Sunday, June 30, 2019

கலைஞரின் கொள்கை வேறு. அரசியல் வேறு?

கடந்த பல வருடங்களாகவே தமிழக ஆட்சியாளர்கள் கட்சி பாரபட்சமின்றி ஒன்றைத் தீவிரமான கடைப்பிடிக்கின்றனர். அதாவது எக்காரணம் கொண்டு முறைப்படி படித்து ஐஏஎஸ் ஐபிஎஸ் பட்டம் வாங்கியவர்களை எந்த அதிகாரப் பதவியிலும் உட்கார வைக்க விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக அவர் தமிழர் என்றால் அவரை கடைசிவரைக்கும் ஏதாவது ஒரு டம்மி பதவியில் உட்கார வைத்து விட்டு "நீ பொத்துனாப்ல சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு போ. வேற எந்த தொந்தரவும் செய்யாதே" என்பது போன்று அவர்கள் திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்போதும் இல்லாத அதிசயமாக இந்த முறை (நடந்து முடிந்த தேர்தலின் போது)  தமிழகக் காவல்துறையில் உள்ள குறிப்பிட்ட சில அதிகாரிகள் இதனை ஆதங்கத்தோடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வரைக்கும் புகாராகக் கொண்டு போய் உள்ளனர்.

அப்புறம் எதற்கு எங்களுக்குப் படிப்பு, பட்டமெல்லாம்? நாங்களும் பதவி உயர்வின் மூலம் வந்து மாவட்டச் செயலாளர்கள் போல இங்கே பணிபுரியும் அதிகாரிகள் போல இருக்க வேண்டுமா? என்று கேட்டு உள்ளனர்.

தமிழ், தமிழர், தமிழர் நலம் என்று சூளுரைக்கும் அரசியல் தலைகளின் முகம் ஒரு பக்கமாகவும், வால் ஒருபுறமாகவும் இங்கே இருப்பது தான் உண்மையான சமூக நீதி. நமக்குத் தெரிந்து எல்லாம் நாம் இன்னமும் முன்னேற முடியாமல் இருப்பதற்குக் காரணம் பிராமணர்கள் தான் என்று திக, திமுக, முற்போக்குவாதிகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டிவர்கள் சொல்லிக் கொண்டு இருப்பதையே நம் கொள்கை என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.  அப்படியே கொள்கை என்று சொன்னவர்கள் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் என்ன செய்தார்கள்? என்பதனை கீழே உள்ள எதார்த்தங்ளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முடியும். 

அரசியல் கொள்கை வேறு.  அதிகாரத்தில் கடைபிடிக்கும் கொள்கை வேறு.



பார்ப்பன அதிகாரி பி.சங்கரைத் தொடர்ந்து, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் நான்கு பார்ப்பனர்களைத் தேடித் தேடி பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. பி. சங்கர், சுகவனேஸ்வர், லட்சுமி பிரானேஷ், என். நாராயணன் என்று நீடித்த பார்ப்பன தலைமைச் செயலாளர்கள் பட்டியலைப் பார்த்து கொதித்துப் போனது நாம் மட்டுமல்ல, தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியும்தான். முன்னாள் அமைச்சர் க. பொன்முடி ஒரு நீண்ட கட்டுரையையே எழுதி தி.மு.க.வின் கண்டனத்தைத் தெரிவித்தார்.

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், “சூத்திரர்” கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் ஆட்சியில் என்ன நிலைமை?

எல்.கே. திரிபாதி என்ற ஒரிசா பார்ப்பனரைத் தேடிப் பிடித்து பதவியில் அமர்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, அவர் ஓய்வு பெற்றபோது இரண்டாண்டுகளுக்கு முன், கே.எஸ்.சிறீபதி என்ற பார்ப்பனர் அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் ஓய்வு பெற்றபோது மத்திய அரசிடம் வாதாடி, 6 மாத காலம் பதவி நீடிப்பு பெற்றுத் தந்தது மட்டுமல்ல, தற்போது மாநிலத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது ‘சூத்திரர்’ அரசு. (நேர்மையான தலித் அதிகாரி உமாசங்கருக்குத் தண்டனை - தங்கள் விருப்பங்களுக்கு எல்லாம் தாளம் போடும் பார்ப்பனர் சிறீபதிக்கு வெகுமானம்; எப்படி இருக்கிறது சமூகநீதி!)

சிறீபதியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பார்ப்பன அம்மையார்

எஸ்.மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது தி.மு.க. அரசு. இவர்கள் ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்ட போதும், ஏராளமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகளின் சீனியாரிட்டியை புறந்தள்ளியே நியமிக்கப்பட்டார்கள் என்பது வேறு செய்தி!

சங்கர் முதல் மாலதி வரை, தொடர்ந்து ஏழு பார்ப்பனர்களே தலைமைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை. திராவிட இயக்க ஆட்சி என்று கூறிக்கொள்வோர் ஆட்சியில்தான் இந்த சமூக நீதிக்கு விரோதமான போக்கு.

பார்ப்பனர் ஜெயலலிதா நான்கு பார்ப்பனர்களை உயர் பதவியில் அமர்த்தினார். அடுத்து வந்த “சூத்திரர்” கலைஞர் கருணாநிதி மூன்று பார்ப்பனர்களை வெட்கமின்றி தலைமைச் செயலாளர்களாக நியமித்துள்ளார். இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் நடைமுறையில் என்ன வேறுபாடு என்று கேட்க விரும்புகிறோம்.

‘வாழும் பெரியார்’ கலைஞர் தலைமையிலான “சூத்திர” ஆட்சியைப் பாதுகாப்பதே தங்கள் கடமை என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த அநீதியை எதிர்த்து வாய் திறக்காதது ஏன்?

தலைமைச் செயலாளர் மட்டுமல்ல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த பல தமிழர்கள், கல்வியாளர்களைப் புறக்கணித்து விட்டு, பார்ப்பன அம்மையார் மீனா என்பவரை நியமித்திருக்கிறது இந்த சூத்திர ஆட்சி!

நிதி, உள்துறை, சுகாதாரம், கல்வி, பொதுப்பணி போன்ற முக்கிய துறைகளின் செயலாளர்களாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்காத ‘நவீன தீண்டாமை’யும் கோட்டையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பத்திரிகைகள் எழுதும்போது மட்டும், சூத்திரன் என்பதால்தான் தன்னைப் பார்ப்பன ஏடுகள் பிராண்டுகின்றன என்று கலைஞர் கருணாநிதி புலம்புவது வாடிக்கை. தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகைகளை பார்ப்பான், பார்ப்பான் பத்திரிகை என்று பக்கத்துக்கு பக்கம் எழுதும் ‘முரசொலி’யைக் கேட்கிறோம். இந்த சமூகநீதிக்கு விரோதமான பார்ப்பன நியமனங்களை என்னவென்று அழைப்பது?

Saturday, June 29, 2019

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :

1. திருநெல்வேலி ஏ.ஆர். காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4937

2. ஈரோடு ஐஸ்வர்யா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2332

3. வேலூர், அன்னை மீரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1137

4. சென்னை அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1133

5. கன்னியாகுமரி, அன்னை வேளாங்கண்ணி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4999

6. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி TNEA code 1201

7. திருவண்ணாமலை அருள்மிகு மீனாட்சி அம்மன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1503

8. திருவள்ளூர் பஜரங் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1102

9. கோவை , கேப்பிடல் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2370

10. திருச்சி, கேர் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 3841

11. தூத்துக்குடி சாண்டி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4931

12. நாமக்கல் சிஎம்எஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2635

13. நாமக்கல், டாக்டர் நாகரத்தினம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2662

14. கோவை ஈசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2749

15. திருநெல்வேலி ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4980

16. நாமக்கல் எக்சல் பிசினஸ் ஸ்கூல்

17. நாமக்கல் எக்சல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2664

18. வேலூர் ஜி.ஜி.ஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1506

19. காஞ்சிபுரம் ஜிகேஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1407

20. ராமநாதபுரம் கணபதி செட்டியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5924

21. சேலம் கணேஷ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2341

22. தூத்துக்குடி ஹோலிகிராஸ் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 4934

23.கன்னியாகுமரி இமானுவேல் அரசர் ஜே ஜே காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4932

24. திருவள்ளூர் இந்திரா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1229

25. தூத்துக்குடி இன்பேன்ட் ஜீசஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4976

26. காஞ்சிபுரம் ஜே இஐ மாதாஜி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1235

27. கன்னியாகுமரி ஜேம்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4987

28. சென்னை ஜவஹர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1153

29. திருவள்ளூர் ஜெயா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1221

30. தர்மபுரி ஜெயலட்சுமி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 2640

31. விருதுநகர் காமராஜ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4959

32. காஞ்சிபுரம் காஞ்சி பல்லவன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1208

33. சிவகங்கை காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் காரைக்குடி இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் TNEA code 5533

34. நாமக்கல் கிங் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2631

35. காஞ்சிபுரம் லார்ட் வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1205

36. காஞ்சிபுரம் மாதா இன்ஸ்ட்டியூட் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1243

37. திருநெல்வேலி மகாகவி பாரதியார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 4998

38. வேலூர் எம்எம்இஎஸ் அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்

39. ராமநாதபுரம் முகமமது சதக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5907

40. சென்னை முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 1400

41. காஞ்சிபுரம் முகம்மது சதக் ஏ ஜே அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1301

42. புதுக்கோட்டை மதர் தெரசா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3846

43. கோவை என் ஆர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2351

44. கன்னியாகுமரி நாராயணகுரு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 4977

45. அரியலூர் நெல்லியாண்டவர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 3466

46. காஞ்சிபுரம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1431

47. திருவண்ணாமலை ஆக்ஸ்போர்டு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1529

48. மதுரை பிடிஆர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5911

49. காஞ்சிபுரம் பல்லவன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1209

50. தஞ்சை, பரிசுத்தம் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் TNEA code 3833

51. கோவை , பார்க் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2716

52. கோவை, பார்க் காலேஜ் ஆப் டெக்னாலஜி TNEA code 2768

53. திருச்சி, பாவேந்தர் பாரதிதாசன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3815

54. காஞ்சிபுரம் பெரி இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1452

55. திருச்சி, பிரைம் நெஸ்ட் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் TNEA code 3446

56. திருச்சி ஆர்விஎஸ் கேவிகே ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2778

57. கோவை ஆர்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2731

58. திண்டுக்கல் ஆர்விஎஸ் எஜூகேசனல் டிரஸ்ட் TNEA code 5862

59. வேலூர் ராணிப்பேட்டை இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1511

60. திண்டுக்கல் ரத்னவேல் சுப்பிரமணியம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5913

61. கோவை எஸ்விஎஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2654

62. காஞ்சிபுரம் சக்திமாரியம்மன் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 1214

63. தர்மபுரி சப்தகிரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2616

64. வேலூர் சரஸ்வதி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1515

65. திருநெல்வேலி சர்தார் ராஜா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5968

66.கோவை சசூரி அகாடமி ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2738

67. திருப்பூர் சசூரி காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2717

68. திண்டுக்கல் எஸ்பிஎம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5930

69. சென்னை ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் செயின்ட் பீ்ட்டர்ஸ் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1127

70. சேலம் ஸ்ரீசத்யம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 2346

71. ஈரோடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2747

72. காஞ்சிபுரம் ஸ்ரீ ஆண்டாள் அழகர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1417

73. காஞ்சிபுரம் எஸ்எம்கே போர்மா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1313

74. தஞ்சாவூர், எஸ்எம்ஆர் ஈஸ்ட் கோஸ்ட் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 3451

75. மதுரை சோலையம்மாள் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 5914

76. வேலூர் ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 1438

77. வேலூர் ஸ்ரீ நந்தனம் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 1514

78. சிவகங்கை ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5502

79. சிவகங்கை செயின்ட் மிக்கேல் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி TNEA code 5919

80. ஈரோடு சூர்யா இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 2748

81. விழுப்புரம் சூர்யா குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன்ஸ் TNEA code 1434

82. கோவை, தமிழ்நாடு காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் TNEA code 2721

83. கோவை தமிழ்நாடு ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் TNEA code 2728

84. திருச்சி, திருச்சி இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 3820

85. மதுரை அல்ட்ரா காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி பார் உமன் TNEA code 5942

86. விருதுநகர் விபிஎம்எம் காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர் பார் உமன் TNEA code 4679

87. விருதுநகர் விபி முத்தையா பிள்ளை மீனாட்சி அம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் பார் உமன் TNEA code 4979

88. விழுப்புரம் வேதாந்தா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி TNEA code 1136

89 திண்டுக்கல் வீரம்மாள் இஞ்ஜினியரிங் காலேஜ் TNEA code 5851

தரமற்ற கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட இந்த 89 பொறியியல் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரிகள் கோவையிலும் உள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரிகளை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தத் தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நடவடிக்கைகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 28, 2019

உயர்ந்த மனிதர்கள்


2018-19 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் என்னை மிக அதிக அளவு ஆக்கிரமித்தவர்.

சொல்லப் போனால் இந்த வருடம் தான் இவரின் உள்ளும் புறமும் அறிந்து இவரின் யூ டியூப் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன்.

வாசிக்க முடியாத சூழலை இலகுவாக மாற்றியது.

மதம் என்ற வார்த்தையில் இவரின் பாரபட்சங்கள் சில இடங்களில் தெரிந்தாலும் நிச்சயம் இளைஞர்கள் இவர் பேச்சின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் விவாத மேடைகள் முதல் பேட்டி வரையிலும் உள்ள எந்த இடங்களிலும் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

பொறுமையைச் சோதித்தாலும் அதைத் திறமையாக கையாள்வதைப் பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளேன். இவரின் ஒரு மணி நேரப் பேச்சுக்களை மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே கேட்பது மாற்றுக் கருத்துக் கொண்டவருக்கு அனுப்பி அவரிடம் அதிக எதிர்க் கருத்துக்களை பெற்றதும் நடந்தது.

மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. எதிர் கொள்கை கொண்டவர்களையும் இவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதனை பார்த்து விடலாமே? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு அழகாக பதம் பிரித்து நிதானமாக ஒவ்வொன்றையும் சரம் போல கோர்த்து தான் சொல்ல வந்த கருத்துக்களை தயக்கமில்லாமல் எடுத்து வைப்பதில் படுபயங்கர சூராதி சூரர்.

ஒரு எழுத்தாளர் பெருமையாக "எந்தக் கூட்டத்திலும் கேள்வி பதில் நிகழ்வை நான் விரும்புவதே இல்லை என்றார். காரணம் பலருக்கும் எது குறித்தும் கேள்வி கேட்கவே தெரியாது" என்று சொல்லியிருந்தார்.

ஆனால் இவர் உள்நாடு, வெளிநாடு போன்ற எல்லா இடங்களிலும் தான் பேசும் கூட்டத்தில் கேள்வி பதிலை அதிகம் முன்னெடுத்தார். இவரின் ஒரு நிமிடப் பேச்சு தினமும் என் வாட்ஸ்அப் ல் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

நம் தனிப்பட்ட கொள்கைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் எதிர்க்கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பது இந்த ஆண்டு இவர் மூலம் கற்றுக் கொண்ட முக்கியமான ஒன்று. ஆனால் ஒரு வருத்தமும் உண்மையும் என்னவென்றால் இவர் பல நூறு மணி நேரம் உலகமெங்கும் சுற்றி தான் சொல்ல விரும்பு கருத்தை சோர்வில்லாமல் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நாளின் காலைப் பொழுதினை தமிழர்கள் சன்டிவி யில் வித்யாதரன் சொல்லும் ஜோதிடப்பலனை பார்த்து விட்டுத் தான் அடுத்த வேளைக்குச் செல்கின்றார்கள்.

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளில் 95 சதவிகித பெயர்கள் வடமொழியில் தான் வைக்கப்படுகின்றது. பெரியார் ஐம்பது வருட களப்போராட்ட பணிகள் அனைத்தையும் சன்டிவி இருபது வருடத்தில் மாற்றிவிட்டது.

காரணம் நம் தினசரி வாழ்வில் ஆசைகள் பேராசைகளோடு போட்டிபோட மனிதர்களுக்குப் பெரியார் என்பது யார் என்று கேள்வி கேட்கும் நாள் வருமோ? என்று தோன்றுகின்றது.

இளைஞர்கள் நம்மைத் தேடி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நாம் அவரைத் தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வோம் என்று இவர் அடிக்கடி சொல்லும் வாசகங்களில் ஒன்று. அந்த அளவிற்கு இணைய உலகில் இவரின் பலதரப்பட்ட பேச்சுகள் விரவிக்கிடக்கின்றது.

பெரியாரின் கொள்கைகளை திக முன்னெடுத்ததோ இல்லை வியாபாரத்தினை வளர்த்து சுயலாபம் அடைந்ததோ என்பது ஒரு பக்கம் விவாதமாக எடுத்துக் கொண்டாலும் இணையத்தில் திராவிடர் கழகம் சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். 

திரைப்பட முன்னோட்ட காட்சிகளுக்குத் தான் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்த்துள்ளேன். அய்யா சுப.வீ யின் பேச்சுக்கு இணைய உலகில் அந்த அளவுக்கு வீச்சு உள்ளது என்பது வியப்பாகவே உள்ளது.

நல்வாழ்த்துகள்.

Wednesday, June 26, 2019

ப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்

உலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். பொறாமைபடக்கூடாது.

Dr. Swamy letter to PM on P Chidambaram.

வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை 2௦௦ பக்கங்களுக்கு மேல் அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.

பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் ஊடகவியலார் சந்திப்பின் போது இந்த சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார்.

ஆனால் ப. சிதம்பரத்துக்கு வேண்டிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வெளியிடாமல் மறைத்துவிட்டன.

வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல சோதனைகளின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அறிக்கையாக அளிக்கப்பட விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை சமூகப் பொறுப்புணர்வு உடைய எம்மைப் போன்ற செய்தி தளங்களுக்கு இருப்பதால் அவற்றை நாங்கள் இங்கு வாசகர்கள் வாசித்து அறிவதற்காகத் தருகிறோம்.

கார்த்தி சிதம்பரத்துக்கும் அவரது நிறுவனத்துக்கும் பிரிட்டனில் மெட்ரோ வங்கியில் 21 வங்கிக் கணக்குகள் உள்ளன.

சிங்கப்பூரில் உள்ள ஓ சி பி சி வங்கியில் ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய கார்த்தியின் Advantage Strategic Consulting Pte Ltd, என்ற நிறுவனத்துக்கு நான்கு வங்கிக் கணக்குகள் உண்டு.

ஸ்பெயின் நாட்டில் சபாடேல் அட்லாண்டிக்கோ மற்றும் லா காக்சியா வங்கி ஆகிய இரண்டிலும் கணக்குகள் உள்ளன.

மொனாக்கொவில் பார்க்லேஸ் வங்கியில் கணக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அது போல பிரான்சு நாட்டில் மார்செயில் பி என் பி பரிபாஸ் வங்கியிலும் சுவிட்சர்லாந்து நாட்டில் யூ பி எஸ் வங்கியிலும் கார்த்திக்கு வங்கி கணக்குகள் உண்டு.

இந்த செய்தியின் கீழ் புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த கார்த்திக்கு 21 வெளி நாட்டு வங்கிகளில் இருக்கும் ரகசிய வங்கி கணக்கின் முழு விவரங்களும் தரப்பட்டுள்ளது.

புலனாய்வு குழுவினர் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் நடத்திய சோதனையின் போது அங்கு பறிமுதல் செய்த கணினி வன்கலத்தின் உதவியுடன் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரின் பேரில் கூட்டாக பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் நகரில் ஒரு சொகுசு பங்களா வாங்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.

இந்த பங்களாவின் முகவரி 5, ஹோய்பேன் க்ளோஸ், கேம்ப்ரிட்ஜ், CB237AQ. இந்த பங்களா இலண்டனில் உள்ள எட்மன்ட் சுலே ஹோல்ட் மற்றும் ஹீதர் ஹோல்ட் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணம் இலன்டன் மெட்ரோ வங்கியில் உள்ள கார்த்தியின வங்கி கணக்கான 16714313 இல் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பங்களா பற்றிய தகவலை ப. சிதம்பரமோ கார்த்தியோ இந்தியாவில் காட்டிய சொத்து விவரப் பட்டியலில் காட்டவே இல்லை. மறைத்து விட்டார்கள்.

ப. சிதம்பரம் தான் இராஜ்ய சபா உறுப்பினராக இருந்த போதும் அமைச்சரான போதும் அரசுக்கு அளித்த சத்தியப் பிரமாணத்தில் இந்த சொகுசு பங்களாவைத் தனது சொத்து விவரப் பட்டியலில் சேர்க்கவில்லை.

2௦16ஆம் ஆண்டு மே மாதம் அளித்த சொத்துப் பட்டியலில் நளினியின் சொத்து விவரத்தில் 3இல் ஒரு பங்கை மட்டுமே காட்டியுள்ளனர். அந்த சொத்தின் மதிப்பையும் மிகவும் குறைத்து வெறும் 1.55 கோடியாக மட்டுமே காண்பித்துள்ளனர். ஆனால் இலண்டனில் இவர்களுக்கு இருக்கும் சொகுசு பங்களாவின் மதிப்பு மட்டுமே 85 கோடி ரூபாய் ஆகும்.

பிரிட்டனில் சொமேர்செட் என்ற ஊரில் சரிட்ஜ் ஃபார்ம் என்ற பண்ணை வீடு 88 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இதை வாங்க கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் பிரைவேட் லிமிட்டட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது.

சொத்துப் பதிவேட்டில் இதன் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.

கேம்ப்ரிட்ஜில் இன்னொரு சொத்தும் கார்த்தியால் வாங்கப்பட்டுள்ளது. இதன் முகவரி 29, Meade House, ceres என்பதாகும்.

வெளி நாடுகளில் கார்த்தி சிதம்பரம் பல்வேறு முதலிடுகளை ரியல் எஸ்டேட் அல்லது மனையடி தொழிலில் செய்துள்ளார்.

இலண்டன், துபாய், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஸ்ரீ லங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின், பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, கிரீசு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல தொழில்களைச் செய்து வருகிறார்.

ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த காலத்தில் அதாவது 2006 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கார்த்தி இந்நாடுகளில் ஏராளமாக முதலீடு செய்திருக்கிறார்.

இந்தச் சொத்துக்களின் மொத்த மதிப்பு மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும் என்று புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

முதல் உலக நாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் ஏன் மனையடி தொழிலில் முதலீடு செய்தனர் என்பதற்கான காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ஸ்ரீ லங்காவில் லங்கா பார்ச்சூன் ரெசிடன்சிஸ் என்ற நிறுவனம் ஆடம்பர சொகுசு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் ஏராளமான பங்குகளை வாங்கியிருக்கிறது.

The Waterfront’, ‘Weligama Bay Resort’ மற்றும் Emerald Bay Hotel என்ற சொகுசு விடுதி நிறுவனங்களிலும் கார்த்தியின் நிறுவனத்துக்குச் சொந்தமான பல ஆடம்பர விடுதிகள் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் மூன்று திராட்சை தோட்டங்களும் பண்ணை வீடுகளும் கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமாக உண்டு. இவற்றை அவர் துபாய் மூலமாக பணம் செலுத்தி வாங்கினார்.

கிராபோவ் என்ற நகரத்தில் உள்ள ரோவே ஃபார்ம் , ஆஷ்டன் நகரில் உள்ள கேப் ஆர்ச்சட்ஸ் மற்றும் வைன் யார்ட்ஸ் பிரைவேட் லிமிட்டட், மற்றும் சென்த்விலேட் என்டேர்பிரைசெஸ் ஆகிய நிறுவனங்களில் கார்த்திக்கு பண்ணை வீடுகளும் திராட்சை தொழிற்சாலைகளும் உண்டு.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் அட்வாண்ட்டேஜ், துபாயில் உள்ள டேசர்ட் டியுன்ஸ் பிராப்பர்ட்டிஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்திலும் பங்குவாங்கி இருக்கிறது.

இந்த இரு நிறுவனங்களுக்குள் 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர்ஸ் பரிவர்த்தனை நடந்திருப்பதைப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் கூட்டுப் பங்கு வைத்திருந்து அதன் மூலமாக ஆசியாவின் சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றது.

இவ்வாறு கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துடன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த SM Arena Complex Corporation, Sports Entertainment Events Management Inc. ஆகிய நிறுவனங்கள் கூட்டு வைத்திருந்தன.

கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு சிங்கப்பூரில் உள்ள Real Beyond Pte. Ltd. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் உண்டு.

இநத நிறுவனத்துக்கு மலேசியாவிலும் மூன்று நிறுவனங்கள் உள்ளன. புலனாய்வு அமைப்புகள் இந்நிறுவனம் தாய்லாந்தில் பதினாறு இடங்களில் நிலம் வாங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் Somerset Surridge Ltd. என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்திருந்தது.

இது தவிர Full Innovations Ltd என்ற நிறுவனத்திலும் கார்த்தி முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனமும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில்தான் உள்ளது.

அங்கெ உள்ள Geben Trading Limited என்ற நிறுவனத்திலும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சில அலுவலகங்களிலும் கார்த்தி முதலீடு செய்திருக்கிறார்.

கார்த்தி நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் புகழ் பெற்ற சுவிஸ் வங்கியான யூ பி எஸ் வங்கி மூலமாகவே நடைபெற்றுள்ளது.

இந்த வங்கியில் யுரோ மற்றும் டாலர் செலாவணி மதிப்பில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சிங்கப்பூரில் உள்ள யுனிசன் க்ளோபல் இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் என்ற நிறுவனத்துடனும் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துக்கு பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இந்த நிறுவனத்துக்கு கார்த்தியின் நிறுவனம் தனது ஐந்து மில்லியன் சிங்கப்பூர் டாலரை மாற்றியுள்ளது.

மனில்லா மாவேரிக்ஸ் என்ற டென்னிஸ் விளையாட்டு குழுவை வாங்குவதற்காக கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் கிராவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது.

இந்த டென்னிஸ் குழுவின் மொத்த மதிப்பு பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இத் தொகையை பத்துத் தவணைகளில் கார்த்தி செலுத்தினார்.

கார்த்தி மலேசியாவில் உள்ள பெனின்சுலார் ஸ்மார்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.9 மில்லியன் மலேசிய ரின்கிட்சுக்கு ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளார்.

மலேசியாவில் பல இடங்களில் உள்ள Café’ Coffee Day என்ற கடையை கார்த்தியின் நிறுவனம் பிரான்சைஸ் எடுத்து நடத்தி வருகிறது.

கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துடன் மலேசியா நிறுவனங்கள் பல பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்கான ஆவணங்களைப் புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

2௦௦6 இல் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மேக்சிஸ் நிறுவனம் ஊழலில் சிக்கிய மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

வருமான வரி துறையினரும் அமலாக்கத் துறையினரும் முப்பது கோடிக்கும் மேலாக அந்நிய செலாவணியில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் Advantage Estrategia Esportiva என்ற நிறுவனத்தை பார்சிலோனா என்ற நகரில் 2௦12ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது.

இது ஏழு டென்னிஸ் மைதானங்களைக் கொண்ட விளையாட்டு பயிற்சி கல்லூரி ஆகும்.

பிரான்சில் உள்ள பெம்ப்பிலோன் ஆர்கனைசேஷன் என்ற நிறுவனத்தில் கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது.

இது தவிர கார்த்தி கிரேக்க நாட்டிலும் ஏதென்ஸ் நகரில் பிசானி ஜான் சகேல்லேரியோஸ் என்ற பெயரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் நிதி பரிவர்த்தனைகள் வைத்துள்ளார்.

கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துடன் பின் வரும் நிறுவனங்கள் தொழில் தொடர்பு வைத்திருந்தன.

Aircel Televentures, DCB Client, Diageo Scotland Limited, Katra Group, Sri Lanka Export Development Board, Unifi Wealth Management Ltd, VST Tillers Tractors, Carlton Trading Company, Claris Life Sciences’, ITC Centre, Best Land Realty Limited, Essar Steel Limited, Gokul Builders and Estates, S Kumar, INX Media, Reflections, Thiagarajar Mills Private Limited, Saksoft, EL Forge Limited. Saksoft, EL Forge Limited.

வருமான வரி துறையினர் கார்த்தியின் அலுவலகத்தை சோதனை செய்த போது அங்கு கிடைத்த கணினி வன்கலங்கள் [ஹார்டுவேர்] அவர் பலரிடம் பெருந்தொகை கோடி கோடியாகப் பெற்றிருப்பதையும் காட்டுகின்றது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் கார்த்தியின் தந்தை நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் கை எழுத்துக்காக முடங்கிக் கிடக்கும் ஆவணங்களில் அவரது கையொப்பத்தைப் பெற்றுத் தருவதற்காக கோடி கோடியாக கார்த்தி இலஞ்சம் வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஐ என் எக்ஸ் மீடியா 2௦௦ கோடி ரூபாய் அந்நிய முதலீட்டுக்கு அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்காக சி பி என் ரெட்டி என்பவர் பெரும் பங்குகள் வைத்திருக்கும் நார்த் ஸ்டார் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு அறுபது இலட்சம் ருபாய் இலஞ்சம் கொடுத்தது.

இந்த சி பி என் ரெட்டி கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவத்தின் இயக்குனர் ஆவார். கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொறுப்பும் இவர் வசமே உள்ளது. இவர் கார்த்தியின் பினாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி ஐ என் எக்ஸ் மீடியா இன்னொரு இருபதினாயிரம் டாலரை கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வங்கி முலமாக வழங்கியுள்ளது. அதற்கான ஆவணங்கள் வருமான வரித் துறையினருக்கு கிடைத்து இருக்கிறது.

கிரீசு நாட்டின் தலை நகர் அதேன்சு நகரில் உள்ள கேபேன் டிரேடிங் லிமிட்டட் என்ற நிறுவனத்தில் இருந்து ஐம்பதினாயிரம் டாலர் சிங்கப்பூரில் உள்ள கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்த நிறுவனம் 4,Zaf.Matsa Street, 14564 Athens என்ற முகவரியில் உள்ளது. பி வி ஐ எனப்படும் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள கார்த்தியின் நிறுவனத்துடன் இந்த கேபேன் நிறுவனம் இணைக்கப்பட்டு உள்ளது.

சுவிட்சர்லாந்தின் தலைநகராக உள்ள ஜெனீவா நகரில் கார்த்தியின் நிறுவனத்துக்கும் இந்த கேபேன் டிரேடிங்க் நிறுவனத்தில் இருந்து பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த பரிவர்த்தனைகளுக்கான மின்னஞ்சல் நகல்கள் கார்த்திக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கிரீசு நாட்டில் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு பணம் அனுப்புவதாக இந்த பணப் பரிவர்த்தனைகளுக்குக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ப. சிதம்பரத்தின் மேசையில் ஐ ன் எக்ஸ் மீடியா கோப்பு 2௦௦ கோடிக்காக அவரது ஒப்புதலுக்காகக் காத்திருந்த காலத்தில் தான் நடந்துள்ளன.

தங்களது ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்தை இப்போது விற்று விட்ட கொலை குற்றவாளிகளான பீட்டரும் இந்திராணி முகர்ஜியும் அந்நிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறுவதற்காக ஒன்பது கோடி ருபாய் வரை கார்த்திக்கு இலஞ்சம் கொடுத்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலண்டனில் உள்ள நெட் ஓர்க் 18 என்ற ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த அர்டிவியா டிஜிட்டல் யூ கே என்ற நிறுவனத்தில் இருந்து அறுபது இலட்சம் பங்குகளை கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் வாங்கியது.

இது நெட் ஒர்க் 18 என்ற நிறுவனம் ப. சிதம்பரத்திடம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காகக் காத்திருந்த காலத்தில் தான் நடந்துள்ளது.

நிதி அமைச்சர் ஒப்புதலுக்காக சுமார் 25 கோடி ருபாய் கார்த்தியின் நிறுவனத்துக்கு கை மாறியுள்ளது.

வருமான வரி துறை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் சி சி இ ஏ எனப்படும் பொருளாதாரா நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்காக பல நிறுவனங்கள் கார்த்தியின் நிறுவனங்களுக்கு அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டன.

இவ்வாறு கார்த்தியின் அட்வான்டேஜ் [ASCPL] நிறுவனங்களுக்கு பணம் அனுப்பியவற்றின் பட்டியலில் கிலாரிஸ் லைஃப் சயின்சஸ் மற்றும் டியாஜியோ ஸ்காட்லாண்டு லிமிட்டட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டியாஜியோ நிறுவனம் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த இயலாமல் நாட்டை விட்டு ஓடிப் போன விஜய் மால்யாவின் யூ பி ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட்டது.

இவை தவிர [Katra Group, Arcelor Mittal நிறுவனத்தோடு சேர்ந்த Saksoft, Reflections [Spark Capital Advisory Private Limited].ஆகிய நிறுவனங்களும் கார்த்தியின் நிறுவனமான அட்வான்டேஜ்ஜில் [ASCPL] பணம் செலுத்தியுள்ளன.

அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மற்றும் சி சி இ ஏ எனப்படும் பொருளாதாரா நடவடிக்கைகளுக்கான அமைச்சகக் குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்காக காத்திருந்த காலங்களில் இந்நிறுவனங்கள் சுமார் 5௦௦ கோடி ருபாய் வரை கார்த்தியின் பல்வேறு நிறுவனங்களில் பணம் செலுத்தியுள்ளன என்பதை வருமான வரித் துறை ஆய்வறிக்கை தெளிவாக்குகிறது.

PSU வங்கிகள் எனப்படும் பொது துறை வங்கிகளிடம் இருந்து 300 கோடி வரை கடன் வாங்கியதற்காகவும் பேஸ்ட் லேண்டு ரியாலிட்டி என்ற மனையடி வியாபார நிறுவனம் கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு இலஞ்சம் கொடுத்துள்ளது. இதுவும் வருமான வரி துறையினர் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் சிக்கியுள்ளது.

விஜய் மால்யாவின் யூ பி ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கிய பிரிட்டனை சேர்ந்த டியஜியோ ஸ்காட்லாண்டு லிமிட்டட் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரைச் சந்திப்பதற்கு நேரம் வாங்கி தருவதற்காக கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்துக்கு 15,௦௦௦ டாலர் இலஞ்சமாகக் கொடுத்துள்ளது.

பிரிட்டன் நிறுவனத்தின் அதிபர் லார்ட் ப்லைத் என்பவர் இந்தியப் பிரதமரையும் நிதி அமைச்சரையும் சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்ததற்காக கார்த்திக்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியதை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த மின்னஞ்சலில் இந்த சந்திப்பு நேரம் அமைத்து கொடுத்ததற்கான சேவை கட்டணமாக 15,000 டாலருக்கான ரசீதும் இணைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்புத் தடை சட்டத்தின் கீழ் பதிவாக வேண்டிய வழக்கு இது என்பதில் ஐயமில்லை.

இந்திய ஓவர்சீஸ் வங்கியுடன் ரஷ்யாவின் நேஷனல் இன்ஸ்டிடியுட் வங்கி [Nazprom] கூட்டாகச் செயல்பட கார்த்தியின் அட்வான்டேஜ் நிறுவனத்தை ஆலோசகராக 2௦௦6 ஆம் ஆண்டில் நியமித்தது.

இதற்கான ஆவணத்தை வருமான வரித்துறையினர் தாம் நடத்திய சோதனையின் போது கண்டுபிடித்தனர்.

ரஷ்ய நிறுவனம் மற்றும் கார்த்தியின் அட்வான்ட்டேஜ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் ஆலோசனை வழங்குதல் என்ற பெயரில் இரண்டு வங்கிகளிடம் இருந்தும் கார்த்தியின் நிறுவனம் அதிகளவில் பணம் பிடுங்கியுள்ளது.

ஐ ஓ பி வங்கி ஆரம்பத்தில் கார்த்திக்கு கொடுத்த சேவை கட்டணமான 25,௦௦௦ டாலர் தவிர ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவரது சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஐந்து சதவிதம் கமிஷனும் தர வேண்டும்.

பொது துறை நிறுவனமான ஐ ஓ பி வங்கிக்கும் ரஷ்ய வங்கிக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கார்த்தியின் ஆலோசனை நிறுவனத்துக்கு சேவை கட்டணம் வழங்க வேண்டும் என்பது கன்சல்ட்டன்சி என்ற பெயரில் கார்த்தியும் ப. சிதம்பரமும் நடத்திய பகல் கொள்ளை ஆகும்.

தென் ஆப்பிரிக்காவின் நிக்கோலஸ் ஸ்டைன்ஸ் அசோசியேட்ஸ் லிமிட்டட் நிறுவனத்தில் இருந்து கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்துக்கு பெருந்தொகை ஒன்று கை மாறியுள்ளது.

இந்த ஆப்பிரிக்க நிறுவனம் ஐ பி எல் கிரிக்கட்டுக்கு பாதுகாப்பு வழங்கியது. ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது இந்த பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகத் தெரிகிறது.

சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது நபார்டு பத்திரங்களை [NABARD Bonds] விற்பதற்காக அலையன்ஸ் செக்யுரிட்டிஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கார்த்தியின் அட்வான்ட்டேஜ் [ ASCPL] பெருந்தொகையை கமிஷனாகப் பெற்றுள்ளது.

வருமான வரி துறையினரின் சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து இத்தகவல் தெரியவந்துள்ளது.

மைசூரில் உள்ள மிகப் பெரிய பரப்பளவு நிலத்தை வி எஸ் டி டில்லர்ஸ் அன்ட் டிராக்டர்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்துக்கு விற்றதில் இருந்தும் கார்த்தியின் மேல்டிராக் லிமிட்டட் நிறுவனத்தில் பெரியளவில் பங்குகள் விற்றதில் இருந்தும் பெருந்தொகை நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு வந்துள்ளது.

இந்த நிலம் யூனியன் வங்கியிடம் [Union Bank of India] அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் மேல்டிராக் லிமிட்டட் நிறுவனத்தின் சார்பில் இந்த அடமானத்தினால் பணம் பெற்றுள்ளார்.

கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் நிறுவனத்தில் ஐந்து இயக்குனர்கள் உண்டு. அவர்கள் சி பி என் ரெட்டி, பாஸ்கர் ராமன், மோகனன் ராஜேஷ், ரவி விஸ்வநாதன், மற்றும் வி பத்மா.

இவர்கள் ஐந்து பேரும் ப. சிதம்பரத்தின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் தங்களது அனைத்து சொத்துக்களையும் வருமானத்தையும் கார்த்திக்கும் அவர் மகள் அதிதிக்கும் வழங்குவதாகக் கூட்டாக உயில் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

இதனால் இவர்கள் ஐந்து பேரும் கார்த்தி மற்றும் ப. சிதம்பரத்தின் பினாமிகள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

குரோஷியாவில் ‘ஹோட்டல் மொசார்ட்’ என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் புகழ் பெற்ற ஓட்டல் ஆகும்.

இந்த ஓட்டல் கட்டிடம் தான் இரண்டாம் உலகப் போரின் போது யுகோஸ்லேவியா நாட்டின் இராணுவத் தலைமையகமாக இருந்து வந்தது.

இந்த ஓட்டலில் கார்த்தி ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

ப. சிதம்பரம் நான்கு மாடி கொண்ட ஜோர் பாக் வீட்டில் தங்கியிருப்பதற்காக தன் மகனுக்கும் மனைவிக்கும் மாதந்தோறும் ஒரு லட்ச ருபாய் கொடுத்து வந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி என்றால் இந்த ஒரு மாடியை மட்டும் தான் ப. சிதம்பரம் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா? மற்ற மூன்று மாடிகளும் யாருக்கு உரியன?

இந்திய அரசியல்வாதிகளில் ப. சிதம்பரத்தை போல அதிகளவில் கருப்புப் பணம் வைத்திருப்பவர் வேறு எவரும் இல்லை.

ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க அரசு எப்போது சி பி ஐ, அமலாக்க துறை, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கருப்பு பணத்தடை சட்டம் , PMLA, பினாமி பரிவர்த்தனைச் சட்டம், கருப்பு பணத்தை கைப்பற்றுதல், ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் முறைப்படி நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்று தரும்?


Sunday, June 23, 2019

இதில் நீங்கள் யார்?


நெருங்கிய நண்பர்கள் பழகிய பழக்கத்திற்காக அமைதியாக இருக்கின்றார்கள். என் தொடர்பில் தொடர்ந்து பேசிய நண்பர்கள் தடுமாறுகின்றார்கள்.

எப்போதும் பேசும் நண்பர்கள் என்னைச் செல்லமாகக் கடிந்து கொள்கின்றார்கள்.  காரணம் நான் பா.ஜ.க வை ஆதரிப்பது என்பது அவர்களுக்கு ஆடையில் பட்ட நெருஞ்சி முள் போலத் தெரிகின்றது.  

நண்பர்கள் தங்கள் பெயரை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் இல்லாமல் என்னிடம் மல்லுக்கட்டத் தயாராக இருக்கின்றார்கள்.  

எந்தப் பக்கம் திரும்பினாலும் பாஜக எதிர்ப்பு என்பது ஏதோவொரு ரூபத்தில் என்னைத்தாக்கிக் கொண்டேயிருக்கிறது.  தவறில்லை.  இது ஜனநாயக நாடு.  அவரவருக்குச் சொந்தக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்.  ஆனால் என்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்துவது என் உரிமை என்று ஏன் எதிரணியர் எடுத்துக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றே புரியவில்லை. 

என்னுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான்.  இன்று ஆண்டு கொண்டிருக்கும் பாஜக ஆட்சியை விட்டுச் சென்றாலும் கவலைப்பட மாட்டேன்.  ஆனால் இந்தியாவில் இனிவரும் எந்த காலத்திலும் காங்கிரஸ் மட்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதனை மனதார விரும்புகிறேன்.

காரணம் அவர்களின் வழித்தடங்கள் அப்பேற்பட்டது.  அது குறித்து பிறகு நாம் பேசுவோம்.  

அது கட்சி அல்ல. நிறுவனம்.  

நிறுவனத்திற்குக் கொள்கைகள் தேவையில்லை.  லாபம் தான் முக்கியம்.  அந்த லாபமும் குறிப்பிட்ட சிலருக்குத் தான் சென்று சேரும்.  அவர்களின் வாரிசுகள் மட்டும் தான் அனுபவிக்க முடியும்.  

மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்த நாட்டை புதைகுழிக்குள் தள்ளிய பெருமை காங்கு என்ற நிறுவனத்தையே சாரும்.  இஸ்லாமியர்கள் இன்று வரையிலும் கல்வி ரீதியான பெரிய வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கும், கிறிஸ்துவம் சேவை மனப்பான்மை விட்டு விலகி இன்று கிறிஸ்துவ சமூகத்தில் உள்ள குறிப்பிட்ட தனிநபர்கள் மூலம் மொத்த கிறிஸ்துவ சமூகமும் மனநோயாளியாக மாற்றியதற்கும், இந்திய வெறுப்பை முக்கியமாக்கி மத விருப்பை முன்னிலைப்படுத்தி இன்று புற்று நோய் போலப் பரவியுள்ளது.  இதற்கு முக்கியக் காரணம் காங்கு என்ற கொடிய மிருகம் தான் என்பதனை என்னால் ஆணித்தரமாக எடுத்து வைக்க முடியும்.

பாஜக எதிர்ப்பு குறித்துச் சொல்பவர்களை இப்படி சில வகையாக என்னால் பிரிக்க முடியும்.

1. சிறு, குறு தொழில் செய்தவர்கள்.  தங்கள் தொழிலில் பாஜக அரசு கொண்டு வந்த சட்ட திட்டங்களினால் பாதிக்கப்பட்டு நட்டம் அடைந்தவர்கள்.  மீளவே முடியாத துயரத்தில் இருப்பவர்கள்.

2. எல்லாவிதமான சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் பணத்தைச் சம்பாதித்து அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு போகாமல், காட்டிக் கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டவர்கள்.

3. அதிகாரத்தைக் கைப்பற்றி, அந்த அதிகாரத்தை வேறு எவரும் கைப்பற்றி விடாமல் இருக்க சகலவித்தைகளையும் கொண்டு கண்கட்டி வித்தைகளாக காட்டிக் கொண்டிருப்பவர்கள். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்குள் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பவர்கள்.

4. காலம் காலமாகச் சாதி என்ற இழிவைச் சுமந்து வாழ்ந்து அதிலிருந்து மீண்டு வந்த போதும் பாஜக கொண்டு வர நினைக்கும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பாசிச நடவடிக்கைக்குள் சிக்கி மீண்டும் நாம் பழையபடி இந்தியா என்ற தேசம் 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் போய் நின்று விடுமோ? என்று யோசிப்பவர்கள்.  

5. இனி நாம் இங்கே வாழ்ந்தால் சாதி மூலம் இழிவைத்தான் சுமக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பவர்கள்.

6. செத்துப் போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க நினைத்து மற்ற அனைத்து மாநில மொழியையும்  நசுக்கி விடுவார்களோ என்று பயப்படுபவர்கள், எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்து என்று தொடங்கி இந்தியாவின் பன்முகத் தன்மையைக்  காவு வாங்கத் தொடங்குகின்றார்களே? என்று ஆதங்கப்படுபவர்கள்.....

7. காலம் காலமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் வாழ முடியாத சூழலும், அச்சத்திலேயே வாழ்ந்தாக வேண்டிய சூழலை உருவாக்கி விடுவார்கள் என்று அக்கறையுடன் சமூகத்துடன் பார்ப்பவர்கள்.

8. வெளிப்படையான நிர்வாகம் என்ற பெயரில் ஆட்சி புரிகின்றேன் என்று சொன்னாலும் தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் கைப்பற்றப்பட்ட தொகையும், சோதனைகளும் இன்று என்ன ஆனது? எங்கே போனது? என்று சந்தேகத்துடன் கேள்வி கேட்பவர்கள்?

9. நம் பிரதமர் என்பவர் மொத்த மக்களின் பிரதிநிதி. அவரை மக்களின் சார்பாக ஊடகங்கள் தான் கேள்வி கேட்க முடியும்.  பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் கேள்வி கேட்ட முடியும்? ஆனால் இவை இரண்டையும் புறக்கணிக்கின்றாரே? என்று யோசிப்பவர்கள்?

இந்த ஒன்பது தவிர வேறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நானும் உரையாடத் தயாராக இருக்கின்றேன்.

உங்கள் பெயரில் வாருங்கள். நாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்கள் எந்த அளவுக்குக் குத்திக் கிழிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை.  ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக உள்ளேன்.

மோடி போன்ற மன்னாதி மன்னர்களையும் இந்த பூமி பார்த்து விட்டது.

அவர்களின் வாரிசுகள் கூட இருக்கின்றார்களா? இல்லையா? என்று காலம் துடைத்து எறிந்து காணாமல் ஆக்கி விட்டது.  அதனால் பயம் கொள்ளத் தேவையில்லை.  காலம் மாறிக் கொண்டே தான் இருக்கும்.  

முன்பு எங்கும் நடந்த சம்பவங்கள் குறித்து அறிய முறைப்படியான ஆவணங்கள் இல்லை.  இப்போது எழுத்து வடிவில், காட்சி வடிவில் ஆவணங்கள் நொடிக்கு ஒரு முறை இங்கே உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது.  மனிதர்கள் மறைந்து விடுவார்கள். ஆனால் உருவான ஆவணங்கள் நிச்சயம் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும். 

மேலை நாடுகள் அப்படித்தான் வளர்ந்தது. வளர்ச்சி பெற்ற நாடுகளாகவும் மாறியது. நிச்சயம் இந்தியா இப்போது சரியான பாதையை நோக்கித்தான் செல்லத் துவங்கியுள்ளது. சென்று கொண்டேயிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்குண்டு.  

இப்போது நம் முன்னால் இருப்பது இரண்டே கேள்விகள் தான்.

இந்திய நாடு என்பது தனி மனிதர்களின் சொத்தா?  இல்லை 130 கோடி மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபடத் தயாராக இருப்பவர்களை ஆதரிப்பதா?

Saturday, June 22, 2019

சசிகலா Vs டிடிவி தினகரன்

முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார்? என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை சுட்டும் ஏன் பூஜ்யத்தைப் பெற்றார் என்பதற்கும் நீங்கள் விடை தேடிப் போனால் உங்களுக்குக் கிடைக்கும் உண்மை வியப்பாக இருக்கும்?

அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து கொண்டு வருடந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் , அதன் உள்ளே ஒழிந்து கொண்டு சுவைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உதவுவார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு அடியாட்கள் தான் உதவுவார்கள்.

இரண்டும் வெவ்வேறு. முன்னது சட்டப்பூர்வமாகத் தெரியும். பின்னது சிக்கினால் சின்னாபின்னம் தான். அப்படித்தான் சசிகலா சிக்கி இன்று கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

எடப்பாடி முதல்வராக வருவதற்கு அவர் நேரம் காலம் இறைத்த பணம் எந்த அளவுக்கு உதவியதோ அந்த அளவுக்கு அணை போட்டுப் பாதுகாத்துச் சிந்தாமல் சிதறாமல் தண்ணீரைக் கடைமடை வரைக்கும் பாய்ச்ச உதவியவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி, வேலுமணி கோஷ்டிகள்.

ஓபிஎஸ் எப்படி உதயகுமாரை நம்புகிறாரோ அவரை விட பத்து மடங்கு இருவரையும் எடப்பாடி நம்புகிறார். காரணம் சாதி பாசம் ஒரு புறம். மற்றொருபுறம் திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் தாக்கிய போது வைகோ முதல் பலரும் அமைச்சர் உதயகுமார் செயல்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினர். திமுகவில் கூட பலரும் பாராட்டிப் பேசினார். அவரும் இரண்டு மூன்று நாட்களாகக் கண் துஞ்சாது அதிகாரிகளுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார்.

ஆனால் இப்போது தமிழ்நாட்டின் தலைநகரே காலியாகிவிடும் போல என்று தண்ணீர் பஞ்சம் குறித்து பலரும் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் வேலுமணி அசைந்து கொடுக்கத் தயாரில்லை. ச்சும்மா தமாஷ் பண்ணாதீர்கள். அதெல்லாம் டூப்பு. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..... என்று கூசாமல் அடித்து விடுகின்றார்.

ஏன் இப்படி?

காரணம் மேலே சொன்ன சசிகலா பாணி தான்.

சசிகலா கடைசிவரைக்கும் கணக்குப் பிள்ளையாகவே இருந்தார். வாங்குவது, மிரட்டுவது, சேர்ப்பது, பாதுகாப்பது, மாற்றுவது என்று தொடர்ந்து ஒவ்வொருவரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். காலம் மாறியது. பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தது.

அதிகாரம் என்றால் என்ன? அதன் நுணுக்கம் எவ்வாறு எங்கங்கு பிரதிபலிக்கும் என்பதனை உணராத அபலையாக இன்று சின்ன அறைக்குள் காரம் போன கடுகு போல வாழ்கிறார். ஆனால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள் அனைத்தும் பல பதினாறு அடிகள் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பரபரத்துக் கொண்டிருந்தாலும் எங்கே அடிப்பது? எதன் மூலம் அடிப்பது? யார் மூலம் அடிப்பது? என்று மூன்று கொள்கைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல உள்ள அதிகாரிகளை மட்டும் தான் அருகே வைத்துள்ளார்கள். அவர்களும் கூச்சப்படாமல் தண்ணீர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றார்கள். மீறிப் போனால் உலகப் பொதுமுறை ஒன்று இருக்கிறதே. அதைச் சொல்லிவிடலாமே?

இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்?

வேலுமணி குறித்து அவரின் ஊழல் திருவிளையாடல் குறித்து இதுவரையிலும் எத்தனையே இயக்கங்கள், நபர்கள் காது கிழியக் கத்திப் பார்த்து விட்டார்கள். ம்கும்... பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவர்களது தனி தர்மத்தை விடாது கடைபிடித்து வருகின்றார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

திமுக அப்பாவு கதறிய கதறல் இது. அவர் ஆர்டி மூலமாகப் பெற்ற தகவல் இது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? கிடைக்கும் தொகையைப் பங்கு வைத்தால் முழுமையாக வந்து சேராது என்ற ஒரே காரணம் மட்டுமே? அது எப்படி செயலாக்கம் பெறுகின்றது என்பதனை இந்த சிறிய உதாரணம் நமக்குப் புரிய வைக்கும்.
தெருவிளக்கு அனைத்தும் எல்இடி பல்புகள் மாற்றப்பட வேண்டும். மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எர்த் ஒயர்கள் இல்லாத இடத்தில் அதையும் சரி செய்ய வேண்டும்.
செய்தார்களா?

ஆமாம், எப்படிச் செய்தார்கள்?

ஒரு எல்இடி பல்பு விலை (20 வாட்ஸ் திறன் கொண்ட) 3,550 ரூபாய். ஆனால் இவர்கள் வாங்கிய விலை 14,996 ரூபாய். ஒரு கம்பத்திற்கு எர்த் ஒயர் கொடுக்க ரூபாய் 150 முதல் 250 வரை தான் செலவாகும். ஆனால் இவர்கள் கணக்கு காட்டியுள்ளது 750 ரூபாய். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை 870 கோடி. செலவளித்ததாக காட்டப்பட்ட தொகை 1800 கோடி. ஆயிரம் கோடிக்கும் மேல் மேலிருந்து கீழ் வரை ஏப்பம் விட்டு இருக்கின்றார்கள்.

அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாத அதன் சுவையை மட்டுமே நக்கித்தின்ற சசிகலா போலவே இன்றைய அதிமுக அமைச்சர்களை மோடி தண்டிப்பார் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் புரியாதவர் என்று அர்த்தம்.

அதிகாரம் என்பது எந்த இடத்தில் எப்போது தேவைப்படுமோ அந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள்.

அதுவரையிலும்?

ஊடகங்கள் விவாத மேடையில் மக்களின் நலனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சென்னை மக்கள் துடைக்க காகிதத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.

Friday, June 21, 2019

கடவுச்சீட்டு

கடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா? நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா? என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். மகளிடம், மனைவியிடம் இதே விசயத்தை மீண்டும் மீண்டும் சொன்ன போது சரி சரி உங்கள் மோடி புராணம் போதும்? பொத்தவும் என்று உத்தரவிட்டனர்.

காரணம் கோவையில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடந்த சமாச்சாரங்கள்.

மகள் தான் சொன்னார். கடவுச்சீட்டு தேதி முடியப் போகின்றது என்றார். ஆகா இதை வைத்து இந்தத் துறை எப்படிச் செயல்படுகின்றது என்று இணைய தளம் வாயிலாக உள்ளே சென்ற போது பூ மாதிரி வழுக்கிக் கொண்டே சென்றது. எந்த தொந்தரவும் இல்லை. எந்த சிக்கலும் கடைசி வரைக்கும் உருவாகவே இல்லை. அடித்துத் திருத்தி மாற்றி என்று எத்தனை முறை செய்தாலும் அனைத்துக்குமான எளிமையாக இணையதளத்தை அமைத்துள்ளனர்.

உள்ளே நுழைந்து அவர்கள் கேட்ட ரூபாய் 1500 கட்டி முடித்தவுடன் தேதி குறிப்பிட்டு இந்த மணிக்கு வந்து விடவும் என்று முகவரியுடன் மின் அஞ்சல் வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவித்தனர். ஈரோடு, கோவையில் இரண்டு இடங்கள், தபால் நிலையம் என்று நமக்குத் தேவையான வழிமுறைகளையும் காட்டுகின்றனர். நமக்கு அருகே உள்ள இடத்தை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அரைமணி நேரம் முன்பே அங்கே சென்று விடுவது என் வாடிக்கை. ஆனால் இங்கே ஒரு மணி நேரம் முன்பே சென்று விட்டேன். வாசலில் நின்ற பெண்மணி குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு அங்கே அமரவும். கால் மணி நேரம் கழித்து நானே அழைக்கின்றேன் என்றார். குரலில் அதிகாரம் இல்லை.

அரசாங்க அலுவலகம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும்? என்ன கேட்பார்களோ? எவ்வளவு கேட்பார்களோ? எப்படி நடத்துவார்களோ? என்று. இருபது நிமிடம் முன்னால் சென்ற போது அந்தப் பெண்மணி எங்கே செல்ல வேண்டும்? எங்கே அமர வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? என்று வகுப்பு போல எடுத்தார். கூட்டமே இல்லையே? மக்கள் உள்நாட்டில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தேன்.

நான்கு நபர்கள். நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆதார் அட்டை, பழைய கடவுச்சீட்டு இரண்டையும் காண்பித்தவுடன் நகல் எடுக்க அறிவுறுத்தினர். அதற்கும் உள்ளே வசதி வைத்துள்ளார்கள். முதல் ஆச்சரியம். மொத்தமே மூன்று நிமிடம்.
மீண்டும் வாங்கி பரிசோதித்து விட்டு அடுத்த நிலைக்கு அனுப்பினார். இங்கு மொத்த நபர்களையும் வழிகாட்ட ஒரு தனியாகப் பெண் ஒருவர் இருந்தார். தடுமாறுபவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்.

அடுத்த நிலையில் சென்ற போது அவர்கள் பரிசோதித்து விட்டு ஒரு டோக்கன் சீட்டுக் கொடுத்து அடுத்த நிலைக்கு நகர்த்தினர். மொத்தம் மூன்று நிமிடங்கள்.

டோக்கன் எண் திரையில் தெரிகின்றது. இப்போது முக்கியமான கட்டம். நம் கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு நம்மைப் புகைப்படம் எடுக்கின்றார். இரண்டு கைகளையும் வைத்து ஸ்கேன் செய்கின்றார். இரண்டு கட்டை விரலையும் ஸ்கேன் செய்கின்றார். அதிகபட்சம் ஐந்து நிமிடம்.
அங்கு ஒரு பெண் இருக்கின்றார். அவர் வழிகாட்டுகின்றார்.

இறுதியாக தலைமையாளரிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றார். நம்மைப் பார்த்துவிட்டு, ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு பழைய கடவுச்சீட்டில் கேன்சல் என்று குத்தி முடித்து, மூன்று நாளில் உங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வாழ்த்துகள் என்றார்.

தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே இடத்தில் கூட கூச்சல் இல்லை. சப்தம் இல்லை. அடிதடி இல்லவே இல்லை. ஒரு ஊழியர் கூட ஏட்டிக்குப்போட்டியாக பேசவே இல்லை. அலுவலகம் மிக சுத்தமாக உள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழில் அதுவும் சுத்தமான பிழையில்லாத தெளிவான அழகான தமிழ்மொழியில் எல்லா இடங்களில் பளபளப்பான போர்ட்டில் வாசகங்கள் நம்மை வரவேற்கின்றது.

வழிகாட்டுகின்றது.

நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது கணக்கிட்டுப் பார்த்தேன். அதிகபட்சம் அரைமணி நேரம் இருக்கும். கனவுக்காட்சி போலவே இருந்தது. ஒரே காரணம் டாடா குழுமத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம்.

ஒரு முக்கியமான மக்கள் சேவையில் தொழில் நுட்பமும், தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய நிர்வாகமும் ஒன்று சேர்ந்தால் சாதாரண பொதுமக்களும் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதனை அன்று தான் முதல் முதலாகப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

கடந்த பாஜக ஆட்சியில் மோடி நாடு நாடாகச் சுற்றிக் கொண்டு இருக்கின்றார். இங்கே தங்குவதே இல்லை. வெளியுறவு அமைச்சரையும் அழைத்துக் கொண்டு செல்வதே இல்லை என்று குறையாய் பலரும் குறைபட்டுக் கொண்டார்கள். ஆனால் மோடி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை இங்கேயே இரும்மா? இங்குள்ள வேலையைக் கவனித்துக் கொள்ளம்மா? என்று விட்டு விட்டுச் சென்று இருப்பார் போல.

சிறுநீரகம் பழுதுபட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கும் அம்மா சுஷ்மா அவர்களே நீடூழி வாழ்க. என் வாழ்நாளுக்குள் ஒரு அரசு நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும்? அத்துடன் தனியார் உள்ளே நுழைந்து கைகோர்க்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல நிர்வாகத்தையும், வெளிப்படையான விரைவு சேவைகளையும் வழங்க முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்.

என் வாழ்நாளுக்கும் இப்படி ஒரு வாய்ப்பை, ஆச்சரியத்தைப் பார்க்க வாய்ப்பு கொடுத்து உணர்த்தியமைக்கு நன்றி. நன்றி. 


Wednesday, June 19, 2019

மணி மணி வேலுமணி


முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார்? என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை சுட்டும் ஏன் பூஜ்யத்தைப் பெற்றார் என்பதற்கும் நீங்கள் விடை தேடிப் போனால் உங்களுக்குக் கிடைக்கும் உண்மை வியப்பாக இருக்கும்?

அதிகாரத்தின் மேலடுக்கிலிருந்து கொண்டு வருடந்தோறும் தேசியக் கொடி ஏற்ற வாய்ப்பு பெற்றவர்களுக்கும் , அதன் உள்ளே ஒழிந்து கொண்டு சுவைப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மேலே இருப்பவர்களுக்கு அதிகாரிகள் உதவுவார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு அடியாட்கள் தான் உதவுவார்கள்.

இரண்டும் வெவ்வேறு. முன்னது சட்டப்பூர்வமாகத் தெரியும். பின்னது சிக்கினால் சின்னாபின்னம் தான். அப்படித்தான் சசிகலா சிக்கி இன்று கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?

எடப்பாடி முதல்வராக வருவதற்கு அவர் நேரம் காலம் இறைத்த பணம் எந்த அளவுக்கு உதவியதோ அந்த அளவுக்கு அணை போட்டுப் பாதுகாத்துச் சிந்தாமல் சிதறாமல் தண்ணீரைக் கடைமடை வரைக்கும் பாய்ச்ச உதவியவர்களில் முக்கியமானவர்கள் தங்கமணி, வேலுமணி கோஷ்டிகள்.

ஓபிஎஸ் எப்படி உதயகுமாரை நம்புகிறாரோ அவரை விட பத்து மடங்கு இருவரையும் எடப்பாடி நம்புகிறார். காரணம் சாதி பாசம் ஒரு புறம். மற்றொருபுறம் திருடனுக்குத் திருடன் தான் நண்பனாக இருக்க முடியும் என்ற பொதுவிதியும் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கஜா புயல் தாக்கிய போது வைகோ முதல் பலரும் அமைச்சர் உதயகுமார் செயல்பாடுகளைப் புகழ்ந்து தள்ளினர். திமுகவில் கூட பலரும் பாராட்டிப் பேசினார். அவரும் இரண்டு மூன்று நாட்களாகக் கண் துஞ்சாது அதிகாரிகளுடன் சேர்ந்து களப்பணி ஆற்றினார்.

ஆனால் இப்போது தமிழ்நாட்டின் தலைநகரே காலியாகிவிடும் போல என்று தண்ணீர் பஞ்சம் குறித்து பலரும் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் வேலுமணி அசைந்து கொடுக்கத் தயாரில்லை. ச்சும்மா தமாஷ் பண்ணாதீர்கள். அதெல்லாம் டூப்பு. எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்..... என்று கூசாமல் அடித்து விடுகின்றார்.

ஏன் இப்படி?

காரணம் மேலே சொன்ன சசிகலா பாணி தான்.

சசிகலா கடைசிவரைக்கும் கணக்குப் பிள்ளையாகவே இருந்தார். வாங்குவது, மிரட்டுவது, சேர்ப்பது, பாதுகாப்பது, மாற்றுவது என்று தொடர்ந்து ஒவ்வொருவரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். காலம் மாறியது. பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தது.

அதிகாரம் என்றால் என்ன? அதன் நுணுக்கம் எவ்வாறு எங்கங்கு பிரதிபலிக்கும் என்பதனை உணராத அபலையாக இன்று சின்ன அறைக்குள் காரம் போன கடுகு போல வாழ்கிறார். ஆனால் அவர் பார்த்து வளர்ந்த பிள்ளைகள், வளர்த்த பிள்ளைகள் அனைத்தும் பல பதினாறு அடிகள் பாய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் பரபரத்துக் கொண்டிருந்தாலும் எங்கே அடிப்பது? எதன் மூலம் அடிப்பது? யார் மூலம் அடிப்பது? என்று மூன்று கொள்கைக்குள் சுற்றிச் சுற்றி வருகின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல உள்ள அதிகாரிகளை மட்டும் தான் அருகே வைத்துள்ளார்கள். அவர்களும் கூச்சப்படாமல் தண்ணீர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் இருக்கின்றார்கள். மீறிப் போனால் உலகப் பொதுமுறை ஒன்று இருக்கிறதே. அதைச் சொல்லிவிடலாமே?

இதெல்லாம் திமுக காலத்தில் நடந்த பிரச்சனை. நாங்கள் என்ன செய்ய முடியும்?

வேலுமணி குறித்து அவரின் ஊழல் திருவிளையாடல் குறித்து இதுவரையிலும் எத்தனையே இயக்கங்கள், நபர்கள் காது கிழியக் கத்திப் பார்த்து விட்டார்கள். ம்கும்... பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவர்களது தனி தர்மத்தை விடாது கடைபிடித்து வருகின்றார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்து விடுவோம்.

திமுக அப்பாவு கதறிய கதறல் இது. அவர் ஆர்டி மூலமாகப் பெற்ற தகவல் இது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாகத் தெரியவில்லை. காரணம் என்ன? கிடைக்கும் தொகையைப் பங்கு வைத்தால் முழுமையாக வந்து சேராது என்ற ஒரே காரணம் மட்டுமே? அது எப்படி செயலாக்கம் பெறுகின்றது என்பதனை இந்த சிறிய உதாரணம் நமக்குப் புரிய வைக்கும்.
தெருவிளக்கு அனைத்தும் எல்இடி பல்புகள் மாற்றப்பட வேண்டும். மின்சார சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எர்த் ஒயர்கள் இல்லாத இடத்தில் அதையும் சரி செய்ய வேண்டும்.
செய்தார்களா?

ஆமாம், எப்படிச் செய்தார்கள்?

ஒரு எல்இடி பல்பு விலை (20 வாட்ஸ் திறன் கொண்ட) 3,550 ரூபாய். ஆனால் இவர்கள் வாங்கிய விலை 14,996 ரூபாய். ஒரு கம்பத்திற்கு எர்த் ஒயர் கொடுக்க ரூபாய் 150 முதல் 250 வரை தான் செலவாகும். ஆனால் இவர்கள் கணக்கு காட்டியுள்ளது 750 ரூபாய். இந்த திட்டத்திற்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட தொகை 870 கோடி. செலவளித்ததாக காட்டப்பட்ட தொகை 1800 கோடி. ஆயிரம் கோடிக்கும் மேல் மேலிருந்து கீழ் வரை ஏப்பம் விட்டு இருக்கின்றார்கள்.

அதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாத அதன் சுவையை மட்டுமே நக்கித்தின்ற சசிகலா போலவே இன்றைய அதிமுக அமைச்சர்களை மோடி தண்டிப்பார் என்றால் நீங்கள் நடப்பு அரசியல் புரியாதவர் என்று அர்த்தம்.

அதிகாரம் என்பது எந்த இடத்தில் எப்போது தேவைப்படுமோ அந்த இடத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள்.

அதுவரையிலும்?

ஊடகங்கள் விவாத மேடையில் மக்களின் நலனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சென்னை மக்கள் துடைக்க காகிதத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.