Showing posts with label மோடி மற்றும் எடப்பாடி அவர்கள் மக்களிடம் கொரானா நிதி. Show all posts
Showing posts with label மோடி மற்றும் எடப்பாடி அவர்கள் மக்களிடம் கொரானா நிதி. Show all posts

Saturday, April 25, 2020

நிதி தாருங்கள் மக்களே.....


அந்த 42 நாட்கள் -  14
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு மயில்கள், அணில்கள், கிளிகள், குருவிகள், காக்கைகள் வைத்துள்ள உணவை உண்பதற்காகக் காலை மாலை இருவேளையும் தவறாமல் வந்து விடுவார்கள். வைத்துள்ள தண்ணீரையும் குடித்து ரொமான்ஸ் மூடில் பேசிக் கொண்டிருப்பார்கள். மதிய வேளையில் அவர்களின் சொந்த பந்தங்கள் ஒன்றிரண்டு பேர்கள் வருவதைப் பார்த்துள்ளேன். ஆனால் இப்போது கூட்டம் அதிகமாகியுள்ளது. அரிசி, கோதுமை போட்டு மாளமுடியவில்லை. அரிசியுடன் கோதுமையைக் கலந்து வைத்தால் கூட அரிசியை ஒதுக்கி வைத்து விட்டு கோதுமையை மட்டுமே உண்கிறார்கள். தண்ணீர் இருமுறை வைக்க வேண்டியுள்ளது.