமையிடத்தில் வாடகைக்கு வீடெடுத்து வாழப் பழகத் தொடங்கிவிட்டனர்.

அகதிகளாக இங்கே வரும்போது தான் எந்தவித ஆதாரங்களையும் எடுத்துவரவில்லை என்றாலும் 30 முதல்  35 ஆண்டுகளுக்கும் மேலாக, கடற்கரையோர மண்டபத்தில் கால் பதித்த கணத்திலிருந்து அவர்களுக்கான முறையான ஆவணங்களைப் பராமரித்து வருவதோடு தமிழக அரசு அத்தனை சலுகைகளையும் இவர்களுக்கும் விரிவுப்படுத்தியிருக்கிறது.  தமிழக அரசு, ஒன்று எங்களைச் சட்ட விரோத குடியேறிகளாக அணுக வேண்டும் அல்லது அரசு சலுகையெல்லாம் வழங்கும்போது என்ன ஆவணங்களைக் கையாள்கிறோமோ அதை வைத்து அவர்களுக்குண்டான பிற சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். 

இப்படி இரண்டையும் செய்து அவர்களையும் குழப்பி தாமும் குழம்பிக்கொள்ளக்கூடாது. ஆனால் அதுதான் நடைபெறுகிறது. இப்படிக் கூறுவதால் அவர்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எதிர்ப்பதாக அர்த்தமில்லை.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 30 ஆண்டுகளில், தற்போதுதான் இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுகிறார்கள்- அகதிகளாக அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். அதுவும் கூட மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு. (தீர்ப்பின் விவரங்களை ஒரு சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அறிந்திருந்தாலும் அகதிகள் தரப்பிற்கு தற்போதுதான் தெரியும்). 

குறிப்பு:

சமீபமாக வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கேட்டு கோரிக்கை வைத்து வருவதை நாளேடுகளில் கண்டிருப்பீர்கள். கடந்த 17.06.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் காரணம். அதாவது திருச்சி கொட்டப்பட்டு முகாம் மற்றும் அருகில் தங்கியுள்ள  சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்துள்ளனர். 

தாங்கள் அனைவரும் இந்திய- இலங்கை ஒப்பந்த்தத்தில் வந்தவர்களென்றும் தாங்கள் இந்திய குடியுரிமைப்பெற தகுதியுள்ளவர்கள் அதற்கான அத்தாட்சி தங்களிடம் இருப்பதாகவும், அரசு இதனை கவனத்தில் கொள்ளாமல் சட்ட விரோதக் குடியேறிகள் எனும் வகையில் நடத்துவதாகவும், தாங்கள் இந்தியக் குடியுரிமை சம்மந்தமாக பல்வேறு மனுக்களை வழங்கியதாகவும் அதன் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் எனவே நீதிமன்றம் தலையிட்டு இதன்மீது நடவடிக்கைஎடுக்கவேண்டுமென்றும் வழக்குத்தொடுத்துள்ளனர்.

இதன்மீது தீர்பளித்த நீதிபதி அவர்கள் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி மூன்று வகையினர் மட்டுமே குடியுரிமை கோர முடியுமென்றும், சட்ட விரோத குடியேறிகளும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் கூட இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியாது, 

இந்திய குடியுரிமை சட்டமும் அதேயேதான் வலியுறுத்துகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருவேறு கொள்கைகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறவாறு தீர்ப்பளித்திருக்கிறார். கூடவே நீண்ட நெடும்காலமாக (முப்பது  வருடங்களாக) இந்திய மரபுக் கலாச்சாரங்களை  பின்பற்றி வாழ்பவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவின்படி   (பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது) 

அவர்களது விண்ணப்பம் மீது பரிசீலனை செய்யலாம் என பரிந்துரைத்துள்ளார்.அதலால் அகதி மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தமிழக வாழ்  அகதிகள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவண்ணம் உள்ளனர். 

ஏதாவதொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம்பெயர்கிறவர்களுக்காகப் பேச, குறைந்தபட்சம் அவர்களுக்குண்டான தேவைகளைப்பற்றி அவர்கள் தஞ்சமடைந்திருக்கும் நாட்டுடன் பேச ஏதாவதொரு அமைப்பு இருக்கும் அல்லது அவர்களுக்குள்ளாவது ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு அல்லது பிரதிநிதிகளாவது இருப்பார்கள் ஆனால் இலங்கை அகதிகளின் பிரதிநிதிகளாக, அல்லது அவர்களுக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு அமைப்புகூட இல்லை.

அகதிகளின் மறுவாழ்வுக்கான அமைப்பு என்று சொல்லக்கூட்டிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமோ அகதிகளுக்கான மறுவாழ்வைத்தவிர மற்ற அனைத்து சேவைகளையும் தேவையானவர்களுக்கு  திறம்படச் செய்கிறார்கள் .

அகதிகள் மத்தியில் இயங்கும் ADRA INDIA, JRS, LIBERA போன்ற அமைப்புகள் கூட சிறு சிறு தொண்டு நிறுவனத் தன்மை சார்ந்த சேவைகளைச் செய்கிறார்களே தவிர இம்மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் எதையும் செய்ய முயலவில்லை அல்லது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

இதில் சென்னையிலிருக்கும் UNHCR அமைப்போ இலங்கைக்கு விரும்பி செல்ல இருக்கும் நபர்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையைச் செய்துகொடுப்பதையும் வருடாவருடம் உலக  அகதிகள் தினத்தைக் கொண்டாடுவதையும் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தமிழக, இந்திய, சர்வதேச அளவில் யாராலும் உதவ இயலவில்லை.

சரி, புறத்திலிருந்து யாராலும் வந்து உதவ  இயலாத நிலை இருக்கிறது, அகதிகள் அவர்களுக்குள்ளாகவே சில தன்னார்வலர்கள் இணைந்து தங்களது பிரச்சனைகளைப்பற்றிச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஒன்றிணைந்தால் அதற்கும் அனுமதியில்லை. இப்படி எல்லாப் பக்க கதவையும் அடைத்துவிட்டு, உலக அரங்கில் ஈழம், போர்க்குற்றம்  எனப் பேசத் துடிப்பது என்னவிதமான அரசியலென்று  தெரியவில்லை.

என் கேள்வியெல்லாம் ஒன்றுதான் - மனிதம் , சமூகம், சமத்துவம், சுதந்திரம் என அன்றாடம் பேசும் நம் கண் எதிரே தமிழகம் முழுவதும் 106 முகாம்களில் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வியல் எப்படி இருக்கும் என்று உரையாடியதுண்டா , அந்த  சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருவருக்குக் கூடவா கலெக்டர் கனவு இருக்காது? ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது? அதைப்பற்றிச் சிந்திக்க யாருமில்லை 63 ஆயிரம் பேரில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 10லிருந்து 20 தற்கொலைகள் நடக்கிறதே என்ற செய்தியையாவது அறிந்ததுண்டா?

எங்களில் படித்த இளைஞர்களெல்லாம் பெயிண்ட் வாளியுடன் தமிழகமெங்கும் வலம் வருகிறார்களே அவர்களில் ஒருவருக்குக் கூடவா தொழில் அதிபர் கனவு இருக்காது அல்லது ஒரு 6 இலக்க சம்பளம் வாங்கும்படியாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசை இருக்காதா என எப்போதாவது யோசித்ததுண்டா. அட ஒரு விளையாட்டு வீரர் ஆகக் கூடவா வாய்ப்பில்லை?

பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால் பரவாயில்லை; அதைப்பற்றி பேசுவதற்கூட ஏன் இவ்வளவு பயம் எனத்தெரியவில்லை.

‘சார், இந்த அகதிகள் பிரச்சினை’ என்று ஆரம்பித்தாலே அதைச் சிக்கலுள்ள, தீண்டத்தகாத பிரச்சனையாகப் பார்ப்பதுவும், வேண்டுமென்றே பிரச்சனையைத் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாதென்பது போல பாவனை செய்வதுவும் ஏன் என்று புரியவில்லை. உண்மையில் அகதிகள் பிரச்சினையைப் பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறது.

வெளிப்படையான உரையாடலுக்கு இந்த சமூகம் தயார் எனில், இந்தப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம் என்று மனமார நம்புகிறோம். 

எதையெதையோ பற்றி யூகத்திலும், நம்பிக்கையிலும் கருத்துக்கள் கூறும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் கூட அகதிகளைப்பற்றிப் பேசுவதில்லை என்பதுதான் உண்மையிலேயே கொடுமை. இன்னும் , இந்திய வம்சாவளி தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், ஸ்ரீ மாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், நாடற்றவர்கள், போதைப்பொருள், கடத்தல்காரன், ஆஸ்திரேலியப்பயணம், சட்டவிரோதக்குடியேறிகள் என அவர்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது..

அகதிகளிடம் நீங்கள் உரையாட நிறைய இருக்கிறது. நீங்கள் செவி மடுக்கத் தயாரெனில் அவர்களும் தங்களிடம்  தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.

ந.சரவணன்.

ந.சரவணனின் பெற்றோர் தொண்ணூறுகளில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள். இருவரும் உயிரோடில்லை. சரவணன் அகரம் பவுண்டேசனில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார். 

நன்றி நிசப்தம்


*****************


சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், யானைகள் வாழும் காட்டில் சிறு குயில்களின் ஓசையும் ஒலிக்கத்தான் செய்யும்.

அமேசான் கிண்டில் காட்டில் திசைகாட்டிகள் தேவையில்லை.

நடக்கத் தொடங்கினால் போதும். வழி கிடைத்து விடும்.

நம்பிக்கை தான் இலக்கு.

இயங்குவது தான் இலக்கு.

இங்கே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது தான் முக்கியம்.

5 நவம்பர் முதலாளிகள் உங்களுடன் பேச வருகின்றார்கள்

அட்டைப்பட வடிவமைப்பு மயிலாடுதுறை கணேஷ்.
.
#Amazon Pen To Publish - 2019