Friday, June 28, 2019

உயர்ந்த மனிதர்கள்


2018-19 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் என்னை மிக அதிக அளவு ஆக்கிரமித்தவர்.

சொல்லப் போனால் இந்த வருடம் தான் இவரின் உள்ளும் புறமும் அறிந்து இவரின் யூ டியூப் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன்.

வாசிக்க முடியாத சூழலை இலகுவாக மாற்றியது.

மதம் என்ற வார்த்தையில் இவரின் பாரபட்சங்கள் சில இடங்களில் தெரிந்தாலும் நிச்சயம் இளைஞர்கள் இவர் பேச்சின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் விவாத மேடைகள் முதல் பேட்டி வரையிலும் உள்ள எந்த இடங்களிலும் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

பொறுமையைச் சோதித்தாலும் அதைத் திறமையாக கையாள்வதைப் பார்த்து பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளேன். இவரின் ஒரு மணி நேரப் பேச்சுக்களை மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே கேட்பது மாற்றுக் கருத்துக் கொண்டவருக்கு அனுப்பி அவரிடம் அதிக எதிர்க் கருத்துக்களை பெற்றதும் நடந்தது.

மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. எதிர் கொள்கை கொண்டவர்களையும் இவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதனை பார்த்து விடலாமே? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு அழகாக பதம் பிரித்து நிதானமாக ஒவ்வொன்றையும் சரம் போல கோர்த்து தான் சொல்ல வந்த கருத்துக்களை தயக்கமில்லாமல் எடுத்து வைப்பதில் படுபயங்கர சூராதி சூரர்.

ஒரு எழுத்தாளர் பெருமையாக "எந்தக் கூட்டத்திலும் கேள்வி பதில் நிகழ்வை நான் விரும்புவதே இல்லை என்றார். காரணம் பலருக்கும் எது குறித்தும் கேள்வி கேட்கவே தெரியாது" என்று சொல்லியிருந்தார்.

ஆனால் இவர் உள்நாடு, வெளிநாடு போன்ற எல்லா இடங்களிலும் தான் பேசும் கூட்டத்தில் கேள்வி பதிலை அதிகம் முன்னெடுத்தார். இவரின் ஒரு நிமிடப் பேச்சு தினமும் என் வாட்ஸ்அப் ல் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

நம் தனிப்பட்ட கொள்கைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் எதிர்க்கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பது இந்த ஆண்டு இவர் மூலம் கற்றுக் கொண்ட முக்கியமான ஒன்று. ஆனால் ஒரு வருத்தமும் உண்மையும் என்னவென்றால் இவர் பல நூறு மணி நேரம் உலகமெங்கும் சுற்றி தான் சொல்ல விரும்பு கருத்தை சோர்வில்லாமல் சொல்லிக் கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நாளின் காலைப் பொழுதினை தமிழர்கள் சன்டிவி யில் வித்யாதரன் சொல்லும் ஜோதிடப்பலனை பார்த்து விட்டுத் தான் அடுத்த வேளைக்குச் செல்கின்றார்கள்.

தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளில் 95 சதவிகித பெயர்கள் வடமொழியில் தான் வைக்கப்படுகின்றது. பெரியார் ஐம்பது வருட களப்போராட்ட பணிகள் அனைத்தையும் சன்டிவி இருபது வருடத்தில் மாற்றிவிட்டது.

காரணம் நம் தினசரி வாழ்வில் ஆசைகள் பேராசைகளோடு போட்டிபோட மனிதர்களுக்குப் பெரியார் என்பது யார் என்று கேள்வி கேட்கும் நாள் வருமோ? என்று தோன்றுகின்றது.

இளைஞர்கள் நம்மைத் தேடி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நாம் அவரைத் தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வோம் என்று இவர் அடிக்கடி சொல்லும் வாசகங்களில் ஒன்று. அந்த அளவிற்கு இணைய உலகில் இவரின் பலதரப்பட்ட பேச்சுகள் விரவிக்கிடக்கின்றது.

பெரியாரின் கொள்கைகளை திக முன்னெடுத்ததோ இல்லை வியாபாரத்தினை வளர்த்து சுயலாபம் அடைந்ததோ என்பது ஒரு பக்கம் விவாதமாக எடுத்துக் கொண்டாலும் இணையத்தில் திராவிடர் கழகம் சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். 

திரைப்பட முன்னோட்ட காட்சிகளுக்குத் தான் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்த்துள்ளேன். அய்யா சுப.வீ யின் பேச்சுக்கு இணைய உலகில் அந்த அளவுக்கு வீச்சு உள்ளது என்பது வியப்பாகவே உள்ளது.

நல்வாழ்த்துகள்.

6 comments:

நம்பள்கி said...

தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையே இதற்குக் காரணம். பார்ப்பனர்களை ஈஷிக்கொண்டு வாழ்வதே சூத்திரர்கள் கொள்கை; இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு.

சூத்திரர்கள் என்றால் எல்லா பார்ப்பனர் அல்லாதவர்களையும் சேர்த்து தான். "OBC சாதிக்காரர்கள் தான் இந்த தாழ்வு மனப்பாண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்." இந்த OBC சாதிக்காரர்களுக்கு ஜாதி ஒதிக்கீடும் கிடையாது. பார்ப்பனருடன் போட்டி போட்டு ஜெயிக்கவேண்டும். அது முடியவே முடியாது. மேலே வேலைக்கு எடுப்பவன் பார்ப்பணன். இந்த OBC சாதிக்காரர்கள் வாயைத் திறந்தாலே இவன் மொழி (அவா பாஷை இல்லாமல் சூத்திர மொழியாக இருக்கும்) காட்டிக்கொடுத்துவிடும். பேர் மட்டும் வட இந்திய பெயர் வைத்தது அவளை ஈஷிக்கொண்டு கொலு வைத்தால் போதுமா? எந்த நல்ல வேலையும் கிடைக்காது. மீந்ததை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஆப்பு தான்---சரியான விளக்கெண்ணைகள்.

பார்ப்பனன் ரமேஷ், சுரேஷ் என்று பெயர் வைய்த்த பொது, மீதி எல்லா சூத்திரப்பயல்களும் அந்த பெயர்களை வைத்தான். பார்த்தான், அவன் வட இந்திய பெயருக்கு தாவினான். இவனும் இப்போ அவனை மாதிரி, அதிதி, புஷ்கர், ஆதித்யா , அபிலாஷா, அதிஷா என்று வைத்தான். இனி பார்ப்பனன் வெள்ளைக்காறன் பெயர் தான் வைக்க வேண்டும். அப்பவும் இந்த சூத்திரர்கள் அவாளை ஈஷிக்கொண்டே அந்தப் பெயரை வைத்தாலும் வைப்பான்--தனது வாழ்வை நாம் எல்லோரும் இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் அடிமையாகவே வாழ்ந்து சாவார்கள்.

என்றும் பார்ப்பண படிக்கட்டில், சூத்திரா நீ கீழே தான். அது தான் இந்து மத தர்மம். தெரிந்து கொள் சூத்திரா! இந்த மதம் என்று சொல்லி உங்களை எல்லாம் ஒரு குடை கீழே கொண்டு வந்து இருப்பது போதாமல் உங்களை மேலும் அடிமைப் படுத்தி --இப்ப 10% சதவீத இடக்கீடு வேற! சாவுங்கடா சூத்திரங்களா ! இனி ஜென்மத்துக்கும் முன்னேற முடியாது. இப்பவே கண்ணைக்கட்டுது. இனி 10%
இட ஒதிக்கீடும் வந்தால் இந்து மதம் மதம் என்று சொல்லி அவன் கீழே அடிமையாக இருங்க.

RSS சாதித்து விட்டது---அவாளை ஈஷிக்கொண்டே சுய
தன்மையை இழந்தது சாவுங்கடா!

வருண் said...

சிதம்பரம் நாட்டுக்கோட்டை செட்டியார்
சு ப வீ யும் நாட்டுக் கோட்டை செட்டியார்.

நீங்க ப சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்துவிட்டு, சு ப வீயை பாராட்டுவதென்னவோ, "நான் ஒண்ணும் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு எதிரியல்ல". நல்லவர்கள் எங்கே இருந்தாலும் பாராட்டுவேன்னு சொல்ற மாதிரி இருக்கு! :)

அதென்னவோ ஓரளவு ஏழையாக, எளிமையாக இருந்தால் நல்லாத்தான் இருக்காங்க. பணம், பதவி, அரசியல் முனேற்றம்னு வந்துவிட்டால் "கரப்ட்" ஆகிடுறாங்க. சிதம்பரமும் அப்படித்தான் ஆகிவிட்டார்.

சுரேஷ் கண்ணன்னு ஒரு பதிவர்..பெரிய கமல் கால்நக்கி. பிச்சைப்பாத்திரம்னு ஒரு தளத்தில் ப்ளாக் எழுதும்போது சினிமாவை அனலைஸ் செய்யயும்போது எங்கேயே இருந்து குதிச்சவன்மாரித்தான் எழுதுவான் இந்தாளு..இன்னைக்கு பத்திரிக்கையில் எல்லாம் எழுதி "பெரிய ஆள்" போல... அதுபோல் தரமும் படு கேவலமாத்தான் ஆயிடுச்சு..

பிக்பாஸ் 3 எல்லாம் ஒரு ஷோ!!! அதைப்பத்தி ரசிச்சு விமர்சனம் எழுதுமளவுக்கு சாக்கடையாயிட்டான் இந்தாளு சுரேஷ் கண்ணன்..

பெரிய ஆள் ஆனாலே தரம் கீழே போயிடுது. அரசியலில் சரி, எழுத்திலும் சரி.. காசு புகழ்னு போயி என்ன எழவையெல்லாமோ நக்கி நக்கி ரசிச்சு எழுதுறானுக!

ஜோதிஜி said...

கோபமும் கொலைவெறியுமாக எழுதியிருக்கீங்க. உங்கள் பார்வையில் பிராமணர்கள் உருவாக்கிய மனுதர்ம சாஸ்திரங்கள் தான் இன்னமும் இங்கே ஆட்சி புரிகின்றது. பிற்படுத்தபட்ட மக்கள் முதல் தாழ்த்துப்பட்டவர்கள் வரைக்கும் என்ன தான் அலங்காரம் செய்து கொண்டாலும் வாழ்நாள் முழுக்க கீழே தான் என்று தானே சொல்ல வர்றீங்க? சரி இன்னும் சில பதிவுகள் கழித்து கலைஞர் ஆட்சியில் தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்கு ஏன் அவரும் பிராமணர்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்? என்ற கட்டுரையும் வரும். அதைப் படித்து உங்கள் பார்வை என்ன? என்று சொல்லவும். அதன் பிறகு இது குறித்து முழுமையாக பேசுவோம்.

ஜோதிஜி said...

நான் அறிந்தவரையில் சுபவீ நாட்டுக்கோட்டை அல்ல. வேறொரு பிரிவு என்றே நினைக்கிறேன். ஆனால் இன்னமும் என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அப்புறம் ப சிதம்பரம் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஒரு கோடி விமர்சனம் உண்டு. ஆனால் சாதி மதம் கடவுள் நம்பிக்கை போன்ற எந்த கோட்பாடுகளும் அவரிடம் இல்லை. ஆனால் பதவி இல்லாமல் இருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக குடும்பத்தினர் கட்டாயத்தின் பேரில் யாகம் பூஜை சிறப்பு வழிபாடு போன்றவற்றில் கலந்து கொள்கிறார்.

நான் பிக்பாஸ் பார்த்தது இல்லை. என் நேரம் முக்கியமானது. என்னால் அதிக எழுத முடிவதற்குக் காரணம் இதுவும் ஒன்று. அது குறித்து எழுதுபவர்களை கடந்து சென்று விடுவதுண்டு. முகநூலில் அது பற்றி எழுதுபவர்களின் இடுகை அடுத்த முப்பது நாளைக்கு என் பார்வைக்கு படாத அளவுக்கு மாற்றி வைத்து விடுவேன். கிண்டில் அன்லிமிட் ல் இருப்பதால் இரண்டு நாளைக்கு ஒரு புத்தகம் வாசிக்க முடிகின்றது. தொடர்ந்து விமர்சனம் இதில் வரும். தொடக்கம் முதல் கமல் குறித்த அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி, அவர் பேசும் கொள்கைகள் குறித்து நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. அது அவருக்கான வாழ்க்கை. நாம் சொல்ல எந்த உரிமையும் இல்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

கரந்தை ஜெயக்குமார் said...

சுப வீ போற்றுதலுக்கு உரிய மனிதர்
பண்பட்டப் பேச்சாளர்

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

அறிமுகப்படுத்திய விதம் அருமை.