Thursday, April 30, 2020

ஆடம்பர திருமணங்களை அடக்கிய கொரோனா


அந்த 42 நாட்கள் -  25
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


இன்று வரையிலும் மொத்தமாகப் பட்டியலிட்டுப் பார்த்தேன், பார்த்த, பழகிய, கேட்ட, விரும்பிய, பழகிய, விலகிய, வெறுத்த, ஆதரித்த, ஏக்கத்துடன் பார்த்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு உள்ளேன்.  காரணம் கொரானா காலம் மிகப் பெரிய பாடத்தையும், படிப்பினையும், வாய்ப்பை, வசதிகளை, வரத்தையும் கொடுக்க வந்துள்ளது.  முதல் 21 நாளில் ஒழுங்காகக் கடைப்பிடித்தவர்களின் நரம்பு மண்டலம் உருவாக்கிய அதிர்வுகளும், மனதில் உருவான தளர்ச்சி, கோபம், இனம் புரியாத ஆத்திரம் என்று பலதரப்பட்ட கதைகளைத் தினமும் கேட்டு வருகிறேன்.


ஐ போனுக்கு விலைபோன அரசு மருத்துவர்..! கொரோனா அச்சத்தில் 300 பேர்

அந்த 42 நாட்கள் -  24
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

மின்னம்பலம் தளத்தில் வந்துள்ள செய்தியிது.

//////////////////

சென்னை பர்மா பஜாரின் கிங் என்று வர்ணிக்கப்பட்ட வியாபாரி ஜமால் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி காலமானார். 70 வயதான ஜமாலின் சொந்த ஊர் கீழக்கரை என்பதால், அவரது உடலை கீழக்கரை கொண்டு சென்று அங்கே மத முறையின்படி, அடக்கம் செய்தனர். இறுதி ஊர்வலத்திலும், நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கணக்கான பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முடிவு பாசிட்டிவ் என வந்திருப்பதால், அவரது குடும்பத்தினர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் என்று பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.


Wednesday, April 29, 2020

ஏப்ரல் 5 - 9 மணி 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள்


அந்த 42 நாட்கள் -  23
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள்.

இந்த சமயத்தில் பிரதமர் நாட்டு மக்களுக்கு காணொளி மூலம் பேசினார். 


தப்லீக்கி மாநாடு


அந்த 42 நாட்கள் -  22
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

Thablighi Jamaat Tipping Point in COVID-19 


இந்தியாவில் நடைபெறும் இஸ்லாமிய மத ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் 'தப்லீக் ஜமாத்தார் (மதப் பிரச்சாரகர்கள்)’ என்றழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு 'மர்கஸ்’ எனும் பெயரில் டெல்லி நிஜாமுதின் தர்கா அருகே தலைமையகம் அமைந்துள்ளது.

கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுதினில் மத ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரில் சுமார் 30 சதவீதம் பேருக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு காரணமாக 17 மாநிலங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள மற்றொரு முஸ்லிம் மதப் பிரிவான ஷுரா இ ஜமாத்கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. 

ஆனால் ஆலோசனைகளைப் புறந்தள்ளி தப்லீக் ஜமாத் மாநாட்டை முகமது சாத் நடத்தியுள்ளார்.

********

தமிழ் நாட்டிலிருந்து 1500 பேர் டெல்லி தப்லீக்கி மாநாட்டில் கலந்து கொண்டு அதில் 1100 சொச்சம் பேர் ஊர் திரும்பியிருக்கின்றனர். இன்று சம்பவம் நடைபெற்ற நிஜாமுத்தீன் மர்கஸ் கொரோனா hotspot ஆக அறியபட்டவுடன் ஊர் திரும்பியவர்களை கொரோனா screening செய்ய அரசு எந்திரம் முயற்சிகிறது. ஆனால் அதில் 600 சொச்சம் பேர் மாயம்.


Tuesday, April 28, 2020

கொரோனா வைரஸில் PhD செய்த Dr.பவித்ரா | Special Interview


அந்த 42 நாட்கள் -  21
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.
2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட்

• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.

• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.

• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.


திருப்பூரின் ஊரடங்கு கால குறுக்கு வெட்டு நீள் வெட்டுத் தோற்ற (ட்ரோன்) புகைப்படங்கள்


அந்த 42 நாட்கள் -  20
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


மிதி வண்டியை எடுத்துக் கொண்டு காலை மதியம் மாலை என மூன்று நேரமும் அருகே உள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்து என்ன நிலைமையில் உள்ளது? என்பதனை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

இன்று மதியம், மாலை பார்த்த வரைக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் & Tiruppur Collector Office உழைப்பு வீணாகவில்லை என்றே தோன்றுகின்றது. அங்கங்கே கூட்டங்கள், புரியாத மக்கள் சமூக விலக்கத்தைக் கடைப்பிடிக்காத போதும் கூட ஒப்பீட்டளவில் திருப்பூர் வெற்றி தான்.

Monday, April 27, 2020

முட்டாள்களுக்கு நாள் குறிக்கும் தினம்


அந்த 42 நாட்கள் -  19
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


"நாளைக்கு என்ன தினம்?" என்று அழைத்துக் கேட்டார் நண்பர்.

"21/10. கூடவே ஏப்ரல் 1 " என்றேன்.

"இல்லை. நாளை முதல் பல முட்டாள்களுக்குப் பாடைக்கு நாள் குறிக்கும் தினம்" என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்.

எரிச்சலாக இருந்தாலும் அவர் சொன்ன தகவல் முக்கியமானது.



Play & Pause - Corona இயங்கும் விதிகள் மாறுகின்றது.



அந்த 42 நாட்கள் -  18
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


உள்ளே எந்திரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை அப்படியே Pause பட்டனை அழுத்தினால் எப்படியிருக்குமோ?. இந்தச் சூழலை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது.


நம்ப முடியாததாகவும் உள்ளது.




திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள்.


அந்த 42 நாட்கள் -  17
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

ஊரடங்கின் நான்காம் நாள்...

திருப்பூர்



Sunday, April 26, 2020

வைரஸ் தந்த பாடங்கள்.


அந்த 42 நாட்கள் -  16
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

சாதி, மதம், இனம், மொழி, கடவுள், எல்லைகள், நாடுகள் போன்ற அனைத்தையும் அழிக்க முடியும். மாற்ற முடியும்.

வளர்ச்சி என்று நாம் நம்பிக்கை வைத்திருந்த அனைத்தையும் ஒரே நாளில் அதலபாதாளத்திற்குத் தள்ளி மண் போட்டு மூட முடியும்.

மத்திய அரசின் (கொரானா) திட்டங்கள்


அந்த 42 நாட்கள் -  15
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

நேற்று எடப்பாடி கைகூப்பிக் கையேந்தினார். இன்று மோடி "நிதி உதவி தாருங்கள்" என்று கேட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது வரையிலும் பேரமைதி தான் மிச்சம். ஆனால் நடிகர் அட்சய குமார் 25 கோடி அளிக்கிறேன் என்று தொடங்கி வைத்துள்ளார். மற்றொருபுறம் ஆர்பிஐ உபரி நிதியை கை வைத்தது தவறு என்று அர்ச்சனையும் வந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசியலில் எதிர்க்கட்சி, எதிர்க்கட்சிகள், எதிர்க்கும் கட்சிகள், விமர்சிக்கும் கட்சிகள் என்று ஏராளமுண்டு. இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். எடப்பாடி பந்தைக் கோல் நோக்கிப் போட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கூடவே "மக்கள் கஷ்டப்படுவார்கள். நிதியுதவி 5000 ஆகச் சேர்த்துக் கொடுங்கள்" என்று அறிவுரை சொல்கின்றார்கள்.





Saturday, April 25, 2020

நிதி தாருங்கள் மக்களே.....


அந்த 42 நாட்கள் -  14
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு மயில்கள், அணில்கள், கிளிகள், குருவிகள், காக்கைகள் வைத்துள்ள உணவை உண்பதற்காகக் காலை மாலை இருவேளையும் தவறாமல் வந்து விடுவார்கள். வைத்துள்ள தண்ணீரையும் குடித்து ரொமான்ஸ் மூடில் பேசிக் கொண்டிருப்பார்கள். மதிய வேளையில் அவர்களின் சொந்த பந்தங்கள் ஒன்றிரண்டு பேர்கள் வருவதைப் பார்த்துள்ளேன். ஆனால் இப்போது கூட்டம் அதிகமாகியுள்ளது. அரிசி, கோதுமை போட்டு மாளமுடியவில்லை. அரிசியுடன் கோதுமையைக் கலந்து வைத்தால் கூட அரிசியை ஒதுக்கி வைத்து விட்டு கோதுமையை மட்டுமே உண்கிறார்கள். தண்ணீர் இருமுறை வைக்க வேண்டியுள்ளது. 

கொரானா குறிப்புகள் - 25/03/2020



அந்த 42 நாட்கள் -  13
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் "பின்னலாடை நிறுவனங்களை மூடி ஒத்துழைப்பு தாருங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.

முதலாளி சமூகம் அதன் பிறகே சற்று அசைந்து கொடுத்தது. எடப்பாடி 144 என்றார். விஜயபாஸ்கர் " நோய்த் தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அரசின் உத்தரவு. மீறுவது தண்டனைக்குரிய குற்றமென்று" இறுக்கம் காட்டினார். நடக்கப் போகும் விபரீதத்தை உணராத சமூகம் சிலிர்த்தது. பறக்கத் தொடங்கியது. பேருந்துகளை நோக்கிப் பாயத் தொடங்கியது. நிரம்பி வழிந்தது. தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையர்கள் உருவானார்கள். அரசுப் பேருந்து எண்ணிக்கையை ஏன் குறைந்தார்கள் என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை.


Friday, April 24, 2020

காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி.


அந்த 42 நாட்கள் -  12
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


21 நாள் பந்தயம் தொடங்கி விட்டதல்லவா?வீட்டுக்குள் இருக்கின்றீர்கள்? வேறு வழியில்லை? எப்படியுள்ளது?

மகள்கள் என்றால் பிரச்சனைகள் புதுவிதமாகவும், மகன்கள் என்றால் இம்சைகள் வேறுவிதமாகவும் இருக்கிறதா? சபாநாயகர்கள் வீட்டுக்குள்ளே மொத்தக்கூட்டத்தையும் வைத்துக் கொண்டு சமாளிக்க வந்து விழும் வார்த்தைகள் அனைத்தும் சபைக்குறிப்பில் கொண்டு வர முடியாததாகவும் உள்ளதா?

21 நாட்கள் ஊரடங்கு- தமிழ்நாடு


அந்த 42 நாட்கள் -  11
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மக்களிடம் இன்று (25 March 2020) பேசினார். 


" கொரோனா வைரஸ் உலக நாடுகளில் காட்டு தீ போலப் பரவி வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்போம்.  மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. 10,158 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக உள்ளன. அரசு சார்பில் 3,780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Thursday, April 23, 2020

டெல்லி - புலம் பெயர்ந்த கூட்டம்

அந்த 42 நாட்கள் -  10
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


1947 / 2020

73 ஆண்டுகள்.

இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிந்த போது ஒரு கோடியே 20 லட்சம் பேர்கள் அகதியானார்கள். இரண்டு பக்கமும் 5 முதல் பத்து லட்சம் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பெண்கள் கடத்தப்பட்டனர். வாசிக்க வாசிக்க நான்கு நாளைக்குத் தூக்கம் வராது.


21 நாள் ஊரடங்கு - இந்தியா - முதல் நாள்


அந்த 42 நாட்கள் -  9
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)



இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்கிறார்கள்.  இது பழைய கணக்கு தான்.  140 கோடியைக் கடந்து இருக்கக்கூடும்.  உலகில் மிகப் பெரிய சந்தை. மற்ற நாடுகளை விட 30 வயதுக்கு கீழ் உள்ள இளையர்களைக் கொண்ட நாடு. இந்தியா என்பது எந்த நாடுகளாலும் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த நாடு. வினோதங்களை, ஆச்சரியங்களை, அதிசயங்களைக் கொண்ட நாடு. 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் எங்குப் பார்த்தாலும் மனித தலைகளுடன், சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்த இந்தியா கொரானா தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவின் முகம் எப்படி மாறிப் போனது என்பதனை தினமணியில் வந்த படங்கள் நமக்கு உணர்த்துகின்றது.  

உங்கள் வயது 40 முதல் 70 வரைக்கும் எதுவாக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இது போன்ற வித்தியாசமான சூழல் என்பது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். இணையத்தில், வாட்ஸ் அப் ல் பல இடங்களில் ஊரடங்கு குறித்து பலவிதமான படங்கள் பார்த்து இருக்கக்கூடும். அதிலும் இந்தப் படங்கள் சிறப்பாகவே உள்ளது.

ஊரடங்கு காரணமாக மாறிய இந்தியாவின் படங்கள் எதிர்காலத்திற்கு ஆவணமாகும். வைரஸ் க்கு உயிர் இல்லை. உணர்வு இல்லை. முகம் இல்லை. முகவரி இல்லை. உருவமா? அருவமா? என்பதனைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாது.  


Wednesday, April 22, 2020

மோடி அறிவித்த 21 நாட்கள்


அந்த 42 நாட்கள் -  8
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 24.03.2020 அன்று 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்து பின்வருமாறு பேசினார்.

"கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அந்த தொற்று சங்கிலியை நாம் அழிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்திருத்தல் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.ஆனால் அது சரியல்ல. தனித்திருத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.  சிலரின் பொறுப்பற்ற தன்மை உங்கள் குடும்பத்தைகளுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் இந்த நாட்டிற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்,"


முதல் நடவடிக்கை - ஐந்து நிமிடம் கை தட்டுங்கள்


அந்த 42 நாட்கள் -  7
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)



21 மார்ச் 2020

2050 அன்று கொரானா குறித்துப் பேசும் போது இந்தியர்கள்//தமிழர்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள் என்று கேள்வியும் ஆட்சியில் இருந்தவர்கள் என்ன முன்னேற்பாடுகள் செய்தார்கள் என்ற ஆச்சரியங்களையும் நிச்சயம் தேடித் தேடிப் படிப்பார்கள் அல்லவா??

மார்ச் 21 என்ற தேதியை மறக்க மாட்டார்கள்.  இந்தியா இன்றைய தினத்தில் தான் அரசாங்கம் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கியது.  அதாவது நம் பிரதமர்  மோடி அவர்கள் முக்கியமான அறிவிப்பு ஒன்றை இந்தத் தேதியில் வெளியிட்டார். அந்த அறிவிப்பு உலகத்தை ஆச்சரியப்படுத்தியது.  

"22-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் "ஜனதா ஊரடங்கு" பிறப்பிக்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

"காலை 7 முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்படும் இந்த ஊரடங்கின்போது, கொரானா வைரஸ் நோய்க்கு எதிராகப் போராடும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியே நின்று 5 நிமிடங்களுக்கு கை தட்டி பாராட்ட வேண்டும்"
ICMA ஆஸ்திரேலிய நிறுவனம் உலக நாடுகள் நோய்த் தொற்று பாதுகாப்பு விசயங்களில் எப்படி செயல்பட்டது என்பததை தரவரிசைப் பட்டியலாகக் கொடுத்துள்ளனர். 

Tuesday, April 21, 2020

கொரானா வந்த பாதை - இந்தியா வழி கேரளா

அந்த 42 நாட்கள் -  6
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

கொள்ளை நோய்கள், உலக பேரரசுகளைச் சாய்த்துள்ளன, கட்டமைப்புகளை வீழ்த்தியுள்ளன, உலக அரசியலில் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இந்தக் கொள்ளை நோயால் நடந்தது. கத்தோலிக்க சர்ச்சுகள் தங்களுடைய ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கின,

நோய்த் தொற்றின் போது எதையும் செய்யமுடியாமல் போனதால், சர்ச்சும் மற்ற கட்டமைப்பைப் போல் இன்னொன்று என்கிற உணர்வு மக்களுக்கு வந்தது. “சர்வ ஞான அறிவும்” பெற்ற கடவுள் இருக்கும் போது எப்படி இப்படிப்பட்ட கொள்ளைநோய் மக்களைக் கொல்ல முடியும் என்கிற கேள்வியே மக்களைத் திருச் சபையிலிருந்து விலகி நிற்கச் செய்தது. தொடர்ச்சியாக வலுவிழந்து வந்த கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை, 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற “ப்ரோட்டஸ்டண்ட் சீர்திருத்தம்” மேலும் குறைத்தது.



சீனா - வரம் தந்த சாமி


அந்த 42 நாட்கள் -  5
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

முதல் கொரோனா பாதிப்பு சீனாவில் உகான் நகரில் டிசம்பர் 8 ஆம் தேதி கண்டறியபட்டது. ஆனால் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. உகானில் உள்ள 34 வயதான கண் மருத்துவரான டாக்டர் லி வென்லியாங்  மத்திய மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். சார்ஸ் போன்ற நோய் பரவுவதைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்க முயன்றார், ஆனால் "வதந்திகளை" பரப்பியதற்காக அரசாங்கத்தால் லி தண்டிக்கப்பட்டார். நிவாரண முயற்சிகளுக்கு உதவும் போது லி  கடந்த பிப்ரவரி 7 ந்தேதி நோயால் இறந்தார். பின்னர் சுதாரித்து கொண்ட சீன அரசு  தீவிர நடவடிக்கை எடுத்தது.



Monday, April 20, 2020

தும்மினால் தொற்றுவேன். தொட்டால் தொடர்வேன்.

அந்த 42 நாட்கள் -  4
Corona Virus 2020


மருத்துவர்கள் நுண்ணோக்கி வழியாகப் பார்த்த போது இந்த வைரஸ் பார்ப்பதற்குக் கூர்முனைகளுடன் அதன் வைரஸ் சுவர்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்படுகிறதாம். பார்ப்பதற்குக் கீரிடம் மின்னுவது போல இருப்பதால் (கொரோனா - லத்தீன் மொழியில் கீரிடம்) அதற்குக் கொரோனா வைரஸ் என்று பெயரிட்டு உள்ளனர். 

டிஎன்ஏ வகை வைரஸ்கள், ஆர்என்ஏ வகை வைரஸ்கள் என பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள் உலகில் உள்ளது. இதில் டிஎன்ஏ வகை வைரஸ்கள் தன்னை உருமாற்றித் தகவமைத்துக் கொள்ளாது. அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் போது டிஎன்ஏ வகை வைரஸ்களில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. இதனால் டிஎன்ஏ வகை வைரஸ்களுக்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் ஆர்என்ஏ வகை வைரஸ்கள் அப்படி கிடையாது. இந்த வைரஸ் ஏ என்ற நபரிலிருந்து பி என்ற நபருக்குப் பரவும் போது அதன் ஆர்என்ஏ அமைப்பு மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதாவது அந்த வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்.இதனால்தான் ஆர்என்ஏ வகை வைரஸ்களுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கக் கடினமாக உள்ளது. ஆர்என்ஏ வகை வைரஸ்கள் எப்போது உருமாறும், எப்படி தன்னுடைய செல்களை மாற்றிக்கொள்ளும், எப்போது வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் என்று யாராலும் கணிக்க முடியாது.


கொரானா - குற்றச்சாட்டுகள் 3

அந்த 42 நாட்கள் -  3
Corona Virus 2020

குற்றச்சாட்டு  -  1

சீனாவில் வூகான் மாநிலத்தில் புறநகர்ப் பகுதியில் வைரஸ் ஆராய்ச்சி மையம் உள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய வைரஸ் கிருமிகளைப் பாதுகாக்கும் ஆய்வகம்.  1500க்கும் மேற்பட்ட கிருமிகளை இன்று வரையிலும் பாதுகாப்புடன் வைத்துள்ளது.  இந்த ஆய்வகத்தில் மனிதர்களுக்கு நோயை உருவாக்கும் பல கிருமிகளும், எபோலா வைரஸ் கிருமி போன்ற பல ஆபத்தான வைரஸ்களையும் பாதுகாப்புடன் வைத்துள்ள ஆராய்ச்சி நிறுவனமாகும்.  

பிரான்ஸைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் அலாயின் மெரீயக்ஸின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட அந்த உயா்பாதுகாப்பு ஆய்வகம், 2015-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, தனது செயல்பாட்டை 2018-ஆம் ஆண்டில் தொடங்கியது.

Sunday, April 19, 2020

கொரானா எப்படி உருவானது?


அந்த 42 நாட்கள் -  2
Corona Virus 2020

அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (Scripps Research Institute) சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ்பெற்ற ‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் நேற்று (March 17, 2020) வெளியாகியுள்ளது.

SARS-CoV-2 என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம் செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 இனப்பிரிவைச் சேர்ந்த கரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது. அப்போது முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 110 நாடுகளில் குறைந்தபட்சம் 1,21,564 நபர்களிடம் இந்த நாசகார கிருமி பரவி சுமார் 4,373 மனித உயிர்களை குடித்துள்ளது.

வூஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது.

"ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது SARS-CoV-2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இரண்டு வகையில் இந்த நாவல் SARS-CoV-2 வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும். இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம்.

வவ்வால்களிடம் பரவும் SARS-CoV-2 வைரஸின் சாயல் இந்த கரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவே, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை SARS-CoV கரோனா வைரஸ்கள் இப்படி தான் முதலில் புனுகு பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது.



இதுவொரு கொரானா காலம்


அந்த 42 நாட்கள் - 1
Corona Virus 2020


24.03.2020 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 21 நாட்கள் என்ற சுய ஊரடங்கு என்பதனை அறிவித்தார்.  மேலும் நீடித்தது. இப்போது மே 3 வரைக்கும் என் மொத்தமாக 42 நாட்கள் கொரானா என்ற வைரஸ் கிருமிக்காக இந்தியாவில் 130 கோடி மக்களும் மொத்தச் சமூகத்திலிருந்தும் விலக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

அடுத்த வீட்டில் இருப்பவர்களிடம் உரையாடப் பயந்து, பார்க்கப் பழகப் பேசத் தயங்கும் சூழலை இப்போது நடைமுறையில் இருக்கும் கொரானா "வைரஸ் தடைக்காலம்" உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டது 29 ஜனவரி - கேரளாவில். (30ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தி வந்தது.)

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு வெளிவந்தது மார்ச் 6.

இடைப்பட்ட காலம் - சுமார் 40 நாட்கள்.

முதல் நோயாளி பற்றிய தகவல் தெரிந்தபோதே மத்திய அரசாங்கம் உஷார் ஆகியிருக்க வேண்டும். விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும். ஸ்கிரீனிங்கை துவக்கியிருந்தால், அதையும் சரியாகச் செய்திருந்தால், இந்தியாவில் இவ்வளவுகூடப் பரவியிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் எல்லை மீறிப் போய்விட்டது. விமானப் பயணிகளும், பணம் படைத்தவர்களும் கொண்டு வந்து சேர்த்தனர்.  இன்று அன்றாடங்காய்ச்சிகள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஒரு பக்கம் வாகன வசதிகள் இல்லாமல் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து வந்து தங்கள் ஊருக்கு வந்து சேரும் அவல நிலையும் உள்ளது.

42 நாட்கள் முடிய இன்னும் 15 நாட்கள் உள்ளது. கடந்த நாட்களில் என்ன நடந்தது. தமிழகத்தில், இந்தியாவில், மற்ற நாடுகளில் என்னவெல்லாம் நடந்தது?  கொரானாகோவிட் 19, வூகான் வைரஸ், சீன வைரஸ், என்றழைக்கப்படும் நுண்கிருமிக்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் போன்றவற்றைத் தொடர் ஓட்டத்தில் பார்க்கப் போகின்றோம்.

முதலில் "கொரானா காலம்"  "சுய ஊரடங்கு"  "சமூக விலக்கம்:", என்பது எப்படியுள்ளது என்பதனை இந்த வாட்ஸ் அப் பார்வேர்டு செய்தி மூலம் உணர்ந்து கொள்ள முடியும். பெயர் தெரியவில்லை. 

எழுதியவருக்கு நன்றி.  முதலில் இதிலிருந்து தொடங்குவோம்.


Friday, April 17, 2020

கொரானா காலம்


2020 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இப்போது நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை 25 வருடங்கள் கழித்து அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் புதிய தலைமுறைகளிடம் சொன்னால் நிச்சயம் நம்ப மறுப்பார்கள்.  அப்படியான சூழலில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதை ஆவணப்படுத்துவது முக்கியம் அல்லவா?

சென்ற மாதம் கொரானா தடைக்காலம் (மார்ச் 21 2020) தொடங்குவதற்கு முன்பு நான் ஆயிரமாவது பதிவு எழுதிய பின்பு நான் உருவாக்கிக் கொண்ட தடைக்காலம் (மார்ச் 19) தொடங்கியது.  ஏப்ரல் 19 அன்று முடிவுக்கு வருகின்றது.