Saturday, December 04, 2021

நல்ல சரக்கு வழங்கு.

 பாஜக ஆட்சியின் நிரந்தர வருகையை எதிர்பார்த்து




1. 591 வருடங்கள் அயோத்தியாவில் ராமர் கோவில் காத்திருந்தது

2. 72 வருடங்கள் முத்தலாக் காத்திருந்தது

3. 65 வருடங்கள் காஷ்மீரில் Article 370 காத்திருந்தது

4. 64 வருடங்கள் குடியுரிமை திருத்த சட்டம் காத்திருந்தது

5. 60 வருடங்கள் தேசிய போர் நினைவுச் சின்னம் காத்திருந்தது

6. 50 வருடங்கள் காவிரி மேலாண்மை ஆணையம் காத்திருந்தது

7. 43 வருடங்கள் படைவீரர்களுக்கான One Row One pension திட்டம் காத்திருந்தது 

8. 43 வருடங்கள் கேரளா, கொல்லம் பைபாஸ் சாலை காத்திருந்தது

9. 41 வருடங்கள் இந்தியா - பங்களாதேஷ் சர்வதேச எல்லை கோடு மறுசீரமைப்புகாக காத்திருந்தது

10. 40 வருடங்கள் NRC நடைமுறைப்படுத்தல் காத்திருந்தது

11. 40 வருடங்கள் பன்சாகர் கால்வாய் திட்டம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சிகாக காத்திருந்தது

12. 34 வருடங்கள் புதிய கல்வி கொள்கை காத்திருந்தது

13. 34 வருடங்கள் தேசிய போலீஸ் நினைவு சின்னம்  காத்திருந்தது

14. 32 வருடங்கள் தேசிய நீர்வழி போக்குவரத்துக்கு The National **Waterway** 1 or NW-1 or Ganga-Bhagirathi-Hooghly காத்திருந்தது

15. 28 வருடங்கள் பினாமி பரிவர்த்தனைகள் சட்டம் காத்திருந்தது

16. 24 வருடங்கள் சுகோய் போர் விமானத்திற்கு பிறகு நவீன தொழில்நுட்பம் கொண்ட ரபேல் விமானங்கள் காத்திருந்தது

17. 24 வருடங்கள் இந்திய ராணுவத்திற்கு தேவையான நவீன தொழில்நுட்பம் கொண்ட உபகரணங்கள் காத்திருந்தது

18. 24 வருடங்கள் இந்திய ராணுவத்திற்கு உள்நாட்டில் தயாரான  குண்டு துளைக்காத கவசஉடைகள் காத்திருந்தது

19. 21 வருடங்கள் அசாம் ,பிரம்மபுத்திரா நதியின் மீது 5 கிலோமீட்டர் நீளம் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலம்  காத்திருந்தது

20. 18 வருடங்கள் ஜிஎஸ்டி(GST) அமலாக்கம் காத்திருந்தது

21. 16 வருடங்கள் கத்ரா ரயில் பாதை காத்திருந்தது

22. 15 வருடங்கள் சர்தார் சரோவர் அணை காத்திருந்தது  (க)

23. 15 வருடங்கள் மேற்கு புற அதிவேக நெடுஞ்சாலை (Kundli–Manesar–Palwal Expressway) காத்திருந்தது

24. 12 வருடங்கள் ராஜஸ்தான், கோட்டா சம்பல் தொங்கு பாலம் காத்திருந்தது

25. 12 வருடங்கள் அமேதியில் ரைபிள் தொழிற்சாலை காத்திருந்தது

26. 11 வருடங்கள் கிஷங்கங்கா நீர் மின் நிலையம் காத்திருந்தது

இதுபோல

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இன்னும் பல திட்டங்களையும் மற்றும் பல புதிய திட்டங்களையும் நிறைவேற்ற சீரிய முயற்சிகளை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.

அவை அனைத்தும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையும்

அத்தனை காத்திருப்புகளையும் நனவாக்கியவர் பிரதமர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி (Narendra Modi) அவர்கள் மட்டுமே.

()()()

முன்பு சாராயக்கடைகள் பற்றி எழுதும் போது எரிச்சல் வரும். இப்போது பார்த்துப் பார்த்து மனம் பக்குவமடைந்து விட்டது.

1. ஏற்கனவே இருந்த பங்காளி போல இவர்களும் பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகமாக வாங்குவதன் மூலம் எத்தனை ஆயிரம் கோடி அடிக்கின்றார்கள் என்பது இன்று வரையிலும் எவராலும் கண்டு பிடிக்க முடியாத ரகசியமாகவே உள்ளது.

2. அமைச்சராக தற்போது உள்ள (எத்தனை காலம்?) செந்தில் பாலாஜி மற்ற கட்சிக் காரர்களை திமுக பக்கம் கொண்டு வந்து சேர்க்க டாஸ்மாக் பார் வழங்குவதாக உறுதி அளிப்பதாக தகவல் வருகின்றது.

3. அந்தப் பங்காளி போல இவர்களும் சாராய ஆலைகளிலிருந்து நேரிடையாக டாஸ்மாக் நிர்வாக கணக்கில் வராமல் அனைத்து விதமான சரக்குகளும் கடைகளுக்கு வந்து சேரும் நல்ல சிஸ்டம் வைத்து வாழ்வாங்கு வாழ்கின்றார்கள்.  இந்தக் கணக்கு மூலம் எத்தனை ஆயிரம் கோடி வரும் என்பதனை யூகிக்க முடியாது.

4. விபத்து அதிகமாக நடக்கின்றது. நேரத்தை மாற்றும் உத்தேசம் இல்லை என்றார்கள்.  இப்போது இந்த நேரத்திற்கு மாற்றி உள்ளனர். உள் அரசியல் என்னவென்று தெரியவில்லை. நிச்சயம் ஏதோவொரு காரணம் இருக்கலாம்.

5. காலையில் இயந்திரத்தில் உட்காரும் போது சரக்கு வாடையில் டைலர் இருக்க வாய்ப்பு கொஞ்சம் குறையும்.  இரவு எட்டு மணிக்கு மேலே டுப்ளீகேட் சரக்கை இரண்டு மடங்கு மூன்று மடங்கு தொகையில் விற்று ஒரு மணி நேரத்திற்குள் பல ஆயிரங்களை வாரிக் குவித்துக் கொண்டு இருக்கும் சிறு தொழில் அதிபர்களுக்குச் சற்று சங்கடமாக இருக்கக்கூடும்.  அதிகாலையில் எழுந்தவுடன் குடித்தே ஆக வேண்டும் என்பவர்களுக்குத் தாயுள்ளத்தோடு அரசு கருணை காட்ட வேண்டும்.

இருபது ரூபாய் சரக்கை 120 ரூபாய்க்கு விற்கும் அரசே நல்ல சரக்கு வழங்கு.

நட்டத்தில் தள்ளாடும் டாஸ்மாக் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் என் ஈரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அமைச்சர் மாதம் ஆயிரம் கோடி அள்ள வேண்டும் என்றால் என் ஈரல் முக்கியம் அல்லவா?

நல்ல சரக்கு வழங்கு.


1 comment:

ஸ்ரீராம். said...

டாஸ்மாக் விஷயத்தில் திமுக என்ன, அதிமுக என்ன... ஒரே குட்டை, ஒரே மட்டை..