Wednesday, June 02, 2021

இணைய கொத்தடிமைகள் அருமையானவர்கள்

கட்டுச்சோறு சில நாட்களுக்குத்தான் தாங்கும். பிறகு நாறிவிடும்.

கற்றுக் கொடுத்த விசயங்களை வைத்து நாமே நம்மை வளர்த்துக் கொண்டால் ஒழிய புதிய மாற்றங்கள் நம்மிடம் அண்டாது.உருவாக்கப்பட்ட கற்பனைக்கதைகள் எத்தனை நாட்களுக்குத் தங்கும்?

இந்தப் பெருந்தொற்று காலம் இணையக் கொத்தடிமைகளை ஒவ்வொரு நாளும் காறித் துப்பிக் கொண்டேயிருக்கின்றது.

எப்படிச் சாதித்துள்ளோம் பார்த்தீர்களா? வட மாநிலங்களில் இப்படி எல்லாம் இல்லை? இன்றைய வளர்ந்த தமிழகம் என்பது அவர் உருவாக்கியது? 

அன்றே திட்டமிட்டார்? என்று இன்றுவரையிலும் கூச்சநாச்சம் இல்லாமல் ரைட்டப் எழுதித் தள்ளிக் கொண்டேயிருப்பவர்களுக்குத் தமிழக அரசு மருத்துவமனைகள் உணர்த்தும் பாடம் பயங்கரமானது.
வேறு எந்த மாநிலங்களிலும் வடக்கும் கிழக்கும் மேற்கும் தெற்கும் அரசுப் பேருந்துகள் இணைப்பதில்லை என்றார்கள்? அவர் உருவாக்கியது என்றார்கள். மகிழ்ச்சி. சரி இப்போது இந்த அரசு போக்குவரத்துத்துறை எப்படியுள்ளது?  காயலான் கடையில் வாங்கமறுக்கும் பழைய இரும்புத்துண்டுகள் மக்களை அழைத்துக் கொண்டு செல்கின்றது.

கூட்டுறவுத்துறை எப்படியுள்ளது? இனிமேல் இவர்களிடம் விட்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று மத்திய அரசு எடுத்துக் கொண்டு விட்டது.மருத்துவத்துறை எப்படியுள்ளது?

நான் சொல்ல மாட்டேன்.ஆனால் நிச்சயம் சொல்வேன். தமிழகச் சுகாதாரத்துறையின் அடிப்படைக் கட்டமைப்பு அற்புதமாக உள்ளது. மருத்துவர்களும் செவிலியர்களும் பயிற்சி மாணவர்களும் பல மடங்கு தங்கள் உழைப்பை அளித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

வருடந்தோறும் செய்ய வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதி அம்மாவின் ஆணைக்கிணங்க, முதல்வரின் ஆணைக்கிணங்க காற்றில் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்த காரணத்தைப் பற்றிப் பேசினால் நீயும் துரோகியே.

சில மாதங்களுக்கு முன்பு வரை ஓர் ஊப்பி என் பதிவில் தினமும் ஏதாவது ஒரு சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார்.  அவர் எண்ணம் நோக்கம் செயல் எல்லாமே பாஜக வை புழுதி வாரித்தூற்றி அசிங்கப்படுத்துவது மட்டுமே முக்கிய குறிக்கோளாக இருந்தது. பிறகு நானே அவரை பட்டியலிலிருந்து தூக்கி விட்டேன். 

மூன்று வாரத்திற்கு முன்பு அவரும் அவர் மனைவியும் கொரோனா பாதிப்பில் இறந்து விட்டார் என்று மற்றொரு முரட்டு ஊப்பி எழுதியிருந்தார். வருத்தமாக இருந்தது.

இப்படி எத்தனை ஊப்பிகளுக்கு நம் பொது மருத்துவ சுகாதாரத்துறை உதவ முடியாத நிலையில் இருக்கின்றதோ? 

ஆகா இப்படி நம் குடும்பம் சுகாதார வசதிகள் இயல்பாகக்கூட பெற முடியாத அளவுக்கு நம் தமிழ்நாட்டுக் கட்டமைப்பு உள்ளதே? என்று அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றா நினைக்கின்றீர்கள்?

நிச்சயம் அடுத்து பேரன் வந்தாலும் கழுவி விடத்தயாராக இருக்கும் தியாக சீலர்களாகத்தான் இருப்பார்கள்?

நரேந்திர தாமோதர்தாஸ் மோடி - ஏழாண்டு ஆட்சி காலம்

நமக்கு வாய்த்த அடிமைகள் அருமையானவர்கள் என்று தானே மேலே உள்ளவர்கள் குதூகலமாகவிருப்பார்கள்.

அவர்களிடம் என்ன நினைத்தால் தோற்றுப் போகும் பத்துப் படங்கள் எடுக்க காசுள்ளதா?

அவர்களிடம் இருப்பது ஒன்றே ஒன்று தான்.

வாலுக. ஒளிக.

பாஜக வந்துரும்.
7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். //

A1 நடித்த படமாயிற்றே...!

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
மாறன் said...

அப்படியே வட மாநிலங்களின் அடிப்படை கட்டமைப்பை பற்றி ஒர் சிறிய கட்டுரை வரைக.

ஜோதிஜி said...

வளர்ந்த மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்துறையின் தற்போதைய நிலை குறித்து தங்கள் கருத்தறிய ஆவல் மாறன்.பிறகு நாம் ரயில் ஏறிப் போகலாம்.

வருண் said...

அவரு "இதை வெளிவிட வேண்டாம்" னு சொல்லிக் கேட்டும் பின்னூட்டத்தை வெளிவிட்டுட்டீங்க, அண்ணாச்சி!!!? என்னவோ போங்க!

ஜோதிஜி said...

தனி மனித காழ்ப்பு இல்லாமல் நாகரிகமான வார்த்தைகள், சரியான எதிர்க்கருத்து, ஆக்கபூர்வமான சிந்தனைகள், என் எழுத்துக்கு மாற்றாக இருந்தாலும் அது மற்ற அனைவருக்கும் சென்று சேரவே விரும்புகிறேன். தனபாலன் என் பார்வையில் குழந்தை. அவர் திருக்குறள் கற்று முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு அறிவாற்றல் மிகுந்தவராக இருந்தாலும் மாநில அரசு, மத்திய அரசு, சர்வதேச அரசியல் இவை மூன்றுக்கும் பின்னால் உள்ளவற்றை இன்னமும் உணர்ச்சி பூர்வமாக பார்க்கும் குழந்தையாகவே இருக்கின்றார்.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று தான் பார்த்தேன்... நானே எடுத்து விட்டேன்... அது வேறு காரணம்...

அப்புறம் உணர்ச்சி வேறு... உணர்வு வேறு... பாசிச மனநிலை இருந்தால் அதை முதலில் அறிந்து கொள்ளவே முடியாது...! தெரிந்து புரிந்து கொள்ள வேண்டுமென்றால்... ம்ஹிம்... இது ஒருபுறம் இருக்கட்டும்...

உலகில் எவ்வித அரசியல் என்றாலும் திருக்குறள் அரசியல் அதிகாரங்கள் ஒரு பாடம்... சர்வதேச அரசியல் ஒருபுறம் இருக்கட்டும்... நம் ஒன்றிய பிரதேசத்திற்கு வருவோம்...! திருவள்ளுவருக்குப் பின் கிட்டத்தட்ட 2052 ஆண்டுகள்... ஒரு கேள்வி : மன்னர்கள் காலத்தில் ஏன் திருக்குறள் அவர்களின் பார்வைக்குச் செல்லவில்லை... முடிந்தால் அயோத்தி தாசர் முதல் ஆரம்பியுங்கள்... ஓரளவு தமிழ்நாட்டின் அரசியல் புரியலாம்... நன்றி...