Friday, May 01, 2026

மனதோடு ஒரு மௌன உரையாடல்: ஜோ பில்டர் காபி

காலத்தின் கண்ணாடி: ஜோ பில்டர் காபி

வாழ்க்கை என்பது பெரும்பாலும் பிறருக்காகவே கரைந்து போகிறது. குடும்பம், தொழில், நிறுவனம் எனப் பல கடமைகளுக்கு நடுவில் நமக்கென்று மிஞ்சுவது நமது தனித்திறமைகள் மட்டுமே. அந்தத் தனித்திறமைதான் ஒரு மனிதனின் உண்மையான சொத்து.

ஜோ அதிகாலை பில்டர் காபி - 2026 March: 50 நாட்களும் ஒரு கோப்பை காபியும்: தமிழகத்தின் அண்மைக்கால நிகழ்வுகள். (Jo Thoughts Book 1) (Tamil Edition)

ஐரோப்பிய ஒப்பந்தங்களுக்குப் பிறகு திருப்பூரின் ஆயத்த ஆடைத் தொழில் அதிவேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கச் சந்தையின் மாற்றங்கள், ஓயாத உழைப்பு, நிற்க நேரமில்லாத பணிச் சூழல் எனத் திருப்பூர் இன்று பெரும் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உரையாடப் பொழுதுகள் அற்ற இந்த இயந்திரக் காலத்திலும், உறக்கத்தைத் தள்ளி வைத்துவிட்டு எனக்கான பொழுதுகளை நான் அர்த்தமுள்ளதாக மாற்றினேன்.

அதிகாலைப் பொழுதின் அமைதியில், சமூகத்தின் மனசாட்சியாகவும் காலத்தின் கண்ணாடியாகவும் உருவானதுதான் "ஜோ பில்டர் காபி". சமூகத்தின் பல்வேறு முகங்களை, வாழ்வியலின் யதார்த்தங்களை விவரிக்கும் இக்கட்டுரைகள் இப்போது கிண்டில் அமேசான் தளத்தில் மின்னூலாக மலர்ந்துள்ளன.

ஒரு கோப்பைச் சூடான காபி தரும் புத்துணர்ச்சியோடு, சிந்தனையைத் தூண்டும் இந்த எழுத்துப் பயணம் உங்கள் கைகளில்...

இப்பொழுதே வாசிக்கத் தொடங்குங்கள்!

ஒவ்வொரு விடியலிலும் ஒரு கோப்பை காபியின் நறுமணத்தோடு, என் மனதின் ஆழத்திலிருந்து கசிந்த சொற்கள் இவை. வெளியே சொல்லத் தெரியாத, அல்லது சொல்ல வார்த்தைகள் இன்றித் தவிக்கும் நம் உள்மனப் போராட்டங்களுக்கு வடிகாலாக அமையப்போகும் ஒரு வாழ்வியல் பயணம் இது.




 வாசிக்கும்போது உங்கள் மன அடைப்புகள் நீங்கி, ஒரு தெளிந்த நீரோடை போன்ற உணர்வைத் தருவதே இந்தத் தொடரின் நோக்கம்.


"ஜோ பில்டர் காபி - பகுதி 4": E Book - 95 - April 2026 சமூக ஊடக மாயவலை

கடந்த நான்கு தொகுதிகளில் நூறு கட்டுரைகளுக்கும் மேலாக உங்களோடு பயணித்துவிட்டேன். இதோ, இன்று இந்த ஐந்தாவது தொகுதியில்  முத்துக்களாக பதிமூன்று கட்டுரைகளைத் தொகுத்து வழங்குகிறேன்.

வெளியே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளுக்காக, அரசியல் கட்சிகளும் தொண்டர்களும் மே 4-ஆம் தேதியை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். 

ஒரு பக்கம் தீவிரமான அரசியல் கட்டுரைகளை நான் எழுதி வந்தாலும், இன்னொரு பக்கம் என்னைத் தொடர்ச்சியாக மெருகேற்றிக் கொள்ளும் 'ஜோ பில்டர் காபி' போன்ற மனதோடு பேசும் கட்டுரைகளை நான் ஒருபோதும் கைவிடுவதில்லை.

வாழ்க்கை என்பது கடந்து போன காயங்களின் மிச்சம் அல்ல; அது நாம் அடைய விரும்பும் இலக்கை நோக்கிய பயணம்.

 சிக்மண்ட் பிராய்டின் கடந்த காலக் கோட்பாடுகளைத் தாண்டி, அட்லரின் தத்துவப்படி "இன்று நாம் எப்படி இருக்கிறோம்" என்பதற்கு நாமே பொறுப்பேற்கும் புதிய கோணத்தை இது முன்வைக்கிறது.

ஜோ பில்டர் காபி (Jo Filter Coffee) மனதோடு உரையாடுங்கள்: Aprile 2026 - E Book - 92 (Tamil Edition)

மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்குவதை நிறுத்திவிட்டு, "நமக்கான கடமை எது?" என்று பிரித்துப் பார்க்கப் பழகும்போதுதான் உண்மையான சுதந்திரம் பிறக்கிறது.

 வாழ்க்கையை ஒரு ஓட்டப்பந்தயமாகப் பார்க்காமல், ஒவ்வொரு கணத்தையும் ரசித்து ஆடும் ஒரு நடனமாகப் பார்க்கப் பழகினால், பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும் நம்மை விட்டு அகலும்.

வாழ்க்கை என்பது புள்ளிகளால் ஆன கோடு அல்ல; அது தருணங்களின் தொகுப்பு. கடந்த கால கவலையோ, எதிர்கால பயமோ இன்றி, 'இந்த நிமிடம்' நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை இந்த மின்னூல் வலியுறுத்துகிறது.  சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்குப் பயந்து வாழ்பவர்களுக்கும், தத்துவ ரீதியாக வாழ்க்கையை அணுக விரும்புபவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். சுற்றும் முற்றும் நடப்பதை மறந்து, வாசிப்பில் மூழ்கித் திளைப்பவர்களுக்காக மட்டும்...

ரசிக்க... ருசிக்க... வாசிக்க... இதோ உங்கள் கைகளில் 'ஜோ பில்டர் காபி'

ஜோ பில்டர் காபி: காலத்தின் கண்ணாடி - 2: கொஞ்சம் இளைப்பாறலாமா? E Book No 90 (Tamil Edition) https://amzn.in/d/05iEgEpf 


ஜோ பில்டர் காபி - பகுதி 5 - பேரன் பேத்திகள் பிரச்சார பீரங்கிகளாக மாறியிருக்கின்றார்கள் 2026 தேர்தல் களம்: E Book No 99 (Tamil Edition)

Sunday, June 08, 2025

திண்டுக்கல் தனபாலன் அவர்களைச் சந்தித்தேன்.

கடந்த ஆறாம் தேதி (06.06.2025) மதியம் அன்று திண்டுக்கல் தனபாலன் அவர்களை அவருடைய புதிய வீட்டில் சென்று சந்தித்தேன்.  அவருக்கு உடல் நலம் பாதிப்பு என்று தகவல் வந்த நாள் முதல் அவரைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  மகளுக்காக காந்தி கிராமம் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய வேலையின் பொருட்டு சென்ற போது அப்படியே அவர் வீட்டுக்குச் சென்று இரண்டு மணி அங்கே இருந்து முழுமையாக சந்தோஷமாக திரும்பி வந்தோம். 

அவர் மனைவி உற்சாகமாகத்தான் இருக்கின்றார். மகள் சென்னையில் பணிபுரிகின்றார். வீடு நன்றாக கட்டியுள்ளார். எல்லாப் பகுதிகளிலும் காற்று முழுமையாக வரும் அளவுக்கு திட்டமிட்ட வீடு மிகவும் சிறப்பான முறையில் கட்டப்பட்டு இருந்தது. அனைத்து மகிழ்ச்சியையும் வீடு கொண்டு இருந்தாலும் தொடர் சிகிட்சை, உடல் நலத்தில் உள்ள பிரச்சனைகள் என்று தனபாலன் மன ரீதியாக இன்னும் முன்னேற்றம் அடையாமல் தான் இருக்கின்றார்.

நான் தொடர்ந்து உற்சாகமாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவர் மனைவி என் வயதைக் கேட்டார். சமீப காலமாக தனபாலன் வெளிவட்டாரத் தொடர்புகளை துண்டித்துக் கொண்டு விட்டார். யாருடனும் உரையாடுவது இல்லை. எங்கும் வெளியே செல்வதில்லை. பழையபடி மாற்ற ஆலோசனை சொல்லுங்கள் என்று என்னிடம் ஆதங்கத்துடன் கேட்டார். 

ஆனால் தனபாலன் தான் எழுதிய கணக்கு சார்ந்த பதிவுகளை எவரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்? என்ற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது. அவர் இன்னமும் திருக்குறள் ஆராய்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர் பேச்சு முழுக்க திருவள்ளுவர், அவர் வாழ்ந்த காலம், அவர் உருவாக்கிய திருக்குறள் சார்ந்த அதிசயங்கள் மற்றும் ஆச்சரியங்கள், எவரும் அதைப் பற்றியே பேசாமல் இருப்பது, பேசிய நமக்கு எவ்வித அங்கீகாரம் கிடைக்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கும் சமூகம் குறித்து அதிகம் வருத்தப்பட்டார். 

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்வதைப் போல அவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

 


ஒரே தொழிலில் நீங்கள் முப்பது வருடங்கள் பழகினாலும் நெருக்கமான நட்பு வட்டங்கள் அமையாது.  காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு தொழில் ரீதியாக போட்டியாளராக தான் இருப்பார்கள்.  இருக்க முடியும்.  அப்படித்தான் சமூகம் நம்புகின்றது. உருவாக்கவும் செய்கிறது.  

ஆனால் என்னுடைய 15 வருட எழுத்துலகில் முதல் பதிவுக்கு பதில் அளித்து என்னை உற்சாகப்படுத்திய துபாயில் வாழும் சுந்தர் போன வாரம் வரைக்கும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.  நாகா இன்னமும் தொடர்பில் இருக்கிறார். புரிந்தவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து கொண்டு இருக்கிறார்கள்.  

மற்றபடி அரசியல் கட்சி ஆதரவு என்ற பெயரில் அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல் நீண்ட நாட்கள் பழகியவர்களை எதிரி போல பார்ப்பது, மனதிற்குள் சித்திரிப்பது போன்ற காரணங்களால் பல நண்பர்கள் விலகிச் செல்லும் சூழலும் உருவானது. இது கால மாற்றங்களால் உருவான குழப்பங்கள்.  

 ஆனால் கட்சி அரசியலில் மேல் மட்ட தொடர்புகளும் இருப்பவர்கள் அனைவரும் பங்குதாரர் போல் பங்காளியாக இருக்கிறார்கள்.