Wednesday, January 27, 2010

அரசியல் நெளியும் புழுக்கள்

" அரசியல் என்பது சாக்கடை.  உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேர்களுமே புழுக்கள் போல அசிங்கத்தை தின்று தின்று தன்னை வெளியே சிங்கமாக காட்டிக்கொண்டுருப்பவர்கள் "
காலங்காலமாக நமக்கு நாமே சமாதானங்கள் கூறிக்கொண்டு " பார்த்தாலே பாவம் " என்று அடுத்த சந்தின் வழியாக ஏறி குதித்து தப்பி விடும் நாமே அவர்கள் விரிக்கும் வலைக்குள் தான் சிக்கிக்கொள்வதோடு அதையே வாழ்க்கை முழுக்க சுகம் என்று கருதிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பது மொத்த ஆச்சரியமான ஒன்று.  நாடுகள் மக்கள் என்று மாற்றம் பெற்றதாக இருக்கும்.  ஆனால் இக்கரைக்கு அக்கரை பச்சை.

ஜெயவர்த்னே ஆண்டு கொண்டுருக்கும் மத்திம காலத்தில் இருக்கும் நாம் இதுவரைக்கும் இலங்கையை நோக்கி எந்த அந்நிய நாடுகளும், அவர்களின் அவசர அவஸ்ய தேவைகள் குறித்தும் ஆராயந்து பார்க்காமல் நாலு கால் குதிரை பாய்ச்சலில் அவசரமாக பயணித்து வந்து விட்டோம்.  இவர் காலத்தில் இலங்கைக்குள் ஆத்பாந்த நண்பனாக இருந்து கொண்டுருப்பவர்கள் நேரிடையாக மறைமுகமாக என்று பார்த்தால் அமெரிக்கா.  அடுத்து இஸ்ரேல்.  மற்றபடி விட்ட விட்டகுறை தொட்டகுறையாக பாகிஸ்தான்.

அப்போதைய சீனா மாவோ வுக்கும் சாப்பாட்டில் கலந்து உண்ணும் இறைச்சி மாவுக்கும் உண்டாண வித்யாசங்களை ஆராய்ச்சி செய்து கொண்டுருந்த தருணமாக இருந்து இருக்கலாம்.  காரணம் அவர்கள் மொத்த உள்கட்டமைப்பு, ஜனத்தொகை பெருக்கம் என்று முழி பிதுங்கிக் கொண்டு இருந்தார்கள்.  மற்ற நாடுகளைப் போல பதினாலு கால் பாய்ச்சலில் தன்னை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று மொத்த கம்யூனிஸ தத்துவங்களை நூடுல்ஸ் போல் வேக வைத்து தரம் வரியாக சுவையை மாற்றி பார்த்துக் கொண்டுருந்தார்கள்.

சீனாவின் இன்றைய வளர்ச்சி என்பது 1980ல் அஸ்திவாரம் தோண்டப்பட்டு 90ல் கட்டிடம் கட்டப்பட்டு 2000ல் புது மனைபுகுவிழா நிகழ்ச்சி போல அவர்களின் மொத்த பிரமாண்ட வளர்ச்சியை உலகிற்கு அறிவித்தார்கள்.  அவர்களின் வளர்ச்சி என்பது எத்தகையது என்பது ஒரே ஒரு உதாரணம் போதுமானது.  இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவில் தாங்கள் போட்டு வைத்துள்ள மொத்த பணத்தை சீனா எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை வந்தால் அமெரிக்கா வெறும் உதார் பார்ட்டியாகி பாட்டி சொன்ன கதையாகி போய்விடும். இப்போது புரியும் ஓபாமா ஏன் சீனாவில் போய் அம்மா தாயே என்று கையேந்திய நிலைமை?

அமெரிக்கா விரும்பு எண்ணெய் வளமோ வேறு எந்த தரமோ இலங்கையில் இப்போதும் எப்போதும் இல்லை.  வேண்டுமென்றால் உலகமே கொண்டாடும் திடம் மணம் குணம் உள்ள ஒரு கோப்பை சுத்தமாக பரிசோதிக்க தேவையில்லாத பச்சை தேயிலை தண்ணீர் குடித்து வயிற்றுப்போக்கை நிறுத்திக் கொள்ளலாம்?

ஒன்றைத்தவிர?   அது இயற்கை கொடையாக வழங்கியிருக்கும் திருகோணமலை என்ற இயற்கை துறைமுகம்.  இதில் என்ன தான் சிறப்பு?  மொத்த ஆசியாவை அங்கிருந்து கொண்டு தன்னுடைய ஆதிக்கத்தை மொத்தமாக நிலைநாட்ட முடியும்.  மொத்தநாடுகளும் தூங்கி எழுவது முதல் பல் துலக்கி இறுதியில் பாடையில் ஏறும் வரையிலும் கனகச்சிதமாக நாட்டாமை செய்ய முடியும்.   ஆளுமை செய்ய வேண்டுமென்றால் எதிராளி எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்.  அல்லது இருக்கச் செய்யும் அளவிற்கு நம்முடைய ஆளுமை இருத்தல் வேண்டும்.

பணம் வரும் வரைக்கும் தானே கொள்கை.  வந்த பிறகு தேவைப்படுவது புகழ்.  அதற்கு தனி மனிதர்களுக்கு லயன்ஸ் கிளப்.  நாடுகளுக்கு நாட்டாமை பாத்திரம்?

பாகிஸ்தான் ஒரு பிரச்சனையே அல்ல.  தேவைப்படும் போது காவல்துறையில் இருந்து வந்து அழைப்பார்களே?  " வா ராசா கையெழுத்து போட்டுட்டு போப்பா " என்கிற ரகம்.  கிட்டத்தட்ட தெரு ரவுடி போல்.  எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.  கெட்டதுக்கு மட்டும் தான் கூப்புடனும்.  ஆமாம்.  அது தான் அவர்களின் தரமும் தராதரமும்.  இன்று வரைக்கும் மாறாமல் அதே பாதையில் அடம் பிடிக்காமல் போய்க்கொண்டுருப்பது மொத்தத்திலும் உலக ஆச்சரியம்?

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான் இந்தியாவின் பார்வை இலங்கையின் மேல் பட்டு படர்ந்துள்ளது.   இந்திரா காந்தி உருவாக்கிய பாதை அது.  இப்போது ராஜீவ் காந்தியின் கைக்கு வந்துள்ளது.  பக்கத்து விட்டுக்காரன் சும்மா சமத்தா இருந்தாலும் பரவாயில்லை.  மொத்த சாக்கடையையும் நம்ம பக்கம் திருப்பி விட்டுட்டு, ஊர்ல இருக்கும் ரவுடிகளையும் கொட்டமடிக்க வைத்துக்கொண்டுருப்பது எப்போது இருந்தாலும் நமக்கு ஆபத்து.  இதை நிறுத்தியே ஆகவேண்டும்.  ஒன்று நட்புப்பிடியில் வைத்திருக்க வேண்டும் அல்லது உடும்பு பிடியில் அழுத்தியிருக்க வேண்டும்.

அதிலும் பிரச்சனை.  அர்த்தசாஸ்திரம் போல் புதிய அரசியல் சாஸ்திரத்தை கடைபிடிக்கும் இந்த ஜெயவர்த்னே லேசுபட்டவரா?  உங்களுக்கும் பெப்பே?  உலகத்துக்கும் பெப்பே?

ஆனால் தொடக்கத்தில் தோன்றிய இந்தியாவின் எண்ணம் எண்ணமோ சிறப்பானது தான்.  மற்ற நாட்டுக்காரர்கள் அங்கு துண்டு போட்டு பந்தியில் உட்கார்ந்து விட்டால்? காலம் முழுக்க பிரச்சனை?  இந்தப்பக்கம் காஷ்மீர் போல அந்தப்பக்கம் இராமேஸ்வரம்.  அப்படியே சென்னை, கல்பாக்கம் வரைக்கும் வந்து அப்படியே மும்பாய் வரும் மக்கள் போல் உள்ளே வந்து விட்டால்?

யோசித்த தலைமைக்கு கீழ் இருந்த மொத்த புத்திசாலிகளும் மனதார நம்பியது ஒரே ஒரு துறையை மட்டும்.  அது தான் புதிதாக உருவாக்கப்பட்டு வளர்ந்து கொண்டுருக்கும் ரா.  ஆனால் ரா உளவுத்துறை என்பது சுருதி சேர்க்க முடியாத புரியாத ராக கீர்த்தனைகளுடன் இருக்க நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் பிரச்சனைகள் கூடிக்கொண்டுருந்தே தவிர தீர்வும் வந்தபாடில்லை.

இவர்களும் நான் திருந்துவேனா? என்ற அடம் வேறு?  ஆனால் ராஜீவ் காந்தி மனதார நம்பினார்.  ரா அதிகாரிகள் காட்டும் கோப்பில் உள்ள எண்கள், எழுத்துக்கள் தொடங்கி கமா புல்ஸ்டாப் வரைக்கும் வேதவாக்காக எடுத்துக்கொண்டார்.  எடுத்துக்கொண்ட அந்த ஒரே காரணம் தான் இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை கொண்டு போய் நிறுத்தினால் இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்த மாதிரியும் ஆச்சு.  அடம்பிடித்துக்கொண்டுருக்கும் பிரபாகரன் கொடடத்தை அடக்கி ஆண்டது போலவும் இருக்கும் என்று படைபட்டாளத்தை இறக்கும் வைபோகம் தொடக்கம் பெற்றது.

மொத்த சிங்கள மக்களின் எதிர்ப்பு, JVP என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுணா இடது சாரிகளின் எச்சரிக்கை, ஜெயவர்த்னே ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திய எதிர்ப்பாளர் பிரேமதாசாவின் (இவர் ஒரு கூட்டத்திற்காக ஜப்பான் சென்று இருந்த போதுதான் தீட்சித் சென்று மொத்த முடிவுகளை இலங்கை அமைச்சரவை கூட்டி எடுத்தார்கள்) மொத்த எதிர்ப்பையும் மீறி கடல் என்பது நீல நிறமா?  இல்லை இந்திய கப்பல்களின் அணிவகுப்பா என்கினற அளவிற்கு ஒன்றன்பின் ஒன்றாக இலங்கை துறைமுகத்தை நோக்கி போய்க்கொண்டுருக்கிறது.  காரணம் தொடக்கத்தில் அமைதியை நிலைநாட்ட என்று சொல்லப்பட்ட இந்த அமைதிப்படை வீரர்களின் எண்ணிக்கையும், கொண்டு போன ஆயுதங்களும் , வாகனங்களும் தொடர்ந்து வாசிக்கும் போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அப்படியென்றால்?  என்னவோ திட்டமிருக்கு?

ஆமாம் இந்த இந்திய உளவுத்துறையை ராஜீவ் காந்தி ஏன் இந்த அளவிற்கு நம்பினார்?  அப்படி என்றால் ஏற்கனவே இந்த உளவுதுறையின் உலக பிதாமகன் CIA எப்போது தொடக்கம் பெற்றது?  இன்று வரைக்கும் அமெரிக்காவின் மொத்த அரசியலில் இந்த சிஐஏ தானே முக்கிய பாத்திரம் வகிக்கின்றது?   அமெரிக்கா உருவாக்கிய வழிமுறைகளால் பெற்ற வலியினால் தானே இன்று ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறையை வளர்த்து வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டுருக்கிறது?

உள்ளுர் விவசாயிகளை வளர்த்து விட்டு விவசாய நாடான இந்தியாவை வெளியே கொண்டு போய் காட்டுங்கப்பான்னா யாரு கேட்கிறாங்க?  கொண்டு போய் ஆயுதத்தில் கொட்டுவதும், அதில் தோன்றிய ஊழல்களை மறைக்க, ஆயுதவியாபாரியை, தரகரை காக்க, மொத்த ராஜீவ் புகழ் மங்கியதும், உள்ளே உள்ள ஒவ்வொரு ஊழலும் வட இந்திய தேர்தல் வெற்றிகளை பாதிக்க தன்னை தன் புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய அவஸ்யம் அப்போது அதிகமாக இருந்தது.  விட்டேனா பார்? என்று தொடை தட்டி எந்திரித்தவர் தொல்லையில் போய் சிக்கியதும் தான் இறுதியில் நடந்தேறியது.

CIA  தொடக்கம் பெற்றதை சுருக்கமாக, முதலில் அவர்களைப்பற்றி உள்வாங்கி விட்டு கொழும்புக்குள் உள்ளே நுழைந்து கொண்டுருக்கும் காந்தி தேசத்தின் கண்ணிய கணவான்களை வரவேற்க நாமும் போய் வரிசையில் நின்று கொள்வோம்.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் யூனியன்  எழுச்சி பெற்ற பின்பு ஒவ்வொரு நாடுகளுக்கும் மொத்தமாக அணுஆயுத பீதி நிரந்தரமாக தூக்கத்தைப் போக்கியது.  அவனா?  நீயா? இவனா? என்று பார்க்கும் பார்வையெல்லாம் மஞ்சள் காமாலை பார்வை?

1951 ஆம் ஆண்டு.  ஈரான் நாட்டில் இருந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் (இன்றைய BP யின் முன்னோடி)  மொத்த ஈரானின் வளத்தையும் மக்களையும் சூறையாடிக்கொண்டு இருந்தது.   அப்போது ஈரானில் மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்று இருந்த பிரதம மந்திரி மொஸாடெக்
மொத்த ஈரான் நிறுவனங்களை தேசிய உடைமையாக்கி மொத்த பணத்தையும் அரசின் கஜானவிற்கு செல்லும் பாதையை உருவாக்கிவிட்டார்.  அந்த ஆண்டு டைம் பத்திரிக்கை அவரை உலகின் சிறந்த மனிதர் என்று தேர்ந்தெடுத்து மகுடம் சூட்ட இங்கிலாந்துக்கு வந்ததே கோபம்.  பங்காளி அமெரிக்காவிடம் போய் மூக்கை சிந்திக்கொண்டு அவன் என் குச்சியை புடுங்கிட்டான்னு போய் நிற்க, பங்காளி பலம் கொண்டு யோசித்தார்.  என்னடா அக்கிரமமாயிருக்கு.  இவனுங்க நாடு மக்கள்ன்னு யோசிக்க ஆரம்பிச்சா நாமெல்லாம் எங்கே போறது.   மெமரி ப்ளஸ் மாத்திரை தேவைப்படாத அமெரிக்கா ஒரு தந்திர வலையை உருவாக்கியது.

நேரிடையா மோதப்போனா சோவியத் யூனியன் பின்னி பெடல், வீல், மர்காடு எல்லாத்தையும் பார்ட் பார்ட்டா கழட்டிவிடுவாரு?  என்ன செய்யலாம்?  படைவீரர்களுக்கு பதிலாக அப்போது இருந்த சி.ஐ.ஏ உளவாளியான கெர்மிட் ரூஸ்வெட்டை (இவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்டின் பேரன்) ஈரானுக்கு அனுப்பி வைத்தது.  கெர்மிட் வெட்டிட்டி வாப்பான்னா கொத்து கொத்தா கொன்று போட்டு விட்டு வர்ற ஆளு.  போதாதா?

ஈரானுக்குள் அமெரிக்காவின் பணம் தண்ணீராக பீச்சி அடிக்கப்பட்டது.  தெரு ரவுடி முதல் அரசியலில் இருந்த தெருப்பொறுக்கி வரைக்கும் பாரபட்சம் இல்லாமல் தான தர்ம பிரபுவாக அவதாரம் எடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கனஜோராக சண்டைகள், கலவரங்கள், கண்ணீர் காட்சிகள், கதறல்கள்.  மொத்தமாய் அவர்கள் எதிர்பார்த்த குழப்பங்கள் உள்ளே அரங்கேறியது.  நாளுக்கு நாள் வன்முறை கோரத்தாண்டவம் அரங்கேற இறுதியில் மொத்த மக்களும் உள்ளே நடக்கும் சூழ்ச்சியை அறியாமல் அத்தனைக்கும் காரணம் இந்த மொஸாடெக் தான் காரணம் என்று முடிவுக்கு வந்தனர்.  திறமையில்லாதவர் என்று பரப்பப்பட்ட பரப்புரைகள் உருவாக்கிய மாயை இறுதியில் அவரை வாழ்நாள் முழுக்க வீட்டுக்காவல் சிறைக்கு தள்ளியது.   பிறகென்ன?

அமெரிக்கா தேர்ந்து எடுத்து வைத்திருந்த அடிமையான சர்வாதிகாரி முகமது ரேஸா ஷாவின் ஆளுமையில் ஈரான் வந்தது.    பிறகு?  அமெரிக்காவுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

அன்று முதல் அமெரிக்கா உருவாக்கிய பயம் தான் மற்ற நாடுகள் தங்களை காத்துக்கொண்டால் போதும் என்பதை விட அமெரிக்காவிடம் கோபப்படாமல் நடந்து கொண்டால் போதும் என்கிற இன்றைய சூழ்நிலை வரைக்கும் நடத்திக்கொண்டு வந்துள்ளது.  அவர்கள் பாணியே அலாதியானது. முதலில் மிரட்டல் அப்புறம் அதட்டல்.  இரண்டும் மிஞ்சும் போது தான் சம்மந்தப்பட்டவர்கள் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம். பெரியண்ணன் உருவாக்கிய இந்த வலையைப் பார்த்து ஒவ்வொரு நாடும் தன்னுடைய தகுதிக்கேற்ற சின்ன வலை, பெரிய வலைன்னு பின்னு பின்னுன்னு பின்னிக்கிட்டுருக்காங்க.

சரி வாங்க நம்ம கொழும்புக்கு,யாழ்பாண பலாலி விமான தளத்திற்குப் போய் கூட்டத்தோடு நின்று இந்திய அமைதிப்படையை வரவேற்போம்.

(ஆறாம் பாகம் முடிவடைந்தது)

தொடர்ந்தவர்களுக்கு நன்றி.  தொடர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  வாங்க ராசா வாங்க?

Monday, January 25, 2010

பிரபாகரன் ராஜீவ் காந்தி சந்தித்த வேளையில்

கானக வாழ்க்கை.  ஒவ்வொரு நாளும் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் என்று நிஜத்தை மட்டும் தின்று வாழ்ந்து கொண்டுருந்தவர்.  சராசரி இளைஞனின் வாழ்வில் இல்லாத மொத்தமான ஒவ்வொரு கணப்பொழுதும் அழுத்தங்களுடன் வாழ்ந்த கடந்த 16 வருடங்கள் தந்த பாடங்கள். கடந்த நான்கு வருடங்களாக போராளி வாழ்க்கையோடு குடும்ப பாத்திரம் என்பதையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டுருப்பவர். துரோகத்தையும், தூங்காத கண்களுமாய் தான் சுமந்த தனி ஈழம் என்ற ஒரே கனவை அடைகாத்து வாழ்ந்தவரை அடைப்புக்குள் நிறுத்தியிருந்தது இந்திய அதிகார வர்க்கம்.
ஆன்டன் பாலசிங்கத்தை இறுதிவரைக்கும் அண்ணா என்ற ஒற்றைச் சொல்லில் பிரபாகரன் அழைத்து வந்தாலும் அவருக்கும் பிரபாகரனுக்கும் மொத்தமாக வெளியில் தெரியாத இடைவெளி இருந்தது என்பதும் உண்மை.  பின்னாள் வரப்போகும் பல வீரஞ்செறிந்த விடுதலைப் போராளிகளின் சமரில், அதன் சாதக பாதக அம்சங்களை பிரபாகரன் சொல்வது வரைக்கும் ஆன்டன் பாலசிங்கம் தானாக முந்திக்கொண்டு அறிவுரையாக ஆலோசனையாக எதையும் பிரபாகரனிடம் கேட்பதும் சொல்வதும் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.  காரணம் அது தான் பிரபாகரன்.  அதனால் தான் நன்றாக புரிந்த ஆன்டன் பாலசிங்கத்தின் ஆளுமை இறுதிவரைக்கும் எந்த கீறலும் இல்லாமல் நகர்ந்தது.

இப்போது பாலசிங்கத்தின் வேலை மொழிபெயர்ப்பாளர்.  மொத்தமும் தெரிந்தாலும், துரோகம் என்று புரிந்தாலும் தீட்சித் மற்றும் பிரபாகரன் இடையில் அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மட்டும்.  காரணம் வீரம் மட்டும் அதிகம் உள்ளவருக்கும், கோப்புக்களை வைத்துக்கொண்டு மட்டும் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவருக்கும் இடையில் இருக்கும் இவரின் நிலைமையை உற்றுக் கவனித்துப் பார்த்தால் பிரபாகரன் கொண்ட பதட்டத்தை விட இவரின் தர்மசங்கடம் தான் அன்று அதிகமாக இருந்து இருக்கும்?

திணிக்க வேண்டும் என்பவருக்கும் நீ திணித்து விடுவாயா? என்பவருக்கும் இடையே நடந்த உரையாடல் இது. கற்பனை அல்ல.  பாலசிங்கம் முதல் எதிர்ப்புகளை மட்டும் கொண்ட கூட்டங்கள் பதிந்துள்ளவைகளை முழுமையாக புரிந்தால் தான் பிரபாகரன் கொண்ட தொடக்க மன அழுத்தம் எவ்வாறு உருமாறியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் வந்த அமைதிப்படையில் அட்டகாசங்கள் தான் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணம் என்ற ஒரு காரணமும், மீண்டும் ராஜீவ் காந்தி பிரதமராக வந்தால் தான் நிணைத்து வைத்துருக்கும் தனி ஈழம் என்ற கனவு சிதைந்து போய் விடும் என்று எத்தனை சாத்தியமான காரணங்களை அடக்கிப் பார்த்தாலும் இந்திய அதிகாரவர்க்கத்தினர் கொடுத்த மறக்க முடியாத பாடங்களும், அவமானங்களும், அவர்களின் ஆளுமையும் பிரபாகரன் போன்ற சமூக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டுருந்தவருக்கு எத்துணை ஆவேசத்தை உள்ளே உருவாக்கி உருக்குலைத்து தூங்காத இரவுகளை அளித்துருக்கும்?

இதன் தொடர்ச்சி கிழக்கு மகாண சபை தேர்தலில் நடந்த EPRLF பொம்மை அரசாங்கமும் பின்னால் உள்ள துரோகமும்.  தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த அமைதிப்படையை வரவேற்ற பொதுமக்களே பிறகு ஆளுக்கு ஆள் கிடைத்ததை எடுத்து அடிக்க கிளம்பியதும், படு பயங்கர பாதக செயல்களை செய்த அமைதிப்படை வீரர்கள்.  எம் நாடு, எம் மக்கள், எம் தமிழீழம் என்று வாழ்ந்து கொண்டுருந்தவருக்கு ஒவ்வொன்று ஓயாத அலைகள் போல் உழன்று கொண்டே இருக்க எந்தவிதமான மனோரீதியான தாக்கத்தை உருவாக்கியிருக்க முடியும்?

பேசியபடி மறைமுக பணமும் வரவில்லை.  இதற்கிடையே தான் ஆண்டு கொண்டுருந்த ஆளுமையையும் நிறுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை.  மொத்த சாதக பாதக அம்சங்களை குறிப்பிட்டு அனுப்பும் கடிதங்களுக்கும் பதில் இல்லை.  கடிதங்கள் எழுத எழுத தாங்கள் இந்தியாவின் தயை எதிர்பார்த்து காத்து இருப்பது போல அதிகாரிகள் உருவாக்கிய மாயையில் இருந்த ராஜீவ்காந்தியின் நம்பிக்கைத் துரோகம் மறுபக்கம்.

பின்னால் வரப்போகும் பிரேமதாசா கூட " இனி உங்கள் படை இங்கு இருக்கக்கூடாது " என்ற போது " அப்படித்தான் இருக்கும் உன்னால் முடிந்ததைப் பார் " என்று கொக்கரிக்கும் அளவிற்கு இதை ஒரு கௌரவப்பிரச்சனையாக எடுத்துக்கொண்டதும், " விட்டதடி ஆசை விளாம்பழ ஓட்டோடு " என்று ஓட்டையாண்டி ஆன போதும் கூட ஈகோ தடுக்க அதுவே பல பிரச்சனைகளை உருவாக்க இறுதியில் " நீங்கள் இருந்தால் உங்கள் கூடாரத்திற்குள் இருந்து கொள்ளுங்கள் " என்று பிரோமதாசா எச்சரிக்கும் அளவிற்கு மாறிப்போனது தான் சோகத்தின் உச்சம்.

வல்லரசின் மானம் போனது மட்டும் அல்லாது எதற்கு போர்?  எவரை நோக்கி போர் என்று தெரியாமல் மடிந்த அப்பாவி இராணுவ வீரர்கள்?  கொடுமையின் உச்சம்? இதற்கு மேலும் வேறொன்றும் நடந்தது.  இராணுவ கட்டமைப்பில் இருக்கும் எந்த வீரருக்கும், அதிகாரிகளுக்கும் அவருக்கு மேலே இருக்கும் அதிகாரி கொடுக்கும் கட்டளை தான் வேதவாக்கு.  நேரிடையாக மேஜர் வந்து சொன்னாலும் கூட அடிபணிவார்களா என்று சந்தேகமே.  ஆனால் இறுதியில் தீட்சித் தலையிட்டு கட்டளை பிறப்பித்த போது மறுத்த இந்திய ராணுவ வீரர்களும், சினத்துடன் சீற்றத்துடன் சொன்ன வார்த்தைகளையும் பின்னால் பார்க்கலாம்.

பிரபாகரன் தான் விரும்பாவிட்டாலும், ராஜீவ் காந்தி உருவாக்கிய ஒப்பந்தத்தை எதிர்க்காமல் ஒத்துழைத்தும் அமைதிப்படையின் மூலம் நிகழ்ந்த கோரமான கலவரங்கள், பின்னாளில் ராஜீவ் காந்திக்கு பிரபாகரனால் எழுதப்பட்ட பல கடிதங்கள் டெல்லியில் குப்பைக்கூடைக்கு போன போது வளர்ந்த வெஞ்சினம் எந்த எல்லைக்கு அவரைக் கொண்டு போயிருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்? இப்போது இவர்களின் அறைக்குச் செல்வோம்.

" இந்த மொத்த ஒப்பந்தத்தை மொழிபெயர்த்து பிரபாகரனிடம் தெரிவியுங்கள்.  இரண்டு மணி நேரம் கழித்து வரும் போது நல்லதொரு முடிவை தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்"  இப்படித்தான் தீட்சித் தொடங்கி விட்டு அறையை விட்டு வெளியேறினார். இடம் டெல்லியில் உள்ள மேல் தட்டு மக்கள் செல்லும் அசோகா நட்சத்திர உணவு விடுதி.

திரும்பி வந்தவரிடம் தீர்மானமாக சொன்னது.  "  பாதகமான அம்சங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.  தமிழர்களின் நலன் என்பதைவிட இலங்கை இந்தியா நலன் மட்டுமே மொத்தமாக மேலோங்கியிருக்கிறது.  அமைதி தீர்வின் இறுதி நிலைமைக்கு எட்டுவதற்கு முன்பே 72 மணிநேரத்திற்குள் போராளிக்குழுக்கள் தாங்கள் போராடிச் சேர்த்த மொத்த ஆயுதங்களையும் இந்தியாவிடம் ஒப்படைப்பது என்பது கனவில் கூட நிணைத்துப் பார்க்க முடியாது"

இயல்பிலேயே முன்கோபியான தீட்சித்க்கு அவருடைய அகங்கார ரௌத்திரம் பொங்கியதில் ஆச்சரியம் இல்லை.  அவரைப் பொறுத்தவரையில் ஒப்பந்த நகல் அடிக்கப்பட்ட போது இலங்கையில் பரிபூரண அமைதி வந்துவிட்டாத நினைத்துக்கொண்டவர்.

" இனி உங்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படாது.  மொத்த அமைதியையும் இங்கிருந்து வரும் அமைதிப்படை வீரர்கள் பார்த்துக்கொள்வார்கள். பிறகென்ன கவலை ?"

வாக்குவாதங்கள் தொடர வார்த்தைகள் எல்லை மீறியது.  தீட்சித் பணிந்தார், நெகிழ்ந்தார், புன்னகையுடன் வார்த்தைகளை மாற்றிப் போட்டு இறைஞ்சலாக பேசிப்பார்த்த போது பணியாத பிரபாகரனிடம் சொன்ன வார்த்தைகள்.

" நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றியே தீருவோம்.  இதை எதிர்க்கும் பட்சத்தில் பாதகமான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்..  இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் இந்த தடுப்புக்காவல் நீட்டிப்பு இருக்கும்"  என்று இறுதி மிரட்டலில் இறங்கினார்.

சீற்றத்துடன் மட்டுமே வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்த பிரபாகரன் " நீங்கள் வருடக்கணக்கில் இங்கேயே வைத்துருந்தாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்போவதும் இல்லை.  ஆயுதங்களை திருப்பிக் கொடுக்கும் எண்ணமும் இல்லை"

" நீங்கள் ஆயுதங்களை திருப்பிக்கொடுக்காவிட்டால் என் சுருட்டின் சாம்பல் போல் இந்தியா தட்டி துடைத்து விடும்"  என்று தட்டிக்காட்டிய போது சீற்றத்துடன் பிரபாகரன் "  உங்களால் என்ன செய்ய முடியுமோ? அதை நீங்கள் செய்து கொள்ளலாம்.  என் முடிவு மாறாது"  என்று வேறுபக்கம் திரும்பிக்கொண்டார் பிரபாகரன்.

இந்த உரையாடலின் இறுதியில் தீட்சித் ஆத்திரமாக அந்த அறையை விட்டு வெளியேறிய போது இறுதியாக பிரபாகரனை நோக்கி ரௌத்திரமாக கூறினார்  "  ஏற்கனவே நீங்கள் நான்கு முறை இந்தியாவை ஏமாற்றி இருக்கிறீர்கள்"  என்ற கேள்விக்கு " அப்படியென்றால் நான் நான்கு முறையும் எம் மக்களை காப்பாற்றியிருக்கின்றேன் என்று அர்த்தம்"

டெல்லி அதிகாரவர்க்கத்தினருக்கு மொத்தமாக புரிந்து விட்டது.

இது போக எம்.கே.நாராயணம், தூதர் பூரி, வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக வந்து மந்திரித்துப் பார்த்தார்கள்.  பூஜ்யம் தான் பரிசாகக் கிடைத்தது.

எந்த அழுத்தமும் இனி பயன்படாது.  வேறு வழியில்லை தகப்பன்சாமியை வரவழைக்க வேண்டியது தான்.  வேறு யார்?

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் வரவழைக்கப்பட்டு புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.  உணர்ந்தவர், உள்வாங்கியவர்.  பிரபாகரன் பேச அமைதியாக கேட்டுக்கொண்டவருக்கு முழுமையாக மொத்த வலைபின்னலையும் புரிந்து கொண்டார்.  எம்.ஜீ.ஆருடன் பேசிக்கொண்டுருந்த போது இடையில் வந்த தீட்சித் " மற்றவர்கள் அத்தனை பேர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.  " இவர்கள் விரும்பும் தனி குடியரசு கனவு எந்த காலத்திலும் நிறைவேறப்போவது இல்லை.  நீங்களாவது நல்ல முறையில் புத்தி சொல்லுங்கள்"  என்று பொருமினார். உயர்ந்த குரலைக்கண்டு பிரபாகரன் உடன் இருந்த யோகிக்கு வந்த ஆத்திர வார்த்தைகளால் வாக்குவாதம் உச்சத்தை எட்டியது.

கட்டளையிட்டு பழக்கப்பட்டவருக்கு இவர்களின் அடிபணிய மாட்டேன் என்ற வார்த்தைகள் அவரின் தனிப்பட்ட ஈகோவை சீண்டிப்பார்ப்பதாக இருக்க பேச்சின் சாரம் இலங்கைப் பிரச்சனையைவிட தனி மனித காழ்புணர்வை நோக்கி நகர எம்.ஜீ.ஆருக்கு தர்மசங்கடம்.  மென்மையாக பேசி அவரை வெளியே அனுப்பிவிட்டு உரையாடலை தொடர்ந்தார்,  அப்போது உடன் இருந்தவர் அமைச்சர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன்.

மொத்தமாக இந்தியா விரும்பும் கேந்திர நலன் தவிர வேறொன்றுமில்லை என்பதாக புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் மௌனமாக வெளியே நகர்ந்த போது முதலில் தீட்சித், எம்.ஜி.ஆர் பிரபாகரனை வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்று தான் நம்பினார்.  மொத்தமும் தெரிந்த போது இறுதியில் பந்தை,  அடித்து ஆடுபவர் கைக்கு மாற்றப்பட்டது.
1987 ஜுலை 28 ஆம் நாள்.  அதிகாலை 2 மணி.  ராஜீவ் காந்தி பிரபாகரன் நேருக்கு நேர் சந்தித்த தினம்.  சந்திப்பு ராஜீவ் காந்தியின் அதிகாரப்பூர்வமான இல்லத்தில் நடந்தது.  ராஜீவ் காந்தி அந்த நேரத்திலும் வெள்ளை உடையில் மலர்ச்சியாக இவர்களை வரவேற்றார்.

பொறுமையாக மொத்தத்தையும் கேட்ட ராஜீவ் காந்தி இறுதியில் சொன்ன வாசகம்.

" உங்கள் கூற்று உண்மை தான்.  ஆனால் ஒரே சமயத்தில் அத்தனையும் உறுதிப்படுத்த முடியாது.  உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.  இதுவொரு தொடக்கம் தான்.  இதுவே முடிவல்ல.  இந்த அளவிற்கு அவர்கள் வந்துருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நீங்கள் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்க தேவையில்லை.  உங்களுக்குத் தான் ஏற்கனவே இந்தியா வழங்கிய ஆயுதங்கள் மேல் நம்பிக்கையில்லை தானே?  அதில் சிலவற்றை ஒரு கண்துடைப்புக்காக ஒப்படையுங்கள்.  நீங்கள் வரி வசூல் செய்வதை நிறுத்தி விடுங்கள்.  அதற்காக தனிப்பட்ட முறையில் இந்தியா மாதம் 50 லட்சம் தரும்.  இது போக உங்களுக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட வெளியில் தெரியாத "ஒப்பந்தம்" ஒன்று இருக்கட்டும். தேர்தல் நடக்கும் போது உங்கள் சார்பாளர்கள் அதிகமாக இருக்கும் அளவிற்கு நான் பார்த்துக்கொள்கின்றேன். எப்போதும் என்னுடைய தொடர்பில் இருங்கள்.  நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பராவாயில்லை.  எதிர்க்காமல் இருங்கள்.  அதுவே எங்களுக்கு போதுமானது.   பிரதேச சுயாட்சியை உருவாக்க சற்று காலம் பிடிக்கும்.  அது வரைக்கும் நீங்கள் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும். "

அந்த அதிகாலைப் பொழுதிலும் சோர்வற்று இருந்த ராஜீவ் காந்தி பரபரப்பாக இருந்தார்.  காரணம் அன்று பிற்பகல் கொழும்பு செல்ல வேண்டும்.  கையெழுத்துயிட வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்.  இடையே தமிழில் பேசிய உரையாடல்களை பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மொழிபெயர்த்து ராஜீவ் காந்தியிடம் சொல்லி அவர் பங்குக்கு " மேதமை தாங்கிய பாரதப் பிரதமர் உருவாக்கிய இந்த "ஜென்டில்மேன் அக்ரிமெண்டை" நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்" என்றார்.

வயித்துகடுப்புடன் இருப்பவரிடம் போய் வகைவகையான பட்சண சுவையை சொல்லிக்காட்டுவது போல் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினார்கள்.  ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ள வைத்தாகி விட்டது என்ற திருப்தி.  எம்.ஜீ.ஆருக்கு இந்த ஆட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்கள் என்ற தப்பித்தோம் பிழைத்தோம்.  பண்ட்ருட்டிக்கு இதில் நாமும் கலந்து கொண்டோம் என்ற பலாப்பழ சுவை.  ஆனால் பிரபாகரன் இறுதியில் கேட்டது தான் மொத்தத்திலும் அனைவரையும் குறிப்பாக பண்ட்ருட்டியை அதிர்ச்சியடைய வைத்தது.

"  நாம் பேசிய மொத்த விசயங்களையும் ஒப்பந்தமாக போட்டுக்கொண்டு கையெழுத்து இடலாமா?"   பண்ட்ருட்டி வியர்த்து போயிருந்தார். மொத்த குழுவினரையும் நகர்த்திக்கொண்டு வெளியே செல்ல அப்போது பிரபாகரன் ஆன்டன் பாலசிங்கத்திடம் சொன்ன வார்த்தைகள் "  அண்ணா இது கரை சேரும் என்ற நம்பிக்கையில்லை"

நிச்சயார்த்தம் குறிக்கப்பட்ட " ராஜீவ் காந்தி ஜெயவர்த்னே ஒப்பந்தம் " என்ற திருமணம் மணமகள் விருப்பம் இல்லாமல் தாலி கட்டும் வைபவத்துக்கு அன்று மதியம் ராஜீவ் காந்தி கொழும்பு சென்றடைந்து ஆடம்பரமாக ஊடகம் முன் காட்சியளித்து சமாதானப் புறாவை பறக்க விடுவது போல ஆட்டத்தை தொடங்கி வைத்தார். அழைத்து வந்த இந்திய இராணுவ வானூர்தி பிரபாகரன் குழுவினரை (1987 ஆகஸ்ட் 2) யாழ்பாணத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

Sunday, January 24, 2010

ராஜீவ் காந்தி ஈழ ஒப்பந்த தொடக்க ரகஸ்யங்கள்

இந்திரா காந்தியின் அரசியல் பிரவேசம் என்பது ஒவ்வொரு அடியாக திட்டமிட்டு நகர்த்தப்பட்டது.  அரசியல் புத்தகத்தின் ஒரு பக்கத்தையும் வாசித்து காட்டப்பட்டது. நேரு அருகில் வைத்துக்கொண்டு, செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துக் கொண்டு சென்றும், தலைவர்களை அறிமுகப்படுத்தியும், சாதக பாதக அம்சங்களையும் விவாத பொருளாக கலந்துரையாடல் மூலம் மொத்த அரசியல் ஞானத்தை கற்றுக்கொள்ள வைத்த காரணத்தினால் மட்டுமே அந்த இரும்புத் தலைமையின் கீழ் இருந்த இந்தியா, எத்தனையோ விமர்சனங்களையும் தாண்டியும் அன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் மரியாதை உலக அரங்கில் சிறப்பாக இருந்தது.

ஆனால் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் என்பது எதிர்பாரத மந்திர மாங்காய் போல் மடியில் விழுந்த ஒன்று. அவருக்கே விருப்பமில்லாத நிலைமையிலும், விரும்பியே ஆகவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய காலத்தின் கோலம். சஞ்சய் காந்தியின் அகால மரணத்திற்குப் பிறகு அந்த வெற்றிடத்தை நிறைவேற்ற வேண்டிய அவஸ்யத்தை இந்திரா காந்தி உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்.  ஒரு தாய் வயிற்றின் இரு துருவங்கங்களான சஞ்சய் மற்றும் ராஜிவ் என்பது எவரும் நிணைத்தே பார்க்க முடியாத குணாதிசியங்கள், நோக்கங்கள், பாதைகள், கொள்கைகள்.

காரணம் சஞ்சய் காந்தியின் ஆளுமை என்பது இந்திரா காந்தியின் தூக்க இரவுகளை துக்க இரவுகளாக மாற்றியது என்றால் அது உண்மையும் கூட.  நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமும் என சஞ்சய் காந்தியின் மரணம் வரைக்கும் அவர் ஒரு புதிர் தான்.  இன்று வரைக்கும் சஞ்சய் காந்தியின் மரணம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு தான்.

ராஜிவ் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மென்மையான திரைப்பட கதாநாயகன் போல் மகிழ்ச்சி, காதல், பயணம் என்று பிரதமர் மகன் என்பதற்கு அப்பாற்பட்ட தன்னை சராசரி இந்தியக்குடிமகன் என்பதாக எந்த பந்தா பகட்டும் இல்லாத அளவிற்கு தன்னால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத அளவிற்கு ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்ட உன்னதமான தினசரி நடவடிக்கைகளால் அமைக்கப்பட்ட ஒன்று.
அரசியலில் திணிக்கப்பட்டவரை ஒழுங்கு படுத்த, உண்மை அரசியல் தந்திரங்களை கற்றுக்கொடுக்க எவரும் இல்லை என்பதே உண்மை.  பிரதமர் மகன் என்றொரு பார்வை மட்டும் அவரை இளவரசனாக கருதத் தொடங்கினார்களோ தவிர, இந்திரா காந்திக்கு கிடைத்த நேருவின் பாடங்களோ, நேரு அறிமுகப்படுத்திய தலைவர்களும், தலைவர்களுக்கு பின்னாலும் என்ற ராஜ தந்திர நடவடிக்கைகள் என்பதெல்லாம் அவருக்கு கிடைக்கவில்லை.

வானத்தில் பறவை மகிழ்ச்சியாய் பறந்து திரிந்து கொண்டுருந்தவரை ஓர் அளவிற்கு மேல் அவரைக் கட்டுப்படுத்தும் துணிச்சல் எவருக்கும் இல்லை.  அரசியல் வானில் நிரந்தரமாய் பறந்து கொண்டுருக்கும் கோட்டான்கள், வல்லூறுகள், கழுகுகள்,பருந்துகள் போன்றவற்றிடமிருந்து காக்கவும் எவருக்கும் துணிச்சலில்லை.  அவரின் பயண விருப்பம் என்பது தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் தானே ஓட்டிக்கொண்டு வந்த ஜீப் மூலம் மக்களை நேரிடையாக சந்திக்கும் பிரதமராய், ஆண்ட மொத்த பிரதமர்களிடம் இருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் வித்யாசப்பட்டுக் கொண்டேயிருந்தது.

வசீகரம் என்றொரு வார்த்தையின் மொத்த உருவமாய் வாழ்ந்தவரின் பயண ஆசை என்பது இறுதிப் பயணம் வரைக்கும் குறைந்த பாடில்லை.  இளைஞனின் வேகம்.  எண்ணிலடங்கா இந்தியா குறித்த ஆசைகள்.  ஒவ்வொரு நிகழ்விலும் விவேகம் இல்லாத போதிலும் வீரத்தை வேகம் குறைத்த பாடில்லை.  சோனியா காந்தியின் அழுகைக்குரலும், எதிர்ப்பும், விருப்பமின்மையும் அவரை தடைபோட்டு நிறுத்த முடியவில்லை. ஏறக்குறைய பிசி அலெக்ஸாண்டர் "உங்களுக்காக காத்துக்கொண்டுருக்கிறார்கள்" என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்லாத குறையாக ராஜ மகுடம் சூட்டப்பட்டது?

"  போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" என்பதை ராஜிவ் காந்தியின் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பார்த்தால் எளிதில் பலருக்கும் பல விசயங்கள் புலப்படும்.  மொத்த இந்தியர்களின் தலைமைப் பொறுப்பு என்பதை அவர் மிக எளிதாக எடுத்துக்கொண்டதும், பழம் தின்று கொட்டை போட்ட மட்டைகளின் தான் தோன்றித்தனம் போல் வாழ ஆசைப்படாத அவரின் வேகம் என்பது வளர்ந்து கொண்டுருந்த மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு உள்ளே கிலியடித்துக் கொண்டுருந்ததும் இந்த சமயத்தில் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

நிர்வாகி என்பதால் சீட்டை தேய்த்து ஐந்து வருட காலத்தை முடிப்பவர்கள் என்பதையும் மாற்றி இந்தியா முழுவதும் சுற்றி வந்து, காந்தி போல நேரிடையாக மக்களையும், மக்கள் வாழும் இடங்களையும், முன்னேற்றங்களையும், கொண்டு வாழும் மற்ற சூழ்நிலைகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மொத்த உழுத்துப் போன பழைய நிர்வாகத்திற்கு புதிய அரிதாரம் பூச ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஆண்டு காலம் முழுவதும் அமைதியிழந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் என்றால் ராஜீவ் காந்தியை தவிர எவரையும் உதாரணம் காட்ட தோன்றவில்லை.

இந்திரா காந்தி ஆட்சியின் போது இன்றைய சூழ்நிலை போல மொத்த உதிரித் தலைவர்களின் ஆட்டம் குறைவு.  அந்த அளவிற்கு அவரின் ஆளுமை இருந்தது.  ஆனால் ராஜீவ் காந்தியின் ஆட்சியும், அவரைச் சார்ந்து இருந்த அதிகார வர்க்கத்தின் தான் தோன்றித் தனமும், உருவான பிரச்சனைகளும், தொடர்ச்சியாக வந்து கொண்டுருந்த உழல் பட்டியல்களும் என்று ஒவ்வொன்றும் அவரை முட்டுச் சந்தில் நிறுத்த அவருக்கு தன்னை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது தான் இந்த இலங்கை பிரச்சனை.  தமிழர்களின் நலன் என்பதோடு தன்னாலான பங்களிப்பு என்பதையும் காலம் முழுக்க இருக்க வேண்டும் என்பதில் உருவான ஆசை தான் இந்த பாகாசுர பிரச்சனையின் மொத்த நீளம் அகலம் தெரியாமல் சாகச மனப்பான்மையோடு உள்ளே இறங்கத் தூண்டியது.

இப்போது இந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களை ஜே.என். தீட்சித் கையாண்டுகொண்டுருக்கிறார்.  இதுவே முதல் சறுக்கு.  காரணம் விவேகம் அதிகமுள்ள இந்திரா காந்தியின் அருகில் இருந்த தமிழர் ஜீ. பார்த்தசாரதியை புறந்தள்ளி மொத்தமாக ஒதுக்கி விட்டு தீட்சித் கை வண்ணம் எல்லா இடங்களிலும் மிளிர்ந்து கொண்டுருக்கிறது.  மறுபக்கம் இன்றும் இருக்கும் நாராயணன்.  இதில் மற்றொரு ஆச்சரியம் தீட்சித்க்கு ஜெயவர்த்னே குணாதிசியங்கள், அவரின் தான் தோனறித்தனங்கள் என மொத்தமும் தெரிந்து போதிலும் இது ஒட்டை விழுந்த பயணிக்க முடியாத படகு என்ற போதிலும் ஏன் இத்தனை ஆர்வமாய் இருந்தார் என்பது இன்று வரைக்கும் மகத்தான ஆச்சரியம்.  இயல்பாகவே முன் கோபியான தீட்சித் மற்ற அதிகாரிகளைப் போல "நான் சொல்வதை நீ கேள்" என்ற ஒரே மனோபாவமே தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் இருந்தது.
MK நாராயணன் நடவடிக்கைகளைப் பார்த்தால் அன்றும் இன்றும் பயணத்தில் நானும் ஒருவன்.  உன்னுடைய பயத்தை நான் குறித்துக்கொள்கின்றேன்.  ஆனால்,  என்னுடைய பணி என்பதும், நான் இந்தியாவின் எதிர்கால அச்சுறுத்தலுக்கு இன்று நான் பார்க்க வேண்டிய வேலைகளை செய்தே ஆக வேண்டும்.  உன்னுடைய நலன் எத்தனை உனக்கு முக்கியமோ எனக்கு எனக்கு மேலே இருப்பவர்கள் சொல்வதை நான் செய்தே ஆக வேண்டிய நிலைமை.  அது தவறாக இருந்த போதிலும் அது குறித்து எனக்கொன்றும் அக்கறையில்லை.  எப்போதும் "என் கடன் பணி செய்து கிடப்பதே".   இன்றுவரையிலும் அப்படித் தான் இவருடைய செயல்பாடுகள் இருக்கின்றது.

இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஜே.என்.தீட்சித் எந்த அளவிற்கு செல்வாக்காய் இருந்தார் தெரியுமா?  அப்போது இந்தியா டூடே குறிப்பிட்டுருக்கும் வாசகம் தான் பொருத்தமாய் இருக்கும்.  " ஜே.என். தீட்சித் இப்போது இலங்கையின் வைஸ்ராய் போல் செயல்பட்டுக்கொண்டுருக்கிறார்".  டூரிங்க் கொட்டகையில் பார்த்த எம்.ஜி.ஆர்.  திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?  கதவுக்கு பின்னால் நிற்கும் நம்பியார் கையில் உள்ள வாளை பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்கில் " தலைவரே பின்னால் பாவி நம்பியார் நிற்கிறான்" என்று கத்திகூச்சலிட்டு குவித்து வைத்திருக்கும் வெற்றிலை எச்சிலில் கை பட்ட அவஸ்த்தை இருக்குமே?  அந்த அவஸ்த்தையில் தான் அன்றைய ஜெயவர்த்னே இருந்தார்.  இருந்தார் என்பதை விட அவ்வாறு இருக்க வைக்கப்பட்டார்.  எதிர்க்க முடியாது.  எதிர்க்கவும் கூடாது.  இந்த ஜெயவர்த்னே அப்போது கூறிய மற்றொரு வார்த்தையும் குறிப்பிடத்தக்கது.

" நல்லவேளை இந்தியா வந்து போரிட்டுக் கொண்டுருப்பதால் நீண்ட நாட்களாக கோரிக்கையில் இருந்த அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு கேட்ட 200 கோடியை எங்களால் தொடர்ச்சியான போராட்டத்தினால் கொடுக்க முடியாமல் இருந்தது.  இப்போது மொத்த பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொண்டதால் அந்த தொகையை மிச்சப்படுத்தி அவர்களையும் திருப்திபடுத்தியாகிவிட்டது".  அன்று அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல.  மொத்த மாங்காய்களும் கஷ்டப்படாமல் கையில் வந்து விழுந்து கொண்டுருந்தது.

பூர்வகுடி, உண்மையான உரிமைகள், நிரந்தர தீர்வு , இருவருக்கும் சாதகமான அம்சம் என்பதெல்லாம் மீறி இந்தியாவின் ஆளுமை எப்போதும் இலங்கையின் மேல் இருக்க வேண்டும்.  பிராந்திய நலன் மட்டுமே முக்கியம்.  போராளிக்குழுக்கள் என்பதும், தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் என்பதும் இந்தியாவும், இலங்கையும் பார்த்துக்கொள்ளும் என்பதாகத் தான் இவர்களின் பார்வையில் இன்று வரையிலும் இருக்கின்றது.

திட்ட வரைவு, முன்னேற்பாடுகள், உருவாக்குதல், ஆலோசனைகள், ஒப்பந்த இறுதி வாசகம் என்று ஒவ்வொருபடியாக கடந்து வந்து,  இறுதியில் பிரபாகரனை டெல்லி அசோகா ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் மேல் தளத்தில் கருப்பு பூணைகள் சூழப்பட்டு, வெளித் தொடர்பு தூண்டிக்கப்பட்டு, பொறியில் சிக்கிய சிங்கம் போல உலாத்திய பிரபாகரன் அப்போது ஆன்டன் பாலசிங்கத்திடம்  சொன்ன வாசகம்.

" அண்ணா, மீண்டும் ஒரு முறை இவர்களின் கூண்டுக்குள் வந்து சிக்கிக்கொண்டேன்"


விடுதலைப்புலிகளின் முறைப்படியான தோற்றம் உருவான 1978க்குப்பிறகு இப்போது உருவாகப்போகும் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் உருவாக தொடக்கத்தில் பேசப்பட்ட பேரங்களும், பிரபாகரன் தீட்சித் வாக்குவாதங்களும், நடு இரவு இரண்டு மணிக்கு ராஜீவ் காந்தி வீட்டில், ராஜீவ் காந்தியுடன் பிரபாகரன் ஆன்டன் பாலசிங்கம், தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் பேசிய பேச்சுக்களையும், ரகஸ்ய நிகழ்வுகளை அடுத்துப் பார்க்கலாம்?

Saturday, January 23, 2010

பிரபாகரன் சமாதானத்தை விரும்பாதவர்

பிரபாகரன் உருவாக்கிய " முதல் கரும்புலி தாக்குதலினால் " அதிர்ந்த இலங்கை ராணுவம் " யாழ்பாண முற்றுகை "  யை பாதியில் பரிதாபமாய் நிறுத்த வேண்டிய சூழ்நிலை. மறுபக்கம் ரா கொடுத்த அழுத்தங்கள் கொடுத்த பாதிப்புகள் ஜெயவர்த்னேவுக்கு முழி பிதுங்கி இந்தியா எதிர்பார்க்கும் ஒப்பந்தத்திற்கு தலையாட்ட வேண்டிய பரிதாபம்.
நரி ஞானி ஜெயவர்த்னே ஊசிப்போன பிரியாணி போல் நாறிக்கொண்டுருந்த நேரமது.  வல்லரசு தனது நெற்றிப்பொட்டில் வேகமாக தட்டிக்கொண்டுருந்தது.  ஒருவரை வழிக்கு கொண்டு வந்தாகி விட்டது.  அடுத்தது?  பிரபாகரன் பழி எடுத்துக்கொண்டுருக்கிறார்.  என்ன செய்வது?

பூடான் நாட்டில் நடந்த திம்பு பேச்சு வார்த்தை முதல் பெங்களூர் மாநாடு வரைக்கும் விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட தீர்மானங்களை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  காரணம் சமாதானத்திற்கான கதவுதகள் திறந்து இருந்த போதிலும் பிரபாகரன் என்ற ஆளுமை தன்னுடைய சுயநலத்துக்காக அத்தனையும் புறக்கணித்தார் என்பது இன்று வரையிலும் வைக்கப்படும் மொத்த குற்றச்சாட்டு.  அது உண்மையா?

1.  தமிழ் மக்கள் தனித்தன்மையான தேசிய இனக்கட்டமைப்பு உள்ளவர்கள்.  கடந்த கால நிகழ்வுகள், போராட்டங்கள், ஒப்பந்தங்கள், சிங்கள ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட உரிமைகள் என்று மொத்தத்திலும் சிங்கள தமிழ் இனம் என்பது சேர்ந்து வாழமுடியாத சூழ்நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

காரணம் இதற்கு முன்னால் நடந்த கேலிக்கூத்தான ஒப்பந்தங்கள்.  ட்டலி சேனநாயகா, பண்டாரா நாயகா ஒப்பந்தம், சீறீமாவோ பண்டாரா நாயகா ஒப்பந்தங்கள் என மொத்தமும் வெறும் தீப்பந்தமாகத் தான் போய் திருட்டுத்தனத்தின் உச்சமாக இருந்ததும், அதை தலைவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பதும் தான் நடந்தது.

2.  தமிழர்கள் வந்தேறிகள் அல்ல.  பூர்வகுடியான அவர்களுக்கு மொத்தமான உரிமைகளும், அத்தனை பாக்யதைகளும் உண்டு என்பதை உணர வேண்டும். சிங்களர்களைப் போல தமிழர்களும் தனித் தன்மையான தாயகம் உண்டும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

காரணம் இராணுவம் போர் தொடுக்கின்றது என்றால் முதலில் குறிவைத்து தாக்கப்படுவது தமிழர்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடுதல், வழிபாட்டுத்தலங்களை, நூலகங்களை குறிபார்த்து அழிப்பது என்று கனஜோராக நடந்து கொண்டே இருந்தது.

3.  உருவாக்கும் தமிழர்களின் உரிமையும், எதிர்பார்க்கும் தனித்தன்மையாக தேசத்திற்கும் எந்த காலத்திலும் சிங்களர்களால் தீர்மானிக்கமுடியாத அரசியல் சட்ட முன்வரைவு வேண்டும்.  வடக்கு கிழக்கு என்று தமிழர்களின் தாயகத்தை இணைத்து மொத்த தமிழர் தேசமாக உருவாக்கப்பட வேண்டும்.  தமிழர், முஸ்லிம், சிங்களர்கள் என்று பிரிக்கும் பட்சத்தில் எதிர்கால அமைதிக்கு என்றும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

காரணம் தந்தை செல்வா ஆட்சியாளர்களிடம் கேட்ட தமிழர்கள் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?  சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை, அது போல தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை என்ற இந்த இரண்டு பகுதிகளையும் சுயாட்சி மாநிலமாக அதே சமயத்தில் இரண்டையும் இணைத்து இந்தியாவில் உள்ள மத்திய அரசு போல மொத்த இலங்கைக்கும் ஒரு கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் அவரவர் வாழ்க்கையும் தனித்தன்மையுடன் பாதுகாத்துக் கொண்டு செல்லுதல்.  அமைதிக்கு அமைதியும் ஆச்சு.  இதற்குப் பிறகு எப்படி பிரச்சனைகள் வரும்?  ஆனால் எவர் கேட்டார்கள்?

4.  தமிழர்களின் வாழ்விடங்களில் இலங்கை இராணுவத்தின் ஆளுமையும், அக்கறையும், காவல்பணியிடங்களும் இருக்கும் பட்சத்தில் அதுவே அமைதியை கெடுக்கும் சூழ்நிலையைத்தான் உருவாக்கும். ஆகவே  நீக்கப்படவேண்டும்?

காரணம் சிங்களர்கள் வாழும் பகுதியில் தேவையான எல்லைக் காவல் படை முதல் அத்தனை பாதுகாப்பு சமாச்சாரங்களும் எப்போதும் தயாராய் இருக்கும்..  ஆனால் தமிழர்கள் பகுதியில் கலவரம் என்று தொடங்கினால் முதலில் கைது செய்யப்படுவதே தமிழர்களைத்தான்.  அது போக ஜாமீன் என்பதோ, சம்மந்தப்பட்டவர்களை பார்க்க முடியும் என்பதே நினைத்தே பார்க்க முடியாது?  நேராக பரலோகம் தான்.

5.  சகல தமிழ் மக்களுக்கும் சமமான உரிமைகளும், குடியுரிமைகளும் வேண்டும்.  தமிழர்களின் மொழியான தமிழ்மொழியே ஆட்சி மொழியாக, அரசாங்க மொழியாக இருக்க வேண்டும்.

காரணம் சிங்கள தலைவர்கள் கொண்டு வந்த ஆட்சி மொழி சிங்களம் என்பது மொத்த அரசாங்கத்திலும், நீதிமன்றத்திலும் சிங்களம் இருந்தால் மட்டும், தெரிந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.  மெதுமெதுவாக தமிழை மறந்தே ஆக வேண்டும். சரி கல்வி பாடசாலை முதல் மற்ற அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் சிங்களம் தெரிந்த போதிலும் தமிழர்களுக்கு ஒரு சட்டம்.  சிங்களர்களுக்கு ஒரு சட்டம்?  இடதும் குற்றம்.  வலது திரும்பினாலும் குற்றம்????

தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகத்திற்கு முன்னால் போராடிக்கொண்டுருந்த இனவாத தலைவர்கள் அத்தனை பேரும் தமிழர்களின் நலன் என்பதை விட மொத்தமாக சிங்கள -தமிழர்கள் நலன் என்றும், இலங்கை என்பதை அமைதியாக அணைவரும் ஒன்றாக சேர்ந்து, ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேயர்களை விரட்டி விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டிய அவஸ்யம் என்பதாக கருத்தில் கொண்டு போராடிப் பார்த்தவர்கள்.


பின்னால் வந்த தந்தை செல்வா காந்திய வழியான போராட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அத்தனை சிங்கள தலைவர்களுக்கும் காவடி தூக்குபவராக இருந்த போதிலும், உரிமைக்கான போராட்டங்களை முன் எடுத்து போராடிப்பார்த்த போதும் ஆண்டு கொண்டுருந்த எந்த தலைவர்களும், எவரும் அசைந்து கொடுக்கக்கூட தயாராய் இல்லை.  காரியம் ஆகும் வரைக்கும் பசப்பு வார்த்தைகள். அதுவே ஒரு அளவிற்கு மேல் போனதும் கை கழுவுதல் என்ற கண் எதிரே அத்தனை அக்கிரமங்களையும் அட்டகாசமாக நிறைவேற்றிக்கொண்டுருந்தனர்.  ஆதரவுக்கு ஆதரவும் ஆச்சு.  பெற்ற தமிழர்களின் ஆதரவை வைத்துக் கொண்டு தான் நிணைத்த சிங்கள மக்களுக்குத் தேவையான அத்தனை முன்னேற்பாடுகளையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது?    எப்பூடீ???????

அப்படியென்றால் நம்முடைய தமிழ் தலைவர்கள்.  " தயை கூர்ந்து தமிழ் மக்களே அமைதியாய் இருங்கள்.  நமக்கான விடிவு இன்னும் வரவில்லை.  நம்பிக்கை இழக்காதீர்கள்.  காந்திய வழி என்பது இறுதி தீர்வு.  ஆனால் காலம் நாம் அடைய வேண்டிய கரையை காட்டும்.  அது வரைக்கும் நாம் பொறுமையை இழக்கக்கூடாது?"    என்று மக்களின் ஆற்றாமையை அமைதிப்படுத்தினார்கள்?????

பின்னால் வந்த அமிர்தலிங்கத்தை ஜெயவர்த்னே ஏறக்குறைய புழுவுக்குச் சமமாக மிதித்ததும், பாராளுமன்ற கூட்டத்தில் சொல்ல முடியாத அளவிற்கு கேவலத்தின் உச்சகட்டமாய் நடத்திய போதும் அவரால் மீறவும் முடியவில்லை.  மாறவும் முடியவில்லை.   இந்திரா காந்தி, கலைஞர் என்று காவடி எடுத்தாரே தவிர இறுதியில் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த தமிழர்கள் கூட ஒரு அளவிற்கு நம்பிக்கை இழக்கும் சூழ்நிலைதான் உருவானது.

இன்றைய பிரபாகரன் என்பவர் கூட அமிர்தலிங்கம் பார்க்க வளர்ந்தவர். இடையில் இயக்கப் போராளிகளுக்குள் பிரச்சனை உருவான போது நல்ல புரிதல்களை உருவாக்கியவர்.  ஒரு அளவிற்கு மேல் இளையர் கூட்டம் வெகுண்டு எழுந்த போது அமைதிப்படுத்த முடியாமல் தடுமாறி நின்றவர்.  அவரே பூனைக்கும் பாலுக்கும் காவலாக இருந்தவர்.  தன்னுடைய உயிர் சிங்களர்களால் பறிக்கப்படுமா?  இல்லை போராளிகளால் போக்கப்படுமா? என்று நாளொரு வண்ணமும் பொழுதொரு அவஸ்த்தையுமாக மரண வாழ்க்கை வாழ்ந்தவர்.  இறுதியில் விடுதலைப்புலிகளினால் மேலோகம் அனுப்பப்பட்டவர். ஆனால் விடுதலைப்புலிகள் நாங்கள் இல்லை என்று எப்போதும் போல அறிக்கை விட்டனர்.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்த்து, கேட்டு, உணர்ந்து வந்த பிரபாகரன் இனி எந்த காலத்திலும் இவர்களை மாற்ற முடியாது.  இனி வாயால் பேசினால் உரிமைகள் கிடைக்காது. இவர்களை உதைத்தால் தான் உண்மையான உரிமைகளை தமிழர்கள் பெற முடியும் என்பதை உணர்ந்த காரணத்தினால் மட்டுமே தான் தேர்ந்தெடுத்த ஆயுதப்பாதை தவறு என்று உணரும் சூழ்நிலை உருவாகாமல் கடந்து போய்க்கொண்டே இருந்தது.  அதுவும் ஜெயவர்த்னே ஆளத் தொடங்கிய போதும் இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதிலும் அளவு கடந்த அவரின் தமிழர் வெறுப்பு என்பது சாதாரண அப்பாவி தமிழ் மக்களுக்கே பேரிடியாக இருந்தது.

நம்மவர் பிரபாகரன்.  சொல்லவா வேண்டும்.  கண்ணுக்கு கண்.  பல்லுக்கு பல்.  ஆனால் இதிலும் ஒரு ஆச்சரியம்.  சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்கள் என்பவர்கள் அத்தனை பேர்களுமே போராளிக்குழு தான்.  ஆனால் விடுதலைப்புலிகள் சிங்கள அப்பாவி மக்கள் மேல் தாக்குதல் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இறுதி வரையிலும் போர் தர்மம் என்பது கடைபிடிக்கப்பட்டது.  முள்ளிவாய்க்கால் வரைக்கும்.  வேறுவழி இல்லை என்ற சூழ்நிலையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போரில் மொத்த வாழ்வாதாரமான அணை மட்டும் உடைக்கப்பட்டுருக்குமேயானால் இன்று தேர்தலும் இருக்காது?  பொது வேட்பாளர் பிழைத்து இருப்பாரா என்பதும் சந்தேகம்?   சிங்கள பெரும்பான்மை என்பது இன்றைய சூழ்நிலையில் சிறுபான்மையாகி சிறுத்த குட்டிப்படையாய் பக்கியாய் மாறியிருக்கும்.

பிராந்திய நலனை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் இந்தியாவின் எறிகணை பார்வையை வேறு வழியே இல்லாமல் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு ஒரமாக பார்வையாளனாக அமர்ந்து பார்க்க வேண்டிய தர்மசங்கட நிலைமை பிரபாகரனுக்கு.

வரவில்லை என்றாலும் குற்றம்.  வந்து எதிர்த்தாலும் குற்றம். அது தான் திம்பு தொடங்கி பெங்களூர் வரைக்கும் நடந்தது.  இந்த பிரச்சனையை முழுமையாக புரிந்து கொண்டவர் தீட்சித் என்ற போதிலும்,  இந்த புதிர் பிரச்சனையை நாங்கள் அவிழ்த்துக் காட்டுகிறோம் என்று ராஜீவ் உருவாக்கிக் கொண்டுருக்கும் வீண் பிடிவாதங்களும், அவருக்குப் பினனால் இருக்கும் வானளாவிய அதிகார வர்க்கத்தினரையும் எப்படி எதிர்கொள்வது?

சிங்களர்கள் என்றால் சிரத்சேதம் செய்துவிடலாம்.  இது இந்தியா?  தாய் தந்தையர் நாடு.  தலைமுறைகளும், நம்மை இப்போது வளர்ப்பவர்களும், வளர்த்தவர்களும், ஆதரிப்பவர்களும் என் மொத்தமாக தமிழ்நாட்டின் உள்ளே இருக்க எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது?
இடது வலது இரண்டு பக்கத்திலும் பிரச்சனை?   யோசனை என்பதோ பேச்சு என்பதோ தேவையில்லை என்று கருதுபவர் பிரபாகரன்.  காரணம் இது அரசியல் கட்சி அல்ல.  செயல் ஆமாம் செயல் மட்டுமே முக்கியம் என்று அனைவருக்கும் உணர்த்தி வாழ்ந்து கொண்டுருப்பவர். சாத்யமில்லாத சமாதான பேச்சுவார்த்தைகளை விரும்பாத பிரபாகரனை கொழும்புவில் இருந்த இந்திய தூதரகத்தில் அரசியல் பிரிவில் செயல்பட்டுக்கொண்டுருந்த அதிகாரி ஹர்தீப் பூரி யாழ்பாணத்திற்கு வருகை தந்து (1987 ஜுலை 19) பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார்.  அவருடைய அலுவலகத்தில் சந்தித்த பிரபாகரனுக்கு புதுடெல்லியின் அழைப்பு கொடுக்கப்பட்டது.

காரணங்கள் எதுவும் விளக்கப்படவில்லை.  தமிழர்களுக்கு உண்டான தீர்வு உடன்படிக்கைகள் ராஜீவ் காந்தி மூலம் உருவாக்கப்பட்டவைகளை விளக்கும் பொருட்டு என்று சொன்ன போதிலும் வேறு வழி எதுவுமில்லாத பிரபாகரன் அந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலைமை.  அனுப்பி வைக்கப்பட்ட இந்திய ராணுவ விமானத்தின் (1987 ஜுலை 23 யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகம்) மூலம் உடன் யோகரெத்தினம், தீலிபனுடன் சென்னையை நோக்கி பயணித்தார்.  அப்போது சென்னையில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்திடம் தமிழ்நாட்டு காவல்துறையினர் பிரபாகரன் வருகையை மட்டும் தெரிவிக்க, விமான நிலையத்தில் இணைந்து கொண்டவர் மொத்தமாக புதுடெல்லியை நோக்கி பயணம் செய்தனர்.  விமான நிலையத்தில் அதிகாரி பூரியிடம் என்ன வகையான தீர்வு என்று கேட்ட போதிலும் பிரபாகரனிடம் சொன்ன அதே பதில் தான் சொல்லப்பட்டது.

"உங்களுக்கு மொத்த விசயங்களும் டெல்லியில் அதிகாரி தீட்சித் தெரிவிப்பார்".

தந்திரமென்றாலும் மந்திரம் போல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டுருந்தது.  டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசோகா நட்சத்திர உணவு விடுதியின் மேல்தளம் வரைக்கும் கருப்பு பூனை பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டனர்.  ஏற்கனவே செய்திருந்தபடி மொத்த வெளியுலக தொடர்பும் துண்டிக்கப்பட்ட நாகரிக சிறைவாசம் தொடங்கியது.
திரைப்பட(ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம்) கதாநாயகன் போல் அதிகாரி தீட்சித் வந்து அமர்ந்தார்.  பற்ற வைத்த சுருட்டு புகையை மீறி வெளிவந்த அவருடைய வார்த்தைகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது போலிருந்து.  இறுதியில் " நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வேண்டும் " என்று ஒரு ஆங்கிலத்தில் அடிக்கப்பட்ட ஒரு கத்தை தாள்களை முன்னால் வைத்தார்.  பாலசிங்கம் படித்து முடித்து சொன்ன போது பிரபாகரன் முகம் வெளிறியது மட்டுமல்லாமல் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வெறியையும் உருவாக்கியிருந்தது.

ஜெயவர்த்னே உருவாக்கிய அதே திட்டம்.  தமிழர்கள் வாழும் பகுதியை மூன்று கூறுகளாக பிரித்து, தமிழர், சிங்களர், முஸ்லீம் என்று துண்டாடி இருந்தது மட்டுமல்லாமல் திருகோணமலை பகுதியும், சிங்களர்களுக்கான தனிப்புரிதலுடன்.

நரித்தனமாக தன்னுடைய வேலையை காட்டியிருந்த ஜெயவர்த்னே ஜெயிக்கத் தொடங்கிய முதல் அடி அது.  முதல் கோணல் முற்றிலும் கோணல்.  அதனால் என்ன?  வெற்றிகரமாக ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தனது பயணத்தை தொடங்கியது

Friday, January 22, 2010

கரும்புலி அதிர்ந்த ராணுவம்

ஈழத்தில் இப்போது ஆட்டத்தில் பிரபாகரன் மட்டுமே.  தமிழீழ (LTTE)  விடுதலைப்புலிகளின் ஆட்சி அதிகாரம் மட்டுமே.  இன்றைய சூழ்நிலையில் பிரபாகரன் மட்டுமே தமிழர்களுக்கு ஆதர்ஷணம் என்கிற நிலைமையில் இருக்கிறார்.     காரணம் இப்போது நாம் 1986/87 ஆம் ஆண்டில் பயணித்துக்கொண்டுருக்கிறோம்.
                                                            கரும்புலி தாக்குதல்
" நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம், செய்த கொலைகளின் பட்டியல் இது தான், இத்தனை கொலைகளுக்கும் நாங்கள் தான் காரணம்.  வேறு எவரும் பொறுப்பு ஏற்க முடியாது" என்று இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை மூலம் சவால் விட்டு இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது.

மற்ற இயக்கங்களை ஒவ்வொரு காரணங்கள் சொல்லி ஆட்டத்தில் இருந்து நீக்கியாகி விட்டது.  தொத்தலும் வத்தலுமாய் இருப்பவர்களும் பிரபாகரன் கடைக்கண் பார்வை பட்டு அப்படியே ஒரு ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும்.  நமக்கு அவர்கள் இப்போது தேவையில்லை.  ஆதரவு கொடுக்காவிட்டாலும் அக்கறையுடன் பார்த்த இந்திரா காந்தி இப்போது இல்லை.  முழுமையான ஆதரவு கொடுக்க முடியாவிட்டாலும் தன்னால் என்ன உதவி அளிக்க முடியுமோ?  பணமாக, ஆதரவாக கொடுத்த எம்.ஜி.ஆர் கூட இப்போது இல்லை.  இவர்கள் இருவரின் இழப்பு என்பது ஈழ மக்களின் உண்மையான பிரச்சனைகளை அக்கறையுடன் பார்த்த இந்திய தலைவர்கள் என்ற கௌரவம் இனியேதும் வேறு எந்த தலைவர்களுக்கும் எந்த காலத்திலும் வரப்போவதும் இல்லை.

இப்போது பிரபாகரன் இயக்கத்திற்கென்று தனி வானொலி நிலையம், தமிழ், ஆங்கில செய்திதாள்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடும் அமைப்புகள், இலங்கை முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு ஆள், அம்பு, சேனை, அதிகார படைகள்.  இது போக தனி ஆட்சி நிர்வாக பரிபாலணம்.  வரி, வசூல், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள். இதற்கு மேலாக புலம் பெயர்ந்தவர்களின் மூலம் வந்து கொண்டுருக்கும் நிதி ஆதாரங்கள், இறக்குமதி செய்யப்படும் நவீன ரக ஆயுதங்கள், அதற்கென்று ஒரு குழு, அவர்களுக்கென்று ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கி தொடர்ந்து கொண்டுருக்கும் சிறிய பெரிய கப்பல்களின் அணிவகுப்பு.  உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் வங்கிக்கணக்கு என்று ஆலமரம் போல் விழுது படர்ந்து நிற்கிறது.  உலக தலைவர்களுக்கு புரிய வைக்க ஆன்டன் பாலசிங்கம்.  உள்ளுர் தலைவர்களுடன் போரிட தேவையான ஆயுத கொள்முதலுக்கும் கேபி என்ற நிழல் மனிதர்.  நடுவில் பிரபாகரன்.  அவரைச்சுற்றிலும் கண் இமை போல பாதுகாப்பாளர்கள்.  கிட்டத்தட்ட ஈழத்து எம்.ஜி.ஆர் போல. ஈழம் என்றால் விடுதலைப்புலிகள்.  புலிகள் என்றால் பிரபாகரன்.  பிரபாகரன் மட்டும் தனி ஈழத்தை வாங்கித்தர முடியும் என்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது?

இப்போது இலங்கையின் உள்ளே நடந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்தியாவின் பார்வையில் நற நற.  ஜெயவர்த்னே பார்வையில் எப்போதும் பீதி.  எவரோ போகிற போக்கில் தனி ஈழம் என்றொரு பிரகடனத்தை பிரபாகரன் விரைவில் வெளியிடப் போகிறார் என்று காதில் ஓதி விட்டு போயிருக்கிறார்கள்.  யாழ்பாணத்தில் இருந்து அப்படியோ தாரை தப்பட்டையோடு கிளம்பி வந்து நம்முடைய இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ?  இராணுவத்தையும் நம்பித் தொலைக்கவும் முடியவில்லை.  கொடுக்கும் அடியை விட வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.  இவர்கள் எப்போது எழுந்து போய் தாக்குவார்கள்.  அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் என்று வரவழைப்பவர்கள் எல்லோருமே " நாங்கள் தெளிவான முறையில் உங்க வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் " என்கிறார்கள்.  ஆனால் பய புள்ளைக திருந்த மாட்டேன் என்கிறார்கள்.  நம்மால் இனி மாறவும் முடியாது.  வயசு வேறு ஆகிவிட்டது.  மாறப் போவது தெரிந்தாலே பிக்குகள் வந்து பிச்சு பிடுவானுங்க.  கூலிப்படைகளும் ஆகாவெளியாகி விட்டது.   " அண்ணன் எப்ப போய்ச் சேருவான்?  திண்ணை எப்ப காலியியாகும்"  என்று காத்துக்கொண்டுருக்கும் மற்ற அமைச்சர்கள் வேறு ஒரு பக்கம் பீதியை கிளப்பிக்கொண்டுருக்கிறார்கள்?  என்ன செய்வது?

ஏற்கனவே சிரிக்காத மூஞ்சியைப் பெற்ற ஜெயவர்த்னே நிறையவே யோசித்த ஆண்டு.  விழித்த மூஞ்சியும் சரியில்லை.  ராஜிவ் நோக்கமும் புரியவில்லை.

இந்திய ஆட்சியாளர்களுக்கு கடுக்கா கொடுப்பது போல் பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியவில்லை.  பிரபாகரனும் மிகத் தெளிவாக இருந்தார்.  ஒப்பந்தமா?  சரி சரி பேசி முடித்ததும் மொத்த விசயங்களையும் நான் செய்தித்தாளில் பார்த்துக்கொள்கின்றேன்.  நமக்கு இதெல்லாம் ஆகாது என்று எப்போதும் போல் துப்பாக்கியை துடைத்து காத்துக் கொண்டுருந்தார்.  இப்போது கரும்புலி அமைப்பு வேறு " எங்க போய் முட்ட வேண்டும்"  என்று அடம்பிடித்துக்கொண்டுருக்கிறது.  அவர்களுக்கு வேறு வேலை கொடுத்தாக வேண்டும்?

டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா, சீறீமாவோ என்று எத்தனையோ ஒப்பந்தங்கள்.  கழிப்பறையில் துடைக்கும் காகிதம் போல ஆனதை கவனமாக குறித்து வைத்திருந்த பிரபாகரன் இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவர்கள் பின்னால் போய் நின்றால் குனிய வைத்து சவாரி செய்கிறார்கள்.  வல்லரசு மக்களுக்கு முன் இந்த ஜெயவர்த்னே எத்தனை தெளிவாக தண்ணி காட்டிக்கொண்டுருக்கிறார்.  அந்த பய புள்ளைகளுக்கு ஒரு மண்ணும் புரியமாட்டேன் என்கிறது.  சந்தோஷமாக வானத்தில் சுற்றிக்கொண்டுருந்தவரை கொண்டுருந்தவரை பிரதமர் என்று உட்காரவைத்தவர்களை எப்படி திட்டித்தீர்ப்பது.

இத்தனை வெகுளியாக இருக்கிறாரா?  வாழ்த்துக்கடிதம் எழுதியும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்.  பேச வருகிறாயா?  அப்படியென்றால் முதலில் காட்டும் தாளில் கையெழுத்தை போடு?  பிறகு பேசலாம் என்பவரை எப்படி எதிர்கொள்வது?

ஐயா இது மனிதர்கள் சம்மந்தப்பட்ட விசயங்கள்?  வெறும் காகிதம் அல்ல.  சிங்களர்களைப் பற்றி குறிப்பாக ஜெயவர்த்னே பற்றி உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள்.  உலக அரசியலுக்கே அவர் ஞானி.  ஞானத்தை கொடுத்த புத்தர் வழியில் வந்தவர் என்று அவரை தவறாக புரிந்து கொண்டுருக்கிறீர்கள்?  அவர் உங்களுக்கும் அல்வா கொடுப்பார்? உங்கள் மகன் ராகுலுக்கும் ஜிலேபி சுற்றிக்கொடுப்பார் என்று நாயாக கத்தினாலும் இடையில் தீட்சித் இருந்து கொண்டு கபடி ஆட்டம் ஆடுகிறாரே?

தொடர்ச்சியாக ரொமேஷ் பண்டாரி, ப சிதம்பரம், நட்வர்சிங்.  எத்தனை எத்தனை பேர்கள்.  இவர்கள் இலங்கைக்கு செண்டிங் அடிப்பதை விட உள்ளே போய் தொகுதியில் நாலு நல்ல விசயங்களை பார்த்தாலாவது ஓட்டுப் போட்டவுங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.

புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  நீங்க ஒதுங்கி போய்விடுங்க?  நாங்க பார்த்துக்கிறோம் என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.  அதென்னவோ சமாதானப்புறா போல் வாங்க வேண்டி அவார்டு ரிவார்டு எல்லாம் காத்துக்கிட்டுருக்கிற மாதிரி ராஜிவ் காந்தி துடிதுடியா துடிச்சுக்கிட்டு இருக்கிறாரு?  இனி என்ன செய்யலாம்?

பிரபாகரன் கூட அதிகம் யோசித்த ஆண்டு.

பூடானில்(திம்பு) நடந்து பேச்சு வார்த்தை தோல்வி.  பெங்களுர் சார்க் மாநாடு தோல்வி.  பிரபாகரன் வடக்கு கிழக்கு மாகாண உரிமைகளும், தமிழர்களை பிரிக்கக்கூடாது என்ற நோக்கம்.  ஆனால் ஜெயவர்த்னேவோ வடக்கு கிழக்கு என்பதை விட சாத்யமில்லாத தமிழர், முஸ்லீம்,சிங்களர்கள் என்று பிரித்து நரித்தனமாக முன்வரைவு கொண்டு வரப்போகிறேன் என்று தீட்சித்திடம் படம் காட்டுகிறார்.  ராஜிவ்க்கு வேறு ஏதும் புரியாத நிலைமையில் அவசரமாய் ஏதோ ஒரு வழியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும்.  தடுப்பவர்கள் அழித்துவிடவேண்டும்.  உள்நாட்டு டேமேஜ் இமேஜ் சற்று தூக்கி நிறுத்தவேண்டும்? அவரவர்களுக்கு அவரவர் பாதையில் மொத்தமும் அவசரம்?

நம்மாளு ஜெயவர்த்னேக்கு இப்போது கொஞ்சம் கெட்ட நேரம்.  முற்றுகைப் போரை யாழ்பாணத்தை நோக்கி தொடங்கினார்.  இதற்கு வழியனுப்பு விழா போல் அவர் கூறிய வாசகம் இங்கு முக்கியமானது.

" மொத்தமாக யாழ்பாணத்தை அழித்து விடுங்கள்.  பிறகு நிர்மாணம் செய்து கொள்ளலாம்.  இந்த போர் மொத்த இறுதிப் போராக இருக்க வேண்டும் ".
ஏற்கனவே அத்யாவசியமான பொருட்களுக்கான தடைகளையும் உருவாக்கி விட்டது.  பச்சத்தண்ணி கூட இல்லாமல் நா வரண்டு சாகட்டும்.  சாப்பிட்டால் தானே துப்பாக்கி தூக்க முடிகின்றது.  உரிமை என்று போர் செய்ய முடிகின்றது.  வயிற்றில் அடித்தால்?.  ஆக்ரோஷமாய் கிழட்டுச் சிங்கமாக உருமினார்.

ஜெயவர்த்னே செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுருந்த இந்தியாவிற்கு இரண்டுங்கெட்டான் நிலைமை?  கொஞ்சம் பொறுய்யான்னா இந்தாளு கேட்கமாட்டேன் என்கிறாரே?  ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டாம இதென்ன இத்தனை அடம்?

நாட்டாமை இந்தியாவிற்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே?  எங்கள் பேச்சை மீறி போர் தொடக்கிறாயா?  என்ன செய்கின்றேன் பார் என்று கப்பலில் தமிழர்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்ப இலங்கை கடற்படை தடுத்து (1987 ஜுலை 3) திருப்பி அனுப்பியது.  வல்லரசு சும்மா இருக்குமா?  கௌரத என்ன ஆகும்?  வானூர்தி மூலமாக பொட்டலங்களை சும்மா சர் சர் என்று தமிழர்கள் பகுதியில் (1987 ஜுலை 4  மிராஜ் வகை விமானம்) வீசத் தொடங்கியது.

இதற்கிடையில் 1987 மே மாதம் Operation Liberation என்ற பெயரில் விமான, கடற்படை, கனரக, பீரங்கி அணிவகுப்பு என்ற படைபட்டாளத்துடன் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதயப்பகுதியான யாழ்பாண வடமராட்சி பகுதியை நோக்கி பீடுநடை போட்டு தனது ஆட்டத்தை இராணுவம் தொடங்கியது.  எடுப்பார் கைப்புள்ள என்ன செய்யும்?  அத்தனை அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும், எறியூட்டல்களும், கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல் என்று முன்னேறிக்கொண்டு வர புலிப்பட்டாளம் பின்வாங்கிக் கொண்டே போனது.   இந்தப் பகுதியில் தமிழர்களின் புராதன அத்தனை நினைவுச் சின்னங்களும் குறித்து வைத்து அழிக்கப்பட்டன.  

இந்த நிகழ்ச்சி ராஜீவ் காந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ஆனால் பிரபாகரனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.  வா ராஜா வா ராஜா என்று பின்வாங்கிக்கொண்டே போனவர்கள், 1987 ஜுலை 7ந் தேதி அன்று முதல் தடவையாக கேப்டன் மில்லர் என்ற கரும்புலி வீரன் தான் வெடிபொருட்கள் நிரம்பி ஓட்டிச்சென்ற கவச வாகனத்தின் மூலம் இராணுவத்தினர் மையம் கொண்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக்கொண்டுருந்த நெல்லியடி மகாவித்யாலயத்திற்குள் உட்புகுந்து வெடிக்க வைக்க தமிழ் திரைப்படத்தில் சாகச சண்டைக்காட்சி போல மொத்தமாக அந்த பகுதியே கிடுகிடுத்தது.

உயிர் இழப்பு, பொருட்சேதம் என்று கணக்குப் பார்த்த ஜெயவர்த்னே அன்று நிச்சயம் கூட ரெண்டு மாத்திரை போட்டுத் தான் தூங்கியிருக்க வேண்டும்.  பய புள்ளைகளுக்கு படிச்சு படிச்சு சொன்னாலும் இத்தனை அசால்டா இருந்து தொலைச்சுட்டானுங்களே என்று தலையில் அடித்துக்கொண்டுருப்பார்.  அப்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கூட சற்று யோசித்துருப்பார். பிரபாகரன் என்பவர் யார்?  அவர் பின்னால் இருக்கும் படையணி என்பதன் உண்மையான வீரம் என்ன? என்பதை புரிந்து இருக்கக்கூடும்?
காரணம் விரைவில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் கையெழுத்தாக போகின்றது?  இப்போது ஓப்பந்த முன் வரைவுகள் நிச்சயார்த்தம் நிலைமையில் இருக்கிறது.  தாலி கட்ட நாள் குறிக்க அவர் பின்னால் ஒரு படைபட்டாளம் ஓத காத்துக்கொண்டுருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு படுகொலைக்காக காலன் உருவாக்கிய COUNT DOWN அன்றில் இருந்து தான் தொடங்குகிறது.  அதுவே அமைதிப்படை உருவாக்கிய அக்கிரம செயல்பாடுகள் மொத்தத்தையும் உறுதிப்படுத்தியது.

மற்றொரு ஆச்சரியம் அரசியல் முதிர்ச்சி, ஆழ்ந்த ஞானம் இல்லாமல் உள்ளே வந்த ராஜீவ் காந்தி செய்த தவறுகளும், அவரின் அவசரத்தை மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவருக்கும் முறைப்படி புரிய வைக்க முயற்சிக்காத அதிகாரவர்க்கத்தினர் என்று மொத்தமாக இந்தியா பக்கம் எத்தனை கைகள் சுட்டிக்காட்டினாலும், உலக தமிழர்களின் வீரத்தின் விளைநிலமாக இருக்கும் இருந்த இருக்கப்போகும் பிரபாகரன் எந்த தைரியத்தை வைத்துக்கொண்டு இந்த படுகொலையை நிகழ்த்தினார் என்று இந்த நிமிடம் வரைக்கும் ஆச்சரியம்.  அதே சமயம் இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?

Thursday, January 21, 2010

விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (2)

உலக நாடுகளில் இன்று வரை பலவீனமான , அரச கட்டுப்பாடு இல்லாத, அராஜகமான, தார்மீக பொறுப்பு என்றால் என்னவென்றே அறியாத, அர்பணிப்பு உணர்வு இல்லாத ஒரே இராணுவம் என்றால் இலங்கைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை.  இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி கூட அவர்களை எந்த விதத்திலும் மாற்றம் அடையச் செய்யவில்லை.  முடவன் போல் எவரையோ ஒருவரைச் சார்ந்து சவாரி ஏறி நாங்களும் இராணுவம் வைத்திருக்கிறோம்? என்ற மாயையை காட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஒரே காரணம் ஆட்சியாளர்கள்.  ஒரு வகையில் இராணுவம் என்பது அடியாள் பட்டாளம் அல்லது கூலிப்படை.  குத்து என்றால் கொன்று விட வேண்டும்.  போர் என்றால் கீழ்த்தரமான செயல்களை செய்து நாங்களும் எங்கள் பங்களிப்பை வாங்குகின்ற சம்பளத்திற்கு செய்து விட்டோம் என்ற மூன்றாந்தர இராணுவ சேவையாளர்கள் கொண்ட நாடு இலங்கை.  இது கற்பனை அல்ல.  மொத்த அவர்களின் இராணுவ தாக்குதல்களையும் பார்த்து வந்து இருந்தால், படித்துப் பார்த்தால் புரியும்?

பின்னால் வரப்போகின்ற பல உக்கிரமான பிரபாகரன் கொடுத்த தாக்குதல்களை கண்டு அஞ்சி பல இராணுவ வீரர்கள் பணிக்காலம் முடிவதற்குள் ஓட்டம் பிடித்ததும், அவர்களைத் தேடிக்கண்டு பிடித்து கொண்டு வந்ததும், கட்டாய ராணுவ சேவை என்று இளைஞர்களை அழிச்சாட்டியம் செய்ததும் என்றும் இன்று வரையிலும் இந்த நிலைமை மாறவில்லை.  இதுவே எந்த அளவிற்கு சென்றது என்றால் ஏழு மாதங்களுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் கோரத்தில் பங்கெடுத்த இராணுவ வீரர்களுக்கு வெறியூட்டும் பொருட்டு பல போதைப் பொருட்களை உண்ணவைத்து களத்தில் இறக்கியதும் நடந்த கொடுமை நடந்தது.  அதனால் தான் இந்த நூற்றாண்டின் இணையற்ற கோரங்களை நிகழ்த்த முடிந்தது.

இன்றைய பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா கூட புலிகளின் கோட்டையில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தவர் தான்.  நாலு பேர்கள் ஒன்றாக சேர்ந்த கூட்டத்தைப் பார்த்ததும் ஆய் ஊய் என்று ரவுசு விடும் போக்கிரிகள் போல் தான் உயர்பதவி அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரங்களும்.  அதுவே தொடக்கத்தில் பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டுருந்த மொத்த போராளிக்குழுக்களும் இராணுவ எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தாலும் பதிவின் தொடக்கத்தில் பார்த்த தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமையின்மை காரணமாக தங்களையும் உணரவில்லை.  தாங்கள் செல்ல வேண்டிய பாதையின் அருமையையும் உணரத் தயாராய் இல்லை என்பதே உண்மை.
ஏன் பிரபாகரன் மற்றவர்களை அழித்தார்?
ஆள் கடத்தி பணம் பறிப்பது, மக்களை பயமுறுத்தி வைப்பது, தங்களுடைய இடங்களில் மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கத்தை வளர விடாமல் தடுப்பது,தமிழ்நாட்டில் வைத்து செயல்பட்டுக்கொண்டுருந்த Corporate அலுவலகமும், புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு தாங்கள் வாழ்ந்த ராஜவாழ்க்கை, என்று இன்னும் பல கீழ்த்தரமான வேலைகள் என்று போராடும் பாதைக்கும், பயணிக்கும் பாதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்க இதற்கிடையில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமும், தன்னுடைய தனி ஈழம் என்ற கனவு இவர்களால் சிதைந்து வெறும் கற்பனையாக போய்விடுமோ என்ற அச்சமும் முதலும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

டெலோ என்ற இயக்கத்தை தூர்வாறி முடித்ததும் அடுத்த எச்சரிக்கை EPRLF, PLOTE..EROS .   டெலோ இயக்கத்தை அழித்துக்கொண்டுருந்த போதே பிரபாகரன் விடுத்த எச்சரிக்கை "  வேறு எவரும் இந்த விசயத்தில் தலையிடக்கூடாது".  காரணம் EPRLF  பத்பநாபா தமிழ்நாட்டில் Corporate  அலுவலகம் போல் அமைத்து பக்காவாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  சிறீ சபாரெத்தினம் பத்பநாபாவை மனதரா நம்பிக்கொண்டுருந்தார்? எப்படியும் தன்னைக் காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார் என்று கொண்டுருந்த இறுதி நம்பிக்கையும் பொய்த்துப் போனது. மற்ற இயக்கங்கள் வேறு வழி இல்லாமல் எதிர்க்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டது. மொத்த பொதுமக்களுக்கும் விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை மீறி டெலோ இயக்கதினர் எவருக்கும் புகலிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை.  தேடித் தேடி ஒவ்வொருவரையும் அழித்த விடுதலைப்புலிகள் இறுதியில் புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை கண்டனர்.  புகையிலை கட்டுடன் ஒன்றாக மறைந்து தமிழ்நாட்டுக்கு தப்பிப் போய்விடும் எண்ணத்தில் இருந்தவர் யாழ் தளபதியாக இருந்த கிட்டு என்ற சதாசிவ பிள்ளையின் துப்பாக்கி 28 குண்டுகளை தொடர்ச்சியாக துப்பி வெறி தீர்ந்த போது தான் கிட்டு வுக்கு சுய நினைவு வந்துருக்க முடியும்?  அந்த அளவிற்கு சிறி சபாரெத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உறுத்தலாக இருந்தார்?

டெலோவின் தொடக்கம் போல் EPRLF உடன் பிரச்சனை வேறுவிதமாக தொடக்கம் பெற்றது.   EPRLF இயக்கத்தினர் தாங்களே உருவாக்கிய அஞ்சல் அட்டையை யாழ்ப்பாணத்தில் விநியோகம் செய்து இனி அணைவரும் இதையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல கிட்டு இனி EPRLF தன்னுடைய இயக்க நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையை பிறப்பித்தார்.  அப்போதே தொடங்கி விட்டது.  துப்பாக்கி ரவைகள் தங்களுடைய பசியின் வேகத்தைத் தேடி அலைய ஆரம்பித்தது.

PLOTE  இயக்க செயல்பாடுகள் ஏற்கனவே வலுவிழந்து முடங்கியிருந்த வேலையில் காலப்போக்கில் அதுவும் காணாமல் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் அச்சத்தின் காரணமாக பாலகுமார், பிரபாகரன் கூட சமாதானமாகி ஒன்று சேர்ந்து பின்னாளில் ஒதுங்கிவிட்டார்.
EPRLF   பத்பநாபா
ஆனால் பிரபாகரன் பார்வையில் எதிரியாக ஒருவர் மாற்றம் பெற்றுவிட்டால், அவர்களின் துரோகம் அளவு கடந்து போயிருந்தால் அவர்களின் கதை முடிவு பெற்றதாக இருக்க வேண்டும். சமமாக அல்லது இணையாக களத்தில் இருந்தவர்களின் வலுவை குறைத்து வைத்திருந்த பிரபாகரனால் அவர்களை முழுமையாக துடைத்தாரா? என்பது இங்கு ஒரு பெரிய கேள்விக்குறி?  ஆனால் பத்பநாபாவை தமிழ்நாட்டில் வைத்து கொன்றது பின்னாளில் இராஜிவ் காந்தி மரண புலனாய்வின் போது தான் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது ராஜபக்ஷே விசுவாசியாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா (EPRLF) தங்களுடைய அலுவலகமான சூளை மேட்டுக்கு ஆட்டோ மூலம் வந்து கொண்டுருந்த போது, ஆட்டோ ஓட்டுநரிடம் உருவான சண்டையில் தானியங்கி துப்பாக்கி மூலம் சுட,அப்பாவிகள் கொல்லப்பட ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆருக்கு மொத்தத்திலும் தர்மசங்கடம்.

எம்.ஜி.ஆர் போட்ட ஒரே உத்தரவு. காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் மொத்த போராளிகளின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தடுப்புக்காவலில் வைத்தார். காரணம் பெங்களூர் சார்க் மாநாடு.  ஜெயவர்த்னே வருகை.  ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட இலங்கை குறித்த அக்கறை.  மொத்த இந்திய அதிகார வர்க்கமும் இந்த துப்பாக்கி சூட்டின் மேல் கவனம் செலுத்த தமிழ்நாட்டில் இருந்த மொத்த போராளி குழுக்களையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. அப்போது தமிழ்நாட்டில் இருந்த பிரபாரனுக்கு இது போன்ற சூழ்நிலை இலங்கையில் நடந்து இருந்தால் துப்பாக்கி ரவை பேசி இருக்கும். மேலும் இது எம்.ஜி.ஆரின் உத்தரவு. இது தமிழ்நாடு.  தம்மை வளர்ப்பவர், தம் மீது அளவில்லா அக்கறை செலுத்துவர்.  எதிர்க்க முடியாது.  காரணம் எவரோ செய்த தவற்றின் விளைவாக தன்னுடைய வயர்லெஸ் முதல் அத்தனையும் காவல் துறை வசம் போய்விட்டது.  எம்.ஜி.ஆரை நேரிடைடையாக எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் நிலைமை மாறி பிரபாகரன் சந்திக்கு வந்த பரிதாப நிலைமை.

காந்திய வழியில் அறப்போராட்டத்தை தங்கியிருந்த இடத்தில் பிரபாகரன் தொடங்கினார். தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்கும் வரைக்கும் உண்ணாவிரத போராட்டம்.  மொத்த ஊடகமும் ஊதிப் பெரிதாக்க மொத்த கவனமும் பிரபாகரன் மேல்.  இதற்கிடையே டெல்லியில் இருந்த ப.சிதம்பரம் இதற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கொளுத்திப்போட இறுதியில் ஆயுதங்களை பிரபாகரனிடம் ஒப்படைத்த  எம்.ஜி.ஆர் பிறகு தனியே அழைத்து ஆசுவாசப்படுத்தியது தனிக்கதை. இந்த இடத்தில் மற்றொரு உண்மையும் உண்டு.  ஆயுதங்கள் திரும்ப ஒப்படைத்த போது மற்ற போராளிகுழுக்களிடம் இருந்து பறிமுதல் செய்த அத்தனை ஆயுதங்களும் பிரபாகரன் வசமே ஒப்படைக்கப்பட்டது, அது தான் எம்.ஜி.ஆர்.  இவர் தான் பிரபாகரன்?

இந்திய இறையாண்மை என்ற பெயரில் ராஜிவ் அழுத்தம் ஒரு பக்கம்.  பிரபாகரன் கொண்டுள்ள தனி ஈழத்தின் உண்மை நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர் தன்னால் ஒரு அளவிற்கு மேல் இதில் தலையை நீட்ட முடியாது என்பதாக ஒதுங்க ஆரம்பித்தார்.  பெங்களுரில் வைத்து பிரபாகரனை மொத்த அதிகார வர்க்கத்தினரும் சமாதனப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்ட போதிலும், இறுதியாக ராஜிவ் உத்தரவின் பேரில் பெங்களூருக்கு எம்.ஜி.ஆர் வரவழைக்கப்பட்டு பிரபாகரன் கூட பேசவைத்தனர்.  அன்று ஜெயவர்த்னே உருவாக்கி இருக்கும் இலங்கை என்பது தமிழர், சிங்களர், மற்றும் முஸ்லீம் என்று மூன்று பகுதிகளாக பிரித்த நரித்தந்திரத்தை எம்.ஜி.ஆர் உணர்ந்து கொண்டாலும் அந்த சூழ்நிலையில் அவர் எடுத்துப் பேசினாலும் கேட்பவர்கள் எவரும் இல்லை.  பிரபாகரன் பக்கம் உண்மைகள் அதிகம் இருந்தாலும், ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் அவரும் இல்லை.  எம்.ஜி.ஆர் செல்லும் அறிவுரைகளைக் கேட்கும் மனோநிலையிலும் எந்த டெல்லி அதிகாரிகளும் இல்லை.  மொத்தமாக சார்க் மாநாடு மூலம் ஜெயவர்த்னே உருவாக்கிய முன் வரைவு ஒப்பந்தத்தை முன் மொழிய வேண்டும்.  கையெழுத்துப் போட வேண்டும்.  மற்றவை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒதுங்கியவர், ஓரமாக தள்ளப்பட்டதும் பின்னாளில் ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் வரைக்கும் வெறும் பொம்மையாகத் தான் நடத்தப்பட்டார். மொத்தமும் கை மீறி விட்டது என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.   மொத்தமாக தங்களின் உரிமைகளை கை கழுவி விட்டது இந்தியா என்பதை உணர்ந்தவர் பிரபாகரன்.  அன்றைய சூழ்நிலையில் ஆதாயம் ஒருவருக்கும் மட்டுமே.  அது தான் அரசியல் ஞானி ஜெயவர்த்னே.  அவருடைய பிரித்தாளும் சூழ்ச்சியும், விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே உருவாக்க வேண்டிய தீராத பகைமை நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டுருந்தது.  கற்றுக்கொள்ள வேண்டிய இந்திய தலைவர்கள் இன்று வரைக்கும் கற்றுக் கொள்ளவும் இல்லை.  இலங்கை ஆட்சியாளர்கள் உருவாக்கிய நரித்தந்திரங்களை உணர்ந்து கொள்ளவும் தயாராய் இல்லை.
இலங்கையை பொறுத்தவரையில் தமிழர் எதிர்ப்பு என்பது ஓட்டுக்கான அரசியல்.  தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சனை என்பது அனுதாப அரசியல்.  போராளிகளைப் பொறுத்தவரையிலும் யார் பெரியவன்?  ஆனால் மொத்த இலங்கை வாழ் அப்பாவி பொதுமக்களுக்கும் தினந்தோறும் சுடுகாடு?

ராஜிவ் காந்தி சார்க் மாநாடு மூலம் பெற வேண்டிய புகழ் தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சம்.  எம்.ஜி.ஆருக்கு வளர்த்த கிடா மார்பில் குத்துகிறதே? என்ற ஆயாசம்.  பிரபாகரனை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்ற இந்திய அதிகாரிகளின் ஆத்திரம். பிரபாகரனுக்கே மொத்த தமிழர்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியாமல் ஜெயவர்த்னேவை அநியாயத்திற்கு நல்ல பௌத்தர் என்று நம்பிக்கொண்டு இவர்கள் அத்தனைபேர்களும் ஒப்பந்தத்திற்கு உழைத்துக்கொண்டுருக்கிறார்களே என்ற ஆத்திரம்.

வல்லரசு ரா உளவுத்துறை பேயரசு ஆனது தான் மிச்சம்.  பிரபாகரன் தன்னை வளர்த்துக் கொண்ட ஆதிக்கம் என்பது அவர்களின் மொத்த திட்டங்களையும் தவிடு பொடியாக்கி தனியான LTTE யின் ராஜ்யமும் ராஜபாட்டையும் தொடக்கம் பெற்றது.  மிச்சம் இருந்த போராளிக்குழுக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒட்டமும் நடையுமாக பாதிப்பேர்கள் தமிழ்நாட்டில், மீதிப்பேர்கள் வெளிநாட்டில்.  அது போகவும், மிஞ்சி இருந்தவர்கள் பிரபாகரனிடம் கெஞ்சல் பார்வை பட்டு தன்னைக் காத்துக்கொள்ளும் சூழ்நிலை.

இலங்கை பிரச்சனை என்ற பூட்டப்பட்ட இரண்டு(இந்தியா இலங்கை) மாடுகளும் வெவ்வேறு திசையில் பயணித்தாலே பிரச்சனை.  இங்கே நான்கு மாடுகள்.  நான்கு திசைகள்?  ஜெயவர்த்னே, ராஜிவ் காந்தி, பிரபாகரன், இந்திய அதிகாரிகள்.  இன்றுவரையிலும் தீர்வும் கண்டபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உணர்த்துபவர்கள் யாருமில்லை?

Wednesday, January 20, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (1)

1986 ஆம் ஆண்டு.  பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தனிப் பெரும் இயக்கமாக உருவான ஆண்டு.

பத்பநாபா, சீறீ சபாரெத்தினம், பாலகுமார், உமா மகேஸ்வரன் எங்கே போனார்கள்?   மற்ற இயக்கங்கள் என்னவாயிற்று?

இன்று வரையிலும் முழுமையான புரிதல்கள் இல்லாமல் பிரபாகரன் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளை சற்று உள்வாங்கிவிடலாம்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பிரபாகரன் மேல் கொலை வெறி பார்வை பார்த்துக்கொண்டுருக்கிறது.  திம்பு, பெங்களூர் பேச்சுவார்த்தை என்று எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டுருப்பதால் ஜெயவர்த்னே நமுட்டுச் சிரிப்பும், ராஜீவ் காந்தி தடுமாற்ற சிந்தனைகளும், மொத்த இந்திய அதிகார வர்க்கத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் உள்ளுற புகைச்சலுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் சூழ்நிலை இது.

பிரபாகரன் தலைமறைவு வாழ்க்கை தொடங்கிய இளவயது முதல், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை மூலம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டு,     " மொத்த கொலைகளுக்கும் நாங்கள் தான் பொறுப்பு " என்று உமா மகேஸ்வரன் கையெழுத்து போட்டு பத்திரிக்கையின் வாயிலாக அரசாங்கத்திற்கு தெரிவித்தது வரையிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட எந்த கொள்கையிலும் சந்தர்ப்பவாதம் என்பது இல்லாமல் மொத்த லட்சிய முன்வரைவாகவே நகர்த்திக்கொண்டு வந்தார்.

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னை விட மற்ற இயக்கங்களின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும், நிதி ஆதாரங்கள் தங்களை விட மேம்பட்டு இருந்த போதிலும் கூட தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளவில்லை.  இனி சேர்ந்து செயல்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ஆன்டன் பாலசிங்கம் கொடுத்த அழுத்தம் கூட பல முறை யோசித்து, பல நாட்கள் கழித்து வேறு வழியில்லை என்பதாகத்தான் மொத்த மற்ற இயக்கங்களுடன் கை கோர்த்தார்.  எவருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை.  அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இதே காலகட்டத்தில் ரா உள்ளே நுழைந்து சந்திரஹாசன் மூலம் டெலோ இயக்கத்தினர், அதனைத் தொடர்ந்து மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த இந்திய மரியாதை யோசிக்க வைத்ததே தவிர கலக்கத்தை உருவாக்கவில்லை.  பயிற்சி முக்கியம் என்பதாக தானாகவே ரா விரித்து வைத்திருந்த வலையில் போய் மாட்டிக்கொண்டார்.  ஜெயவர்த்னே ஒரு பக்கம், இந்தியா மறு பக்கம்.  இது போக வேறு வழியே இல்லாமல் இந்தியாவின் அதிகாரவர்க்கத்தினர் முன் கைகட்டி மண்டியிட வேண்டிய அவஸ்யம்.  அவர்களின் ஏச்சும், பேச்சும், அவமரியாதையும், மிரட்டலும் என்று எல்லாவகையிலும் மனோரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்ததும் உண்மை.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்?  ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டத்தான் தயாராய் இருக்கிறார்கள்.  காரணம் ரா வலைக்குள் உள்ளே நுழைய முயற்சித்த போது (தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பொறுப்பாளராக இருந்து மற்ற இயக்கங்களுக்கு செயல்பட்டுக் கொண்டுருந்தவர்)  கிடைத்த பாடம் மொத்தத்திலும் கொடுமையானது.  ரா அதிகாரி கேட்ட முதல் கேள்வியே பிரபாகரனின் மொத்த கோபத்தையும் வெளியே காட்டும் அளவிற்கு இருந்தது.   " LTTE க்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல நீங்களும் சந்திரஹாசனை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்".  பிரபாகரன் கோபத்தை விட ஆன்டன் பாலசிங்கம் மனைவி அடேல் பாலசிங்கம் கூட பொங்கும் அளவிற்கு உருவாக்கியது.

ஆனால் ரா உள்ளே நுழைந்து முதல் டெலோவிற்கு சிறப்பான பாதை உருவாகிக் கொண்டுருந்தது.  அவர்களின் தைரியமும் அளவுக்கு மீறி வளர்ந்து கொண்டுருந்தது.  மொத்தமாக நிதி உதவி என்று வேறு ஒரு தளத்திற்கு அவர்களை மாற்றி தங்களுடைய ஏவலாளிகள் போல் மாற்றிக்கொண்டுருக்க ஒவ்வொரு இயக்கத்தின் செயல்பாடுகளும் இயல்பான போராளிக்குழுக்களின் வாழ்க்கையில் இருந்து மாற்றம் பெறத் தொடங்கியது.  ஆடம்பரம், தான்தோன்றித்தனம், இந்தியா தங்களுடன் இருக்கும் வரை வேறு யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது, இந்தியா உதவியுடன் எதிர்காலத்தில் சிறப்பான இடத்தை அடைந்து விடமுடியும், என்று ஒவ்வொருவரும் தனக்குண்டான எதிர்கால அபிலாஷைகளுடன் முன்னேறிக்கொண்டுருந்தனர்.

இது போக மனதிற்குள் இருக்கும் " நான்" " தான் மட்டும்"   என்ற இந்த இரண்டு மன அழுக்கு பல அசிங்கமான பாதையில் பயணிக்க வைத்தது.  பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுதல், மிரட்டுதல், கொலை, கொள்ளை, வழிப்பறி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் இது போக மற்ற இயக்கங்களை வம்புக்கு இழுத்து அழித்தல், குறிப்பிட்ட பகுதியில் தங்களுடைய ஆளுமைய நிலைநாட்டியவர்கள் அதன் தொடர்ச்சியாக மற்ற பகுதிகளுக்கும் நகர்த்தும் போது, உருவான பல பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் முன்னேறிய போது தான் மொத்தமாக பிரபாகரன் பார்வை அவர்கள் மேல் பட்டது.  காரணம் இதைத்தான் ரா வெகுநாளாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. போராளிகள் இருக்க வேண்டும்.  ஆனால் வளரக்கூடாது.  ஒருவருடன் ஒருவர் ஒற்றமையாக இருக்கக்கூடாது.  இப்போது நாம் இந்த ஒவ்வொரு ரத்தச் சகதியிலும் கால்வைத்து மேல் நோக்கி நகரலாம்.

முதலில் உமா மகேஸ்வரன்.   (PLOTE)

 பிரபாகரன் வளர்ச்சிக்கு எத்தனையோ அடி உரமாய் இருந்து இருக்கின்றனர்.   தொடக்கத்தில் ராகவன் போல,

இந்த உமா மகேஸ்வரன் இயக்கத்தை ஒரு தெளிவான பாதைக்கு, மக்கள் இயக்கமாக, உலகளாவிய மற்ற நாடுகள் அங்கிகரிக்கும் அளவிற்கு இறுதி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பியவர்.  நல்ல புத்திசாலி, படிப்பாளி, தீர்க்கமான சிந்தனை உள்ளம் படைத்தவர்.  ஆனால் பிரபாகரன் கொண்டு வாழ்ந்த தனி மனித ஒழுக்கம் என்பதில் அடிபட்டு  ஒதுங்கிப் போனவர்.  பெண்ணாசை காரணமாக இருவரும் பிரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை.  பிரபாகரன் கொள்கையின் படி இயக்கத்தில் இருந்து பிரிந்து வேறு இயக்கம் தொடங்கக்கூடாது என்பதையும் மீறி PLOTE இயக்கம் தொடங்கி, வெவ்வேறு பாதையில் இருவரும் பயணித்தனர்.  ஆனால் உமா மகேஸ்வரன் விரும்பிய ஜனநாயக பாதையே அவரின் ஓட்டுநர் மூலம் அவர் உயிரை பறித்தது. இந்த இடத்திலும் ரா திருவிளையாடல் இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம். ஏற்கனவே தொத்தலாக போய்க்கொண்டுருந்த இயக்கம் மெதுமெதுவாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.  சென்னையில் ஆன்டன் பாலசிங்கம் முன், பிரபாகரன் கொடுத்த சத்தியத்தை கடைசி வரையிலும் உமா மகேஸ்வரன் விசயத்தில் காப்பாற்றியது முதல் ஆச்சரியம்.

உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான " இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்".   இதைப் போலவே பிரபாகரன் " நான் உமா மகஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன்.  என்னால் எந்த பிரச்சனையும் வராது".

இயக்கத்திற்கான ஒழுக்கக் கோட்பாடுகள் என்று ஏழு கட்டளைகள் போல் வகுத்து இருந்தாலும் பிரபாகரனை பொறுத்தவரையில் தானும் மீறுவதில்லை மீறுபவர்களையும் பொறுத்துக் கொள்வதில்லை.  ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றது.  காரணம் பிரபாகரனை எதிர்ப்பவர் எவரும் உயிருடன் வாழ முடியாது என்ற குற்றச்சாட்டுக்கும் சில விளக்கங்கள்.

தொடக்கத்தில் இயக்கத்தை புணர் நிர்மாணம் செய்தவர்களில் முக்கியப் பங்காற்றியாற்றியவர் ராகவன்.  இவர் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  பிரபாகரனுக்கு சிகரெட்டின் வாடை கூட பிடிக்காது.  மரியாதையின் காரணமாக அனுமதித்த முதல் நபர் ராகவன்.  இவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து பின்னாளில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்.  பின்னால் வந்த ஆன்டன் பாலசிங்கம் கூட இந்த சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவித்தவர். இறுதிவரையிலும் இவர்களின் தனிப்பட்ட பழக்கங்களை பிரபாகரன் பொறுத்துக்கொண்டார் என்பது அடுத்த ஆச்சரியம். இதன் தொடர்ச்சியாக பின்னால் வரப்போகும் மாத்தையா முதல் கருணா வரைக்கும்.  பிரபாகரன் நினைத்து இருந்தால் கருணா ஒரு பொருட்டே அல்ல.  பொட்டு அம்மன் சொல்லியும் கேட்காத பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியது ஏறக்குறைய உயிர்ப்பிச்சை. காரணம் கருணாவின் வீரம் அந்த அளவிற்கு பிரபாகரனை ஆளுமை செய்து இருந்தது.  எப்போதே தோன்றும் இந்த இரக்க உணர்வு தான் மொத்த வாழ்க்கையையும், தமிழர்களின் வாழ்வுரிமையும் இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிறது?

மாத்தையா மீது பொட்டு அம்மன் உளவு அறிந்து கொண்டுவரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்த போதிலும் அவர் தரப்பு அத்தனை வாத பிரதிவாதங்களையும் அனுமதித்து பிறகு தான் தண்டணை நிறைவேற்றப்பட்டது.  முதன் முறையாக மொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை வாசிக்கப்பட்டது.

ஒரே காரணம் திறமையாளர்களின் பங்களிப்பு என்பது சில சமயம் பாறை மனதில் விதை முளைக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரம்.

மாத்தையாவின் விசுவாசம் என்பதும், அவருடைய திறமை என்பது அளவிடற்கரியது.  ஆயுதப்பயிற்சிக்காக பிரபாகரனை தமிழ்நாட்டில் வைத்து ரா உளவுத்துறையுடன் நேரிடையாக சந்திக்க வைக்க ஆன்டன் பாலசிங்கம் முயற்சித்த போது, அப்போது தி நகரில் காவல்துறை பிரச்சனைகளும், பின்னாளில் இலங்கைக்குச் சென்றதும், இதன் தொடர்ச்சியாக காவல்துறை மீண்டும் தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்த பிரபாகரன்,  ஆன்டன் பாலசிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.  மீண்டும் அழுத்தம் கொடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க பிரபாகரன் சார்பாக தமிழ்நாட்டுக்கு வந்தவர் மாத்தையா.  வேலை முடிந்தது மாத்தையா அன்று பாலசிங்கத்திடம் சொன்ன வாசகம் இது.

" தலைவருக்கும் ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள்"

இதே இந்த மாத்தையா கூட உளவுத்துறையின் திருவிளையாடல் காரணமாக மரணிக்க நேர்ந்தது. பின்னால் வரும் சம்பவங்கள் மூலம் அதை கண்டு உணரலாம்.

பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல் ஒரே சொல். ஒரே வார்த்தை.ஒரே நோக்கம்.

ஆங்கிலத்தில் சொல்வார்களே?  Why Should I Compromise?

இரண்டாவது சிறீ சபாரெத்தினம்.

பிரபாகரனின் தொடக்க போராட்ட காலத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த போது குட்டிமணி தங்கதுரை உருவாக்கி இருந்த டெலோ இயக்கத்தில் தான் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தார் என்று சொல்வதை விட பிரபாகரன் திறமைக்காக அவர்களே இவரை அழைத்தனர் என்பது தான் உண்மை.  வயதில் சிறியவர் என்பதால் செல்லமாக அழைக்கப்ட்ட தம்பி என்ற பெயரே காலம் முழுக்க நிலைபெற்றது. சொல்லப்போனால் அவர்களுடன் போய் பணியாற்றிய போது, துப்பாக்கிகள் பற்றிய முழுமையான அறிவு, இயக்கத்திற்கான மொத்த எதிர்கால நோக்கங்கள் என்று எல்லாமே கற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்தது.  ஆனால் தன்னுடைய மனதில் அடைகாத்து வைத்திருந்து, தனக்கு பிடித்தமான தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட மனதில்லாமல் பின்னாளில் உமா மகேஸ்வரனை இணைத்துக்கொண்டு தனக்குச் சமமான பதவியையும், மரியாதையும் அளித்து மொத்தமாக தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதில் உறுதியாய் இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் "பிரபாகரன் சர்வாதிகாரி" என்று ஒவ்வொருவரும் ஒதுங்குவதும், தூற்றுவதும் நடந்து கொண்டுருந்த போதிலும் தன்னுடைய பாதையில் மட்டும் கவனமாக முன்னேறிக்கொண்டுருந்தார்.  அடுத்த வேளை சோற்றுக்குக்கூட கடினமாக வாழ்ந்து கொண்டுருந்த காலகட்டம் அது.  ஆனால் வெளியேறிவர்கள் தூற்றுதலை அதிகப்படுத்தியதும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் மொத்தமாக பிரபாகரன் குறித்து அவதூறுகளை பரப்பிய போது, எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து கொண்டே இருந்த போது தான் எதிரிகளை நோக்கி பிரபாகரனின் துப்பாக்கி ரவை பேசியது.

ஆனால் டெலோ இயக்கத்தில் சிறீ சபாரெத்தினம் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு சில காரணங்கள்.  தொடக்கம் இப்படித் தான் தொடங்கியது.
TELO FLAG
" 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலைப்புலிகள் பயணம் செய்த படகை இலங்கை இராணுவம் சிறைபிடித்தது.  அதில் இருந்தவர் சிறீ சபாரெத்தினத்தின் உறவினரும், பிரபாகரனின் வலது கரமான மட்டக்களப்பு மேஜர் அருணா கொல்லப்பட்டார்.  அதன் துக்க சுவரெட்டிகளை டெலோ இயக்கத்தினர் கிழித்து எறிந்ததும், கடையடைப்பு நடத்திய மக்களை மிரட்டியதும், இதைக் கேட்கப் போனவர்களை உதைத்து அனுப்பியதும், சிலரை (லிங்கம் )சுட்டுக்கொன்றதும் நடந்தது".

ஆனால் விடுதலைப்புலிகளின் கோட்பாட்டின்படி பிடிபடும் போது சயனைடு சுவைத்து உயிர் இழப்பது தான் கொள்கை.  அதையும் மீறி அருணாவை இராணுவத்தினர் உயிருடன் தான் பிடித்து வைத்து இருந்தனர்.  ஆனால் அதுவரைக்கும் டெலோ மேல் கொண்டுருந்த கசப்பான நிகழ்வுகள் இதை தொடக்கமாக வைத்தும், ரா உளவுத்துறையுடன் கொண்டுருந்த நெருக்கமான புரிந்துணர்வுகளுக்காக காலத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தார் என்பது தான் முற்றிலும் உண்மையாக இருக்க முடியும். மேலும் அவர்களின் தினசரி மோசமான நடவடிக்கைகள் அத்தனையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுருந்தது.

கெட்ட நேரம் வரும் போது சிந்தனைகளும் மழுங்கிப்போகும் என்பது போல் டெலோ அமைப்பினர் வெறியாட்டம் நடத்திக்கொண்டுருந்தனர்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், தங்களுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்துதல், கடத்திச் சென்று கதற அடித்தல் என்று இது போல மூன்றாந்தர அத்தனை வேலைகளையும் நடத்திக்கொண்டுருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக தேடித்தேடி டெலோ இயக்கத்தினர் அத்தனை பேர்களையும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி ரவை தின்று தீர்த்தது.  இறுதியில் ஓளிந்து வாழ்ந்த சிறீ சபாரெத்தினத்தை, விடுதலைப்புலிகள் மக்களுக்கு கொடுத்துருந்த அச்சுறுத்துதல் காரணமாக புகலிடம் எவரும் கொடுக்க மறுக்க, புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை யாழ் தளபதி கிட்டு வெறி தீர மொத்த (28) தோட்டங்களும் சீறிப் பாயும் அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  சிறீ சபாரெத்தினம் கெஞ்சிய உயிர்பிச்சை காற்றில் கரைந்து மறைந்தது.
எண்ணம் உள்ளே இருந்ததை வெளிக்கொண்டு வர உதவியதும், அதுவே இறுதியில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட உதவியதும் என்று நடந்தேறியது.  இரண்டும் முக்கியக் காரணம். பிரபாகரனின் சுயநலமும் மக்களின் பொதுநலமுமாக, டெலோ இயக்கம் முடிவுக்கு வந்தது.

டெலோ அழிக்கப்படாமல் இருந்தால் என்ன நடந்து இருக்கும்?                                                                

ரா உளவுத்துறையின் ஆதிக்கம் இன்னும் அதிகமாக தொடக்கம் முதலே வலுப்பட்டு இருக்கும்.

                                                                                                சிறீ சபாரெத்தினம்                                                                                      
இலங்கைக்கும், பிரபாகரன் இயக்கத்திற்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து இருக்கும்.

இயக்கத்தின் கொள்கைகள் என்று மொத்த நாலாந்தரமான அத்தனை கீழ்த்தரமாக செயல்பாடுகளும் நடந்தேறி மொத்த மற்ற போராளிகுழுக்களுக்கும் உலக மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்கியிருக்கும்.

பிரபாகரன் இலங்கையுடன் போராடி ஜெயிப்பதை விட இவர்களைப் போன்றவர்களிடம் போராடுவதும், பின்னடைவுகளை சந்திப்பதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுருந்துருக்கும்.  பின்னாளில் பெற்ற பிரபாகரனின் மகத்தான வளர்ச்சி என்பது வெறும் கற்பனையாக இருந்துருக்கலாம்.
காரணம் தொடக்கம் முதல் கடற்கரையோரமாய் வாழும் மக்கள், மொத்த முஸ்லிம் மக்கள் என்று இலங்கையின் குறிப்பிட்ட சாரரிடம் பிரபாகரன் செல்வாக்கு வளரவில்லை என்பது முக்கியம் போல அந்த மொத்த மக்களும் பிரபாகரனை அந்த அளவிற்கு வெறுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து மிஞ்சியுள்ள இயக்கங்கள்?.