Thursday, March 04, 2010

விதி ராஜீவ் மதி பிரபாகரன்

புலன்களால் அறியப்படும் அத்தனை விசயங்களையும் நமக்கு விஞ்ஞானம் உணர்த்துகிறது.  விஞ்ஞானத்தை பொறுத்தவரையில் இறுதி முடிவு என்பதை தீர்மானமாய் உணர்த்திக் காட்டிவிடும். இல்லை என்றால் அதைக் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை.  அடுத்த ஆராய்ச்சிக்கு அவர்கள் நகர்ந்து விடுவார்கள். காரணம் கிடைக்கும் முடிவு முக்கியம்.  வெகுஜனம் ஏற்றுக்கொள்வது அதைவிட முக்கியம்.

வளர்ந்த வளரும் விஞ்ஞானத்தின் கதை என்பது இது மட்டும் தான். விஞ்ஞானத்தால் பெற்ற வளர்ச்சியினால் முகம் தெரியாமலே நீங்களும் நானும் உறவாட முடிகின்றது.  மெய்ஞானத்தின் பாதை என்பது முற்றிலும் வேறானது. முடிந்தவரைக்கும் அன்பை எண்ணங்களால் கடத்த முடியும். அன்பு சூழ் உலகம் என்பதை கடத்திக் கடத்தியவர்களின் வாழ்க்கையை நாம் உள்ளுற உணர்ந்தால் மட்டுமே முடியும். உணராமல் உளறல் மொழி கொண்டு உருக்குலைக்குவும் நம்மால் முடியும்.  பாதிப்பு என்பது பட்டால் தெரியும். பட்டு நகர்ந்து போனவர்கள் அத்தனை பேர்களும் தான் மட்டுமல்லாது நாளைய தலைமுறைகளையும் தறுதலையாக்குவதில் விற்பனராகத்தான் இருக்கின்றனர்.

மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு என்பதே இங்கிருந்து தான் தொடங்குகிறது. புலன்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களில் கவனம் செலுத்தியவர்கள் அத்தனை பேர்களின் பூர்விகமும் இங்கிருந்து தான் தொடங்குகிறது.மேலை கலாச்சாரத்தின் தொடக்கமென்பது ஒன்று எண்ணங்களை இங்கிருந்து கடன் பெற்று இருப்பார்கள் அல்லது வந்து கற்றுப் போய் இருப்பார்கள். நம்மைப் பொறுத்தவரையிலும் இன்று வரைக்கும் கடல் தாண்டி திரும்ப உள்ளே வரும் போது தான் அதற்கு தனி மரியாதை. கருத்தை முன்னிறுத்து வரும் தத்துவமாக இருக்கட்டும் அல்லது கழுகை முன்னிறுத்தி வரும் மேல் நாட்டு படமாக இருக்கட்டும்.  

பாரத பூமி பழம்பெரும் பூமியுடன் ஆன்மிக பூமி என்பதும் இதனால் தான்.  உணர்ந்தவர்களை ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்,யோகிகள், சித்தர்கள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர்.  அவர்களால் உலகிற்கு உணர்த்தப்பட்ட அத்தனை விசயங்களும் நவீன கால விஞ்ஞானத்திற்கு சம்மந்தம் இல்லாதது. மொத்த தத்துவமும் உன்னை நீ உணர் என்பதாகத்தான் இருக்கிறது. இடைச்செருகல் என்பது இன்று வாந்தி பேதியாகி வந்தவர்கள் போனவர்கள் என்று எல்லோருமே கடவுள் வேடம் போட்டுக்கொள்ளும் அளவிற்கு உருமாற்றம் தந்துள்ளது. உணர்ந்தவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற வானவியல் சாஸ்திரம் என்பது அடிப்படை மக்களின் மூலக்கூறு. அவர்கள் பணம் செலவழிக்காமல் மனம் என்ற பாதையில் சென்று கண்டறிந்தவர்கள்.  இந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனையும் மறுக்கப்பட்ட முடக்கப்பட்ட வெறும் மூட நம்பிக்கை என்பதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
உருவாக்கி வைத்த ஏடுகளாக, சுவடிகளாக புரியாத அர்த்தத்தில் பூடகமாய் இருந்தது.  இறுதியில் புதைபொருளாகவும் மாறிவிட்டது. இன்று பகுத்தறிவால் ஒத்துக்கொள்ள முடியாதது என்று வாத விதாண்டாவதத்தில் வந்து நிறுத்தியுள்ளது. இடையில் வந்த மூட நம்பிக்கைகளும் சேர்ந்து அதன் மிச்சமுள்ள மூச்சையும் நிறுத்திவிடும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

சொன்னவர்கள் உணர்த்தியதை உள் வாங்கியவர்கள் எண்ணிக்கையும் அதிகமில்லை. தொடக்கம் முதல் நாட்டுக்கும் பாதுகாப்பு இல்லை.  நாட்டை ஆண்டுவிட்டு போனவர்களுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லை. உள்வாங்கியவர்களும் அதிலும் மிகக் குறைவு.   உள்வாங்கியவர்களில் அதை ஊருக்கு உரைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் மிஞ்சவில்லை. மிஞ்சியது அத்தனையும் அரைகுறையும் அவசரத்தில் இவற்றை பணம் காய்த்து தொங்கும் மரமாக மாற்ற நினைத்தவர்களுமே. அவர்கள் சொல்லிவிட்டுப் போன புலன்களை அடக்கியாள வேண்டும் என்பது இப்போத எந்த வடிவத்தில் வந்துள்ளது?  நவீன யோகா என்று பெயர் மாற்றத்துடன் சர்வதேச சாமியார்கள் என்ற காம அவதாரத்தில் வந்து முடிந்துள்ளது. நம்முடைய கலையை நம்மிடமே விற்று காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனாலேயே இன்றைக்கு மெய் ஞானம் என்ற வார்த்தை கேள்விக்குறியாக கேலிக்குறியாக மாறிவிட்டது.

நம்புவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் எப்போதுமே பிரச்சனைகள். ஆனால் எதையும் நம்பாதவர்களின் வாழ்க்கை என்பது இறுதி வரைக்கும் மற்றவர்களுக்கு பாடம்.நல்லதோ கெட்டதோ நம்பாதவர்களின் போராட்டங்கள் தான் இந்த உலக சரித்திரத்தையே மாற்றியுள்ளது.

" ராஜீவ் காந்தி படுகொலை " என்ற இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இன்று வரை நம்முடைய கண்களுக்கு புலனாகாத அரசியலைப் போல அறிவுக்கு எட்டாத பல விசயங்களும் கலந்து இருக்கிறது.

இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளின் பக்கத்தில் நடந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலைகளுக்கு அடுத்து ராஜீவ் காந்தி கோர மரணம். சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை படித்து விட்டு அவரவருக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு போய்விடுகிறோம்.  மாணவர்களுக்கு விடுமுறை, பத்திரிக்கைகளுக்கு அதன் புலனாய்வு அறிக்கைகள், தலைவர்களுக்கு அதிகாரப் போட்டி. ஆனால்?

இந்தியாவில் நடந்த மூன்றிலும் ஏராளமான ஓற்றுமைகள்.  நடந்த நிகழ்ச்சிகளுமே ஏறக்குறைய ஒன்று.  பாதைகள் வேறு.  நோக்கம் வேறு.  முடிவு ஒன்று.

காந்தி சுடப்படுவதற்கு முன்பு, இவரை சுடப்போகிறார்கள் என்று உள் வட்டாரத்திற்குள் இருந்த அத்தனை பேர்களுக்கும் தெரியும்.  காந்திக்கே என்னுடைய இறுதி நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உள் மனம் உணர்த்தி விட்டது.  அவரே அவரது தினசரி குறிப்பில் கூட எழுதி வைத்து விட்டார். அப்போது இதை உணர்ந்தவர்களில் காப்பாற்றுபவர்கள் எவரும் தயாராய் இருக்கவில்லை என்பதை விட காந்தி எப்போது சாவார் என்பதைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தார்கள்.  அவரை உண்மையிலேயே காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்தவர்களைக் கூட பிர்லா மாளிகையில் இருக்க " சூழ்நிலை " அனுமதிக்கவில்லை. முடிவுக்கு அவரும் காரணம்.  முயன்றவர்களின் நோக்கமும் காரணமாக இருந்தது.

இந்திரா காந்தி சுடப்படுவதற்கு முன்பு, உளவுத்துறை அறிக்கை தினந்தோறும் கதறியது. உள் வட்டாரத்தில் பாதுகாப்பு சமாச்சாரத்தில் சீக்கியர்கள் எவரும் வேண்டாம். ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுக் கவனியுங்கள் என்று. ஆனால் அன்று " நாங்கள் மேம்சாஹிப்பை கொல்லக் கூடியவர்களா?" என்று கண்ணீர் விட்டுக் கேட்டவர்களை நம்பி ஆர்.கே.தவாண் அனுமதித்த அனுமதி என்பது இறுதியில் இந்திரா காந்திக்கு காலனிடம் செல்ல கொடுத்த அனுமதி சீட்டாக மாற்றி விட்டது. 

தீர்மானிக்கப்பட்டவைகள் திசைகள் மட்டும் மாற்றம் பெற்றவையாக இருக்கிறது.  ஆனால் பயணம் இனிதே வந்து முடிவடைந்து விடுகிறது. இதுவொரு புலம்பல் என்று எடுத்துக்கொள்வதை விட இறப்பதற்கு முதல் நாள் முந்தைய வாரம் வீட்டில் வயதானவர்கள் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்மிடம் அப்போது அவர்கள் சொன்னதை இன்று நினைவில் கொண்டு வாருங்கள்.  " நாளை நான் இருக்க மாட்டேன் " என்று தைரியமாக சொல்லிவிட்டு அதே போல் தலைசாய்ந்தவர்களும் இருக்கிறார்களே?  எப்படி?

அதீத மனோரீதியான காரணங்கள், உள் மன வேகம் என்று எத்தனையோ நமக்கு சாதகமான விஞ்ஞான வார்த்தைகளைப் போல சமாதானப்படுத்திக்கொண்டாலும் தீர்மானிக்கப்பட்டவைகள் திசை திரும்பாமலே அதன் பயணத்தை தொடங்கி முடியும் நேரத்தில் முடிவாய் வந்து நிற்கிறது.

இந்த " சூழ்நிலை" தான் ராஜீவ் மரணத்திலும் இருக்கிறது.  கொல்வதற்கான காரணங்கள், கொல்ல வேண்டும் என்று நினைத்தவரின் நியாயங்கள் என்ற இரு பக்கத்தையும் விட ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு இவரை கொண்டு வந்து சேர்த்தது முதல் ஆச்சரியம் என்றால், அவரும் இங்கு வந்து தான் நிற்பேன் என்று பிடிவாதமாய் வந்து நின்றதும் அடுத்த ஆச்சரியம்.

ராஜீவ் காந்தி இறந்த தினம் மே 21 1991 இரவு 10.20.  தேர்தல் பொதுக்கூட்டத்திற்காக டெல்லியில் இருந்து கிளம்பியது மே 20 .  பயணம் முடித்து விட்டு டெல்லிக்கு மீண்டும் வந்து சேர்வதற்காக குறிக்கப்பட்ட தினம் மே 22.  அவருடைய மொத்த வாழ்க்கையின் விதி என்ற புரியாத எழுத்துக்களால் 48 மணி நேரத்திற்குள் முடிக்கப்படவேண்டும் என்று எழுதப்பட்ட கோர்வையற்ற வெளியில் தெரியாத சூத்திரம் எப்போது தொடங்கியது தெரியுமா?

இதன் உள்கட்டமைப்பு ஏற்பாடு வருட தொடக்கத்தில் தொடங்கியிருந்தாலும் ஏப்ரல் 30 1991 நள்ளிரவில் கள்ளத்தோணி மூலமாக கோடியக்கரை கடற்கரை பகுதியில் உள்ளே வந்த இற்ங்கிய சிவராசன் என்பவர் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியது. அப்போது தான் விதியின் எழுத்தான பிரம்ம சூத்திரம் மனித சூத்திரமாக மாறி தீர்மானிக்கப்பட்டது. சூத்திரதாரிகள் எப்போது இந்த தீர்மானத்தை உருவாக்கினார்களோ ஆனால் அவர்களின் சார்பாளர்கள் உள்ளே வந்து இறங்கியது ராஜீவ் காந்தி இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பு. இதற்கு முன்பே சென்னையில் சிவராசன் வாழ்ந்து இருந்தாலும், ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட பத்பநாபாவை கொன்று அழித்த பணி இனிதே நிறைவுக்கு வந்திருந்த போதும், அதன் தொடர்பாக இலங்கை சென்று பாராட்டுரை வாங்கி  நம்பிக்கை நாயகனாக மாறி, ஓப்படைக்கப்பட்ட அடுத்த பணிக்கு உள்ளே வந்து இறங்கிய தினம் இது.  அன்றைய தினம் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் தான் சென்னைக்கு கிளம்பி வந்தனர்.  முறைப்படியான கூட்டணியினரின் உழைப்பென்பது உழைப்பாளர் தினத்தில் இருந்து தான் உழைப்பை தொடங்கினர்.

வந்து இறங்கிய சிவராசனுக்கு இறங்கும் வரைக்கும் எந்த தடங்கலும் இல்லை. வருகின்ற தோணி கரையைத் தொடும் முன்பு எப்போதும் போல கரையில் இருப்பவர்கள் கொடுக்கும் சங்கேத பாஷை தான் அவர்களின் மொத்த அனுமதிக்கான கடவுச்சீட்டு. அனுமதி இல்லையென்றால் அலையை ரசித்துக்கொண்டு நடு இரவென்றாலும் மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான். கரையில் இருந்தவர்கள் சங்கேத பாஷைகளை தாமதமாக புரிந்து கொண்டவர்களால் உருவான தாமதம் ஒன்று மட்டும் தான் தோணி கரைக்கு வராமல் வந்தவர்களுடன் தூரத்தில் நின்று கொண்டுருந்தது.  ஆனால் சிவராசன் அதற்குள்ளே அங்கிருந்து நீந்தி கரைக்கு வந்து விட படகில் இருந்தவர்களும் கரை சேர்ந்தனர்.  பிரபாகரன் பார்வையில் பட்ட துடிப்பானவர்கள் என்றால் அவர்களின் திறமையின் துள்ளல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். கடைசியில் கடமையிலும் கண்ணாய் இருந்து காரியத்திலும் ஜெயித்தனர்.

டெல்லியில் இருந்து தேர்தலுக்கு என்று காங்கிரஸ் கட்சியால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட " கிங் ஏர் " விமானத்தின் மூலம் முதலில் ஓரிஸ்ஸா, ஆந்திரா பிறகு தமிழ்நாடு கடைசியாக கர்நாடகா. இது தான் பயணத்திட்டம்.  ஆந்திராவில் விசாகபட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்னை வந்து சேர வர பயணத்திட்டம். கிளம்ப நினைத்த போது விமானத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளும் ரேடார் கருவி பழுதடைந்து விட்டது. முன்னாள் விமான ஓட்டியான ராஜீவ் முயன்றும் சரி செய்ய முடியவில்லை.  நாளை கிளம்பலாம் என்று விருந்தினர் மாளிகைக்கு திரும்ப அதற்குள் தயாராக இருந்த மற்றொரு கருவியை வைத்து விமானி சரி செய்து விட்டு அவரின் திரும்பி வர முடியாத இறுதி பயணத்தை அங்கிருந்து தான் தொடங்கினார். வந்து சேர நினைத்த போது உருவான தடங்கல்களை மீறி சரியான நேரத்தில் சரியான நபர்களிடம் கொண்டு வந்து சேர்த்த ஆச்சரியங்கள் நிறைய உண்டு.  ஆனால் அ்ததனையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டிய உண்மைகள்.  அன்று மவுனமாக சிரித்த விதியைப் போலவே வென்றவர்களும் சிரித்திருப்பார்கள்.

வாழப்பாடி இராமமூர்த்தி இங்கு நீங்கள் வரவேண்டாம் என்று இறுதி வரை போராடிப் பார்த்தவர்.  அவருக்கு இரண்டு காரணங்கள்.   வலுவான கூட்டணி.  இது போக இயல்பிலேயே போராட்டக்குணம் நிறைந்த அவரின் ஆளுமையை மீறி ராஜீவ் காந்திக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள். ஆனால் மூப்பனார் ராஜீவ் காந்தி வந்து தான் ஆக வேண்டும் என்று விரும்பினார் என்பதை ராஜீவ் காந்தியின் வருகைக்கு முக்கிய காரணம் வேறொன்றும் இருந்தது.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் சந்திரகேசர் என்ற அம்மா வயதை ஒத்த பெண்மணிக்கு நன்றி கடன் காட்டும் விதமாக வந்து தன்னையே கடனாக கொடுத்து போய் மறைந்தார்.  மரகதம் சந்திரசேகர் இந்திரா குடும்பத்தில் உள் அறை வரைக்கும் சென்று உலாவிவிட்டு வருபவர்.  ராஜிவ் காந்தியால் ஆண்ட்டி என்று அழைப்படுபவர்.  அதற்கும் மேலே அவர் மேலே வைத்திருந்த பாசத்தின் காரணமாக ஆந்திராவில் இருந்து கிளம்பிய போது உருவான தடங்கல்களையும் மீறி கொண்டு வந்து சேர்த்தது. டெல்லியில் பயணத்திட்டத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ பெரும்புதூர் இருக்கிறாதா என்பதை மீண்டும் ஒரு முறை சோதித்து பார்த்துக் கொண்டு பயணப்பட்டவர் தான் ராஜீவ் காந்தி.  அவரை பொறுத்தவரையிலும் தான் காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு சேகரிக்க என்பதை விட தான் மரியாதை வைத்திருந்தவருக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டம்.  அவரின் வாழ்க்கையை பொறுத்தவரையில் முடிவு பெற வேண்டிய இறுதிக்கட்டம்.

பகுதி இரண்டு

பகுதி மூன்று

பகுதி நான்கு

பகுதி ஐந்து

பகுதி ஆறு

பகுதி ஏழு

பகுதி எட்டு

பகுதி ஒன்பது


பகுதி பத்து

21 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

ஆன்மிகம் என்பதை அர்த்த இழந்த வார்த்தையாக மாற்றிய நித்தியின் சக்தியை பறைசாற்றிய பெண்மணிக்கும் உலகம் முழுக்க கொண்டு சேர்த்தவர்களுக்கும், உள்ளுர ரசித்து வெளியே குமட்டியவர்களுக்கும், நம்மை நமக்கே புரிய வைக்கும் நிகழ்காலத்திற்கும் நன்றி சொல்லி உங்களை வரவேற்கின்றேன்.

ஜோதிஜி said...

நன்றி சசிகுமார்

ராஜ நடராஜன் said...

துயரங்கள் எத்தனையோ கடந்து வந்தும் கூட ராஜிவின் மரணத்தை மனம் ஏற்க மறுக்கிறது.அதே சமயத்தில் ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகத்தையும்.பார்க்கலாம் எதிர் கால வரலாறு எப்படி எதனால் திசை மாறுகிறதென்று.இதற்கெல்லாம் மூல சூத்திரதாரி சீனாவின் கையில் இருக்கிறது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியும்,சறுக்கலும்.நன்றி.

சுடுதண்ணி said...

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன், மிக அருமையான விஷயங்களைச் சேர்த்துக் கோர்த்த விதம் அற்புதம். தொடருங்கள் :)

அமர்ஹிதூர் said...

இந்தியாவிற்கு யாரும் துரோகம் செய்யகூடாது. துரோகம் செய்தவர்கள் இன்று உலகில் இல்லை.

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

கச்சத்தீவில் கூட மக்கள் வந்து கூடாராம் போட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். வேறென்ன?
இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர்கள் இன்னும் சில வருடங்களில் காணாமல் போய்விடுவார்கள். 2020 வல்லரசு எந்த நிலைமையில் சீனாவை எதிர்கொள்ள போகிறது?

ஜோதிஜி said...

நன்றி தமிழ்

பாகற்காய் அமர்ஹிதூர்

துரோகம் என்ற வார்த்தைக்கு பின்னால் பல அர்த்தங்கள் இருக்கிறது. இப்போது புரியாது. புரியும் போது இப்போது இருப்பவர்கள் இருக்கமாட்டார்கள்?

Thenammai Lakshmanan said...

// அன்பை எண்ணங்களால் கடத்த முடியும். //அன்பு //சூழ் உலகம் என்பதை கடத்திக் கடத்தியவர்களின் வாழ்க்கையை நாம் உள்ளுற உணர்ந்தால் மட்டுமே முடியும். உணராமல் உளறல் மொழி கொண்டு உருக்குலைக்குவும் நம்மால் முடியும். பாதிப்பு என்பது பட்டால் தெரியும். பட்டு நகர்ந்து போனவர்கள் அத்தனை பேர்களும் தான் மட்டுமல்லாது நாளைய தலைமுறைகளையும் தறுதலையாக்குவதில் விற்பனராகத்தான் இருக்கின்றனர்

தான் மரியாதை வைத்திருந்தவருக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டம். அவரின் வாழ்க்கையை பொறுத்தவரையில் முடிவு பெற வேண்டிய இறுதிக்கட்டம். //

உண்மை உண்மை உண்மை ஜோதிஜி
இந்த இரண்டுமே உண்மை

மிக அருமை
உங்கள் எழுத்து இந்த இடுகையில் மென்மையாக ஒலிக்கிறது ஜோதிஜி

ஜோதிஜி said...

உங்கள் எழுத்து இந்த இடுகையில் மென்மையாக ஒலிக்கிறது

களம் விவகாரமானது. வில்லங்கமானது. கொடுமையானது. ஆறாத ரணத்தை விசிறி விட்டு ஆற்றும் மருந்து போல் கையாள வேண்டிய சூழ்நிலை

http://thavaru.blogspot.com/ said...

வணங்குகிறேன் நன்று

Thekkikattan|தெகா said...

படிக்க வேண்டியது கடலளவு இருக்கும் போலேயே... மெதுவா வாசிக்கிறேம்பூபூ.

பெரிய ஆளாத்தான் இருப்பீரு போல. சாக்கிரதையா இனிமே பேசுறேன்.

Unknown said...

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

தவறு

நன்றி நண்பா.

தெகா

யோவ்ன்னு எழுதலாம்ன்னு பார்த்தா அடுத்த நண்பர் யோவ் என்ற பெயரிலேயே வந்துள்ளார்.

க.பாலாசி said...

ஜோதிஜி.. நல்வாழ்த்துக்கள்.. உங்க கட்டுரைன்னா என்னால கண்ண மூடிகிட்டு ஓட்டுப்போட முடியுது.. வாழ்த்துக்கள்....

நீச்சல்காரன் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்

ஊரான் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

தோழமையுடன்

ஊரான்.

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

Muthumani said...

தொகுப்புகள் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

http://www.keetru.com/literature/essays/ranganath.php

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4110&Itemid=139

http://www.kalachuvadu.com/issue-109/page118.asp

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15061:2011-06-09-08-03-47&catid=4:reviews&Itemid=267

Unknown said...

Dear Jothi ji,i am expecting the role of Chandira samy & subramaniya swami for Rajiv bomb blast death