Wednesday, October 30, 2013

மதிப்பெண்கள் என்றொரு கீரிடம்

"அப்பா வர்ற சனிக்கிழமையன்று பள்ளிக்கு செல்ல வேண்டும்" 

மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

ஒருவர் உடனே சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரில் அடுத்து வரும் சனிக்கிழமை நாளை பெரிதாக சிவப்பு கலரில் வட்டம் போட்டு வைத்தார். மற்றொருவர் கைபேசியில் அலாரத்தில் அந்த தேதியை தயார் செய்து வைத்தார்.  உசாரான பா(ர் )ட்டீங்க?

அன்று தான் காலாண்டு பரிட்சைக்கான மதிப்பெண்கள் (RANK CARD) தருவார்கள்.  பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டமொன்றை வருடந்தோறும் நடத்தினார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அது நிறுத்தப்பட்டு விட்டது. 

முக்கிய காரணம் பெற்றோர்களின் மனோபாவம். நிர்வாகத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக காலாண்டு, அரையாண்டு பரிட்சை ரேங்க் அட்டை கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோர்களையும் பள்ளிக்கு நேரிடையாக வரவழைத்து விடுகின்றார்கள்.  மாணவர்களின் தரம் குறித்து, குறைபாடுகளைப் பற்றி பேச முடியும். இந்த சமயத்தில் பெற்றோர்களின் பார்வையில் பள்ளி குறித்த அவரவர் எண்ணங்களை எழுதித்தர ஒரு விண்ணப்ப படிவம் போல ஒன்றை கொடுக்கின்றார்கள். 

அந்த தாளில் சகல விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எந்த பாடம் பிரச்சனையாக இருக்கின்றது? எந்த ஆசிரியர் பாடம் நடத்துவது புரியவில்லை? போன்ற பல கேள்விகள்.  கடைசியாக நம் எண்ணங்களை அதில் பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள். ஏதோவொன்றை டிக் செய்ய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அறையில் இருக்கும் வகுப்பாசிரியரை சந்திக்கச் செல்ல வேண்டும்.  

முழுமையாக பேச முடியும். நமக்குரிய அத்தனை சந்தேகங்களையும் கேட்கலாம். 

சென்ற வருடம் சென்றிருந்த போது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. சென்ற வருடம் பணியாற்றிய சில ஆசிரியைகள் தாக்கு பிடிக்க முடியாமல் சென்று விட்டார்கள்.  நானும் ஒரு வகையில் காரணம். இரண்டு நாளைக்கு ஒரு முறை பள்ளியில் நடக்கும் அத்தனை விசயங்களையும் கேட்டு தெரிந்து கொள்வதுண்டு.  அந்தந்த வகுப்பாசிரியர்களின் தரம் நமக்கு புரிந்து விடும். திருத்தப்படாத வீட்டுப்பாடங்கள், திருத்திய போதும் தாமதமாக வழங்கிய நோட்டுகள். உடனே பரிட்சை வைக்கும் அவசரங்கள் என்று அனைத்தையும் ஆசிரியையின் பார்வைக்கு எடுத்துச் செல்வதோடு பலன் இல்லையெனில் உடனடியாக பள்ளிக்கூட நிர்வாகியின் பார்வைக்கு எடுத்துச் சென்று விடுவதுண்டு.  

என்னால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை வீட்டிலிருந்து நான்கு சந்து தாண்டி தான் இருக்கின்றார். இன்று வரையிலும் சாலையில் என்னை சந்தித்தாலும் தலையை திருப்பிக் கொண்டு தான் செல்கின்றார்.

ஆசிரியர் தொழில் என்பதே மன அழுத்தம் மிகுந்த தொழில் தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி போலத்தான் செயல்பட வேண்டும். சந்தேகமே இல்லை.  ஆனால் ஆசிரியர்களுக்கு தகுந்த திட்டமிடுதல் இல்லையெனில் பாதிக்கப்படுவது வகுப்பில் உள்ள மொத்த குழந்தைகளுமாக இருப்பதால் பலருக்கு இந்த திட்டமிடுதலை சொல்லி புரியவைத்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.  சித்தம் போக்கு சிவன் போக்கு என்கிற ரீதியில் தான் செயல்படுகின்றார்கள்.  

ஒரு வாரம் முழுக்க திருத்தப்படாமல் வைத்திருந்து ஒரே நாளில் வழங்கப்படும் போது அணையை திறந்தவுடன் வெளிப்படும் வேகமான தண்ணீரில் மாட்டிய ஜந்து போல மாணவர்கள் மலங்க மலங்க முழிக்கின்றார்கள்.  

சரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தயார் படுத்தி விடுகின்றார்கள். சராசரி பெற்றோர்கள் தடுமாறி பிள்ளைகளை படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.  

உடனடியாக வகுப்புத் தேர்வு என்கிற பெயரில் வைக்கப்படும் பரிட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் போது மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.  காரணம் தாமதமாக வழங்கப்படும் நோட்டுக்கள் என்பதை சற்று தாமதமாகத்தான் கண்டு கொண்டேன். இவர்கள் புத்தகங்களை வைத்து படித்த போதிலும் பல சமயம் தடுமாறி விடுகின்றார்கள். அழுத்தப்பட்ட சுமையை தாங்க முடியாமல் அவர்களின் தவிப்பு என்பது எழுத்தில் எழுத முடியாது.

காரணம் இந்திய கல்வி முறையென்பது எழுதியதை படித்து வாந்தி எடுப்பது தான் நடைமுறையாக இருக்கிறது. சொந்தமாக எழுதும் போது மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படுவதை பார்த்துக் கொண்டேயிருப்பதாலும் உண்டான மன உளைச்சலை ஒரு நாள் சென்று கொட்டிய விளைவால் அந்த வருடம் சில ஆசிரியைகளின் தலைக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கியது.  வருட இறுதியில் அதுவே அவர்களை பதம் பார்க்கவும் தொடங்கி விட்டது.  

காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாய்ப்புகளை பொருட்படுத்த தயாராக இல்லை என்பதோடு மாணவர்களை குறை சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த முறை வகுப்புவாரியாக பிரித்து வைத்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.  

காலையில் இருவருக்கும். மதியம் ஒருவருக்கும் என்று பிரித்து வைத்திருந்த காரணத்தால் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இவர்களைப் பொறுத்தவரையிலும் மகத்தான மகிழ்ச்சி. 

காரணம் மதிப்பெண்கள் குறித்த பயமில்லை என்பதோடு அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பெற்றுள்ள சிறப்பு சலுகைகள்.  

நன்றாக படிப்பவர்கள் தான் வகுப்புத்தலைமை. இது தவிர ஸ்மார்ட் போர்ட்டு கிளாஸ் நடக்கும் சமயத்தில் கணினி இயக்க முன்னுரிமை. ஆசிரியர் சொல்ல முழு பாடத்தையும் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுதல் போன்ற பல சலுகைகள்.  இது இவர்களுக்கு வகுப்பில் கௌரவம் சார்ந்த விசயங்கள். வீட்டில் இரண்டு பேர்கள் இந்த வேலைகளை செய்வதால் அவர்களுக்கு தாங்க முடியாத பெருமை. ஒருவருக்கு அது குறித்த கவலை மனதிற்குள் இருந்தாலும் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. 

"நீ ஏண்டா முயற்சி செய்யவதில்லை?" என்றால் டக் கென்று பதில் வரும்.

"ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குறவுங்க தான் இந்த வேலை செய்யனும்ன்னா மத்தவங்க எல்லாம் முட்டாளாப்பா? மொதல்ல மிஸ்களை நல்லாப் பேசச் சொல்லுங்கப்பா?  யாருமே பாடத்தைத் தவிர வேறு எதையுமே பேச மாட்டுறாங்க. எங்களையும் உள்ளே பேச விட மாட்டுறாங்க."

உடனே மற்ற இரண்டு பேரும் இது போன்ற சமயத்தில் சேர்ந்து கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கி விடுவார்கள்.

"இவளுக்கு எப்பப் பார்த்தாலும் கிளாஸ் ரூம்ல கதையளக்கனும்ப்பா.  மிஸ் பாடத்தை நடத்தும் போது அதை கவனிக்காமல் மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்."

உடனே சிறிய போர்க்களம் உருவாகும். அமளி வெள்ளத்தில் நாங்கள் இருவரும் அடித்துச் செல்ல நான் தான் இவளை கரை சேர்த்தாக வேண்டும். வாய் வார்த்தைகள் கை கலப்பில் தொடங்கி பாயத் தொடங்கும் போது அவளுடன் வெளியே ஓடி தப்பிக்க வேண்டும். 

தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளின் அறிவை கற்பூர புத்தி, கரிப்புத்தி, வாழைமட்டை என்று என்று என் ஆசிரியர்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றது.  

இது சரியா தவறா என்று தெரியவில்லை.  

ஆனால் குழந்தைகளின் இயல்பில் இருக்கும் அறிவுத்திறனையும் இவர்களைச் சந்திக்க வரும் மற்ற தோழிகளின் குணாதிசியங்களையும் பார்க்கும் போது பல சமயம் இது சரியோ? என்று தோன்றுகின்றது.

ஒருவர் பாடப் புத்தகங்களை வீட்டில் வந்து தொடுவதே இல்லை.  வீட்டுப் பாடங்களைக் கூட பள்ளியிலேயே அவசரஅவசரமாக முடித்து விட்டு வந்து விடுவார்.  படிக்க வேண்டியது எதுவும் இல்லையா? என்றால் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று தெனாவெட்டாக பதில் அளித்த போது தொடக்கத்தில் சற்று குழப்பமாகவே இருந்தது.  

இதென்ன வினோதமான பழக்கமென்று?   

ஆனால் பாடத்திட்டத்திற்கு அப்பால் அவள் வளர்ந்து நிற்பதை உணர்ந்து கொண்ட போது அதற்குப் பிறகு அவளை தொந்தரவு செய்ய முடியவில்லை. வீட்டுக்குள் இறைந்து கிடக்கும் புத்தகங்களில் ஏதோவொன்றில் மூழ்கி கிடப்பாள். சிறுவர் மலர், வார மலர், நீதிக்கதைகள், குழந்தைகள் கதைகள் என்று ஏதோவொன்று.  

படிக்க ஏதுமில்லை என்றால் பழைய பத்திரிக்கைகள்.  காரணம் தினந்தோறும் காலையில் வரும் பத்திரிக்கைகளையும் ஒரு கை பார்த்து விடுவதுண்டு.  

சென்ற ஆண்டு இவரைப் பற்றி வகுப்பாசிரியர் ஒரு வினோதமான குற்றச்சாட்டை வைத்தார்.  

ரொம்ப செல்லம் கொடுக்குறீங்களோ? என்றார்

குழப்பத்துடன் ஏனுங்க என்றேன்?

மொத்த மதிப்பெண்கள் 800. வாங்கியிருப்பது 780.  அவ தான் ஏ ஒன் கிரேடு அதாவது முதல் ரேங்க்.  அவ நினைச்சுருந்தா இன்னும் பத்து மார்க் கூட வாங்கியிருக்க முடியும்.  ஆனால் அதைப் பற்றி கண்டு கொள்ளவே மாட்டுறா? நாங்க சொல்லும் போது தலையாட்டுறா? அப்புறம் மறுபடியும் அவ போக்குல தான் போய்க்கிட்டு இருக்கா? என்றார்

வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?

சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

தொடர்புடைய பதிவுகள்

65 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?

குழந்தைகளைப்பற்றி சரியான புரிதல் மகிழ்வளிக்கிறது ..!

? said...

//சிறுவர் மலர், வார மலர், நீதிக்கதைகள், குழந்தைகள் கதைகள் என்று ஏதோவொன்று.
படிக்க ஏதுமில்லை என்றால் பழைய பத்திரிக்கைகள். காரணம் தினந்தோறும் காலையில் வரும் பத்திரிக்கைகளையும் ஒரு கை பார்த்து விடுவதுண்டு. //

நெருடல்... ஏன் நீங்கள் அவருக்கு இதை தாண்டி எந்த புத்தகத்தையும் தரவில்லை?

திண்டுக்கல் தனபாலன் said...

தெனாவெட்டு இல்லாமல் இருந்தால் எப்படி...? நம்மிடமிருந்து......!

"780 என்பதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்...!" இதெயெல்லாம் நாமும் கண்டுக்கவே கூடாது...

தருமி said...

நல்ல பிள்ளை .. நல்ல அப்பா .......
வளர்க.

ஸ்ரீராம். said...

இப்படிப் பட்ட குழந்தைகள் பெற்றோருக்குப் பெருமைதான். ஆசிரியரைச் சந்திக்கும் இந்த நடைமுறைகள் தமிழகம் முழுதும் பொது!

Amudhavan said...

\\அவ நினைச்சுருந்தா இன்னும் பத்து மார்க் கூட வாங்கியிருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி கண்டு கொள்ளவே மாட்டுறா? நாங்க சொல்லும் போது தலையாட்டுறா? அப்புறம் மறுபடியும் அவ போக்குல தான் போய்க்கிட்டு இருக்கா? என்றார்\\
அந்த ஆசிரியை எப்படி நினைக்கிறாரோ அந்த மாதிரியில்லாமல், மிகப்பிரமாதமாய் இந்தப் பெண் வரப்போகிறாள் என்பது பாவம் அந்த ஆசிரியைக்குத் தெரியவில்லை.

ராஜி said...

என்னதான் மார்க் மட்டுமே முக்கியமில்லன்னு புரிதல் இருந்தாலும், உங்க மக இம்புட்டு கம்மியா மார்க் வாங்கிருக்கான்னு அடுத்தவங்க கேக்கும்போது, கொஞ்சம் துணுக்குறதான் செய்யுது.

என் பெரிய மக்ள் மருத்துவராகனும்ன்னு படிச்சா. அவள் உடல்நிலை காரணமா அவ்வளவு மார்க் எடுக்க முடியலை. பொறியியல் கிடைச்சது. ஆன,அ வீட்டுக்கு ஒரு பொறியியல் படிச்சவங்க இருக்குறதால, விமான பணிப்பெண்ணுக்கு படிக்குறியா!?ன்னு கேட்டேன். படிப்பு புதுசாவும் இருக்கு. புது புது மனிதர்கள், இடங்கள், பழக்க வழக்கங்கள் தெரிஞ்சுக்கலாம்ன்னு அந்த கோர்ஸ் படிச்சு இன்னிக்கு லுஃப்தான்சாவுல ட்ரெய்னியா இருக்கா. 19 வயசுல சம்பாதிச்சுக்கிட்டே விமானத்துல பறக்குறான்னு கொஞ்சம் பெருமையா இருந்தாலும், என் அம்மா, அப்பாவுக்கு மத்தவங்க போல இவள் இஞ்சினியர் படிக்கலையேன்னு இப்பவும் சலிச்சுக்குறாங்க. அதை கேக்கும்போது மனசு கொஞ்சம் தள்ளாடதான் செய்யுது. நாம் மாறினாலும் சமூகம் மாற விடாது போல!!

ஜோதிஜி said...

வாசிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குத் தெரிந்து நடுத்தரவர்க்கத்தில் உள்ள ஒருவர் இதுபோன்ற துறையில் தங்கள் குழந்தைகளை கொண்டு வந்ததற்கே உங்களுக்கு தனியான பாராட்டுரை வழங்க வேண்டும். அவர் மேலும் உயரம் தொட வாழ்த்துகள்.

எங்கள் உறவுக்கூட்டத்தில் ஆறு பேர்கள் உங்கள் பெற்றோர் விரும்பும் இஞ்சினியர் படிப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் முடித்து விட்டு வீட்டில் காய்கறி வாங்கிக் கொடுக்க உதவிக்கொண்டிருக்கின்றார்.

ஜோதிஜி said...

நீங்கள் சொல்வதும் சரியென்றாலும் ஆசிரியைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த பாடத்திட்டத்தை (சிலபஸ்) முடிக்கவில்லையென்றால் அவர்களுக்கு நிர்வாகத்தால் கொடுக்கப்படும் அழுத்தத்தை அடுத்த பதிவுகளில் சொல்கின்றேன்.

ஜோதிஜி said...

உங்கள் அக்கறைக்கு நன்றி ராம். இந்தியா முழுக்க என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

நல்ல கணவன் என்ற பெயருக்குத் தான் இங்கே திண்டாட்டம்.

ஜோதிஜி said...

நீங்க சொன்னதும் உண்மைதான் தனபாலன்.

ஜோதிஜி said...

இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும். சூழ்நிலை, நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. விரிவாக எழுதுகின்றேன். அப்போது உங்கள் கருத்து தேவை.

ஜோதிஜி said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

வவ்வால் said...

காம்ரேட்,

# ஆசிரியர் சொல்வதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு, நீங்க சொல்வதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு.

பள்ளியில் வாங்கும் மதிப்பெண்களை விட பொது தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் கொஞ்சம் கம்மியாக போய்விடவே வாய்ப்பு அதிகம் எனவே பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேன்டும் எனில் பள்ளியில் உச்ச மதிப்பெண் வாங்க பழகி இருக்க வேன்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஏன் எனில் நான் படிக்கும் போதும் இதே கதை சொல்லி இருக்காங்க, 90 வாங்குற இன்னும் கொஞ்சம் கான்சென்ட்ரேட் பண்ணா 100 வாங்குவ எங்க சொல்ற பேச்சு கேட்கிறனு தான் திட்டுவாங்க, வாத்தியார் ஆசை எப்போதும் அப்படித்தான் இருக்கும், ஆனால் அவர் சொல்வதிலும் யதார்த்தம் இருக்கவே செய்தது ,பள்ளியில் வாங்கியதை விட பொதுத்தேர்வில் கம்மியாக வாங்கவே ,அதுக்கு தான் அப்போவே சொன்னேன் என்றார் , ஒரு மாணவன் அதிகம் மார்க் வாங்குவதால் ஆசிரியருக்கு என்ன பலன் , பேரு கிடைக்கலாம், ஆனால் மாணவனுக்கு தான் பலன்ன் கிடைக்கப்போகுது. ஏன் எனில் நம்ம கல்வி முறையில் அதிக மதிப்பெண்ணுக்கு தானே மரியாதை, எனவே நம்ம மாணவன் நல்லா மார்க் எடுத்து நல்ல படிப்பா படிக்கனும்னு ஆசிரியர்கள் ஆசைப்படுவது ,மாணவர்கள் நலன் சார்ந்தே.

நீங்க சொல்வதில் என்ன பாயிண்ட் என்றால், பொதுவாக அறிவு வளர்ந்தால் போதும் என்ற நோக்கில் சரியே,ஆனால் நீங்க எக்காலத்திலும் ஒரு மார்க்கில் மெடிக்கல் போச்சு 2 மார்க்கில் அண்ணா பல்கலை அட்மிஷன் போச்சுனு பொலம்பாத மனநிலையை வளர்த்துக்கனும், அப்படி இருப்பவர் எனில் நீங்க தான் சிறந்த அப்பா.

ஆனால் நிறைய பேரு அய்யோ ஒரு மார்க்கில் போச்சு,2 மார்க்கில் போச்சுனு சொல்லி பொலம்புவதையே நான் அதிகம் கேட்டுள்ளேன்.

சமீபத்தில் கூட 95% எடுத்த மாணவனை "ஒழுங்க படிக்கலை" அரசு பொறியியல் கல்லூரி இடம் 3 மார்க்கில் போயிடுச்சு, இப்போ செல்ஃப் ஃபைனான்சில் லட்சக்கணக்கில் என்ன கட்ட வச்சிட்டான்னு பொலம்பி தள்ளினார், +2 ல 95% மார்க் எடுத்தும் பையனுக்கு படிப்பு வரலனு சொல்லும் நிலை ஏன்? நம்ம ஊருல எல்லாத்துக்கும் போட்டி இருக்கு ,போட்டியில வென்றால் தான் வெற்றி, சும்மா ஒரு மார்க் கம்மினு சொல்லிப்பதால் எதுவும் கிடைச்சிடாது.

வருங்காலத்தில எதுக்கும் பொலம்ப மாட்டேனு நினைச்சால் உங்க வழி சரி, அப்படி இல்லைனா ஆசிரியர் சொல்வதை கேளுங்க :-))

# // சொந்தமாக எழுதும் போது மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படுவதை பார்த்துக் கொண்டேயிருப்பதாலும் உண்டான மன உளைச்சலை ஒரு நாள் சென்று கொட்டிய விளைவால் அந்த வருடம் சில ஆசிரியைகளின் தலைக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கியது. //

உண்மையில நீங்க எந்த நாட்டில இருக்கிங்கனே எனக்கு டவுட்டா இருக்கு அவ்வ்!

சொந்தமாக எழுத வேண்டும் என நீங்கள் நினைப்பதை நான் வரவேற்கிறேன்,ஆனால் நாட்டில் உள்ள பொது நடைமுறை என்னனு தெரியாம இருக்கிங்களோனும் நினைக்கிறேன் அவ்வ்!

பொதுத்தேர்வில் புத்தகத்தில் இருப்பதை எழுதினால் தான் மதிப்பெண் ,அதுவும் எப்படி மதிப்பெண் வழங்கணும் என்பதற்கு "valuation key" உண்டு ,அதுப்படி பதில் இருந்தால் தான் மார்க், இன்னும் சொல்லப்போனால் அட்சர சுத்தமாக அப்படியே எழுதி இருந்தாலும் , முழு மதிப்பெண் இல்லை, "எப்படி பிரெசென்ட் செய்யப்பட்டுள்ளது, அடித்தல்,திருத்தல், எழுத்துப்பிழைகள்,கையெழுத்து எனப்பார்த்து" அதுக்கும் மதிப்பெண் உண்டு. எனவே அதுக்கு தான் பள்ளியில் மாணவர்களை "தயாரிக்கிறார்கள்", சொந்தமாக எழுதினால் ஏன் மதிப்பெண் வழங்கலைனு பள்ளியில் போய் கேட்டுவிடலாம் ,பொதுத்தேர்வில் ஏன் மதிப்பெண் போடலைனு போய் கேட்க முடியுமா?

கடைசியாக எங்கே போய் மதிப்பெண் வாங்கினால் மதிப்போ ,அதுக்கு என்ன விதியோ அதுப்படி தான் பள்ளியில் நடத்துவார்கள், நடந்துக்கொள்வார்கள், உள்ளூரில் பெரிய மனுஷன் என்பதால் பள்ளியில் போய் சவுண்டு விடலாம், அதே போல பொதுத்தேர்வில் ஏன் மதிப்பெண் போடலைனு சவுண்டு விட்டு கேட்டால் கொமட்டுலவே குத்தி அனுப்பிடுவாங்க :-))

நீங்க இந்த கேள்விய கேட்கனும்னா பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திலவோ அல்லது மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரிடமோ கேட்கலாம், எக்மோரில் தான் இருக்கு,சென்ட்ரல் அல்லது எக்மோரில் இறங்கி, 17 டி ல ஏறி DPI bus stop டிக்கெட் வாங்கிக்கோங்க, நேராப்போய் சொல்லிட்டு வந்திடலாம் ,முகவரி Directorate of School Education DPI Complex, College Road, Chennai-600 006, Tamil Nadu, India. இல்லைனா கோட்டைக்கு போய் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்கலாம். அதை விட்டுப்புட்டு பாவப்பட்ட ஆசிரியர்களை மிரட்டி மார்க் போட சொல்லிட்டு இருக்காதிங்க, இதுல வேற அவங்க வேலைக்கு உலை வச்சிட்டேன்னு மகாப்பெருமை அவ்வ்!

Anonymous said...

வவ்வால்,
சூப்ப..ப...ப....ப.........
(அய்யய்யோ, நந்தவனம் இருக்கிறதை மறந்துட்டேன் - Mind Voice)
ச்சே. வாய் கொளறுது. சாப்டீங்களா வவ்வால்?

//எக்மோரில் தான் இருக்கு,சென்ட்ரல் அல்லது எக்மோரில் இறங்கி, 17 டி ல ஏறி DPI bus stop டிக்கெட் வாங்கிக்கோங்க, நேராப்போய் சொல்லிட்டு வந்திடலாம் ,முகவரி Directorate of School Education DPI Complex, College Road, Chennai-600 006, Tamil Nadu, India. //

எதுக்கு இவ்வளவு பெரிய அட்ரஸ் தல, WCC காலேஜ் பக்கம் னு சொன்னா ஜோதிஜி க்கு உடனே புரிஞ்சிர போகுது....ஹி...ஹி...ஹி

வவ்வால் said...

வேற்றுக்கிரகவாசி,

இங்கேயுமா அவ்வ்!

சும்மாவே நந்தவனம் "டான்ஸ் ஆடுவார்" இனிமே கேபரே டான்ஸே ஆடுவாரே அவ்வ்!

நாட்டுல உண்மையா பேசுறவங்க எல்லாம் பயந்துக்கிட்டு பேச வேண்டி இருக்கு ,ச்சும்மா ... வானவில்லே ,வண்ணமயிலே..வண்ணாரப்பேட்ட குயிலே... கோழி முட்டை தான் போடும் ஆனால் ஆம்லெட் போடுமா? சற்றே சிந்திப்பீர்னு! எதுனா எகனை ,மொகனையா பேசிட்டா போதும் ..அப்ளாஸ் அள்ளும் அவ்வ்!

நீரும் சூதனமா சோதிஜி வாழ்க ,புரட்சி ஓங்குகனு சொல்லி வச்சிடும்.இல்லைனா நந்தவனம் ... வாயில கத்தி விட்டு ஆட்டினாலும் ஆட்டுவார் அவ்வ்!

# //எதுக்கு இவ்வளவு பெரிய அட்ரஸ் தல, WCC காலேஜ் பக்கம் னு சொன்னா ஜோதிஜி க்கு உடனே புரிஞ்சிர போகுது....ஹி...ஹி...ஹி//

WCC காலேஜ் என சொன்னால் நம்ம போல இளவட்டத்துக்கு உடனே பிக்- அப் ஆகும் ,சோதிஜிக்குலாம் அப்படினா என்னானு தனியா ஒரு வெளக்கம் வேற கொடுக்கணும்ல,, அதான் அதிகாரப்பூர்வ முகவரிய சொல்லிவச்சிட்டோம், ஒரு வேளை ரிஜிஸ்டர் லெட்டர்ல கூட கம்ளையிண்ட் போடுவார்ல அதுக்கு ஒதவும் அவ்வ்!

”தளிர் சுரேஷ்” said...

இன்றைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் ஆகிவிட்டது! சொந்தமாக எழுதுபவைகளுக்கு மதிப்பெண் கிடைப்பதில்லை! இந்த கேள்விக்கு இந்த மாதிரி பதில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் இவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் என்று கைட் பண்ணப்படுகிறது! ஆசிரியர்களும் அவ்வாறே கற்பிக்கிறார்கள். அதே சமயத்தில் மதிப்பெண் என்று மாணவர்களை பிழிந்து எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை! ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கெபாசிட்டி உள்ளது. அவனது திறமைக்கு ஏற்ப அவனது மதிப்பெண் இருக்கும். ரொம்ப பிழிந்தால் வெறும் சக்கைதான் கிடைக்கும். நான் ஆசிரியன் அல்ல! ஆனால் என்னுடைய பன்னிரண்டு வருட டியுசன் அனுபவத்தினை வைத்து சொல்லுகிறேன்! வவ்வால் சொல்லியிருக்கும் விசயங்கள் ஏற்புடையது. மிக்க நன்றி!

ஜோதிஜி said...

இப்படி இருந்தால் இவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் என்று கைட் பண்ணப்படுகிறது! ஆசிரியர்களும் அவ்வாறே கற்பிக்கிறார்கள்.

வழிமொழிகின்றேன்.

ஜோதிஜி said...

ச்சே. வாய் கொளறுது. சாப்டீங்களா வவ்வால்?

அவர் எப்போதுமே ‘சாப்பிட்ட‘ பிறகு தானே விமர்சனமே எழுத ஆரம்பிக்கிற ரகசியம் உங்களுக்கு தெரியாதா நண்பா?

ஜோதிஜி said...

உள்ளூரில் பெரிய மனுஷன் என்பதால் பள்ளியில் போய் சவுண்டு விடலாம்

ஊரு ஒலகம் இப்படியுமா நம்புது?

அய்யா பதிவுலக சுடரொளியே நானே (ரூம் போட்டு(?) ) கஷ்டப்பட்டு குட்டியூண்டு பதிவா எழுதினா நீர் பாட்டுக்கு எதிர் பதிவு போல இம்மாம் பெரிசா நீட்டி முழங்கினா கடையை மூடிக்கிட்டு போயிட வேண்டியது தான்.

மாணவர்கள் வாழ்க்கையில் இரண்டு வகுப்புகள் தான் இங்கே முக்கியம். ஒன்று பத்தாம் வகுப்பு. மற்றொன்று பனிரெண்டு.

பத்தில் எடுக்கும் மதிப்பெண்கள் அடுத்து எந்த பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு மட்டுமே உதவும். இப்ப பாலிடெக்னிக் படிப்பு கூட செல்லாக்காசாக மாறி விட்டது. மற்றபடி பத்து ஒன்றும் நம் ஊரில் அப்பூட்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆனால் பனிரெண்டு தான் வாழ்க்கையை எந்த திசையை நோக்கி நகர்த்தப் போகின்றோம் என்பதை தீர்மானிக்க உதவும் வருடம்.

இதுல வர்ற அக்கா டிகிரி தான் படிக்கப் போறாங்களாம். அந்த மூன்று வருடம் முடித்தவுடன் தான் அவங்க மனசுல வைத்துள்ள கனவு நோக்கி நகர்வாராம். அவர் கனவென்பது இந்திய அளவில்போட்டி போட்டு ஜெயிக்கும் அளவுக்கு உடல் தகுதியும் மன வலிமையும் அறிவு கூர்மையும் இருக்க வேண்டியதாக இருப்பதால் அதற்கான ஆய்த்த ஏற்பாடுகளில் இப்பொழுதே இறங்கி விட்டார். நான் சும்மா வேடிக்கையாளன். மட்டுமே.

புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்.

வெளியில் இன்னமும் வராத செய்தி அடுத்த வருடம் முதல் பத்தாம் வகுப்பில் மதிப்பெண்கள் என்பதை நீக்கி கிரேடு என்பதை கொண்டு வரலாமா? என்று அரசாங்கத்திற்கு பரிந்துரை ஒன்று போயுள்ளதாம்.

இன்னும் ஏழு வருடங்களில் இன்னும் பல மாற்றங்கள் வரலாம். நிச்சயம் அறிவுக்கூர்மை இல்லாத குழந்தைகள் பின் தங்கிவிடுவதை தவிர்க்க இயலாது என்பதே நிதர்சனம்.

ஜோதிஜி said...

நீரும் சூதனமா சோதிஜி வாழ்க ,புரட்சி ஓங்குகனு சொல்லி வச்சிடும்.இல்லைனா நந்தவனம் ... வாயில கத்தி விட்டு ஆட்டினாலும் ஆட்டுவார் அவ்வ்!


நந்தவனம் நீங்க சொன்ன மாதிரி நம்மாளு வூடு கட்டி சவுண்ட் விடுவதில் உண்மையிலேயே கில்லாடி தான். சரியா கணித்துள்ளீர்கள். நன்றி.

phantom363 said...
This comment has been removed by the author.
phantom363 said...
This comment has been removed by the author.
phantom363 said...

I am simply amazed at the level of feedback admitted in your children's school. Is this a private or government school, if you don't mind.

It is good to know what's happening in Tiruppur. Best wishes for your children and their future.

Also, like the lady whose daughter is a Lufhtansa flight attendant trainee, it is good to look around for jobs other than engineering. There is a good career in merchant shipping, in which not too many Tamils are participating. Good companies from Hong Kong or Singapore hire these from bottoms up, starting from a High School certificate..and write exams/experience to move upto a Captain. Just one example of a great career,outside of Engineering.

வவ்வால் said...

காம்ரேட்,

என்ன செய்ய எனக்கு "சுருங்க சொல்லி விளங்க வைக்கும்" கலை தெரியலையேயேயே ஏ அவ்வ்!

# நானும் பத்தாம் வகுப்புனு சொல்லவில்லை, பொதுத்தேர்வு என சொல்லியுள்லேன், அதிலும் +2 வை மையமாக வைத்தே பேசியுள்ளேன்.

# மாணவர்களை திடீர்னு பொதுத்தேர்வு அன்னிக்கு "ஆன்சர் கீ" க்கு ஏத்தாப்போல தான் எழுதனும் சொந்தமா எழுதினா முழுமதிப்பெண்கள் எடுப்பது கடினம்னு சொல்லி நடைமுறையை மாத்திட முடியுமா?

எனவே ஒரு பொதுவான அனுகு முறையாக படிச்சு ,ஒப்பிச்சு, எழுத வச்சிடுறாங்க. இம்முறையை ஆதரிக்க வில்லை ஆனால் உச்ச மதிப்பெண் எடுக்க தேவை எனில் அதான் வழி என்பதை மறுக்கவும் இயலாது.

இதுல இன்னொரு முக்கியமான காரணம் என்னவெனில், "டைம் மேனேஜ்மென்ட்" சரியாக நேரத்தினை கையாளவில்லை எனில் நல்லா படிச்சிருந்தாலும் , எல்லா கேள்விகளும் எழுத முடியாம போயிடும், அதுக்குள்ளாம் ஏத்தாப்போல மாணவனை உருவாக்கனும் என்றால் இப்போ இருக்க ஒரே வழி , திரும்ப திரும்ப படிக்க வச்சு ,எழுத வச்சு ..."ஜெராக்ஸ் மெஷின்" ஆக மாறினாத்தான் உச்ச மதிப்பெண் எடுக்கவே முடியும் அவ்வ்!

பள்ளிக்கூட நிர்வாகம் அதிக மதிப்பெண் எடுக்க ஆசைப்படும் சூழலில்,பெற்றோர்களும் அதிகமதிப்பெண் எடுக்க ஆசைப்படும் சூழலில் , மனப்பாடமே கண்ணுக்கெட்டிய தீர்வாக அமைந்துவிடுகிறது.

எந்த பெற்றோராவது பாடத்தை புரிஞ்சுக்கிட்டு , ஜஸ்ட் பாசானா போதும்னு சொல்லுறாங்களா ,இல்லையே அவ்வ்!

எனவே இதுல பள்ளிக்கூட வாத்தியாரை மிரட்டுவதோ, இல்லை நிர்வாகத்திடம் போட்டுக்கொடுப்பதோ தீர்வாக அமையாது!

# கிரேட் முறை என்பதெல்லாம் ரொம்ப நாளா பரிசீலனையில் உள்ள ஒன்று.

சிபிஎஸ்.இ முறையில் 10 க்கு விருப்பப்பட்டால் பொது தேர்வு எழுதலாம் இல்லைனா, பள்ளி அளவில் தேர்வு எழுதி ,அங்கேயே பாஸ் போட்டுக்கலாம். கிரேட் முறை தான் அதிலும்.

# உங்க பசங்க நல்ல புத்திசாலியாக உருவாக வாழ்த்துக்கள்! நீங்க எதிர்ப்பார்ப்பை மேல சுமத்தாமல் இருந்தாலே போதும். எந்த நிலையிலும் இன்னும் கொஞ்சம் மார்க் எடுத்திருக்கலாமே ,எடுக்காம போயிட்டாங்கலேனு கவலைப்படாத மன பக்குவத்தினை உருவாக்கி கொள்ளுங்கள்.

அப்படி இல்லாமல் கூழுக்கும்,ஆசை மீசைக்கும் ஆசையா நல்ல புரிந்துக்கொண்டு ,அதே சமயம் 99.99 மார்க்கும் வாங்கிடனும்னு திணிக்கவும் ,அழுத்தம் தரவும் செய்யக்கூடாது, அவ்வ்!

# ஹி...ஹி தாய்த்தமிழ் பள்ளி என அடிக்கடி பிளஸ் விடுறது, பதிவு எழுதுறது எல்லாம் செய்வீங்க, ஆனால் உசாரா மெட்ரிக்கில் படிக்க வச்சிட்டு இருக்கிங்க? (மெட்ரிக் (அ) சிபி.எஸ்.இ (அ) ICSE , international "o" level எதுனு சரியா தெரியலை மன்னிச்சு)நான் கூட உங்க தமிழ் ஆர்வம் பார்த்து அடடா என்னமா ஃபீல் பண்ணி "தமிழ்வழிக்கல்வி"ப்பற்றி பேசுறார்னு நினைப்பதுண்டு!ஹி...ஹி உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் அவ்வ்!

அரசியலில் இறங்கினா ,மஞ்சத்துண்டு, மரம்வெட்டி டொக்டர எல்லாம் அசால்ட்டா ஓரங்கட்டிடலாம் அவ்வ்!

அது என்னமோ தெரியலை தாய்மொழியில் கற்றால் அறிவு வளரும்னு சொல்லுறப்பலரும் தங்கள் வாரிசுகளை கவனமா ஆங்கிலவழியிலேயே படிக்க வைக்கிறாங்க, இதன் மர்மம் என்ன?
(ஆங்கில வழி என கருதுவதால் இதனை சொல்கிறேன், தமிழ் வழி எனில் ,எனது கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்)

விடுதையாய் வாழ்க்கை விடை தருவார் யாரோ?

மானஸ்தர் நந்தவனம் இது போல யாராவது டகால்டி செய்தால் நல்லா நக்கலடிப்பாரே , எங்கே ஆளையே காணோம் அவ்வ்!

வவ்வால் said...

//இதுல வர்ற அக்கா டிகிரி தான் படிக்கப் போறாங்களாம். அந்த மூன்று வருடம் முடித்தவுடன் தான் அவங்க மனசுல வைத்துள்ள கனவு நோக்கி நகர்வாராம். அவர் கனவென்பது இந்திய அளவில்போட்டி போட்டு ஜெயிக்கும் அளவுக்கு உடல் தகுதியும் மன வலிமையும் அறிவு கூர்மையும் இருக்க வேண்டியதாக இருப்பதால் அதற்கான ஆய்த்த ஏற்பாடுகளில் இப்பொழுதே இறங்கி விட்டார். நான் சும்மா வேடிக்கையாளன். மட்டுமே.
//

இதுப்போல மதிப்பெண் ரேசில் கலந்துக்கொள்ளாமல் மாற்று வழியில் செல்ல முயற்சிப்பதை வரவேற்கிறேன்.வாழ்த்துக்கள்!

ஆனால் இதுல கவனிக்க வேண்டிய ஒன்றும் இருக்கு, சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் "நல்லா மனப்பாடம் " செய்ய தெரிந்தால் தான் வெற்றியடைய முடியும் அவ்வ்!

civil service chronilce போன்ற பத்திரிக்கைகள் வாங்கிப்படிச்சுப்பாருங்க ஒரு நுனி கிடைக்கும்.

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

அதவனம்,

ஹி...ஹி நீர் வெறும் முகமூடி மட்டுமே, நான் தான் முகமூடி பதிவன்!

அய்யோ நந்தவனம் என்ன கலாய்ச்சுட்டாரம் அவ்வ்!

# //ஜோதிஜி மாதிரி ஜாதகத்தையே வெளியிட்டுவிட்ட பதிவர்களுக்கு இந்த வசதி இல்லை.

தமிழ்வழிக் கல்வி என்பது அவரது ஆசையாக இருக்கலாம். நாம் ஆசைப்படுவது எல்லாமே செய்துவிட முடிகிறதா வாழ்வில்? அவரின் தமிழ்வழி போற்றும் பதிவு எதையும் படித்தாக நினைவில் இல்லை. //

நீர் தான்யா நெம்பர் ஒன் நியாஸ்தன் அவ்வ்!

http://deviyar-illam.blogspot.in/2013/07/blog-post_25.html

இது போல நிறைய எழுதி இருக்கார்.

ஆசைப்படுறத செய்ய முடியாமல் இருக்கலாம், ஆனால் ஏன் அடுத்தவனுக்கு வெற்று உபதேசம்?

நான் தமிழை ஆதரிக்கிறேன்,அதே சமயம் தமிழில் படிக்கணும் என கட்டாயப்படுத்தவும் மாட்டேன்.

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவு கொண்டு வரப்பட்டதை கடுமையாக எதிர்ப்பவர், ஏன் இப்படினு தான் கேட்டுள்ளேன்.

ஏழைகளுக்கும் நம்ம புள்ளைங்கள ஆங்கில வழியில் படிக்க வைக்கனும்னு ஆசை இருக்காதா? அவங்களால தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைக்க முடியாத சூழல் இருக்கு, அவங்களுக்கு அரசுப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி வழங்கப்பட்டால் உதவும் என்பதே எனது கருத்து.

நாம மூஞ்சி தெரியுதா தெரியலையா என்பது பிரச்சினையல்ல, மனசு அறிய நாம பின்ப்பற்றாததை அடுத்தவங்களை பின்ப்பற்றுனு சொல்லாமல் இருக்கலாமே.

நான் மதுவிலக்கு வேண்டும்னோ இல்லை நிறைய கடைங்க தொறக்கனும்னோ சொல்ல மாட்டேன் , எனக்கு வேண்டும்னா எப்படி வாங்கிக்கனும்னு தெரியும், எனவே அதுல நான் உபதேசமே செய்ய மாட்டேன் :-))

வவ்வால் said...

சுரேஷ்,

//வவ்வால் சொல்லியிருக்கும் விசயங்கள் ஏற்புடையது. மிக்க நன்றி!//

நன்றி!

கல்வி சம்பந்தப்பட்ட உரையாடல்களில் பெரும்பாலும் நான் சொல்வதன் யதார்த்தத்தை சரியா புரிஞ்சுக்கிட்டு பேசுவிங்க, எப்படினு இப்போ தான் தெரியுது ,12 வருடமா டியுஷன் எடுப்பதால் தானா,அதுவும் கல்வி சேவை தான்,பெயிலாக வாய்ப்புள்ளவர்களுக்கு தேர்வாக உதவுமே.

நம்ம ஊருல கல்வியில் மாற்றம் வர வேன்டும் எனில் கொள்கை அளவில் பெரிய மாற்றம் செய்யனும், அரசியல்வாதிகள் விட மாட்டாங்க, நம்ம மக்களும் "உணர்ச்சி வசப்பட்டு" மொழி என சொல்லி சண்டைக்கு நிப்பாங்க.

இந்தி திணிப்பு என சொல்லி நவயோதயா பள்ளிகளை கூட புறக்கணிச்ச கூட்டம் தானே அவ்வ்.

என்னைப்பொறுத்தவரையில் மொழிப்பற்று இருக்கலாம்,ஆனால் மொழி வெறியும், கண்மூடித்தனமான எதிர்ப்பும் தேவையில்லை.

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனமே,

//அதை தமிழில் வாந்தி எடுத்துவிட்டு என்னமோ பத்திர பதிவர் மாதிரி! பீத்தறதுல உங்களை விட்ட தமிழ் இணையத்தில ஆளே இல்லை ஓய்//

சும்மா சூடு தூக்கிடுச்சு போல,பிபி எகிறி இருக்கும் :-))

டெங்க்சன் உச்சம் போல பின்னூட்டம் போட்டு டெலிட் செய்துனு குழம்பி தவிக்கீர் :-))

எனக்கு ஒரு சின்ன சதேகம் சாமி, நீர் எதுக்கு இத்தினி நாளா அந்த வாந்திய வழிச்சு தின்னுக்கிட்டு இருந்தீர் அவ்வ்!

#// பதிவன்னு சொல்லிக்கொள்ளவதில் எனக்கு ஆசையில்லை!//

இப்படிலாம் சொல்லிட்டா எப்பூடி...ஏன் ஆசைப்பட்டுத்தான் பார்க்கிறது அவ்வ்!

# மானஸ்தரே " அவரின் தமிழ்வழி போற்றும் பதிவு எதையும் படித்தாக நினைவில் இல்லை. "னு நழுவலா சொன்னீர் சுட்டிக்கொடுத்திட்டேன் ,இப்போ அதுக்கு என்னய்யா சொல்லுறீர்,அதைச்சொல்லும்!

# அப்புறம் நான் ஏதோ உம்மை வம்பிழுத்தேன்னு சொன்னீர் ,எங்கே உம்ம பதிவில் வந்து வம்பிழுத்தனா? நீரா வந்து வாயக்கொடுத்து **** புண்ணாக்கிட்டு இப்போ அய்யோ அம்மா வலிகுதேனு சொன்னால் எப்பூடி?

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

வவ்வால் நான் பேச வேண்டியதை நந்தவனம் இந்த உரையாடலில் பல இடங்களில் சொல்லிவிட்டார். அவருக்குத்தான் என் நன்றி.

தாய்த்தமிழ்கல்வி என்ற பள்ளிக்கூடம் அறிமுகமாகி ஒரு வருடம் தான் ஆகின்றது. எனக்கு அதுக்கு முன்னால் இது போன்ற பள்ளிக்கூடங்கள் இங்கே இருப்பதே தெரியாது. மேலும் இங்கே ஐந்தாம் வகுப்பு வரை தான் உள்ளது.

பதிவில் ஏதோவொரு இடத்தில் குழந்தைகள் தமிழில் எழுதிய பாடங்களை அவர்களின் எழுத்து நேர்த்தியை வெளியிடுகின்றேன். அப்புறம் தெரியும் எங்கள் மொழிப்பற்றும் மற்றும் ஆர்வத்தை.

நீங்க என்றைக்கு உங்களை முழுமையாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் இப்படியே ஒளிந்து திரிந்து கொண்டேயிருக்கும் வரைக்கும் அடுத்தவர் எவரையும் சுட்டிக்காட்டக்கூட எந்த வித உரிமையும் இல்லை. ஆனால் நீங்களும் விடாது என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு அடுச்சு விளையாடிக்கிட்டே தான் இருக்கீங்க.

எனக்குத் தெரிந்து நந்நவனம் கூட உங்களோட உரையாடும் போது கொஞ்சம் மைன்ட்ல வச்சுக்கிட்டு அடக்கிவாசிக்கிறாறுன்னு தான் நினைக்கின்றேன். நீங்க பயன்படுத்துற வார்த்தைகள் மாதிரிஅவரும் நேரிடையான தாக்குதலில் இறங்கக்கூடாது என்பதற்காகவே நாகரிகத்தை கடைபிடிக்கின்றார்.

தமிழ்மொழி குறித்து நீங்க சுட்டிக்காட்டிய சுட்டி நான் எழுத வில்லை. அது அய்யா பழ நெடுமாறன் எழுதியது. எல்லோரும் தமிழ்வழிக்கல்வியில் போய் படிங்க என்று கூவுவது என் நோக்கமல்ல. மொழி ஆர்வமும் அக்கறையும் உள்ளே இருக்க வேண்டும் என்பதே. அப்பா அம்மா போல நம் தாய் மொழியும் கடைசி வரைக்கும் முக்கியமானதே என்பதே என் கொள்கை.

மற்றபடி அந்த பள்ளிக்கு நிதிதிரட்டுவதன் பொருட்டேன் என் பங்குக்கு என்னால் ஆன முயற்சிகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். உங்கள் வார்த்தைகளில் உள்ள காழ்ப்புணர்ச்சியில் இருந்தே நம் இருவரின் தரமும் வாசிப்பவர்களுக்குப் புரியும்.

தானம் கொடுக்க விரும்புவர்களும், தானம் கொடுக்க வைக்க எழுதுபவர்களின் வார்த்தைகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நிதானம் இருக்கும். அது உங்களைப் போன்ற ஆட்களிடம் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பல்ல.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

ஜோதிஜி said...

அண்ணே நீங்க நல்லவரு! (யோவ் யாருய்யா அது சிரிக்கறது!) ஜோதிஜி உங்க அளவுக்கு இல்லை! போதுமா?


இது ச்சும்மா ஒரு ஞாபகத்திற்கு இங்கே பாட்டு வச்சுருக்கேன், அது யாருப்பா கும்பலா சிரிக்கிறது.

சரி சரி விடுங்கப்பா. அண்ணே எப்போதும் இப்படியல்ல.

ஜோதிஜி said...

என்னைப்பொறுத்தவரையில் மொழிப்பற்று இருக்கலாம்,ஆனால் மொழி வெறியும், கண்மூடித்தனமான எதிர்ப்பும் தேவையில்லை.


ஆகவே மகா ஜனங்களே இன்றைக்கு நாம் இந்த கருத்தை படுச்சு புரிய காரணமாக இருந்த புலிட்சர் விருது பெற தயாராக உள்ள அண்ணன் வவ்வவ்வவ்வால் அவர்களின் சபதம் ஏற்று செய்ல்படும்வோம் என்று இந்த நாளில் உறுதியேற்போம்.

நாம மூஞ்சி தெரியுதா தெரியலையா என்பது பிரச்சினையல்ல, மனசு அறிய நாம பின்ப்பற்றாததை அடுத்தவங்களை பின்ப்பற்றுனு சொல்லாமல் இருக்கலாமே.

இது போன்ற அறிய பல கருத்துக்களை எழுதியுள்ளதைப் பார்த்து நமது தொல்பொருள் ஆர்ய்ச்சித்துறை எந்த காலத்திற்கு முற்பட்ட அறிஞரின் கருத்து என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.ஜோதிஜி said...

Blogger ; "Term used to describe anyone with enough time or narcissism to document every tedious bit of minutia filling their uneventful lives. Possibly the most annoying thing about bloggers is the sense of self-importance they get after even the most modest of publicity. Sometimes it takes as little as a referral on a more popular blogger's website to set the lesser blogger's ego into orbit.

,
,
,
,
,
,
,
,,


ego

நந்தவனம் இது தான் மேட்டரு.

வவ்வால் said...

காம்ரேட்,

நான் தாய்த்தமிழ் பள்ளியில் ஏன் சேர்க்கலைனே கேட்கலை, தமிழ் வழியில் சேர்க்கலையேனு தான் கேட்டேன், திருப்பூரில் தமிழ்வழிக்கல்வி நிலையங்களே இல்லை போல அவ்வ்!

# அது எப்படி வசதியாக மறந்து/மறைச்சிடுறிங்க, அரசுப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தமிழை அழிக்கும்னு பதிவு போட்டீங்க அவ்வ்! உங்க பதிவுல நீங்களே தேடிப்படிங்க.

மேலும் ஆங்கிலத்தை ஒரு மொழியாக படிக்கலாம்,ஆனால் கற்றல் தாய்மொழில இருக்கனும்னுலாம் சொன்னிங்க.

உங்களுக்கோ ,பிள்ளைகளுக்கோ தமிழ் ஆர்வம் இல்லைனு சொல்லவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு சொல்லும் போது "தமிழில் படியுங்கள்" என சொல்பவர்கள் தங்கள் பிள்ளைகளை மறக்காமல் ஆங்கில வழியில் சேர்க்கிறார்கலே என்று தான் கேட்டேன், அது உங்களுக்கான கேள்வி மட்டுமல்ல, அனைத்து "கொள்கை' போராளிகளுக்குமானது.

பதிவுலகில் நீங்க இருப்பதால் கேட்க முடிந்தது.

#//நீங்க என்றைக்கு உங்களை முழுமையாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் இப்படியே ஒளிந்து திரிந்து கொண்டேயிருக்கும் வரைக்கும் அடுத்தவர் எவரையும் சுட்டிக்காட்டக்கூட எந்த வித உரிமையும் இல்லை?/

ஆக மொத்தம் எனது கருத்தினை எதிர்க்கொள்ள வலுவான காரனங்களே இல்லாமல் போனதால், சொத்தையாக முகம்ம் தெரியலைனு பழய பல்லவிய ஆரம்பிச்சுட்டிங்க :-))

வினவு என்பது முகம் தெரியாத முகமூடிகளின் கூடாரம்,அங்கே போய் நீங்களும் முகத்தை மறைச்சுக்கிட்டு "போராளியா" கட்டுரை எழுதும் போது இப்படி முகமூடியா சமூகத்தை பார்த்து கேள்விக்கேட்கிறோமே உரிமை இருக்கானு யோசித்து இருக்கலாம் :-))

இப்போ நந்தவனம் கூட முகமூடி தான் ஆனால் உங்களுக்கு முட்டுக்கொடுப்பவர் என்பதால் முகம் தெரியலையேனு கவலை இல்லை :-))

நந்தவனத்தின் நாகரீகம் என சொல்வதில் இருந்தே உங்களின் ஒருபக்க சார்பும் வெளியாகிறது அவ்வ்!

எனவே என் முகம் தெரியலையேனு கேட்கும் உரிமையும் உங்களுக்கும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் ஒரு பாரதியார் படம் மட்டுமே போட்டுக்கிட்டு முகமூடியாக நீங்க எழுதினப்போலாம் இப்படி நீங்க கேள்விக்கேட்டிருக்கலாம் :-))

#//தமிழ்மொழி குறித்து நீங்க சுட்டிக்காட்டிய சுட்டி நான் எழுத வில்லை. அது அய்யா பழ நெடுமாறன் எழுதியது. எல்லோரும் தமிழ்வழிக்கல்வியில் போய் படிங்க என்று கூவுவது என் நோக்கமல்ல.//

அத ஒருப்பதிவு மட்டுமா இன்னும் பல எழுதி இருக்கீங்க,அப்போ அதெல்லாம் கூட வேற யாரோ எழுதினதா?

யார் எழுதினாலும் அதை எடுத்து பகிர்வதன் பொருள் அதில் உடன்ப்பாடு இருப்பதாகவே அர்த்தம்.

# சந்தர்ப வாதிகளிடமும் நிறைய நிதானம் இருக்கும், ஆனால் மனசாட்சிலாம் இருக்காது, அதனை உங்களைப்போன்ற ஆட்களிடம் இருக்க வேண்டும் என்பதும் எனது எதிர்ப்பார்ப்பல்ல!

# விக்கிப்பீடியாவில் இருக்கு என சொல்லும் போதே உங்களின் காழ்ப்புணர்ச்சியும் ,இயலாமையும் தான் வெளிப்பட்டது :-))

ஏதோ என்னால் ஆன வரையில் ஆங்கிலத்தில் சிக்கலாக இருப்பதை அனைவரும் எளிய தமிழில் அறிந்துக்கொள்ளட்டும் என திரட்டியளிக்கிறேன், இம்முயற்சியின் பலம் என்ன என்பது உணர்ச்சிகர அரசியல் கோஷங்கள் எழுப்புவோர்க்கு புரிய வாய்ப்பில்லை.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; "

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லையே!

வவ்வால் said...

நந்தவனம்,

//அவனவன் குளிரு தாங்கமா தவிக்கான்//
//வெள்ளைக்காரன் திறமையே திறமை//

ஹி...ஹி அப்படியா சங்கதி அவ்வ்!

அதான் அடிக்கடி வாந்தி எடுக்கீரா அவ்வ்! டெங்க்சன்ல ஃபியூசா போயிடப்போறீர் ...கண்ட்ரோல் யுர் செல்ஃப் :-))

# எத்தனையோ பதிவுப்போட்டப்போலாம் நீர் இப்படி பொங்கலை, மோன்சான்டோவை விமர்சித்து பதிவு போட்டதும் வழக்கத்த விட அதிகமாக பொங்கினீர், சரி ஏதேனும் தொழிலுட்ப ஆர்வமாக இருக்கலாம்னு நினைச்சேன்,ஆனால் மோன்சான்டோவால தான் உம்ம பொழப்போ ஓடுதோனு இப்போ டவுட்டா இருக்கு,என்ன இருந்தாலும் சம்பளம் கொடுக்கிற மொதலாளிய விமர்சித்தா மனசு பொறுக்குமா அவ்வ்!

அன்னிய மோகம்,விசுவாசம் இருக்க வேண்டியது தான் ஆனால் சொந்த நாட்டுக்கு பிரச்சினை என்னும் போதும் அன்னிய சக்திகளுக்கு காவடி தூக்க எல்லாம் சயிண்டிஸ்ட்டா இருக்கனுமா அவ்வ்!

எனக்கு தெரிஞ்சு நான் சயிண்டீஸ்ட் ..சயிண்டீஸ்ட்னு தானா சொல்லிக்கிட்டு இணையத்தில அலையுறது நீர் மட்டும் தான், பார்த்து இப்படியே போச்சுனா அமெரிக்க சனாதிபதினு ஒரு நாள் சொல்லிக்கிட்டு திரிய ஆரம்பிச்சிடுவீர் :-))

ஹே வர்ரட்டா!

ஜோதிஜி said...

வினவு என்பது முகம் தெரியாத முகமூடிகளின் கூடாரம்,அங்கே போய் நீங்களும் முகத்தை மறைச்சுக்கிட்டு "போராளியா" கட்டுரை எழுதும் போது இப்படி முகமூடியா சமூகத்தை பார்த்து கேள்விக்கேட்கிறோமே உரிமை இருக்கானு யோசித்து இருக்கலாம் :-))

அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்போதும் போல ஒப்பேற்றிக் கொண்டே இருந்தால் இப்படித்தான் ஒப்பாறி போல நீங்க புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். தவறில்லை. இந்த புனிதப்பிணியை தொடரவும்.


# சந்தர்ப வாதிகளிடமும் நிறைய நிதானம் இருக்கும், ஆனால் மனசாட்சிலாம் இருக்காது, அதனை உங்களைப்போன்ற ஆட்களிடம் இருக்க வேண்டும் என்பதும் எனது எதிர்ப்பார்ப்பல்ல!

நந்தவனம் சொல்லும் உங்களின் தனி மனித தாக்குதல்கள் தொடங்கி விட்டது. எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமல்ல. உங்கள் பாணி அலாதியானது. அவசரம் இல்லாமல் இன்னமும் செயல்பட வாழ்த்துகள்.

இப்போ நந்தவனம் கூட முகமூடி தான் ஆனால் உங்களுக்கு முட்டுக்கொடுப்பவர் என்பதால் முகம் தெரியலையேனு கவலை இல்லை :-))

உச்சகட்ட டென்சன் ஆகியீட்டீங்கன்னு நினைக்கின்றேன். உங்க புனிதப்பணியைப் பார்த்து பலரும் இந்த பதிவுக்கு விமர்சனத்தை மின் அஞ்சல் வழியாக அனுப்பிட்டாங்க. இது தான் உங்கள் மூலம் கிடைத்த சிறப்பு. பின்னூட்ட பெட்டியை ஏன் பலரும் திறந்து வைப்பதில்லை என்பதற்கான எண்ண ஓட்டமும் இது போன்ற காழ்ப்புணர்ச்சி யை வைத்து விமர்சிப்பவர்களை வைத்தே யோசிக்க முடிகின்றது.

வாவ்வால் நீங்க எழுதுற அனைத்துக்கும் நான் பதில் கொடுப்பதற்கான காரணம் வெறும் எழுத்தோடு என் பயணம் நின்று விடுவதில்லை. தாய்த்தமிழ்ப்பள்ளி தங்கராசு அவர்களிடமும், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கைபேசி எண் இணையத்தில் இருக்கின்றது. அழைத்து கேட்டுப்பாருங்கள்.

யாரு சந்தர்ப்பவாதி, யாரு சங்கடங்களை மட்டும் உருவாக்குற வாதி என்பது புரியும். சரி சரி. உங்களுக்கு என்ன தெரியுமோ? அது உங்க வாழ்க்கை. எனக்கு என்ன முடியுமோ அது என் வாழ்க்கை. இதுல ஒன்னும் தப்பில்ல.

தொடர வாழ்த்துகள்.


? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

காம்ரேட்,

ஹி...ஹி செம கடுப்பில ஒப்பாறி,கிப்பாறினு சொல்லிட்டு என்னமா சமாளிக்கிறீங்க, :-))

வழக்கமாக என்னை தனிநபர் தாக்குதல் நடத்துபவர்கள் வசதியாக அவர்கள் தனிநபர் தாக்குதல் நடத்துவதை மறந்து விடுவார்கள் :-))

என்னை கலாய்ப்பதாகவோ என்னவோ நினைச்சு பதிவு போடும்போதெல்லாம் உங்க "தனிநபர் தாக்குதல்" பற்றிய விழிப்புணர்வு தூங்கிடுச்சா அவ்வ்!

வழக்கமாக நீங்கள் புனைவாக எழுதுவதில் உள்ள தகவல் பிழைகளை நான் சுட்டிக்காட்டிவிடுவதால் வெளியில் சொல்லிக்க முடியாத எறிச்சலில் நீங்கல் தவித்து வந்தீர்கள் போல,இப்போ மொத்தமா வெளியாகுது, வெளிப்படுறது நல்லது தான் ,அழுத்தி வச்சிருந்தா உடம்புக்கு ஆகாதாம் அவ்வ்!

# தமிழ்மணம் சார்ந்து இயங்குபவர்கள் ஒரு 300க்கு மேல இருக்க மாட்டாங்க, அவங்களில் சிலர் ஒரு கருத்தினை கொண்டுள்ளாதால் நமக்கு ஒன்னும் பொழுதே விடியாமல் போயிடாது,சூரியன் அதுப்பாட்டுக்கு உதிச்சுக்கிட்டு தான்ன் இருக்கப்போவுது :-))

மெயிலில் மட்டுமில்ல கொரியர்ல கூட அனுப்பினாலும் அனுப்புவாங்க வாங்கி வச்சுக்கோங்க அவ்வ்!

# மற்றவர்கள் முகதாட்சண்யம் எனக்கருதி சொல்லாமல் விடுவதால்.,நாம செய்வதெல்லாம் சரினு நம்ப ஆரம்பிச்சு இப்போ நாம செய்றதெல்லாம் சரினு ஒரு "மனப்பிரமைல" சிக்கிட்டு இருக்கீங்க, மேலூம் உங்க கூற்றுகளில் எல்லாம் எப்பவுமே நான் அதனை குறிப்பிட்டேன் நாலுப்பேருக்கு தெரிந்தது என "self- centred" ஆக பேசிக்கொண்டு பெருமை அடையும் போக்கே அதிகம் இருக்கு.

இப்போ யாரு ஞானலாய, தாய்த்தமிழ்ப்பள்ளி பற்றி குறை சொன்னா? தம்மிழ் வழியில ஏன் படிக்க வைக்கலையானு கேட்டதுக்கு அப்படியே திசை திருப்பி விடுறிங்களே?

நீங்க பெரிய சமூக சேவகர் ,கண்டிப்பா நோபல் சமாதானப்பரிசு உங்களுக்கு தாண்ணே (ச்சு ..ச்சூ யாரும் பொறாமையா அப்படிப்பார்க்கப்படாது)

# வினவு பற்றி இம்புட்டு பெருமையா உங்களுக்கு அவ்வ்.

என்னவோ வினவு ஆரம்பிச்ச காலத்தில இருந்தே கூட இருந்து பார்த்தாப்போல ,நாம எல்லாம் அவங்கள எல்லாம் எப்போவோ நேராவே போய்ப்பார்த்தாச்சு, எல்லீஸ் ரோட் சந்துல அவங்க என்ன செய்வாங்கனு விசாரிச்சு வையுங்க :-))

நான் எதுனா சொன்னா உங்களுக்கு ஆகாது, அண்ணன் உண்மை தமிழன் வினவு குறித்து எழுதியதை படிச்சு தெளிவடையுங்கள்,

http://www.truetamilan.com/2010/06/blog-post.html

http://www.truetamilan.com/2010/06/blog-post_7821.html

இது போல வினவை கழுவி ஊற்றியவர்கள் பதிவுலகிலேயே நிறையப்பேரு இருக்காங்க,அதெல்லாம் நீங்க படிச்சி இருக்க மாட்டிங்க, ஏன்னா அவங்கலாம் உங்க அளவுக்கு "சமூக சேவகர்களா" இருந்திருக்க மாட்டாங்க அவ்வ்!

வவ்வால் said...

நந்தவனம்,

இன்னும் இங்கன தான் சுத்திட்டு இருக்கீரா, கொஞ்சம் மப்பா இருக்கும் போது "தொட்டுக்க ஊறுகாய்" தேவைப்படும் அப்போ உம்மை இழுத்துக்கிறேன்,அது வரைக்கும் ஓரமா குந்தியிரு ராசா!

அது சரி சயிண்டீஸ்ட்னு சொன்னப்பிறகும் உம்மை யாரும் சீனியஸ்னு கூப்பிடலைனு உமக்கு கொள்ள வருத்தம் போல யாரு கூப்பிடலைனா என்ன நான் கூப்பிடுறன் ராசா.... நீர் சீனியசே தான் ,அடுத்த ஆஸ்கார் அவார்டும் உமக்கே !!!

ஜோதிஜி said...

நந்தவனம்

உரையாடல் போதும்.

நண்பர் ஒருவர் எழுதியிருக்கின்றார். சாக்கடை விவாதத்தை நீங்க தான் மாற்றுக் கருத்தை வரவேற்க வேண்டும் என்கிற ரீதியில் பின்னூட்டத்தை சகதி போல மாற்றிவீட்டீங்க என்று பெரிய கடிதத்தை எழுதியுள்ளார்.
ஆனால் நீங்க சொன்ன மாதிரி வவ்வால் போன்றவர்கள் தனக்குத் தானே நிகர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்திருப்பதும், அதுவே அவர் சரியென்று நம்பிக்கொண்டிருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பங்கள். நாம் அது குறித்து ஒன்றும் சொல்லத் தேவையில்லை.
ஆனால் தனி நபர் தாக்குதல்களில் இறங்கும் போது பயந்து பின்வாங்கி விடுவார்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தில் இருப்பதால் இந்த நீண்ட பின்னூட்டம். அவர் மீண்டும் குதியாட்டம் போட்டாலும் அவருக்கு என் தளத்தில் நான் கொடுக்கும் கடைசி பதிலும் இதுவே. தொடர்ந்து நேரம் இருக்கும் போது எழுதிக் கொண்டேதான் இருப்பேன். அவர் பின்னூட்டமிட்டாலும் என்னைப் பொறுத்தவரையிலும் அவர் எனக்கு வேடிக்கையாளன் மட்டுமே. ஆனால் பின்னூட்ட பெட்டியை மூடும் எண்ணமில்லை.
மன உளைச்சல் காரணமாகவோ அல்லது பயத்தினாலோ அல்ல. ஒரு சிலரின் தகுதிகள் என்பதை சில சமயத்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இவரின் உண்மையான தகுதிகள் என்னவென்று இந்த கட்டுரைக்கு அவர் கொடுத்த பின்னூட்டங்களே உணர்த்தியது. கடைசி வரைக்கும் கட்டுரை குறித்து அது சார்ந்த விவாதங்களை முன்னெடுக்காமல் தன்னை எப்போதும் போது முன்னெடுப்பதில் தான் கவனமாக இருக்கின்றார். நான் ஒவ்வொரு முறையும் இவரை கவனித்து வந்த போதிலும் இது அவரவர் பாணி என்பதாக எடுத்துக் கொண்டேன்.
வவ்வால் என் மேல் தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சில.

ஜோதிஜி said...

1. கட்டுரையின் வடிவத்தில் என் விருப்பம் போல மாற்றி முடித்து விடுவது. உண்மையைப் பற்றி பேசாமல் நகர்வது அல்லது உண்மையைச் சொல்லாமல் முடிப்பது. இது அவர் விமர்சனமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். காரணம் அவரவருக்கு ஒரு பாணி. நம் பாணியில் எழுதும் போது இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் மரபணு மாற்ற கட்டுரைகள் குறித்து கேட்ட போது நான் ஒரு மாதமாக இணையம் பக்கம் வரவில்லை என்று சொன்னார். நானும் இது அவர் பாணியில் உள்ள பதில் என்று எடுத்துக் கொண்டேன். உடனே எப்போதும் போல அவர் பாணியில் ஓகோ நாங்க புகழவில்லை என்று வருத்தமா? என்று உட்டாலக்கடி வேலையாக மாற்றினார். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்? மொத்தமாக குட்டுவதும், கும்மி தட்டி அதன் மூலம் நான் தான் புத்திசாலி என்பதுமான அவர் பாணியாக இருப்பதால் நாம் தான் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டேன். வவ்வால் உங்களின் உலக மகா புத்திசாலிதனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நான் உங்கள் அளவுக்கு அம்பூட்டு ஒர்த் இல்ல.

2. தமிழ்மொழிக் கொள்கையில் நான் இரட்டை வேடம் போடுகின்றேன். அவர் பாணியில் நான் அக்மார்க் சுயநலவாதி. என் குழந்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் படித்து வாழ்வில் உயர ஆசைப்படுகின்றேன். சராசரி குழந்தைகள் அத்தனைக்கும் இந்த ஆங்கிலம் போய்விடக்கூடாது என்பதற்காக அரசு கொண்டு வந்த திட்டத்தை எதிர்க்கின்றேன்.
(தொடர் பதிவில் இது குறித்த சில விபரங்களை எழுத மனதில் வைத்திருந்தாலும் பதிவில் பொது விசயங்களை அனுபவங்களைச் சேர்த்து எழுதும் பாணியை நான் கடைபிடிப்பதால் இங்கே நான் நினைக்கும் சில விசயங்களை எழுதி வைத்து விடுகின்றேன்.)

ஜோதிஜி said...

சில கேள்விகள் இங்கே எழுப்ப வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுபள்ளிகளை திட்டமிட்டு புறக்கணித்து அது எந்த வகையிலும் மேலே வந்து விடக்கூடாது என்று கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொருவரும் மாறி மாறி செய்த அக்கிரமத்தால் இன்று அந்த பள்ளிகள் அனைத்தும் பாவப்பட்ட பரிசோதனைக்கூடங்கள் போல மாறியுள்ளது. இதற்கு மற்றொரு சப்பைக்கட்டு வேறு சொல்கின்றார்கள். மக்களின் மனோபாவம் மாறிவிட்டது என்று. இது பாதி உண்மை. பாதி பொய். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பலரும் தனியார் பள்ளிக்கூடங்களில் பணம் கட்ட முன்பணம் வந்து கேட்டு பலரும் கண்ணீர் விட்டு அழும் போது அரசுப்பள்ளிகளில் ஏன் சேர்க்க வில்லை என்றால் பிள்ளைங்க உயிரோடு இருப்பது முக்கியமில்லையா என்று இங்குள்ள ஒவ்வொரு பள்ளியில் கட்டிடத்தைப் பற்றி தெளிவாக சொல்கின்றார்கள்.
பல இடங்களில் நானே பார்த்துக் கொண்டிருப்பது தான். இங்கு உருப்படியாக இருக்கும் ஜெவாபாய் பள்ளியைக்கூட ஒரு புண்ணியவான் தன் ஆங்கில பள்ளிக்கு இடம் வேண்டும் என்று அங்குள்ள இடத்தை ஆக்கிரமித்து அது வளர்ந்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
நான் குழந்தைகளை தொடக்கத்தில் அரசுபள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்தது அடிப்படை அறிவு நம் தாய் மொழியில் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இன்று வரையிலும் இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. குழந்தைகள் ஆங்கிலப் பள்ளியில் படித்த போதும் கூட இன்று அவர்கள் தமிழ்வழிக்கல்வி ரீதியான நிலையில் தான் அவர்கள் வாழ்கின்றார்கள். வளர்கின்றார்கள்.

ஜோதிஜி said...


ஒருவர் முழுமையாக முழுமையாக நான் எதிர்பார்த்த அளவுக்கு தேறி விட்டார். மற்றொருவர் பாதி அளவுக்கு மாறியுள்ளார். இன்னோருவர் இயல்பே அப்படித்தான். இது தான் என் விருப்பமும் சாதனையும்.
என் குழந்தைகளின் எதிர்கால கனவை விட அவர்களின் இயல்பான வாழ்க்கை தான் முக்கியம். கனவுகள் மாறலாம். நிறைவேறாமல் போகலாம். ஆனால் அவர்களின் சமூக வாழ்க்கை முக்கியம்.
அவர்களின் எதிர்காலத்தில் வாழப்போகும் சமூக வாழ்க்கைக்கு தமிழ் மொழியே முக்கியம். அவர்கள் விரும்பும் லட்சியத்தை அடைய உழைப்பது, அதற்காக நான் அவர்களுக்கு உதவியாக இருப்பது என்பது போல மாற்றங்கள் உருவாகலாம். நடக்காமலும் போகலாம். எதிர்காலத்தில் அவர்கள் என் மகள்கள் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புவதும், அவர்களை இவரின் மகள் என்று சொல்வதும் பிற்போக்குத் தனமாக இருந்தாலும் அதைத்தான் நானும் விரும்புகின்றேன். காலம் மாற்றலாம். காலமாற்றத்தில் அவர்கள் மாறக்கூடும். ஆனால் அடிப்படையில் என் எண்ணம் அதுவே.
இன்று வரையிலும் எந்த அரசும் அரசு பள்ளியின் கட்டிடங்கள் குறித்தோ நிறைவேற்றப்படாமல் இருக்கும் அதன் கட்டுமாணம் குறித்து கண்டு கொள்ளவில்லை. அடிப்படை வசதிகளே இல்லாத பள்ளியில் எந்த சராசரி பெற்றோர்களும் சேர்க்க விரும்பாமல் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கம் நகர்கின்றார்கள். ஆங்கிலத்தை அரசு பள்ளியில் கொண்டு வர நினைக்கும் அரசு ஏன் அரசு பள்ளிக்கூடங்களில் சரியான கட்டிடங்கள், தேவையான ஆசிரியர்கள், சுகாதாரமான செயல்பாடுகளை உருவாக்க மறுக்கின்றது.
வவ்வால் குடும்பத்திலும் ஆசிரியர் தொழிலில் இருந்தவர்கள் என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். எங்கள் குடும்பத்திலும் ஆசிரியர் தொழிலில் இருக்கின்றார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிக்கூடங்கள் செயல்பாடுகள், இது போன்ற சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளி என்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன். ஆனால் எல்லா பள்ளியிலும் உள்ள பொதுவான குறை தேவையான ஆசிரியர்கள் அந்தந்த பள்ளியில் இல்லை. இருக்கும் ஆசிரியர்கள் தன் பொறுப்பு உணர்ந்து செயல்படுவதும் இல்லை. யாரோ சிலர் தங்கள் மனசாட்சிக்கு பயந்து இதை ஒரு சேவை போல நினைத்து பணியாற்றிக் கொண்டிருப்பதால் இன்னமும் அரசு பள்ளிக்கூடங்களினால் லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்களால் இன்று படிக்க முடிகின்றது. இது போன்ற சூழ்நிலையில் ஒரு சராசரி பெற்றோர்கள் என்ன முடிவெடுப்பார்?

உடனே தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளின் அறிவில் பாலும் தேனும் ஓடுகின்றது என்று நான் சொல்ல மாட்டேன். என் மகள் படிக்கும் வகுப்பில் 15 குழந்தைகள் முட்டை எடுத்துள்ளது. அடக்குமுறை அல்லது கட்டுப்பாடு இருக்கும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளே படிப்பது என்றால் பயப்படுவதற்கு முக்கிய காரணம் புரியாத மொழி. அதை புரிய வைக்க தெரியாத ஆசிரியர். மேலும் கற்றுக் கொடுக்க தெரியாத பெற்றோர். இது சுழல் போல சுழன்று வருவதால் படித்தும் கூமூட்டையாக மாறும் மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது. இது போன்ற சூழ்நிலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை பயப்படும் வைக்கும் சூழ்நிலை தான் உருவாகப் போகின்றது. தமிழ்நாட்டில் எந்த அரசு தனியார் பள்ளியில் மொழியியல் ஆசிரியர் இருக்கின்றார். பாடம் நடத்துவது வேறு? அந்தகுறிப்பிட்ட மொழி குறித்து புரிய வைப்பது வேறு? ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பேசத் தெரியாத தனியார் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் இங்கே பாடம் நடத்துகின்றார்கள்.
இவர் தரப்பு வாதம் எப்படி உள்ளது என்றால் உடம்புக்கு நோய். மருத்துவம் தேவை என்று சொன்னால் அது தான் நல்ல சட்டை டவுசர் போட்டாச்சுல்ல. அப்புறம் என்ன குறை? என்கிறார். மேலும் பேசினால் உங்க புள்ளைங்களை கொண்டு போய் அரசு பள்ளி சேர்க்க வேண்டியது தானே என்கிறார். ஊருக்குத் தான் உபதேசம் என்கிறார். அரசியல்வாதியாக மாற வாழ்த்துகள் என்கிறார். என்ன சொல்வீங்க.
எல்லாமே தெரிந்தும் எதுவுமே தெரியாதது போல பேசுவது எழுதுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் ஒரு விதமான மன நோய். அவர் எனக்கும் இந்த மனநோய் இருக்கிறது என்பார். உண்மை தான். அதை வெளிப்படையாக எழுத்தில் எழுதி வைத்து உண்மையான விமர்சனங்கள் நேர்மையாக எதிர்கொள்ள பெட்டியை திறந்து வைத்துள்ளேன். என்னைப் பற்றிய விபரங்களை எவர் அறிந்து கொள்ளவும், என் இருப்பிடம், வாழ்விடம் அனைத்தும் அறிந்து கொள்ள வைத்துள்ளேன். இதை படிப்பவர்களுக்கு புரியும்.


வவ்வால் said...

மாண்புமிகு காம்ரேட் ஜோதிஜி அவர்களே,

நீங்க என்னமோ நீட்டி முழக்கி இருக்கீங்க அது எப்படியோ போகட்டும் ஆனால் வழக்கம் போலவே பதட்டமே இல்லாமல் புனைவுகளையே சொல்லிக்கொண்டு இருக்கிங்களே, ஒரு சிலவுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு கிளம்புறேன்,

பதிவுக்கு சம்பதமாக ஆரம்பத்திலேயெ பின்னூட்டமும் இட்டு இருக்கிறேன்,போக்கு மாறியது யாரால் என உங்கள் யூகத்துகே விடுறேன்.(அதற்கு நீங்களும் உடந்தை)

//ஆனால் மரபணு மாற்ற கட்டுரைகள் குறித்து கேட்ட போது நான் ஒரு மாதமாக இணையம் பக்கம் வரவில்லை என்று சொன்னார். நானும் இது அவர் பாணியில் உள்ள பதில் என்று எடுத்துக் கொண்டேன். உடனே எப்போதும் போல அவர் பாணியில் ஓகோ நாங்க புகழவில்லை என்று வருத்தமா? என்று உட்டாலக்கடி வேலையாக மாற்றினார். //

ஹி ஹி...ரெண்டு மாசம் முன்னரே உங்க பதிவில பின்னூட்டம் போடுறதே டைம் வேஸ்ட்னு சொல்லிட்டு இனிமே இந்தப்பக்கமே வரலைனு சொல்லிட்டு போயாச்சு, நீங்க தான் வந்து என்பதிவில் ஏன் கருத்து சொல்லவில்லை,உசாரான ஆளானு கேட்கவே என்னடா இது வம்பா போச்சேனு வந்தேன்,ஆனால் இப்போ என்னமோ பிலேட்ட திருப்பி போடுறிங்க அவ்வ்!

3//இன்று அந்த பள்ளிகள் அனைத்தும் பாவப்பட்ட பரிசோதனைக்கூடங்கள் போல மாறியுள்ளது.//

மேற்கொண்டு அரசுப்பள்ளீகள் பற்றி நிறைய சொல்லி இருக்கீங்க, எல்லாமே மிகைக்கூற்று. எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப்பள்ளி இருக்கோ அதை விட தரமாக நல்லாவும் அதிகமான அரசுப்பள்ளிகள் இருக்கு. சந்தேகம் எனில் பதிவர் டி.என்.முரளிதரனிடம் கேட்கலாம்.

சரி போகட்டும் நீங்களே உத்தமராக இருந்துட்டு போங்க ,நான் அயோக்கியனாக இருந்துட்டு போறேன் ,அதனால எனக்கு நட்டமும் இல்லை லாபமும் இல்லை அவ்வ்.

"நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;

இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;"


ஒரு ஆத்திகர் சொன்னது நாத்திகனுக்கும் கைக்கொடுக்குது அவ்வ்!

நன்றி ,வணக்கம்!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இரண்டு நாளைக்குள் இத்தனை விவாதங்களா...? கனமான கட்டுரை தந்த சிந்தனைகள் செயல்வடிவம் பெறவேண்டும்... சிற்சில கருத்துகளில் மாறுபட்ட,
இதே மையக் கருத்துத் தொடர்பான எனது கட்டுரைகள் இரண்டைத் தாங்கள் அன்புகூர்ந்து படித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன். http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post_9.html மற்றும்
http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post.html
அன்புடன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.

? said...

அமைதி வடிவான ஜோதிஜி ஐயா,

//சாக்கடை விவாதத்தை நீங்க தான் மாற்றுக் கருத்தை வரவேற்க வேண்டும் என்கிற ரீதியில் பின்னூட்டத்தை சகதி போல மாற்றிவீட்டீங்க//

சகதி போலவா, சர்தான்! என்னால் முடிந்த அளவு சகதியினை எடுத்துவிட்டேன்.

நீங்க ரிலோக்ஸ் ஆக இந்த காமடி பாருங்க.http://www.youtube.com/watch?v=Nt6cPjsy8Co

தமிழ் சினிமா காமடியானாலும் இதில் ஒரு நீதிக்கதை ஒளிஞ்சிருக்குது. என்னை மாதிரியே கவுண்டமணி கரடிய பத்தி தெரிஞ்சிருந்தும், குஞ்சுக்கவுண்டரின் உள்நோக்கமறியாமல் அதை போய் கட்டிபிடிச்சு படாத பாடுபடுகிறார். இந்த கதை புரிந்தாலே இங்கு சாக்கடை ஏன் ஓட ஆரம்பித்தது பின் சகதி வந்த காரணம் புலப்படும். இது உங்களுக்கு புரியுதோ இல்லையோ கடுதாசி போட்ட உங்க நண்பருக்கு புரிய வேண்டும் என்பதுதான் முக்கியம்.மனசாட்சியை விட நமக்கு சிறந்த நண்பன் யார்?

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, மனம் வாடித் துன்பமிக உழலும், பல வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழவே விரும்பாததால்... விடை பெறுகிறேன்.

ஜோதிஜி said...

நன்றிங்க. படித்தேன். உங்கள் அக்கறைக்கு நன்றி.

ஜோதிஜி said...

போச்சுடா அய்யாவா?

மொதல்லேயிருந்தா(?)

அமைதியாவது ஆர்ப்பாட்டமாவது. அவரு தான் ஏற்கனவே ஒரு புகழ்மாலை சூட்டிவிட்டாரோ? நிதானமா இருக்குறவுங்க நிச்சயமா சுயநலவாதியாத்தான் இருப்பாங்கன்னு. நீங்க வேற?

ஒரு வரியை எடுத்துப் போட்டு அதற்கு ஒரு காமெடி காட்சியை வேறு டெடிகேட் பண்ணியிருக்கீங்க. ரசித்தேன். சுந்தர்ராஜன் குறித்து ஒரு சிறிய தகவல்.

எல்லோருமே திரைக்கதையை எழுதி வைத்து காட்சிப்படி எடுப்பார்கள். இவரே அன்றைய பொழுதில் என்ன தோன்றுகின்றதோ அப்பொழுது அப்படியே எடுப்பவர். நடிகர் சிவகுமார் பாராட்டிச் சொன்ன வாசகம் இது.

வீழ்ச்சி, உயர்வு, தாழ்வு, விடைபெறுதல் இங்கே எதுவுமே இல்லை.

இதுவொரு தொடர்கதை.

ஜோதிஜி said...

மனசாட்சியை விட நமக்கு சிறந்த நண்பன் யார்?

இதனால் தான் இந்த வாழ்க்கை அழகாக தெளிவாக நிதானமாக இன்று வரையிலும் இங்கே நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. பணம் துரத்தும் பறவைகளுக்கிடையே வாழும் வாழ்க்கையில் பொய்மையின்றி பொறாமையின்றி வாழ முடிந்த மனப் பக்குவமே சேர்த்த மிகப் பெரிய சொத்தாக இருக்கின்றது நண்பா.

ஜோதிஜி said...

நந்தவனம்

இதைப்பார்க்க படிக்க

http://covvha.net/the-world-according-to-monsanto-full-length-video/#.UnMdXvmnqs2

? said...

பகிர்வுக்கு நன்றி, ஓய்வு நேரத்தில் கட்டாயம் பார்க்கிறேன். மான்சாட்ட மட்டுமல்ல அமெரிக்காவில் இருக்கும் எல்லாவற்றையும் முறையின்றி காப்பி அடிப்பது ஆப்புக்கே வழிவகுக்கும். ஏற்கனவே மருத்துவம் (இன்சூரன்சு), பணம் பிடுங்கும் கல்வி என அமெரிக்காவின் சாபங்களை வரமாக நினைத்து நாம் வாங்கிக்கொண்டிருக்கிறோம். மனப்பாடம் இல்லாத சிந்தனாசகதி வளர்க்கும் கல்வி தேவைதான். ஆனால் அமெரிக்க முறையை அப்படியே பின்பற்ற தேவையில்ல என்பது எனது கருத்து.அடுத்த வருடம் சிபிஎஸ்சி பாடதிட்டத்தில் திறந்த புத்தக பரிச்சை வரப்போகிறது என படித்தேன்.

வீடியோவின் ஆரம்பம் பார்த்தேன். மரபணுமாற்ற சோயா குறித்து பேசினார்கள். சோயா பற்றிய தகவல் ஒன்றினை பகிர விரும்புகிறேன். சோயாவிலுள்ள ஐசோஃபுளோவின் எனும் வேதிபொருட்கள் பெண்களின் ஹார்மோன்கள் போல செயல்பட்டு பல விளைவுகளை உண்டாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான் பணி செய்த ஒரிடத்தில் சோயா உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என ஆய்வு செய்ய டையபர்களை பெற்று ஆய்வு செய்தார்கள். அக்குழந்தைகளின் கழிவுகளில் பெண்களின் ஹார்மோன் போன்ற மூலக்கூறுகளை இருப்பதாக சொன்னார்கள். அப்போதுதான் இது பற்றி எனக்கு தெரியவந்தது. எனவே பெண்கள் சோயா சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் வீடுகளில் குழந்தைகள் வந்தபிறகு சோயாவை முற்றிலுமாக தடை செய்துவிட்டோம்.

http://www.scientificamerican.com/article.cfm?id=soybean-fertility-hormone-isoflavones-genistein

ஆனால் சைனர்கள் சோயா மட்டுமே சாப்பிட்டு ஏப்பம் விடுவதில் வல்லவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் உடம்பு இதற்கு ஏற்றாற் போல் மாறி இருக்கலாம் என தோன்றுகிறது

ஜோதிஜி said...

நன்றி. இங்கே தீபாவளிக்கு குழந்தைகள் ஆய்த்த ஏற்பாட்டில் உற்சாகமாக தொடங்கி உள்ளார்கள். அங்கே எப்படி?

நீங்கள் சுட்டிய சுட்டியில் நான் விரும்பியது பதிவும் வந்த கருத்துக்களும் என்னைப் போன்றோர்களுக்கு புரியும் எளிய ஆங்கிலத்தில் உள்ளது மிகவும் கவர்ந்தது.

டெல்லியில் பணிபுரிந்த ஒரு வங்கி அதிகாரி திருப்பூருக்கு மாற்றலாகி வந்ததற்கு அவர் சொன்ன காரணம் நடுத்தர வர்க்கத்திற்கு மேலே இருப்பவர்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மதிய உணவு பீட்சா பர்கர் போன்ற உணவு வகைகளும் பள்ளியில் கேண்டீனில் விற்பனையாகும் குப்பை உணவுகளுமே கலாச்சாரம் போல இருக்கின்றது. அவரின் குழந்தைகளும் இதையே விரும்ப ஒரு வருடத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியம் மோசமானது என்று சொல்லியது இப்போது நினைவிற்கு வருகின்றது.

பெருநகரங்கள் அனைத்தும் நீங்கள் சொன்ன பாதிப்பு இருக்கக்கூடும். இதன் பாதிப்பு வெளியே தெரிய இன்னும் 5 ஆண்டுகள் ஆகலாம்.

சிங்கப்பூரில் சோயா பால் (ஆஸ்திரேலியா இறக்குமதி) குடித்தது நினைவுக்கு வருகின்றது. எனக்குத் தெரிந்து சோயா பெரிய அளவில் இங்கே வரவில்லை என்றே நினைக்கின்றேன். மற்றபடி மரபணு மாற்றம் அனைத்தும் இங்கே சராசரி காய்கறிகளில் நுழைந்து நாங்கள் உண்ணும் ஒவ்வொன்றிலும் அடிப்படைச் சுவை இல்லவே இல்லை என்பதை உறுதியாகவே இல்லை. ஆனால் எவருக்கும் இது குறித்து தெரியவே இல்லை என்பதும் உண்மை.

? said...

தீபாவளி இங்கு மதவிடுப்பு பெற முடிகிற நாள். ஆனால் இந்த வருடம் சனிக்கிழமையாகி விட்டது. பதவிக்கு புதிதில் ஒபாமா தீபாவளி கொண்டாடி மதவிடுப்பு தினமாக மாற்றினார். http://www.youtube.com/watch?v=sMwXTdFcPm0

இந்தியாவிலேயே தீவாளி என்றால் சூவிட்டுகடை இனிப்பும், டிவியும் என ஆகிவிட்டது. இங்கே என்ன வாழப்போகிறது? கோவில்களில் சிறப்பு வழிபாடும் (வடஇந்தியருக்காக) மற்றும் வார இறுதி நாளில் பட்டாசு வெடிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்வார்கள். இதிலெல்லாம் நான் கலந்து கொள்ளுவதில்லை (கூட்டம் என்றாலே அலர்ஜி! அதிலும் நம்ம கூட்டம் இருக்குதே, வானர கூட்டம்தான்!). இங்கு வந்த புதிதில் நம்ம பண்டிகை அமெரிக்கனுகளுக்கு புரியல, அவனுக பண்டிகை நமக்கு புரியல என நிலை இருந்தது. இப்போதெல்லாம் அமெரிக்க ஜோதியில் ஐக்கியம் ஆகி தேங்கஸ் கிவிங் விருந்து, கிருஸ்து இல்லாத கிருஸ்மஸ் என மாறி விட்டோம். உலகத்தோடு ஒட்ட ஒழுகு என ஐயன் சொன்னதுதான்!

//எனக்குத் தெரிந்து சோயா பெரிய அளவில் இங்கே வரவில்லை என்றே நினைக்கின்றேன்.//

மீல் மேக்கர் என்ற பெயரில் வரும் சோயா உருண்டைகளை குழம்பு வைப்பார்கள் அந்த வழக்கம் ஒழிந்துவிட்டதா? மேலும் சைனீஸ் கடை உணவுகளில் சோயா சாஸ் சேர்ப்பதுண்டு அல்லவா?

//மரபணு மாற்றம் அனைத்தும் இங்கே சராசரி காய்கறிகளில் நுழைந்து நாங்கள் உண்ணும் ஒவ்வொன்றிலும் அடிப்படைச் சுவை இல்லவே இல்லை என்பதை உறுதியாகவே இல்லை. //

நீங்கள் பயப்படும் அளவுக்கு இந்திய காய்கறிகளில் மரபணு மாற்றம் நடக்கவில்லை என நினைக்கிறேன்.தவறு எனில் சுட்டவும். சுவை இல்லாமல் போக காரணம் இயற்கையான கலப்பு மூலம் பெறப்பட்ட ஒட்டுண்ணி தாவரங்களும், சத்தை இழந்து போன மண்ணும்தான் என நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

அரசியல்வாதிகள் பண்டிகைகளுக்கு விடுக்கும் செய்திகளும் அவர்களின் கொண்டாட்டங்களையும் நான் எப்பொழுதும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இங்குள்ள கஞ்சிகுடி களை ஒப்பிடும் போது ஒபாமா பரவாயில்லைதானே?

மீல் மேக்கர் இருக்கின்றது. அது அன்றாட வாழ்வில் இருக்கும் உணவல்ல.

சத்து இழந்த காய்கறிகள் புரிகின்றது. ஆனால் திருப்பூரில் நாங்கள் உண்ணும் எந்த காயக்றிகளும் உண்மையான சுவையே இல்லை. இதை படித்தீர்களா?

http://deviyar-illam.blogspot.in/2013/08/blog-post_29.html

ezhil said...

இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் இந்தப் பதிவை. விட்டுப் போனதை படிக்க வாய்ப்பு. குழந்தைகளை அவர்கள் விருப்பத்தில் படிக்க விடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.