Saturday, June 22, 2013

சொம்பு தூக்கிகள்

ந்த துறையில் நீங்கள் இருந்தாலும் உங்களின் முதல் தகுதி சிறந்த சொம்பு தூக்கியாக இருக்க வேண்டும்.  

உங்களின் திறமை உங்களை அடையாளப்படுத்தும்.  

ஆனால் உங்களின் சொம்பு தூக்கும் திறமை மட்டுமே உங்களை அந்த துறையில் நிலைப்படுத்தும்.  பழக்கமில்லாதவர்கள் அவசியம் பழகியே ஆக வேண்டும்.  விருப்பமில்லை என்ற போதும் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் என்பதால் இந்த சொம்பு தூக்குதலை கௌரவமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  

இன்று ஆட்சியில் அரசியலில், அதிகார வர்க்கத்தில் என்று தொடங்கி அத்தனை இடங்களிலும் சரியான முறையில் சொம்பு தூக்கி பழகப்பட்டவர்கள் தான் உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். 

வீட்டுக்குள் கூட சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நீங்கள் சொம்பு தூக்கியே ஆக வேண்டும்.  முரண்டுபிடித்தால் முன்னேற முடியாது என்பதை விட உங்களை முடித்துக் கட்டிவிடுவார்கள்,

ன்று பத்திரிக்கைகள் முதல் வலையுலகம் வரைக்கும் எந்தப் பக்கம் திரும்பினாலும் கலைஞர் தனது மகள் கனிமொழியின் ஒற்றை சீட்டுக்காக காங்கிரஸ், தேமுதிக என்று மாறி மாறி கூச்சப்படாமல் சொம்பு தூக்கிக் கொண்டிருப்பதைப் பற்றியே படிக்க வேண்டியதாக இருக்கின்றது. 

அப்பாவுக்கு மகளின் வெற்றி குறித்து கவலைப்பட்டு தூக்கம் வராத காரணத்தால் அண்ணன் தங்கை அரசியல் பின்னுக்குப் போய் விட்டதாக ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.  இப்போது ஸ்டாலின் கூட கனிமொழிக்காக உண்மையிலேயே தளபதியாய் சூறாவளியாய் சொம்பு தூக்கிக் கொண்டு இருக்கின்றார்.

கலைஞரின் குடும்ப பாசம் பற்றி புதிதாக எழுத ஒன்றுமில்லை. 

வலையுலகில் உள்ள தீவிர உடன்பிறப்புகள் கூட இந்த தேர்தலில் பா.ம.க எவருக்கும் ஆதரவு இல்லை என்றது போல காங்கிரஸ்ம் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்கிற ரீதியில் கொதிப்புடன் தங்கள் கருத்தை எழுதுகின்றனர்.  

மகளை அரசியலில் வளர்த்தவருக்குத்தான் அந்த பாசப் போராட்டம் தெரியும்.  கனிமொழி ஜெயிக்காமல் போனால் அடுத்தடுத்து டெல்லியிலிருந்து வரப் போகும் பிரச்சனைகளை ஒப்பிடும் போதும் மகள் ஜெயிக்க எங்க வேணுமானாலும் சொம்பு தூக்கலாம் என்கிற கலைஞரின் கொள்கையில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  

மூணாப்பு படித்த தேமுதிக உறுப்பினர்  திக்கு தெரியாத காட்டில் (டெல்லியில்) மாட்டிக் கொண்டு தேமே என்று முழிப்பதை விட கனிமொழி டெல்லிக்கு போனால் கூட அவர் வேலையை பார்த்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் மரியாதையை உருவாக்குவார். 

கலைஞரின் பொதுவாழ்க்கையில் சொம்பு தூக்குவதென்பது இது தான் முதல் முறையா?

நான் அலுவலகத்தில் தினந்தோறும் பார்க்கும் ஒவ்வொரு சொம்பு தூக்கிகளையும் ரொம்பவே ரசிப்பதுண்டு. 

விதவிதமான சொம்பு தூக்கிகள். ரசனையான அவர்களின் செயல்பாடுகள் என்று யோசிக்க ரசிக்க என்று தீனி கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

எத்தனை எத்தனை சொம்பு தூக்கிகள்?

அலுவலக செயல்பாடுகளைப் பற்றி தெரியாத காலகட்டத்தில் இவர்கள் எனக்கு சவாலாக தெரிந்தார்கள்.  வேலைக்கு வந்த தொடக்கத்தில் குழப்பாக இருந்தது. நம் இடம் எது? என்று தேடத் தொடங்கிய போது தான் ஒவ்வொரு இடங்களிலும் இருந்த இரண்டு வர்க்கத்தினைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது.

ஒன்று உழைப்பவர்கள். 

மற்றொன்று உழைக்க மறுப்பவர்கள். 

இது போக உழைக்க வாய்ப்பு இருந்தும் பல காரணங்களால் விருப்பமில்லாதவர்களாக இருப்பவர்கள். 

இவர்கள் எப்போதும்  தனி கோஷ்டியாக இருந்தனர். 

இந்த பிரிவினையில் மேலும் சில கிளைப்பிரிவுகள் பிரிகின்றது. 

உழைக்க விருப்பமில்லாதவர்களை நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாலே போதுமானதாக இருந்தது.  அவர்களால் நமக்கு ஒன்றும் பிரச்சனை வராது. 

ஆனால் உழைக்காமல் அடுத்தவர்களின் உழைப்பை தனது உழைப்பாக மாற்றிக் கொண்டு அடுத்தடுத்து விரைவாக படிகளில் ஏறியவர்களைப் பார்த்த போது தான் சமூகத்தின் உண்மையான நிலவரத்தையே புரிந்து கொள்ள முடிந்தது. 

இதிலும் ஒரு சிறப்பு பிரிவு என்று ஒன்று தனியாக உண்டு.
அவர்களுக்கு சொம்பு தூக்கிகள் என்று அழைத்தார்கள். 

காரணம் காலை முதல் இரவு வரைக்கும் சமய சந்தர்ப்பத்திற்கு கேற்றவாறு தனக்கு மேல் இருபபவர்களின் விருப்பத்திற்கேற்றவாரு விதவிதமாக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான சொம்புகளை தூக்கிக் கொண்டு கழுவ தயாராக இருந்தவர்களால் தான்  பலருக்கும் பிரச்சனைகள் உருவானது. 

தனது சொந்த திறமைகளை விட தான் தூக்கும் சொம்புகளை அதன் அளவுகளை அதிகரித்துக் கொண்டே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய அவசியம் இருப்பவர்கள் தான் ஒவ்வொரு இடங்களிலும் உண்மையான உழைப்பாளிகளுக்கு சவாலாக இருக்கின்றார்கள்.  

சிலர் முதலாளிகளின் குடும்பத்துக்கு சொம்பு தூக்கப் போய் அங்கே தூக்கம் வராமல் தவிக்கும் முதலாளியம்மா அருகே செல்லும் வரைக்கும் பாக்கியத்தைப் பெற்று விடுகின்றார்கள்.  

முதலாளிக்கு சொம்பு தூக்குபவர்கள் அவர்களுக்கு மாமா என்கிற நிலை வரைக்கு உயர்ந்து விடுகின்றார்கள்.  

ஏராளமான சொம்பு தூக்கிகளை தினந்தோறும் பார்த்துக் கொண்டே வாழ வேண்டியிருப்பதால் இவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டதில்லை. 

லையுலகில் இருக்கும் சொம்பு தூக்கிகளை பார்க்கும் போது தான் வியப்பாக உள்ளது.  நான் உன்னை தடவிக் கொடுக்கின்றேன்.  நீ என்னை தடவிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  நானும் இருக்கின்றேன் என்பதையாவது கண்டுகொள் என்று விரும்பும் சொம்புதூக்கிகள் ரசிக்கக்கூடியவராக தெரிகின்றார்கள். 

என்ன தான் திறமையிருந்தாலும் ஒரு தடவை சொம்பு தூக்க பழகிவிட்டால் அதன் சுகம் விடாது போல.

காலம் மாறிக் கொண்ட இருக்கின்றது. 

மன்னர்கள் தங்க சொம்புகளை பயன்படுத்தினார்கள். மந்திரிகள் ஒரு வேளை வெள்ளி சொம்பை பயன்படுத்தியிருக்கக்கூடும். மக்கள் வெண்கலச் சொம்பை பயன்படுத்தினார்கள். அடுத்த பித்தளை சொம்பு வந்தது. பிறகு அலுமினியச் சொம்பு வந்தது.  ஆனால் இப்போது விதவிதமான சில்வர் சொம்பும் வந்து விட்டது.  

ஆனால் இப்போது சொம்புகளுக்கு மரியாதை இல்லை. கண்ணாடியாக மாறி இன்று உண்மையான சொம்பின் வடிவமே மாறிவிட்டது. நம் வாழ்வின் சாட்சியாக நம்மோடு வந்து கொண்டேயிருப்பதால் சொம்புகளை ஆதரிப்போம்.  

காரணம்  சொம்பு தூக்கிகள் தான் நாம் சுறுசுறுப்பாக இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துபவர்களாக இருக்கின்றார்கள். நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகளை கற்றுத் தருபவர்களாக இருக்கின்றார்கள். நாம் வளர்த்தே ஆக வேண்டிய சூழ்நிலையை உணர்த்துபவர்களாக இருக்கின்றார்கள். 

எப்போதும் ஒவ்வொரு சொம்பு தூக்கிகளும் நம்மை விழிப்பாக இருக்க வைத்துக் கொண்டிருப்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகளை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது. 

நாம் எப்போதும் சொம்பு தூக்கிகளை ஆதரிப்பது தான் சரியாக இருக்கும்.

காலப்போக்கில் காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இவர்கள் வந்து விடுவதால் இவர்களும் ஒரு வகையில் தியாகியே.

45 comments:

தனி காட்டு ராஜா said...

Ha ha :)

abdul said...

unmai

துளசி கோபால் said...

செம்புச் சொம்புகள் படம் அருமை!

விஷ்ணுச் சொம்பு என்று ஒன்று இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்!!!!!!

Avargal Unmaigal said...

////வலையுலகில் இருக்கும் சொம்பு தூக்கிகளை பார்க்கும் போது தான் வியப்பாக உள்ளது. நான் உன்னை தடவிக் கொடுக்கின்றேன். நீ என்னை தடவிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நானும் இருக்கின்றேன் என்பதையாவது கண்டுகொள் என்று விரும்பும் சொம்புதூக்கிகள் ரசிக்கக்கூடியவராக தெரிகின்றார்கள். ///////


ஹா ஹா ஹா .....இதைப்படித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை...... இந்த பதிவிலே மிகவும் ஹைலைட் ஆன பகுதி இதுதான்

Anonymous said...

அற்புதமான பதிவு. செம்பு தூக்கிகள் எங்கும் நீக்கமற உள்ளனர், சொல்லப் போனால் பல வரலாறுகளை, மதங்களை, வாழ்வியலை உருவாக்கித் தொலைத்தார்கள். அதனால் தான் என்னவோ இன்று சமூகங்களும் செம்பு தூக்கிகளாக இருந்து வருகின்றது போலும்.

கும்மாச்சி said...

சொம்போ, சொம்புதூக்கிகளோ இல்லை என்றால் உலகம் நாறிவிடும். அவர்களின் வழிசலை புரியாமல் இருக்கும் டேமேஜர்களை என்ன செய்வது?

சவுக்கடி said...

'சொம்பு தூக்கிகள்'

'தாளம் போடுவோர்'

'சொறிந்து விடுவோர்'

'முறைவாசல்காரர்'

'ஆமாம்சாமிகள்'

'பக்கமேளம்'

... இன்னும்கூட இருக்கும் இவைபோன்ற பலசொற்கள் கூறும் செய்திகள் காலங்கள் தோறும் கழிசடைகள் இருந்திருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை உணர்த்துகின்றன.

எம்.ஞானசேகரன் said...

இதைப் பற்றியும் அதில் என் அனுபவங்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுத எண்ணம் இருக்கிறது. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே !

ஜோதிஜி said...

பாத்தீங்களா? மீக நீண்ட பதிவு என்று எப்போதும் என் மேல் பாய்வார்கள் சில விசயங்களை நின்று நிதானித்து பேச வேண்டுமென்றால் பெரிய பதிவாகத்தான் எழுத வேண்டும்.

ஜோதிஜி said...

ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்துவிட்டீங்களே. உங்க பெயரே பயமுறுத்தும்படி இருக்கே.

ஜோதிஜி said...

மேஜேனர் டேமேஜர் ஆகும் போது மட்டும் இந்த சொம்புகள் பளபளப்பாக மாறிவிடுகின்றது.

ஜோதிஜி said...

அதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். முடியல.

ஜோதிஜி said...

இந்த சொம்பு வகைகள் என்னன்ன இருக்கின்றது என்று கூகுளில் தேடிப்பார்த்த போது பல வித்தியாசமான நடைமுறையில் இல்லாத அத்தனை சொம்புகளும் வந்தது. அதில் திரு. கோபால் ஒரு பாத்திரக்கடையில் ஒரு பாத்திரத்தை வாங்குவது போல உள்ள படமும் வந்தது டீச்சர். எங்கே புடுச்சீங்க அந்த படத்தை?

ஜோதிஜி said...

சிரிக்கும்படி எழுதி விட்டேனே. வவ்வால் கோவிச்சுக்க போராறாரு.

ஜோதிஜி said...

வாங்க அப்துல்.

ஜோதிஜி said...

நன்றி தம்பி. ஆழமான கருத்து.

saidaiazeez.blogspot.in said...

PHd பட்டம் பெற அனுப்பப்படவேண்டிய அருமையான ஆராய்ச்சி கட்டுரையைதான் வெளியிட்டுள்ளீர்கள். ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளீர்கள் போல! நாம தான் சூதானமா நடந்துக்கணும் ஜோதிஜி!

வவ்வால் said...

ஜோதிஜி,

சிரிக்கும் படி எழுதினால் சிரிக்கத்தான் செய்வாங்க, பாயவா செய்வாங்க?

ஆனால் நீங்கள் இந்த தலைப்பில் எழுதியது கொஞ்சம் ஆச்சர்யமே!

நான் நிறையப்பேரை சொம்பு தூக்கி,சொம்படிக்கிறான்னு கலாய்ச்சு இருக்கேன் பதிவுலகில் ஆனால் பதிவா போட்டதில்லை.

சென்னைப்பக்கம் சொம்பு,சொம்படிக்கிறது என்பது ஒரு "டபுள் மீனிங்க்" சொல். அதை விரிவா சொன்னால் அடிக்க பாய்வீங்க :-))

இன்னொரு சொல் இருக்கு தனியா சொல்கிறேன் ,நல்லா இல்லைனா அதை தூக்கிடலாம்.

சொம்பு தூக்கிகள் பற்றி சொன்னதெல்லாம் சரித்தான் ஆனால் அவர்கள் சமூகத்துக்கு ரொம்ப தேவைப்போல சொல்லி இருக்கிங்களே அது நக்கலா, இல்லை உண்மையா ஃபீல் செய்து சொன்னதா?

கரையான் ஒரு மரத்தினை அரிக்கும் போது வெளியில் அதன் பாதிப்பு அதிகம் தெரியாது ஆனால் உள்ளுக்குள் அரித்து வெறும் கூடாகிவிடும், மரம் காலியானதும் கரையான் வேறு "மரம்" தேடி போய்விடும், அப்படியானவர்களே சொம்பு தூக்கிகள், அவர்களால் அழிந்த தொழில்சாம்ராஜ்யங்கள், அரசியல்வாதிகள்,திரைப்படத்துறையினர் ஏராளம், ஏத்திவிட்டு ஏத்திவிட்டே கவுத்து சோலிய முடிச்சிடுவாங்க.

சொம்புத்தூக்கிகள் அருகில் இருக்கும் போது அவர்கள் தான் ராஜவிசுவாசிகள் போல கண்ணுக்கு தெரிவார்கள்,ஆனால் அவர்கள் வைப்பது அத்தனையும் ஆப்பாக இருக்கும் :-))

# சொம்பு தூக்கி என்ற சொல் வழக்கத்திற்கு எப்படி வந்ததுனும் சொல்லி இருக்கலாம், அக்கால ராஜா,நிலச்சுவாந்தார்கள் , வெத்தலை ,சீவல்,புகையிலை பிரியர்கள், அதை எல்லாம் மடிச்சு கொடுக்க இருப்பவருக்கு "அடைப்பக்காரர்"னு பேரு, மென்னு துப்பின எச்சில புளிச்சுனு துப்பினா புடிக்க ஒரு சொம்பு வச்சிருப்பாங்க அதை எடுத்து கொடுக்க ஒரு ஆள் ,அவரு தான் "சொம்பு தூக்கி".

பெரிய ஆளுனா அடைப்பக்காரர், +சொம்பு தூக்கினு ரெண்டு பேரு ,கொஞ்சம் சின்ன ஆளுனா ஒரே ஆளே ரெண்டு வேலையும் செய்யனும் :-))

மேற்கு தமிழகத்தில் "அல்லக்கை" தானே ஃபேமஸ்.

# மெயுலகில் சொம்பு தூக்கிகளுக்காவது பொருள் ஆதாயம், மேலும் நீங்க சொன்னாப்போல "தூக்கம் வராமல் தவிக்கும் முதலாளியம்மா' எல்லாம் கிடைக்கும்,ஆனால் மெய்நிகர் உலகில் சொம்பு தூக்கி சாதிக்க நினைப்பது என்னவென்று பார்த்தால் கொஞ்சம் "ஹிட்ஸ்" சில பல லைக்ஸ், கொஞ்சம் தமிழ்மண ஓட்டுக்கள்,இதுக்காக எல்லாம் சொம்பு தூக்க தயாராக இருப்பவர்களை நினைச்சால் கொஞ்சம் பயமாக கூட இருக்கு, மெய்நிகர் உலகிலே இப்படி இருக்காங்களே ,மெயுலகில் இன்னும் என்னவெல்லாம் கேவலமாக போய் "காரியம் சாதிப்பாங்களோ" ?

சொம்புதூக்கிகள் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள், இல்லை எனில் எப்படி வாழ்ந்தால் என்ன ,சொகுசா வாழ்ந்தால் சரினு நினைப்பே சரியான வாழ்க்கை அறம் என்ற கருத்து மேலோங்கும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

சொம்பு தூக்கியை விட செமையான ஒரு சொல்லாடல் இருக்கு, "கொட்டை தாங்கி" :-))

இதுக்கும் மேல விளக்கம் வேண்டுமா, தேவைனா கொடுக்கவும் தயார்!

ஜோதிஜி said...

இதன் அர்த்தம் எங்களுக்கும் தெரியும். எங்கவூர்ல இப்படித்தான் சொல்வாங்க. அதென்ன தேவைன்னா? கொட்டிறவேண்டியது தானே? காசா? பணமா?

ஜோதிஜி said...

ஆனால் நீங்கள் இந்த தலைப்பில் எழுதியது கொஞ்சம் ஆச்சர்யமே!

எனி உள் குத்துஸ்?

ஜோதிஜி said...

பாதிப்பதை விட பார்ப்பதை எழுதும் போது படபடன்னு வருது அஜீஸ்

Ranjani Narayanan said...

எப்பவுமே சீரியஸ் விஷயங்களை எழுதுபவர் இப்படி ஒரு பதிவு எழுதியது வியப்புதான்.
பலவிடங்களில் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவ்வப்போது இப்படியும் எழுதுவது உங்களுக்கும்,உங்கள் எழுத்தை நேசிப்போருக்கும் ஓர் மாறுதலாக இருக்கும்.

ஜோதிஜி said...

ஆகா அப்படியா சேதி? தேறிட்டேன் போல.

கோவி.கண்ணன் said...

சொம்பு தூக்குதல் - ஒண்ணு காட்டுக்குள்ள போய் கழுவி வர தனக்கு தானே தூக்குவது, இரண்டாவது நாட்டாமை வெற்றிலைப் போட்டு 'பொளிச் பொளிச்' துப்ப அடிமைத் தனத்தில் தூக்கி இருக்கிற சொம்பை நீட்டுவது என்ற இரண்டு சொம்புத் தூக்கும் நிகழ்வு குறித்து தான் தெரியும், பொதுப்படையான சொம்பு தூக்குதல் இரண்டாவதாக எச்சிலுக்கு தூக்குவது குறித்து தான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
:)


என்னுடைய வலைப்பதிவிலும் கீழ்கண்ட இணைப்பு இருக்கு, எப்படி கழட்டி விடறதுன்னு தெரியவில்லை
:(

//Links to this post
superlinks: தோழர் சீனிவாசனுக்கு ...//

கோவி.கண்ணன் said...

//சொம்பு தூக்கியை விட செமையான ஒரு சொல்லாடல் இருக்கு, "கொட்டை தாங்கி" :-))//

கொஞ்சம் டீசண்டா ஜட்டி அல்லது கோவணம் என்று சொல்லலாமே, அதுவ்ம் அதே வேலையைத் தானே செய்கிறது

வவ்வால் said...

கோவி,

//என்னுடைய வலைப்பதிவிலும் கீழ்கண்ட இணைப்பு இருக்கு, எப்படி கழட்டி விடறதுன்னு தெரியவில்லை
:(

//Links to this post
superlinks: தோழர் சீனிவாசனுக்கு ...//
//

பிலாக்கர்ல செட்டிங்க்ஸ் போய், போஸ்ட்& கமெண்ட்ஸ் கிளிக் செய்தால், ஷோ பேக் லின்க்ஸ்னு ஒரு ஆப்ஷன் காட்டும் ,அதில் "ஹைட்" என செலக்ட் செய்துவிட்டால் ,இப்படி லிங்க் போட்டவர்களை காட்டாது.

# ஜோதிஜியே விரிவா விளக்கம் சொன்னால் என்னனு கேட்கிறார், நீங்க என்னனா "டீசண்டா" ஜட்டி,கோவணம்னு சொல்லிக்கிட்டு,ஆனால் அதோட ஆக்சுவல் மீனிங் வேற,அக்காலத்தில் ஹைட்ரோசில் வந்த தனவந்தர்களுக்கு "அதுக்கு" கூட ஒத்தாசைக்கு ஆளு தேவை :-))

வவ்வால் said...

ஜோதிஜி,

சொன்னப்பிறகு சொல்லுங்க, கொட்டலாம் தான் ,அப்புறம் அதுல உனக்கு என்ன நிபுணத்துவம் இருக்குனு நந்தவனம் கேட்பாரு :-))

எனவே நிபுணர் நந்தவனமே சொல்லுவார் ,நாம கேட்டுப்போம் :-))

# உங்களுக்கு எல்லாம் உள் குத்து வேற வைக்கணுமா, நேராவே குத்து வைப்பேன் :-))

நீங்க தான் சொம்பு தூக்கிகளை ரசிப்பவர் ஆச்சேனு சொன்னேன், அதே போல பதிவிலும் சொம்பு தூக்கிகளை ரசிச்சுதானே சொல்லி இருக்கீங்க!

Unknown said...

அற்புதமான பதிவு

ஜோதிஜி said...

சொம்பு தூக்கிகளை நாம் ரசிக்க கற்றுக் கொண்டால் நம்மால் சொம்பு தூக்க விருப்பம் இல்லாததே காரணம் என்பதையும் நாம் எப்போதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதை பெருமகனார் அவர்களுக்கு கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

காரணம் குத்து வாங்கவே பிறப்பெடுத்தவர்கள் அனைவரும் முன் ஜென்மத்தில் செய்த சொம்பு தூக்குதலின் பாவத்தை போக்கிக் கொள்ளவே இந்த ஜென்மத்தில் அவதராம் எடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும் பெருமகனார் தயை கூர்ந்து கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி என் இனிய நண்பர் நந்நதவனம் சார்பாக இங்கே கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

ஜோதிஜி said...

நன்றி பெருமகனார் அவர்களே. நீங்க காட்டிய பாதையில் சென்று தோழர் சீனிவாசன் அவர்களை நீக்கி விட்டேன்.

ஜோதிஜி said...

அக்காலத்தில் ஹைட்ரோசில் வந்த தனவந்தர்களுக்கு "அதுக்கு" கூட ஒத்தாசைக்கு ஆளு தேவை :-))

ஆனா என்னோட நண்பன் எவர் உதவி இல்லாமலேயே (தமிழிலில் ஓதக்கொட்டை) 40 வயசு ஆகியும் கடுமையான உழைப்பாளியாக இன்னமும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றான். பதிவாக எழுதினால் 18 ப்ளஸ் ஆகிவிடும் என்பதால் ஒவ்வொரு முறையும் அலைபேசியில் அழைத்து அவனை கலாய்த்துக் கொண்டேயிருப்பதுண்டு.

அவனும் திருந்தக்காணோம்.

ஜோதிஜி said...

வாங்க செந்தில்.

vishwa said...

சொம்பு தூக்குவது பிழைப்புக்கு அத்தியாவசியம் என்பதாக பல இடங்களில் மறை பொருளாகவும் நேரடியாகவும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.பொருளும் இடமும் வேறுபட்டாலும் சொம்பு தூக்குவதற்கும் லஞ்சம் வாங்குவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இது ஒரு தவறான நிலைப்பாடு. மிகக் கேவலமாகக் கருதப்படவேண்டிய கண்டிக்கப் படவேண்டிய ஒன்று. இதைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதற்காக வெட்கப்பட வேண்டும். நேற்று
முழுதும் தங்களுடைய பதிவின் தாக்கம் எனக்குள் இருந்தது. வழக்கம் போல ஊரை நம்மால் திருத்தமுடியாது என்ற இயலாமையை உணர்ந்து சகித்துகொண்டேன். நான் சொம்பு தூக்கிகளை எப்பபொழுதும் அங்கீகரிப்பதில்லை.

வவ்வால் said...

Vishwa.

Agree with u,but jotiji wont agree:-))

வவ்வால் said...

Vishwa.

Agree with u,but jotiji wont agree:-))

ஜோதிஜி said...

பாருங்க ஒரு நாள் முழுவதும் உங்களுக்குதாக்கத்தை உருவாக்கிய என் எழுத்துக்களைப் பற்றி வவ்வால் பாராட்டுவதே இல்லை என்பதை இங்கே தாழ்மையுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

விஸ்வா நம் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் நாம் எழுதும் போது சொல்லும் பொதுக் கருத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை எப்போதும்நினைவில் வைத்துருங்க.

ஜோதிஜி said...

அலைபேசி விமர்சனமா? உங்க அக்கறைக்கு அதகளத்திற்கு வரவர அளவே இல்லாமல் போய்க் கொண்டு இருக்கின்றேன். இன்னோரு நந்தவனம் வராமலா போகப் போறார்.

ஜோதிஜி said...

இருக்கின்றேன்

இருக்குது என்று மாற்றி வாசிக்கவும்.

vishwa said...

நன்றி Vavaal'

தங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான் பொறுப்புள்ள சமுதாயம் உருவாக
சிறந்த படைப்புகளை வெளியிட வேண்டும். நற்சிந்தனையாளர்களுக்கும்
வெகுசனங்களுக்கும் உள்ள இடைவெளி குறையவேண்டும். தனிக்கருத்துக்கள்
ஒன்றுசேரும் பொழுது பொதுக்கருத்தாகிறது.

வவ்வால் said...

Jothig,

mobile than,

nandavanam is still active n going strong ,y r U trying to give him forced VRS?

# writing in blogs is an act of expressing
one`s own &independant views.but as usual u misinterpredat it :-))

கோவி.கண்ணன் said...

//40 வயசு ஆகியும் கடுமையான உழைப்பாளியாக இன்னமும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றான். பதிவாக எழுதினால் 18 ப்ளஸ் ஆகிவிடும் என்பதால் ஒவ்வொரு முறையும் அலைபேசியில் அழைத்து அவனை கலாய்த்துக் கொண்டேயிருப்பதுண்டு.

அவனும் திருந்தக்காணோம்.//

ஆப்ரேசன் செய்து அறுத்து போட வேண்டிய ஒன்றை...எதுக்கு பொக்கிசம் மாதிரி பாதுகாத்து வைத்திருக்கிறார்.....கொடுமைங்க, தேவையற்ற மன உளைச்சல், அவரிடம் சொல்லுங்க, அது மைனர் ஆப்ரேசன் தான், உள்ளே தண்ணீர் தான் இருக்கும், நாள் கணக்கில் விட்டால் வீங்கிக் கொண்டு பெரிதாகிக் கொண்டே இருக்கும். ஒரு வேளை ஆண்மை பறிபோகிவிடும் என்று பயப்படுகிறாரோ ? முற்றிலும் அறுத்து போட மாட்டார்கள், உள்ளே உள்ள தண்ணீரை வெளியேற்றினால் பழையபடி மாறிவிடும்.

ஜோதிஜி said...

கண்ணன் உண்மையிலேயே சொல்லப்போனால் அவன் மகாமகா கஞ்சன். தினந்தோறும் அவனுக்கு 5000க்கும் அதிகமான வருமானம் வந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் தன் உடல் நலனுக்கு செலவளிக்க மறுப்பவனுக்கு ஏன் அறிவுரை சொல்லி நம் சக்தியை வீணாக்க வேண்டும்?

வவ்வால் said...

விஷ்வா,

எழுத்தாளர்னு சொல்லி இருப்பதெல்லாம் ஜோதிஜிக்கு தானே,என்னத்தான் சொல்லுறிங்களோனு ஷாக்காகிட்டேன் :-))

ஒவ்வொரு தனி மனிதனும் இணையத்தில் வெளியிடுவது தனிக்கருத்துகளே,அதற்கு கிட்டும் ஆதரவே பொதுக்கருத்தாக்கும்,ஆனால் ஜோதிஜி சொல்லும் போதே தனிக்கருத்து,பொதுக்கருத்துனு வகை எல்லாம் பிரிக்கிறார்,ஏதேனும் இயக்கம், பத்திரிக்கை எனில் சொல்லும் போதே பொதுக்கருத்து அடிப்படையில் இருக்கும் எனலாம்.

srinivasan said...

உழைக்க பயந்த முதுகெலும்பு இல்லாத கோழைகள் தான் சொம்பு தூக்கிகள் ,தன்மானத்தை விட்டு கொடுக்காது இவர்களோடு போராடுவதே பாதி இலட்சியம் கரைந்து விடும்.சொம்பு தூக்கிகள் நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள் ! என்பது பின்னுடத்தை பார்த்தாலே தெரிந்து விடும்.