"அங்கீகாரம்"

எனது எழுத்துப் பயணத்தில் இங்கே என் எழுத்தை நேசித்தவர்களின் வார்த்தைகள்

வணக்கம். உங்கள் வருகைக்கு நன்றி. எனது வலைதளத்தில் உள்ள கட்டுரைகளை படித்து விட்டு, உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களோடு இந்தப் பக்கம் வந்திருந்தால் மட்டுமே ஏன் இந்த "அங்கீகாரம்" என்ற பக்கத்தை உருவாக்கினேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் எப்போதும் போல இதுவொரு சுயபெருமை பேசுகின்ற பக்கம் என்றே ஒதுங்கிவிடத் தோன்றும். 

நம்மை நாமே நேசிக்கத் தெரிய வேண்டும். நமக்குள் இருக்கும் திறமையை புரிந்து கொள்ள வேண்டும். நாமே நம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது என்பதும் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். முதலில் நமக்கு நாமே அங்கீகாரத்தை வழங்கினால் மட்டுமே அடுத்த கட்ட உழைப்புக்கு அது உறுதுணையாக இருக்கும்.

கடந்த நூறாண்டுகளில் உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களை மனதிற்குள் பட்டியலிடுங்கள். அதில் எத்தனைப் பேர்கள் உண்மையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்கள்? எத்தனைப் பேர்கள் வாழும் வரைக்கும் பொருளாதார சிறப்போடு வாழ்ந்துருகின்றார்கள்? இந்த இரண்டு கேள்விகளைத் தேடிக் கொண்டு சென்றால் நிச்சயம் உங்களுக்கு விரக்தியே தோன்றும். தமிழகத்தில் உண்மையான எழுத்தாளர்களை எவரும் அங்கீகரித்ததே இல்லை. பொருளாதார ரீதியாக அவரும் சிறப்பாக வாழ்ந்ததும் இல்லை. இங்கே ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. ஒருவர் வாங்கப்படும் விருதுகளுக்குப் பின்னால் சில பல அரசியல் உண்டு. அது ஜாதி, மதம், பணம், பிற்போக்கு மற்றும் முற்போக்கு எண்ணங்கள், கூட்டணி மற்றும் லாபி போன்ற பலவும் கலந்தது தான் விருதுகளுக்குப் பின்னால் உள்ள அரசியல். 

அதே போல எந்த எழுத்தாளர்களும் சக எழுத்தாளர்களை அங்கீகரித்ததும் இல்லை. எதிரியாகப் பார்க்கும் மனோபாவம் தான் இங்கே அதிகம் உண்டு. எழுத்தாளர்களின் எழுத்தை மட்டும் வாசித்து விட்டு ஒதுங்கிப் போனவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எழுதிய எழுத்தாளரைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு வாசகனுக்குத் தோன்றும் போது தான் ஏமாற்றம் அறிமுகம் ஆகின்றது. காரணம் எழுத்தாளரின் உண்மையான தோற்றத்திற்கும் அவர் எழுதிய எழுத்துக்கும் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாததாக இருக்கும். 

ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவான வலைப்பதிவுகள் என்பது ஒவ்வொரு தனி மனிதரை சீராட்டத் தொடங்கியது. அவனே அறியாத அவனின் திறமைகளை வெளிக் கொண்டுவர உதவியது. உடனடியான பாராட்டுகளையும் கூடவே அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல. நமது திறமையும் உழைப்பும் தான் நமக்கான அங்கீகாரம். 

ஒரு வெற்றி பெற்ற எழுத்தாளரின் எழுத்துக்கள் அச்சு ஊடகம் வழியாக சில ஆயிரம் மக்களிடம் அறிமுகப்படுத்தும் என்றால் அதுவே ஒரு வெற்றி பெற்ற வலைப்பதிவரின் எழுத்துக்கள் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்களிடம் அறிமுகப் படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

மற்றொரு முக்கியமான விசயம் என்னவென்றால் வலைப்பதிவில் எழுதி வைத்திருக்கும் எழுத்துக்கள் என்பதும், மின் நூல் என்பதும் உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் வாழும் தமிழரால் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடும். அச்சு ஊடகத்தை விட வலைப்பதிவு என்பதில் ஆயுளும் அதிகம். சென்றடையும் தூரமும் அதிகம். 

தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நமக்கு கிடைத்த சமூக வலைதளங்கள் என்பது வெவ்வேறு இடங்களில் வாழும் மனிதர்களின் அனுபவங்களை உலகம் முழுக்க கொண்டு சென்றது. ஒவ்வொரு அரசியலுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை அப்பட்டமாக வெளியே கொண்டு வந்து நிறுத்தியது. நேர்மையைப் பற்றி விலாவாரியாக நேர்மையில்லாதவர்கள் பேசும் போது அவர்களின் முகத்திரையைக் கிழிக்க உதவியது. 

நானும் 2009 ஜுலை மாதம் முதல் 62 மாதங்கள் 600க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியுள்ளேன். எழுதியவற்றை ஒவ்வொரு பகுதியாக பிரித்து எட்டு மின் நூலாக வெளியிட்டுள்ளேன். இரண்டுமே நம்ப முடியாத வெற்றியைத் தந்துள்ளது.

ஜனவரி மாதம் 2016 22ந் தேதி எழுதும் இப்போது வரைக்கும் எட்டு மின் நூல்கள் ஒரு லட்சத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து என்பத்து நான்கு பேர்கள் தரவிறக்கம் (1,04,984) செய்துள்ளனர். 

இது தவிர அச்சு ஊடகம் வழியாக 4 தமிழ்மீடியா வெளியீட்டில் வந்துள்ள எனது டாலர் நகரம் புத்தகம் 2013 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளியான புத்தகங்களில் குறிப்பாக விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஜுனியர் விகடன் வாயிலாக விமர்சனம் செய்யப்பட்ட புத்தக வரிசையில் சிறந்த புத்தகமாக (பத்தில் ஒன்று) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எனது கடந்த 45 கால அனுபவத்தில் நான் வாழ்ந்த இந்த சமூகம், நான் படித்து தெரிந்து கொண்ட வரலாறு, என்னைச் சுற்றிலும் உள்ள அரசியல், நான் வாழ்க்கைக்காக தேர்ந்தெடுத்த ஆயத்த ஆடைத் தொழில் சார்ந்த மொத்த விசயங்களையும் என் மொழியில் எனக்குத் தெரிந்த வரையில், நான் புரிந்து கொண்ட வகையில் வலைபதிவுகளில் எழுதியுள்ளேன். அதனை அச்சு ஊடகம் மற்றும் மின் நூலாக மாற்றி இந்த சமூகத்திற்கு அளித்துள்ளேன் என்பது என் மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது.

ஏன் எழுதத் தொடங்கினேன் என்பது தெரியாமலேயே எழுத்துப் பயணத்தை தொடங்கினேன். நிச்சயம் இன்னும் சிறப்பாக எழுதுவேன் என்பதால் இப்போது என் எழுத்துப் பயணத்தில் ஒரு இடைவெளி விட்டுள்ளேன். 

என் எழுத்துப்பயணத்தில் கிடைத்த சில அங்கீகாரத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

மூன்றாம் சுழி என்ற வலைபதிவின் மூலம் அனைவருக்கும் தெரிந்து திரு. அப்பாதுரை என்பவர் வலைச்சரம் மூலமாகவும், அவர் பதிவின் மூலம் இந்த தளத்தைப் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கின்றார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். இவரின் மற்ற விபரங்கள் குறித்து நான் அறியேன். ஆனால் என் ஒவ்வொரு வலைபதிவின் செயல்பாடுகளையும் மிக மிக நுணுக்கமாக கவனித்துள்ளார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
---------------------------------------------------------------------------------------------------

தமிழ்மணம் நுகர்ந்து கொண்டிருந்த போது ஒரு நாள், 'தேவியர் இல்லம் திருப்பூர்' என்ற வித்தியாசமான பெயர் என்னைக் கவர்ந்தது. அன்றிலிருந்து படித்துவருகிறேன். நிறைய அரசியல் சமூகக் கட்டுரைகள். இலங்கைத் தமிழர் இன்னல்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் காரணம் என்று சிலநேரம் சொல்லும் பொழுது இவரது முகவரியைப் பெற்றுச் சந்திக்கத் தோன்றியது :).

ராஜீவ் காந்திப் படுகொலைத் தொடரில் நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறார். தனிப் புத்தகமாக வெளியிட வேண்டிய படைப்பு.

இவர் எழுதியத் தொடர் நிறைய நினைவுகளைக் கிளறினாலும், அறிந்திராத விவரங்களைத் தெரியப்படுத்தியது. விறுவிறுப்பான இடுகைகள். பிரபாகரனை அசலில் உணர்த்திய சில பதிவர்களில் ஒருவர். அவரின் முனைப்புகளின் பின்புலத்தை விவரமாகப் பல பதிவுகளில் எழுதியிருக்கிறார். (ஹ்ம்ம்ம்.. வீர சூர அடைமொழி எதுவும் தராமல் பிரபாகரன் என்று எழுதியதற்காக ஒரு முறை எனக்குப் பல மிரட்டல் கொச்சைக் கடிதங்கள் வந்தன. நுனிப்புல் மேயும் #%ஃஸ்D^*! என்று தினம் ஒருவர் இமெயில் அனுப்பினார். திட்டுறதுனா என்னைத் திட்டுங்க, திருப்பூரை விடுங்க.)

வேன்கூவரிலும் ஹைடல்பர்கிலும் சிலகாலம் நட்புடன் பழகிய இலங்கைத் தமிழர் ஒருவர் (என் பெயரைக் கண்டு அவருக்கு ஆச்சரியம், அவர் பெயரைக் கண்டு எனக்கு) 'அந்நியத் தமிழனான' என்னால் தமிழீழ விடுதலை இயக்கத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றார். ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டு வழியில் பத்து நொடிகள் நின்று அனுதாபம் தெரிவிக்கும் தமிழ்ச்சட்டை அணிந்தக் கோடிக்கணக்கான பாதசாரிகளில் ஒருவன் நான் என்றார்.

உண்மையென்றே தோன்றியது. என்னை மட்டுமே அப்படிச் சொல்கிறார் என்று மேலும் அசைபோட்ட போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலரையும் அதே வகையில் சேர்த்தது திடுக்கிட வைத்தது. "என்ன செய்வது? ரணங்களின் வடுக்கள் ரணத்தைப் போல் வலிப்பதில்லை" என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது. தேவியர் இல்லம் மற்றும் சிலரின் 'இலங்கைத் தமிழர் நிலை' பற்றியப் பதிவுகளைப் படிக்கும் பொழுது, எனக்கு நண்பரின் நினைவு வரும். தன்னலமற்றத் தலைவன் ஒருவன் தமிழினத்துக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாமலிருக்க முடியவில்லை.

இலங்கைத் தமிழரோடு நில்லாமல் உள்ளூர் அரசியல் பற்றியும் காட்டமாக எழுதுகிறார். ஊழல், பதுக்கல் விவரங்களை அம்பலப்படுத்தி எழுதுகிறார். துணிச்சல்காரர். அனேகமாக எல்லாமே நீண்டக் கட்டுரைகள். ஆய்வும் விவர உணர்வும் புலப்படுவதால் ஒரே அமரலில் படிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இவர் எழுதிய அய்யாவுக்கு அடிவாங்கும் தமிழன் எழுதுவது இடுகை.

"கடந்து போன அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுத் தன்னை மாற்றிக் கொள்ளாதவர்கள், சபிக்கப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்" என்ற இவரது பதிவறிமுக வரிகள் என்னைக் கவர்ந்தவை.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_30.html

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடல் பெற்ற பதிவர்

தேவியர் இல்லம் பதிவில் தினவாழ்வின்
மேவுமிடர் ஆய்ந்திடுவார் ஜோதிஜி - ஆவலிந்த
மின்னூல் மகராசன் டாலர் நகரம்போல்
இன்னும் எழுதவேண்டு மென்று.

மேல்தட்டுச் சமூகச் சிந்தனை, அடித்தட்டுச் சமூக அக்கறை, தீவிரப் பொதுநோக்கம், பாமரச் சிக்கல்களின் ஆழறிவு, முன்னேற்றத்துக்கான மெய்க்கவலை, வணிக நாணயத்தின் இருபுறப் பார்வை,

தனித்தமிழ் வீச்சு, எழுத்தாளுமை - வேறு சூழலில், காலக்கட்டத்தில் எங்கள் நட்பு நேரிட்டிருந்தால் தமிழக அரசியலில் மாற்று அமைப்புகள் வேரிட்டிருக்கும் கடுஞ்சாத்தியத் தொலைக்கனவைத் தன் எண்ண வெளிப்பாடுகளில் அடிக்கடி முன்னிறுத்தும் இலட்சியப்பதிவர் ஜோதிஜி.

எதையும் அக்கறையுடன் எழுதும் இவரின் படைப்பு நேர்மை பிரமிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். பதிவர்கள் தங்களைப் பற்றிக் குறிப்பெழுத 'ப்லாகர்' அனுமதிக்கிறது.

ஜோதிஜி தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கும் விதம் - இதுவரை படித்திராதவர்கள் கைவேலைகளைத் துறந்து உடனே படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும்.

இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை. உள்ளே இறங்கிவிட்டால் போதை தலைக்கேறும் வரை பதிவுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கத் தோன்றும். எப்போதாவது எழுதும் சமூக வரலாற்றுக் குறிப்புகள் ஊறுகாய் போல. [நாடார்களின் தோற்றம் பற்றியப் பதிவு சுவாரசியமானது. நாடார்களை உருவாக்கியவர் peeping tom இந்திரனாம்.]

http://moonramsuzhi.blogspot.in/2015/07/blog-post_24.html

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

கனடாவில் இருந்து ஒரு கடிதம்

http://deviyar-illam.blogspot.com/2014/02/blog-post_6.html


டாலர் நகரம் புத்தகத்திற்கு திருமதி ரஜ்ஜனி நாராயணன் அவர்களால் எழுதப்பட்ட விமர்சனம் வல்லமை குழுவினரால் மூன்றாம் பரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

http://deviyar-illam.blogspot.com/2014/02/blog-post.html


எனது முதல் புத்தகமாக வந்த டாலர் நகரம் குறித்த மொத்த செய்திகளும், விமர்சனங்களும் படிக்க

மின் நூல் விமர்சனங்கள் படிக்க


தமிழ்மணம் உலகளவில் 2010 ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற தலைப்பு விதி ராஜீவ் மதி பிரபாகரன்


தமிழ்மணம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற தலைப்பு


பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை



நண்பர் "அவர்கள் உண்மைகள்" தளத்தில் எனது தேவியர் இல்லம் பற்றி எழுதிய வார்த்தைகள்

http://avargal-unmaigal.blogspot.com/2015/08/2-five-star-blogger-award.html


துளசி தளம் திருமதி துளசி டீச்சர் அவர்களின் வார்தைகள் (அல்லது) ஆசீர்வாதம்

http://thulasidhalam.blogspot.in/2015/05/53.html

------------------------------------------------------------------------------------

சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் யோகா மாஸ்டர் மதிப்பிற்குரிய ஆசான் அவர்களைப் பற்றி எடுத்த ஆவணப்படத்தின் புகைப்படத் தொகுப்பு.

இடங்களைத் தேர்வு செய்தல் (லோகேசன் பார்த்தல்) என்று சொல்வார்கள். பயணத்தின் போது எடுத்த படங்களை, அவர் குரலை, அவர் கற்று வைத்துள்ள பலதரப்பட்ட யோகா வழிமுறைகளை முதலில் ஆவணப்படுத்தி இதை ஒரு குழுவினரோடு சேர்த்து உருவாக்கினேன். எனக்கு எழுத்துலகில் இதுவொரு புதிய அனுபவம்.

காணொலி ஒன்று

காணொலி இரண்டு

காணொலி மூன்று

காணொலி நான்கு






டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா காணொளிக் காட்சிகள்

திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி குழந்தைகளின் பாடல்

எழுத்தாளர் திரு ஞாநி அவர்களின் விழா சிறப்புரை


திருப்பூரின் மறுபக்கம் (வெட்டிக்காடு ரவி)

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்காக வாழ்த்துரை

டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

வலைபதிவில் சுடுதண்ணி என்ற பெயரில் எழுதிவரும் நண்பர் தமிழரசன்

திருப்பூர் கே பி கே செல்வராஜ் அவர்கள்

பதிவர் வீடு சுரேஷ் அவர்கள்

பதிவர் மதுரை சம்பத் அவர்கள்

பதிவர் அப்துல்லா வாழ்த்துரை

பதிவர் அப்துல்லா மற்றும் தொகுப்புரை

ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

பதிவர் திரு ரவிச்சந்திரன் சோமு அவர்கள்

தினமலர் மற்றும் மாலைமலர் பத்திரிக்கையில் வந்த செய்திகள்


நம்முடைய வாழ்க்கையின் இறுதி நேரத்தில், நம் உடல் ஆரோக்கியம் குறைந்து செயல்பட முடியாத நிலையில் நம்முடன் இருக்கப் போவது ஒன்றே ஒன்று தான்.

நாம் கடந்து வந்த பாதையில் செய்த காரியங்கள் மற்றும் அதன் நினைவுகள் மட்டுமே.

அது எழுத்தாக இருக்கலாம். ஓவியமாக இருக்கலாம். மற்ற சமூக சேவைகளாகவும் இருக்கலாம்.  ஏதோ ஒன்று நாம் நினைத்துப் பார்க்க இருக்க வேண்டும் தானே?

எனக்குப் பிறகு வரக்கூடியவர்கள், எழுத வேண்டும் என்ற ஆசையில் இந்தப் பக்கத்திற்கு வந்தவர்கள், நம் நினைவுகளை எப்படி எழுத்தாக மாற்ற முடியும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களுக்கு என் எழுத்து பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி உடையவனாக இருப்பேன்.

ஏதோவொரு காலத்தில் என் குழந்தைகள், அவர்களின் வாரிகளின் பார்வையில் என் எழுத்துக்கள் காணும் வாய்ப்பு அமைந்தால் நான் இரவு பகலாக இதற்காகவே உழைத்த என் அர்ப்பணிப்பு முழுமையடையும் என்ற நம்புகிறேன்.

நண்பர்களுக்கு நன்றி.

மிக்க அன்புடன்
ஜோதிஜி (ஜோதி கணேசன்)
(22.01.2016)



No comments: