Wednesday, December 15, 2021

எதற்கும் துணிந்தவன்.

இது வரப்போகின்ற திரைப்படத்தின் பெயர் என்று தானே நீங்கள் நினைப்பீர்கள்? 





ஆனால் இன்று நான் காலை சந்தித்த மனிதர் எனக்கு அப்படித்தான் தெரிந்தார். 2019 ஆம் ஆண்டு ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் என்பது அவருக்கு மிகச் சாதாரணத் தொகையாக இருந்தது. பொருட்படுத்தவே தேவையில்லாத அளவுக்கு வாழ்க்கை, தொழில் இயல்பாகவே போய்க் கொண்டு இருந்தது. கடந்த 24 மாதங்கள் அவர் வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் தற்போது ஷிப்ட் வேலைக்குச் சென்று கொண்டு இருக்கின்றார். 

"எதையும் இழக்கவில்லை. நான் மீண்டும் படியில் ஏறப் பாடம் கற்றுக் கொண்டு இருக்கின்றேன். இந்த முறை நிதானமாக" 

என்று சொன்ன மனிதரை ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்தி விட்டு வந்தேன்.

Katrukol Kalathil Eranku - "' இடுக்கண் களையும் நட்பு '". -67   

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்த பாரத நாடும் மொத்தமாக பதறிப்போன இந்த துரதிருஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடம் நஞ்சப்பா சத்திரம் என்ற கிராமம். அந்த கிராமத்து மக்களில் பலர் பெருத்த ஓசையுடன் ஹெலிகாப்டர் மரத்தில் மோதிக் கீழே விழுந்ததை பார்த்து பதறிப் போயினர்.
பெருத்த ஓசையுடன் தீப்பிழம்புகளுடன் ஹெலிகாப்டர் தரையில் விழுந்தபோது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தப்பித்து ஓடாமல், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக தம் உயிரையும் பொருட்படுத்தாமல் எரிந்துகொண்டிருக்கும் தீயிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். கடும் முயற்சியால்தான் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து உயிருடன் ஒரு சிலரை மீட்க முடிந்தது.
இந்த மீட்புப் பணிகளில் அந்த கிராமத்தை சேர்ந்த இருவருக்குத் தீக்காயங்களும் ஏற்பட்டன.
பெரிதும் கல்வியறிவில்லாத மலைநாட்டு மக்கள் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து ராணுவ வீரர்களைக் காப்பாற்ற காட்டிய அந்த விவேகம் அந்த மனித நேயம் அந்தத் தொண்டு அந்த சேவை மனப்பான்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆபத்தில் கை கொடுத்தோரை கௌரவித்து மரியாதை செலுத்தும் விதமாக குன்னூர் வெலிங்டன் ராணுவப் படையினர் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்து உள்ளனர்.

அந்த சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்காக, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட சென்டர் மற்றும் நஞ்சப்பா சத்திரம் ஆகிய இடங்களில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் தலைமை வகித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நாட்டிற்காக உயிரைத் தாங்கும் உடலை துச்சமாக மதி...

எப்படி ஐயனே...?

அந்த அதிகாரத்தில் "மெய்" இல்லை... கவனித்தாயா...?

ஒ...! இப்படியும் கவனிக்க வேண்டுமோ...?

ஒரு அதிகாரத்தில் உயிரும் இல்லை... மெய்யும் இல்லை...

ஆத்தாடி...!!! "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று ஔவை பாட்டி சொன்னது ஓரளவு புரிகிறது... நன்றி தாத்தா...