Monday, June 07, 2021

புதிய பாராளுமன்ற கட்டிடமும் கதறும் ஓநாய்களும்

13 டிசம்பர், 2001

இந்த தேதி உங்களுக்கு நினைவில் உள்ளதா? அப்சல் குரு என்பவனால் இந்தியாவின் இதயமான பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்ட நாள். இந்தியாவின் பாதுகாப்பைக் காங்கிரஸ் எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு இது போல பல உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அவர்கள் தான் இப்போது புதிதாக கட்டப்பட்டு வருகின்ற பாராளுமன்ற கட்டித்தைப் பற்றித் தொடர்ந்து அவதூறுகளை, கற்பனைகளை, கட்டுக்கதைகளைப் பரப்பிக் கொண்டு வருகின்றார்கள்.

உண்மைதான் என்ன?



இந்தியாவின் மக்கள் தொகை 1947 ல் 34 கோடியிலிருந்து 2020 ல் 139 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசில் அமைச்சுகளின் எண்ணிக்கையும் 18லிருந்து 51 ஆக உயர்ந்துள்ளதுடன், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையும் 66 லட்சமாக உயர்ந்துள்ளது. இத்துடன்  52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர்களின் எண்ணிக்கை ஆகும்.

 பாராளுமன்றத்தின் அளவு 1952 இல் ஒன்றாக அமைக்கப்பட்ட இரு அவைகளிலும் 705 உறுப்பினர்களிடமிருந்து 2021 இல் 772 ஆக உயர்ந்துள்ளது.

இது 70 ஆண்டுகளுக்குப் பிறகு 9.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாக பாதிப்பை உருவாக்குகின்றது. அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய எதுவும் இயல்பாக கிடைக்காத அளவிற்கு நிர்வாக ஒழுங்கு கெட்டுப் போய் இருந்தது.

இப்போது எதிர்க்கும் காங்கிரஸ் பாராளுமன்றக் கட்டிடம் பாதுகாப்பு அற்றது என்று பட்டியலிட்டது கடந்த கால வரலாறு. இப்போது தலைகீழ் மாற்றம் அவர்களிடம் உருவாகியுள்ளது.  ஒரே காரணம் மோடி என்ற மனிதரை மாற்ற வேண்டும். அவர் புகழுக்குக் களங்கம் உருவாக்க வேண்டும். அதன் மூலம் இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைந்தாலும் பரவாயில்லை என்ற போதும் அவர்களின் பேச்சும் செயல்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

70 ஆண்டுகளில் இந்தியா முழுமையாக மாறியுள்ளது. மக்களின் எண்ணங்கள், நோக்கங்கள், விருப்பங்கள், தொழில் நுட்ப வளர்ச்சி, மாறிய உலகம் என்று எதுவும் காங்கிரஸ் கண்களில் தென்படவே இல்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள். பல அமைச்சக துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அது இங்கே நடைபெற வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பற்றாக்குறை என்ற வார்த்தை ஊழலுக்கு வகுத்தது. இதன் மூலம் தனிப்பட்ட நபர்கள் நேரிடையாக மறைமுகமாக ஆதாயம் அடைந்தனர்.

உலக அளவீடுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நம் நாடாளுமன்றத்தின் அளவு மிகக் குறைவு. இன்றைய சூழலில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது 25 முதல் 40 லட்சம் வாக்காளர்களைக் கொண்டதாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தன் கடமையை முழுமையாக செய்ய முடியாத அளவுக்குத்தான் உள்ளது.

கடந்த காலங்களில், 1952, 1963, 1973, மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நான்கு ஆணையங்கள் அமர்ந்து எண்ணிக்கையை நிர்ணயித்தன. 2026 மற்றொரு ஆணையம் அமர திட்டமிடப்பட்டுள்ளது, 2031 வாக்கில் குறைந்தது 800க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய நாடாளுமன்றம் அமைப்பு நம்மிடம் இருந்தாக வேண்டும். நாம் புதிய கட்டிடத்தை உருவாக்காத பட்சத்தில் எதிர்காலத்தில் பாராளுமன்றச் செயல்பாடுகள் கூடாரங்கள் அமைத்துச் செயல்பட வேண்டியதாக இருக்கும் என்பதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

தற்போதைய அமைச்சரவை செயலகத்தில் 51 அமைச்சுகளில் 22 மட்டுமே உள்ளன,

மீதமுள்ளவை டெல்லி முழுவதும் பரவியுள்ளன. 

புதிய கட்டிடம் மூலம் அனைத்து அமைச்சகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர முடியும். கூடவே தொழில் நுட்ப வசதிகள் மூலம் அனைத்து விதமான செலவினங்களையும் கட்டுப்படுத்த முடியும். இதில் தான் எதிர்ப்பாளர்களுக்குப் பிரச்சனை உள்ளது. காரணம் இதன் மூலம் கிடைத்து வந்த அனைத்து விதமான லாபங்களும் பறிபோய்விடக்கூடும் என்பதால் கதறுகின்றார்கள்.

மற்றொரு தவறான கருத்து, பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படப்போகிறது. உண்மை என்னவென்றால், மூன்று வகையான பழைய கட்டிடங்கள் உள்ளன: முதலாவதாக, பாராளுமன்ற மாளிகை, வடக்கு மற்றும் தெற்கு தொகுதி போன்ற பழைய வரலாற்றுக் கட்டிடங்கள், அவை தக்கவைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும். இரண்டாவதாக, புதிய பாராளுமன்றம்  ஒருங்கிணைந்த மத்திய செயலகம், எஸ்பிஜி வளாகம், பிரதமர் மற்றும் துணைத் தலைவர் குடியிருப்புகள் போன்றவை கட்டப்படும், மூன்றாவதாக, சில கட்டிடங்கள் இடிக்கப்படும். கிருஷி பவன், நிர்மன் பவன், ரக்ஷா பவன், சாஸ்திரி பவன், உத்யோக் பவன், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் கட்டப்பட்ட ஐ.ஜி.என்.சி.ஏ இணைப்பு போன்ற கட்டிடங்கள்.

இவைகள் அனைத்தும் சிறந்த அழகியல் அற்புதங்கள் என்பது மறுப்பதற்கு இல்லை.

இன்றைய பணிச்சூழலில் பராமரிக்க மிகவும் விலை உயர்ந்தது, நவீனப் புத்திசாலித்தனமான கட்டிடங்களில் தேவைப்படும் சிறந்த  தற்கால நடைமுறைகளுக்குத் தேவைப்படும் எந்த விசயங்களும் இந்தக் கட்டிடங்களில் இல்லை.

பெரும்பாலானவை கட்டப்பட்ட காலத்தில் இருந்த தொழில் நுட்ப விசயங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டவை. அனைத்தும் இன்றைய சூழலில் காலாவதி ஆகிவிட்டன. நாம் இவற்றைப் பாதுகாக்க மிகப் பெரிய செலவை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

புதிய பாராளுமன்றம் கட்டடச் செலவு என்பது ரூ. 971 கோடி (அமெரிக்க $ 133 மில்லியன்) மட்டுமே.

ஆனால் பரப்புரைகள் மூலம் 35 000 கோடி என்று ஒவ்வொருவரும் பலவிதக் கணக்குகளைச் சொல்லி இதனை மோடிக்காகக் கட்டப்படும் வீடு என்பது வரைக்கும் பிரச்சாரம் செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

மேலும் திட்டமிடப்பட்டுள்ள முழு மத்திய விஸ்டாவின் மொத்தச் செலவு ரூ .20,000 கோடி ஆகும், இது அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 20 லட்சம் கோடி, ஒவ்வொரு ஆண்டும் வரி வருவாயில் 0.25% மட்டுமே ஆகும். 

எதிர்ப்பாளர்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்னவெனில் தொற்று நோய்க் காலத்தில் இந்தச் செலவு தேவையா? இதற்கு ஒதுக்கப்படும் நிதியைத் தொற்று நோய் போக்க ஒதுக்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று அனைத்து வளமான நாடுகளும் தாராளவாத பொதுச் செலவுகள் மற்றும் பணப்புழக்கத்தைக் குறைப்பதன் மூலம் தங்கள் இருப்புநிலைகளைத் தன்வயப்படுத்துகின்றன.

எதிர்ப்பாளர்கள் சொல்வது போல அனைத்து பொது செலவினங்களையும் நிறுத்தி பொருளாதார நடவடிக்கை வரைவை மேலும் ஆழமாக்குங்கள். அப்படியானால், வேறு எந்த திட்டங்களை நிறுத்த வேண்டும். உருவாகிக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவை எளிதாக இணைக்கும் இருப்புப் பாதைகள், எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் மூலம் வழங்கப்படும் வீடுகள்? இவற்றை நிறுத்த வேண்டுமா?

யார் தீர்மானிப்பார்கள்? 

நம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் விரும்புகின்றார்கள் என்பதே இதற்குள் இருக்கும் உண்மையான அர்த்தம்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிக்கல் பணம் அல்ல, ஆனால் திறன்களை நாம் இதுவரை பயன்படுத்தாமல் இருந்தது. வளர்க்காமலிருந்தது. உள்கட்டமைப்பு விசயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தது.

இவற்றைப் பணத்தைக் கொண்டு ஓர் இரவில் வாங்கி விட முடியுமா? படிப்படியாக உருவாக்கப்படுவதன் மூலம் தானே நடைபெற முடியும்?

மோடி அரசுக்கு எதிராக மோதல் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்கள், விசித்திரமான காரணங்களைத் தேடிக் கொண்டு இருப்பவர்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை உணர்ச்சிகரமான விவாதமாக மாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் செயல்பாட்டையும் பொதுப் பணியையும் நிறுத்துவதே இவர்களின் மனநிலையாக இருப்பதால் இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய சிதைவுகளை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக உள்ளது.

சென்ட்ரல் விஸ்டாவின் திட்டங்கள் மற்றும் தளவமைப்புகளைக் கவனமாக பகுப்பாய்வு செய்தால், பரந்த நடைபாதைகள், பாதசாரி அண்டர்பாஸ்கள், கால்வாய்கள், பெஞ்சுகள், மரங்கள் மற்றும் நவீன வசதிகளுக்கான ஏற்பாடுகளுடன் கூடிய பசுமையான பகுதிகள்  உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய மற்றும் வடகிழக்கு டெல்லி முழுவதும், வரலாற்று ரீதியாக திறந்தவெளிகள் இல்லாமல், மாலை நேரங்களில் இந்தப் பகுதியைச் சுற்றி நடந்து வர, நடைப்பயிற்சி செய்ய, அமர்ந்து பேசுவதற்கு எவ்வித வசதிகளும் இன்று வரையிலும் இல்லை என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் வாதிடும் நபர்களிடம் இது குறித்துக் கேட்டுப் பார்த்தால் எவ்விதப் பதிலும் வராது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை வடிவமைக்கவும் கட்டமைக்கவும் அரை டஜன் புகழ்பெற்ற வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை நிறுவனங்கள் ஏலம் எடுத்தன, பிமல் படேல் தலைமையிலான எச்.சி.பி வடிவமைப்பு திட்டமிடல் மற்றும் மேலாண்மை குறைவான ஏலத் தொகையின் மூலம் வென்றது. எதிர்ப்பாளர்கள் குஜராத்தி என்பதால் அவருக்கு இந்த ஏலம் கிடைத்தது என்று கூறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

புதிய பாராளுமன்றக் கட்டிடம் உருவாக்கப்படுவது என்பது தனி நபர்களின் கீழ் நடப்பது அல்ல. அது பல குழுக்களின் மூலம் சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் படிப்படியாக முன்னேறிக் கொண்டேயிருக்கிறது என்பதனை நீங்கள் உணர வேண்டும்.

1. டெல்லி நகர்ப்புறக் கலை ஆணையத்தின் (DUAC) கருத்தியல் ஒப்புதலைப் பெற வேண்டும்.

2.  நிதி சார்ந்த அனுமதிகளை மத்திய லஞ்ச ஒழிப்புத்துறைகள் ஆணையம் கவனிக்கின்றது.

3.  பண ஒதுக்கீடு நிதி அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றது.

4.  திட்ட மதிப்பீட்டு ஆய்வுகள் புது டெல்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி) மேற்கொள்கின்றது.

5.  இறுதியாக ஒப்பந்தப்புள்ளி மற்றும் பணிகளைத் தொடங்க மத்தியப் பொதுப்பணித் துறை (சி.பி.டபிள்யூ.டி) அனுமதி வழங்குகிறது..

இத்துடன்

உச்சநீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் திட்டங்கள் குறித்துப் பல கேள்விகள் கேட்டது. எதிர்ப்பாளர்களுக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அவர்களின் கோரிக்கை நியாயமற்றது என்று நிராகரிக்கப்பட்டதை நீங்கள் தெரிந்து இருக்க வாய்ப்புண்டு.

காரணம் இந்தியாவின் வளர்ச்சிக்கான நல்ல விசயங்கள் என்பது இங்கே நடந்தே தீரும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அவை அனைத்தும் மோடி தலைமையிலான பாஜக அரசு மூலம் இந்த காலகட்டத்தில் நடந்தேற வேண்டும் என்பது இயற்கை உருவாக்கிய விதி.

யாரால் அதனை மறுக்க முடியும்?

எவரால் அதனை மாற்ற முடியும்?


No comments: