Saturday, January 25, 2020

நூற்றாண்டு விழா தொடக்க சொற்பொழிவு. ஜோதி கணேசன். சங்கம் பள்ளி பழைய மாணவன்.


2018 முதல் ஆயிரக்கணக்கான மேடைப் பேச்சுகளை யூ டியூப் வழியாகப் பார்த்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஆச்சரியம். திகைப்பு. வியப்பு. அறுவெறுப்பு. அசிங்கம். அற்புதம் என்று எல்லாமே கலந்து கட்டிய கதம்பம் போல.

நானும் பேசியுள்ளேன். பொதுவிடங்களில் பேசியது இல்லை. நிறுவனங்களின் உள்ளே நடக்கும் கூட்டங்களில் தான் பேசியுள்ளேன்.

தயக்கம் இருந்தது இல்லை.  

Friday, January 24, 2020

2030 தமிழ்நாடு எப்படி இருக்கும்?


2030

இன்னும் பத்து வருடங்களில் என் யூகம் சரியாக இருக்குமானால் கீழ்க்கண்ட விசயங்கள் தமிழகத்தில் நடந்தே தீரும். சமீபச் சுற்றுப்பயணங்களில் வழியாகக் கண்டு அறிந்து கொண்டது. சமீப காலமாக ஊடகங்கள் முன்னெடுக்கும் விசயங்கள் வழியாகப் புரிந்து கொண்டது.

நான் எழுதிக் கொண்டிருக்கும் செல்பி நகரத்தின் ஊர்க்கதைகள் என்பதனைச் சுருக்கமாக இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.  இது தான் இப்போதைய சமூகம்.  இது என் பார்வை.  உங்கள் பார்வை வித்தியாசமாக இருந்தால் உங்கள் கருத்துக்களை அறியத் தாருங்கள். நன்றி.

ஜனவரி 5 மற்றும் 6 (2020) அன்று நான் படித்த பள்ளியில் நடந்த ஆண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் முதல் பகுதியை வெளியிட்டுள்ளேன். நேரம் இருப்பவர்கள் பார்க்கவும்.  அடுத்தடுத்த பகுதிகள் தொடர்ந்து வெளிவரும்.  நன்றி.

•••••••

Wednesday, January 22, 2020

கிண்டில் மொழி 2019

அமேசான் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டியில் நெடுங்கதை பிரிவில் 5 முதலாளிகளின் கதையை எழுதி வெளியிட்டேன். போட்டி முடியும் நேரமாக நிர்ணயிக்கப்பட்ட டிசம்பர் 31 அன்று வரை 59 விமர்சனங்கள் வந்தது. விலை ரூபாய் 59 ரூபாய் நிர்ணயம் செய்து இருந்தேன்.
முதல் முதலாக வாசித்தவர் 3 ஸ்டார் கொடுத்து இருந்தார். அதற்குப் பிறகு மற்ற இருவர்கள் 4 ஸ்டார்கள் கொடுத்து இருந்தார்கள். 56 பேர்கள் 5 ஸ்டார் கொடுத்து இருந்தார்கள். போட்டிக்கான நேரம் முடிந்த பிறகும் பலரும் வந்து விமர்சனமும் ஸ்டார் ரேட்டிங் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

Sunday, January 12, 2020

ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ஊரில் நடந்த கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கென விழா மலர் ஒன்றைக் கொண்டு வந்தனர்.  அதற்காக நான் எழுதிக் கொடுத்த சிறப்புக் கட்டுரையிது.  விழா மலரில் வெளியாகியுள்ளது.

 யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரத்
தான்பற்றத் தலைப்படுந் தானே.

திருமந்திரம் - 85

வாழும் வரைக்கும் காதலிக்க முடியும். உங்கள் மனம் விசாலமாக இருந்தால். வாழ்நாள் முழுக்க நினைத்துப் பார்க்க முடியும். நீங்கள் பிறந்த ஊர் உங்களுக்குப் பெரிய தாக்கத்தைக் கொடுத்து இருந்தால்.  நீங்கள் வணங்கிய தெய்வத்தை நாள்தோறும் எங்கிருந்தாலும் பூஜிக்க முடியும்.  

உங்கள் வாழ்நாளில் திருப்பு முனையை உருவாக்கியிருந்தால்.

உங்கள் ஊர் சிறிதாக, வளராத கிராமமாக இருக்கலாம். கால மாற்றத்திற்கேற்ப புதுப்பிக்காத வித்தியாச சூழலில் இருக்க வாய்ப்புண்டு.  ஆனால் ஊருக்குள் வந்து இறங்கியதும் உங்களுக்குள் ஒரு அதிர்வு உள்ளுற ஓடுமே? நீங்கள் ஓடித்திரிந்த தெருவும், படித்த பள்ளிக்கூடங்களும், பழகிய, பார்த்த மனிதர்களும் உங்கள் கண்களில் பட்டு பலவித நினைவுகளைக் கிளறுமே?  அதற்கு உங்களால் ஏதேனும் விலை வைக்க முடியுமா? நீங்கள் அமெரிக்காவில் ஐரோப்பாவில் வாழக்கூடியவராக இருக்கலாம்?  உச்சக்கட்ட தொழில் நுட்ப வசதிகளை அனுபவித்து வாழ்ந்து வரக்கூடியவராக இருந்தாலும் உங்களின் வேரின் ஆழமும், அதன் வீரியத்தின் தன்மையையும் உங்களின் சொந்த ஊர் தான் உணர்த்தும்.  உணர்த்தும் எண்ணங்களை உங்களால் மொழி பெயர்க்க முடியாது. அது நீங்கள் ஊரின் உள்ளே வந்து இறங்கும் போது உணரத் தான் முடியும்.

Saturday, January 11, 2020

பள்ளி விளையாட்டு விழா

ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுவயல்

ஜனவரி 5 2020 அன்று பள்ளியில் நடந்த விளையாட்டு விழா.



அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மதிப்பிற்குரிய ராம் மோகன் அவர்கள் தான் பிறந்த ஊரான கானாடுகாத்தான் பகுதியில் தன் வாழ்நாள் விருப்பமான நூலகத்தை பன்னாட்டு நிறுவன அலுவலகம் போல இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு  திறப்பு விழா நடந்தது.

Thursday, January 09, 2020

விருதும் விழாவும் 2020

ஜனவரி 4. 5 மற்றும் 6,  2020 அன்று ஸ்ரீ சரஸ்வதி சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  அடுத்த மூன்று ஆண்டுகளில் நூற்றாண்டு விழா காணப் போகும் பள்ளிக்கு நூற்றாண்டு விழா தொடக்கச் சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்பு அமைந்தது. என் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புகைப்படங்கள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இங்கே பதிவேற்றி வைக்கின்றேன். ஆண்டு விழாவில் 49 நிமிடம் 600 மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மத்தியில் உரையாற்றினேன். 

விழா மலர் வெளியீட்டு நிகழ்வு, பள்ளி விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என்று மூன்று நாட்கள் நடந்தது. மகிழ்ச்சி.