Saturday, February 26, 2022

தாமரை மலர்ந்தது 2022

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி

தன் மெய் வருந்தக் கூலி தரும்.

(நன்றி குறள் சித்தர் திண்டுக்கல் தனபாலன்)

விளக்கவுரை

ஒருவனை, ஒருவரை, ஒரு கட்சியை, ஒரு கொள்கையை நாம் அசிங்கப்படுத்தலாம். 

அவமானப்படுத்தலாம். கேவலப்படுத்தலாம். 

புழுதிவாரி தூற்றலாம். பொய்க் கதைகளை திரும்பத் திரும்பச் சொல்லலாம்.  

மாலை நேரம் என்றாலே தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து கொண்டு அதில் வரும் விவாதங்களைக் கவனித்து மன நலம் பாதிக்கப்பட்டு அதுவே உண்மை என்று நம்பலாம்.

ஆனால் உழைப்பு உன்னதமான முடிவுகளைத் தரும் என்று என் ஆசான் வள்ளுவர் எழுதியதாக திண்டுக்கல் சித்தர் நேற்று அழைத்து சொன்னார். அப்படித்தான் இப்போது தமிழகத்தில் திரு. அண்ணாமலை அவர்கள் படிப்படியாக தமிழக மக்கள் இளம் தலைவராக அடையாளம் காணப்பட்டு வருகின்றார்.

பொழுது போகாமல் இருக்கும் போது மதுரை ரவி அவர்கள் கட்டாயம் இந்தப் படங்கள் என்ன சொல்கின்றது?  

என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதனை குரல் வழியே அனுப்புங்கள் அய்யா.  

என் அலைபேசி என் கையில் இப்போது இல்லை.  

முழுப் பரிட்சை முடியும் வரைக்கும் இங்கே எனக்கு என் டவுசர் மட்டும் தான் சொந்தமாக இருக்கும்.  

மற்றது அனைத்து பெண்கள் நலக்கூட்டணியார் ஆதிக்கத்தில் தான் இருக்கும் என்பதனை அன்போடு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
















Tuesday, February 22, 2022

தொடர்ந்து பயணிக்கின்றேன் 2022 02 22

வேர்ட் ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய போது எழுத்துலகம் பற்றி எனக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது.

ப்ளாக்ஸ்பாட் வந்த போது எழுத்தாளர் என்பதற்கு உண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளவே முயன்றேன்.

சென்ற வருடம் ஜூலை மாதத்தில் 13 ஆம் ஆண்டு தேவியர் இல்லம் பயணம் குறித்து எழுதியிருந்தேன்.

2022 என்பது என் எழுத்துப் பயணத்தில் 14 ஆம் ஆண்டு.  

இன்று வரையிலும் எழுதுகிறேன்.


Saturday, February 19, 2022

நூற்றுக்கு நூறு வாங்க மறக்காதீங்க/100வது கடிதம்

மிகச் சரியாக 14 வாரத்திற்கு முன்பு தொண்டர்களுக்கு அண்ணாமலை அவர்கள் கடிதம் எழுதத் தொடங்கினார். தொடங்கிய நாள் விநாயக சதுர்த்தி என்று நினைக்கின்றேன். இதோ இன்று 100 வது கடிதம். சர்வதேச அரசியல் முதல் சாமானியன் அரசியல் வரை குறிப்பாக உணர்ச்சிகளைத் தூண்டாத கதை திரைக்கதை வசனம் இல்லாத எதார்த்தமான நிஜ வரிகளைச் சலிக்காமல் எழுதிக் கொண்டு வந்தார். 

எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர்ப்பு. வலை விரித்துக் காத்திருக்கும் கொத்தடிமைக்கூட்டம். வலிகளைக் காட்டாமல் சிரிப்புடன் கடந்து வந்த லாவகம். எதிர்ப்புகளை ஏளனங்களைப் பொருட்படுத்தாமல் பகைவனுக்கும் அருள்வாய் என்ற ஞானியின் மனதோடு திருட்டுக் கோஷ்டிகளைத் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த அறிவுக்கூட்டத்தை உருவாக்கியதில் இன்று வெற்றி அடைந்துள்ளார். 

ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்து பணி செய்து கிடப்பதே என்று அண்ணாமலை அவர்கள் செயல்பட்டு உள்ளார். மிகக் குறுகிய காலத்திற்குத் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணித்துள்ளார். இதுவரை பாஜக உள்ளே நுழையாத தமிழக கிராமங்களில் காலடித் தடத்தைப் பதித்து முத்திரை பதித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் குறித்த துல்லியமான கணக்கீடுகள், கணக்குகள், விபரங்கள், புள்ளி விபரங்கள் போன்ற அனைத்தையும் இந்த 100 வது கடிதத்தில் எழுதியுள்ளார். அவசியம் (பேச்சுவடிவ) முழுமையாக கேட்கவும். நன்றி. 

Sunday, February 06, 2022

குடும்ப அரசியல் நடத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?

தேதி 03.02.2022

தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்களின் அறிக்கை

குடும்ப அரசியல் நடத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உருவாக்கியிருக்கும் சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது?



Saturday, February 05, 2022

தமிழக முதல்வர் அவர்களுக்கு / லோகேந்திரன் கடிதம்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு

உள்ளாட்சித் தேர்தலுக்குக் கட்சித் தொண்டர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை வாசித்தேன். 



Thursday, February 03, 2022

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது (Feb 3 1969)

 அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது

...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்துப் பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது.

Wednesday, February 02, 2022

'கரீபி ஹட்டாவ்'

 "சுதந்திரம் கிடைச்ச 1947 ல் இருந்து, முதல் பொதுத் தேர்தல் 1952 வரைக்கும் யார் ஆண்டது?"

காங்கிரஸ்:- "நாங்கதான் ஆண்டோம்!
"அப்ப என்ன பண்ணீங்க?"
காங்கிரஸ்:- "வறுமையை ஒழிச்சிகிட்டு இருந்தோம்!"
"சரி, 1952 ல இருந்து 1957 தேர்தல் வரைக்கும் 5 வருசம் ஆண்டது யாரு?"
காங்கிரஸ்:- "அப்பவும் நாங்கதான் ஆண்டோம்"
"அப்ப என்ன பண்ணீங்க?"
காங்கிரஸ்:- "அதுவா அப்பவும் வறுமையைத்தான் ஒழிச்சிகிட்டு இருந்தோம்"
"அப்பறம் 1957 - 1962 யார் ஆண்டாங்க 5 வருசம்?"
காங்கிரஸ்:- "அடுத்த கேள்வி என்ன கேட்பீங்கன்னு புரியுது! அப்பவும் நாங்கதான் வறுமையை ஒழிச்சிகிட்டே ஆண்டுகிட்டு இருந்தோம்"
"1962 - 1967?"
காங்கிரஸ்:- "என்னங்க திருப்பித் திருப்பி கேட்கறீங்க? நாங்கதான் ஆண்டோம் - வறுமையை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்டோம்"
"1967 லருந்து 1971 வரை?"
"அப்பவும் எங்க ஆட்சிதான் - அப்ப ஒரு சபதம் எடுத்தோம்ல - வறுமையை ஒழிக்கணும்னு"
"1971 - 1977 வரைக்கும்?"
காங்கிரஸ்:- "பச்சப் புள்ளைக்குக் கூடத் தெரியுமே - 'கரீபி ஹட்டாவ்' தானே எங்க கோஷமே? ராஜ மான்யத்தை ஒழிச்சா வறுமை ஒழிஞ்சிடும்னு நம்பினோம்! அந்த நம்பிக்கையை இப்பவும் காப்பாத்திட்டு வரோம்"
"சரி, 1977 தேர்தல்ல ஜனங்க கிட்ட செமத்தியா அடி வாங்கினீங்க? பிறகு 1980 ல மறுபடி வந்த பிறகு?"
"நாங்க நிலையா இருக்கும் வரை - வறுமையும் நிலையா இருக்கும்னுதான் 1980 ல் ' நிலையான ஆட்சி' கோஷத்தையே வச்சோம்! அதற்கு அடுத்த தேர்தல்ல அமோகமா இந்திரா மரண அனுதாப அலையில ஆட்சிக்கு வந்தப்பவும் எங்க கோஷம் மட்டும் மாறலை!
"பிறகு 1991ல ராஜீவ் மரண அனுதாப அலையில ஜெயிச்சப்ப?"
"அதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டோம்!"
"எதை? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதையா?"
"இல்லீங்க வறுமையை ஒழிக்கறதை - கொஞ்சநாள் அதற்கு லீவு கொடுத்து ஒத்தி வச்சிட்டோம்"
"பிறகு ரொம்ப நாள் கழித்து 2004, பிறகு தொடர்ந்து 2009 அப்பல்லாம் ஜெயிச்சு வறுமையை ஒழிச்சிங்களா?"
"விடுவமா? வறுமையை ஒழிப்போம் கோஷத்தை மட்டும் விடலை நாங்க - அப்படி ஒரு மகத்தான கோஷம் அது!"
"சரி, வறுமையை ஒழிக்க எப்படிப் பாடு பட்டீங்க? கொஞ்சம் விளக்குங்களேன்"
"சும்மா இல்லை... திமுகவையும் கூட்டாளியா சேர்த்துகிட்டு அப்படி ஒரு உழைப்பு - வறுமையை ஒழிக்க! "
"யாருடைய வறுமையை ஒழிச்சீங்க?"
"நீங்க யாருடைய வறுமையைக் கேக்கறீங்க?"
"சரி போகட்டும் இப்ப 2024 ல ஆட்சியைப் பிடிக்க ஏன் இவ்வளவு முனைப்பா இருக்கீங்க?"
"எதுக்கு? வறுமையை ஒழிக்கத்தான்!"
"சரிங்க, அப்பேர்ப்பட்ட வறுமைக்கு யாருங்க காரணம்?"
"மோடிதான்"
"அடிங்கொய்யால!"