Monday, May 30, 2022

நீங்கள் போடும் ஜட்டியின் அளவு என்ன?

நீங்கள் போடும் ஜட்டியின் அளவு என்ன?

சத்தியம் தொலைக்காட்சி அரவிந்த் ராட்சசனுக்கு (எழுத்துப்பிழையல்ல) ஒரு கடிதம்.

நான் ஏன் இப்படியொரு தலைப்பு வைத்தேன் என்பதனை கடைசி வரிகளில் பார்த்துப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


Sunday, May 29, 2022

2 G அப்பா G Square மகன்

1. ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன் என்று  கூவிக் கொண்டிருக்கும் சவுக்கு நோக்கம் என்ன?

2. ஜூவி மீது எப்.ஐ.ஆர்.  போட்டுட்டாங்கோன்னு  போராட துடிக்கும் பத்திரிகையாளர்கள் விசாரித்தது என்ன?


Friday, May 27, 2022

11 மாத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

வணக்கம் நண்பர்களே

எனக்கும் தொழில் நுட்ப விசயங்களுக்கும் சற்று தொலைவு அதிகம் தான். நான் கற்றுக் கொள்ள விரும்பியதும் இல்லை. கற்றுக் கொள்ளாத காரணத்தால் ஏகப்பட்ட இடைஞ்சல் வந்த போதிலும் பொருட்படுத்திக் கொண்டதில்லை. மகள்கள் உதவுகின்றார்கள்.



Thursday, May 26, 2022

தமிழக கல்வி கூடங்களில் போதை கலாச்சாரம்

எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார். உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 

1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும், 

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும், எஸ்எஸ்ஆரும்...ஆற்றிய உரை... மதுரை முத்து: 

"அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்". டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை என்கிறார். 

கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்) 


 

எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? " (மறுநாள் #சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது. 

இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?" என கிண்டலடித்தார்) 

திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் 

""எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது"... 

இதே ராஜாங்கம் அந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை (வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். 

கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்து மீது பழிபோடுகிறார். 

முத்துவுக்கு கோபம் வருகிறது. 

"தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் என பகிரங்கமாக கேட்டார்.

உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம்.ஜி.ஆரிடமே சரணடைகிறார். 

தலைவரும் முத்துவை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 

1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம். மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். 


காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்" தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.

Sunday, May 22, 2022

கற்றதும் பெற்றதும் (சொல்ல விரும்பும் நிகழ்வுகள்) மே 2022

நீங்கள் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி, இங்கு உள்ள துறைமுகங்கள், அந்நியச் செலவாணி, சாதகம், பாதகம் போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேசியுள்ளதைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.



Sunday, May 15, 2022

பாஜக தலைவர் அண்ணாமலை உரை /முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை Genocide by Mulli...

50 வருடங்களால் ஈழம் வைத்து அரசியல் செய்து கொண்டு இருந்த தமிழக அரசியல் வியாதிகளின் கேவலமான பிழைப்பு இனி முடிவுக்கு வரும் என்றே நம்புகிறேன்.

Friday, May 13, 2022

இந்த பிழைப்புக்கு அமைச்சர் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்.

வயிறு எறிந்து கொண்டு இருக்கும் அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியப் பழைய நண்பருக்கு

பிராமண பெண்ணைத் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்த போதும் இன்னமும் உன்னால் உன் மதவெறியை விட்டு வெளியே வர முடியாமல் அங்கங்கே பிறாண்டும் வேலையைச் செய்து கொண்டு இருப்பதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக் வைத்து நாடக கம்பெனியில் நடிகராக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நாங்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை.

என் அன்பான நண்பருக்கு

உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. 

உன் வயிற்று எரிச்சலைப் போக்க பக்கத்து மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக உள்ளது.

வாங்கித் தருகின்றேன்.

உச்சந்தலையில் ஊற்றிக் கொள்ளவும்.

லைட்டர் வைத்துப் பற்றிக் கொள்ளத் தனியாக நின்று கொத்தடிமைக் கூட்டத்திலிருந்து விலகி மேலே போய்ச் சேருங்கள்.















பத்து மாதம் மட்டுமே உழைத்துள்ள திரு. அண்ணாமலை அவர்கள் இன்னமும் உயரம் செல்வார்.

திருவாரூரில் அண்ணாமலை பேச எழுந்த போது மக்களின் ஆரவாரத்தைப் பார்க்க 




கடைசியாக

நான் தான் நம்பர் 1 முதல்வர் என்று ஒருவர் சொல்லிக் கொள்வதும்........

இங்கு தான் 

பேட்டி கொடுக்கும் ஒவ்வொருவரையும் முதல்வரை பாராட்டுங்க.... முதல்வரை பாராட்டிச் சொல்லுங்க என்று விபச்சாரம் செய்து பிழைப்பதும் நடப்பதைப் பார்க்கும் போது அண்ணாமலை சொன்ன வாசகம் தான் தலைப்பில் உள்ளது.

நான் ஏன் அண்ணாமலையை ஆதரிக்கின்றேன்?

திராவிடம் ப்ளஸ்





Thursday, May 12, 2022

'திராவிடம் ப்ளஸ்'

1949 செப்டம்பர் 19ஆம் நாளைய ‘விடுதலை’ தலையங்கத்தில் ஈ.வெ. ராமசாமி என்ற பெரியார் இவ்வாறு எழுதினார். அது திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்து இரண்டு நாட்களில் எழுதப்பட்டது:

“அவர்கள் பேசுவதெல்லாம் வெறும் மோசடி. அவர்களுக்கு தெரியும் என்னோடு இருந்தால் சட்ட சபைக்குப் போக முடியாது. பதவியை அடைய முடியாது. அதனால்தான் திருமணத்தை ஒரு சாக்காகச் சொல்கிறார்கள். அவர்களுக்கும் கொள்கைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்ன?”



Tuesday, May 03, 2022

நான் ஏன் அண்ணாமலையை ஆதரிக்கின்றேன்?

அண்ணாமலை என்ற பெயர் எனக்கு முதல் முறையாக அறிமுகமான போது எனக்கு இரண்டு பேர்கள் நினைவுக்கு வந்தார்கள்.  ஒன்று என்னுடன் எட்டாவது வரைக்கும் படித்த பள்ளித் தோழன். மற்றொருவர் என் இரண்டாவது சித்தப்பா.