Showing posts with label 100 வது பதிவு. Show all posts
Showing posts with label 100 வது பதிவு. Show all posts

Wednesday, October 07, 2009

100.வீரம் விளைஞ்ச மண்ணு



புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (44)

மகாத்மா காந்தி வாழ்க்கை.- கொள்கை.- இறப்பு.- சில உண்மைகள் (1)

காந்திஜியின் கொலைக்கான திட்டங்கள் பம்பாயிலிருந்து 190 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் பூனா நகரில் இறுதி வடிவம் பெற்றது. பூனா நகரம் இந்து மத கொள்கையாளர்களின் கோட்டையாக விளங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


பூனாவின் உட்பகுதியில் உள்ள மலைபிரதேசங்களிலிருந்து, இந்து சாம்ராஜ்யம் அமைக்கப் பாடுபட்டவரும், சக்கரவர்த்தி ஓளரங்கசீப்புக்கு எதிராக கொரில்லாப் போர்கள் நடத்தி அவரைக் கலங்க அடித்தவருமான சத்ரபதி சிவாஜி தோன்றிய மண் அது.

அவரது வாரிசுகளாகக் கருதப்பட்ட பேஷ்வாக்கள் 1817 ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டார்கள். பாலகங்காதர திலகரும் இங்கிருந்து வந்தவர்தான். பிராமணர்களிலேயே மிக உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சித்பவான் பிராமணர்கள் பழைய பேஷ்வாக்களைத் தொடர்ந்து ஒரு கட்டுக் கோப்பான அகண்ட இந்த சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைமையில் ஏற்பட்டதுதான் ஹிந்து மகாசபை. ஆரம்பத்திலிருந்து இன்று வரை, தலைவராக இருந்த பாளாசாஹிப் தியோரஸ் முதல் இன்று இருக்கும் தலைவர் வரை அத்தனை பேர்களும் சித்பவான் பிராமணர்களே. ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கம் என்பது இதன் செயலாற்றும் பிரிவு. ஆர்.எஸ்.எஸ் இன் அதி ரகசிய உட்பிரிவுக்கு "இந்து ராஷ்டிர தளம்" என்று பெயர்.

அகண்ட இந்து சாம்ராஜ்யக் கனவு கண்டு கொண்டுருந்தவர்களுக்கு அப்போது ஒரு புதிய தலைவர் தோன்றினார். மகாராஷ்டிராவின் சர்ச்சில் என்று புகழப்பெற்ற இந்த தலைவரின் பேச்சுகள் வேதவாக்காக் கருதப்பட்டது. அவரது ஒவ்வொரு அறிக்கைகளும் கால் புள்ளி, அரைப்புள்ளி என்பது கூட விட்டுப்போகாமல் மிக கவனமாக, பக்தியோடு படிக்கப்பட்டு அவரது தொண்டர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது.

விநாயக தாமோதர வீர் சாவர்க்கர் என்பது அவரது முழுப் பெயர்.

சத்ரபதி சிவாஜியின் நேரடிடையான வாரிசுகள் என்று கருதப்பட்ட இவர் அன்றைய காலகட்டத்தில் மகாராஷ்ட்ரா, பூனா நகரில் மிக அதிகமான செல்வாக்குடன் திகழ்ந்தார். இன்னும் வௌிப்படையாக சொல்லப்போனால் இந்த இடங்களில் மகாத்மா காந்தி, நேரு அவர்களெல்லாம் மூன்றாம் நான்காம் இடங்கள் தான். இவருடைய செல்வாக்கு, சொல்வாக்கு அத்தனை பிரபல்யம். கேள்வியே இல்லை. கேள்விக்கு அப்பாற்பட்ட தெய்வத்துக்கு சமமானவராக கருதப்பட்டவர்.

இவர் மட்டும் காங்கிரஸில் இணைந்து இருந்தால் மகாத்மா காந்தி, நேதாஜிக்கு இணையாக மதிக்கப்பட்டு இருக்கக்கூடும். வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற தேசபக்தர். ஒரே ஒரு குறை. பல்வேறு கலாச்சார சீரழிவுகளை தந்து கொண்டுருக்கும் முஸ்லீம்கள் வாழக்கூடிய பூமி இந்த பூமி அல்ல என்பதில் அத்தனை உறுதியாக இறுதிவரையில் இருந்தவர். ஆனால் அவர்கள் எங்கே போகமுடியும்? என்று அவரை கேட்டவரும் இல்லை. அதற்கான பதிலும் எவரிடமும் இல்லை.

காந்தி, நேரு, படேல்,ஜின்னா இவர்களைப் போலவே இவரும் லண்டனில் சட்டம் படித்து அத்தனை மேலிட பிரிட்டிஷ் மக்களிடம் பழகியவர் தான். ஆனால் இங்கிலாந்தில் இருந்த படித்த எந்த சட்டமும் இவருக்கு உடன்பாடில்லை. அவருக்கென்று தனி சட்டங்கள், நியதிகள், கொள்கைகள், கோட்பாடுகள். அவை அத்தனையும் இந்தியாவுக்கு, இந்து மக்களுக்கு, குறிப்பாக இந்து சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் சட்டங்கள்.

சாவர்க்கர் தீவிரமான தேசபக்தர் என்பதில் எந்த தலைவருக்கும் சந்தேகம் இல்லை. பல தேசிய தலைவர்களுக்கு அவர் மேல் மரியாதையை விட பயம் தான் அதிகமாக இருந்தது. கடைசி வரையிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், முஸ்லீம்களை ஒரே மாதிரியாகத் தான் கருதினார், வெறுத்தார்.

கண் முன்னே அக்கிரமம் என்றால் அடுத்த நொடியே அதன் முடிவு தெரிந்து விட வேண்டும். லண்டனில் படித்துக்கொண்டுருந்த போது டெல்லியில் வரம்பு மீறி பல அக்கிரமங்களுக்கு துணை போய்க்கொண்டுருந்த வௌ்ளை அதிகாரியை அங்கிருந்தபடியே தூக்கியவர்.


அவர் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பலர். ஆனால் அத்தனை பேர்களும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வரிசையில் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள்.

காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், ஜின்னா சாகிப் இவர்களின் இந்திய அரசியல் பிரவேசித்திற்கு முன் (1910) பிரிட்டிஷ் அதிகாரியை படுகொலை செய்யப்படுவதற்கு சதி திட்டம் தீட்டியவர் என்று அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவரை ஏற்றிக்கொண்டு வந்த பிரிட்டிஷ் கப்பலில் இருந்து ஒரு கண்காணிப்பு துவாரம் வழியாக தப்பி வந்த அவரை பிரான்ஸ் அரசு கைது செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான சிறையில் வைக்கப்பட்டார்.

முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைத்தது.

காந்தியையும், காங்கிரஸையும் வெறுத்த சாவர்க்கர் குமரி முதல் இமயம் வரையிலும் அப்பாற்பட்டும் இந்து அகண்ட சாம்ராஜ்யம் அமைய வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தார். இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். மற்ற உட்பிரிவுகள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாக விளங்கினார்.

வீர் சாவகர்க்கர் மேடை பிரசங்கம் என்பதும் அறிக்கைகள் என்பதும் கேட்பவர்களை மூளைச் சலவை செய்வதற்கு சமமாக இருக்கும். நெருப்பை உமிழ்வது போன்ற பேச்சில் வீரம் இல்லாதவனுக்கும் வீரம் அந்த நிமிடமே வந்து விடும். அத்தனை தூரம் கவர்ந்து இழுக்கும்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக கோட்சேயும், உதவியாய் இருந்த விஷ்ணு கார்க்கரே போன்ற இந்து அபிமானிகள் அத்தனை பேர்களுமே சித்பவான் பிராமணர்களே?

முகத்தில் தோன்றினோம். முகவரியை மாற்ற முனைந்தோம். முக்கலும் முனங்கலும் வந்தால் என்ன? முடிவு இல்லாமலா போய்விடும்?