Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, May 19, 2023

ஈழம் வந்தவர்களும் வென்றவர்களும் நூல் அறிமுகம்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் ஆனாலும், ‘இன்னும் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்’ என்று யாராவது எங்கேயாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில், நம்மை உண்மையின் கரம் பற்றவைத்து, ஈராயிரமாண்டு கால ஈழச் சரித்திரத்திற்குள் நம்மை அழைத்துச்செல்கிறார், இந்நூலின் ஆசிரியர் ஜோதி கணேசன்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலங்கையில் பரவி இருந்த இனக்குழுக்களின் தோற்றமும் வளர்ச்சியும், இலங்கையின் மீதான தமிழக மன்னர்களின் படையெடுப்பு, இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களின் குறிப்புகள், சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய இலங்கையின் அரசியல் எனத் தகவல்கள் இப்புத்தகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழர்-சிங்களர் என்ற இனப்பாகுபாட்டின் துவக்கம், தமிழர்கள் மீதான இனவெறுப்புச் செயல்கள், தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களும் அதன் பலன்களும், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாடுகள், ராஜிவின் அமைதிப்படையை புலிகள் எதிர்கொண்ட விதம் என இப்புத்தகம் ஈழப் போராட்டத்தின் சகல அம்சங்களையும் இந்நூல் அலசி ஆராய்கிறது.

ஈழ இறுதிக்கட்டப் போரின்போது பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நடந்தது என்ன, முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டம் தோல்வியைத் தழுவியது ஏன், உட்கட்சி அரசியலையும் வெளிநாட்டு அரசியலையும் ஒருசேர பிரபாகரன் எப்படி எதிர்கொண்டார் என பிரபாகரனின் வாழ்வையும் ஈழப்போராட்டத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் புத்தகம் இது.

ஜோதி கணேசன் - அரசியல் விமர்சகர். ஈழம் தொடர்பான நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்தும், ஆயிரக்கணக்கான வலைத்தளங்களைப் படித்தும், நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களுடன் பேசியும் இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

* முன்பதிவு செய்ய கடைசி நாள்: மே 27, 2022

* போன் மூலம் முன்பதிவு செய்ய: 8148080118

* வெளிநாட்டவர்கள் வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 8148080118

புத்தகங்கள் ஜூன் முதல் வாரம் அனுப்பி வைக்கப்படும்.

* முன்பதிவு செய்ய கடைசி நாள்: மே 27, 2022

 

* போன் மூலம் முன்பதிவு செய்ய: 8148080118

 

* வெளிநாட்டவர்கள் வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 8148080118

 

புத்தகங்கள் ஜூன் முதல் வாரம் அனுப்பி வைக்கப்படும்.

https://www.swasambookart.com/books/9789395272650

புத்தக விலை 400, முன்பதிவு விலை ரூ 300.



Thursday, March 05, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலவச கிண்டில் புத்தகத்தின் விலை 0.00 என்று இருக்கும். இதில் பை நவ் என்பதை க்ளிக் செய்வதை விட்டுவிட்டு, ரீட் ஃபார் ஃப்ரீயை அழுத்துவது வெட்டி முட்டாள்தனம். அப்படி அழுத்தினால் இப்படி கார்டு கேட்பான். கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்தபின் பை நவ் அழுத்தினால் தானே டெலிவராகிவிடும் (விமலாதித்த மாமல்லன்)

*********

06.03.2020 மதியம் 1.30 (இந்திய நேரம்) அமேசான் தளத்தில் ஈழம் - படிக்க மறந்த குறிப்புகள் (1000 வருட ஈழத்தின் வரலாறு, ஈழ அரசியல்வாதிகள், பிரபாகரன், சர்வதேச அரசியல், இறுதிக்கட்டப் போர் வரைக்கும்) எளிய இயல்பாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட மின்னூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும். உங்கள் அலைபேசியில் கிண்டில் செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதுமானது. 

Friday, November 01, 2019

அகதி சமூகத்தை தமிழக அரசியல் பாழ்படுத்தியிருக்கிறது

1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. 

குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத  காலிக்கட்டிடங்களில்,  கோழிப் பண்ணைகளில் என கிடைக்கிற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

கூட்டம் கூட்டமாகத் தங்கும்போது ஏற்படுகிற உளவியல் பிரச்னை, பாலியல் பிரச்னைகள், அடிப்படை வசதிகளின்மை என இம்மாதிரி பல பிரச்னைகள் உருவாகிய வண்ணம் இருந்தது. அந்தச் சூழ்நிலையில், வாழ்ந்துகொண்டிருந்த அகதிகளின் நிலை, ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு ஒரே நாளில் மாறியது.

அதன் பின்பு, இலங்கையில் போர் உக்கிரமடையும்போதெல்லாம் அகதிகள் வர ஆரம்பித்தார்கள். இப்படி அகதிகளாக 1983 - 2012 வரை 3,04,269 பேர் தமிழகம் வந்தார்கள் என்றும், தற்போது 2016 அரசு கணக்குப்படி 107 முகாம்களில் 64,144 நபர்களும், முகாமிற்கு வெளியே 36,861 நபர்களும் இருப்பதாகச் சொல்ல்லப்படுகிறது. இடப்பெயர்வில் அரசுகளின் புள்ளி விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிது. 

சமீபத்தில் விடுதலைப்புலிகள் / இராஜீவ் காந்தி /  சீமான் / ஏழு பேர் விடுதலை / தமிழ் ஈழம்  என விதவிதமான டிரெண்ட் போய்கொண்டிருக்கிறது, இதில் நகைமுரணை கவனித்தால் மேற்சொன்னவை மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புள்ளது போலவும் அதேசமயம் கடந்த 30 ஆண்டுகளாக  தமிழகத்தின் முகாம்களில்  இருக்கும் ஈழ அகதிகளுக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாததுபோல் உரையாடல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் இந்த உரையாடல்களுக்குள் அகதிகள் வரமாட்டார்கள் என்று எண்ணுவதற்கில்லை. 

மாறாக, திட்டமிட்டு யாரும் அதைப் பேச  வேண்டாம் எனத் தவிர்க்கிறார்கள். ஊடகமும் சரி, ஊடகவியலாளர்களும் இதில் விதிவிலக்கல்ல, எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப்பேச வேண்டாம் என்று தெளிவாகவே திட்டமிடுகிறார்கள். நுணுக்கமாக கவனித்தால், பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் பற்றிய உரையாடல்களுக்கு வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேயிருக்கிறது 

ஆனால் அதை யாரும் மறந்தும் பயன்படுத்துவதாயில்லை.

இலங்கை, ஈழம், பிரபாகரன், விடுதலைப்புலிகள், ராஜபக்ஷே, ராஜீவ்காந்தி, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், இந்திய அரசு இலங்கையில் கட்டும் வீடுகள் இப்படி அத்தனை உரையாடல்களும் தமிழகத்திலுள்ள  அகதிகளைத் தவிர்த்துவிட்டு அல்லது நிராகரித்துவிட்டு முழுமையடைய வாய்ப்பில்லை; ஆனால் அத்தனை உரையாடல்களும் அகதிகளை தவிர்த்துவிட்டுத்தான் நடக்கிறது. 

அகதிகளாக இந்த தேசத்தில் காலடி வைத்தவர்கள் பொது சமூகத்தின் பார்வைக்கு வேண்டுமானால் அகதிகள் என்று அடையாளப்படுத்தப்படலாம், ஆனால் உண்மையில் இவர்கள் சட்ட விரோதக் குடியேறிகளாகத்தான் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படுகிறார்கள்; கண்காணிக்கப்படுகிறார்கள். அகதிகளைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகள் தங்களது விடயத்தில் கரிசனையோடு நடந்துக்கொள்ளும் என்று நம்புகின்றனர். 

30 ஆண்டுக்காலமாக இந்தியாவில் தமிழகத்தில் வாழ்ந்துவிட்ட தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகின்றனர். ஆனாலும், தொடக்கத்தில் தாய் தந்தையருடன் வந்தவர்களுக்கு திருமணமாகி இன்று அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களும் பதின்ம வயதைத் தொட ஆரம்பித்து விட்டனர். அதாவது தந்தை மகன்/ள் பேரப்பிள்ளைகள் இப்படி மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இருப்பதில் பல்வேறு சமூகச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லோருமே  நினைப்பதுபோல் அகதிகள் முகாம்களில் இருக்கும் 63000 நபர்களும், இலங்கை அகதிகள் இல்லை. அதில் கிட்டத்தட்ட 30000 பேர் இந்திய வம்சாவழித்தமிழர்கள், அதாவது தேயிலைத் தோட்ட தொழிலாலர்களாக இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டவர்கள். போரினால் பாதிக்கப்பட்டுப் புறப்படும் ஒவ்வொருவரும் எந்த அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு பயணப்பட வாய்ப்பில்லை . 

அப்படிச் சான்றுகள் ஏதுமின்றி வந்த அத்தனை பேரையும் (இந்திய வம்சாவழித் தமிழர்கள் உட்பட) சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் என்றே அணுகுகிறது பாரத தேசம் /தொப்புள்கொடி உறவுள்ள தேசம்.

சட்ட விரோத குடியேறிகள் என்பதால் இந்திய குடியுரிமைச்சட்டப்படி அவர்களோ அவர்களுடைய குழந்தைகளோ இந்தியாவில் எவ்வித உரிமைகளையும் அனுபவிக்க இயலாது- அடிப்படை சலுகைகளைத்தவிர. உண்மையில் முகாம்களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் கூட அருகிலிருப்போருக்கு அல்லது அவர்களது வாழ்வியலை உணராதவர்களுக்கு பெரும் கோவத்தை உருவாக்குகிறது. 

இலவச மினாரம், தொகுப்பு வீடுகள், அரசு பணக்கொடை போன்றவை இதைவிட வறுமையிலுள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை எனும் ஆதங்கத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகின்றனர். அதுவே ஒருசில நேரம் முகாம்களின் அருகில் இருப்போர்களிடம் பகைமையை வளர்க்கவும் காரணமாக இருக்கிறது.

ஆனால் உண்மை நிலை அப்படியில்லை- இச்சூழ்நிலை அகதி சமூகத்தை பாழ்படுத்தியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிறிய அளவிலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை, (குடும்பங்களையும்தான்) அமர்த்தும்போது அங்கு உண்டாகும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. பள்ளிகல்வி இடை நிறுத்தலில் ஆரம்பித்து இளவயது திருமணம், விவாகரத்து, உடனே மறுமணம், போதைப்பழக்கம், குற்றச்செயல்கள் என அதன் நீட்சி அதிகமாகி அது மாற்றான் துணையை அபகரித்தல் வரை வந்து நிற்கிறது. 

ஒழுக்கம் என்பது இயல்பாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை என்பது மாறி இன்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற சூழல் வந்துவிட்டது. 

முகாம்களில் வாழ்வதால் பிள்ளைகளின் படிப்பு வீணாகிறது, தீயப்பழக்கங்களில் அடிமைப்பட்டுவிடுகறார்கள் என்று அருகாமையிடத்தில் வாடகைக்கு வீடெடுத்து வாழப் பழகத் தொடங்கிவிட்டனர்.

அகதிகளாக இங்கே வரும்போது தான் எந்தவித ஆதாரங்களையும் எடுத்துவரவில்லை என்றாலும் 30 முதல்  35 ஆண்டுகளுக்கும் மேலாக, கடற்கரையோர மண்டபத்தில் கால் பதித்த கணத்திலிருந்து அவர்களுக்கான முறையான ஆவணங்களைப் பராமரித்து வருவதோடு தமிழக அரசு அத்தனை சலுகைகளையும் இவர்களுக்கும் விரிவுப்படுத்தியிருக்கிறது.  தமிழக அரசு, ஒன்று எங்களைச் சட்ட விரோத குடியேறிகளாக அணுக வேண்டும் அல்லது அரசு சலுகையெல்லாம் வழங்கும்போது என்ன ஆவணங்களைக் கையாள்கிறோமோ அதை வைத்து அவர்களுக்குண்டான பிற சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். 

இப்படி இரண்டையும் செய்து அவர்களையும் குழப்பி தாமும் குழம்பிக்கொள்ளக்கூடாது. ஆனால் அதுதான் நடைபெறுகிறது. இப்படிக் கூறுவதால் அவர்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை எதிர்ப்பதாக அர்த்தமில்லை.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 30 ஆண்டுகளில், தற்போதுதான் இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படுகிறார்கள்- அகதிகளாக அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். அதுவும் கூட மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு. (தீர்ப்பின் விவரங்களை ஒரு சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அறிந்திருந்தாலும் அகதிகள் தரப்பிற்கு தற்போதுதான் தெரியும்). 

குறிப்பு:

சமீபமாக வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கேட்டு கோரிக்கை வைத்து வருவதை நாளேடுகளில் கண்டிருப்பீர்கள். கடந்த 17.06.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் காரணம். அதாவது திருச்சி கொட்டப்பட்டு முகாம் மற்றும் அருகில் தங்கியுள்ள  சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்துள்ளனர். 

தாங்கள் அனைவரும் இந்திய- இலங்கை ஒப்பந்த்தத்தில் வந்தவர்களென்றும் தாங்கள் இந்திய குடியுரிமைப்பெற தகுதியுள்ளவர்கள் அதற்கான அத்தாட்சி தங்களிடம் இருப்பதாகவும், அரசு இதனை கவனத்தில் கொள்ளாமல் சட்ட விரோதக் குடியேறிகள் எனும் வகையில் நடத்துவதாகவும், தாங்கள் இந்தியக் குடியுரிமை சம்மந்தமாக பல்வேறு மனுக்களை வழங்கியதாகவும் அதன் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் எனவே நீதிமன்றம் தலையிட்டு இதன்மீது நடவடிக்கைஎடுக்கவேண்டுமென்றும் வழக்குத்தொடுத்துள்ளனர்.

இதன்மீது தீர்பளித்த நீதிபதி அவர்கள் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி மூன்று வகையினர் மட்டுமே குடியுரிமை கோர முடியுமென்றும், சட்ட விரோத குடியேறிகளும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் கூட இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியாது, 

இந்திய குடியுரிமை சட்டமும் அதேயேதான் வலியுறுத்துகிறது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருவேறு கொள்கைகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறவாறு தீர்ப்பளித்திருக்கிறார். கூடவே நீண்ட நெடும்காலமாக (முப்பது  வருடங்களாக) இந்திய மரபுக் கலாச்சாரங்களை  பின்பற்றி வாழ்பவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவின்படி   (பிரிவு 21, இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்லாமல் எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது) 

அவர்களது விண்ணப்பம் மீது பரிசீலனை செய்யலாம் என பரிந்துரைத்துள்ளார்.அதலால் அகதி மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே தமிழக வாழ்  அகதிகள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்தவண்ணம் உள்ளனர். 

ஏதாவதொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம்பெயர்கிறவர்களுக்காகப் பேச, குறைந்தபட்சம் அவர்களுக்குண்டான தேவைகளைப்பற்றி அவர்கள் தஞ்சமடைந்திருக்கும் நாட்டுடன் பேச ஏதாவதொரு அமைப்பு இருக்கும் அல்லது அவர்களுக்குள்ளாவது ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு அல்லது பிரதிநிதிகளாவது இருப்பார்கள் ஆனால் இலங்கை அகதிகளின் பிரதிநிதிகளாக, அல்லது அவர்களுக்காகக் குரல் கொடுக்க இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு அமைப்புகூட இல்லை.

அகதிகளின் மறுவாழ்வுக்கான அமைப்பு என்று சொல்லக்கூட்டிய ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமோ அகதிகளுக்கான மறுவாழ்வைத்தவிர மற்ற அனைத்து சேவைகளையும் தேவையானவர்களுக்கு  திறம்படச் செய்கிறார்கள் .

அகதிகள் மத்தியில் இயங்கும் ADRA INDIA, JRS, LIBERA போன்ற அமைப்புகள் கூட சிறு சிறு தொண்டு நிறுவனத் தன்மை சார்ந்த சேவைகளைச் செய்கிறார்களே தவிர இம்மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் எதையும் செய்ய முயலவில்லை அல்லது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

இதில் சென்னையிலிருக்கும் UNHCR அமைப்போ இலங்கைக்கு விரும்பி செல்ல இருக்கும் நபர்களுக்குத் தேவையான ஒழுங்குமுறையைச் செய்துகொடுப்பதையும் வருடாவருடம் உலக  அகதிகள் தினத்தைக் கொண்டாடுவதையும் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. ஆக அவர்களுக்குத் தமிழக, இந்திய, சர்வதேச அளவில் யாராலும் உதவ இயலவில்லை.

சரி, புறத்திலிருந்து யாராலும் வந்து உதவ  இயலாத நிலை இருக்கிறது, அகதிகள் அவர்களுக்குள்ளாகவே சில தன்னார்வலர்கள் இணைந்து தங்களது பிரச்சனைகளைப்பற்றிச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதற்கு ஒன்றிணைந்தால் அதற்கும் அனுமதியில்லை. இப்படி எல்லாப் பக்க கதவையும் அடைத்துவிட்டு, உலக அரங்கில் ஈழம், போர்க்குற்றம்  எனப் பேசத் துடிப்பது என்னவிதமான அரசியலென்று  தெரியவில்லை.

என் கேள்வியெல்லாம் ஒன்றுதான் - மனிதம் , சமூகம், சமத்துவம், சுதந்திரம் என அன்றாடம் பேசும் நம் கண் எதிரே தமிழகம் முழுவதும் 106 முகாம்களில் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வியல் எப்படி இருக்கும் என்று உரையாடியதுண்டா , அந்த  சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒருவருக்குக் கூடவா கலெக்டர் கனவு இருக்காது? ஒரு காவல்துறை அதிகாரி , ஒரு வட்டாட்சியர் கனவு இருக்காது? அதைப்பற்றிச் சிந்திக்க யாருமில்லை 63 ஆயிரம் பேரில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 10லிருந்து 20 தற்கொலைகள் நடக்கிறதே என்ற செய்தியையாவது அறிந்ததுண்டா?

எங்களில் படித்த இளைஞர்களெல்லாம் பெயிண்ட் வாளியுடன் தமிழகமெங்கும் வலம் வருகிறார்களே அவர்களில் ஒருவருக்குக் கூடவா தொழில் அதிபர் கனவு இருக்காது அல்லது ஒரு 6 இலக்க சம்பளம் வாங்கும்படியாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசை இருக்காதா என எப்போதாவது யோசித்ததுண்டா. அட ஒரு விளையாட்டு வீரர் ஆகக் கூடவா வாய்ப்பில்லை?

பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால் பரவாயில்லை; அதைப்பற்றி பேசுவதற்கூட ஏன் இவ்வளவு பயம் எனத்தெரியவில்லை.

‘சார், இந்த அகதிகள் பிரச்சினை’ என்று ஆரம்பித்தாலே அதைச் சிக்கலுள்ள, தீண்டத்தகாத பிரச்சனையாகப் பார்ப்பதுவும், வேண்டுமென்றே பிரச்சனையைத் தலையில் போட்டுக்கொள்ளக் கூடாதென்பது போல பாவனை செய்வதுவும் ஏன் என்று புரியவில்லை. உண்மையில் அகதிகள் பிரச்சினையைப் பேசுவதில் எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் என்னவென்று அறிந்துகொள்ள ஆவலாகவே இருக்கிறது.

வெளிப்படையான உரையாடலுக்கு இந்த சமூகம் தயார் எனில், இந்தப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வு காணலாம் என்று மனமார நம்புகிறோம். 

எதையெதையோ பற்றி யூகத்திலும், நம்பிக்கையிலும் கருத்துக்கள் கூறும் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் கூட அகதிகளைப்பற்றிப் பேசுவதில்லை என்பதுதான் உண்மையிலேயே கொடுமை. இன்னும் , இந்திய வம்சாவளி தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், ஸ்ரீ மாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், நாடற்றவர்கள், போதைப்பொருள், கடத்தல்காரன், ஆஸ்திரேலியப்பயணம், சட்டவிரோதக்குடியேறிகள் என அவர்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது..

அகதிகளிடம் நீங்கள் உரையாட நிறைய இருக்கிறது. நீங்கள் செவி மடுக்கத் தயாரெனில் அவர்களும் தங்களிடம்  தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் காத்திருக்கிறார்கள்.

ந.சரவணன்.

ந.சரவணனின் பெற்றோர் தொண்ணூறுகளில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள். இருவரும் உயிரோடில்லை. சரவணன் அகரம் பவுண்டேசனில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார். 

நன்றி நிசப்தம்


*****************


சிங்கங்கள், சிறுத்தைகள், புலிகள், யானைகள் வாழும் காட்டில் சிறு குயில்களின் ஓசையும் ஒலிக்கத்தான் செய்யும்.

அமேசான் கிண்டில் காட்டில் திசைகாட்டிகள் தேவையில்லை.

நடக்கத் தொடங்கினால் போதும். வழி கிடைத்து விடும்.

நம்பிக்கை தான் இலக்கு.

இயங்குவது தான் இலக்கு.

இங்கே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது தான் முக்கியம்.

5 நவம்பர் முதலாளிகள் உங்களுடன் பேச வருகின்றார்கள்

அட்டைப்பட வடிவமைப்பு மயிலாடுதுறை கணேஷ்.
.
#Amazon Pen To Publish - 2019


Tuesday, May 14, 2013

14.கண்ணீர்த்தீவு

முந்தைய தொடர்ச்சி

இப்போது ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது.  உள்ளே இருந்த மொத்த மக்களின் பழக்கவழக்கங்கள் சற்று மேம்பட்டதாகி விட்டது.  ஆங்கிலம் என்பது வாழ்க்கை மொழியாக மாற்றம் பெறத் தொடங்கிய காலம் இது.  எங்கெங்கு காணினும் கிறிஸ்துவம் கூட ஒரு சமயமாக ஏற்றுக்கொண்டதாகி விட்டது.  

இனக்குழுவாக இருந்தவர்கள் இப்போது தங்களுடைய இனம் சார்ந்த சிந்தனை என்கிற அளவிற்கு சற்று மேம்பட்டு உள்ளே உழன்று கொண்டிருக்கிறார்கள். 

ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.   

அப்போது உலகமெங்கும் பௌத்தம் வளர்ந்து இருந்தது.  வளர்ந்து இருந்த நாடுகளில் இருந்தவர்கள் சிங்களர்கள் அல்ல. 

ஆங்கிலேயர்கள் இலங்கையின் உள்ளே வந்த போதும் இந்த தமிழ் மொழியும், பௌத்தமும் இருந்தது. 

கிபி 112. முதல் 134 வரைக்கும் ஆண்ட சிங்கள மன்னராக இருந்த ஜெயபாகு முதல் கிபி 1815 வரைக்கும் ஆண்ட ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்ககே மன்னர் வரைக்கும் அவர்களின் மதம் பௌத்தமாக இருந்தாலும் மொழி என்பது தமிழ் மொழி தான். 

இன்றைய சிங்கள மொழியின் தொடக்கமான எலு என்பதில் எச்சமும் மிச்சமும் விடாமல் சிறிது சிறிதாக பல மொழி கலப்புகளுடன் மாறிக்கொண்டே வந்தது. 

தொடக்க காலகட்டத்தில் இலங்கையில் பௌத்த மதத்தை தழுவியர்கள் அத்தனை பேர்களும் தமிழர்களே.  அப்போது அவர்களை பௌத்த தமிழர்கள் என்றழைக்கப்பட்டனர். பின்னாளில் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய அத்தனை புனைவுகளின் மூலமாக பௌத்த சமயத்தை தழுவியர்கள் முழுமையான சிங்கள வம்சத்தை சேர்ந்தவர்களே என்று முடித்து எளிதாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.  

இலங்கை  சுதந்திரம் வாங்கும் வரைக்கும், பின்னாளில் உருவாகப் போகும் பல சிங்கள சார்பாளர்கள், தலைவர்கள் வரைக்கும் தமிழ் மொழியை பேசியதும், எழுதியதும், முக்கிய ஆவணங்களில் தமிழிலேயே கையெழுத்துப் போட்டதும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். 

கண்டி முடியாட்சியை முடித்து வைக்க உதவிய சிங்கள கூட்டணியில் மூன்று பேர்களைத் தவிர சந்திரிகா குமார துங்கே கணவர் வழி  பாட்டனார் ரத்வட்டே வரைக்கும் அன்று ஆங்கிலேயர்களிடம் உருவாக்கிய ஒப்பந்தத்தில் தமிழில் தான் கையெழுத்து போட்டு இருக்கின்றனர்.  

ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் பாதுகாப்பாக இலங்கையை விட்டு வெளியே சென்று இங்கிலாந்தில் உள்ள ஆவண காப்பகத்தில் வைத்து காவல் காத்துக்கொண்டுருக்கிறார்கள். 

ஆனால் தொடக்கம் முதலே இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுக்க தமிழர்களின் உண்மையான வரலாற்றை, சான்றுகளை ஆவணமாக்குவதில் எவருக்கும் அக்கறையும் இருக்கவில்லை.  அதற்கான அவஸ்யங்களையும் மற்றவர்களைப் பார்த்து யோசிக்கவும் இல்லை என்பது இன்று வரையிலும் மகத்தான ஆச்சரியம்.   

இதுவரைக்கும் மொத்த இலங்கையையும் ஆங்கிலேயர்கள் மூன்று பகுதிகளாக வைத்துக்கொண்டு தான் ஆட்சி புரிந்து வந்தனர். 

நிர்வாக சிரமத்தின் பொருட்டு கோல்புரூக் என்ற ஆங்கிலேயர் (1833) தலைமையின் கீழ் குழு அமைத்து ஆலோசனை கேட்கப்பட்டது. 

ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து இப்போது 35 வருடங்கள் ஆகிவிட்டது. 

காரணம் நிர்வாகத்திற்கு தேவையான உண்மையான பணப்பயிர் தோட்டங்கள் மெதுவாக உருவாகிக்கொண்டுருந்து. உபகரணங்கள் எதுவுமே இல்லாமல் மனிதர்களைக் கொண்டே புதிதாக உருவாக்கப்பட்ட நிலச் சட்டத்தை வைத்துக்கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களைக் கொண்டு ஆங்கியேலயர்களின் வசதிக்காக அத்தனை அஸ்திவாரங்களும் உருவாக்கப்பட்டது. 

பிடுங்கப்பட்ட நிலங்கள் மொத்தமும் வந்து இறங்கும் துரைமார்கள் கையில் கொடுக்கப்பட்டது.

இதில் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய முக்கிய அம்சம் ஒன்று உண்டு.

இவர்கள் உள்ளே நுழைந்த ஐந்து வருடத்திற்குள் (1803) தமிழர்களின் எல்லைகள், சிங்களர்களின் எல்லைகள் என்று அப்போதே வரைபடம் உருவாக்கி வெளியிட்டதும், உள்ளே வெவ்வேறு கலாச்சாரம், மொழி கொண்டு  வாழ்ந்து கொண்டுருப்பதை உணர்ந்து ஆவணமாக்கியவர்கள் உணர்ந்து வைத்துக்கொண்டு ஏன் மொத்தமாக சேர்த்து இனி ஆள வேண்டும் என்று யோசித்தார்கள்.  

கிரேக்க புவியாளர் தாலமி முதல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியது வரைக்கும் மொத்த ஆவணங்களிலும் தமிழர் சிங்களர்கள் வாழ்ந்த புவி அமைப்பின் மொத்தத்தையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். 

கோல்புரூக் பரிந்துரைக்குப் பிறகு தொடக்கத்தில் 5 மகாணங்களாக ஆக்கப்பட்டது.

இதுவே ஆங்கிலேயர்களால் பின்னாளில் 9 மகாணங்களாகவும் பிறகு 20 மாவட்டங்களாகவும் ஆனது.  இதன் மூலம் தமிழர்களின் பகுதியில் படிப்படியாக சிங்களர்களை குடியேற்றுவதும் நடக்கத் தொடங்கியது.  அப்போது தமிழர்களின் தாயகமாக இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 26500 சதுர கிலோ மீட்டர் இருந்தது. 

ஆங்கியேலர்கள் பிரித்தாளும் சூழ்ச்சிகாக ராஜதந்திர விளையாட்டுக்கான ஆரம்ப பாலபாடத்தின் விளைவு கடைசியில் (1948) கிழக்கு மகாணத்தில் 7000 சதுர கிலோ மீட்டரும், வடக்கு மகாணத்தில் 500 கிலோ மீட்டரையும் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு அரசு அங்கீகாரம் கொடுத்து குடியேற்றத்தை நிறைவேற்றியதில் முடிந்தது. 

கோல்புரூக் பரிந்துரைக்குப் பிறகு தான் இலங்கை என்ற சரித்திர பக்கங்களின் உண்மையான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடக்கமானது.

நாகர்கள், வேடர்கள், நாடோடிகள், இனக்குழுக்கள், மன்னர்கள், குறுநிலமனனர்கள், தமிழ், சிங்களம் என்பதெல்லாம் அழிந்து தனி மனிதனுக்குள் அதுவரையிலும் இல்லாத வளர்ச்சி பெற்றுக்கொண்டுருந்த வக்கரமும் வளரத் தொடங்கியது.  

உருவாக்கியதற்கு முக்கிய காரணங்கள் ஆங்கிலேயர்கள் தான் என்றாலும் இறுதிவரையிலும் அதை உணர்ந்தவர்கள் யாருமில்லாமல் எதிர்க்கவும் முடியாமல் அதற்கே பலியானது தான் இன்று இலங்கை சரித்திரம் கொடுத்த விலை. 

இதற்குப் பிறகு உருவானவைகள் தான் சொர்க்கத் தீவின் கதை என்பது கண்ணீர்த் தீவின் கதையாக மாறியது

மொத்தமாக படிக்க

Wednesday, May 08, 2013

13, பரதேசியின் கதைக்களம்



ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் கிழக்கிந்திய நிறுவனம் என்ற பெயரில் உள்ளே வந்த (கிபி 1600/1700) காலத்தில், கிழக்கிந்திய நிறுவனத்தில் கேயன் என்பவர் கவர்னராக இருந்தார்.  

இவர் தான் முதன் முதலாக இங்குள்ளவர்களின் வறுமையை பயன்படுத்தி தங்கள் ஆளுமையில் இருந்த நாடுகளுக்கு கூலியாக அழைத்துச் செல்லும் புனிதப் பணியை தொடக்கத்தில் தொடங்கி வைத்தவர்.  

கிபி 18,19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தொடர்ச்சியாக 24 பஞ்சங்கள் தாக்கியது.  இதன் காரணமாக அடிப்படை மக்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.  

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இந்தியாவை பல்வேறு மன்னர்கள் அங்கங்கே ஆண்டு கொண்டுருந்த போது அவர்கள் மக்களுக்கு போட்ட வரி என்பது விளையும் நிலத்தில் ஆறில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.  

ஆனால் பின்னால் வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த பஞ்சமென்பது ஒரு பொருட்டே அல்ல. ஆங்கிலேயர்கள் விளையாத நிலத்திற்கும் சேர்த்து வரியை போடத் தொடங்கினார்கள். அந்த வரிகளைக் கட்ட முடியாதவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எங்கேயாவது பயணப்பட வேண்டிய சூழ்நிலை இயல்பாகவே உருவானது. 

அப்போது தான் புலம் பெயர்ந்த பயணங்கள் அதிகமாகத் தொடங்கியது. உலகமெங்கும் தேவைப்படும் வேலைக்கு கிளம்பத் தொடங்கினார்கள். குறிப்பாக அப்போது தென்னிந்தியாவில் தான் அதிக வெளியேற்றம் நடந்தது. 

ஜாதியால் ஒடுக்கப்பட்டு, அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டுருந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று மொத்தமாக கூட்டம் கூட்டமாக  தென் ஆப்ரிக்கா, பீஜீத்தீவு, மொரிசியஸ், இலங்கை, மலேசியா,  சிங்கப்பூர், பர்மா, வியட்நாம், என்று தொடங்கி எங்கெங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கேயெல்லாம் பயணப்படத் தொடங்கினார்கள்.  

தென்னிந்தியாவின் கடற்கரை ஓட்டிய கிராமங்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அருகே தெரிந்த இலங்கைத் தீவு உண்மையிலேயே சொர்க்கத் தீவாகத் தான் தெரிந்திருக்க வேண்டும்.

கண்டி முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததும் ஆங்கிலேயர்கள் புத்தளத்தில் இருந்து கண்டி வரைக்கும் தோட்டங்களை உருவாக்கிக் கொண்டுருந்தார்கள். கண்டியை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்த அடுத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு (1820) காபி பயிர் செய்வதற்கான பூர்வாங்க வேலையை தொடங்க ஆரம்பித்தனர்.  

தொடக்கத்தில் அவர்களின் முயற்சி வெற்றி அளித்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. 

பார்னஸ் என்ற ஆங்கிலேயர் பேராதனைப் பூங்காவிற்கு அருகில் கன்னொருவில் என்ற இடத்தில் காபி பயிருக்கென்று ஒரு தோட்டத்தை அமைத்தார்.  

கம்பளை (1823) சிங்கபிட்டிய பகுதியில் இராணுவ சேவை செய்து கொண்டுருந்த கேப்டன் ஹென்ரி பர்ட் என்பவர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 14 குடும்பத் தொழிலாளார்களைப் பயன்படுத்தி காப்பிச் செடி வளர்த்து 600 பவுண்ட சம்பாரித்தார். 

இதன் தாக்கத்தில் உருவானது தான் 1880 வரைக்கும் மலையகம் முழுவதும் காப்பி பயிர் மட்டும் என்ற நிலை உருவானது. 

கரடு முரடான பாறைகளும், மலையின் கற்களை நீக்கி சமதளமாக்கி தோட்டமாக மாற்றி மகத்தான சாதனைகளை உருவாக்கியவர்கள் அத்தனை பேர்களும் கல்வி அறிவு இல்லாத, தங்களின் உழைப்பு ஒன்றினால் மட்டுமே சாதித்துக் காட்டியவர்கள்.  இவர்களின் உழைப்பே, படிப்படியாக இலங்கை என்ற காலணியாதிக்க நாட்டின் பெருத்த வருமானத்திற்கும் காரணமாக அமைந்தது. 

அடிப்படை வசதிகள் கூட இல்லாத எட்டுக்கு பத்து என்ற லயன் வீடுகள் தான் கடைசி கால கட்டத்தில் அவர்கள் பெற்ற பெரும் வசதிகள். இந்த இடத்தில் இருந்து கொண்டு, தங்களையும் அழித்துக்கொண்டு ஆங்கிலேயர்களின் வணிக லாபத்திற்காக தங்கள் வாழ்க்கை தொலைத்தவர்கள் தான் இந்த மலையகத் தமிழர்கள்.  

மலையக தமிழர்களின் வரலாறு என்பது பூர்வாங்கமாக 1824 முதல் தொடங்குகிறது.  தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட 5,000 ஏக்கரில் 10,000 பேர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பணம் கொழிக்கும் தோட்டமானது வளர்ந்து 1881 வரைக்கும் உயர்ந்த 2,60,000 ஏக்கராக மாற்றம் பெற்றது.  

இந்த தோட்டம் முழுமையும் அப்போது இலங்கையின் உள்ளே இருந்த ஐரோப்பியர்களிடம், மேல் தட்டு வர்க்கத்தினரிடமும் இருந்தது.  

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் 6 ஷில்லிங் என்ற அளவிற்கு தோட்டம் உருவாக்க நினைப்பவர்களுக்கு இடங்கள் விற்க்கப்பட்டது,

நவீன கடல் பயணங்கள் உருவாகாத காலமிது, 

இலங்கைக்கு பயணிக்க வேண்டியவர்கள் இராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் இருந்து  சிறு படகு, வல்லத்தின் மூலமாக தலைமன்னார் துறைமுகத்திற்கு போய் சேர வேண்டும். இறங்கும் இடத்தில் இருந்து பல மைல்கள், பல நாட்கள் நடந்து போய் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றபடி, தோணி, சிறு படகு, கப்பல் என்று மாறி மாறி இவர்களை அழைத்து சென்று கொண்டுருந்தார்கள்.

பாதுகாப்பு இல்லாத காலகட்டத்தில் செல்லும் கப்பல்கள் விபத்துக்குள்ளாவதும், அந்தப் பயணம் பரிதாபமாய் பாதியில் முடிவது அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. இந்த கூலி கப்பலை அழைத்துக்கொண்டு சென்ற ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி அதில் பயணித்த அத்தனை பேர்களும் இறந்தனர்.  

இந்த காலகட்டத்தில் மேலை நாட்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதும் நடந்தது.  அந்தக் கப்பலுக்கு பின்னாளில் கிடைத்த புகழ் கூட தமிழர்கள் பயணித்த கப்பலுக்கும் கிடைக்கவில்லை.  

இலங்கையை பசுமை பூமியாக மாற்றியவர்களுக்கும் உண்மையான அங்கீகாரம் இறுதி வரைக்கும் கிடைக்காதது அழக் கூட தேம்பில்லாமல் வாழ்ந்தவர்களின் சோக வரலாறு.. 

இந்த மலையகத் தமிழர் என்ற கிளை நதி மூலம் தான் ஆங்கிலேயர்களின் வருமான நதி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடப் போகிறது.

தலைமன்னாரில் இறங்குபவர்கள் கால்நடையாகவே மலையகம் போய்ச் சேர வேண்டும்.  மலையகம் போய் கண்டி போய்ச் சேர்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் கூட ஆகலாம். அப்போது துணை கலெக்ட்ர்  பொறுப்பை வகித்த பிரிப்ஸ் ஏ டம்பளர் தயாரித்த அறிக்கையின்படி 1867 ஆம் ஆண்டு புறப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 பேர்கள்.

மலையகம் போய்ச் சேர்ந்தவர்கள் 186. மற்றவர்கள் அத்தனை பேர்களும் செல்லும் வழியிலேயே இறந்தனர்.  

போய்ச் சேர்ந்தவர்கள் அங்கு உயிர் பிழைத்து வாழ்வதும் அடுத்த மகத்தான சாதனை. 1841 க்கும் 1846க்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் சென்று அடைந்தவர்களில் மொத்தமாக 90 ஆயிரம் பேர்கள் இறந்து போனார்கள்.

உலக நாகரிகம் வளரத் தொடங்கிய மனித நாகரிகம் பின்னால் உருவாக்கிய அடிமை என்றொரு கேவல நாகரிமும் தொடரத் தொடங்கியது. மனிதர்களை அடிமையாக வைத்துக்கொள்ளும் அமெரிக்க நாகரிகமும், கருப்பின மக்களின் அவஸ்த்தைகளும் நாம் படித்த மொத்த சரித்திர பக்கங்களும் உணர்த்தியதாகத் தான் இருக்கிறது.

கருப்பின மக்களை விடுவிக்க அன்றொரு லிங்கன் உருவானார்.  ஆனால் இந்த மலையக மக்களின் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் உண்மையான அக்கறையுடன் எவருமே வரவில்லை.  

உலகில் கூலி என்ற சொல் அறிமுகமானதே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட (1833) அடிமை ஒழிப்பு சட்டத்திற்குப் பிறகு தான்.  அதன் பிறகு தான் அடிமை என்ற வார்த்தை மாறி கூலி என்ற சொல் உருவானது.  

வெள்ளை மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் இந்தியர்கள் என்பவர்கள் அத்தனை பேர்களுமே கூலிகள் தான்.  

மகாத்மா காந்தி பாரிஸ்டர் பட்டம் வாங்கிய போதும் அவர்கள் அழைத்த பெயர் பாரிஸ்டர் கூலி.  

கப்பலோட்டிய வஉசியின் கப்பலுக்கு கூலி கப்பல் என்று தான் அழைத்தார்கள்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட உருவாக்கத்திற்காக ஆங்கிலேயர்கள் முன்னேற்பாடுகளை செய்து கொண்டுருந்ததைப் போலவே பக்கத்து மலேசியா தீபகற்பத்தையும் ரப்பர் காடாக மாற்ற முயற்சித்துக் கொண்டுருந்தனர்.  

அப்போது ரப்பர் உற்பத்தில் பிரேசில் உலகின் முதன்மையான நாடாக இருந்தது. 

1877 ஆம் ஆண்டு சர் ஹென்ரி விக்ரஹாம் என்ற ஆங்கிலேயர் பிரேசிலிலிருந்து 20 ரப்பர் மரக் கன்றுகளைத் திருட்டுத்தனமாக கொண்டு வந்து மலேசியா பூமியில் நட்டார்.  20 ரப்பர் மரக்கன்றுகள் என்பது சென்ற தமிழர்களின் உழைப்பால் பிற்காலத்தில் மலேசியா முழுக்க ரப்பர் காடாக மாறியது. 

போர்த்துகீசியர்களின் ஆளுமையில் இலங்கை இருந்த போது எப்படி இந்தியாவில் இருந்து வந்த போர்த்துகீசிய படைகள் வந்து உதவியதோ அதே போல் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த பக்கத்து நாடுகளும் இந்த கூலி பண்டமாற்ற முறையும் தொடங்கி வைக்க நான்கு புறமும் தண்ணீர் என்பது போல ஆங்கிலேயர்களுக்கு நான்கு திசைகளுமே சாதகமாக இருந்தது.. 

ஏன் இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்தவர்களை தோட்ட வேலைக்கு கொண்டு செல்லவில்லை?

முதலும் முக்கியமான காரணம் அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்கான சம்பளம் என்பது சில தேங்காய்கள், மரக்கால் அரிசி, தங்கவதற்கு துணியால்,தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூடாரம்.  

அதுவும் சரிந்த ஏதோ ஒரு மலைக்குன்றுகளின் ஓரத்தில் அமைந்து இருக்கும். தொற்று நோய், விஷக்காய்ச்சல், மர்மநோய்கள்,பூச்சிக்கடிகள் என்று தொடங்கி அத்தனை அவஸ்த்தைகளையும் அவர்களின் அன்றாட வாழ்க்கை எதிர்கொண்டது. 

பிழைத்து உழைத்தவர்கள் பாக்யவான்கள். அப்போது இறந்தவர்கள் புண்ணியவான்கள்.  

இந்த மலையகத்திற்கு நடந்து வரும் போது இறந்தவர்களின் பிணத்தை கூட எடுக்க ஆள் இருக்காது.  

அப்படியே மக்கிப்போய், நடந்து செல்லும் பாதையிலேயே எலும்புக்கூடுகளும், அதுவே மெதுவாக சுண்ணாம்பு போல் மாறி அந்த தடம் மாறியிருப்பதும் கடந்து செல்வபவர்கள் இயல்பாக காணும் காட்சியாக இருந்தது. 

ஆனால் இவர்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கவும், அதற்குப் பின்னால் இருந்த ஆங்கிலேயர்களின் வலைபின்னல் நிர்வாக அமைப்பும், அதற்கென்று பாடுபட்ட நல்லவர்களுக்கு ஆங்கிலேயர்கள் வைத்திருந்த பெயர் கங்காணிகள்.  

கண் காணிப்பவர்கள் என்பது தான் கங்காணிகள் என்று மாறியது.  

தமிழ்நாட்டில் இருந்து சென்று கங்காணி வேலை பார்த்தவரின் மகன் தான் பின்னாளில் தோட்டத் தோழிலாளர்களின் தலைவராக இருந்த தொண்டைமான்.  

இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் என்பவர்கள் இந்தியாவில் வந்து இருக்காவிட்டால் நாம் இந்த அளவிற்கு நாகரிகம் பெற்றவர்களாக மாறியிருக்க மாட்டோம் என்ற ஒரு கருத்தைப் போல,அந்த ஆங்கிலேயர்களின் புத்திசாலிதனத்தையும் தங்களுடைய சுரண்டல் மனப்பான்மைக்காக எந்த அளவிற்கு செல்வார்கள் என்பதை உள்ளே நுழைந்து பார்ப்போம்.

அப்போது தமிழ்நாட்டில் உருவாகியிருந்த பஞ்சம், ஆங்கிலேயர்கள் வசூலிக்கும் ரயத்துவாரி வரி கொடுமைகள் என்று வாழ முடியாமல் வாழ்ந்து கொண்டுருந்தவர்களை ஆள்பிடி கூட்டம் அலைந்து திரிந்து இவர்களை பொட்டலம் போல் மாற்றி ஏற்றிக்கொண்டுருந்தது. 

" உங்கள் நல்வாழ்வு இலங்கையில் இருக்கிறது. உணவு உடை, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு இலவசத்துடன் நல்ல சம்பளம் "  என்று கூவிக்கூவி இந்த கூட்டத்தை கடல் கடக்க வைத்துக்கொண்டுருந்தனர். இதற்கென்று ஏற்கனவே இலங்கை தோட்டங்களில் பணிபுரிந்து ஓரளவிற்கு அனுபவம் உள்ளவர்களை கங்காணிகள் என்று பெயரிட்டு தமிழ் நாடு முழுக்க அனுப்பி வைத்துருந்தனர். 

இவர்கள் தான் அன்றைய ஆள்பிடிகள்.

இதற்கென்று தமிழ்நாடு முழுவதும், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு,சேலம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை, தஞ்சாபூர்,திருநெல்வேலி, இராமநாதபுரம் என்று அத்தனை பகுதிகளிலும் அலுவலகம் திறக்கப்பட்டது. 

இதற்குப் பெயர் எஸ்டேட் மேனேஜ்மென்ட் ஆபிஸ் என்றழைக்கப்பட்டது.  

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அந்தந்த பகுதிகளில் இருக்கும் கிராம முன்சீப், நிர்வாக வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  செல்பவர்களின் குடும்ப முழுவிபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த பகுதி காவல்துறை ஒத்துழைப்புடன் பெரும்பாலும் ரயில் மூலமாக மண்டபம் முகாமிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்.  

மண்டபம் வந்து சேர்பவர்களை தனுஷ்கோடி மார்க்கமாக தலைமன்னாருக்கும், திருநெல்வேலியில் உள்ள வாஞ்சி மணியாச்சியில் உள்ள இடைத்தங்கல் முகாமான தட்டப்பாறையில் இருந்து தூத்துக்குடி வழியாக கொழும்புக்கு, புத்தளம் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு முன் உருவாக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் இருக்கும் ஆங்கில அதிகாரிகள் வந்தவர்களை பரிசோதித்து, தடுப்பு ஊசிகள் போடப்பட்டு கவனமாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு மிஞ்சுபவர்களை மட்டும் அனுப்பி வைத்துக்கொண்டுருந்தனர். 

சொந்த ஊரில் இருந்து ஒவ்வொரு இடமாக மாறி கடைசியாக முகாமிற்கு வருவது வரைக்கும் ஒவ்வொருவரும் ஒரு அடையாள எண் வழங்கப்பட்டு இறுதிவரைக்கும் அந்த மனிதர்கள் உயிரற்ற ஜடமாகத்தான் கருதப்பட்டு நகர்த்திக்கொண்டு வந்தனர். 

இலங்கையின் சீதோஷ்ண நிலையின் காரணமாக செல்வதற்கு முன் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்பிளி, வேஷ்டி, சட்டை, சேலை வழங்கப்படும்.
  
இலங்கையில் எந்த பகுதியில் போய் இறங்குகிறார்களோ, அங்கிருந்து குறிப்பிட்ட தோட்டத்திற்கு நடந்து தான் செல்ல வேண்டும். 

இடையே திருடர்கள், விலங்குகள், வித்யாசமான பருவநிலை, உணவு, நீர் இல்லாமல் வறண்ட நாக்கும், மெலிந்த தேகமுமாய் போய் சேர்பவர்கள் மிகக் குறைவு. உழைக்கத் தொடங்கியவர்கள் இடையில் திரும்பி வர முடியாது.  அதற்கென்று சிறப்பு கட்டுப்பாடுகள்.  அப்படியும் தப்பித்து வர நினைப்பவர்கள் இதற்கென்று வளர்க்கப்படும் நாய்களின் கடிகளில் இருந்து அத்தனை எளிதாக தப்பி வெளியே வந்து விட முடியாது.  

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஊரில் இருந்து கிளம்பியது முதல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்து வரைக்கும், உணவு, பெற்ற உடை, அழைத்து வந்த கங்காணிகளின் கூலி அத்தனையும் இவர்களின் உழைப்பினால் கிடைத்த சம்பளத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கொடுமையும் நடந்தது.
காபி பயிறுக்கு பிறகு உருவான தேயிலை தோட்டங்களும், இதன் தொடர்பாக அமைக்கப்பட வேண்டிய சாலை மற்றும் புற வசதிகளை ஈடுகட்டும் பொருட்டு இந்தியாவில் இருந்து மேன்மேலும் ஆட்கள் தருவிக்கப்பட்டனர். 

ஆள் கிடைக்காத பட்சத்தில் அங்கங்கே ஆங்கிலேயர்களால் செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கப்பட்டது.   ஆந்திராவில் (1833/34) குண்டூர் பகுதியில் உருவாக்கப்பட்ட பஞ்சாத்தால் 30 முதல் 50 சதவிகித அடிப்படை மக்கள் இறந்து போனார்கள். 1876 முதல் 78 வரைக்கும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்ச மக்கள் இந்த பஞ்சத்தால் செத்து மடிந்தனர். 

மலையகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமானது.

1869 ஆம் ஆண்டு உருவான புதிய நோயினால் (கெமிலியா வெஸ்ரிதா டிறிக்ஸ்) பெருமளவு காபி பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டதால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பஞ்சடைந்த கண்களுடன் திரும்பி வந்தனர். 

இதன் காரணமாக மாற்று பயிராக தேயிலை உருவாக்கப்பட்டு அதன் மீது கவனம் திரும்பியது.  1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தெல்தொட்டைக்கு அருகில் லூல் சுந்தர தோட்டத்தில் முதலாவது வர்த்தக ரீதியான தேயிலைத் தோட்டத்தை அமைத்தார். இவர் தான் இன்றைய இலங்கை தேயிலை தோட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

1877 ஆம் ஆண்டுக்குள் 1.46.000 பேர்கள் கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டனர். 

கேரளாவில் இருந்து சென்ற மலையாளிகள் தோட்டப்பகுதியின் உள்ளே தேநீர் கடை உரிமையாளர்களாகவும், மற்ற மலையாளிகள் சிறு ஆலைகளிலும் பணிபுரிந்தனர்.   மீதம் உள்ள ஆலைகளில் பணிபுரிந்த வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அங்குள்ள ஏழ்மையான சிங்களர்கள்.  

தோட்டத் தொழிளாலர் களில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை  மட்டும் 1951 ஆம் கணக்குப்படி 6,25,000 பேர்கள்.

தோட்டத்தில் பணி புரிந்தவர்கள் ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு தோட்டத்திற்கு செல்ல முடியாது.  அவர்கள் வேலை முடிந்ததும் அவர்களின் குடியிருப்புக்குள் தான் முடங்கிக்கொள்ள வேண்டும்.  

பக்கத்து தோட்டத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் கூட அனுமதி சீட்டு வாங்கித் தான் செல்ல வேண்டும்.  பெரும்பாலும் அனுமதி அளிக்கப்படாது. தீவுக்குள் தீவாக முடக்கப்பட்டனர்.  உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மற்ற மக்களுக்கும் இவர்களுக்கும் தொடக்கம் முதலே எந்த தொடர்பும் இல்லாத அளவிற்கு மிகத் தெளிவாக முதலாளி துரைமார்களால் உருவாக்கப்பட்டது.  இவர்கள் சிந்திக்கத் தொடங்கினால், சூழ்நிலையும் மாறிவிடும் அல்லவா?  

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் உருவான மந்தமான பொருளாதாரம், விலை போகாத தேயிலை என்று தோன்றிய அத்தனை பிரச்சனைகளும் இறுதியில் அரை வயிறு கஞ்சி குடித்துக் கொண்டுருந்த இவர்களின் வாழ்க்கையைத் தான் வந்து தாக்கியது.

அந்த சமயத்தில் இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு சமயத்திலும் இந்த உள்ளே வெளியே ஆட்டம் நடந்து கொண்டே இருந்தது.  கூலிகளை ஏற்றுமதி இறக்குமதி போல் கையாண்டு கொண்டுருந்தார்கள்.

இவர்களைத் தான் பின்னாளில் இந்தியத் தமிழர்கள் என்றும், மேலும் பல்வேறு அடைமொழிப் பெயர்களுடன் அழைத்தனர் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி தமிழர்கள், 


தொடக்க அத்தியாயங்கள்




Tuesday, May 07, 2013

12 பச்சைத்தீவு

மீண்டும் ஈழ வரலாற்றின் அடிப்படை விசயங்களை தொடர்வோம்.


நாம் இப்போது இந்தியாவுடன் சேர்த்து இலங்கையையும் ஆண்டு கொண்டுருக்கும் ஆங்கிலேயர்களைப் பற்றி சற்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.  

16 ஆம் நூற்றாண்டில் வணிகத்திற்காக இந்தியாவிற்குள் வந்தார்கள். வந்தவர்களுக்கு இந்தியா என்ற நாட்டின் சூழ்நிலை,தட்பவெப்ப நிலை பற்றி எதுவும் தெரியாது.  உள்ளே பேசிக்கொண்டுருந்த மொத்த மொழியைப் பற்றி கூட தெளிவாக அறிந்துருப்பார்களா என்பதும் சந்தேகமே. 

கிழக்கிந்திய கம்பெனியின் தைரியமே அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்துருக்க வேண்டும்.  

நேரிடையான கொள்முதல் என்பதோடு இந்தியாவைப் பற்றிய அப்போதைய பல புனைக்கதைகளும்,காய்த்து தொங்கிக் கொண்டுருக்கும் இரத்தினக் குவியல்களுமே அவர்களை கொண்டு வந்து சேர்க்க முக்கிய காரணமாக இருந்தது. 

அன்று நம்பிக்கையுடன் வந்தவர்களை அவர்கள் பார்க்காத இந்திய வெயில் தான் வரவேற்றது. அன்று வெயிலை வென்று நின்றவர்கள் மொத்த இந்தியாவையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து கணக்கில்லா செல்வங்களையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

அன்று வந்து இறங்கியவர்களின் எண்ணிக்கையும், அப்போது இந்தியாவின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்தவர்களின் எண்ணிக்கையையும் இன்று நாம் யோசித்துப் பார்த்தால் வியப்பும், விரக்தியுமே இயல்பாய் தோன்றும்.  

ஒரு வகையில் பார்த்தால் அடுத்தவரிடம் அடிபணியும் குணம் என்பது நமக்கு இயல்பானதாக இருந்துருக்குமோ என்று தோன்றுகிறது. 

நீ என்ன எதிர்பார்க்கிறாய்?  நானே அதற்கு முன் உன் முன்னால் மண்டியிட்டு நின்று விடுகின்றேன் என்பதாகத் தான் தொடக்ககால இந்திய இலங்கை சரித்திர பக்கங்கள் காட்டுகிறது.  

ஆங்கிலேயர்கள் இப்போது எப்படி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொதுவாக இருந்து கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தி இருக்கிறார்களோ இதைப்போலவே தொடக்க தமிழ் மன்னர்களான கரிகால் பெருவளத்தான் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டில் ஒற்றுமையின்மையால் சரிந்த பாண்டிய சாம்ராஜ்யங்கள் வரைக்கும் இந்த இலங்கை என்பதும் பொதுவானதாகத் தான் இருந்தது.  

அன்றைய சூழ்நிலையில் சிங்களம் என்றொரு மொழியே இல்லை.

இன்னும் சொல்லப்போனால் அன்றைய இலங்கையென்பது தமிழர்களின் மற்றொரு பூமியாகத்தான் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து சென்று ஆண்ட மன்னர்கள் அத்தனை பேர்களும் தொலைநோக்குப் பார்வை என்பதை தொல்லை நோக்கமாக கருதியிருப்பார்கள் போலும். 

வாழ்ந்து விட்டுச் சென்ற மொத்த மன்னர்கள் காலத்தின் மிச்சத்தில் எச்சமாகக் கூட இறுதியில் எந்த தடயமும் நிலைபெறவில்லை.  

உள்ளே வந்த போர்த்துகீசியர்கள் தொடங்கி 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கருப்பு ஜுலை கலவரத்தின் வரைக்கும் இருந்த மிச்சம் மீதி அத்தனையும் தமிழர்களின் ஆவணங்களையும் ஆதிக்க மனப்பான்மையில் தீயிட்டு மகிழ்ந்தார்கள். 

முதல் 13 நூற்றாண்டுகளில்  சேர்த்து வைத்த அத்தனை கலைப் பொக்கிஷங்களும அடுத்துது வந்த 8 நூற்றாண்டுகளுக்குள் சுவடுகள்  ஏதுமின்றி நீக்கப்பட்டு புதிய கட்டுக்கதைகள் மூலம் வரலாறு மாற்றப்பட்டது.

இலங்கையின் உள்ளே அப்போது இரண்டு இனக்குழுக்களாக இருந்தவர்கள் மொத்தமாக ஒற்றுமையின்றி வாழ்ந்ததும், வந்த அந்நியர்கள் தங்களை ஆட்டிப்படைகின்றார்கள் என்று தெரிந்த போதும் மீற முடியாமல் தவித்ததும், அந்நியர்கள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே வந்து அமளி துமுளியான போதும் கூட அக்கறையில்லாமல் வாழ்ந்தது என்பது ஒரு மகத்தான ஆச்சரியம்.  

போர்த்துகீசியர்கள் (கிபி 1505 முதல் 1658 வரை) முழுமையாக 150 ஆண்டுகள் இருந்து விட்டு, அவர்களைத் தொடர்ந்த வந்த டச்சு ஆதிக்கம் (கிபி 1658 முதல் 1796 வரை) என்று இருவரும் மூன்று நூற்றாண்டுகள் முழுமையாக உள்ளே இருந்தார்கள் என்றால் எந்த அளவிற்கு உள்ளே வாழ்ந்தவர்கள் வாழ்ந்து இருப்பார்கள்?  

16 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மேம்பட்ட கப்பல் வாணிபமும், கிரேக்க, ரோமபுரி வணிகத் தொடர்பும் சேர்ந்து அன்றைய அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்பட்டதாகத்தானே மாற்றியிருக்க வேண்டும். 

ஏன் மாறாமல், தங்களை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார்கள்? 

நவீன ஆயுதங்கள், அவர்கள் உருவாக்கிய அச்சங்கள் என்று ஆயிரம் காரணங்கள் அணிவகுத்து நம் முன்னால் நின்றாலும் ஏன் ஒன்று சேரவில்லை?  அன்று அவர்களை ஒன்றாக சேர விடாத காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் மொத்த வீழ்ச்சிக்கும் காரணம் அவர்களிடம் இல்லாத ஓற்றுமையின்மை தான் என்று சொல்லத் தோன்றுகிறது.  

மன்னர்களாக இருந்தவர்களும்,ஆளுமையின் மூலம் சகல சந்தோஷங்களையும் அனுபவித்துக் கொண்டுருந்தவர்களும் அன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு  அதுவொரு அதிகாரப் போட்டி.  

அவ்வளவு தான்.

தங்களின் இருப்பை நிலை நிறுத்துவது.  மற்றவர்களை முன்னேறி வர விடாமல் தடுப்பது. 

அதனால் தான் கூறு பிரித்துக் கொண்டு காட்டுக்கு அந்தப்பக்கம் நீ, இந்தப்பக்கம் நான் என்பதாக தங்கள் வாழ்க்கையையும் எண்ணங்களையும் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தார்கள். 

கடல் பயணத்தின் மூலம் வந்தவர்களுக்கு இவர்கள் காட்சிப்பொருளாக மாறியதில் ஆச்சரியமில்லை.

இன்று வரையிலும் ஏன் மேலை நாடுகளின் ஆதிக்கத்தை நம்மால் நிறுத்த முடியவில்லை.  

கல்வியறிவு, தங்கள் எண்ண உயர்வு என்பதெல்லாம் மீறி அவர்களின் ஒவ்வொரு பார்வையும் ஒரு கணக்குப் பார்வை தான்.  

அங்கு ஆள்பவர்களுக்கும், ஆள வர நினைப்பவர்களுக்கும் அந்த கணக்கு தெரியவில்லை என்றால் அதோகதி தான். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அடி எடுத்து வைக்கும் போதே இந்த எதிர்கால கணக்குகளை, வணிகம் சார்ந்த விசயங்களையும் மனதில் வைத்துக்கொண்டு தான் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை, ஆளுமை சட்ட திட்டங்களையும் உருவாக்கினார்கள்.  

இயற்கை வளம் இருக்கும் நாட்டில் பெரிதான கஷ்டம் இல்லை.  இல்லாத நாட்டில் எதிர்கால தங்களின் வளத்திற்கான அத்தனை முன்னேற்பாடுகளை தொடக்கம் முதலே செய்யத் தொடங்கினர்.  

ஆனால் இந்தியாவைப் போல இலங்கை சொஸ்தமான பூமியல்ல. 

வயலும் வயல் சார்ந்த இடமும், மலையும், முகடுகளும்,சுற்றிலும் சுகப்படுத்திக்கொண்டுருக்கும் கடலும், கடல் சார்ந்த விசயங்களும் தான் அங்கு இருந்தன.  

இதற்கு முன்னால் உள்ளே வந்தவர்கள் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு, மிரட்டிக்கொண்டு இருந்தவர்கள். 

அதற்கு மேல் அவர்கள் ஆசைப்பட்டார்களா இல்லை கர்த்தர் ஊழியத்தில் மட்டும் கவனமாக இருந்தார்களா என்பதை நாம் ஆராய வேண்டியதில்லை. 

ஆனால் இப்போது உள்ளே வந்துருப்பவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்கள்.  அவர்களின் திட்டம் என்பது முன்னால் வந்து இறங்கியவர்களைப் போல் மட்டமாகவா இருக்கும்? 

அன்றைய இலங்கையின் சூழ்நிலையில், மிஞ்சிப் போனால் ஒரு இளநீர் குடித்து விட்டு அப்படியே மொத்த இலங்கையையும் ஒரு சுற்று சுற்றி வரலாம்.  காற்று இதமாக இருக்கும்.  படித்த ஆங்கில கவிதைகளை முணுமுணுத்துக்கொணடு உற்சாகமாக நடை பயிலலாம். 

பசித்தால் ரெண்டு மீன்களை பிடித்து சுட்டு சாப்பிடலாம். மெனக்கெட்டு  இத்தனை தூரம் உள்ளே வந்தவர்கள் காற்று வாங்கவா வந்துருப்பார்கள்.?

அவர்கள் எழுத நினைத்த கவிதைகளின் விதைகள் இப்போது வெறும் பாறாங்கல்லாக, மலையாக, பயன்படுத்த முடியாத பூமியாக இருந்தது. 

அவர்களின் அன்றைய தீர்ககதரிசனப் பார்வை தான் பின்னாளில் இலங்கையை உலகில் தலைசிறந்த தேயிலை, காபிக்கொட்டை விளையும் பூமியாக மாறக் காரணமாக இருந்தது.

சங்க இலங்கியங்கள் சொல்லும் முத்துத் தீவு பின்னாளில் முழுமையாக பச்சைத் தீவாக மாறியது.  

அவர்களின் அன்றைய சிந்தனைகள் தான் மலையகத் தமிழர்கள் என்றொரு புது இனத்தை உருவாக்கியது.  

அவர்கள் தான் இந்தியாவில் இருந்து இலங்கையில் தேயிலை தோட்டத்தை உருவாக்குவதற்கென்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.  

இலங்கை சரித்திரப் பக்கங்களில் காலப்போக்கில் புதைபொருளாய் மாறியவர்கள்.  

இந்தியாவில் இருந்து ஏன் சென்றார்கள்?

தொடக்க அத்தியாயங்கள்



Friday, April 12, 2013

11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும்



கண்டி என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி. கிபி 14 ஆம் நூற்றாண்டு காலம் முதல் தனி ராஜ்யமாகவே மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆண்டு கொண்டுருந்தவர்கள் சிங்கள தமிழ் மன்னர்களாக இருந்தாலும் இரு இன மக்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள்.  

இதே நிலைமை தான் மொத்த தீவுப் பகுதியிலும் இருந்தது.  பெரும்பான்மை சிறுபான்மை என்ற வார்த்தைகள்  பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிகளுக்காக உருவாக்கியது.  

ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்கள், இறுதியில் அதில் ஜெயித்து வருவர்களும் தானே ஆட்சியில் அமர முடியும். 

சிங்களர்களின் கடைசி மன்னராக கண்டிப்பகுதியில் இருந்தவர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கே. இவருடைய உண்மையான பெயர் கண்ணுச்சாமி.  சிங்களராக மாறியவர்.

இவர் மன்னராக வருவதற்கு முன்பு முந்தைய மன்னராக இருந்தவர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்க.  இவரும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்.  ஆழ்ந்த புலமையும், சிறந்த அறிவுடன் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு குறை இருப்பது தானே உலக நியதி.  குழந்தை பாக்யம் இல்லாத ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கேவின் மரணம், எப்போதும் ராஜா ராணி கதைகளில் வருவது போல் அங்கு அதிகாரப் போட்டியும் ஆரம்பமாகியது. 

மன்னர் இறக்கும் தருவாயில் தனக்குப் பிறகு வரவேண்டியவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தலைமை அமைச்சராக இருந்த பிலிமத்தலாவிடம் ஒப்படைத்திருந்தார்..

வாரிசு யாரென்று தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமான போதே உள்ளே குடுமிபிடி சண்டையும் தொடங்கியது.  இறந்த மன்னரின் மனைவி உபேந்திரம்மாவின் சகோதரர் கோதாவில் குதித்தார்.  

ஆனால் தலைமை அமைச்சர் இறுதியாக மன்னராக தேர்ந்தெடுத்தது கண்ணுச்சாமி என்ற மேலே சொன்ன ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கேவை.  

இவர் தென்னிந்தியாவில் இருந்த நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர். எப்போதும் போல பட்டம் சூட்டியதும் தனது பெயரை மாற்றிக்கொண்டு முழுமையான சிங்களராக மாறினார்.

இவரின் அதிர்ஷ்ட கதவுகள் திறந்த போதே அவஸ்த்தைகளும் ஜன்னலின் வழியாக சூறைக்காற்றாக உள்ளே வரத் தொடங்கியது.  

ஆட்சி காலம் முழுக்க சதிகளுடன் ஓரே ஓயாத போராட்டங்கள் தான்.  

வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு பக்கம்.  இவரின் வம்சக் கோளாரை ஆராய்ந்து அவஸ்த்தை கொண்டவர்கள் மறுபக்கம். 

கல்வி முதல் கலை வரைக்கும் மொத்தத்தில் புத்திசாலியாகவே வாழ்ந்த இவருக்கும் சதிகாரர்களை வெல்லும் அளவிற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையவில்லை.  போதாத குறைக்கு அப்போது பிரிட்டிஷ் வேறு முடியாட்சியை முடித்துக் கட்டும் நோக்கத்தில் அலைந்து கொண்டுருந்தனர்..  

இவரை கவிழ்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டுருந்த எலப்போலா என்பவரின் பின்னால் இருந்த சிங்கள கூட்டங்களை வேறு சமாளிக்க வேண்டும். 

மன்னரை முடித்துக்கட்ட வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்துக் கொண்டுருந்தவர்களின் வாசல் கதவின் அருகே வந்து நின்றார்கள் ஆங்கிலேயர்கள். 

ஆங்கிலேயர்களுடன் எலப்போலா கூட்டணி அமைக்க மன்னர் தலைமறைவாகி கண்டி காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார்.  

எலப்போலாவின் நாசகாரப்படைகள் மன்னரின் மனைவியை கண்டு கொள்ள இறுதியில் மன்னரும் சரண் அடைய தமிழ்நாட்டு வேலூர் சிறையில் சாகும் வரைக்கும் அடைக்கப்பட்டார். இவர் உருவாக்கிய சிங்கம் பொறித்த கொடி தான் இன்று வரையிலும் இலங்கை அரசாங்கத்தின் தேசியக் கொடி.  

பின்னாளில் இலங்கை சுதந்திரம் பெற்ற போது எந்தக் கொடியை இலங்கைக்கு பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்த போது இந்தக் கொடியை சிங்களத் தலைவர் பிரதமராக வந்த சேனநாயகா சுட்டிக் காட்டினர்.

மூன்று இனங்களுக்கும் பொதுவான சின்னம் பொதித்த கொடி வேண்டுமென்ற ஆலோசனையை புறக்கணித்ததோடு,இப்போது இந்தக் கொடியை ஏற்றிக்கொள்வோம்.  பிறகு மற்ற வேண்டியதைப் பற்றி யோசிப்பபோம் என்றார்.  அதற்கு அப்போது ஒரு சப்பைக்கட்டு வேறு சொன்னார்கள்.  

கடைசி கண்டி மன்னர் சிங்களராக வாழ்ந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு தமிழர் தானே என்பதாகச் சொல்லி விரும்பியதை சாதித்துக்கொண்டார்கள்.

கண்டி மன்னர் மீது பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த பத்து பேர்களில் நம்மால் அடையாளம் காணக்கூடிய ஒருவர் உண்டு.  அவர் பெயர் ரத்வட்டே

பின்னாளில் சிங்கள தலைவராக வரப்போகும் சந்திரகா குமார துங்காவின் கணவர் வழி பாட்டனார்.  ஆங்கிலேயர்களுக்கு உதவும் போதே இந்த நேசக்கூட்டணி கொடுத்துருந்த நாசகார பத்து கட்டளைகள் மறைமுக புரிந்துணர்வை சிங்களர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உருவாக்கியதாக இருந்தது. 

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கேவை கண்டி மன்னர் பதவியில் இருந்து நீக்கப்படுவது, 

அவருக்குப் பின் யாரும் அந்த உரிமை கோராமல் இருப்பது, 

மன்னர் சார்ந்த அத்தனை பேர்களையும் நாடு கடத்தப்படுவது, 

இதற்கெல்லாம் மேல் கண்டியின் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் மொத்த தமிழர்களை வெளியேற்றுவது, 

அவர்கள் மறுபடியும் திரும்பி உள்ளே வந்தால் அபதாரம் விதிப்பது 

என்று ஏசுநாதரின் கட்டளைகள் போல் போய்க்கொண்டுருக்கிறது.  

ஆனால் இதற்கெல்லாம் மேலாக இவர்கள் கட்டளைகளுடன் சொல்லியிருந்த புத்தமதத்தை அரசாங்க மதமாக அங்கிகரிப்பது என்ற கருப்பு வார்த்தைகள் தான் பின்னாளில் இலங்கை என்பது நிலமெல்லாம் ரத்தமாக மாற்றப்போகிறது என்பதை அன்று உணர்ந்தவர் யாருமில்லை.  

அன்றைய தினம் ஆங்கிலேயர்களின் பார்வையென்பது இனி இலங்கைக்குள் முடியாட்சி என்று எவரும் வாய் திறக்கக்கூடாது.  

சிங்களர்களுக்கோ ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் பரவாயில்லை. இந்த நாடு சிங்கள நாடு. மதம் என்பது எப்போது பௌத்தம் என்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை.  

வினை விதைத்தவன் எதை அறுக்கமுடியும்?  

புத்திசாலி ஆங்கிலேயர்களுக்கு உதவிய எலப்போலா எதிரியாக மாற்றம் பெற உள்ளேயே அப்போது உருவான ஒரு கலவரம் காரணமாக இருந்தது. 

உருவான கலவரத்தால் இந்த எலப்போலா நாடு கடத்தப்பட்டு மொரிஷியஸ் தீவில் அடைக்கப்பட்டு, கடைசியில் மீளாத் துயரில் போய் சேர்ந்தார். 

ஏற்கனவே உள்ளே வந்த போர்த்துகீசியர்களும், ஹாலந்து ஆட்சியாளர்களும் உள்ளேயிருந்த செல்வ வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு போகத்தான் நினைத்தார்களே தவிர ஆங்கிலேயர்கள் போல் நீண்ட கால திட்டங்கள் எதுவும் வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை. 

ஆனால் வெள்ளையர்கள் அப்போது பிடித்த நாடுகளில் எழுதிக்கொண்டுருந்த கருப்பு பக்கங்களை இங்கேயும் முயற்சிக்க உருவானது தான் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் பின்னால் உருவான இனங்கள் சார்ந்த எழுச்சியும். 

அந்நியர்கள் எவரும் இல்லை. 

உள்ளே இருந்தது கடைசி சிங்கள முடியாட்சியையும் முடித்தாகி விட்டது.  

காட்டிக் கொடுப்பதற்கும், கவிழ்த்து விடுவதற்கும் வேறு தீவிலா போய்த் தேட வேண்டும்?  

கடைசியில் காட்டிக்கொடுத்தவர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டே தனிமைச் சிறையிலிருந்து போய்ச் சேர்ந்தார்கள்.  

சிங்கள பக்கங்களுக்கு மங்களம் பாடியாகி விட்டது.  

அடுத்து மூத்தகுடி ஒன்று பாக்கி உள்ளதே? அவர் தான் தமிழ் மன்னர் பண்டார வன்னியன்.  

இலங்கையில் உள்ள வன்னிப்பகுதியின் மற்றொரு பெயர் அடங்காப்பற்று, நல்ல மாப்பாணான் (1790) என்ற மன்னனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் தான் பண்டார வன்னியன். 

வெள்ளையர்கள் (1803) கண்டி சிங்கள மன்னரின் மேல் படையெடுத்த போதே இவர் மேலேயும் தங்கள் படையெடுப்பை நிகழ்த்தினர்.  

ஆனால் அந்த சமயத்தில் படையெடுப்பை சமாளித்து வெற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் அப்போது ஆனையிறவு,இயக்கச்சிபைல், வெற்றிலைக்கேணி ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றி மொத்தத்தில் வந்தவர்களுக்கு பீதியூட்டி வைத்துருந்தார்.  

ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வந்தவர்களுக்கும் இந்த கதிதான் நடந்தது. 

ஆளைவிட்டால் போதும் என்ற நோக்கத்தில் அன்று அவர்கள் காத்த அமைதி, இப்போது உள்ள ஆங்கிலேயர்களிடம் செல்லுபடியாகுமா? 

தமிழர்களின் மொத்த வரலாற்றில் கடைசி பாண்டிய ராஜ்யங்கள் வரைக்கும் ஆள்காட்டி தானே மொத்த தமிழன சரித்திர பக்கங்களை தரித்திர பக்கமாக மாற்றியுள்ளது. 

காக்கை வன்னியன் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு (1811) உடையாவூர் நேரிடைப் போரில் பண்டார வன்னியன் கொல்லப்பட்டார்.

ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது.  

எதிர்ப்பவர்கள் யாருமில்லை.  எதிரிகளைக்கூட ஏறக்குறைய ஒழித்தாகி விட்டது. 

இப்போது முடியாட்சி இல்லை.  முனங்குபவர்கள் கூட யாருமில்லை.  ராஜா, ராணி, மந்திரி என்று மொத்தப் பொறுப்பும் சூரியன் அஸ்தம்பிக்காத நாட்டின் ஆளுமைக்குள் வந்து விட்டது. 

ஆனாலும் இவர்கள் தொடக்கத்தில் கோட்டை அரசு, யாழ்பாண அரசு, கண்டி அரசு என்று பிரித்து வைத்துக்கொண்டு அப்போதைய சென்னையின் மகாண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்தனர்.  

தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் (1797)ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கலகம் உருவானது. 

ஒவ்வொன்றும் சென்னை மகாண கவர்னர் உத்திரவுக்காக காத்துருப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிட இலங்கையை காலணி நாடு என்ற அந்தஸ்து கொடுத்து தனி ஆளுநரைக் கொண்டு ஆள்வது என்று முடிவெடுத்தனர்.

இலங்கையின் முதல் ஆளுனராக (1798) பிரைடெரிக் நார்த் என்பவர் கீழ் தென்னைத்தீவின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறத் தொடங்கியது.

தொடக்க அத்தியாயங்கள்





10. வெந்து தணிந்தது தீவு


ஸ்பானீஷ், டச்சு, போர்த்துகீசியர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் வணிக நோக்கத்திற்காக ஒவ்வொரு நாட்டிற்குள் சென்றாலும் சூரியன் அஸ்தம்பிக்காத நாடு என்ற பெருமையை பெற்று இருந்த பிரிட்டன் மட்டும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்தது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  

மற்றவர்கள் வணிக நோக்கத்தையும் மீறி,  சரியான விலை கொடுக்காமல் ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், எதிர்த்தவர்களை நடுக்கடலில் கொண்டு போய் தள்ளி அழிப்பது  வரைக்கும் அத்தனை அக்கிரமத்தோடு மதம் சார்ந்த அத்தனையையும் மக்கள் மீதி திணிக்கத் தொடங்கினார்கள். 

ஆனால் ஆங்கிலேயர்கள் வணிகம் முக்கியம்.  அத்துடன் மதம் என்பது அதுவொரு கிளைநதி.  உள்ளே அதுபாட்டுக்கு தனியாக நடந்து கொண்டுயிருக்கும். வெளிப்படையாக தெரியாது. 

உலகத்திற்கே இன்று வரை அவர்கள் மிகச் சிறந்த ராஜதந்திரிகளாக ஏன் இருந்துகொண்டுருக்கிறார்கள்? என்பதற்கு இதை விட வேறு உதாரணம் நமக்குத் தேவையா?

தொடக்கத்தில் இலங்கையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அப்போது பிரிட்டனுக்கு ஹாலந்துக்கும் போர் நடந்து கொண்டுருந்தது.  இதன் (1782) எதிரொலியாக ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட படையின் மூலம் திருகோணமலையில் இறங்கி கைப்பற்றினாலும் மீண்டும் 1795 ஆம் ஆண்டு தான் உள்ளே நுழைந்தனர்.  

இலங்கையில் இருந்த பொக்கிஷ புதையலை இறைவன் மற்றவர்களுக்காகவா படைத்தான்?  

அது போக இயற்கை கொடையாக படைத்து இருக்கும் திருகோணமலை துறைமுகம். யோசித்தவர்கள் செயலில் இறங்கினர்.

1796 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இலங்கையில் டச்சுக்காரர்கள் பிரித்து வைத்திருந்த மூன்று பகுதிகளையும் கைப்பற்றியதோடு, மற்ற பகுதிகளையும் (கிபி 1776 பிப்ரவரி) முழுமையாக கைப்பற்றினார்கள்.  

கைப்பற்றப்பட்ட பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியின் சென்னையில் கவர்னராக இருந்த ஹோபர்ட்  பிரபு என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது..  ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆளுமைக்குள் மொத்த இலங்கையையும் கொண்டு வந்தாலும் முறைப்படியான நிர்வாக அமைப்பை கொண்டு வருவதில் அவசரம் காட்டவில்லை.

அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் படையெடுப்பென்பது அன்றைய சூழ்நிலையில் பீதியை கிளப்பிக் கொண்டுருந்து. 

பெரிய நாடுகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பகீரப்பிரயத்தனத்தில் இருந்தன. 

தங்களுடைய ஆளுமையில் இருந்த நெதர்லாந்தை பெற்றுக்கொண்டு இலங்கையை கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது.  இது தொடர்பாக உருவாகும் செலவினங்களுக்காக முறைப்படி ஆட்சி அதிகாரம் ஆளுமையை உருவாக்காத ஆங்கிலேயர்கள், தேவைப்படும் நிதிக்காக இலங்கையின் உள்ளே ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். 

ஏதோ ஒரு வகையில் உள்ளே இருந்து நிதியை திரட்டுவது. 

பசுமைப்பூமியில் வேறு என்ன இருக்க முடியும்.  

அன்றைய சூழ்நிலையில் தென்னை மரங்கள் தான் அதிகமாக இருந்தது.  

காரணம் தொடக்க சங்ககால பாடல்களில் ஈழத்தவர் என்றால் தென்னை மரம் ஏறுபவர்கள் என்ற அர்த்தத்தை குறிப்பதால் அதுவே காலப்போக்கில் ஈழம் என்பதும் தென்னை சார்ந்ததாகவே மாறிவிட்டது என்பது வரலாற்றுப் பக்கங்கள் சொல்வதைப் போல தென்னை வைத்திருந்தவர்கள் மேல் மரத்திற்கு வரி (1796) என்று ஒரு புதிய கணக்கை தொடங்கி வைத்து கடைசியில் தோல்வியில் முடிந்து ஒரு வருடத்தில் அதை திரும்பப் பெற்றனர். 

இலங்கையின் மொத்த ஆளுமைப் பொறுப்பையும் இங்கிலாந்து மன்னர் வசம் (1798) ஓப்படைக்கப்பட்டது. 

நிர்வாகமென்பது மன்னரின் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், வர்த்தகம் தொடர்பாக தேவைப்படும் மேற்கொண்டு செயல்பட வேண்டிய அதிகாரங்களை சென்னையில் இருக்கும் கிழங்கிந்திய கம்பெனி மூலம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஹாலந்து நாட்டுடன் (1802) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் படி டச்சு ஆதிக்கத்தில் இருந்த மற்ற அத்தனை பகுதிகளும் பிரிட்டன் குடியேற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் ராஜபாட்டை தொடங்கியது. 

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் (1803) உருவாக்கப்பட்ட வரைபடத்தின் படி அன்றே ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதை வடக்கில் சிலாவ், கிழக்கில் மடாவ்ச்சி, தெற்கில் படவில்குளத்தில் இருந்து திருகோணமலை  மாவட்டம், மட்டக்கிளப்பு மாவட்டம் என்பது வரைக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுடன் புத்தளக் கரையோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும்.  இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 32 சதவிகிதம் ஆகும்.  மேலும் இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 60 சதவிகிதம் இந்த தமிழர் தாயகத்தில் அடங்கியிருந்தது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கும்புக்கன் ஆறு, வடமேற்கு மாகாணத்தின் மகா ஓயாவும், அதன் இரு எல்லைகளாக் காட்டப்பட்டு மகாவலி கங்கை, படிப்பனை ஆறு, கந்தளாய்க்குளம், ஜான் ஓயா, அருவி ஆறு போன்ற ஆற்றுப் படுகைகளும் அதன் எல்லைப் பிரதேசமாகக் காட்டப்பட்டுள்ளது.   

இது தான் பின்னாளில் சிங்களர்கள் கையில் ஆங்கிலேயர்களால் ஓப்படைக்கப்பட்டது.

ஆனால் ஆங்கிலேயர்கள் ஆளுமைக்குள் மொத்த இலங்கையும் வந்துவிட்டாலும் கூட உள்ளே அப்போதும் கூட உள்ளே முடியாட்சி இருந்தது முதல் ஆச்சரியம் என்றால் சிங்கள மன்னராக இருந்த அவர் உண்மையிலேயே தமிழர் என்பது அடுத்த மகத்தான அதிசயம் 

ஹாலந்து படைகளுடன் மோதி அவர்களை வென்று, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போதும் அவர்களுக்கு சிம்ம செப்பமனமாக இருந்த (1790) குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் சிறப்புடன் இருப்பதும் மொத்தத்திலும் மறுக்கமுடியா வரலாற்றுத் தடங்கள். 

இவர் தான் பின்னால் வந்த கொரில்லா போர்த் தந்திரங்களின் பிதாமகன்.