Thursday, June 30, 2022

2022 மாநாடு

மோடியை, பாஜக வை, அண்ணாமலையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இன்று வரையிலும் கேட்கும் ஒரே கேள்வி ஏன் தமிழகத்தில் பாஜகவிற்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இல்லை? என்பதே.

Monday, June 27, 2022

சில குறிப்புகள் 2022 ஜூன்

2020 மற்றும் 2021 ஆண்டுகள் இயற்கை கொரோனா என்ற ஆசான் மூலம் அனைவர் வாழ்க்கையிலும் பல பாடங்களை கற்றுக் கொடுத்தது.  அது விட்ட குறை தொட்ட குறையாக 2022 வரை தொடர்கின்றது.  2023 ஆம் ஆண்டு எனக்கு நல்ல விசயங்கள் நடக்கப் போகின்றது என்பதற்காக ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் இப்பொழுதே தெரிகின்றது.  

முழுமையடைந்த பின்பு தெரிவிக்கின்றேன்.  



Tuesday, June 21, 2022

எடப்பாடியும், பன்னீரும்

மோடி சில சமயங்களில் எனக்கு எம்ஜிஆர் போலத் தான் தெரிகின்றார்.  காரணம் தனக்கு உதவி செய்தவர்கள் என்ற விசுவாச எண்ண அடிப்படையில் உதவி செய்தவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றார். அப்படி வளர்ந்தவர் தான் எடப்பாடியும், பன்னீரும்.  


தனபாலன் விழித்துக் கொள்ளுங்கள்

நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த அறிவிப்பு எத்தனை மாறுதல்களைக் கடந்து வந்தது என்பதனை ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கும்.  


Monday, June 20, 2022

பொள்ளாச்சி மாநாடு உணர்த்துவது என்ன?

சமீப காலமாக அண்ணாமலை அவர்கள் பேசும் அரசியல் கூட்டங்களில் நடக்கும் ஏற்பாடுகள் என்னை அதிகம் யோசிக்க வைக்கின்றன.  பாஜக வில் உள்ள பழைய தலைகளுக்கே ஆச்சரியமாக இருக்கக்கூடும். நிச்சயம் மத்திய உளவுத்துறை மூலம் படங்களாகவும், பேச்சு வடிவத்தின் குறிப்புகளாகவும் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று சேரும் என்றே நம்புகின்றேன்.   இன்று பொள்ளாச்சி வரவேற்பு அலங்காரத்தில் மோடி ஒரு பக்கம். அண்ணாமலை ஒரு பக்கம்.



இந்த படம் ஒரு வேளை மோடி அவர்களின் பார்வைக்குச் சென்று இருக்கும் பட்சத்தில் அவர் எண்ணம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன். இதை விடப் பிரமாண்டமான கூட்டத்தை வட மாநிலங்களில் கூட்டியதும், நம்ப முடியாத வெற்றிகளைப் பெற்றதைவிடத் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் மோடி அவர்களுக்கு நிச்சயம் அதீத மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும் என்றே நம்புகிறேன்.

நேரு முதல் மன்மோகன் சிங் வரைக்கும் இருந்த பிரதமர்களின் உலக அளவில் உன்னத இடத்தைப் பெற்றுள்ள மோடி அவர்கள் இதற்கு மேலேயும் புகழ் அடையத் தேவையில்லை. முதல் முறையாக மேற்கத்திய நாடுகள் இந்தியா வந்து ஆலோசனை கேட்கும் நிலையில் இந்தியா இருப்பது இப்போது தானே?

மோடியை அரசியல் களத்தில் வெல்ல முடியாதவர்கள் அவதூறுகளைப் பரப்புகின்றார்கள். தேர்தல் களம் கண்டு அஞ்சுகின்றவர்கள் நாட்டையே காட்டிக் கொடுக்க தயாராக இருப்பதும் இப்போது தானே? 

மோடி என்ற ஒரு தனிமனிதனை நம்மால் எதிர்க்கவே முடியாதோ? என்று அங்கலாய்ப்புடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் விதம் விதமாக அவமான வார்த்தைகள் கொண்டு அர்ச்சிப்பதும் இப்போது நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வு தானே?

உறுதியான பெரும்பான்மையுடன் அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் கடந்த காலத்தில் என்னவெல்லாம் செய்தது என்பதனை வரலாற்றில் பாருங்கள்.  கருவில் இருக்கும் குழந்தை வரைக்கும் வெளியே எடுத்து அறுத்து முடித்து பின்பு தான் அடுத்த வேளைக்கே செல்வார்கள்.  

அப்படித்தான் மன்மதன் பாசி செய்தார்.

ஆனாலும் தமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் நடக்கும் அலங்காரத்தைப் பார்த்து மோடி சந்தோசமடைகின்றாரோ இல்லையோ திமுக அதிமுக இருவரும் தத்தமது வயிற்றுக்குள் எத்தனை காலன் பெட்ரோல் ஊற்றியது போல இருக்கும் என்று மனதில் யோசித்துப் பார்த்துக் கொள்கிறேன்.

திமுக என்ற திருட்டுக்கூட்டமும் அதனைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி விலங்குகளும் தங்கள் சுயலாபத்துக்காக மோடி அவர்களை எந்த அளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து  துவைத்துப் பிழிந்து காயப்போட்டு விட்டனர். 

தமிழக மக்கள் இதையே நம்பவும் தொடங்கி உண்மை என்பதாக எடுத்துக் கொண்டு பாஜக என்பதனை பூச்சாண்டி போலவே கடந்த காலங்களில் பார்த்தனர்.

பாஜக  காங்கிரஸ் போல அதிகாரத்தை முழுமையாக முழுமையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை அல்லது விரும்புவதில்லை. காரணம் கேட்டால் நண்பர்கள் சிஸ்டம் என்பதனை இவர்களைக் குலைக்க மாட்டார்கள். சொந்த கட்சிக்காரன் என்றாலும் இதே தான் இங்கே நடக்கும் என்கிறார்கள். 

ஆர்எஸ்எஸ் குறித்து ஒவ்வொருவரும் கன்னா பின்னா என்று எழுதுகின்றார்கள். அங்கே நிலைமை இன்னமும் விசித்திரமாக உள்ளது.  செய்த நல்லதையே வெளியே காட்டிக் கொள்ளாமல் கமுக்கமாக இருக்க வேண்டும் என்பதனை பாலபாடமாக இன்னமும் வைத்திருக்கின்றார்கள்.  நான் வியந்து போனேன் என்பதனை விட இந்த காலத்தில் இப்படியெல்லாம் இவர்கள் ஒரு கொள்கைக்காகச் செயல்பட முடியுமா? என்று பயந்து போனேன்.

மோடியின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு அடியாக நகர்ந்து வந்தவர். ஒவ்வொரு படியாக ஏறி வந்தவர். மனிதர்களின் விருப்பங்களை ஆசைகளை அறிந்தவர்.  ஆரோக்கியத்தோடு அமைதியாக இருந்தவர்.  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ள கட்சி சார்ந்த நடவடிக்கைகளை உள்ளும் புறமும் அறிந்தவர். 1980 முன் பின் என்ற இரண்டு மலைகளைப் பார்த்தவர். 

மோடிக்கு முன்னால் இருந்தவர்களை ஒன்று களம் அவர்களை ஒதுக்கியது. இரண்டு களமே அவர்களைத் துரத்திவிட்டது.  மீதமிருந்தவர்களைக் காலம் கரைத்து விட்டது.  இப்படித்தான் மோடி பிரதமர் பதவிக்கு வந்து சேர்ந்தார்.

சாதி, பணம், செல்வாக்கு, அதிகார பின்புலம், கல்வியறிவு, குடும்ப பராம்பரியம் என்று எவையெல்லாம் அரசியலில் முன்னேற ஒரு மனிதருக்குத் தேவையோ அது எதுவும் இல்லாமல் இந்த உயரத்தை அடைந்த ஒரே மனிதர் திரு. மோடி அவர்கள் மட்டுமே.

பொறுமையாக நகர்ந்து வந்தார். வாய்ப்புக்காகக் காத்திருந்தார். 

இதற்கு மேலாகத் தான் குஜராத் முதல்வராக ஆவதற்கு முன்னால் காங்கிரஸ் என்ற ஆக்டோபஸ் இந்த நாட்டை எப்படி வைத்துள்ளது? எப்படி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பாழாக்கி வைத்துள்ள என்பதனை முழுமையாக வாசித்து, உள்வாங்கி, கண் எதிரே பார்த்து அதன் பின்பு தான் பதவிக்கு வந்தார். 

அதாவது சுத்த தங்கம் போல புடம் போட்டுத் திட்டமிட்ட ஒருங்கிணைப்போடு உன்னத லட்சியத்தோடு குஜராத் முதல்வராகப் பதவியில் அமர்ந்தார். இயற்கை ஆசி வழங்கியது. தொடர்ந்து 21 வருடங்களாக ஏறுமுகம் தான். 

ஆனால் காங்கிரஸ் மத்திய அரசிலிருந்த போது நடந்தது ஒவ்வொன்று கோரம். கொடூரம்.

மோடி தான் அடுத்த பிரதமர் என்று சூனியக்காரிக்குத் தெரிந்த பின்பு காங்கிரஸ் கும்பல் தங்கள் வேலையைத் தொடங்கியது. சூனியக்காரி பயந்ததை விட வயதான காலத்திலும் ரஷ்ய அழகிகள் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சுவைக்கும் பாசி அய்யா  உருவாக்கிய கொடுமைகள் தான் அதிகம்.

முதலில் அமித்ஷா மேல் குறி வைத்தார்.  துரத்தித் துரத்தி ஈவு இரக்கமின்றி வாழும் போதே நரகத்தைக் காட்டினார். எவரை அடித்தால் மோடிக்கு வலிக்கும் என்பதனை கிழட்டு மன்மதன் பாசி உணர்ந்து செயல்படுத்தினார். இவர்களின் கெட்ட நேரம் கோத்ரா கலவரம் என்பது இந்தியாவிற்கே இனி மோடி தான் ராஜா என்று மடை மாற்றக் காரணமாக அமைந்து விட்டது.

அதிகாரத்தின் உள்ள இண்டு இடுக்கு சந்து பொந்துகளிலிருந்த காங்கிரஸ் பிராணிகளும், பிரியாணிக்கு ஆசைப்படுகின்ற ஊடக கூலிபான்ஸ்களும் இரண்டாவது முறையும் மோடி தான் அசைக்க முடியாத பிரதமர் என்றதும் அதிகாரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படவில்லை. மாறாக இருக்கும் சொத்துக்களை எப்படிக் காப்பாற்றுவது? உள்ளே இருப்பவர்களே நம்மை மீறிக் கைவைத்து விடுவார்களே? என்று அச்சத்தில் தான் மன்மதன் பாசியை தன் கைப்பிடிக்குள் சூனியக்காரி இன்று வரையிலும் வைத்துள்ளார்.

முதல் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி இன்னமும் காங்கிரஸ் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு காட்டு காட்டியிருக்க முடியும்.  எனக்கே தொடக்கத்தில் ராஜீவ் மகன் என்ற முறையில் சூனியக்காரி வளர்ப்பு என்ற போதிலும் ராகுல் மேல் சின்ன அபிப்ராயம் இருந்தது.  ஆனால் தனிப்பட்ட பலகீனத்திற்கு அடிமையான, உழைக்கத் தகுதியில்லாத, அதையே விரும்பாத, எதன் மேலும் பற்று இல்லாத, குறிக்கோள் என்பதனையே விரும்பாத ஒரு தண்டக் கருமாந்திரம் மனித உருவில் நடமாடுகின்றது என்பதனை இந்த வருடம் தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.  

நிகழ் கால தொழில் நுட்ப உலகத்திற்குத் தொடர்பு இல்லாத சூனியக்காரியின் மாய்மாலம் போல வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் என்பதனை எடுத்துக் கொண்ட இந்த இளைஞரை நான் பலமுறைப் பார்த்து அதிர்ந்து போய் உள்ளேன். 

என்னைப் போல மோடி அவர்களும் இனிமேல் இந்தப் பையன் மேல் வழக்குப் பதிந்து என்ன செய்ய முடியும்? என்று விட்டு வைத்திருந்தார் என்றே நினைத்துக் கொண்டதுண்டு.  வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வைக்க முடியும். ஆத்தா, மகன், மச்சான் மூவரும் செய்த காரியங்கள் அப்படிப்பட்டது.  

அரசியல் லாபத்திற்காகவே மோடி இந்த மாபியா கும்பலை விட்டு வைத்திருக்கின்றார் என்றே நானும் மோடி மேல் கோபப்பட்டுள்ளேன்.  ஆனால் இப்போது சாதாரண அமலாக்கத்துறை அழைப்புக்கு எப்படி இந்தியாவைப் படாய் படுத்துகின்றார்கள் என்பது புரிந்து இருக்குமே?  இவர்கள் மேல் கை வைப்பது தான் முக்கியம் என்று கருதியிருந்தால் முதல் ஐந்தாண்டுக் காலத்தில் இந்தியாவில் நடந்த மாற்றங்கள் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கும்பல் நடத்தியிருக்க விடாது. 

இந்திய நீதித்துறையில் முழுமையான மாற்றங்கள் உருவாக்காத வரைக்கும், கொலிஜியம் என்ற அமைப்பை அப்படியே அரபிக் கடலில் கொண்டு போய் தூக்கி எறிந்தால் மட்டுமே இந்த நாடு உருப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.   இந்த நிமிடம் வரைக்கும் மேலிருந்து கீழ் வரைக்கும் நீதித்துறை என்பது காங்கிரஸ் மற்றும் அவர்களைச் சார்ந்த ஆதரவாளர்களுக்கு ஒரு மாதிரியும், பாஜக சார்ந்தவர்களுக்கு ஒரு மாதிரியும் தான் நடந்து வருகின்றது.

இதன் காரணமாகவே திமுக என்ற திருட்டு கும்பல் மேலும் மேலும் இங்கே சூறையாடிக் கொண்டிருக்கின்றது.  சட்டம் இவர்களை எந்த காலத்திலும் தண்டிக்க வாய்ப்பில்லை. அத்தனை இடங்களிலும் இவர்கள் நியமித்த தரகர்கள் தான் இருக்கின்றார்கள்.  

இது போன்ற சமயங்களில் இது போன்ற கூட்டங்களின் வாயிலாக மோடி அவர்களின் பிரமாண்ட படமும், அண்ணாமலை அவர்கள் திமுக என்ற தீயசக்தியை கும்மாங்குத்து தொடர்ந்து குத்திக் கொண்டிருப்பது மாற்றத்திற்கான தொடக்க புள்ளியாகவே பார்க்கின்றேன். அடுத்த 24 மாதங்களில் எத்தனை கலவரத்தை உருவாக்கி அதனை பாஜக மேல் போடப் போகின்றார்கள் என்பதனை நினைத்து ஒரு பக்கம் அச்சமாகவும் உள்ளது. 

ஆனாலும் மோடி அவர்களின் நல்லெண்ண அலைகள் அண்ணாமலை வாயிலாக புலிகேசி கூட்டத்தை அலற வைத்துக் கொண்டிருக்கின்றது.


















Sunday, June 19, 2022

மதி இழந்து மானம் கெட்டு வாழத் தான் வேண்டுமா?

மானம் கெட்ட பிழைப்பு என்பது நாம் எதை மட்டும் விரும்புகின்றோம்? என்பதனைப் பொறுத்து மாறிக் கொண்டேயிருக்கும். 



Saturday, June 18, 2022

ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலம் இனி பாஜக வசம்

பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து இணையத்தில் வருவதை விட மற்ற எந்தந்த இடங்களில் எப்படியான தாக்கம் உருவாகியுள்ளது? என்பதனை நான் இரண்டு வழிகளில் தினமும் சோதிப்பதுண்டு.



Thursday, June 16, 2022

நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள்

தமிழக பாஜகவிற்கு அண்ணாமலை அவர்கள் தலைவராக வந்த பின்பு மற்ற கட்சிகளிலிருந்து எத்தனையோ பேர்கள் பாஜக வில் வந்து சேர்ந்துள்ளனர்.  பாஜகவிற்கு ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியிலிருந்து கூட சில தினங்களுக்கு முன்பு பல பேர்கள் சேர்ந்தனர்.  


Sunday, June 12, 2022

சூரியன் மறையத் தொடங்கியுள்ளது.

மாலை நேரத்தில் இருள் வருவதற்கு முன்பு அந்திப் பொழுது என்றொரு நிகழ்வு நடக்கும்.  சூரிய ஒளி முழுமையாக மறைவதற்கு முன் மெதுவாக மாற்றங்கள் நடக்கும்.


Friday, June 10, 2022

அண்ணாமலை யாரை எதிர்த்து களத்தில் நிற்கின்றார்?

இருபது வருடத்திற்கு முன் என் உறவினர் என்னைத் தேடி வந்து இருந்தார்.  காரணம் கேட்ட போது திருப்பூர் பேபி எலெட்ரானிக்ஸ் கடை குறித்துச் சொன்னார். தான் வாங்க வந்த பட்டியலைக் காட்டினார். எனக்கு மயக்கமே வரும் அளவுக்கு அந்த பட்டியல் நீண்டதாக இருந்தது.  எனக்கு அப்போது அந்த கடை குறித்து எதுவும் தெரியாது.  ஆனால் தமிழகம் முழுக்க இந்த கடை நோக்கி வந்து கொண்டே இருந்தார்கள்.  




Wednesday, June 08, 2022

இந்தப் படை போதுமா?

இந்தப் புகைப்படம் என்பது மற்றவர்கள் குற்றம் சொல்ல முடியாத அளவுக்குத் தமிழக பாஜகவிற்கு கூடிய கூட்டம். மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து நடத்தி வருகின்றார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து முழுமையாக தமிழ்ப்பிள்ளைகளுக்கு புரியக்கூடும்.



Saturday, June 04, 2022

June 4 தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள்

"அண்ணாமலை அதிகாரத்திற்கு வந்தால் இங்கு எல்லாமே மாறி விடும் என்று இவர் உணர்ச்சி வசப்பட்டு நம்புகின்றார்" என்று என்னிடம் பல பேர் நேரிடையாக மறைமுகமாகச் சொல்லியுள்ளனர்.  

இன்று வரையிலும் உறுதியாக நம்புகிறேன்.  என் நம்பிக்கை கூடிக் கொண்டே தான் செல்கின்றது. மாற்றமில்லை.