இலங்கையின் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் சிங்களர்களாக மட்டும் தான் இருக்க முடியும். அதுவும் மேலாதிக்க சக்தியாகத் தான் இருந்து தொலைக்க முடியும். வருகின்றவர்கள் அத்தனை பேர்களும் மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது. பின்னால் வரப்போகின்ற சந்திரிகா அவர்களின் கணவர் சிங்களராக இருந்தாலும் தமிழர்களின் நலனை மனதார விரும்பியவர். ஆனால் சிங்கள இடது சாரிகளால் அவரின் உயிரும் போக்கடிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற போது மலையக தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களும் இந்த நாட்டில் வாழ வேண்டியவர்கள் என்பதாக ஒருமித்த குரல் எழுப்பியவர்கள் எவருமே தமிழர்கள் அல்ல. அப்போது எதிர்கட்சியாக இருந்த இடது சாரி தலைவர்களே.
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் உள்ளே இருக்கும் அமைச்சர்கள் தமிழர்களுக்கு எதிராக இருப்பார்கள். இருவரும் நல்லவராக இருந்தால் வெளியே மறைமுக ஆட்சி நடத்திக் கொண்டுருக்கும் புத்தபிக்குகள் பார்வையில் தப்பிவிட முடியாது. இவர்கள் அத்தனை பேர்களையும் தாண்டி வெளியே வந்து விட்டால் இதற்கு மேல் உள்ளே செயல்பட்டுக் கொண்டுருக்கும் இனவாத சங்கங்கள் , கட்சிகள் முன்னால் வந்து நிற்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விட தயாராய் இருப்பார்கள். எவருக்கு தைரியம் வரும்?
இந்த வலைபின்னலை தொடக்கம் முதல் தந்தை செல்வா உணராத காரணமே அவருடைய இறப்பு வரைக்கும் அவருக்கு தோல்வியை மட்டுமே தந்தது. அவர் பொறுப்பில் அடுத்து வந்தமர்ந்த அமிர்தலிங்கம் ஒரு வகையில் பார்க்கப்போனால் இறுதியில் மக்கள் செல்வாக்கை முழுமையாக இழந்து தொகுதி மாறி போட்டியிட்டதும், தேர்தலில் தோல்வியைத் தழுவி நானும் அரசியலில் இருக்கின்றேன் என்பது போலத் தான் வாழ்ந்து கொண்டுருந்தார்.
இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு குணாதிசியம். அவரவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையில் கிடைத்த பாதிப்புகள் காரணமாக சிலர் தமிழர் சார்ந்த நல்ல விசயங்களை செயல்படுத்த தயாராய் இருந்தாலும் உள்ளே உள்ள இது போன்ற இடியாப்பச் சிக்கல்கள் அவர்களை பயமுறுத்தி வைத்து விடும். ஒரு அளவிற்கு மேல் வேண்டாம்டா சாமி என்பதாக மாற்றிவிடும். இது தான் இன்று வரைக்கும் இந்த இலங்கை பிரச்சனையை ஆண்டு கொண்டுருக்கிறது. முடிவுக்கு வராமலே முடிந்தவரைக்கும் இழுத்துக்கொண்டே இருக்கிறது. அதுவும் சமீப காலமாக சர்வதேச அரசியல் ஒரு பங்காக உள்ளே நுழைந்ததும் அதன் தாக்கம் மொத்தத்திலும் வேறு திசையில் பயணித்து இனி வாய்ப்பு இருக்குமா? என்கிற அளவிற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது?
இப்போது ஆட்சியில் இருக்கும் பிரேமதாசா பௌத்த இனத்தின் சிங்கள தலைவராக இருந்தாலும் ஆட்சிக்கு வந்த தொடக்க காலத்தில் தமிழர் பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதை நோக்கி தான் நகர்த்தினார். காலம் செய்த கோலம் உள்ளேயிருந்த சக அமைச்சராலே அவரும் மாற்றம் பெற்று விட்டார் என்பதே சரியாக இருக்க முடியும். சிங்களர்களின் தந்தையாக கருதப்படும் முதல் பிரதமர் சேனநாயகா உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சி என்பது பிறகு ஜெயவர்த்னே மூலம் வழி நடத்தப்பட்டு இப்போது பிரேமதாசாவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாக ஆட்சிக்கு வந்த இவர் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு அடித்தட்டு மக்களின் சார்ப்பாளராகத் தான் உள்ளே வந்தார். ஆனால் ஆண்டு விட்டுப் போன ஜெயவர்த்னே மொத்தத்திலும் சிறப்பான அரசியல் ஞானி. அரசியலில் ஜெயிக்க முதல் தகுதியே எதை செய்யக்கூடாதோ அதன் பக்கம் திரும்பவே கூடாது. அதுவே மக்கள் நலனாக இருந்தாலும் பரவாயில்லை. காலப்போக்கில் மக்களை வேறு பக்கம் மாற்றி விடலாம். ஆனால் பதவி போய்விட்டால் அந்த மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிச்சயமில்லை. அவருக்கு ஒரு படி மேல் அவரின் சிஷ்யகோடிகள் இரண்டு பேர்களும். நான்கு பேர்களை வெட்டி விட்டு வாங்கப்பா என்றால் அமைச்சர்களாக இருந்த அதுலத் முதலியும், காமினி திச நாயகாவும் ஒரு கிராமத்தையே வெட்டி வோரோடு கொண்டு வந்து காலடியில் சமர்பித்தவர்கள். இதனால் மட்டுமே அவரால் எந்த உள் நாட்டு எதிர்ப்பும் இல்லாமல் நிம்மதியாக தானுண்டு தான் செய்து கொண்டுருந்த தமிழர் அழிப்பு உண்டு என்று கனஜோராக பத்து வருடங்கள் குப்பை கொட்ட முடிந்தது. ஆனால் பிரேமதாசாவின் கெட்ட நேரம் என்பது உள்ளேயிருந்த இந்திய அமைதிப்படை மூலம் பிரபாகரனுக்கு நல்ல நேரமாக அமைந்து இருந்தது.
இவரால் ஆட்சிக்கு வந்து முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சியில் அமர்ந்து நிம்மதியாக ஆள முடியவில்லை என்பதை விட இவருடைய ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வுகள் அத்தனையும் திடுக்கிட வைக்கக்கூடிய நிலமெல்லாம் ரத்த சம்பவங்கள். அத்தனையும் 1989 முதல் 1991 மே முடிவதற்குள் வரிசையாக நடந்த படுகொலைகள். அதிலும் 1989 ஜுலை என்பது 1983 கருப்பு ஜுலை போலவே இருந்தது. அந்த அளவிற்கு ஒன்றுக்கொன்று துப்பறியும் நாவலில் வரும் திடுக்கிடக்கூடிய சம்பவங்களாகவே இருந்தது. அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் படுகொலை ஒரு பக்கம். அதனைத் தொடர்ந்து மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற உச்சக்கட்ட நகைச்சுவை சமாச்சாரம் என்றும் நடந்தது.
இவர் காலத்தில் நடந்த ஒன்று கூட இயற்கை மரணம் அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள். இது போக இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த முஸ்லீம் மக்களின் இடப்பெயர்வும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், பிரபாகரனுக்கும் கிடைத்த அவப்பெயரும் மறக்க முடியாத அளவிற்கு அதுவே கடைசியில் அவர் மனதார மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஈழ இரண்டாம் யுத்தமும் இதன் காரணமாகத் தான் தொடங்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபாகரன் வளர்ச்சிக்கு மறைமுக காரணமாக இலங்கை ஆட்சியளார்களே இருந்தனர். ஜெயவர்த்னேவைப்போலவே இப்போது ஆண்டு கொண்டுருக்கும் பிரேமதாசவோ நேரிடையான காரணமாக இருப்பதையும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
Add caption |
பிரேமதாசா மனிதவெடிகுண்டால் சாகடிக்கப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்
எம்ஜிஆர் பிரபாகரனுக்கு பிரியத்துடன் கொடுத்த பணத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தன்னிடம் இருந்த விடமுடியாத பயத்தினால் மட்டுமே எல்லாவிதங்களிலும் அன்றைய சூழ்நிலையில் பிரேமதாசா விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக செயல்படத் தொடங்கினார். இந்திய அமைதிப்படையை எப்படியாவது வெளியே விரட்ட வேண்டும் என்று மில்லியன் கணக்காக பணமும் ஆயுதமும் பிரேமதாசாவால் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவென்றால் பதுங்கு தாக்கு என்ற தொடங்கிய விடுதலைப்புலிகளின் கொரில்லா தாக்குதல் என்பதில் இருந்து வலிமையான இராணுவ ரீதியான தாக்குதல்களும், அதன் மூலமாக கிடைத்த வெற்றிகளும் உருவாகி விடுதலைப்புலிகளின் இயக்க வளர்ச்சியை இப்போது நடந்த போராட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது. மூன்று மாதங்கள் இடைவிடாத போராட்டத்திற்குப் பிறகு இலங்கை இராணுவத்தை வென்று யாழ் கோட்டையைப் பிடித்தது என்பது பிரபாகரன் ஆளுமைக்கு கிடைத்த ஒரு மைல் கல் சாதனை சாதனையே.
இதற்கு மேல் நடந்த சிறப்பு சமாச்சாரம் பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழக ஊடகங்கள் வெற்றிவிழா கொண்டாடியதும் நடந்தேறியது. உருவாக்கியது இந்திய உளவுத்துறை. அவமானப்பட்டது ஊடகங்கள். வந்த செய்தி தவறு என்றாலும் காத்துக் கொண்டுருந்தவர்கள் போல கட்டம் கட்டி வெளியிட்டனர். பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற செய்தி வந்த போதும் அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு தாண்டி விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலில் பட்டியலை பார்த்து விடலாம். அமிர்தலிங்கம் படுகொலை, உமா மகேஸ்வரன் படுகொலை, இவை இரண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடைவெளியில் நடந்தது. அமிர்தலிங்கம் கொழும்புவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டது 1989 ஜுலை 13. உமா மகேஸ்வரன் ஜுலை 16ந் தேதி. இதன் தொடர்ச்சியாக ஜுலை 24 அன்று மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பரபரப்பு செய்திகள். ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லை என்றாலும் அமிர்தலிங்கம் இறப்பால் பலத்த கண்டனங்களை பெற்றது விடுதலைப்புலிகள் இயக்கம். உமா மகேஸ்வரன் இறப்பு என்பது அவர்கள் இயக்கத்திற்கு உள்ளே இருந்தவரால் கொல்லப்பட்டாலும் இது இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்பதை பிரபாகரன் இறந்து விட்டார் என்று உருவாக்கிய செய்தி மூலம் தான் மாத்தையா இதற்கு பிறகு தொடர்ச்சியாக கவனிக்கப்பட்டதும், அவரின் திருவிளையாடல்களும், இதற்கு பின்னால் இருந்த உளவு வலைபின்னல்களும் கண்டு உணரப்பட்டது.
பிரேமதாசா ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் தான் பதவிக்கு வர எல்லா விதங்களிலும் உதவியாய் இருந்த ரஞ்சன் விஜயரத்னேவுக்கு சிறப்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு துறையை அவருக்கு ஒதுக்கி சிறப்பாகத் தான் வைத்து இருந்தார். பிரேமதாசாவுக்கோ அமைதிப் பாதையை இனி உருவாக்கி விடலாம் என்ற லேசான எண்ணத்தை மனதில் வைத்திருந்தவர். முழுமையாக விரும்பினாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?
ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் விடுதலைப்புலிகளை அழைத்து சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட்டு அஸ்திவாரத்தை பலமாகத் தான் பிரேமதாசா தோண்டினார். ஆனால் இவர் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரெத்னெ உருவாக்கிய அலங்கோலமும், இவர்கள் இருவருக்கும் நடந்த பதவிப் போரில் இருவரும் இறந்து போகும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.
பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்த ரஞ்சன் விஜயரெத்னேவுக்கோ எப்போது தனக்குண்டான வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கொண்டுருந்தவர். இந்த இடத்தில் ரஞ்சன் என்ற மகா மனிதரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஜெயவர்த்னே ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் கொடூரத்தை விட இவர் ரசித்து செய்தது ஒவ்வொன்றும் அதையும் தாண்டி புனிதமானது. உள்ளே இடது சாரி சிந்தனைகள் உள்ள JVP இயக்கத்தினரையும், அவர்களை ஆதரித்த அத்தனை பேர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கூண்டோடு அழித்து ஒழித்தார். அப்போது மனித உரிமை கமிஷன் கணக்குப்படி இவரால் கொல்லப்பட்ட ஜேவிபி மற்றும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல். காயம் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் கணக்கு இதில் அடங்காது.பேச்சு என்பதே கூடாது. உடனே முடித்து விடவேண்டும் என்று தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் முடித்துக்காட்டியவர்.
இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் ஓய்வெடுத்துக்கொண்டுருந்த இலங்கை இராணுவத்தை சோம்பலில் இருந்து விழித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்பதை குறிப்பால் உணர்த்தி மறைமுக குதியாட்டம் போட வைக்க காத்துக்கொண்டுருந்தார். பிரேமதாசா உருவாக்கியிருந்த அமைதி ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர இவர் உருவாக்கிய அணர்த்தங்கள் மூலம் தான் ஈழ இரண்டாம் யுத்தமும் நடந்தேறத் தொடங்கியது. தொடங்குவதற்கு பல காரணங்கள். ஆனால் மொத்தத்தில் அதன் பெருமை அத்தனையும் இவருக்கே போய்ச் சேரும்.
இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் ஓய்வெடுத்துக்கொண்டுருந்த இலங்கை இராணுவத்தை சோம்பலில் இருந்து விழித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்பதை குறிப்பால் உணர்த்தி மறைமுக குதியாட்டம் போட வைக்க காத்துக்கொண்டுருந்தார். பிரேமதாசா உருவாக்கியிருந்த அமைதி ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர இவர் உருவாக்கிய அணர்த்தங்கள் மூலம் தான் ஈழ இரண்டாம் யுத்தமும் நடந்தேறத் தொடங்கியது. தொடங்குவதற்கு பல காரணங்கள். ஆனால் மொத்தத்தில் அதன் பெருமை அத்தனையும் இவருக்கே போய்ச் சேரும்.
விடுதலைப்புலிகளை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுருந்தவர் தான் கூட்டும் பாதுகாப்பு கூட்டங்களைக் கூட பிரேமதாசாவிடம் தெரிவிக்காத அளவிற்கு தன்னை தனி ஆளாக தனி ஆவர்த்தனம் நடத்தும் ஆளாகவும் மாற்றிக்கொண்டுருந்தார். வளர்ந்து கொண்டுருந்த அவரின் புகழ் என்பது பிரேமதாசாவிற்கு எள்ளும் கொள்ளும் வெடிக்க வைத்தது. தன்னிடம் தெரிவிக்காமல் தனி ஆவர்த்தனம் நடத்த தொடங்கியபோது உணர்ந்த பிரேமதாசா அதன் மூலம் இருவருக்கும் இடையே உருவான அதிகாரப் போட்டி என்பது ரஞ்சன் விஜயரெத்னே உயிரை பறிக்கவும் காரணமாக அமைந்து விட்டது. கொழும்பு சாலையில் இவர் பயணித்த வாகனத்தில் வந்து மோதிய வெடி மருந்து நிரப்பட்ட வண்டி மூலம் கதை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இவருடைய இறப்பு எந்த அளவிற்கு கோரமாக இருந்தது என்றால் நிகழ்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்ட பத்திரிக்கையாளர்கள் சொன்னபடி அந்த இடம் விமான தாக்குதல் நடத்தப்பட்டது போல் இருந்து. இவரின் தனிப்பாணியான சுட்டு தொங்கவிடுதல் போல் இவருடைய உடம்பும் பிய்ந்து போய் தனியாக தொங்கிக்கொண்டுருந்தது. இவரின் வீர்யத்தைக்குறைக்க அதிகப்படியான வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தை உருவாக்கியது அரசா இல்லை வேறு எவரா? என்பதை இறுதி வரைக்கும் கண்டு பிடிக்கப்படவில்லை. பிரேமதாசா எப்போதும் போல் இவருக்கும் சிறப்பு பட்டம் கொடுத்து விட்டு கண்ணீர் செலுத்தி அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டார். அப்போதும் இவர் இறப்பு விடுதலைப்புலிகள் மேல் சுமத்தப்பட்டது. இவர்கள் தான் செய்தார்களா என்பதை விட செய்து இருந்தால் பரவாயில்லை என்று சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து சந்தோஷப்படும் சூழ்நிலையில் தான் ரஞ்சன் என்பவரை காலன் தன்னுடைய வரவு கணக்கில் வைத்தார்?
விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு பலத்த கண்டனங்களை உருவாக்கியது அமிர்தலிங்கம் படுகொலை. சிறீ சபாரெத்தின படுகொலைக்குப் பிறகு இவரின் படுகொலையென்பது மெல்லிய அரசியல் வலை பின்னல் போன்றது. கொன்றது விடுதலைப்புலிகள் தான். ஆனால் மாத்தையா மூலம் உருவாக்கப்பட்ட பல புதிரான நிகழ்வுக்கு பின்னால் உளவுத்துறையின் பங்கும் இதில் இருக்கிறது. காரணம் அமிர்தலிங்கம் இறந்த 1989 ஜுலை 13க்கு பிறகு அடுத்த மூன்று நாளில் பிரபாகரனுடன் தொடக்கம் முதல் ஒன்றாக இருந்த உமா மகேஸ்வரனும் சுட்டுக்கொல்ப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஊடகத்தால் ஊதிப் பெரிதாக பேசப்பட்ட மாத்தையாவால் பிரபாரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியும். இதன் தொடர்ச்சியை அன்று ஊகித்தவர் விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான் மட்டுமே. ஆயுதக் கொள்முதல் முடித்து திரும்பி வந்து கொண்டுருந்த கிட்டு கப்பல் காட்டிக்கொடுப்பு மூலம் தான் இதன் பின்னால் உள்ள மாத்தையா உளவுத்துறையிடம் விலை போயிருந்ததை கண்டு பிடிக்க முடிந்தது. எப்போதும் போல அமிர்தலிங்கம் படுகொலைக்கு நாங்கள் சம்மந்தம் இல்லை என்ற விடுதலைப்புலிகள் இயக்கம் அறிக்கை விட்ட போதிலும் நம்ப எவரும் தயாராய் இல்லை. புதைக்கப்பட்ட ரகஸ்யமாகவே போய்விட்டது. இப்போதைய சூழ்நிலையில் பிரபாகரன் செய்யாமல் இருந்தாலும் கணக்கு என்பதோ அவர் பக்கத்தில் வரவு என்று வைக்கப்படும் சூழ்நிலை தான் இருந்தது.
இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அரசியல் பாதைக்கு இயக்கத்தை கொண்டு வந்து இருக்கலாம் என்பதே. ஆனால் பிரேமதாசா காலத்தில் அதற்கும் முயன்று பார்த்தவர் பிரபாகரன். தொடங்க வேண்டும் என்று உறுதியாய் இருந்து பிரபாகரன் மனத்தை மாற்றியவர் ஆன்டன் பாலசிங்கம். விடுதலைப்புலிகள் மக்கள் முன்ணணி (PEOPLE'S FRONT OF LIBERATION TIGER'S (PFLT) ) தலைவராக மாத்தையாவும், பொதுச் செயலாளராக யோகியும் பதவியில் அமர்த்தப்பட்டு முறைப்படியான அரசாங்க பேச்சு வார்த்தைகள் கூட தொடங்கப்பட்டது. காரணம் கிழக்கு மகாணங்களில் ஆட்சி அமைப்பு மூலம் இனியாவது மக்கள் செல்வாக்கை மீட்டு எடுக்கலாமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அரசியல் கட்சியாக பதிவும் செய்து அதன் சின்னமாக பாயும் புலி என்பதும் தீர்மானிக்கப்பட்டது. பிரேமதாசாவின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தை கூட தொடங்கப்பட்டது. ஆனால் பிறகு பிரேமதாசாவின் மனம் மாறியதும் அதுவே மனித வெடிகுண்டு மூலம் அவர் உயிரைப் பறிக்கும் அளவிற்கும் கொண்டு போயும் நிறுத்தியது.
வட கிழக்கு மகாண தேர்தல் நடத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகள் ஜெயித்து வந்து விடுவார்கள். இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் காலப்போக்கில் தனியாட்சி வரைக்கும் வந்து விடுவார்கள். கணக்குப் போட்ட பிரேமதாசா காலம் கடத்தத் தொடங்கினார். சிங்களர்கள் என்றால் தந்திரம் என்று தானே அர்த்தம். முதன் முதலாக ஆயுதங்களை கை விடுவோம் என்று விடுதலைப்புலிகளை அறிக்கை விட வேண்டும் என்றார். விடுதலைப்புலிகள் புரிந்து ஒதுங்கி விட்டனர். அப்போது தான் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரெத்னே உள்ளே இருந்த மொத்த தீவிரவாத இயக்கங்களையும் பூண்டோடு அழித்து தும்சம் செய்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டுருந்தார். இப்போது அவர் பார்வையில் விடுதலைப்புலிகள். விடுவாரா? காத்துக்கொண்டுருக்கும் இலங்கை இராணுவம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
இந்திய அமைதிப்படை உள்ளே யிருந்தவரைக்கும் தினவெடுத்த தோளுடனும், அமைதி கால சூழ்நிலையை கருத்தில் வைத்து வெளிநாடுகள் கொடுத்த நல உதவித் திட்ட பணத்தை ஆயுதமாக மாற்றி வைத்திருந்தது எவருக்கு உதவியதோ இல்லையோ ரஞ்சன் விஜயரெத்னேவின் சிந்தனை களுக்கும் கைகளுக்கும் அரிப்பெடுக்கத் தொடங்கியது. ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்தில் பிரேமதாசா உருவாக்கி இருந்த அமைதிப்பாதை முழுக்க கெட்டுப்போனதற்கு முக்கிய காரணம் இவரே.
இவரால் உருவாக்கப்பட்ட உருவாக்கிய அணர்த்தங்களால் முறைப்படியான இராணுவ பலம் என்பதையும் பெற்று, புதிய கொள்கைகள், நோக்கங்கள், பாதைகள் என்று பயணித்து வந்த விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியான தாக்குதல்களையும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக மூன்று மாதங்கள் இடைவிடாமல் நடத்தி யாழ் பகுதியை தங்களது கோட்டையாக்கினர். பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரேமதாசாவும், ரஞ்சன் விஜயரெத்னேவும் வடகிழக்கு மக்கள் மேல் வன்முறையை ஏவி விட இதன் தொடர்ச்சியாக உருவானது தான் முஸ்லிம் மக்களை அவர்கள் பகுதியில் இருந்து இடம் பெயர வைத்தது வேறு பகுதிக்கு அவர்களை அகதியாக சொத்துக்களை இழந்து நடக்க வைத்து அவல பாதைகளை உருவாக்கியதும் நடந்ததேறியது.
இடப்பெயர்ச்சியும் அவர்களின் அவல வாழ்க்கையும். இது ஒரு தனிப்பிரிவாக ஈழ இரண்டாம் யுத்தத்திற்கு கொண்டு செலுத்தினாலும் எந்த வகையில் பார்த்தாலும் இறுதியில் பிரபாகரன் மன்னிப்பு கேட்டது போல் கொடுமையான கொடூரமாக இந்த இடப்பெயர் நடந்தேறியது. பிரபாகரன் ஆளுமையில் நடந்த இந்த கொடுமை கொடூரம் பலத்த கண்டனங்களை அவருக்கு ஏற்படுத்தியது.
இடப்பெயர்ச்சியும் அவர்களின் அவல வாழ்க்கையும். இது ஒரு தனிப்பிரிவாக ஈழ இரண்டாம் யுத்தத்திற்கு கொண்டு செலுத்தினாலும் எந்த வகையில் பார்த்தாலும் இறுதியில் பிரபாகரன் மன்னிப்பு கேட்டது போல் கொடுமையான கொடூரமாக இந்த இடப்பெயர் நடந்தேறியது. பிரபாகரன் ஆளுமையில் நடந்த இந்த கொடுமை கொடூரம் பலத்த கண்டனங்களை அவருக்கு ஏற்படுத்தியது.
மீதம் உள்ள ரத்த தடங்களை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம். முதலில் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத அதுலத் முதலி. இவர் ஜெயவர்த்னே ஆட்சி காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். பிரேமதாசாவை எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கி ஊரெல்லாம் மேடை போட்டு முழங்கிக்கொண்டுருந்தார்.
பதவியை எதிர்பார்த்து ஏமாந்து போன அதுலத் முதலி, காமினி திசநாயகா போன்றவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கட்சி( DUNF DEMOCRATIC UNITED NATIONAL PARTY) நடத்தி உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டுருந்தனர். அதிலும் அதுலத் முதலிக்கு சற்று வீராவேசம் அதிகமாக இருந்தது. பொதுக்கூட்ட மேடையில் முன்னால் இருந்து பார்த்துக்கொண்டுருந்தவர் கையில் இருந்த துப்பாக்கி குண்டின் மூலம் அதுலத் முதலியின் (1993 ஏப்ரல் 23) கதை முடிவுக்கு வந்தது. இது முதல் ரத்த ஆறு. விடுதலைப்புலிகள் நாங்கள் தான் இதற்கு காரணம் என்பதை தெளிவாக தைரியமாக முரசறிவித்தனர். இவரின் இறப்பு அந்த அளவிற்கு தமிழர்களிடம் மகிழ்ச்சியை உருவாக்கியதை இங்கு குறிப்பிடலாம். தவறில்லை.
ரஞ்சன் அந்த அளவிற்கு ஜனரஞ்சகமான பல நல்ல காரியங்களை தமிழர்களுக்கு எதிராக பார்த்து பார்த்து செய்து கொண்டுருந்தவர்.
இத்தனை ஓய்வில்லா வேலைகளுக்கிடையே கடின பணிகளுக்கிடையே, போராட்டங்கள், வெற்றிகளுக்கிடையே இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட பணியும் வெற்றிகரமாக இன்று முடிவுக்கு வந்தது.
மே மாதம் 1991 இரவு 10.20 ஸ்ரீ பெரும்புதூர். தமிழ்நாடு. இந்தியா.
ஆற அமர அதன் புலனாய்வு பக்கங்களை உணர்ந்து தான் ஆக வேண்டும்.
வீர்யமும் திட்டமிடுதலும் புரியும். உளுத்துப் போன நிர்வாகத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். அதிலும் கூட, தன்னுடைய தனிப்பட்ட முயற்சியினால் உருவான சாதனைகளையும் இந்த உலகத்திற்கு பறைசாற்ற முடியும் என்று உணர்த்தியவரையும் நமக்கு புரியவைக்கும். ......?
எதிர்மறை நியாயங்கள் ஒரு பக்கம், ஆனால் இரண்டு பக்கமும் தமிழர் என்பதே ஆதங்கம்.
இங்கு தலைமைப்பொறுப்பில் இருந்து டிஆர் கார்த்திகேயன் மற்றும் அவரின் குழுவினர். அங்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருக்கு பக்க பலமாக இருந்த குறைவான குழுவினர்.காரணம் அன்றைய தினத்தில் பின்னால் விலகிப்போன இரண்டாம் கட்டத்தில் இருந்த கருணாவிற்கே இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு தான் தெரிந்தது. கிடைத்த மொத்த ஆதாரங்களை வைத்து ஆச்சரியப்படலாம் இல்லையேல் ஆதங்கப்படலாம்.
எதிர்மறை நியாயங்கள் ஒரு பக்கம், ஆனால் இரண்டு பக்கமும் தமிழர் என்பதே ஆதங்கம்.
இங்கு தலைமைப்பொறுப்பில் இருந்து டிஆர் கார்த்திகேயன் மற்றும் அவரின் குழுவினர். அங்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருக்கு பக்க பலமாக இருந்த குறைவான குழுவினர்.காரணம் அன்றைய தினத்தில் பின்னால் விலகிப்போன இரண்டாம் கட்டத்தில் இருந்த கருணாவிற்கே இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு தான் தெரிந்தது. கிடைத்த மொத்த ஆதாரங்களை வைத்து ஆச்சரியப்படலாம் இல்லையேல் ஆதங்கப்படலாம்.
ஆதாரங்கள், ஆச்சரியங்கள், அவமானங்கள், கோரங்கள், கொடுமைகள் என்று தொடர்ந்து எழுதினாலும் இதன் முழுமையான தீர்க்கப்படாத பல உண்மையான விசயங்கள் இன்னமும் இருக்கிறது என்பதோடு சம்மந்தப்பட்டவர்கள் இன்னமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுருப்பது ஒரு கொடுமை என்றால் சம்மந்தம் இல்லாமல் மாட்டிக்கொண்டவர் இன்னமும் தண்டனை காலம் முடிந்தும் அதற்கு மேலும் அனுபவித்தும் உள்ளே புழுங்கி வாழ்வது அதைவிடக் கொடுமையானது. இபிகோ சொல்வதைப்போல குற்றவாளியைப் போல குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் சாத்யமில்லாத பாதையில் தான் பயணித்துக்கொண்டுருக்கிறது. இது நடக்கப் போகிறது? இவ்வாறு ஒன்று நிகழப் போகிறது என்று உணர்ந்தவர்கள் பல பேர்கள். ஆனால் இன்று வரையிலும் உண்மையைத் தவிர அத்தனையையும் பேசிக்கொண்டு இருப்பதும் வாழ்வதும் மொத்ததிலும் வியப்புக்குரியது. இது தான் இந்தியா. இது தான் இந்தியச் சட்டத்தின் சிறப்பம்சம்.
(இடைவேளை......தொடர்வோம்....)
(இடைவேளை......தொடர்வோம்....)
10 comments:
ஒரே ஒரு சந்தேகம். மாத்தையா இந்திய அரசின் கைக்கூலி எனும்போது, அவர் மூலம் ராஜிவ் படுகொலை செய்ய படப்போகும் விபரம், ஏன் இந்திய தரப்புக்கு சொல்லப்படவில்லை. எங்கேயோ பிசிறு தட்டுகிறது இல்லையா.
நீங்கள் தரும் நிகழ்வுகளின் ஆழம் வியக்க வைக்கிறது. அருகில் இருந்து பார்த்தவர் போல நன்றாக எழுதுகிறீர்கள்.
/*
சம்மந்தப்பட்டவர்கள் இன்னமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுருப்பது ஒரு கொடுமை
*/
இது யாரைக்குரிக்கிறது?
அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவடன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW.எப்படி CIA செயல் படுகிறதோ அதே மாதிரி ஈ அடிச்சான் காப்பி மாதிரிச் செயல் படவேண்டும் என்று துடிக்கும் RAW அதிகாரமையம்.இந்திரா காந்தி ஆட்சிசெய்த காலத்தில் வாலைச்சுருட்டி வலம்வந்தஇந்தஅமைப்பு
இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் அரசாளலாயக்
கு அற்ற ராஜீவ் காந்தி பிரதமர் கதிரையை
அலங்கரிக்கத்தொடங்கியதும் நாகாசுரனாக
அசுர வளர்ச்சி பெற்று யாருக்கும் கட்டுப்படாத
அமைப்பாக கோலோச்சுகிறது. இந்தியாவின்
அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்ட
தற்கும் வருங்காலத்தில் ஏற்படுவதற்கும் இந்த ரா
அமைப்புதான் முக்கியகாரணம்.இதைக்கட்டுப்பாட்டில்
கொண்டுவராத வரை இந்தியா காலப்போக்கில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும் சாத்தியம் அதிகம்.
அமைதிப்படை பிரேமதேசா பிரபாகரன் ..என்று ஏகப்பட்ட விஷயங்கள். எப்படிங்க இவ்வளோ விஷயம் தெரிந்து வைத்து இருக்கீங்க! சிறப்பாகவும் கூறிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்து நடிக்கும்
தொடருக்கும் நான் நிரந்தர ரசிகன்
உங்களின் வேண்டுகோளுக்கிணங்க எனது வலைப்பூவில் கருப்பு நீக்கிவிட்டேன்.
இப்ப எப்படி இருக்கு கருத்து சொல்லுங்க
தமிழ் உதயம்
மாத்தையாவிற்கு இந்த திட்டம் தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே? இது குறித்து சிவராசன் கூட்டணியினர் தொடர் முடியும் போது உங்களுக்கு புரியலாம்
நன்றி முகிலன்.
பால்பழனி தொடர்ந்து படிக்கும் போது உங்களுக்கு புரியலாம்
தவேஷ்
வாய்ப்பு குறைவு. வளர்ச்சி மட்டுப்படலாம். தெளிவான ஆட்கள் பதவியில் வந்து அமரும் வரைக்கும் பொறுத்து இருக்கலாம்.
நன்றி கிரி
தியாவின் பேனா
நன்றி. சிறப்பாக இருக்கிறது உங்கள் ஆக்கம்.
Post a Comment