Tuesday, June 29, 2021

தலைமைச் செயலர் என்பவர் நிரந்தர முதல்வன்

 இறை அன்பு தலைமைச் செயலாளர் பதவியில் அமர்ந்த போது அவரின் பணிகள் என்ன? எப்படி செயல்படுவார்? செயல்பட வேண்டும்? நம் அரசியல் சாசனம் என்ன வகுத்துள்ளது? போன்றவற்றை வெவ்வேறு விதமாக தினமும் படித்துக் கொண்டே வந்தேன். 

Saturday, June 26, 2021

ஏன் இந்த மாற்றம்?

மதிப்பிற்குரிய அம்மையாரும் இளவரசர் ராகுல் அவர்களின் தாயாரும் முதல் முறையாக அருள்வாக்கு தந்துள்ளார். "காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்" என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பாக இதுவரையிலும் உருவான நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குறிகள் இப்போது இல்லை?.

ஏன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவில்லை என்ற ஆர்வம் வடிந்து விட்டது?
அவர்கள் போட்டார்களா? இவர்கள் ஏன் போட வில்லை என்ற ட்விட்டர் களப்பணிகளும் இல்லை?
ஏன் இந்த மாற்றம்?
காரணம் ஒன்றே ஒன்று தான்.
லாம்பாணி அரசியல், காழ்ப்புணர்வு அரசியல், பதிலுக்குப் பதில் அரசியல், பத்திரிக்கையாளர்கள் புடை சூழச் செய்யும் அரசியல், அறிக்கை அரசியல் என்று எதுவும் பாஜக அரசு கடந்த ஏழு வருடங்களாக செய்ததே இல்லை. இனி செய்யவும் செய்யாது.
காரணம் செயல் முக்கியம் என்பதில் மட்டும் தான் கவனமாக உள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள்.
தடுப்பூசி சார்ந்த, கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை சார்ந்த எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மேல் வைத்துக் குற்றச்சாட்டுகள், அவதூறுகள், எழுதக்கூசும் வார்த்தைகள், வாசகங்கள் அனைத்தும் பேசியவர்கள் இப்போது அமைதியாக களத்தைக் கவனிக்கும் அளவிற்கு ஆச்சரியமான மாற்றங்கள் இப்போது நடந்து கொண்டு வருகின்றது.
எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றும் இதனை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில் மட்டும் தான் கவனமாக இருந்தார்கள். மக்களுக்கு எந்த முறையில் தடுப்பூசியைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதில் தொடக்கம் முதல் ஆர்வம் செலுத்தவே இல்லை.
மத்திய அரசு "நாங்கள் இலவசமாக தடுப்பூசிகளை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்குகின்றோம். மாநில அரசின் நிதிச் சுமையைக் குறைக்கின்றோம்" என்ற அறிவிப்பினை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது.
என்ன மாறுதல் நடந்தது? நடந்து கொண்டு இருக்கிறது?
கடந்த திங்கள் அன்று இந்தியா முழுக்க 86 லட்சம் தடுப்பூசிகள்,
செவ்வாயன்று 53 லட்சம்
புதன்கிழமை 64 லட்சம்
மற்றும் நேற்று மாலை 6 மணிக்குள் 55.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்து இருக்க வேண்டுமா? மக்களைக் குழம்ப வைத்துப் பயமுறுத்தித் தொடர்ந்து அரசியல் செய்வதா? என்பதனை நீங்கள் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். Narendra Modi PMO India
May be an image of 6 people, beard and people standingWednesday, June 23, 2021

எண்ணெய் அரசியல்

இன்றைய சூழலில் நீங்கள் ஆக்கபூர்வமான அரசியல் பேச வேண்டும் என்றால் சிறிதளவாது பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும். கூட சர்வதேச அரசியல் குறித்த பார்வை இருக்க வேண்டும். வாழ்க ஒழிக என்று சொல்லிவிட்டு நகர்வது உங்களுக்கு எளிது. நான் தொடர்ந்து கற்றுக் கொடுக்கவே விரும்புகிறேன். எனக்கு வாய்ப்புள்ளது. இது என் கடமை என்று கருதுகிறேன். 

ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். உள்ளே வந்தால் கவனச் சிதறல் இல்லாமல் கற்றுக் கொள்ள விரும்பவர்களைத்தான் வகுப்பறையில் அனுமதிப்பேன். எவரையும் திட்டுவதற்கு முன்பு திகட்டத் திகட்ட கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் நியூரான்களுக்கு நல்லது.  இல்லாவிட்டால் நொந்து வெந்து கடைசியில் உங்கள் கிட்னி சட்னியாகி விடும் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். நீங்கள் விரும்பக்கூடிய கட்சியில் இருப்பவர்கள் ஓடாத பத்துப்படங்கள் எடுத்து தமிழகத்தின் முதலமைச்சராகவும் ஆகி விடுவார்கள். 

உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் தலைமுறைகளுக்கும் தான் பிரச்சனை. உங்கள் சாம்பல் கூட நிம்மதியற்று அலையும்.  வாழ்த்துகள். இன்று நீங்கள் படிக்க வேண்டிய பாடம் இது.

எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் பின்னால் உள்ள அரசியல்

Monday, June 21, 2021

மதி இல்லாத நிதி மந்திரி

எதற்காகவும் எந்த இடத்திலும் எனக்குக் கோபம் வருவதில்லை. படிப்படியான பயிற்சியின் மூலம் என் அளவு கடந்த முன் கோபத்தை 90 சதவிகிதம் குறைத்து இன்று நிதானமான எதனையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கிறேன். Sunday, June 20, 2021

பெட்ரோல் விலை பற்றி எரிகின்றது? என்ன காரணம்? யார் காரணம்?

மத்தியில் ஆளும் பாஜக மேல் சாதாரண பாமரர் கூட வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் எரிபொருள் விலை உயர்வு.  

மூனா கானா பணியாளர்களுக்கு இது அல்வா துண்டு.  


Saturday, June 19, 2021

Twitter செய்யும் நாங்களும் ரவுடி தான் காரியங்கள்.

மத்திய அமைச்சரவையில் நான் வெறுக்கக்கூடிய முதல் நபர் ரவிசங்கர் பிரசாத். அவர் என்ன சாதித்தார்? எதன் அடிப்படையில் அவரை இன்னமும் வைத்துள்ளார்கள் என்றே எனக்கு இன்று வரையிலும் புரியவில்லை. அவர் தற்போது ட்விட்டர் விவகாரங்களில் சொதப்பிக் கொண்டு இருப்பதை அகில உலகமும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. மோடி இது வரையிலும் வாய் திறக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

Thursday, June 17, 2021

IL&FS Group தலைவர் திரு. பார்த்தசாரதி ஒரு லட்சம் கோடி மோசடி

தமிழகத்தில் பஞ்சாயத்துக் கோஷ்டிகளிடம் வாழ்நாள் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் இன்று வரையிலும் ஸ்ரீராம ஜெயம் எழுதுவது போல இரண்டு வார்த்தைகளைப் பற்றித் தவறாமல் எழுதுவதை நீங்கள் கவனித்து இருக்க வாய்ப்புண்டு. 

ஒன்று நீட். மற்றொன்று பணமதிப்பு இழப்பு.Wednesday, June 16, 2021

வண்ணப்புரட்சி

வரலாற்றுத் தடங்களில் ஒவ்வொரு நாடுகளிலும் நடந்த பல்வேறு புரட்சிகளைப் பற்றி நாம் பாடப் புத்தகங்களில் படித்து வந்துள்ளோம். ஆனால் தற்கால நவீனத் தொழில் நுட்ப யுகத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு புரட்சிக்குப் பெயர் "வண்ணப்புரட்சி".

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் தூண்டுதலின் பெயரில் ட்விட்டர் என்ற சமூக வலைதளம் உலகம் எங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கத்தியின்றி யுத்தமின்றி நடத்திக் கொண்டு இருக்கும் போருக்குப் பெயர் தான் "வண்ணப்புரட்சி".

அமெரிக்காவின் நலனுக்கு ஏற்புடையதாக இல்லாத ஆட்சிகளைக் கலைப்பது இதன் முதன்மையான குறிக்கோள். இதனைத் தவிர்த்து அரசாங்க கொள்கைகளில் மாற்றம் உருவாக்குவது. பிரித்தாள்வது, குழப்பத்தை விளைவிப்பது, மக்களை கூறு கூறாகப் பிரிப்பது என்று பல்வேறு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. இதனைத்தான் "வண்ணப்புரட்சி" என்கிறார்கள்.

இராணுவ படையெடுப்பு மற்றும் ஆட்சி மாற்றம் உட்பட இதைச் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும், ஒரு புதிய முறை இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு "வண்ண புரட்சி" என்பது ஒரு வகையான ஒருங்கிணைந்த தாக்குதலைக் குறிக்கிறது, 

மேற்கத்திய சக்திகள் மற்ற நாடுகளுக்கு எதிராக, குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் "சர்வாதிகார" மற்றும் அமெரிக்க நலன்களுக்கு விரோதமானவை என்று கருதப்படுகின்றன. 

ஈராக்கில் உள்ளதைப் போல ஓர் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேரடி இராணுவத் தலையீட்டிற்குப் பதிலாக, வண்ணப் புரட்சிகள் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிலைகுலைய வைப்பதும், 

தங்கள் தேர்தல் நியாயத்தன்மையை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமும், வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும், ஒத்துழையாமைச் செயல்களையும் திட்டமிடுவதன் மூலமும், மேற்கத்திய பத்திரிகைகளில் சாதகமான தகவல்களை உறுதி செய்வதற்காக ஊடக தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலமும் தாக்குகின்றன.

மேற்கத்திய நலன்களை நிலைநிறுத்தும் ஓர் அரசாங்கத்தை நிறுவுவதை உறுதி செய்வதே மிகப் பெரிய நோக்கம். இந்தியாவில் இப்போது ட்விட்டர் மூலம் நடந்து கொண்டு இருப்பது ஒரு வண்ண புரட்சியாக இருக்காது, ஆனால் அது நிச்சயமாக அதன் தொடக்கப்புள்ளியாகவே உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் நிர்வாகம் எப்படிப் பார்க்கின்றது என்பதனையும் இதனை எப்படி ட்விட்டர் வெளிப்படுத்துகின்றது என்பதனை கீழே உள்ள சிலவற்றின் மூலம் உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?

1. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினருக்குப் பாகுபாடு காட்டும் அரசாக மோடி நிர்வாகம் உள்ளது.

2. மோடி அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கம்.

3. ஆனால் மோடியின் மக்கள் செல்வாக்கு காரணமாக தேர்தலில் வெல்லும் போது எதிர்க்கட்சிகளின் நிலை கேள்விக்குள்ளாக்கப் படுகிறது.

4. இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் விவசாயிகள் போராட்டம் நின்று விடக்கூடாது. இத்துடன் இதனைப் பற்றிய விவாதம், மக்கள் அனுதாபம் போன்றவற்றை ட்விட்டர் குறிப்பிட்ட குறிசொல்லில் தொகுப்பது, சர்வதேச அரங்கில் கொண்டு சேர்ப்பது.

5. சமீபத்தில் காங்கிரஸ் உருவாக்கி இருந்த டூல்கிட் பொதுவெளியில் அம்பலப்பட்டு ராகுல் கோஷ்டி அவமானப்பட்டு நின்றார்கள். ஆனால் இந்தச் சூழலிலும் காங்கிரஸைக் காப்பாற்ற ட்விட்டரின் முயற்சி மோடிக்கு எதிரான அமெரிக்கா நிர்வாக கட்டளையின் படி இந்தியாவில் நிகழ வேண்டிய ‘ஆட்சி மாற்றம்’ நடவடிக்கையை அம்பலப்படுத்தியது.

6. ட்விட்டரின் நடத்தை இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது, இந்தக் கட்டத்தில் அமெரிக்கா இந்தியாவில் தனக்குச் சாதகமான 'ஆட்சி மாற்றம்' நிகழ வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது என்பது நமக்குக் கண்கூடாக தெரிகின்றது.

7. ட்விட்டரின் நடத்தை மிக நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தாமதமாக, இப்போது  மிகவும் வெளிப்படையாகிவிட்டது. ட்விட்டர் சில காலமாக இந்திய அரசாங்கத்திற்கு எதிராக முரண்பட்டு வருகிறது மற்றும் காங்கிரஸ் டூலகிட் தொடர்பாக உருவான பகை பெரிதாகி உள்ளது. இந்தியச் சட்ட திட்டங்களை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று பெயர் அளவில் சொன்னாலும் முழு மனதோடு ஏற்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

8.ட்விட்டர் வாயிலாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ளுற பகை பெரிதும் அதிகரித்துள்ளது.

9. காங்கிரஸ் கட்சி டூல்கிட் நாங்கள் உருவாக்கியது அல்ல. இது பாஜக உருவாக்கியது என்று தடம் மாற்றினாலும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா உருவாக்கிய ஒவ்வொரு அதிரடியைப் பார்த்துப் பொறுக்க முடியாத ட்விட்டர் நிர்வாகம் பாஜக இது குறித்துச் செயல்படும் விதத்தைத் தனியாக குறிசொல் மூலம் சேகரித்து ஆட்டத்தைத் திசை மாற்றியது. பாஜக அரசியல்வாதிகளின் ட்வீட்டுகளில் லேபிளை சேர்க்கத் தொடங்கியது.

9. அமெரிக்கா, நிச்சயமாக உலகெங்கிலும் 'ஆட்சி மாற்றம்' நடவடிக்கைகளை நடத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது, அதில் ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஆளும் அரசாங்கத்தைத் தகர்த்தெறிய முயல்கிறது, தங்கள்  நலன்களுக்கு விரோதமானது என்று கருதினால் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குக் கீழே இறங்கும் என்பது அமெரிக்காவின் கடந்த கால வரலாறு. இப்போது மோடி அரசாங்கத்தின் மேல் குறி வைத்துள்ளது. மோடியின் சுயசார்பு என்பது அவர்களை அளவு கடந்து எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த விசயத்தில் தான் அவர்களுக்குக் காங்கிரஸ் தேவையாக இருக்கின்றார்கள். வாங்கிய காசுக்குக் கூலியாக காலம் முழுக்க செயல்படக்கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்கள்.

10. அமெரிக்கா அரசாங்கத்திற்கும் அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களும் அரசுடன் ஒத்திசைந்து செயல்படக்கூடிய அமைப்பு அங்கே நிலவுவதால் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் போன்ற தளங்கள் எல்லாவகையில் அமெரிக்கா அரசின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியவர்களாகவே இருக்கின்றார்கள்.

11. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜோ பைடன் என்பது அங்குள்ள சமூக வலைதளங்கள் உருவாக்கிய சாம்ராஜ்ய வெற்றியின் அடையாளம் ஆகும். வெகுஜன ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்குக் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்த்து இந்த வெற்றியை ஜோ பைடனுக்கு அளித்துள்ளனர்.

12. ஜோ பைடன் வெற்றி போல இந்தியாவிலும் மோடியின் தொடர் வெற்றியைத் தடுக்க எல்லாவிதமான ஆயுதங்களையும் பிரயோகிக்க தயார்ப் படுத்தி வருகின்றார்கள். இதில் முன்னிலையில் இருப்பது ட்விட்டர்.

13. ஜோ பைடன் நிர்வாகம் கொரோனா தடுப்பூசிக்குத் தேவைப்படும் மூலப் பொருளை இந்தியாவிற்கு வழங்கத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் உருவான அழுத்தம் காரணமாகவே ஏற்றுக் கொண்டது.  தடுப்பூசி தட்டுப்பாடு உருவானால் அதனையே பேசு பொருளாக மாற்றி வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றியை நிறுத்த முடியுமா? என்பதே நோக்கமாக இருந்தது. மேலும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஊடகங்கள் மூலம் நரேந்திர மோடியை நெருக்கடிக்குத் தனிமைப்படுத்துவதில் அயராது தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.  

சர்வதேச அரசியலில், நாடுகள் ஒவ்வொன்றும்  அந்நியச் செலாவணியையும் மற்ற நாடுகளில் ஏற்படும் இழப்புகள் மூலம் தங்கள் ஆதாயத்தைப் பெறுவார்கள் என்பது பொதுவான விதியாகும்.

இதன் மூலம் தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்பது சர்வதேச அரசியல் புரிந்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எனவே இந்தச் சமயத்தில் அமெரிக்காவும் தங்கள் சுயலாபத்திற்காகவே செயல்படுகிறது என்று கருதுவது “சதி கோட்பாடு” அல்ல. 

ஆனால் இந்தச் சமயத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது சமீபத்தில் தான், காங்கிரஸ் ராகுல் காந்தி இந்திய உள் விவகாரங்களில் தலையிடுமாறு அமெரிக்காவிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டு இருக்கின்றார் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.


Monday, June 14, 2021

வங்கிப் பணத்தை சூறையாடிய நிறுவனங்கள்

மோடி கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு குறித்து இங்குள்ள புத்திசாலிகள் அவ்வப்போது புலம்பல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதை நீங்கள் போகிற போக்கில் வாசித்து இருக்க வாய்ப்புண்டு.  ஆனால் அதன் மூலம் எத்தனை விதமான பொந்துகள் கண்டு பிடிக்கப்பட்டது? எத்தனை ஆயிரம் எலிகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பது போன்ற விசயங்கள் நம் ஊடகங்கள் பதிவு செய்வது இல்லை.Friday, June 11, 2021

தமிழக கல்வித்துறைக்கு விடியல் வருமா?

இப்போது நிழல் முதல்வர்களாக நான்கு பேர்கள் உள்ளனர். 

ஆனால் முதன்மைச் செயலாளர்கள் ஒன்று இரண்டு மூன்று நான்கு என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றார்கள். Thursday, June 10, 2021

தமிழக உபி களும் யோகியின் உபியும்

கடந்த சில மாதங்களாக நீங்கள் ஒன்றைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்? தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து யாரோ ஒருவர் சொல்லி வைத்தாற் போல அவதூறுகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். புலனாய்வு புலிகள் யோகி யை வைத்து எழுதும் போது இத்துடன் பாஜக முடிந்தே விட்டது. ஆர்எஸ்எஸ் யோகியைக் கழட்டி விட்டது. கோபத்தில் உள்ளது என்பது போன்ற தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன? 

என்ன காரணம்?


Wednesday, June 09, 2021

பா.ஜ.க. ஏழு ஆண்டு கால ஆட்சி - இந்திய உள்கட்டமைப்பு வசதிகளில் உருவான மாற்றங்கள்

உள்கட்டமைப்பு வசதிகள் என்பது ஓர் அமைப்பு உயிர்ப்புடன் இருக்கின்றதா? இல்லை செயல் இழந்து விட்டுப் போய் விட்டதா என்பதனை நம்மால்

உணர்ந்து கொள்ள முடியும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நம் தமிழகம் மருத்துவ துறையில் மிகச் சிறப்பான இடத்தில் உள்ளது என்று தான் இப்போது வரைக்கும் நம்பிக் கொண்டு இருந்தோம். ஆனால் இன்று நாம் பார்க்கும் அரசு மருத்துவமனைகள் என்பது அடிப்படை சரியாகவே உள்ளது.

ஆனால் அதன் உள்கட்டமைப்பு வசதிகளை வருடந்தோறும் மாறிக் கொண்டு இருக்கும் சூழலுக்கு ஏற்ப கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கப்படும் நிதியைத் திருட என்பதற்காகவே பயன்படுத்திக் கொண்ட அதிகாரவர்க்கம் இன்று தடுமாறிச் செய்வதறியாமல் தொடர்பில்லாத விசயங்களைப் பேசி மக்களை மடை மாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்து வருகின்றோம்.

புதிய பாராளுமன்ற கட்டிடமும் கதறும் ஓநாய்களும்

ஏன் மோடி அரசு உள்கட்டமைப்பு விசயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்பதற்கு முக்கிய காரணமும் இதுவே.

உள்கட்டமைப்பு உருவாக்கம் மூலம் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் எளிதாக்குதல். 

இது தான் தற்போதைய பாஜக அரசின் முக்கிய கொள்கையாக உள்ளது.

முன்பு சமூக நீதி என்பதன் அர்த்தமும் தற்போதைய சூழலில் அதன் அர்த்தமும் வேறு என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீரில் விளையும் ஆப்பிள் அந்தப் பகுதிக்குள் விற்பனை செய்தாக வேண்டும் என்ற சூழலில் ஒன்று குறைவான லாபம் கிடைக்கும் அல்லது குறிப்பிட்ட நபர்களிடம் காலம் முழுக்க அடிமையாக இருந்து அவர்களிடம் தான் கொடுத்து துன்பப்பட வேண்டும். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதனை சென்னைக்கு கொண்டு வந்து விற்க முடியும் என்ற வாய்ப்பு அந்த விவசாயிக்கு இருந்தால் அவர் என்ன செய்வார். லாபம் பெறுவார்கள். அதன் மூலம் அவர் வாழ்க்கைத் தரம் உயரும். குடும்பம் பொருளாதார நிலையில் மேம்படுவார்கள். தாங்கள் விரும்பிய வண்ணம் கல்வி முதல் சுகாதாரம் வரைக்கும் பெற அவர்களிடம் பொருளாதார வசதிகள் இருக்கும். அரசினை எதிர்பார்க்க தேவையில்லாத அளவிற்கு தலைமுறையில் புதிய சிந்தனை உருவாக வாய்ப்பு அமையும்.

இதற்குத் தேவை ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் வண்ணம் இங்கே உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பட வேண்டும். அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது. இதனை புரிந்தவர்களும், பயன்படுத்திக் கொள்பவர்களும், திறன்களை வளர்த்துக் கொள்ள தயாராக இருப்பவர்களுக்கும் பாஜக அரசு மேல் நம்பிக்கை உருவாகிக் கொண்டே இருக்கின்றது.

பிரதமர் மோடி அரசின் ஏழு ஆண்டுகள் மொத்தப் பார்வை - இந்தியாவின் மாற்றங்கள்...

கடந்த 7 ஆண்டுகளில், இந்தியாவில் உள்கட்டமைப்பு விரைவாக விரிவடைந்து குடிமக்களின் வாழ்க்கையைக் கணிசமாக எளிதாக்கி உள்ளது. உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது.

மோடி அரசு நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் வேகத்தை மேலும் அதிகரிக்க இந்த ஆண்டு பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2021 ஐ நிறைவேற்றுவதற்கான தேசிய வங்கியின் நிறைவேற்றுதலுடன், இந்தியாவின் உள் கட்டமைப்பின் முகத்தை மாற்றுவதற்கான அபிவிருத்தி நிதி நிறுவனம் ஒன்றை உருவாக்கியது.

Development Finance Institution (DFI) 

இது நீண்ட கால மூலதனத்தை வழங்க ஒரு மேம்பாட்டு நிதி நிறுவனம் (டி.எஃப்.ஐ) அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விதமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது தான் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

இந்த டி.எஃப்.ஐ நிதி மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கும் மற்றும் தொழில் ரீதியாக இயங்கும்.

ரூ .15,000 கோடி திட்ட மதிப்பீட்டில்  உடனடியாக ரூ .5 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கும். 

அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கும் துறையாக மாறும்.

இதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ 111 லட்சம் கோடி நிதிநிலையுடன் 2019-2025க்கு இடையில் செயல்பட உயர் மட்டப் பணிக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக உள்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு குழுவுடன் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதற்காகத் தேசிய உள்கட்டமைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது.

7 ஆண்டுகள் (இந்திய வெளியுறவுத்துறை)

போக்குவரத்து, தளவாடங்கள், எரிசக்தி, நீர் மற்றும் சுகாதாரம், தகவல் தொடர்பு, வணிக மற்றும் சமூக உள்கட்டமைப்பு போன்ற துறைகளின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 6,835 திட்டங்களை உள்ளடக்கிய திட்டம் இப்போது 7,400 திட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முக்கிய உள்கட்டமைப்பு அமைச்சகங்களின் கீழ் ரூ .1.10 லட்சம் கோடி மதிப்புள்ள 217 திட்டங்கள் தற்போது வரை நிறைவடைந்துள்ளன.

சாலை கட்டுமானத்தை அதிகரிக்க ஒதுக்கீடு

நல்ல தரமான நெடுஞ்சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்தவை.

இதை நோக்கி, ரூ .3.3 லட்சம் கோடி மதிப்புள்ள 13,000 கி.மீ.க்கு மேல் உள்ள சாலை கட்டுமான திட்டங்களுக்கு பாரத்மலா பரியோஜனாவின் கீழ் 3,800 கி.மீ திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

மார்ச் 2022க்குள், கூடுதலாக 11,000 கி.மீ நெடுஞ்சாலைகள் நிறைவடையும், மேலும் 8,500 கி.மீ சாலைத் திட்டங்கள் வழங்கப்படும், இது வேலைவாய்ப்பு மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்களை இணைக்க முடியும். 

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு இந்த ஆண்டு செய்யப்பட்ட ரூ. 1.08 லட்சம் கோடி மூலதன ஒதுக்கீடு, இந்தத் துறைக்கு அரசாங்கம் அளிக்கும் தீவிர முன்னுரிமையைக் காட்டும் மிக உயர்ந்த ஒதுக்கீடு ஆகும்.

இதன் மூலம்  சரக்கு மற்றும் பயணிகள் ரயில்வே துறையில் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது.

பயணிகளுக்குச் சிறந்த தரமான சேவையையும், சரக்குகளை விரைவாக வழங்குவதற்கும் மோடி அரசின் கீழ் ரயில்வே திட்டங்களை நிர்மாணிப்பது வேகமாக நடந்து வருகிறது. ரயில்வே கட்டுமானத்தில் இந்த விரிவாக்கத்திற்கு மேலும் உதவுவதற்காக, மூலதனச் செலவாக ரூ .1.07 லட்சம் கோடி ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் கிழக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு தாழ்வாரங்கள் ஜூன் 2022க்குள் 

முடிவடையும். இந்தத் தடத்தில் உள்ள தொழில் துறையினர் தங்கள் பொருட்களை விரைவாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அடிப்படைச் செலவு மிகவும் குறைவானதாக இருக்கும்.

சரக்கு ரயில் வேகம் சுமார் 22-24 கி.மீ வேகத்திலிருந்து சுமார் 45 கி.மீ வேகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக கூடுதல் திறன் மற்றும் சரியான நேரத்தில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி - ஏழாண்டு ஆட்சி காலம்

ஆளில்லா ரயில் கிராசிங்குகளை முற்றிலுமாக நீக்குதல் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், 2019 மே முதல் இப்போது 2 ஆண்டுகளில் பயணிகள் விபத்து ஏற்படாமல் இருப்பதை ரயில்வே உறுதி செய்துள்ளது.

புது தில்லி-வாரணாசி மற்றும் புது தில்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே அதிநவீன வந்தே பாரத் விரைவுவண்டிகள் அறிமுகம், அதி நவீன மற்றும் வேகமான தேஜாஸ் விரைவுவண்டிகள் மற்றும் எல்.எச்.பி. உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ உருவாக்குதல் என்பது தொடர் பணியாக நடந்து வருகின்றது.

இந்தியாவில் மெட்ரோ கட்டுமானத்தின் விரிவாக்கம் கடந்த 7 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்கதாகும். 

2014 ஆம் ஆண்டில், வெறும் 5 நகரங்களில் மெட்ரோ ரயில் இருந்தது, இப்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

2014 ஆம் ஆண்டில், நாட்டில் 248 கி.மீ மெட்ரோ பாதைகள் மட்டுமே இயங்கின. இன்று, 717 கி.மீ மெட்ரோ ரயில் இயங்குகிறது.

2025 ஆம் ஆண்டில், 1,700 கி.மீ.க்கு 1,016 கி.மீ மெட்ரோ மற்றும் விரைவான பிராந்தியப் போக்குவரத்து அமைப்பு திட்டத்துடன் 27 நகரங்களில் கட்டுமானத்தில் உள்ளது.

நிதிநிலை 2021 இல், கொச்சி, பெங்களூரு, சென்னை நாசிக் மற்றும் நாக்பூரில் உள்ள மெட்ரோ திட்டங்களுக்கு அதிக அளவு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நீங்கள் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒன்று.

பாஜக என்ற கட்சிக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத மாநிலங்கள், குறைவான உறுப்பினர்கள், பாஜக கட்சி ஆளும் மாநிலங்கள் என்ற பாரபட்சமின்றி நலத்திட்டங்கள் என்பது தேசத்தின் ஆன்மா என்கிற ரீதியில் தான் செயல்படுத்தப்படுகின்றது.


Tuesday, June 08, 2021

அடிப்படை அரசியல் சூத்திரம்

எழுதினார்கள் வென்றார்கள்,

தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்கள். சின்னச் சின்ன துண்டு அறிக்கைகள் முதல் திரைப்பட வசனம் வரைக்கும். பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

தெருமுனைக்கூட்டம் முதல் லட்சக்கணக்காக மக்கள் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டேயிருந்தார்கள். வெயில், மழை, குளிர்காலம் எதையும் பார்க்கவே இல்லை. தினசரி கடமையாகவே செய்தார்கள். மக்களுக்குப் புரியுமா? புரியாதா? விரும்புவார்களா? மாட்டார்களா? நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? ஒதுக்குவார்களா? ஓரம் கட்டி விடுவார்களா? அடிக்க வருவார்களா? அரவணைப்பார்களா? ஆதரவு தருவார்களா? நம்புவார்களா? நமக்கு(ம்) அதிகாரத்தில் வாய்ப்பு தருவார்களா? எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேச்சையும் எழுத்தையும் கலையாக ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 1967 முதல் 2016 வரைக்கும் ஏதோவொரு வகையில் அறுவடை செய்து கொண்டே இருந்தார்கள். 

ஒரு தலைமுறை உழைத்த உழைப்பு பத்துத் தலைமுறைக்குப் பலனாக மாறியது. இதைப் பார்த்துச் சோர்ந்து போனவர்கள், வெறுத்துப் போனவர்கள், போராட முடியாதவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்கள் அத்தனை பேர்களும் ஒன்று காணாமல் போனார்கள் அல்லது சரணாகதி அடைந்தார்கள். இதை வைத்து இன்று வரையிலும் எதிர்த்த அத்தனை பேர்களும் இப்போது எங்கே இருக்கின்றார்கள்? என்று கொக்கரிக்கின்றார்கள்? வாய்ப்பு இருக்கும் வரைக்கும், நேரம் கிடைத்த பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இணையத்தில் தொடர்ந்து எழுதினேன்.

பொய்களைத் தைரியமாகக் கூசாமல் பேசுகின்றார்கள். தொடர்ந்து அதனைப் பேசியே உண்மை என்று நம்ப வைக்கின்றார்கள். நம்பக்கூடியவர்களின் மனதில் வேறு எதையும் நினைக்க முடியாத அளவுக்கு ஆழமாக ஊடுருவுகின்றார்கள். உண்மைகளைப் பேசக்கூடியவர்கள் அனைவரும் பைத்தியக்காரன் போலப் பார்க்கப்படுவதால் களத்தில் அவர்கள் மட்டுமே இருப்பதாகத் தோற்றம் உருவாகத் தோல்வி பயத்தில் ஒவ்வொருவரும் காணாமல் போய்விடுகின்றார்கள். இது தான் இங்கே இத்தனை நாளும் நடந்து கொண்டிருக்கின்ற அடிப்படை அரசியல் சூத்திரம்.

இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க

https://www.amazon.in/dp/B09477X7DF/ref=cm_sw_r_wa_apa_glt_987NMVTK9D8G7JE0AF5P

Monday, June 07, 2021

புதிய பாராளுமன்ற கட்டிடமும் கதறும் ஓநாய்களும்

13 டிசம்பர், 2001

இந்த தேதி உங்களுக்கு நினைவில் உள்ளதா? அப்சல் குரு என்பவனால் இந்தியாவின் இதயமான பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்ட நாள். இந்தியாவின் பாதுகாப்பைக் காங்கிரஸ் எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு இது போல பல உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அவர்கள் தான் இப்போது புதிதாக கட்டப்பட்டு வருகின்ற பாராளுமன்ற கட்டித்தைப் பற்றித் தொடர்ந்து அவதூறுகளை, கற்பனைகளை, கட்டுக்கதைகளைப் பரப்பிக் கொண்டு வருகின்றார்கள்.

உண்மைதான் என்ன?


Sunday, June 06, 2021

பிரதமர் மோடி அரசின் ஏழு ஆண்டுகள் மொத்தப் பார்வை - இந்தியாவின் மாற்றங்கள்...

On 30 May, the National Democratic Alliance (NDA) led by Prime Minister Narendra Modi completed seven years in office.

பிரதமர் மோடி அரசின் ஏழு ஆண்டுகள் மொத்தப் பார்வை அதன் மூலம் இந்தியாவின் மாற்றங்கள்........

மே 30

பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி ஏழாண்டுகளை நிறைவு செய்தது.

முன்பு பிரதமராக இருந்த நரசிம்மராவ் க்குப் பிறகு இந்திய புதிய மாற்றங்கள், நோக்கங்கள் என்று உருமாறும் இந்தியாவாக மாறியது. காரணம் பாஜக அரசின் நீண்ட காலத் திட்டங்கள். செயல்பாடுகள். குறிப்பாக இந்திய உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தியதும் முக்கிய காரணமாக உள்ளது.


Friday, June 04, 2021

7 ஆண்டுகள் (இந்திய வெளியுறவுத்துறை)

 முன் எச்சரிக்கை (ஆயிரம் வார்த்தைகள் கொண்ட முக்கியமான கட்டுரை)

7 ஆண்டுகள் (இந்திய வெளியுறவுத்துறை)

50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊரில் உள்ள நடைமுறை வாழ்க்கை குறித்து நமக்குப் புரியுமா? தெரிந்தாலும் உத்தேசமாகத்தான் பேசுவோம். ஆனால் தமிழர்கள் அசாத்தியமான புத்திசாலிகள். உள்ளூர் அரசியல் பற்றியே தெரியாதவர்கள் மோடி ஆட்சியின் வெளியுறவுத்துறையைப் பற்றி அலசி ஆராய்ந்து இறுதியில் மோசம் என்று முடிக்கின்றார்கள்.Thursday, June 03, 2021

ஜுன் 3 சிந்தனைகள்...

ஊழல் என்பது பெருந்தொற்று.

ஊழல் என்பது பரவக்கூடியது.

ஊழல் சமூகத்தைச் சீர்குலைக்கும்.ஊழல் என்றால் திருடன்.

ஊழல் என்றால் கொடூர வாதி

ஊழல் என்றால் சுயநலம் மிக்கவன்.

இணைய கொத்தடிமைகள் அருமையானவர்கள்

ஊழலை உருவாக்கியவன் முட்டாள்.

ஊழலைப் போற்றுபவன் அயோக்கியன்.

ஊழலை வணங்குபவன் காட்டுமிராண்டி.


ஊழல் சமூகநீதியைக் கெடுக்கும்

ஊழல் சமத்துவத்தைக் குலைக்கும்

ஊழல் சகோதரத்துவத்தை மாற்றும்.


ஊழல் செய்தவன் கடமையைச் செய்ய மாட்டான். 

ஊழல் செய்தவன் கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டான். 

ஊழல் செய்தவன் கண்ணியமற்ற வாழ்க்கை வாழ்வான்.


ஊழல் சமூக சங்கிலியை உடைக்கும்.

ஊழல் பக்கவிளைவுகளை உருவாக்கும்.

ஊழல் பயங்கரமான பேதங்களை உருவாக்கும்.


ஊழல் மேல் பற்று கொண்டவன் சாதியத்தை வளர்ப்பான்.

ஊழல் மேல் ஆர்வம் கொண்டவன் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிப்பான்.

ஊழல் மேல் அக்கறை கொண்டவன் வார்த்தை ஜாலங்களில் வாழ்க்கையைக் கழிப்பான்.


ஊழல் குறித்து எழுதினால் முட்டாளாகப் பார்க்கப்படுவீர்கள்.

ஊழல் குறித்துப் பேசினால் முடக்கப்படுவீர்கள்.

ஊழலுக்கு எதிராக செயப்பாட்டால் தனித்த முத்திரை குத்தி ஒதுக்கப்படுவீர்கள்.


குடும்பத்திற்குள் ஊழல் இருந்தால் தனி மனித பிரச்சனை.

நிறுவனத்தில் ஊழல் இருந்தால் தொழில் சார்ந்த பிரச்சனை.

நாட்டின் தலைவனிடம் ஊழல் இருந்தால் மூன்று தலைமுறைகளுக்கான பிரச்சனை.


Wednesday, June 02, 2021

இணைய கொத்தடிமைகள் அருமையானவர்கள்

கட்டுச்சோறு சில நாட்களுக்குத்தான் தாங்கும். பிறகு நாறிவிடும்.

கற்றுக் கொடுத்த விசயங்களை வைத்து நாமே நம்மை வளர்த்துக் கொண்டால் ஒழிய புதிய மாற்றங்கள் நம்மிடம் அண்டாது.