Wednesday, June 16, 2021

வண்ணப்புரட்சி

வரலாற்றுத் தடங்களில் ஒவ்வொரு நாடுகளிலும் நடந்த பல்வேறு புரட்சிகளைப் பற்றி நாம் பாடப் புத்தகங்களில் படித்து வந்துள்ளோம். ஆனால் தற்கால நவீனத் தொழில் நுட்ப யுகத்தில் நடந்து கொண்டு இருக்கும் ஒரு புரட்சிக்குப் பெயர் "வண்ணப்புரட்சி".

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் தூண்டுதலின் பெயரில் ட்விட்டர் என்ற சமூக வலைதளம் உலகம் எங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கத்தியின்றி யுத்தமின்றி நடத்திக் கொண்டு இருக்கும் போருக்குப் பெயர் தான் "வண்ணப்புரட்சி".

அமெரிக்காவின் நலனுக்கு ஏற்புடையதாக இல்லாத ஆட்சிகளைக் கலைப்பது இதன் முதன்மையான குறிக்கோள். இதனைத் தவிர்த்து அரசாங்க கொள்கைகளில் மாற்றம் உருவாக்குவது. பிரித்தாள்வது, குழப்பத்தை விளைவிப்பது, மக்களை கூறு கூறாகப் பிரிப்பது என்று பல்வேறு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. இதனைத்தான் "வண்ணப்புரட்சி" என்கிறார்கள்.

இராணுவ படையெடுப்பு மற்றும் ஆட்சி மாற்றம் உட்பட இதைச் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும், ஒரு புதிய முறை இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு "வண்ண புரட்சி" என்பது ஒரு வகையான ஒருங்கிணைந்த தாக்குதலைக் குறிக்கிறது, 

மேற்கத்திய சக்திகள் மற்ற நாடுகளுக்கு எதிராக, குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் "சர்வாதிகார" மற்றும் அமெரிக்க நலன்களுக்கு விரோதமானவை என்று கருதப்படுகின்றன. 

ஈராக்கில் உள்ளதைப் போல ஓர் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேரடி இராணுவத் தலையீட்டிற்குப் பதிலாக, வண்ணப் புரட்சிகள் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிலைகுலைய வைப்பதும், 

தங்கள் தேர்தல் நியாயத்தன்மையை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமும், வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும், ஒத்துழையாமைச் செயல்களையும் திட்டமிடுவதன் மூலமும், மேற்கத்திய பத்திரிகைகளில் சாதகமான தகவல்களை உறுதி செய்வதற்காக ஊடக தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலமும் தாக்குகின்றன.

மேற்கத்திய நலன்களை நிலைநிறுத்தும் ஓர் அரசாங்கத்தை நிறுவுவதை உறுதி செய்வதே மிகப் பெரிய நோக்கம். இந்தியாவில் இப்போது ட்விட்டர் மூலம் நடந்து கொண்டு இருப்பது ஒரு வண்ண புரட்சியாக இருக்காது, ஆனால் அது நிச்சயமாக அதன் தொடக்கப்புள்ளியாகவே உள்ளது.

அமெரிக்காவில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் நிர்வாகம் எப்படிப் பார்க்கின்றது என்பதனையும் இதனை எப்படி ட்விட்டர் வெளிப்படுத்துகின்றது என்பதனை கீழே உள்ள சிலவற்றின் மூலம் உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?

1. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினருக்குப் பாகுபாடு காட்டும் அரசாக மோடி நிர்வாகம் உள்ளது.

2. மோடி அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கம்.

3. ஆனால் மோடியின் மக்கள் செல்வாக்கு காரணமாக தேர்தலில் வெல்லும் போது எதிர்க்கட்சிகளின் நிலை கேள்விக்குள்ளாக்கப் படுகிறது.

4. இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் விவசாயிகள் போராட்டம் நின்று விடக்கூடாது. இத்துடன் இதனைப் பற்றிய விவாதம், மக்கள் அனுதாபம் போன்றவற்றை ட்விட்டர் குறிப்பிட்ட குறிசொல்லில் தொகுப்பது, சர்வதேச அரங்கில் கொண்டு சேர்ப்பது.

5. சமீபத்தில் காங்கிரஸ் உருவாக்கி இருந்த டூல்கிட் பொதுவெளியில் அம்பலப்பட்டு ராகுல் கோஷ்டி அவமானப்பட்டு நின்றார்கள். ஆனால் இந்தச் சூழலிலும் காங்கிரஸைக் காப்பாற்ற ட்விட்டரின் முயற்சி மோடிக்கு எதிரான அமெரிக்கா நிர்வாக கட்டளையின் படி இந்தியாவில் நிகழ வேண்டிய ‘ஆட்சி மாற்றம்’ நடவடிக்கையை அம்பலப்படுத்தியது.

6. ட்விட்டரின் நடத்தை இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது, இந்தக் கட்டத்தில் அமெரிக்கா இந்தியாவில் தனக்குச் சாதகமான 'ஆட்சி மாற்றம்' நிகழ வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது என்பது நமக்குக் கண்கூடாக தெரிகின்றது.

7. ட்விட்டரின் நடத்தை மிக நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தாமதமாக, இப்போது  மிகவும் வெளிப்படையாகிவிட்டது. ட்விட்டர் சில காலமாக இந்திய அரசாங்கத்திற்கு எதிராக முரண்பட்டு வருகிறது மற்றும் காங்கிரஸ் டூலகிட் தொடர்பாக உருவான பகை பெரிதாகி உள்ளது. இந்தியச் சட்ட திட்டங்களை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று பெயர் அளவில் சொன்னாலும் முழு மனதோடு ஏற்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

8.ட்விட்டர் வாயிலாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ளுற பகை பெரிதும் அதிகரித்துள்ளது.

9. காங்கிரஸ் கட்சி டூல்கிட் நாங்கள் உருவாக்கியது அல்ல. இது பாஜக உருவாக்கியது என்று தடம் மாற்றினாலும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா உருவாக்கிய ஒவ்வொரு அதிரடியைப் பார்த்துப் பொறுக்க முடியாத ட்விட்டர் நிர்வாகம் பாஜக இது குறித்துச் செயல்படும் விதத்தைத் தனியாக குறிசொல் மூலம் சேகரித்து ஆட்டத்தைத் திசை மாற்றியது. பாஜக அரசியல்வாதிகளின் ட்வீட்டுகளில் லேபிளை சேர்க்கத் தொடங்கியது.

9. அமெரிக்கா, நிச்சயமாக உலகெங்கிலும் 'ஆட்சி மாற்றம்' நடவடிக்கைகளை நடத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது, அதில் ஒவ்வொரு நாட்டிலும் ஓர் ஆளும் அரசாங்கத்தைத் தகர்த்தெறிய முயல்கிறது, தங்கள்  நலன்களுக்கு விரோதமானது என்று கருதினால் எந்த அளவுக்குக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய முடியுமோ அந்த அளவுக்குக் கீழே இறங்கும் என்பது அமெரிக்காவின் கடந்த கால வரலாறு. இப்போது மோடி அரசாங்கத்தின் மேல் குறி வைத்துள்ளது. மோடியின் சுயசார்பு என்பது அவர்களை அளவு கடந்து எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்த விசயத்தில் தான் அவர்களுக்குக் காங்கிரஸ் தேவையாக இருக்கின்றார்கள். வாங்கிய காசுக்குக் கூலியாக காலம் முழுக்க செயல்படக்கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்கள்.

10. அமெரிக்கா அரசாங்கத்திற்கும் அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களும் அரசுடன் ஒத்திசைந்து செயல்படக்கூடிய அமைப்பு அங்கே நிலவுவதால் ட்விட்டர், பேஸ்புக், கூகுள் போன்ற தளங்கள் எல்லாவகையில் அமெரிக்கா அரசின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியவர்களாகவே இருக்கின்றார்கள்.

11. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜோ பைடன் என்பது அங்குள்ள சமூக வலைதளங்கள் உருவாக்கிய சாம்ராஜ்ய வெற்றியின் அடையாளம் ஆகும். வெகுஜன ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்குக் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்த்து இந்த வெற்றியை ஜோ பைடனுக்கு அளித்துள்ளனர்.

12. ஜோ பைடன் வெற்றி போல இந்தியாவிலும் மோடியின் தொடர் வெற்றியைத் தடுக்க எல்லாவிதமான ஆயுதங்களையும் பிரயோகிக்க தயார்ப் படுத்தி வருகின்றார்கள். இதில் முன்னிலையில் இருப்பது ட்விட்டர்.

13. ஜோ பைடன் நிர்வாகம் கொரோனா தடுப்பூசிக்குத் தேவைப்படும் மூலப் பொருளை இந்தியாவிற்கு வழங்கத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் உருவான அழுத்தம் காரணமாகவே ஏற்றுக் கொண்டது.  தடுப்பூசி தட்டுப்பாடு உருவானால் அதனையே பேசு பொருளாக மாற்றி வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றியை நிறுத்த முடியுமா? என்பதே நோக்கமாக இருந்தது. மேலும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை அமெரிக்க ஊடகங்கள் மூலம் நரேந்திர மோடியை நெருக்கடிக்குத் தனிமைப்படுத்துவதில் அயராது தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது.  

சர்வதேச அரசியலில், நாடுகள் ஒவ்வொன்றும்  அந்நியச் செலாவணியையும் மற்ற நாடுகளில் ஏற்படும் இழப்புகள் மூலம் தங்கள் ஆதாயத்தைப் பெறுவார்கள் என்பது பொதுவான விதியாகும்.

இதன் மூலம் தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்பது சர்வதேச அரசியல் புரிந்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எனவே இந்தச் சமயத்தில் அமெரிக்காவும் தங்கள் சுயலாபத்திற்காகவே செயல்படுகிறது என்று கருதுவது “சதி கோட்பாடு” அல்ல. 

ஆனால் இந்தச் சமயத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது சமீபத்தில் தான், காங்கிரஸ் ராகுல் காந்தி இந்திய உள் விவகாரங்களில் தலையிடுமாறு அமெரிக்காவிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டு இருக்கின்றார் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அமெரிக்காவுமா...?

(!)

மாறன் said...

ரஷ்யாவை,ஜெர்மனியை ஏன் விட்டுட்டீங்க?