இன்று சந்தையில் நான் பார்த்த சில விசயங்கள், பேசிய பெண்கள் நேற்று மளிகை கடை சென்று வெந்து போய் வந்த நிலை மூலம் மனதில் தோன்றும் கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
Thursday, September 28, 2023
Sunday, September 24, 2023
அதிகாரம் என்பதனை திருட
திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்கள் மறைந்த போது தமிழகத்தில் இருந்த திமுக வின் அமைப்பின் எண்ணிக்கை 18,000 (2024 ஜனவரி மாதம் வரப்போகும் அரசியல் வரலாறு புத்தகத்தில் இது குறித்து ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளேன்). மாவட்டம் தோறும் திமுக வின் மன்றம், பாசறை, படிப்பகம் போன்ற பல பெயர்களில் இயங்கியது. நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இருந்தது என்று நான் இங்கே எழுதவில்லை.
Monday, September 18, 2023
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
வீட்டுக்கருகே உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினார்கள். பூஜையெல்லாம் முடிந்து வெளியே வந்த சமயத்தில் இரண்டு பக்கம் நின்று கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள்.
ஒரு சிறிய பாக்கு மட்டை தட்டில் பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை கொஞ்சம் என்று கலவையாக இருந்தது. மற்றொரு தட்டில் கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், லட்டு, மோதகம் வைத்துக் கொடுத்தார்கள்.
Tuesday, September 05, 2023
மது இங்கே அருந்தாதீர்கள்
ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் பார்த்து, படித்து எப்போதும் பதட்டப்படாதீர்கள். உடனே நம்பாதீர்கள். ஏழெட்டு பத்திரிக்கைகள், ஊடகங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். முடியாத பட்சத்தில் புறக்கணித்து விட்டு மறந்து விடுங்கள். இன்றைய சூழலில் எந்த சம்பவங்களிலும் பத்து சதவிகிதம் கூட உண்மை இருப்பதில்லை.
Sunday, September 03, 2023
வெற்றி பெற்ற நாள்
இங்குள்ள ஒரு அரசு மகளிர் கல்லூரியில் முழுமையாக வேலை முடித்துத் திறக்காமலிருந்த வகுப்பறையைத் திறக்க வைக்க, கல்லூரி முழுமையும் ஒரே ஷிப்ட் ல் நடக்க என்று கடந்த நான்கு மாதம் அரசு சக்கரங்களின் உள்ளே சிதைந்து போராடி வெற்றி பெற்ற நாள் (01.09.2023) இன்று.
Sunday, August 27, 2023
நடிகர் விஜயகாந்த் - அரசியல் தலைவர் விஜயகாந்த் பிறந்த வாழ்த்துகள்.
தேமுதிக நிறுவனர் நடிகர் திரு. விஜயகாந்த் அவர்களின் (ஆகஸ்ட் 25 1952) 72 வயது தொடங்குகின்றது. சமகாலத்தில் பலவிதங்களில் நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய மனிதர்களில் ஒருவர்.
Thursday, August 24, 2023
இந்த வெற்றிக்காக காத்திருந்தோம்.
சந்திரயான்-3 ($75M)க்கான இந்தியாவின் பட்ஜெட் Interstellar ($165M) திரைப்படத்தை விடக் குறைவு


Friday, August 18, 2023
இந்த உலகம் சம ஒழுங்கைப் பேணுகின்றது என்பதனை நம்புங்கள்.
நீங்கள் கட்சி ரீதியான அரசியல், அதனை முன்னெடுக்கக்கூடியவர்களை விரும்பலாம். எழுதலாம். சிலாகித்துப் பேசலாம். மாற்றங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புண்டு என்று நினைக்கலாம்.
Thursday, August 17, 2023
அண்ணாமலை பாதயாத்திரை - அலறல் சத்தம் கேட்கிறதா?
அண்ணாமலை கடந்த 28ந் தேதி புண்ணிய பூமி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கினார். ஒரு வாரம் இன்னமும் முடியவில்லை. இராமநாதபுரம் மாவட்டம் முடிந்து தற்போது கன்யாகுமரி மாவட்டத்திற்குள் வந்து இருக்கின்றார். ஆனால் எதிர்க்கட்சிகள் அலறல் சத்தம் அதிகமாகவே கேட்க ஆரம்பித்துள்ளது.
Tuesday, August 08, 2023
பெரியாரின் பேரன்கள்
சாதியை ஒழிக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. வெகுஜனம் சாதி வேண்டாம் என்று விலகினாலும் அரசியல்வாதிகள் அவ்வளவு எளிதாக விட்டு விடுவார்களா? இது மாரி செல்வராஜ்க்கு தெரியுமா? தெரியாதா?
Sunday, August 06, 2023
விடாது துரத்தும் ரெய்ட்டுக்கு அண்ணாமலை தான் காரணமா?
2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்தாலும் அதிமுக கொங்கு மண்டலத்தில் உள்ள பத்து தொகுதியையும் அப்படியே வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டது. இது திமுகவிற்குத் தீராத ரணமாக இருக்க அதிமுக வில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு முக்கியமான இரண்டு துறைகளாகக் கருதப்படும் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை வழங்கி களமிறக்கப்பட்டார்.
Saturday, August 05, 2023
கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டிய நிறுவனங்கள் திமுக ஆட்சியில் என்ன செய்கின்றது?
திமுக ஆட்சிக்கு வந்து முப்பது
மாதங்கள் முடியப் போகின்றது. நடந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கே அரசாங்கம்
ஒன்று இருக்கின்றதா? என்று பாமர மக்கள் கூட கேட்கும் சூழலில்தான் உள்ளது.
பத்து வருடமாக ஆட்சியில்
இல்லாமல் இருந்த காரணத்தாலும் கருணாநிதி இல்லாத திமுக என்பதாலும் துள்ளல்களுக்கு குறைவில்லை. ஆனால் துள்ளல் மட்டுமே நடப்பதால் தான் எல்லாப் பிரச்சனைகளும்
உருவாகியிருப்பதை யாராவது ஸ்டாலின் காதுக்கு கொண்டு போவார்களா?
முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர்
பழனிவேல் ராஜன் வாக்குமூலம் கொடுக்காத குறையாக தெரிவித்த முப்பது லட்சம் கோடி என்பது
வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். எவரும் அதிர்ச்சியடையவில்லை. காரணம்
திமுக என்றால் அதன் மனம் திடம் குணம் அனைத்தும் தெரிந்த நிலையில் மக்கள் இப்போது படிப்படியாக
சுயநினைவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
கிராமத்து மக்களுக்குக் கூட
ஆட்சி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பது நன்றாக புரியும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி
உள்ளது என்றால் அது தான் நிஜம்.
பொதுஜனத்தை கவர முடியவில்லை.
பொது மக்களை எந்த வகையிலும்
திருப்தி படுத்தவும் முடியவில்லை.
ஊழல் தலைவிரித்தாடுகிறது.
கட்டுப்படுத்த வேண்டிய முதல்வரோ காட்சி ஊடக கதாநாயகன் போலவே செயல்படுவது தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
ஏழை மக்கள் குடியிருக்க வேண்டிய அடுக்கு மாடி குடியிருப்பை மணல் கொண்டு கட்டிய கொடுமையை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? அப்படி கட்டிக் கொடுத்த நிறுவனம் இன்று வரையிலும் ராஜபாட்டையாக திமக வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்தடுத்த அரசு பணி செய்து கொண்டு இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடியுமா?
"தமிழகத்தின் தொழில் வளர்ச்சியினைப் பன்மடங்கு பெருக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடத் தமிழக அரசு முதல்வர் தலைமையில் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை - நந்தம்பாக்கத்தில் நிதி தொழில் நுட்ப நகரம் ஒன்று அமைத்திட முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும்"
தமிழக அரசு சார்பாக கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் எந்தக் குறையுமில்லை. நிதி நுட்ப நகரத்தின் திறப்பு விழாவினையும் நடத்தியாகிவிட்டது. இந்த திட்டத்தை எந்த நிறுவனத்திடம் திமுக அரசு வழங்கியது? என்பதில் தான் ட்விஸ்டே உள்ளது.
பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். அதிமுக ஆட்சியில் இந்த நிறுவனம் தரமற்ற வேலைகளைச் செய்கின்றது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ஸ்டாலின். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை குழு அமைத்து ஆராயப்படும் என்று அறிக்கையில் தெரிவித்து இருந்த ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மீண்டும் மீண்டும் திமுக ஒப்பந்தங்களை வழங்க காரணம் என்ன?
இதைத்தான் தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் நெற்றி பொட்டில் அடித்தது போலக் கேள்வி எழுப்பினார்.
"2009-ம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம், தற்போது, பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களை கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை“.
பிஎஸ்டி நிறுவனத்தின் தகுதி என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு தரமற்றதாக கட்டப்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது மலைமுழுங்கி மகாதேவன்கள் போல ஏழைகள் வாழ வேண்டிய குடியிருப்புகளை சிமெண்ட் க்குப் பதிலாக மணல் வைத்தே கட்டி முடித்தனர் பிஎஸ்டி நிறுவனத்தினர். உள்ளே கட்டுப்பட்டு இருந்த சுவரை சுரண்டினாலே மொத்தமும் உதிர்ந்து வருவதைப் பார்த்து மக்கள் அலறத் தொடங்கினர். இது கட்டிடம். ஆனால் கட்டிடமல்ல என்பது போலவே இருந்தது. காரணம் கட்டிடம் கட்ட வேண்டிய நிதியை ஆளாளுக்கு பங்கு பிரித்துக் கொண்டதால் கடைசியில் மணலில் பிஎஸ்டி நிறுவனத்தினர் கட்டி முடித்த கொடுமையும் நிகழ்ந்தது.
இதைத்தான் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை கையில் எடுத்து உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்து விடுவோம் என்று சவால்விட்டார் ஸ்டாலின்.
ஆனால் நடந்தது என்ன?
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்துக்கு வழங்கப்படாது என, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, இனி எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று திமுக அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால் சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் திறக்கப்பட்டுள்ள நிதிநுட்ப நகரத்துக்கான கட்டுமானப் பணியை, இதே பிஎஸ்டி நிறுவனம் தான் செய்து முடித்துள்ளது.
இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்துக்கு, மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு.
Friday, August 04, 2023
தடதடக்கும் பாதயாத்திரை படபடக்கும் அறிவாலயம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கிய பாதயாத்திரை ஒரு வாரத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம் என மூன்று மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை வெற்றிகரமாகக் கடந்து ஆகஸ்ட் 4 மதுரை மாவட்டத்திற்குள் நுழையப் போகின்றது.