Friday, December 31, 2021

அரசு பள்ளிக்கூட மாணவர்களின் கனவு 7.5 சதவிகிதம் - திமுக ஏன் அழிக்க விரும்புகின்றது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள சிறிய புள்ளியைத் தொடங்கி வைத்தவர்களாக என் கண்ணுக்குத் தெரிகின்றார்கள்.  இட ஒதுக்கீடு என்ற விசயத்தில் முறையே 50 சதவிகிதம் கடைசியாக ஜெயலலிதா உருவாக்கிய 69 சதவிகிதம் என்பது இங்கே மிகப் பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது. 



எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History

இதனை இங்கே குறிப்பிட்டு எழுதக் காரணம் கருணாநிதி போல ஒவ்வொன்றிலும் தனக்கு என்ன ஆதாயம்? என்பதனைப் பார்க்காமல் அந்தப் பிரச்சனை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிரிமினல் தனம் செய்யாமல் முறைப்படி சட்டப் பாதுகாப்பு செய்து வைத்த காரணத்தால் இட ஒதுக்கீடு விசயத்தை எவராலும் கை வைக்க முடியவில்லை.

Thursday, December 30, 2021

காலம் மாறும்.

நீங்கள் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள குற்றவாளிகள் என்று யாராக இருந்தாலும் நீதிமன்றம் 15 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைத்து விசாரித்து விட்டு மீண்டும்  கூட்டி வாருங்கள் என்றே அறிவுறுத்தும்.  



Wednesday, December 29, 2021

5 மணி நேரம் (2021 கற்றதும் பெற்றதும்)

அமேசான் கிண்டில் சார்பாக ஒரு போட்டி நடந்தது. அதற்காக ஒரு வாரத்தில் இரவு நேரத்தில் தினமும் மூன்று மணி நேரம் என்கிற ரீதியில் 5 முதலாளிகளின் கதை என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி ( மின் நூல் வடிவம்) வெளியிட்டேன். பரவலாகச் சென்றது. விமர்சனம் 100 க்கும் மேல் வந்தது. வெற்றிக்கான ஆடு புலி ஆட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. 



Monday, December 27, 2021

2021 கற்றுத் தந்த பாடங்கள்

கற்றுக் கொடுத்தது 2021

1. கடந்த இரண்டு வருடங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் நல்ல தரமான நிர்வாகம் நடத்தும் தனியார் நிறுவனங்கள் தவிர மற்ற அனைவரின் வாழ்க்கையிலும் பொருளாதாரக் குறைபாடுகள் இருந்தது.  நாங்களும் விதிவிலக்கல்ல.  அளவீடுகள் மட்டும் வித்தியாசமுண்டு.  

Sunday, December 26, 2021

காசி புனித ஸ்தலம் (மோடி ஒரு கருவி)

"நாங்கள் அதிகாலையில் கங்கையில் மூழ்கி எழுந்த போது குளிரை விட நாற்றமும் சகித்த முடியாத வாடையும் கஷ்டமாக இருந்தது.  அதை விட லேசாக வெளிச்சம் வந்த பின்பு ஆற்றைப் பார்த்தேன். குழந்தை பிணம் பாதி எரிந்து மீதி எரியாமல் மிதந்து போனது.  அங்கங்கே தலை வேறு முண்டம் வேறு கிடந்தது".

இப்படித்தான் நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா காசி சென்று வந்த பயணம் பற்றி என்னிடம் கூறினார்.  அந்த சமயத்தில் (1984) அப்பாவும் அம்மாவும் தாஜ்மஹால் முன் எடுத்து வந்த படத்தை வேடிக்கை பார்த்தோம். பாடத்தில் படித்த மும்தாஜ் குறித்து சுவராசியமாக பேசிக்கொண்டோம்.

2014 முதல் தவம் போல படிப்படியாக நகர்ந்து இன்று வாரணாசி முழுக்க அங்கு வாழும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து விசயங்களையும் அந்தத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்துள்ளார்.  

நான் கடந்த 30 வருடங்களாக காசி குறித்த செய்திகளைக் கவனித்து வருகின்றேன். மதம் மற்றும் இறைவன் சார்ந்த ஆர்வம் என்பதனை விட ஒரு புனித நகரத்தை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எப்படி சூறையாட முடியும் என்பதனை அங்கு சென்று வந்த பலர் மூலம் அறிந்தே வைத்துள்ளேன்.

பல நண்பர்கள் தனிப்பட்ட உரையாடலின் போது மோடி மிகவும் சிலாகித்துப் பேசுகின்றார்கள். அரசு நடக்கும் விதத்தை ஆச்சரியத்துடன் பேசுகின்றார்கள்.  அவர்கள் இணையத்தில் எழுதும் கட்டுரையில் எப்போதும் போலத் தூற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஏன் என்று கேட்டேன்.

பிழைப்பு முக்கியம் பாஸ் என்று சிரித்துக் கொண்டே சொல்கின்றார்கள்.

மோடி என்பவர் நமக்குப் பிரதமர்.  அவர் காசி விஸ்வநாதருக்கு ஒரு கருவி என்றே நான் நினைக்கின்றேன்.  அடுத்த சில வருடங்களில் அயோத்தி மற்றும் காசி இது தவிர வட இந்தியாவில் உள்ள இந்து புனித தலங்கள் அனைத்தும் தொடர்ந்து ஒரே புள்ளியில் (ரயில் மார்க்கமாக) இணைக்கப்பட்டு வருகின்றது.

அஷ்டலக்ஷ்மிகளும் அருள்பாலிக்கப் போகின்றார்கள்.

இனி வரும் இந்து மக்களின் ஆன்மீகப் பயணம் அதிகரிக்கும் என்பது ஒரு பக்கம். 

அரசுக்கு வரக்கூடிய வருமானம் பல மடங்கு கூடும் என்பது மறு பக்கம்.

(மூன்று பகுதிகள் காசி குறித்த காணொளி கீழே இணைப்பில் உள்ளது)

https://youtu.be/Mbk_ZG7CwUI

https://youtu.be/VW0lHR7bBqA

https://youtu.be/UxKzqQ8vrkg

Saturday, December 25, 2021

வரலாற்று நாயகர் வாஜ்பாய்

மறைந்த பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் டிசம்பர் 25. 13 நாட்கள். 

Friday, December 24, 2021

ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பு (முழுமையான விபரங்கள்)

நீங்கள் மத்திய மாநில அரசுகளை எப்படிப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது? கட்சி ரீதியாக? கொள்கை ரீதியாக? அல்லது அவர்கள் செய்யும் நிர்வாக ரீதியாக.  நான் எப்போதும் நான் பணிபுரிந்த வருடம் 100 கோடி வரவு செலவு செய்த நிறுவனத்தோடு மாநில அரசையும், 3000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ள மற்றொரு நிறுவனத்தை மத்திய அரசுடன் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதுண்டு.  

நிர்வாக அமைப்பு வேறு. எதிர்பார்ப்புகளும் வேறு.  




Thursday, December 23, 2021

Letter to Thol.Thirumavalavan அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்..

Letter to Thol.Thirumavalavan

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்..

என் பிரியத்துக்குரிய திருமா அண்ணன் அவர்களுக்கு

Thol.Thirumavalavan நீங்க இந்த ஐடி யில் இருப்பீர்களா? அல்லது இது உங்கள் பார்வைக்கு வருமா? என்பது குறித்து எனக்கு கவலையில்லை.  நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்று ஓய்வாக இருக்கும் போது பட்டியல் இட்டுப் பார்த்தேன்.  அப்போது தான் இந்த துண்டுச்சீட்டு என் பார்வையில் பட்டது.



Tuesday, December 21, 2021

மோடி - அவர் ஒரு கருவி.

"இத்தனை கோடி இத்துகளின் புனிதத் தலமிது. ஏன் இப்படி அசுத்தமாக இருக்கின்றது"?



Sunday, December 19, 2021

கர்மா என்ற வார்த்தை

"மோடி இந்தியாவை இரண்டாக பிளக்கின்றார். இதுவரை இருந்த பிரதமர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றார்" என்று டெலிகிராப் ஆங்கில நாளிதழ் அலறுகின்றது.  இது வடக்கே.  

இங்கே நடப்பது மொத்தத்திலும் வித்தியாசமானது.  



Saturday, December 18, 2021

நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

லோக மான்ய பாலகங்காதர திலகர் காலத்தோடு கரைந்த பின்பு அடுத்த சுடரொளி ஏந்தி ஓடத் தொடங்கியவர் மோகன் தாஸ் கரம் சந்த்.  

பின்னாளில் தான் மகா ஆத்மா காந்தியாக மாறினார்.

முன்னவர் கேட்டது "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை".


Wednesday, December 15, 2021

எதற்கும் துணிந்தவன்.

இது வரப்போகின்ற திரைப்படத்தின் பெயர் என்று தானே நீங்கள் நினைப்பீர்கள்? 


Monday, December 13, 2021

தாயம் 1 (முதல் பொது மேடை)

கோவையில் இருக்கும் நண்பர் பழனிச்சாமி அழைத்து டிசம்பர் 12 அன்று கோவையில் நடக்கும் கூட்டத்தில் பேசுங்க. பெயர் ஏற்கனவே கொடுத்து விட்டேன் என்றார். கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் முடிந்தது விட்டது. பேசி விட்டு வந்தேன்.

Thursday, December 09, 2021

விஜயன் திருமணம் டிசம்பர் 8.

டிசம்பர் 7 அன்று இராமேஸ்வரம் சென்று இருந்தேன். தம்பி விஜயன் திருமணம் டிசம்பர் 8.  


Monday, December 06, 2021

கதை சொல்லும் நேரமிது - Podcast

பாட்காஸ்ட் குறித்து நண்பர்களுக்குப் பெரிய குழப்பம் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. பலருக்கும் அதனைப் பற்றி அதன் முக்கியத்துவம் குறித்துப் புரியவில்லை என்றே நினைக்கின்றேன். 

சில தினங்களுக்கு முன் அமேசான் கிண்டில் செயலி குறித்து விளக்கமாக எழுதி இருந்தேன். கோவையிலிருந்து தம்பி தரவிறக்கம் செய்து வாட்ஸ்ஆப் வாயிலாக உறுதிப் படுத்தி இருந்தார். மகிழ்ச்சி.

நாம் மனத்தடைகளுடன் இருப்பதால் எதைப் பார்த்தாலும் பயம். உள்ளூர இருக்கக்கூடிய அச்ச உணர்வு புதிய வாய்ப்புகள் பக்கம் நம்மை நகர விடாமல் குண்டுச் சட்டிக்குள் கழுதை மேய்க்க வைத்துக் கொண்டே இருக்கின்றது என்பதனை உணரும் போது வயது அறுபது ஆகி விடுகின்றது. கடைசியில் என்ன? கழிவிரக்கத்துடன் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமையுடன் புலம்பி கடைசியில் போய்ச் சேர வேண்டியது தான்.

வானொலி இருந்த வரைக்கும் நாம் செய்து கொண்டு இருந்த வேலைகள் நிற்காது. அதே சமயத்தில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நாம் நம் கடமையைச் செய்து கொண்டே இருந்தோம். தொலைக்காட்சி பரவலாக அறிமுகம் ஆனதும் அதன் முன்னால் அமர்ந்து நாம் நம் கடமைகளைத் தியாகம் செய்து நேரம் ஒதுக்கி யாருக்காகவே அழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்.

ஆனால் பாட்காஸ்ட் என்பது உங்கள் நேரத்தைத் திருடாது. இதுவும் வானொலி போலத் தான்.  இதனைத் தமிழில் செய்தியோடை என்கிறார்கள்.

பலவிதமான செய்தியோடைகள் உள்ளது.  

1. கூகுள் 2. ஸ்பாட்டிபை 3. ஆங்கர் 

இவை மூன்று உலகம் முழுக்க அதிகமான பேர்களுக்குத் தெரிந்த செயலி ஆகும்.  ப்ளே ஸ்டோரில் சென்று உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.  உங்கள் மின் அஞ்சல் முகவரி அல்லது பெயர் மற்றும் கடவுச் சொல். எப்போதும் போல.

பாடல்கள் பேச்சுகள், உரையாடல்கள் (அனைத்து மொழிகளும் உண்டு) என்று பயணம் செய்யும் போது மற்ற வேலைகள் செய்து கொண்டு இருக்கும் போது கேட்கலாம்.   கட்டணத்துடன் பிரிமியம் சேவைகளும் உண்டு. 

இலவசச் சேவைகளில் பெரும்பாலான அனைத்தும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.

(பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கடித வரிகளை ஏன் பாட்காஸ்ட் ல் தொடர்ந்து வலையேற்றி வருகின்றேன் என்பதற்கு ஒரே காரணம் அது வெறுமனே அரசியல்வாதிகள் எப்போதும் எழுதும் கடிதம் அல்ல. அதில் சமூகவியல், சர்வதேச அரசியல், தேசிய மற்றும் மாநில அரசியல் போன்ற அனைத்துத் துறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது)

ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது ஒரு அளவுக்கு மேல் உங்கள் சிந்தனைகளை வளர்க்காது. அதை விட்டு வெளியே செல்லவும் உங்களுக்கு மனமும் வராது. காட்சி ஊடகம் பக்கம் சென்றால் மொத்தமும் காலி. அது பேஸ்புக் காணொளி, ரீல்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ், படங்கள் கடைசியாக யூ டியூப்.  முடிந்தது ஜோலி.  

சினிமா... சினிமா... இது தான் கடைசி வரைக்கும் உங்கள் மண்டைக்குள் இருக்கும்.

சில மாதங்கள் கழித்து உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள்.  கட்டாயம் தமிழக தொலைக்காட்சி விவாதங்களை பார்க்கவே பார்க்காதீர்கள். அரை மெண்டல் ஆகி விடுவீர்கள்.

உங்களை உங்களுக்கே பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. மனரீதியாக பல மாறுதல்களும் உருவாகி இருக்கும்.

முக்கியமான மூன்று பாட்காஸ்ட் இணைப்பு கொடுத்து உள்ளேன்.  உலகம் முழுக்க அத்தனை வளர்ந்து நாடுகளிலும் இந்த சேவை தான் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது.  

இதன் தொடர்ச்சியாக ஆடியோ புத்தகங்கள் வந்து கொண்டு இருப்பதை நீங்கள் அறிந்து இருக்க வாய்ப்புண்டு.

நாமும் மாறித்தான் ஆக வேண்டும்.

முந்திக் கொள்ளுங்களேன். முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் தெரியப்படுத்துங்கள்.

()()()

06 December 2021

தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்களின் ஒவ்வொரு உரையும் அறிவார்ந்த ஆச்சரியப்படத் தக்க வகையில் அமைந்துள்ளது. இது போன்ற உரை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் சென்று அடைய வேண்டும். கேட்கும் ஒவ்வொருவரும் இதனை கடமையாகச் செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் கல்வி அறிவு மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனை உணர்ந்து அம்பேத்கார் உருவாக்கிய உண்மையான கொள்கைகளையும், அம்பேத்கார் என்ற பெயரை வைத்து ஓட்டு அரசியல் செய்து தங்களையும், தங்கள் அதிகார வெறிக்காக பட்டியல் இன சகோத சகோதரிகளை காலம் முழுக்க அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றவர்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள திரு. அண்ணாமலை அவர்கள் பின்னால், பாஜக பின்னால் நிற்பது அவசியம். 

06 December 2021 

Annamalai Kuppusamy Nov 28 பாஜக பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒலிவடிவம்

Listen to "அம்பேத்கார் வகுத்து தந்த மக்கள் பாதை மகத்தான பாதை (கு. அண்ணாமலை)" by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. 


Saturday, December 04, 2021

நல்ல சரக்கு வழங்கு.

 பாஜக ஆட்சியின் நிரந்தர வருகையை எதிர்பார்த்து



Wednesday, December 01, 2021

இந்தியா 1989-2014 - ஒரு முன்னுதாரண மாற்றம்

 PART I   #2014மோடிக்குமுன்பின்

இந்தியா 1989-2014  - ஒரு முன்னுதாரண மாற்றம்

சீனாவின் வளர்ச்சியைத் தொட இந்தியாவிற்கு இன்னும் 40 வருடங்கள் ஆகலாம் என்று ஒவ்வொருவரும் ஒப்பிட்டு பெருமையுடன் சீனாவைப் பார்க்கின்றார்கள்.