இன்று சந்தையில் நான் பார்த்த சில விசயங்கள், பேசிய பெண்கள் நேற்று மளிகை கடை சென்று வெந்து போய் வந்த நிலை மூலம் மனதில் தோன்றும் கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
Showing posts with label சமூகம்.. Show all posts
Showing posts with label சமூகம்.. Show all posts
Sunday, October 08, 2023
Thursday, January 21, 2021
அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.
அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.
இந்த மூன்றுக்கும் வித்தியாசம் தெரிந்தால் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்காமல் தனியார்ப் பள்ளியில் கௌரவத்திற்காகப் படிக்க வைத்துக் கொண்டு, தமிழகக் கல்வித் தரம் பாழ்பட்டு நிற்கின்றது என்று பூபாளம் இசைக்கும் நண்பர்களுக்குப் புரியும்.
Monday, September 02, 2019
உங்கள் வீட்டில் (மகன்/மகள்) வாசிக்கச் சொல்லவும்.
அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம். வடிவேலு மொக்கச்சாமியாக அரிதாரம் ஏற்றதன் வழியாக இந்தச் சொல் தமிழர்களால் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று யூகிக்கிறேன்.
மொக்கை ஃபிகர், மொக்கை படம், மொக்கை ஜோக், மொக்கை சாப்பாடு என்று கல்லூரி மாணவர்கள் அன்றாடம் பலதடவை இந்தச் சொல்லை உபயோகிக்கிறார்கள். அவர்களின் உலகில் வாத்யார் மொக்கை, வகுப்புகள் மொக்கை, நூலகம் மொக்கை, புத்தகங்கள் மொக்கை, பேச்சாளன் மொக்கை, அரசியல் மொக்கை. காணும் யாவையும் மொக்கையென விளிக்கும் உங்களின் கூர்மைதான் என்ன என்பதை அறியும் பொருட்டே இந்த அரங்கில் பல வினாக்களை எழுப்பினேன்.
திராவிடம், இட ஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்ஸோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக்கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் போஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், பொருளாதார நெருக்கடி என இந்த அரங்கில் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை. தவறாக சொல்லும் பதிலைக் கூட கொண்டு கூட்டி ஒரு கோர்வையாக சொல்லத் தெரியவில்லை. தமிழ்சினிமாவைப் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய எந்தவொரு சமகாலவிஷயத்திலும் உங்களுக்குப் பிடிமானம் ஏதுமில்லை.
ஐநூறு ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வா என வங்கிக்கு அனுப்பி வைத்தால், இங்குள்ள பலர் திரும்ப வராமலேயே போய்விட வாய்ப்புள்ளது. ஐந்து செல்லான்களை எழுதி கிழிக்காமல் நம்மால் பஸ் பாஸ் எடுக்க முடியவில்லை. ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம். எங்கும் எதிலும் திகைப்பும் தெளிவின்மையும்.
உங்களுடைய சிகையலங்காரம் டிரெண்டியாக இருக்கிறது. உடைகள் டிரெண்டியாக இருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், ஈருளிகள் டிரெண்டியாக இருக்கின்றன. ஆனால், அறிவு விஷயத்தில் நீங்கள் டிரெண்டியாக இல்லை. AI, IoT, Block Chain, Big Data, Disruptive Management, Bit Coin, Augmented Reality and Virtual Reality என அன்றாடம் மாறிவரும் எந்தத்துறைசார்ந்த தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றியும் உங்களுக்குப் பேச ஒருவரி கைவசம் இல்லை. படுமொக்கை, மொக்கை, சுமார், சூப்பர் என நான்கு தரப்பிரிவுகளாக உங்களைப் பிரித்தால் படுமொக்கை எனும் பிரிவின் கீழ்தான் வருவீர்களென நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய நேரடி பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு. ஒரு மொக்கைப் பீஸாகவே வாழ்ந்து முடிந்து போகாமல் இருப்பதற்கு. ‘ஒரு எழவும் தெரியாது… வந்துட்டான்யா முடியை சிலுப்பிக்கிட்டு…’ என அவமானப்பட்டு கூசி நிற்காமல் இருப்பதற்கு. கலை சுரணை, பண்பாட்டுச் சுரணை, அரசியல் சுரணை, சூழியல் சுரணை என எதுவுமே இல்லாமல் வெறும் வாட்ஸாப் பைத்தியங்களாக உலவாமால் இருப்பதற்கு, ஆயுளையே அவிர்பாகமாக கேட்கும் கார்ப்பரேட் நெருக்கடிகளுக்குள் எவனோ ஒருவன் சிபாரிசில் உள்நுழைந்து எங்கள் தாலியறுக்காமல் இருப்பதற்கு.
நண்பர்களே, தமிழ் மேடைகளில் தவறாமல் நிகழும் கீழ்மைகளுள் ஒன்று பேச்சாளர்கள் பார்வையாளர்களை, பேச வந்த ஊரை, கல்லூரியை வானளாவ புகழ்வது. அமர்ந்திருப்போர் விழிகளில் ஒளிர்விடும் பாரதம் தெரிவதாக அளந்து விடுவது. அற்ப கைதட்டுதலுக்காக அல்லது அடுத்தமுறை கூப்பிட வேண்டுமென்பதற்காக மிகையான புகழ்மொழிகளை முன்வைப்பது. இவ்வகை தொழில்முறை பேச்சாளர்கள் பணத்தையும் பெற்றுக்கொண்டு அறத்தையும் மீறுகிறார்கள். உங்கள் ஆன்மாவை நோக்கி எவ்வித தயக்கமும் இன்றி நான் கேட்கும் தர்மசங்கடம் மூட்டும் வினாக்களால் நீங்கள் சீண்டப்பட்டால் நான் மகிழ்வேன். அரங்கை விட்டு வெளியேறும்போது தாக்கப்பட்டால் புளகாங்கிதம் அடைவேன்.
வாசிக்கும் இளைஞன் வழிகாட்டும் தலைவன் என்பேன் நான். நீங்கள் இண்டலெக்சுவலி ஃபிட்டாக இருந்தால் வகுப்பிலும் வீட்டிலும் நாட்டிலும் மதிப்பிற்குரிய நபராவீர்கள். ஒரு சமகாலப்பிரச்சனையைப் பற்றி உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என வகுப்பில் ஆசிரியர் உங்களைப் பேச பணித்தால் அது எவ்வளவு பெரிய கவுரவம்? முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் தந்தை உங்களைக் கலந்தாலோசித்தால் எவ்வளவு பெரிய ஆனந்தம்? உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே விஷய ஞானமுள்ளவர் என அறியப்பட்டால் எவ்வளவு பெரிய மரியாதை? உங்கள் அண்ணன் தங்கைக்கு மச்சானுக்கு முறைப்பையனுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவெடுக்க சிந்தனைத் தெளிவுடன் வழிகாட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய முக்கியத்துவம்?
கையில் புத்தகத்தையோ நாளிதழையோ வைத்திருக்கும் ஒருவனை காவல்துறை ‘யோவ்..’ என விளிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எந்த சபையிலும் தன் தலையை தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை. இரண்டாயிரம் பேர் கூடியுள்ள சபைமுன் நின்று ‘கூமுட்டைகளே’ என்று நான் உங்களைக் கூவி அழைக்கும் அதிகாரத்தையும் துணிச்சலையும் எனக்கு எது தந்திருக்கிறது என்று நீங்கள் யோசித்துப்பாருங்கள்.
ஒத்துக்கொள்கிறேன். உங்கள் கையில் வைத்திருக்கும் டிவைஸ் அளவிற்கு நாளிதழ்கள் சுவாரஸ்யமானவை அல்ல. உங்கள் டைம்லைனின் வண்ணமிகு இனிய ஆச்சரியங்கள், உடனுக்குடன் வந்து குவியும் உங்கள் அபிமானஸ்தர்களின் வாழ்க்கைத் தருணங்கள், வேடிக்கை மீம்ஸ்கள், ஆச்சர்யமூட்டும் வீடியோக்கள், சிரிப்பாணி மூட்டும் டிக்டாக்குகள் இவை எதற்கும் முன் நாளிதழ்கள் போட்டியிட்டு குதுகலப்படுத்த முடியவே முடியாது. தொழில்நுட்பத்தின் பகாசுர கரங்கள் உலகின் உச்ச இன்பங்களை உங்கள் கண் முன்னே கொட்டி ஆட்டுதி அமுதே என கொஞ்சுகிறது. தொழில்நுட்பத்துடன் போட்டியிட்டு வெல்லும் ஆற்றல் இந்த உலகில் எதற்கும் இல்லை. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் தவிர்த்து வாசிப்புக்குத் திரும்புங்கள் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது.
டைம்லைன் மூளைக்கு ஏற்றும் டோபோமைனுக்கு அடிமையாகதவர் என்று எவரும் இன்று புவியில் இருக்க முடியாது. ஆனால், நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விழைவது ஒன்றேதான் ‘உப்புமா, கிச்சடியை விட நிச்சயம் பீட்ஸா சுவையானதுதான். ஆனால் மூன்று வேளையும் பீட்ஸாவை மட்டுமே உண்டால் சீக்கிரத்தில் செத்துப் போய்விடுவோம்.
யங்கிஸ்தான் செல்லங்களாக நீங்கள் இருபத்துநாலு மணிநேரமும் இன்ஸ்டாவில் திளைப்பதும் ஜாயிண்ட் அடித்துவிட்டு சத்தமில்லாமல் இளித்துக்கொண்டிருப்பதும் ஒன்றேதான். வழி வேறாயினும் விளைவுகள் ஒன்றேதான். அச்சமூட்டுகிற வகையில் அறியாமை இருளுக்குள் இருப்பதற்குப் பதிலாக நாளொன்றுக்கு இருபது நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கலாம்.
இன்னும் தங்கள் ஆன்மாவை விற்றுவிடாத தரமான நாளிதழ்கள் என்ன செய்கின்றன? அவை நிர்வாக அமைப்புகளை, அதிகாரமையங்களை, நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, வங்கிகளை, கல்விக்கூடங்களை, ஆன்மிக அமைப்புகளை, சி.ஈ.ஓக்களை, சி.ஓ.ஓக்களை, இயற்கை வளங்களை இன்னும் ஏராளமானவற்றை கண்ணுக்குத் தெரியாத கண்களாக கண்காணிக்கிறது. அதன் வழியாக மக்களைப் பாதுகாக்கிறது. வெளியே தெரிந்தால் பத்திரிகைகள் குடைந்தெடுத்து விடுவார்கள். அவமானம், மானம் போய்விடும், தண்டனை பெறுவோம் என்கிற அச்ச உணர்வு இன்றும் எஞ்சியிருக்கிறது. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? யார் முடிவெடுக்கிறார்கள்? யார் பலனடைகிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்கிறது. எச்சரிக்கிறது. ஜனநாயகம், நீதி, பொது ஒழுங்கு, நிர்வாகம் போன்றவற்றை மட்டுறுத்தும் விசைகளுள் ஒன்றாக இருக்கிறது.
லட்சோப லட்சம் மாணவர்கள் பத்திரிகைகளைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்பேன். தன்னைச் சுற்றி நிகழும் எந்தவொன்றைப் பற்றியும் ஒரு எழவும் தெரியாத கூமுட்டைகளாக இந்தச் சமூகத்தை மேலும் பாதுகாப்பற்ற வாழ லாயக்கற்ற ஒன்றாக மாற்றுகிறார்கள். தன்னுடைய உரிமைகளை, தனக்கான சலுகைகளை, வாய்ப்புகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாகவும், தன் மீது நிகழும் சுரண்டலைப் பற்றிய தெளிவில்லாதவர்களுமாக இருக்கிறார்கள். தன்னை ஒரு ஆளுமையாக முன் வைக்காமல் ஆயிரக்கணக்கான ஆடுகளடங்கிய மந்தையில் நாயின் ஊளைக்கும் நரியின் ஊளைக்கும் வித்தியாசம் தெரியாமல் அஞ்சி நடுங்குபவர்களாக உள்ளனர்.
உலகிலேயே மிக அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நாடு இந்தியா. சராசரி இந்தியர்கள் ஒரு வாரத்திற்கு பத்து மணி, 42 நிமிடங்கள் வாசிக்கிறார்கள். எந்த வளர்ந்த நாடும் இந்தப் பட்டியலில் நம்மை மிஞ்சி இல்லை என்பது பெருமிதம்தான். ஆனால், பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டி எதையேனும் வாசிக்கிறார்களா என நிகழ்த்திய ஆய்வில் வெறும் 30% மாணவர்கள்தான் என்று தெரியவந்தது. கல்லூரி அளவில் என்று சோதித்துப்பார்த்தால் 1% கூட இல்லை. இரண்டாயிரம் பேர் அமர்ந்திருக்கும் அரங்கில் கடந்த ஆறு மாதத்தில் ஏதேனும் ஒரு நூலைப்படித்தவர்கள் என இரண்டே பேர்கள்தான். ஹாரிபாட்டர். ஜேகே ரெளலிங்கின் புகழ் ஓங்குவதாகுக.
சுகாதாரத்துறை அமைச்சர் அரசுத்திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்டால் பிரின்ஸிபால் முதல் செவிலியர் மாணவிகள் வரை ஒருவருக்கும் ஒன்றாகிலும் தெரியவில்லை. நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கித்தருகிறேன் என இணையத்தில் பொய் சொல்பவனிடம் ஆறுநூறு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வைக்கிறார்கள்.
ஓங்கிய வாளுடன் ஓடும் பேருந்தில் தீப்பொறி பறக்க விட்டு காவல்நிலையத்தில் வழுக்கி விழுகிறார்கள். ஓரொரு இந்தியனும் பூஜிக்கவேண்டிய பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையை நடுசாலையில் காலால் நசுக்கி உடைக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனை ஓவியங்களில் சிந்துஜா சீக்கிரம் வா என கிறுக்கி வைக்கிறார்கள். லட்சம் ஆண்டுகள் பழமை கொண்ட பிம்பேத்கா குகை ஓவியங்களை பைக் சாவியால் கீறிப்பார்க்கிறார்கள். ஆளரவமற்ற சமணப்பள்ளிகளில் சபையில் பேச முடியாதவற்றை செய்கிறார்கள். மலைமுகடுகளில் ஏறி நின்று மனம் பொங்க சூரியோதயம் பார்க்கும் ஆன்மிக தருணத்தில் கூச்சலிடுகிறார்கள். அருவிக்கரைகளை பீர் பாட்டில்களால் அலங்கரிக்கிறார்கள். எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாம். ஓங்கரிக்க வைக்கும் ஈனத்தனங்கள்.
கொஞ்சமேனும் வாசிக்கிற வழக்கமுள்ள ஒரெயொருவன் இந்த அவையில் இருந்தால் கூட எழுந்து நின்று என்னோடு சமர் செய்வான். அடுத்த முறையேனும் அப்படி ஒருவனை சந்திக்க விழைகிறேன். நன்றி வணக்கம்.
நன்றி. செல்வேந்திரன்
Sunday, December 09, 2012
காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு
எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடனும்.
எப்பொழுது வேண்டுமானலும் சாப்பிடனும்.
எல்லாவ்ற்றையும் சாப்பிடனும்.
ஆனால் ஆரோக்கியத்தில் குறையேதும் வந்து விடக்கூடாது.
இதுதானே நாம் அனைவருக்கும் இருக்கும் ஆசை?.
ஆனால் எதார்த்தம் என்பது எல்லா இடங்களிலும் தலைகீழாகத்தானே இருந்து தொலைக்கின்றது.
என் தாத்தா இறந்த போது வயது 84. இரண்டு ஈடு இட்லி சாப்பிட்டு முடித்த பிறகு தான் எதிரே இருப்பவர்களிடம் பேசத் தொடங்குவார். அடுத்து வேகம் மட்டுப்படுமே தவிர குறையாது. ஒரு ஈடு என்பது எட்டு என்ற எண்ணிக்கை கொண்டது. சாம்பார் சட்னி போன்ற சமாச்சாரங்கள் என்றால் தூக்கி கடாகி விடுவார். அம்மியில் அரைத்த மிளகாய் துவையல். செக்கில் ஆட்டிய நல்லெண்னெய். கலந்து கொண்டு குழப்பிக் கொண்டு தின்பதைப் பார்ப்பவர்களுக்கு பேதி வந்து விடும். ஆனால் காலையில் அருகே இருந்த ஊரணிக்கரையில் ஏழெட்டு சுற்று வந்து விடுவார். மாலையில் 4 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருவதை பார்த்து இருக்கின்றேன். தூங்கும் போது சொல்லிவிட்டு தான் படுத்தார். காலையில் எழுந்த அவர் உடம்பு இருந்தது. உடம்பில் மூச்சு இல்லை.
அப்பாவுக்கு 60வது வயது முடியும் வரைக்கும் உணவு விசயத்தில் அப்பனுக்கு தப்பாத பிள்ளையாக இருந்தார். அசைவ வெறியர் என்றே அழைகக்லாம். ஆனால் கடைசி காலத்தில் வந்த சர்க்கரை நோயை அவர் பொருட்படுத்தவே இல்லை.
பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளை கவனித்துப் பாருங்கள். சர்க்கரை நோய் வந்துள்ளது என்று தெரிந்ததும் மருத்துவரிடம் செல்லத் தொடங்குவர். தினந்தோறும் மருத்துவர் சொல்லும் மருந்துக்களையும் எடுத்துக கொள்வர். ஆனால் நாளுக்குள் நாள் உடம்பு இளைத்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருப்பார்.
அப்படி என்றால் உண்ட மருத்தின் பலன் தான் என்ன? வைத்திருந்த கட்டுப்பாடுகள் என்ன தந்தது என்றால் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை. இதற்குப் பினனால் உள்ள மருத்துவ தண்டவாளங்களை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார் சென்னையில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவர். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரில் சென்னை, கோவை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகின்றேன்.
எனக்குத் தெரிந்து அரசியல்வாதி வைகோ ஒருவர் தான் சர்க்கரை நோயை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும், உடல்நலத்தையும் எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்த விசயங்களில் சாதிதது காட்டிக் கொண்டிருப்பவர்.
இதைப் போலத்தான் அப்பாவும் மருத்துவர் கொடுத்தனுப்பும் எந்த மருந்துகளையும் உண்ண மாட்டார். அதுவொரு மூலையில் கிடக்கும். காரணம் சாப்பாடு மேல் கைவைத்து விடுவார்கள் என்ற பயம். மாரடைப்பில் தான் மரணம் அடைந்தார். எளிதான முறையில் இயல்பாக பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது தான் இறந்தார். ஆனால் கடைசி ஒரு வருடத்தில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. உணவு தான் அவரை மனிதனாக சுறுசுறுப்பான இளைஞராக கடைசிவரையிலும் கொண்டு செலுத்தியது.
20 வயது வரைக்கும் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவுக்கும் 40 வயது ஆனதும் மாறிப்போவதற்கான ஒரே காரணம் நமது உழைப்பின் அளவும் தன்மையும் மாறிவிடுவதே.
கடநத நான்கு வருடங்களாக நான் ஒரே எடை அளவு. அதே தன்மை. குடும்ப நோய்கள் எதுவும் இதுவரையிலும் அண்டவில்லை. எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. பலசமயம் அவசர வேலையின் பொருட்டு அதிகாலை 4 மணிக்கு வெளியே செல்லும் போது பருத்த உடம்பை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு நடைபயிற்சி என்று பலரும் செல்வதை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு.
என் கட்டுப்பாடு. என் ஆரோக்கியம். என் விருப்பம்.
கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.
ஆனால் நானும் சாப்பாட்டு ராமன் தான்.
கட்டுப்பாடு என்று எத்தனை வைத்துக் கொண்ட போதிலும் சமயம் கிடைத்தால் விளாசி தள்ளிவிட்டு அப்புறம் அய்யோ அம்மாவென்று தடுமாறுவதுண்டு. இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள எண்ணமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் உண்மை. ஆனால் உடம்பில் எதையும் தங்கவிடுவதே இல்லை.
காலையில் நீங்கள் கழிப்பறை சென்று உட்கார்ந்தவுடன் குறுகிய நேரத்தில் வெளியே வந்து விட முடிந்தால் நீங்க லட்சாதிபதி. அங்கே போய் முக்கல் முனங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்குது என்றால் உடல் மன ஆரோக்கியத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம்.
இரவில் படுத்த அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூக்கம் உங்களை தழுவிக் கொள்கின்றதா? நீங்க தான் கோடீஸ்வரன். ஆனால் இங்கே பலருக்கும் கனவில் வருபவர்கள் தான் உதவி புரிகின்றார்கள்..
காரணம் உண்பது உறங்குவது இந்த இரண்டுக்குள் தான் நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.
பெரிய நாம் நினைத்தே பார்க்க முடியாத என்று ஏராளமான காரியங்களை மனதில் வைத்திருப்போம். ஆச்சரியமான சாதனைகள் என்று எத்தனை நாம் கடந்து வந்தாலும், கடக்க நினைத்தாலும் அடிப்படையில் இரவு வந்தால் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும். மூன்று வேளையும் பசியெடுத்தால் தான் சாப்பிட முடியும். வயிறு தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்தால் சீக்கிரம் நாலு பேர்கள் நம்மை தூக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.
பல சாதனைகள் செய்து விட்டு தனது உடம்மை வேதனையாக வைத்துக் கொண்டால் என்ன ஆகும்?
வாழ்க்கை முழுக்க சோதனை தான்.
இஞ்சித்தேன்.
சென்னைக்கு சென்ற போது பலாப்பட்டறை ஷங்கருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த இஞ்சித்தேன் அருமையை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வலைதளங்களில் பார்த்த போது தங்கம் பழனி என்பவர் அருமையாக பல விசயங்களை எழுதிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது. பல நண்பர்களுடனும் இது குறித்து பேசி கடைசியாக இஞ்சித் தேன் மூலம் நாலைந்து மாதமாக குடும்பத்தில் பறந்து கொண்டிருந்த காந்தித்தாத்தாவை தற்போது தான் நிறுத்த முடிந்ததுள்ளது.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இஞ்சியை காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும்.
காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?.
முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளை சமாளிக்க பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.
எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது.
எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது.
தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை.
அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி
அடுத்து அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி. இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாக பச்சையாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சாறாக மாற்றி தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம்.
இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அளவு தேவையில்லை. எதுவும் சாப்பிடலாம். எப்போதும் சாப்பிடலாம். ஆனால் அது உடம்பில் தங்கிவிடக்கூடாது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக்தியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும். பணத்தை வீட்டில் சேர்த்து வைத்தால் வெகுமானம்.
செரிக்காத சமாச்சாரத்தை உடம்பில் சேர்த்து வைத்தால் என்னவாகும் என்பது தெரியும் தானே? செரித்தால் நல்லது. செரிக்காவிட்டால்?
வாயை பொத்திக் கொண்டு இருப்பது அதை விட நல்லது.
இது ரெண்டு மட்டும் தான் இன்றைக்கு உள்ள காரைக்குடி உணவத்தின் சாப்பாடு.
சாப்பாட்டு ராமன்கள் இந்த இரண்டையும் தினந்தோறும் செய்து வந்தாலே மகிழ்ச்சியாக விரும்பியதை சாப்பிட்டலாம். ஆனால் நிச்சயம் நம்மிடம் உள்ள காந்தி தாத்தா சிரிக்கும் பணம் பையிலிருந்தபடியே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்.
இன்னும் கொஞ்சம் போடும்மா என்று குழந்தைகள் ஒரு கட்டு கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே நாமும் நைஸாக இன்றைக்கு ரொம்ப நல்ல சமைச்சருக்கே என்று கேட்டு வாங்கி சாப்பிடலாம்.
ஒரு நிறுவனத்தின் முதலாளியின் முக்கிய வேலை என்ன தெரியுமா?
மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார். நிறுவன வேலை பாதி. இந்த வேலை மீதி.
எப்பூடி?
அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்.
மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார். நிறுவன வேலை பாதி. இந்த வேலை மீதி.
எப்பூடி?
அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்.
ஆனால் கடந்த ஒரு வருடமாக அதே நோய்கள், மேலும் மேலும் வீர்யமான மருந்து மாத்திரைகள்.
எங்கே நிம்மதி தான் என்ற வாழ்க்கை தான்.
இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை. நெல்லியும் இஞ்சியுமே போதுமானது.
இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை. நெல்லியும் இஞ்சியுமே போதுமானது.
அசைவ உணவு பிரியர்கள் மட்டும் இந்த தலைப்பை படிக்கவும்.
Photo : 4Tamil Media.Com
Subscribe to:
Posts (Atom)



