Monday, June 21, 2021

மதி இல்லாத நிதி மந்திரி

எதற்காகவும் எந்த இடத்திலும் எனக்குக் கோபம் வருவதில்லை. படிப்படியான பயிற்சியின் மூலம் என் அளவு கடந்த முன் கோபத்தை 90 சதவிகிதம் குறைத்து இன்று நிதானமான எதனையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கிறேன். 




சூடு, சொரணையற்றவன் என்று நினைக்க வேண்டாம். காரண காரியங்களை யோசித்துப் பார்த்தால் நமக்குக் கோபம் வராது. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், நம்மைக் கோபப்படுத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவர் என்று இருந்தாலும் அவர்களைக் கையாள்வதில் தான் தனி மனித ஆளுமை மெருகேறும்.. உங்கள் தரம் மற்றவர்களுக்குப் புரியக்கூடும். வயது கூடும் போதும் நிதானம் கூடும். குறிப்பாக 50 வயதுக்கு மேல் உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இது தான் முக்கியம்.



ஏன் இந்தப் பீடிகை. நலவாழ்வு ஆரோக்கிய வாழ்வு தொடர்பான கட்டுரையா? என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டவுள்வாட்ச்டகளஸ் பேட்டியை நண்பர் அனுப்பிய காரணத்தால் பார்க்க வேண்டியதாகி விட்டது. பார்த்து முடித்து அடுத்த ஒரு மணி நேரம் என்னுள் உருவான கோபத்தை அடக்க முடியாமல் அமைதியான பின்பு இதனை எழுதுகிறேன்.



•   தமிழகத்தில் அறிவுள்ள மனசாட்சி உள்ள பத்திரிக்கையாளர்களும் இருக்கின்றார்கள்.  "நீங்கள் தானே பெட்ரோல் விலையைக் குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்?" என்று கேட்ட போது டக்ளஸ் எழுந்து அடித்து விடுவார் போல் இருந்தது.

•   தேர்தல் கூட்டங்களில் பேசுவது என்பது வேறு. தேர்தல் வாக்குறுதிகளாக அச்சடித்து மக்களிடம் வழங்குவது என்பது வேறு. இது கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும். இதனை டக்ளஸ் உணரும் மனோநிலையில் இல்லை.



•   டெல்லியில் பஞ்சாயத்துத் தலைவரை பேட்டி கண்ட டெல்லி வாழ் மூனா கானா பணியாளர்கள் முதல் இங்கு இன்று கேள்வி கேட்ட எமனின் வாகனம் வரைக்கும் வாயில் இயல்பாக மத்திய அரசு என்று வந்தாலும் டக் என்று மாற்றி ஒன்றிய அரசு என்று வலுக்கட்டாயமாக பேசும் இந்த அயோக்கியத்தனத்திற்கு நான்கு வீடுகள் சென்று வேறு எதையாவது வாங்கித் தின்னலாம். டக்ளஸ் வாயிலிருந்தும் இப்படித்தான் உளறல் மொழி வெளிப்பட்டது.

•   நாற்பது நாட்கள் முடிந்தும் இன்னமும் தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை தயார் செய்ய முடியவில்லை.



•   சென்ற வருடம் மட்டுமல்ல கடந்த நான்கு வருடமும் டாமின் (கனிம வளத்துறை) நட்டத்தில் தான் உள்ளது என்கிறார். அதுவொரு காமதேனு பசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

•  கணினி படக்காட்சிகள் மூலம் மத்திய அரசின் துரோகங்களைப் பட்டியலிடுகின்றேன் என்று படம் காட்டினார். இவர் விரும்புவது என்னவெனில் "எரிபொருட்களை இலவசமாகத் தாருங்கள். நாங்கள் விற்று அப்படியே எடுத்துக் கொள்கின்றோம். நாங்கள் வாக்குறுதி அளித்துள்ள இலவசத் திட்டங்களை நிறைவேற்றாமல் போனால் ஊருக்குள் தலைகாட்ட முடியாது" என்கிற அளவில் பதட்டத்துடன் பேசினார்.



•   தவறாமல் அனைத்து மாநிலங்களும் ஒழிக. தமிழகம் வாழ்க. தமிழகம் அமெரிக்காவிற்கு ஒப்பானது என்பதனை குறிப்பிடுகின்றார். ஆனால் அதற்கான காரண காரியங்களை விளக்காமல் "மத்திய அரசு எங்கள் பணத்தைத் திருடுகின்றது" என்பதாக முடிக்கின்றார்.

•   இந்த நிமிடம் வரைக்கும் இங்குள்ள வரி வருவாய்களை எப்படிப் பெருக்கப் போகின்றோம் என்று ஒரு வார்த்தை கூட எங்கும் பேசவே இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா புகழ் பாடுவதை நிறுத்துவதாக தெரியவில்லை.



•   உடல் மொழி கேவலம். உரையாடும் விதம் படு கேவலம். ஆதிக்க மனப்பான்மை என்பது நாடி நரம்பு முழுக்க பரவியுள்ளது. வாயைத்திறந்தாலே திமிர்த்தனமான வார்த்தைகள் நர்த்தனமாடுகின்றது. "நாளை காலை இந்தப் பாண்டிய நாடே என் பாட்டுக்கு அடிமை" என்று சொன்ன ஹேமநாத பாகவதர் போலவே தெரிகின்றார். 

காலம் கவனிக்கும். கற்றுக்கொடுக்கும்.

•   தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை இரண்டு லட்சம் கோடி என்றால் எத்தனை லட்சம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மூலம் இங்கே உள்ள வருகின்றது என்ற கணக்கு எந்த இடத்திலும் வருவதே இல்லை. அவர்கள் இரத்தம், வியர்வை சிந்தி இங்கே அனுப்புவதும் அதன் மூலம் தனிநபர்களின் வருமானம் உயர்வதும் இங்குள்ள ஆட்சியாளர்களின் திறமையால் தமிழகம் வளர்கின்றது என்று நம்புகின்றார்கள்.



•    "இந்த அளவுக்கு மோசமாக நிதி நிலைமை இருக்கும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை" என்கிறார். எதன் அடிப்படையில் எந்த நம்பிக்கையில் தேர்தல் அறிக்கையில் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடிந்தது? நான் ஏற்கனவே எழுதி உள்ளேன். பத்தாண்டுகளுக்கு முன்னால் இவர்கள் பார்த்த மத்திய அரசு என்பது வேறு. இப்போது உள்ள நிர்வாகம் சார்ந்த மத்திய அரசு என்பது வேறு. 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் சொல்லாமல் இருந்து இருப்பார்களா?  தெரியும். சமாளித்து விடலாம் என்று இருந்தவர்களுக்கு இப்போது அடி மேல் அடி விழத் தொடங்கியுள்ளது.



•   இவர்கள் ஆட்சிக்கு வந்து 40 நாட்கள் முடிந்துள்ளது. இவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு 80 நாட்கள் இருக்குமா? இந்த மூன்று மாதங்களில் எரிபொருள் விலை சார்ந்து மத்திய அரசு எந்தக் கொள்கை முடிவுகளும் மாற்றவில்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள். என்ன சென்ற ஆட்சியில் இருந்ததோ அதே தான் அப்படியே தான் இந்த ஆட்சியிலும் இருக்கின்றது. இவர்களுக்கு அது தெரியாமல் இருக்கும் என்று நம்புகின்றீர்களா?

பெட்ரோல் விலை பற்றி எரிகின்றது? என்ன காரணம்? யார் காரணம்?

•   நள்ளிரவில் வீட்டுக்குள் வந்த திருடன் மாட்டியவுடன் "நான் திருட வரவில்லை. வீட்டைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்றால் வீட்டுக்காரர்கள் எப்படி உபசரிப்பார்கள்?" என்ற பயத்தின் அடிப்படையில் இப்போதே டக்ளஸ் உளறத் தொடங்க ஆரம்பித்து விட்டார்.

•  #வாழ்நாள்கொத்தடிமைகள் இவரை வராது வந்த மாமணி என்றும், மத்திய நிதி அமைச்சருக்குச் சரியான சவால் என்றும், அமெரிக்காவின் பொருளாதார மேதை என்றும் அழைத்து புளகாங்கிதப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குச் சிலவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். வெவ்வேறு பெயர்கள் கொண்டு ஒரே விதமாக இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரண்டு கட்சிகளில் புத்திசாலிகளுக்கு என்றுமே இடம் இருந்தே இல்லை. இவரிடம் புத்திசாலித்தனமும் இருப்பதாகவும் தெரியவில்லை. உழைக்கக்கூடியவராகவும் தெரியவில்லை. பரம்பரை பந்தாவில் பட்டம் விடலாம் என்று நினைக்கின்றார் போலும். தொடக்கத்தில் ஆட விடுவார்கள். சில நாட்களில் சமயம் பார்த்து காலை ஒடித்து மூலையில் வாழ்நாள் முழுக்க எழ முடியாத அளவிற்கு முடக்கி வைத்து விடுவார்கள். கவனித்துக் கொண்டேயிருங்கள்.

நான் எப்போதும் இந்த வார்த்தையை அழுத்தமாக பல இடங்களில் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். இந்தியாவிற்குச் சரியான நிதியமைச்சர்கள் இந்தியச் சூழல் புரிந்து செயல்படக்கூடியவர்கள் வந்து வெகுநாளாகி விட்டது. வந்த அத்தனை பேர்களும் அமெரிக்கன் ரிட்டன் தான். முதல் முறையாக அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் வந்த பிறகு அவர்களின் கொள்கை முடிவுகள் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் இருந்தாலும் கூடத் திருடன் கையில் இருந்த சாவி இப்போது சரியான நபருக்கு வந்துள்ளது என்பதனை பதிவு செய்துள்ளேன். இதுவே தமிழ்நாட்டில் நிதிச் செயலாளர் எழுதிக் கொடுத்த வசனங்களை ஒப்பித்த ஒப்பில்லா தங்கங்கள் மத்தியில் இப்போது வந்துள்ள தகரம் உளறுவதைப் பார்க்க சகிக்கவில்லை. உடன் பணிபுரியும் நிதிச் செயலாளர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதனை இப்போது யோசித்துப் பார்க்கின்றேன். வீரமென்றால் என்ன தெரியுமா? பயம் இல்லாமல் நடிப்பது என்பதாகத் தான் இவரின் செயல்பாடுகள் உள்ளது.

கால் கிறுக்கன், அரை கிறுக்கன், முக்கால் கிறுக்கன் என்பதெல்லாம் மனித அகராதியில் தனித்தனியாக சொல்வதில்லை. அவன் கிறுக்குப்பய. சேராதீங்கப்பா என்று நகர்ந்து விடுவார்கள். ஆனால் தமிழகம் என்ன பாடுபடப் போகின்றதோ? என்ற தெரியவில்லை?

இப்போது விழுந்துள்ளது தாயமல்ல. அடுத்த சில கட்டங்களில் பாம்பில் தலை காத்துள்ளது. எப்போது என்று காய் அங்கே சென்று சேரும் என்று காத்திருப்போம்.

டக்ளஸ் உளறுவதைக் காண இணைப்பில் காத்திருக்கவும். 

இணைத்துள்ள படங்களை கண்டு வாசித்து மகிழவும்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த பத்து சதவீதமும் கடந்து போகட்டும்...

கிரி said...

" தேர்தல் கூட்டங்களில் பேசுவது என்பது வேறு. தேர்தல் வாக்குறுதிகளாக அச்சடித்து மக்களிடம் வழங்குவது என்பது வேறு. இது கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்."

சரியான விளக்கம்.

"நாளை காலை இந்தப் பாண்டிய நாடே என் பாட்டுக்கு அடிமை" என்று சொன்ன ஹேமநாத பாகவதர் போலவே தெரிகின்றார். "

:-) :-)

தற்போது புதிதாக 5 பேரை பொருளாதாரத்தை மேம்படுத்த நியமித்துள்ளார்கள். PTR ஏற்கனவே பல பஞ்சாயத்து பண்ண கூடியவர். அதோடு தனக்கு தான் எல்லாமே தெரியும் என்று பேசக்கூடியவர்.

இந்நிலையில் இவர் துறையில் மற்ற ஐந்து பேரோடு பேசி, விவாதித்து, செயல்படுத்தி .. ரைட்டு.