Sunday, November 29, 2009

காந்தியின் பெயர் மனச்சாந்தி

ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கம் முதல் உருவான சுதந்திர போராட்டங்களும், நாட்டிற்குள் சிறுபான்மையான வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் தங்களுடைய  அடிப்படை வாழ்வுரிமை பாதிக்கப்படும் போது உருவானது தான் இனப்போராட்டங்கள்.

இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஒரு தனி மனிதனால் பாறையில் சிக்கிய விதை வெடித்து கிளம்புவது போல் உருவாவது  துளிர் இலை. அது காலப்போக்கில் தான் வெளிச்சத்தை வந்து எட்டிப் பார்க்கின்றது.

காலப்போக்கில் தான் அதன் வளர்ச்சியானது, கொண்டு எடுத்துச் செல்லப்படும் அறிவு சார்ந்த விசயங்களால் மக்கள் பார்வைக்கு படுகின்றது.  மக்கள் ஆதரவும் கிடைக்கின்றது.

இது வரையிலும் பார்த்த இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வுரிமை போராட்டங்களில் சிங்கள தலைவர்களின் சூழ்ச்சி நிறைந்த முன்னேற்பாடுகளையும், தமிழ் தலைவர்களின் சாத்வீக போராட்டத்தின் மூலம் நடந்த அத்தனை நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு வந்தோம்.  ஆனால் இலங்கையில் அன்று இரண்டு பிரிவுகளாக வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடி, இந்திய தமிழர்களையும் ஒரே ஒரு நிகழ்ச்சி மொத்தமாக இணையும் சூழ்நிலையையும் உருவாக்கித் தந்தது என்றால் மிகையில்லை.

அன்று தான் மொத்த இலங்கை தமிழர்களின் விடுதலை வேட்கையும், வாழ்வுரிமை போராட்டத்திற்கான உண்மையான பாதையும் புலப்பட்டது.  அதன் பிறகு தான் மொத்த இலங்கை அரசாங்கமும் ஸ்தம்பித்தது.

இதுவரையிலும் தந்திரமாய் நகர்த்திக் கொண்டு வந்த தமிழர்களை இனி எந்திரமாய் நீண்ட நாட்களாக வைத்து இருக்க முடியாது என்று அவர்கள் உணரத் தொடங்கினர்.
மேல்தட்டு வர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டு பண்டார நாயகாவின் மனைவி சிறீமாவோ பண்டாரா நாயகா தந்தை செல்வாவின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் அவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தமிழர்களையும் ஒரே அணியில் சேர்க்க உதவியது என்றால் அது மிகையில்லை.

அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த டட்லி சேனநாயகா (ஐக்கிய தேசிய கட்சி), ஜெயவர்த்தனே, சீறீல் மாத்யூ போன்றவர்கள் செல்வா பண்டாரா நாயகா ஓப்பந்தமான  மண்டல தன்னாட்சி என்பதை அனுமதிக்கவே முடியாது என்று பிடிவாதமாக இருந்தனர்.

ஆனால் சீறிமாவோ பண்டாரா நாயகா தந்தை செல்வாவுக்கு தொடக்கத்தில் கொடுத்த வாக்குறிதியை கவனமாக மறந்ததோடு மட்டுமல்லாமல், தன் கணவர் உருவாக்கி இருந்த சிங்களமே ஆட்சி மொழி என்பதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.

சிங்கள மொழி மட்டுமே இலங்கை நீதிமன்றங்கள் அனைத்தும் வழக்கு மொழியாக இருக்கும்.

அவருடைய மற்றொரு தீர்க்கதரிசன பார்வை.  தமிழர்கள் வாழ்ந்து கொண்டுருந்த வடக்கு கிழக்கு மகாணங்கள் அத்தனை நீதிமன்றங்களிலும் இதை செயல்படுத்த மொத்த அதிகாரவர்க்கத்தை அனுப்பி பார்வையிடச் செய்தார்.

இவருடைய ஆட்சியில் நடந்த தோட்டத் தொழிலாளர்களை நாடு கடத்திய சீறீமாவோ சாஸ்திரி ஒப்பந்தங்கள் பற்றி பின்னால் வரும் தொடரில் முழுமையாக பார்க்கலாம்.

சீறீமாவோவின் செயல்பாடுகளை எதிர்த்து, 1961 ஆம் ஆண்டு நாடு தழுவிய சத்யாகிரகப் போராட்டத்தை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி தொடங்க மொத்த தமிழினமும் ஒன்று சேர்ந்தது.  பூர்வகுடி, இந்திய தமிழர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அணைவரும் ஒரே அணியில் திரண்டனர்.  மொத்த தமிழர்களுக்கும் அன்று தேசிய இன உரிமை வேட்கையை விழிப்புறச் செய்தது.  கொழுந்து விட்டு எறிந்த போராட்டங்கள் இலங்கையை மொத்த இலங்கையையும் கலக்கமுறச் செய்தது..

இதன் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது.

1961 ஏப்ரல் 14ம் நாள் தமிழ் ஈழம் பகுதிக்கு என்று தனியான அஞ்சல் தலைகள் வெளியீடும், தனி அஞ்சல் துறைப் பணியும் தொடங்கியது.  மூன்று மாதங்கள் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் மொத்த இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகள் தனியாக இயங்கத் தொடங்கும் அளவிற்கு மாற்றம் பெறத் தொடங்கின.

இறுதியில் (1961 ஏப்ரல் 18) அன்று நடந்த மறியல் போராட்டத்தை அடக்குகிறோம் என்ற தொடங்கிய சிங்கள இனவெறிக்கூட்டம் கையில் சிக்கிய மொத்த தமிழனமும் குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் குதறி எறியப்பட்டனர்.

சிறீமாவோ பண்டாரா நாயகா ஆட்சி கலைக்கப்பட்டு வந்த ஐக்கிய தேசிய கட்சி. ஆட்சி அமைத்தவர் சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகா.  அப்போது அந்த அரசாங்கத்தில் மிஸ்டர் இரண்டு ஜெயவர்த்தனே.  ஆனால் இந்த ஆட்சி அமைய தாங்கிப் பிடித்தவர்கள் தந்தை செல்வாவின் குடியரசுக்கட்சி.  கூட்டணி புரிந்துணர்வு உருவாக்கும் போது பிரதேச மகாண உரிமை தரப்படும் என்பதன் அடிப்படையில்.  ஆனால் கட்சியில் உள்ள திருச்செல்வம் அமைச்சர் பதவியில் அமர்ந்து இருந்த போதிலும் மாவட்ட சபை மசோதவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவே முடியாது என்று டட்லி சேனநாயகா அந்தர் பல்டி அடித்து விட்டார்.

அப்போது தான் தமிழ் தலைவர்களின் மனதில் வேறு ஒரு சிந்தனை உருவானது.  ஆமாம் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு.
நாம் அணைவரும் தனித்தனியாக இயங்கிக்கொண்டு இருப்பதால் ஆட்சிக்கு வரும் அத்தனை சிங்கள தலைவர்களும் நம்மை கருவேப்பிலையாக பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்து விடுகிறார்கள். நாம் அணைவரும் ஒரே அணியில் இயங்க வேண்டும் என்று உருவானது தான் (14  மே 1972) தமிழர் விடுதலைக் கூட்டணி

தந்தை செல்வாவை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி
ஜீஜீ பொன்னம்பலத்தை தலைவராகக் கொண்டுள்ள இலங்கைத் தமிழர் காங்கிரஸ் கட்சி
தொண்டைமான் அவர்களை தலைவராகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி.

"தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை  வழங்கப்படாவிட்டால் மொத்த தமிழர்களின் விடுதலை மீட்டு எடுப்போம்"   மொத்த தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து அறப்போராட்டத்தை தேர்ந்தெடுத்தனர்.

இவர்கள் மொத்தமாக கொடுத்த ஆறு அம்ச கோரிக்கைகளையும் சிங்கள அரசாங்கம் தூக்கி குப்பைக்கூடையில் போட்டது.  தந்தை செல்வா தான் வகித்து வந்த காங்கேசன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து விட்டு சிங்கள தலைவர்களை எதிர் எதிராக தேர்தலில் நிற்க அழைத்தார்.  மூன்று வருடங்களாக தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த அரசாங்கம் 1975 ஜனவரி அன்று நடத்திய தேர்தலில் மீண்டும் வெற்றிகரமாக தந்தை செல்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த தேர்தல் முடிவை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிக்கையின் கிழக்கு ஆசிய பகுதி செய்தியாளர் திரு. வால்டர்  சுவார்ச் (Walter Swarz) பினவருமாறு குறிப்பிட்டார்.

"காங்கேசன் துறை இடைத்தேர்தலில் திரு. NJV செல்வநாயகம் பெற்ற மாபெரும் வெற்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய கொள்கையான தனிநாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகவே இலங்கை முழுவதும் கருதப்படுகிறது".

தேர்தல் முடிவுக்குப் பிறகு தந்தை செல்வா உரையாற்றிய வாசகம்.

"என் மக்களுக்கும் நாட்டுக்கும் அறிவித்துக்கொள்வது இது தான்.  தமிழ் மக்களுக்கு முன்பே உரிமை உள்ளதாக இருந்த ஆட்சி இது.  இப்போது மீண்டும் அதன் இறையாண்மையை மீட்டு எடுத்து செயல்படுத்த வேண்டும்.  மொத்த தமிழர்களின் விடுதலையைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் வெற்றி நமக்கு உணர்த்தி உள்ளது.  இதையே நான் கட்டளையாக கருதுகிறேன்.  அதை நாம் செயல்படுத்திக்காட்டுவோம் என்று உறுதி மொழி ஏற்போம்"

அறவழிப்போராட்டத்தை, காந்திய கொள்கைகளை வைத்துக்கொண்டு போராடிய தமிழர்களின் தந்தையான செல்வா அவர்கள் இறுதியில் தமிழர்களுக்கு "தமிழீழம்" என்பது தான் இறுதி தீர்வாக இருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக கூறி சொற்பொழிவை நிறைவு செய்தார்.

தாங்கள் பெற்ற அவமானகரமான, அதிர்ச்சிகரமான , அசிங்கமான  போராட்டங்கள் அத்தனையும் பின்னடைவில் கொண்டு வந்து நிறுத்திய போது உணர்ந்து சொன்ன வார்த்தைகள் இது.

இப்போது 1972 என்ற காலகட்டத்தில் நின்று கொண்டு இருக்கிறோம். அன்றைய இளைஞர்கள் ஆயுத மொழி ஒன்று மட்டுமே இந்த சிங்கள அரசாங்கத்திற்கு புரியும் என்ற நோக்கில் இந்த காலகட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முன்னேற்பாடுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகள் சரியா தவறா என்பதை பார்ப்பதற்கு முன்னால் 1972 வரைக்கும் நாம் இது வரைக்கும் பார்த்து வந்தது, மொத்த இலங்கை தலைவர்கள், ஆட்சி மாற்றங்கள் மட்டுமே.

ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்து கடந்து போன 25 வருடங்களில் மொத்த தமிழர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது என்பதை அடுத்த பாகத்தில் பார்த்த பிறகு தான் உமா மககேஸ்வரன், பிரபாகரன் தொடங்கிய ஆயுத மொழிக்குள் போக முடியும்.

காரணம் அந்த மொழி சரியா? தவறா? என்பதை நாம் உணர வேண்டுமானால் அடிப்படை அடுத்தட்டு தமிழ் மக்களின் சூறையாடப்பட்ட வாழ்வாதாரங்கள் பற்றிய புரிந்துணர்வு நமக்கு வேண்டும்.  அதன் மூலம் தான் அன்று மொத்த தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை காந்திய வழியில் சென்று போராடிக்கொண்டுருந்த அத்தனை தமிழ தலைவர்களைப் பற்றியும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

சாதக பாதகங்களை நாமே தரம் பாரக்க முடியும்.

(மூன்றாம் பாகம் முடிவு)

Saturday, November 28, 2009

சமாதானமென்பது சாவு மணி

" நான் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவேன்"

இந்த வார்த்தைகள், வாக்குறுதி SWRD பண்டார நாயகாரவை ஆட்சிக்கு வரவழைக்க உதவியது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.  அதே போல் கடமை தவறாமல் நிறைவேற்றியும் காட்டினார்.

முதலில் அஸ்திவாரம்.

எதிர்காலத்தில் இலங்கை சிங்களர் நாடாக உருமாற வேண்டும் என்றால் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையான 25 சதவிகிதத்தை குறைக்க வேண்டும்.   உடனடியாக தோட்டத் தொழிலாளர்களை நாட்டை விட்டு விரட்டினால் தீர்வு கைக்கு வந்து விடும்.  அவர்களுக்கு என்று போராட பெரிய அளவில் யாருமில்லை.  இலங்கையின் ஜனத்தொகையிலும் அவர்கள் தனியாகத் தான் தெரிகிறார்கள்.  மொத்தமாக தமிழன் என்றாலும் பூர்வகுடி தமிழர்கள் அவர்களை சீண்டுவதும் இல்லை.  உறவாடுவதும் இல்லை. எத்தனையோ காரணங்கள்.

நாம் இதை கையில் எடுத்தால் ஆட்டத்தை தொடங்கி விடலாம்.  தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை பறித்தால் அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது.  இவர்கள் வளர்ந்து கொண்டே ஆட்சி அதிகாரம் வரைக்கும் உள்ளே வந்தால் இன்னமும் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இவர்களின் இரு பக்கமும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ளே வந்தால் எப்படி எதிர்காலத்தில் இலங்கையை சிங்கள தேசமாக உருவாக்க முடியும்?

தீர்க்கசரினமாய் யோசித்து செயலில் காட்டியவர் "  குடியுரிமைச் சட்டம்" மூலம் சிறப்பாக அந்த புனித காரியத்தை நிறைவேற்றியவர் சிங்களர்களின் தந்தை சேனநாயகா.

ஆனால் பண்டார நாயகா 1930 முதல் களத்தில் இருந்து சிங்களர்களின் மனதில் இருந்த போதிலும் சேனநாயகா அரசாங்கத்தில் மிஸ்டர் இரண்டு தான். பெரிதாக வாய்ப்புகள் உருவாகவில்லை.  சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகா மற்றும் மொத்த உறவினர்கள் பட்டாளமும் பயமுறுத்திக்கொண்டுருந்தது.

தான் நடத்திக்கொண்டு (1951) வந்த "சிங்கள மகா சபையை" உயிர் ஊட்டிக் கொண்டு வந்து கொண்டுருந்தார்.  சேனநாயகா மறைவுக்குப்பிறகு, நடந்த தேர்தலில் ஆங்கிலேய கவர்னர் எதிர்ப்புகளையும் மீறி சேனநாயகாவின் மகனுக்கே ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்க முக்கிய காரணம் அன்றுவரையிலும் பிரிட்டன் படைகள் இலங்கையில் இருந்ததும், அவர்களுக்கு சேனநாயகா குடும்பம் காட்டிய விசுவாசமும்.

தொடர்ந்து வந்து தேர்தலில், தமிழர் எதிர்ப்பை அடிப்படையாகக்கொண்டு இயங்கிக்கொண்டுருந்த சிங்கள கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அப்போது தான் உருவாக்கிய புதிய கட்சியான "ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி" மூலம் மகனை பின்னுக்கு தள்ளி ஆட்சிக் கட்டிலில் பண்டாரா நாயகா அமர்ந்தார்.  அப்போது தேர்தலில் தோற்ற டட்லி சேனநாயகாவுடன் கூட்டணி அமைத்து இருந்த தமிழர்களின் குடியரசுக்கட்சி பெற்ற இடங்கள் வெறும் பத்து மட்டுமே.

அதனால் என்ன?  குடியரசு கட்சி மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தந்தை செல்வாவுக்கு.

1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "கல்லோயா அபிவிருத்தி" திட்டத்தின் மூலம் பெரும்பான்மையாக அங்கு வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை தமிழ் மக்கள் வாழ்விடங்களிலும் மொத்தமாக சிங்களர்களை கொண்டு போய் குடியமர்த்தினர் . பண்டார நாயகா வருவதற்கு முன்னால் நடந்த ஆட்சிகளில் தமிழர்களை வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த தமிழர்களை மொத்தமாக விரட்டி அடித்தனர்.  மொத்த அவர்களின் வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்து தூக்கி எறிந்தவர்களின் கணக்கு எண்ணிக்கையில் அடங்காது.

சேனநாயகா மகன் இருந்த போது மிகப் பெரிதான புண்ணிய காரியங்களை தமிழ் மக்களுக்கு வழங்கா விட்டாலும் பண்டார நாயகா ஆட்சியை பிடித்ததும், வட்டியும் முதலுமாக சிங்களர்கள் கொண்டாடும் புத்த ஜெயந்தி அன்று மொத்த தமிழர்களுக்கும் பரிசாக (1956) "சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழி"

தமிழர்கள் நீதிமன்றத்திற்கு செல்வது தொடங்கி மொத்த அரசு சார்ந்த இடங்களிலும் சிங்களம் தான் பேசமுடியும். தெரிந்தால் தான் பிழைக்க முடியும்.

பண்டாரா நாயகா கொடுத்த பரிசான சிங்களமே ஆட்சி மொழிக்கான முக்கிய காரணம் கடந்த 150 வருடங்களாக ஆங்கிலேயர்கள் உள்ளே இருந்த போதிலும் ஒற்றை இலக்க சதவிகித எண்ணிக்கையில் தான் சிங்களர்களுக்கு ஆங்கிலம் பேசமுடியும். அந்த சூழ்நிலையிலும்  தமிழர்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருந்தனர்.

சிங்களர்ளே அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்?  என்றால் ஒத்துக்கொள்வார்களா?   தெளிவாக பண்டாரா நாயகா தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிங்களமே ஆட்சி மொழி என்பது அத்தனை சிங்களர்களையும் கவர்ந்தது.  ஆட்சியை பிடிக்கவும் உதவியது.

இந்த சட்டத்தை எதிர்த்தே ஆக வேண்டும்.  செல்வநாயகம் அரசாங்கத்திடம் தமிழர்களின் மொத்த எதிர்ப்பை காட்ட காந்திய வழியில் சாத்வீக போராட்டத்தை பாராளுமன்ற கட்டிடடத்திற்கு அருகே உள்ள புல்தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்..

காந்திய வழியில் போராடலாம் என்று சென்ற செல்வநாயகத்தை அப்போது துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த இளைஞர்கள் ஆரம்பித்த ஆழித்தீ கோரத்தாண்டவமாக மாற்றம் பெற்று மிக அசிங்கமான வழியில் செல்வா மற்றும் அவர் மகன்கள் அத்தனை பேர்களும் மிகக் கோரமாக தாக்கப்பட்டனர்.

போராட்டத்தை பார்த்துக்கொண்டு தன்னுடைய அலுவலகத்துக்கு சென்று கொண்டுருந்த பண்டாரா நாயகா கலவரத்தை அடக்கலாமா? என்று கேட்ட காவல் துறை அதிகாரிகளிடம், பண்டாரா நாயகா சொன்ன வார்த்தைகள் இது

"வேண்டாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் வரைக்கும் பொறுமையாய் இருங்கள்"
அறவழிப் போராட்டம் தொடங்கியது முதலே சிங்கள இளைஞர்களும் காவல் துறையினரும் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர்.

அசிங்க தாக்குதல் மூலம் அவமானத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்த செல்வநாயகத்தை உள்ளே வரவேற்ற பண்டாரா நாயகாவுடன் சேர்ந்த மற்ற தலைவர்கள் அனைவரும் சொன்ன வார்த்தைகள்.

"விழுப்புண்கள் ஆறிவிட்டதா இல்லை இன்னமும் வலிக்கின்றதா?"

பண்டாரா நாயகா மூலமும் தமிழர் பரம்பரையில் வருகிறது.  இவருடைய முன்னோர்கள் பண்டாரம் என்கிற தலைமை கோவில் பூசாரிப் பணியில் இருந்ததாக யஸ்வின் குணரத்னே என்ற சிங்களர் மிகத் தெளிவாக "புரிந்துணர்வை" உருவாக்கி உள்ளார்.

பண்டாரா நாயகா, ஆக்ஸ்போர்ட்டு பட்டம் என்றாலும் முழுமையாக சிங்களம் பேசத் தெரியாது.  மொத்தத்தில் மேல்தட்டு வர்க்க வாழ்க்கை.

மேலும் இலங்கையில் உள்ள மொத்த வாகனங்களிலும் ஸ்ரீ என்ற எழுத்து பொறிக்கப்பட வேண்டும் என்று உருவாகியிருந்த சட்டம் , அதனை எதிர்த்த அத்தனை தமிழர்களையும் தவிடு உமி போல் ஊதித் தீர்த்தார்கள்.

தந்தை செல்வா சிங்கள தலைவர்களிடம் வைத்த கோரிக்கை.

" தமிழர்கள் வாழும் பகுதிக்கென்று ஒரு தன்னாட்சி அமைப்பு.  சிங்களர்களுக்கென்று ஒரு தன்னாட்சி அமைப்பு.  இவை இரண்டையும் இணைத்து மத்தியில் ஒரு கூட்டாட்சி."

கேட்ட சிங்கள தலைவர்கள் சொன்ன வாசகம்.

"சிங்களர்களின் பூமியில் வாழும் நீங்கள் ஆட்சி உரிமையை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்கின்றீர்கள்"

பண்டார நாயகாவுடன் மொத்த உறுப்பினர்களும் வெடிச் சிரிப்பு சிரித்தனர்.

அப்போது வரைக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் வாழ தகுதி அற்றவர்கள் என்று உருவாகியிருந்த குடியுரிமைச் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு சாவு மணி அடித்து இருந்த போதிலும்(10 லட்சம் தமிழர்கள்) முழுமையாக இலங்கையை விட்டு வெளியேறாமல்  தாக்குதல்களுக்கிடையே மனம் தளராமல் அவர்கள் உள்ளேயே போராடிக்கொண்டு இருந்தார்கள்.

ஸ்ரீ என்ற எழுத்ததை வாகனத்தில் (1957) எழுத வேண்டும் என்ற அணர்த்த சட்டங்கள் உருவாக்கிய பல்முனைப் போராட்டங்கள் ஒரு பக்கம்.

பண்டார நாயகாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிங்கள இன வாத அமைப்பு (பிலிப் குணவர்த்ணே) கொடுத்துக் கொண்டுருந்த குடைச்சல் மறுபக்கம்.

தாங்க முடியாத பண்டார நாயகா தமிழர் கட்சிகளுடன் போடக்கூடிய ஓப்பந்தம் மூலமாக தன்னை பொது மனிதனாக காட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை.  இறுதியில் பண்டாராய நாயகா தந்தை செல்வா (26  ஜுலை 1957) செல்வம் ஒப்பந்தம் உருவனாது.

 "சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவது.  தமிழர்கள் வாழும் பகுதியில்கு முன்னோட்டமாக மண்டல குழுக்களை நிறுவது. "

தந்தை செல்வா என்று இன்று வரையிலும் இலங்கைத் தமிழர்களால் போற்றப்படும் செல்வநாயகம் அதன் பிறகு தான் பெரிதாக அத்தனை தமிழர்களாலும் கவனிக்கப்பட்டார்.

அரசாங்கத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த ஜெயவர்த்தனே கொதித்து எழுந்து கூக்குரல் இட்டர்ர்.

இப்போது அவருக்குண்டான வாய்ப்புகள் மிக அருகில் இருந்தது.

ஜெயவர்த்தேனே செயல்களைப் பார்த்ததும் பண்டார நாயகா அமைச்சரைவில் இருந்த மற்ற அமைச்சர்கள் தங்களால் முடிந்த பங்களிப்புகளை காட்ட ஆரம்பித்தனர்.  அத்தனை பேர்களுக்கும் பயம்.  தமிழ்ர்கள் ஆதரவு என்ற முத்திரை விழுந்து விடுமோ என்று.
தனக்கு எதிராக அணைவரும் ஒரே அணியில் திரண்டு நிற்க தந்தை செல்வாவுடன் போடப்பட்ட ஓப்பந்தம் வெறும் காகிதம் ஆனது.

காற்றில் பறக்க விடப்பட்டது.

அப்போது தான் பண்டாரா நாயகா விதியின் எழுத்து வெளியே தெரிய ஆரம்பித்தது.

"சிங்களர்களை ஆதரிப்பாய் என்று உன்னை அனுப்பினால் நீ தமிழர்களுக்கு ஆதரவாக மாறிக்கொண்டுருக்கிறாயே"?  வீட்டுக்கு சென்ற புத்த பிக்கு குண்டு (1959 செப் 25) மொழியால் பதில் உரைத்தான்.

பண்டாரா நயகா சுட்டுக்கொல்லப்பட்டார்.

நயவஞ்சகத்தால் தமிழர்களின் இலங்கை சரித்திரத்தில் இன்று வரையிலும்  நீங்காத கறைப்பக்கமாக இருந்த ஜீஜீ பொன்னம்பல கட்சியில் இருந்து வெளியேறி குடியரசு கட்சியை (1949 டிசம்பர் 18) தொடங்கி வளர்ந்து மள மளவென்று முன்னேறிக்கொண்டுருந்தார்.

தந்தை செல்வா தமிழர்களின் மொத்த உரிமையை மீட்பதற்காக திரு.மலை யாத்திரை ஒன்றை தொடங்க எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜெயவர்த்தேனே கண்டி யாத்திரையை புத்து பிக்குகள் தூண்டுதல்கள் மூலம் நடந்தேறியது.

செல்வா தொடங்கினார்.  ஜெயவர்த்தேனே முடித்து வைத்தார். இரு வேறு நோக்கங்கள்.  வேறு ஊர்கள். .

ஆனால் இருவர் பாதயாத்திரையின் மூலமாக, அதன் விளைவாக உருவாகிய கலவரத்தல் மொத்தமாக தமிழர்களின் சொத்துக்களும் வணிக வளாகங்களும் சூறையாடப்பட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் ஒரே இடத்தில் 100 க்கு மேற்பட்ட குடும்பத்தினர்களை தீ வைத்து முடித்து வைத்தனர்.

"என்னுடைய தந்தை தமிழர்களுக்காக வாக்குறுதி கொடுத்துச் சென்ற அத்தனை நல்ல விசயங்களையும் நான் உங்களுக்கு உறுதியாக செய்து நல்ல வழி காட்டுவேன்"

வாக்குறுதி கொடுத்து தமிழர்களின் ஆதரவை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் பெண் பிரதமர் பண்டார நாயகா மனைவி சிறீமாவோ பண்டாரா நாயகா

இன்றைய இலங்கை வாழ்வுரிமை பிரச்சனைகளின் மொத்தமும் 1956 முதல் 1960 வரைக்கும் சமாதன வழிக்கும்  சாத்வீக வழிக்கும் இடையே கிடந்து போராடி இறுதியில் அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டு தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகம் சொன்ன வாசகம் இது.

1948 டிசம்பர் 10 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியது.

"இன்று சிங்களர்களால் மலையகத் தமிழர்களுக்கு உருவான அவலம் நாளை பூர்வகுடி தமிழர்களுக்கும் உருவாகும்."

சிங்களமே ஆட்சி மொழி என்று தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது சிங்கள இடது சாரி கட்சி தலைவரான (எல்.எல்.எஸ்.பி) ஆர்.டி.சி.சில்வா என்ற சிங்கள தலைவர் அப்போது தீர்ககசரினமாக சொன்ன வாசகம்.

"இச் சட்டத்தின் எதிர்கால விளைவு தமிழர்கள் தனி நாடு கேட்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாக்கும்."

Friday, November 27, 2009

உறங்க வைக்கும் தாலாட்டு

உண்மை தான்.(தியாவின் பேனா உருவாக்கிய தாக்கம்)

இலங்கை மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள படித்த தமிழர்களுக்கு அரசியல் மற்றும் அது சார்ந்த உள்ளே உள்ள விசயங்களை ஆராய்ந்து பார்க்க நேரமும் விருப்பமும் இருப்பது இல்லை.
என்ன லாபம்?  நட்டம்?

சின்ன உதாரணத்தை பாருங்கள்.

கள்ளச்சாராயத்தை தொழிலாக வைத்து தொடங்குபவர் காலப்போக்கில் கல்வித்தந்தை ஆகி சமூகத்தில் உயர்ந்த மதிக்கும் நபராக மாறி விடுகிறார்.

கொலை, கொள்ளையில் தொடங்கி வட்டம், நகரத்தில் தொடங்கி மாவட்டச் செயலாளர் மாற்றம் பெற்று இறுதியில் நாட்டின் சட்டத்தை தீர்மானிக்கும் அமைச்சர் வரைக்கும் அந்தஸ்தும் பெற்று விடுகிறார்.

பாலத்தை திறக்க வேண்டும் என்றாலும் அவரின் அனுமதியும், ஆசியும் இருந்தால் மக்கள் பயன்படுத்த முடியும்.  50 கார்களின் அணி வகுப்பு, கூட்டப்பட்ட கூட்டங்கள் இல்லை என்றால் அவர் அங்கு வரும் போதே பல விசயங்கள் மாற்றம் பெற்று இருக்கும்.

நாடு மாற மாணவர்கள் முன்னேற என்று துணைவேந்தர் அறிவுரை சொன்னால் அது ஆட்சியாளர்களின் பார்வையில் நெகடிவ்.

நாடு சுபிட்சமாக சிறப்பாக இருக்கிறது என்று தினந்தோறும் மின்சாரம் கண்டுபிடித்தவருக்கு மின் வெட்டு மூலம் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தால் அது சிறப்பான ஆட்சி. பாஸிட்டிவ் எண்ணங்கள்.

அதுவே 25 வருடங்கள் உழைப்பும் கல்வியே கதியே என்று ஆகி அதிகபட்சமாக மாவட்ட ஆட்சியர் என்று மாற்றம் பெறுவர்களும், சிறுக சிறுக முதலீடு மூலம் உண்மையாக நேர்மையான வழியில் வந்து தொழில் அதிபர் ஆக மாற்றம் பெறுபவர்களும் கடைசியில் மேலே உள்ள இரு நபர்களுக்கு இடையில் தான் வந்து சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறார்கள்.

இதில் மற்றொரு அப்பாவி திருவாளர் பொதுஜனம் இருக்கிறார். கல்வி அறிவினால் கிடைத்த உன்னத பதவியை வைத்துக்கொண்டு பயந்து கொண்டே வாழ்க்கை முழுவதும் நாகரிக அடிமையாய் வாழ்ந்து செத்துப் போவது.

"இந்த சங்கநாத்தமே வேண்டாம்" என்பவர்கள் உன்னத உழைப்பு மூலம் கடல் தாண்டி ஓடிப்போய் "ஆளை விடுங்கடா சாமி" என்று அவர்களின் மொத்த தலைமுறைகளும் நாங்களும் இந்தியர், நானும் தமிழன் என்று பின்னால் வரும் குழந்தைகளுக்கு இந்தியாவை வரைபடத்தில் காட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மீண்டும் உள்ளே வராலாமா?  வேண்டாமா? என்று அவர்களின் மனம் சாகும் வரைக்கும் ஆடு புலி ஆட்டம் காட்டிக்கொண்டு இருக்கும்? அன்றைய தினம் படித்த இந்திய செய்திகள் அதையும் சமாதி கட்டி விடும்.

நல்ல அதிகாரிகள் நல்ல தலைவர்கள்,இந்தியா உண்மையாக வளர்ச்சி பெற்ற நாடாக வேண்டுமென்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலந்து இருந்தால் அருந்த முடியுமா?

எந்த நாள் இந்த விசம் வீர்யம் இழக்கும்?  காலம் மாற மாற இந்த ஒரு துளி தான் குடம் முழுக்க தளும்பிக்கொண்டுருக்கிறது.

சர்வாதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சாவு மணி அடித்த போதும் கூட உருவாகிக்கொண்டுருக்கும் அத்தனை புரட்சி எண்ணங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடுகளும் நம் கண் முன்னால் தான் இருக்கிறது.

நாம் உழைத்தால் நாம் முன்னேறலாம்.  வாய்ப்பு வராமலா போய்விடும் என்று தன்னை தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தங்களுடைய தனி மனித வாழ்க்கை மிகச் சிறப்பாக வாழும் மக்களையும் இந்தியா போன்ற ஒவ்வொரு நாடும் பெற்றுத்தான் உள்ளது.

உலகம் முழுக்க இது தான்.

ஜனநாயகத்தில் சிறப்பும் இது தான். வெறுப்பும் இது தான்.

63 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை.  சுதந்திரம் ஆன போது தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்த்து திட்டித் தீர்த்தார்கள்.

"வெள்ளைக்காரன் வெளியேறிவிட்டான்.  இனி இந்திய நாட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் அதிகம் உருவாக்கம் பெறுவார்கள்".

காரணம் ஜார்காண்ட் முன்னாள் முதல் மந்திரி மதுகோடா 15 வருடத்திற்கு முன் தினக்கூலி.  இன்று பணத்தை எண்ண சோம்பேறி பட்டுக்கொண்டு எந்திரத்தின் மூலம் எண்ணிக்கொண்டு இருக்கிறார்.  அவர் கொண்டு வாழ்ந்த எண்ணத்தால் இந்த அளவிற்கு உயர்ந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

சட்டம் கடமையைச் செய்யும்.  அது வரைக்கும் காலன் நம்முடைய காலத்தை காலாவதி ஆக்காமல் இருக்க தந்தை பெரியாரையும், சக்தியையும் வேண்டிக்கொள்வோம்.

எப்போது சிந்தனையாளர்களை விட கொள்கையாளர்கள் சிறப்பு பெற்றார்கள்?

உருவான அத்தனை உண்மையான கொள்கைகளும்,கலையும், கொலையாளர்களின் கையில் போய்ச் சேர்ந்த போது.
உருவான அத்தனை கொள்கைகளும், கலைகளும், பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்று எண்ணாமல் காசு வருமா? சம்பாரிக்க முடியுமா? என்று நோக்கம் மேலோங்கும் போதே அத்தனையும் கீழே போய்விட்டது.

அறிவு பின்னால் தள்ளப்பட்டு, திணிக்கப்பட்ட கொள்கைகள் முன்னால் மிதக்க ஆரம்பித்தது விட்டது. நாற்றத்தை காலப்போக்கில் பல பட்டங்களின் மூலம் நாமும் சகித்துக்கொண்டு வாழ பழகி விட்டோம்.
மொத்தமாய் எதைப்பார்த்தாலும் சந்தேகம்.

எல்லாமே பொய். எல்லாமே நிஜம்.

முக்கிய தமிழனின் அத்தனை கலைகள், கொள்கைகள், மூளையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அதன் உண்மையான நல்ல விசயத்தை கூட மறைத்து பணத்தின் அடிப்படையில் மூடத்தை முடிந்தவரைக்கும் பரப்ப ஆரம்பித்தனர்.

இப்போதைய வாழ்க்கை நன்றாக இருக்கும்?  வழித்தோன்றல்கள்?

பல ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து வாழ்ந்தாலும் நேற்று வரைக்கும் கேரளாவில் நடந்து கொண்டுருக்கும் அத்தனை நிகழ்வுகளை ஒரு கேரளாவின் கடைநிலை தொழிலாளி தெளிவாக விளக்குவார்.  வாய்ப்புக்கு காத்து இருப்பார்.  அன்று அச்சுக்கு ஆப்பு அடிப்பார்.

மார்வாடி, வட இந்திய அத்தனை தொழில் சார்ந்தவர்களும் மாநில மத்திய அத்தனை அபத்தங்களும் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய அவஸ்யத்தையும் புரிந்து கொண்டு பயணிப்பார்.

ஆனால் எப்போதும், தற்காப்பில் தமிழனை வேலைக்கு வைத்து இருப்பார்கள்?

தமிழன் என்பவன் எங்குமே பொதுப் பார்வையில் அடங்குவதால் இந்தியா இலங்கை என்று சேர்ந்தே தான் இங்கு பயணிக்க வேண்டியதாய் இருக்கிறது.

இலங்கையில் முதல் பிரதமர் சேனநாயகா வரைக்கும் தமிழர்கள் பெற்ற பரிசு.

1. இலங்கை என்பது ஒரே நாடு.
2. தமிழர்கள் என்பவர்கள் சிறு சிறு குழுக்களாக இயங்கிக்கொண்டுருப்பவர்கள். எனவே இவர்கள் சிறுபான்மையினர்.
3. ஆங்கிலேயர்களின் பார்வையில் மொத்த தமிழர்களும் சிறப்பானவர்கள், கல்வி அறிவை அதிகம் பெற்றவர்கள்.  ஆனால் ஆள தகுதி அற்றவர்கள்.
4.  அதனால் என்ன?  தங்களுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. சிங்களர்களை ஏன் ஆதரித்தார்கள்?  நெறிவு சுளிவு அறிந்தவர்கள்.  நிஜ வாழ்க்கையை கற்றவர்கள்.  அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள்.
ஆங்கிலேயர்களுக்கு சாதகம் என்று கேட்பதை பாதகம் என்று கத்தாதவர்கள்.

6. அவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கும் அளவிற்கு காய் நகர்த்தினால் எதிர்காலத்தில் நமக்கும் சிறப்பாக இருக்கும்.  காரணம் சேனநாயகாவிற்கு பிறகு அவரது மகனை தான் அன்றைய ஆங்கிலேய கவர்னர் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஆட்சி அமைக்க அழைத்தார்.  பின்னால் உருவான உணவு பஞ்சத்தை சமாளிக்க முடியாமலும், சரியான நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தாலும், சிங்கள இன வெறியை தூண்டி பண்டார நாயகா ஆட்சியை பிடித்ததும் இதன் தொடர்ச்சியே.

அந்த நிமிடம் வரைக்கும் பிரிட்டன் படைகள் இலங்கையில் தான் இருந்தது.

6.  தொடக்கத்தில் உருவான தமிழ் தலைவர்களான சர் அருணாச்சலம், அவருடைய வழித்தோன்றல்கள் சர் பொன்னம்பலம் என்று அத்தனை பேர்களும் ஆங்கிலேயர்கள் மத்தியில் சிங்களர்களை விட பல மடங்கு சிறப்பு பெற்றவர்கள்.  ஆனால் காந்தியடிகளைப் போலவே பொதுப்பார்வை பார்த்தவர்கள்.  ஆனால் இவர்களுடைய பார்வைகள் அத்தனையும் புழுத்துப் போன பார்வைகள் மட்டுமே கொண்டு வாழ்ந்த மொத்த சிங்கள தலைவர்கள் மத்தியில் செல்லுபடி ஆகவில்லை.

7.  காந்தி தன்னை தானே வருத்திக்கொண்டு "நீ சுதந்திரம் தந்தால் தான் ஆச்சு" என்று போராடினார்.  நேரு தொடர் ஓட்டத்தில் இருந்தார்.  ஆங்கிலேயர்களிடம் இருந்த பார்வை அத்தனையும் சிங்கள தலைவர்களிடம் எதிர்பார்த்த இவர்கள் பார்வை என்பதை எதனுடன் நீங்கள் ஓப்பிட முடியும்.  "காற்று அடிக்கும் போது மாவு விற்ற கதை."

8.  சிங்களர்களிடத்திலும் ஒற்றுமை இல்லை.  அடுத்த ஆட்சிக்கு நானா? நீயா? என்று தான் தொடக்கம் முதல் போராடிக்கொண்டுருந்தார்கள்.   ஆனால் ஒரே ஒரு விசயத்தில் மிக கவனமாக இருந்தார்கள்.  ஒவ்வொரு தலைவரும் உள்ளே வரும் போது எதிர்கால தமிழர்களின் அடிப்படை சுவடுகள் கூட இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆட்சியிலும் மிக தீர்க்கதரிசன பார்வையில் காய் நகர்த்திக்கொண்டே வந்தார்கள்.  வென்றார்கள்.

9.  ஒவ்வொரு அதிபருக்கும் உலகமெங்கும் ஒரு ராசி உண்டு.  ஆனால் இன்றைய மகிந்த ராஜபக்சே வுக்கும் மொத்த இலங்கை அதிபர்களை விட சிறப்பான ராசியும் பார்வையும் உண்டு.  காரணம் கிரஹப்பிரவேசம் நடத்தியதும் இவர் தான்.  மூடு விழா நடத்தியதும் இவர் தான்.  உழைத்தவர்கள் பல பேர்கள்.  உலகப்புகழ் பெற்றது இவர் மட்டுமே.

என்ன ஒன்று?

இனி சரித்திர பக்கத்தில் ஹிட்லரின் தம்பி இல்லை என்ற ஆதங்கமும் இந்த தங்கத்தலைவரை பார்க்கும் போது படிக்கும் போது தீர்ந்து விட்டது..

குடியுரிமைச் சட்டம் மூலம் இன்றைய அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமான மொத்த தமிழர்களையும் கூறாக போல் பிரித்தது மட்டும் அல்லாமல்  நீங்கள் அனைவரும் இலங்கையில் வாழவே தகுதியில்லை என்கிற அளவிற்கு தீர்ககதரிசனமாய் பல விசயங்களை அட்டகாசமாக செயல்படுத்தி போட்ட அஸ்திவாரத்தை அன்றே சிங்கள தலைவர்கள் பலப்படுத்த தொடங்கி விட்டனர்

இவர் மட்டுமல்ல ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு தலைவர்களும் மிகச் சிறப்பாக தந்திரமாக.  இதில் மற்றொரு ஆச்சரியம் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல ஆசைகளினால், வேறு வழியில்லை என்ற இரு நோக்கத்தில் தமிழ் தலைவர்கள் தான் இவர்களின் ஆட்சியை தாங்கியவர்கள், வலுப்படுத்த உதவியர்கள்.

அத்தனை பேருமே ஆயுதம் ஏந்தாமல் காந்திய வழியில் வருபவர்கள்.

தமிழர்கள் எப்போதும் பல கட்சிகள், பல நோக்கங்கள், பல கொள்கைகள்.  தொடக்கம் முதல் சிலோன் என்ற பெயர் தான் இருந்து வந்துள்ளது.  1972 அன்று தான் சமஸ்கிருத கலப்புடன் SRILANGA என்று மாற்றம் பெற்றுள்ளது.

பட்டியலைப் பாருங்கள்.

தொடக்கத்தில் சிலோன் சீர்திருத்த அமைப்பு, சிலோன் தேசிய சங்கம், யாழ்பாண சங்கம்.

இது மூன்றும் சேர்ந்து (1) சிலோன் தேசிய காங்கிரஸ் (சர். பொன்னம்பலம் அருணாச்சலம்)  இவருடைய கல்வி தகுதி, உழைப்பு, கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது.

அரசியல் அரிச்சுவடியை,மொத்த தந்திர பாடங்களை கற்றுக்கொண்டு இதில் இருந்து உருவானது தான் ஐக்கிய தேசிய கட்சி (சேனநாயகா).

ஆனால் இதில் இருந்தும் பல பிரிவுகள் பின்னால் பிரிந்தாலும் அத்தனை பேர்களும் ஆட்சி வரைக்கும் வந்து வெற்றிக் கொடி நாட்டினார்கள். மொத்தமாக தமிழர்களின் வாழ்க்கையை சிதைக்க தங்களால் ஆன அத்தனையும் மறக்காமல் செய்தனர்.

(2) யாழ்பாணம் இளைஞர் காங்கிரஸ்.  (இவர்கள் தொடக்கம் முதல் தேர்தல் புறக்கணித்து மொத்தமாக விடுதலை வேண்டும் என்றவர்கள்)

(3) சிலோன் விவசாய காங்கிரஸ் ( இதில் சிங்களர்களுடன் தமிழ் தொழிலாளர்களும்)

(4)  முஸ்லீம் அமைப்புகள் (1946)

(5) இந்திய இலங்கை காங்கிரஸ் (தொண்டைமான் தலைமையில்)

(6) சிலோன் இந்திய காங்கிரஸ்

(6) அனைத்து சிலோன் தமிழ் காங்கிரஸ் (ஜீஜீ பொன்னம்பலம்)
    (தமிழ்நாட்டில் திமுக வில் பிரிந்த அதிமுக போல்)

(7) இலங்கை தமிழரசு கட்சி ( தந்தை செல்வா)

இது போக வெளியே தெரியாமல் பல கூறாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் சங்கங்கள்.

இதிலும் தொடர்வதிலும் உப பிரிவுகள் பிரிந்து இன்றைய காலகட்டத்தில் பொது வேட்பாளர் பக்கம் ஆதரிக்கப்போகும் தமிழர்களின் கட்சி வரைக்கும் பல உண்டு.

மேலே சொன்ன பட்டியல் பண்டார நாயகா ஆட்சியில் வரும் வரைக்கும் மட்டுமே.

வன்முறை தேவையில்லை என்று சொல்லும் அத்தனை பேர்களும், அன்றே இந்த ஜீஜீ பொன்னம்பலத்தின் துரோகத்தை இனம் கண்டு சரி செய்து இருந்தால் இன்றைய மொத்த தமிழனமும் அழிந்து போய் இருக்காது.  இந்த சரித்திர பக்கங்களில் இந்த சிங்கள தலைவர்கள் உருவாக்கிய அணர்த்தங்களை மட்டுமே தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

காலணி ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆங்கிலேயர்கள் கூட ஒரே ஒரு முறை தான் ஆங்கிலேயர்கள் எதிரே வரும் போது முட்டி போட்டுக்கொண்டு நடந்து வர வேண்டும் என்று இந்தியாவில் ஒரு அசிங்க சட்டத்தை உருவாக்கினார்கள்.  ஆனால் உருவான எதிர்ப்பால் அதுவும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

ஆனால் சிங்களர்கள் காலம் முழுக்க முட்டி மட்டும் போட்டால் போதாது.  முழுமையான இனமும்  அழிந்து போய்விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு இன துவேச நடவடிக்கைகளை மிக சிறப்பாகத் செயல் முறைப்படுத்தி இன்று வெற்றியும் கண்டு விட்டனர்.

ஏன் 1970க்கு பிறகு ஆயுதம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.  அது தான் இறுதி வாய்ப்பு என்று பாதை மாறிய கதைகளும், போராட்டங்களும் உருவானது?

மாற்றுக்கருத்து சொன்னவர்களை பிரபாகரன் சர்வாதிகாரத்தின் மூலம் ஏன் கொன்றார்?  ஏன் விரும்பவில்லை? போன்ற பல காரணங்கள் ஒவ்வொன்றையும் உள் வாங்கிக்கொண்டே வாருங்கள்.

இன்றைய நவீன உலகத்தில் தூக்குத் தண்டனை என்பது கூட அசிங்கத்தின் உச்சக்கட்டம் என்று மனித நாகரிகம் சொல்கின்றது.  ஆனால் இன்று வரையிலும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இம்மி அளவும் தங்களுடைய கருத்துக்களை மாற்றத் தயாராய் இல்லை.  காரணம்?

அவர்களுக்குத் தான் தெரியும் வலியும் உருவான வழியும்?

இலங்கையில் பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் வாழ்ந்த தலைவர்கள், நோக்கங்கள், அவர்கள் மூலம் பெற்றவைகள் ஒவ்வொன்றும் நாம் உணர்ந்து உள்வாங்க வேண்டும்.

சக மனிதனை கொல்வதும், சக மனிதனை வெடிகுண்டாக மாற்றம் பெறச்செய்தும், கொல்லச் செய்வதும் முறையா?  தகுமா?  அருவருப்பாக இல்லையா?  ஆயிரம் கேள்விகள் நமக்குள் உண்டு.

உலகம் மாற்றம் அடைந்து வந்து கொண்டு தானே இருக்கிறது.  அவசரமாய் செயல்பட்டவர்கள் என்ன சாதித்தார்கள்?  பொறுமையாக இருந்து இருந்தால் இந் நேரம் இத்தனை பெரிய அழிவு உருவாகி இருக்குமா?

நம் முன் எத்தனையோ விடை தெரியாத கேள்விகள்.

சிங்கள தலைவர்களின் சட்டங்கள், அதனால் வாழ்க்கையும், வாழ்வுரிமையையும் இழந்த அன்றைய தமிழர்கள்.  ஆனால் அன்று சிங்கள தலைவர்களை தாங்கி நின்ற தமிழர்கள் என ஒவ்வொன்றும் நமக்கு பல படிப்பினைகளை கற்றுத் தருகிறது.

சுதந்திரம் அடைந்து முதல் ஆட்சி அதிகாரத்திற்குள் உருவான அக்கிரமத்தைப் பார்த்தோம்.  ஆனால் அப்போதே மறைமுகமாக குடியேற்றம், துரத்தி அடிக்கப்படுதல், வாழ்க்கையை சூறையாடுதல் போன்ற பல விசங்களை அன்றே தொடங்கி படிப்படியாக படிக்கும் கல்வி வரைக்கும் கொண்டு வந்து கை வைத்தார்கள்.
சரியா? தவறா? பயணிக்கும் போது பாதை புலப்படும்.

Thursday, November 26, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே

சிங்களர்களின் தந்தை என்று அழைக்கப்படும் சேனநாயகாவின் முழுப்பெயர் டட்லி ஸ்டீபன் சேனநாயகா.  இவர் மட்டுமல்ல இன்று வரைக்கும் இலங்கையை ஆண்டு கொண்டுருக்கும் மொத்த அதிபர்களின் முழு நீளத்தை பார்த்தால் கிறிஸ்துவம் தழுவிய சிங்களர்களே.

தமிழர் இனத்தில் தொடங்கி கிறிஸ்துவத்தில் நுழைந்து இந்த இரண்டுங்கெட்டான்கள் இன்று வரையிலும் மொத்த சிங்களர்களின் ஆதர்சண கடவுள் போல் காட்சி அளிக்கிறார்கள்.  அதனால் தான் உண்மையான புத்தரின் கொள்கைகள் இன்றுவரையிலும் புதைக்கப்பட்டதாய் இருக்கிறது.

சேனநாயகா தொடக்கத்தில் தமிழரால் பொதுவாக உருவாக்கப்பட்ட "சிலோன் தேசிய காங்கிரஸ்" நிறுவன உறுப்பினராக இருந்தவர். தனியாக "ஐக்கிய தேசிய கட்சி"யை தொடங்கி முதல் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஜெயித்து வந்தாலும் மைனாரிட்டி அரசாங்கம் தான்.

ஆட்சியில் அமர்ந்த போது தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அன்று இருந்த மொத்த உறுப்பினர்களில் சிங்களர் கட்சி 68 பேர்கள்.  சிலோன் தமிழர்கள் 13 மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் 7 பேர்கள். மற்றவர்கள் முஸ்லிம்கள், சுயேச்சைகள்.

தமிழர்களின் சார்பாக இந்திய இலங்கை காங்கிரஸ்,  சிலோன் தமிழ் காங்கிரஸ்

அன்றைய தேர்தலில் சேனநாயகாவின் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்ட அத்தனை தமிழ் தலைவர்களுக்கு தோல்வி.  யாழ்பாணத்தில் போட்டியிட்ட ஜீஜீ பொன்னம்பலம் கூட இந்திய வம்சாவளி மொத்த உரிமைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் என்று உறுதி மொழி அளித்து , ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டு தான் வெற்றி பெற முடிந்தது.

தனிப்பெரும் கட்சியாக சேனநாயகா உள்ளே வந்தாலும் அவர் மனதின் உள்ளே அலை அலையாக கோப கொந்தளிப்புகள்.

தமிழர்கள் என்ற பெயரில் பூர்வகுடி, இந்திய வம்சாவளி என்று மொத்தமாய் ஆட்சி அதிகாரத்திற்கு உள்ளே வந்த இந்த கதையை இப்பவே சமாதி கட்டிவிட வேண்டும் என்று கையில் எடுத்த ஆயுதம் தான் தோட்டத் தொழிலாளர்கள்.

இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம்.

அவருடைய அருள் உரையும் அப்படித் தான் இருந்தது.

"சிங்களர்களுக்கு என்று இருப்பது இந்த ஒரே ஒரு சிறிய நாடு. வாழ வந்தவர்கள் நம்முடைய மொத்த உரிமையையும் எடுத்துக்கொண்டு வாழ வேண்டிய சிங்களர்களை அவர்களின் உரிமையை புறந்தள்ளுவதைப் பார்க்கும் போது எப்போது தான் இந்த சிங்களர்கள் தன்னை உணர்வார்களோ?"

பறட்டை பத்த வச்ச மாதிரி கொளுத்தி போட்டு விட்டதோடு மட்டுமல்ல.  தீர்மானமாய், தீர்க்கதரிசமான முன்னேற்பாடுகளையும் செயல்படுத்த தொடங்கினார்.

பாகிஸ்தான் பிரிந்த பிறகு ஜின்னா கூட அங்கு போனதும் உரையாற்றிய உரையாடல்களை பார்த்தீர்களேயானால் ஒரு வகையில் பாவ மன்னிப்பு போல் தான் உணர்ந்து பேசி உள்ளார்.

 "எதிர்காலத்தில் மதம் சார்ந்த பாகிஸ்தானாக இருக்கக்கூடாது.  அப்போது தான் நல்ல எதிர்காலம் இந்த நாட்டுக்கு உருவாகும்".

ஆனால் அதை இன்றுவரையிலும் பின்பற்ற விரும்பாத பாகிஸ்தான் தலைவர்கள் உருவாக்கிய "பரிசுத்தமானவர்கள் வாழும் பூமி" இன்று தினந்தோறும் பிணம் சுமக்கும் பூமியாக ஆகி விட்டது.

ஆனால் இலங்கையில் சேனநாயகா குடியுரிமைச் சட்டத்தை கொண்டு வந்த போது தன்னுடைய அமைச்சரவையில் இருந்த தமிழர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், பதவி ஆசை காட்டி ஜீஜீ பொன்னம்பலத்தை உள்ளே இழுத்து வெற்றிகரமாக தோட்டத் தொழிலாளர்களை நாடோடி ஆக்கினார்.

கொண்டு வந்த தீர்மானம்(சிலோன் குடியுரிமைச் சட்டம்) அட்டகாசமாக(1948 ஆகஸ்ட் 19) நிறைவேறியது.

தொடக்கத்தில் மலையகத் தமிழர்களுக்கு மொத்த ஆதரவு என்று சொன்ன ஜீஜீ பொன்னம்பலம் ஆறு உறுப்பினர்கள் கொண்ட தன்னுடைய கட்சியில் மூன்று பேர்களை ஆதரவாகவும் மூன்று பேர்களை எதிர்த்தும் போடச் செய்து தனது அமைச்சர் பதவியை உறுதிபடுத்திக்கொண்டார்.

இவருடைய கட்சியில் உறுப்பினராக இருந்த தொண்டைமான் பிறகு வெளியேறி உருவாக்கிய(1949 டிசம்பர் 9) கட்சி தான் "இலங்கை தமிழரசு கட்சி".  அப்போது மலையகத் தமிழர்களுக்கு என்று பாடுபட்டுக்கொண்டுருந்த தந்தை செல்வநாயகத்தை தலைவராக ஏற்றுக்கொண்டார்.

சேனநாயகாவின் அமைச்சரவையில் இருந்து தீர்மானத்தை எதிர்த்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறியவர் சுந்தரலிங்கம்.

அப்போது நடந்த வாக்குவாதத்தில் அரசாங்கத்தில் இருந்த ஜெயவர்த்தனே நீங்கள் இந்திய ஆதரவாளர்? என்றதும் அதற்கு தொண்டைமான் சொன்ன வாசகம்.

"என்னை கண்டித் தமிழர் என்பதில் தான் பெருமைபடுகின்றேன்.  ஆனால் இந்த இலங்கை மண் எங்களுடைய முன்னோர்களின் உழைப்பால் இன்று சொர்க்க பூமியாக மாறியுள்ளது"

இலங்கையின் இன்றைய தேசியக் கொடி சிங்கம் தனது காலில் ஒரு கத்தியை வைத்து இருப்பது போல் இருக்கும்.  இந்த தேசிய கொடியைத் தான் இலங்கையின் தேசியக் கொடியாக நாம் அணைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சேனநாயகா சொன்ன தத்துவம் இது.

"கடைசியாக ஆண்ட மன்னர் (கண்டி) ஒரு வகையில் அவரும் தமிழர் தானே?"  அணைவரும் கப்சிப்.

1901 வரைக்கும் இலங்கை ஜனத்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த தமிழர்களையும் ஒரே பிரிவின் கீழ் தான் கொண்டு வந்து இருந்தனர்.  1911 முதல் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பிரிவை உருவாக்கி ஆங்கிலேயர்கள் உருக்குலைத்தனர்,

1946 கணக்குப்படி மொத்த இலங்கையின் ஜனத்தொகை  67 லட்சம்.  இதில் இந்திய வம்சாவளி தமிழர்கள் 8 லட்சம். இந்திய வம்சாவளி முஸ்லீம்கள் 44 ஆயிரம்.  இலங்கை பூர்வகுடி தமிழர்கள் 7.3 லட்சம்.  ஏறக்குறைய அன்று மொத்த தமிழர்கள் 25 சதவிகிதம் .

இன்று மொத்த இலங்கையின் முகாமில் இருப்பவர்கள் மூன்று லட்சம் என்று கணக்கு சொல்கிறார்கள்.  மற்ற இலங்கையில் பரவியிருக்கும் தமிழர்களையும் எண்ணிக்கையில் வைத்தாலும் மொத்த வாழ்ந்த இரண்டு தலைமுறையின் மற்ற தமிழ் மக்கள்?

ஆங்கிலேயர்களிடம் பேசி ஆட்சிக்கு வந்தாகி விட்டது.
தமிழர்களை யோசிக்க வைத்து சிங்கள கொடியை கொண்டு வந்தாகி விட்டது.
தமிழனை விலைக்கு வாங்கி தமிழர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை எடுத்தாகி விட்டது.

வயது ஆகிக்கொண்டு இருக்கிறது.  வாரிசை கொண்டு அமர்த்துவது தானே முறை.  ஆனால் அங்கு ஒரு திருப்பம்.

மலையகத்தமிழர்களின் நாடோடியாக ஆக்கப்பட்டதன் பின்னால் உள்ள கதை இன்னமும் சிறப்பாக நம்மை சிந்திக்க வைக்கும்?
இந்த சட்ட தீர்மானத்தை வெற்றிகரமாக சட்டமாக கொண்டு வர உதவியர் அமைச்சர் பதவியின் காரணமாக ஜீஜீ பொன்னம்பலம்.
ஆனால் பல்வேறு போராட்டத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட சட்ட விதிகளின்படி ஐந்து வருடங்கள் இலங்கையில் தங்கி இருந்ததற்கான சான்றிதழ்களோடு, விண்ணப்பத்தை அரசாங்கத்திற்கு அளிக்க உத்தரவு இடப்பட்டது. அரசு 2 வருடங்கள் அதற்கு காலக்கெடு விதித்து இருந்து.

அன்று இருந்த பத்து லட்சத்துக்கு அதிகமான மக்களில் 2 லட்சத்துக்கு குறைவானோர் இந்தக் காலக்கெடுவுக்குள் சமர்பித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டனர்.  காரணம் தொழிற்சங்க தலைவராக இருந்த தொண்டைமான் காட்டிய வழி " மொத்தமாக புறக்கணியுங்கள்.  இது ஒரு ஏமாற்று வேலை".  

மொத்தத்திலும் படிப்பறிவு இல்லாதவர்களின் கதி அதோகதியாகிப் போனது.
நான்கு மாதங்கள் முடிவுக்கான நேரம் நெருங்கிய சமயத்தில் தொண்டைமான்  அவரைச் சார்ந்தவர்கள் சமர்பித்து உறுதிபடுத்திக்கொண்டனர்.

பாதிக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பம் தவறுகளை சுட்டிக்காட்டி பூதாகரப்படுத்தி நிராகரிக்கப்பட்டது.  பலருக்கு விண்ணப்ப பாரம் வழங்கப்படவே இல்லை.  தெளிவாக செயல்பட்டு இருந்தால் பாதிக்கு மேற்பட்டோர் குடியுரிமை பெறுவதற்கான அத்தனை சாத்யக்கூறுகளும் அன்று இருந்தது.
மலையக மக்களுக்கு என்று பல சங்கங்களை உருவாக்கி, தினந்தோறு பல சச்சரவுகளையும் வளர்த்து விட்டுக்கொண்டு,ஆண்டு சந்தாக்களை வசூல் செய்த அத்தனை தலைவர்களும் நினைத்து இருந்தால் மொத்த மக்களின் விண்ணப்பம் தொடங்கி, தேவைப்படும் ஆவணம் முதற்கொண்டு அத்தனை விசயங்களையும் கனகச்சிதமாக செயல்பட்டு இருக்க முடியும் தானே?

மலையகத் தமிழர்கள் தங்கி இருந்த மொத்த வாழ்க்கைக்கான வசதிகளும் ஏறக்குறைய மாட்டுத் தொழுவம் போன்ற இடங்கள். அவர்களின் கல்வி அறிவு அற்ற அறியாமை பயன்படுத்தி பலரும் கூறு கூறாக பிரித்து மேய்ந்தார்கள்,

அன்றைய காலகட்டத்தில் மலையக தமிழர்களை பெரிதாக கை தூக்கி விட்டவர்கள் என்று எவருமே பெரிதாக தெரியவில்லை.  அவர்களும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு எவரை நம்புவது என்று திண்டாட்டமாக வாழ்ந்தவர்களின் மொத்த கண்ணீர் கதையும் மிக நீளமானது.

இன்று வரையிலும் இலங்கையின் மொத்த பொருளாதாரத்திற்கும் முக்கிய காரணமாக இருந்த அத்தனை பேர்களும் இந்தியாவில் இருந்து சென்று மலைகளுடன் மண்ணாகிப் போனவர்கள். அன்று இருந்த அத்தனை மலையக தமிழர்களும் காலப்போக்கில் புதைபொருளாக மாற்றம் பெற்றனர்.  சிலர் நாடு திரும்பினர்.

மீதி இருந்த, குடியுரிமையில்லாமல் மேற்கொண்டு வாழ்ந்த மக்களை குண்டர் படைகளைக்கொண்டு, அதிகாரத்தை வைத்து விரட்டி துரத்தி அடித்தனர்.

தமிழர்களுக்கு சிங்களர்கள் பொதுவான எதிரி. ஆனால் மொத்த வாழ்க்கையில் தமிழர்களுக்கு அன்று முதல் இன்று வரையிலும் தமிழன் தானே எதிரி?

சிங்களர்களின் அவதாரமாக உருவான சேனநாயகா ஒரு தந்தையாக இருப்பவர் என்பவர் என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் தீர்க்கதரிசன பார்வையில் செயல்பட்டு தொடக்க ராஜபாட்டையை ஆரம்பித்து வைத்தார்.

குதிரை சவாரியின் போது, கீழே விழுந்தவர் பின்னாளில் மாரடைப்பால் காலமானார்.  மகன் டட்லி சேனநாயகாவை (அமைச்சர்) வாரிசாக நியமிக்க முற்படுவதற்குள் அப்போது அரசாங்கத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த பண்டார நாயகா முந்திக்கொண்டார்.

உள்ளே இருந்தால் இனிமேலும் பப்பு வேகாது என்று அதிரடியாக (1951 செப் 2) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தொடங்கி தன்னுடைய அதிரடி மக்கள் சேவையை தொடங்க மக்களிடம் சென்றார்.

Wednesday, November 25, 2009

பராசக்தி வாழ நிலம் வேண்டும்

"அதற்கு நீங்கள் "சர்வதேச அரசியல்" படித்து தெரிந்து கொள்ளவேண்டும்"
போகிறபோக்கில் "பேராண்மை" படத்தில் வரும் வசனம் இது.  அந்த மாணவியைப் போலவே நமக்கும் இது குமட்டும் சமாச்சாரம் தான்.

உள்ளுர் வியாதிகளின் தொந்தரவே தாங்க முடியவில்லை..  இதில் உலகத்தில் உள்ள தொற்று நோய்களையும் ஏன் வாங்கிக்கொள்ள வேண்டும்.

அதுவும் இந்த இலங்கைத் தொடரில் உங்களுக்கு இது கேலிக்குறியாகவும் இருக்கும்.  அந்த சிந்தனைகளை ஒரு ஓரமாக வைத்துக்கொண்டு உள்ளே புகுந்து வெளியே வந்து விடுங்கள்.

பின்னால் உதவும்.

அடுத்து வரும் சரித்திர பக்க நிகழ்வுகள் அனைத்தும் சிங்கள தமிழர்களின் பிரச்சனைகள் மட்டுமே.  எந்த நாடும் உள்ளே வரவில்லை.  அல்லது  செய்திக்காக வந்து சேகரித்தவர்கள் மட்டுமே.

பின்னால் வரப்போகும் ஜெயவர்த்தனேக்கு அன்று இருந்த "அமெரிக்க பாசம்" கூட முழுமையானது அல்ல.  அது போல அன்று அமெரிக்காவுக்கு அப்போது இலங்கை என்ற நாடு இன்றைய முக்கியம் போல அத்தனை அவசரமும் இல்லை.

 "சர்வதேச அரசியல்" இருந்தால் மட்டுமே உங்களால் சில விசயங்களை தீர்மானமாக புரிந்து கொள்ள முடியும். முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் "முள்ளிவாய்க்கால்" குறித்தும், பிரபாகரன் ஆளுமையில் நடந்த தவறான புரிந்துணர்வுகள் சிலவற்றையாவது முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கியமானதை நீங்களாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

அடுத்து இந்த இனம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? என்பதையும் உணர்த்தும்?

"ஜனநாயகம் ஒன்றே போதும்.  அதுவே புனிதமானது. காலம் முழுக்க அதுவே சிறப்பானது?" அன்று முதல் இன்று வரையிலும் இந்தியாவின் ராகம் தாளம் பல்லவி இது.

பசுமை போர்த்திய மலைகள். சொர்க்கம் என்பது மொத்த வீடு. வீட்டில் நான்கு வாசல்கள்.  பள்ளிக்கு செல்லும் போது எந்த வாசல் வழியாக வருவாரோ?  நான்கு புறமும் கார்கள்.

நீங்கள் செவி வழியாவது கேட்டு இருப்பீர்கள்.  இந்திய முதல் பிரதமர் ஜவர்கஹலால் நேருவின் தொடக்க வாழ்க்கையை.  அவரது தகப்பனார் மோதிலால் நேரு வாதாட வரவழைக்க வேண்டும் என்றால் இன்றைய ராம் ஜெத்மலானியின் ஒரு நாள் தொகை.

அன்றைய காலகட்டத்தில். பணத்தின் மதிப்பையும் அவர்களின் சொத்தின் மதிப்பையும் கணக்கில் கொள்ளுங்கள்.

மொத்த அவரின் பரம்பரையில் மூன்று துர்மரணங்கள்.  நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் மரணம் அளித்த பரிசு? மனிதம் குறித்த கேள்விகள்?

இதே நேரு மொத்த சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் இருந்த நாட்கள், அனுபவித்த நரக வேதனைகள் (காண்க இந்தியா சுந்திரத்தில்) .

" இன்று கைது செய்து புகைப்படத்திற்கு டாட்டா காண்பித்து அடைக்கப்பட்ட மண்டபத்தில் விருந்து உண்டு மாலையில் விடுதலை " என்ற செய்திகள் நமக்கு பல அரசியல் அறிவுகளையும் உணர்த்துகிறது.

"என்ன தாத்தா நீங்கள் கோவணத்தை துண்டையும் கட்டிக்கொண்டு பங்கிங்காம் அரண்மணைக்கு சென்றுவிட்டால் மொத்த இந்தியா ஏழ்மையும் நீங்கி விடுமா? "  காந்தியைப் பார்த்து இன்று வரையிலும் அனைவரும் கேட்கும் கேள்வி.

 நாம் பக்கத்து சந்து வரைக்கும் போவதற்குக் கூட பல முறை நமது ஒப்பனையை பத்து முறை சரி பார்த்துக்கொள்கிறோம்?

நாம் தான் நம்முடைய தராதரத்தை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

" சில்லறை(?)க் கட்சிகளை வைத்துக்கொண்டு ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி புரிந்து விட்டீர்களா?  பம்பாய் கலவரம் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு அவர்களாகவே வந்து விட்டார்கள்.  இனிமேலாவது சிரிப்பீர்களா? "

பன்மொழி வித்தகர் இலங்கைப் பிரச்சனைக்காக இந்திரா காந்தியால் அனுப்பப்பட்ட பிவி நரசிம்மராவ்.

"நான் தூங்கும் போது எடுத்த புகைப்படத்திற்கு நான் பொறுப்பாக முடியுமா?"  அதிர்ஷ்ட விவசாய முன்னால் பிரதமர் தேவகௌடா.

"நான் கூட இந்த நாட்டை ஆளுமை செய்ய முடியும் என்று கனவில் கூட நினைத்து இல்லை.  இது தான் இந்தியாவின் சிறப்பான ஜனநாயகம்".  

மூளை முழுக்க புத்தியை மட்டும் பெற்று தன் தனி மனித உழைப்பால் மட்டும் வளர்ந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.  பிறந்தது பாகிஸ்தான் நகரத்தில்.

இது இந்தியாவின் 63 ஆண்டுகால ஜனநாயக அரசியலின் மேடு பள்ளங்கள்.

" பூபாள ராகமும் உண்டு. பூகம்ப வாழ்வியல் வேதனைகளும் உண்டு.  பொழுது புலர்ந்தால் உழைத்தால் தான் நாங்கள் வாழ முடியும்" என்பவர்களும் இன்றுவரையிலும் உண்டு.

"சூரியன் அஸ்தமணம் இல்லாத நாடு" .  இன்றைய பெரியண்ணா அமெரிக்காவைக் கூட தனது "காலணி" போல் வைத்து இருந்த பிரிட்டன்.

இன்று?

400 வருடங்கள் கொண்ட சரித்திரத்தை கொண்ட அமெரிக்கா என்ற ஹிட்டான "நாட்டாமை" திரைப்படத்தின் இடைவேளை இன்றைய காலகட்டத்தில் வந்து உள்ளது.  வியப்படையாதீர்கள்.

பச்சையாக சொல்லப்போனால் ஒபாமா சீனாவிற்கு வந்தது "தர்மம் பண்ணுங்க சாமி".

சிட்டி வங்கி சீட்டிங் வங்கியானதும், தொடர்ந்து 125 வங்கிகள் வராக்கடன் வாங்கியாக ஆனதும் சீனா அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள 40 லட்சம் கோடிகளை காப்பாற்றுவதற்காக?

சீனா திருப்பி எடுத்து விட்டால் இன்றைய அமெரிக்கா வெறும் பேரிக்காய்.

"வெர்ஸெயில் ஓப்பந்தம்" மூலம் (1783) அமெரிக்க தந்தை ஜார்ஜ் வாசிங்டன் மூலம் தொடங்கிய படம் இது.  இன்று உலகம் முழுக்க வளர்ந்து கொண்டுருக்கும் பல நாடுகளுக்கு இந்த நிமிடம் வரைக்கும் படபடப்பை தந்து கொண்டுருக்கும் அமெரிக்காவின் புனித சேவைகள் இன்றுவரையிலும் நின்றபாடில்லை.

"அடிமைத்தளை" நீக்கிய (1860) ஆபிரகாம் லிங்கன் தொடங்கிய ஓட்டம்.

 "பேசுற ஆங்கிலத்தையாவது நல்லா பேசு ராசா?" என்று பெருமையுடன் சொல்லப்பட்ட Shoe புகழ் புஷ் காலத்தில் தான் ஜெர்க் ஆகி ஒரு திருப்பு முனையில் வந்து நின்றுள்ளது.  திரைப்படத்தில் சொல்வார்களே?   "நாட்".

இந்த நாட்டு தான் "இஸ்லாமிய பயங்கரவாதம்"  என்று  அவர்களை இன்று நாண்டு கொல்ல வைத்துள்ளது.

தனக்கு முள் குத்திவிட்டால் உலகம் முழுக்க "பயங்கரவாதத்தை எதிர்த்து ஒரே அணியில் நிற்கவேண்டும்"

அவர்கள் பார்வையில் இந்தியா என்பது "அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் மட்டுமே இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்"

அமெரிக்க உலக வர்த்தக மையத்தை (26 பிப்ரவரி 1993) யூரியா நைட்ரேட் கொடுத்த ஆட்டத்தில் மொத்த அமெரிக்க ஆட்சியாளர்களின் அத்தனை சுயரூபமும் அன்று தான் வெளிவரத் தொடங்கியது.

பயங்கரவாதம் என்பதை வளர்த்தால் என்ன கிடைக்கும்? என்பதை இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது (11 செப்டம்பர் 2001) விடையாக கிடைத்தது.
கென்னடியின் சிஷ்யர் பில் கிளின்டண் சிலவற்றை நமக்குத் தந்தார்.  பெட்ரோலிய எண்ணைய் வியாபாரத்தை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும்? என்பதை மொத்தமாக அப்பா புஷ்ம் மகன் புஷ்ம் புஸ்வானம் போல் கொளுத்திக் கொண்டாடிய நாடுகள் நமக்கு உண்ர்த்தியது.

"வாக்கு சேகரிக்க சென்றபோது கூட பல அமெரிக்க வெள்ளைத் தோல்கள் தங்களுடைய கருப்பு மனத்தை காட்டாமல் வீட்டுக்குள் கதவை மூடிக்கொண்டனர்"

இன்றைய ஓபாமா உணர்த்தும் வெற்றி இது.

நீங்கள் கழிவரைக்குச் செல்ல நினைத்தால் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்ப்பீர்கள்.  ஆனால் ஈராக் சதாம் உசைன் தன்னுடைய ஆடம்பர மாளிகையில் உள்ள கழிவு அறைகள் கூட கழட்ட முடியாத தங்க வேலைபாடுகள் உள்ள சாதனங்கள் தான்.

சர்வாதிகாரி, கொடுங்கோலன் இடி அமின் இறந்தது நிம்மதியாக ஆண்டு அனுபவித்து தஞ்சம் வந்த நாட்டில் இயற்கை மரணத்தின் மூலம்.

தொடக்கத்தில் பயந்தாங்கோலி பக்கோடா.  ஓவியம் விற்று பிழைத்தல்.  ஆனால் உலக யுத்தத்தின் சூத்திரதாரி. மொத்த ஐரோப்பாவையும் தன் கால் சட்டை பையில் வைத்துக்கொண்டவர்.  மீசை புகழ் ஒரு பக்கம்.  அவர் வைத்திருந்த யூதர்களின் மரண ஆசை ஒரு பக்கம்.  இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் தினம் தினம் மரணத்தின் வாயிலில் வாழ்ந்து கொண்டுருக்கும் இஸ்ரேலில் உள்ள யூதர்களிடம் ஹிட்லர் பற்றி கேட்டுப்பாருங்கள்.

கொழும்பு புகழ் நான்காவது மாடி புனித நிகழ்வுகளை அன்றை நாஜிக்களால் உருவாக்கப்பட்ட Concentration Camp பற்றி கேட்டுப்பாருங்கள்.

நிலவரையில் தனக்குத் தானே சுட்டு மாய்த்துக்கொண்ட ஹிட்லரையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சீனாவின் சிற்பி மா சே துங் சொன்ன "எல்லாமே எல்லோருக்கும் பகிர்தல் மூலம்".

இது அன்றைய சீனா.  ஆனால் இன்றைய சீனா?

பணம் என்பது முக்கியம்.  வளர்ச்சி என்பது அதை விட முக்கியம்.  ஆளுமை என்பது அத்தனையிலும் முக்கியம்.  அப்படியென்றால் கம்யூனிச கொள்கை.

"கிழவியை தூக்கி மனையில் வை.  தாலி கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம்"

கொள்கைகளை சுவாசக்காற்று போல் சுவாசித்த அத்தனை இளைஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தியாமென் சதுக்க தரையில் போய் படுத்துக்கொண்டு காது வைத்துக் கேட்டால் உங்களுக்கு அவர்களின் கதறல் ஆவி அமுதா துணையில்லாமலே கேட்க வாய்ப்புண்டு.

இந்தியாவில் ஒரு பெரிய பாலத்தின் கட்டுமானப்பணி முடிய இரண்டு ஆட்சியாளர்களின் பேனாவின் இங்க் தீர வேண்டும். காத்து இருக்க வேண்டும்.  அந்த பத்து வருடத்தில் இன்றைய சீனா நூறு பால கட்டுமானப்பணி முடிந்து பாதி பழைமை பெற்றதாகி இருக்கும்.

இது இன்றைய சீனா.

சிங்கப்பூரில் ஒரு கிராம் ஹெராயின் வைத்து இருந்தால் அடுத்த சில தினங்களில் பிடிபட்டவரின் தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்ட செய்தியை தமிழ் முரசில் நீங்கள் படிக்கலாம்.  மற்ற குற்றங்களுக்கு?

முதல் முறை அபதாரம்.  இரண்டாவது முறை ரோத்தாங் என்ற சவுக்கடியுடன் கூடிய சிறைத்தண்டனை.  அப்படியென்னறால் அடுத்த முறை?

மொத்த வருடமும் சிறையில் இருப்பார் அல்லது முக்கிக்கொண்டு நகர்ந்து கொண்டு சாவு எப்போது தமக்கு வரும் என்று காத்துக்கொண்டுருப்பார்.

சின்ன ஊர்.  சிங்கார நாடு சிங்கப்பூர்.

சிங்கப்பூரில் சட்டம் எப்போதுமே தன் கடமையைச் செய்யும்.  அதுவே இந்தியாவில்?

எதிர்கட்சியான பிறகு செய்ய வைக்கப்படும்.

மேலே சொன்ன நாடுகள் மூலம் நான் உண்ர்ந்து கொள்ள வேண்டியது?

ஜனநாயகம் அதுவே எப்போதும் சிறப்பானது?

சர்வாதிகாரம் அது மட்டும் வளர்ச்சிக்கு உதவும்?

அடப்போங்கப்பா?  இரண்டுமே சுத்த ஹம்பக்.   வாழவும் வேண்டும்.  வளர்ச்சியும் வேண்டும்.  நீ பாதி நான் பாதி.  உள்ளே சர்வாதிகாரம்.  வெளியே ஜனநாயக போர்வை.

நாட்டை ஆள வேண்டும் என்று நிணைக்கும் தலைவர்கள், இயக்கத்தின் தலைவர்கள், இனமான போராட்டத்தை வழி நடத்த வேண்டியவர்கள் உணர வேண்டிய முக்கிய பாடங்கள் இது.

என்ன செய்யலாம்?

எதை மட்டும் செய்யக்கூடாது?

மொத்தத்தில் அரசியல் அறிவு என்பது "நல்லவனாக நடி.  நல்லவனாக இருக்காதே"

நேபாளத்தில் மாவேயிஸ்ட் போராடுவது இருட்டான மன்னர் ஆட்சியின் அலங்கோலத்தில் இருந்து மீட்க.

இன்று மீட்டவர்கள் என்ன ஆனார்கள்?  அதிகாரத்தை பெற்றதும் என்ன நடந்தது?

ஆமாம் கொரில்லா யுத்தத்தை தேர்ந்தெடுத்தார்கள்.  மக்கள் ஆதரவு இல்லாமல் அனாதையாக திரிந்தார்கள். ஆனால் அன்று இலங்கை தமிழ் மக்களை "தமிழ் மக்களே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்" என்று தொடக்கத்தில் இணைத்த பெருமையும் இலங்கை தலைவர்களுக்கு தான் இருந்தது.

விடுதலைப்புலிகள் கடந்து வந்த பாதைகளைப் பாருங்கள்.........

அறிவுக்களஞ்சியமாக இருந்த யாழ்பாண நூலகத்தை (1981 ஜுன் 1) எரித்து நாசமாக்கினார்களோ? அன்று முதல் ஆதரவுக்கரம் அதிகமானது.

சகபோராளிகளை கொன்ற போது பல காரணங்கள். "கொள்கையாளர்கள் கொள்ளைக்காரர்களாக இருக்க்கூடாது"

தமிழ் தலைவர்களை கொன்ற போது "அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்"

வீட்டுக்கு ஒரு வாரிசைத் தாருங்கள்.

கட்டாயமாக அவஸ்யமாக நிதி தாருங்கள்.

கட்டுமானப்பணி முழுமை அடைய அல்லது கிரஹகப்பிரவேசத்திற்கு இன்னும் சில வருடங்கள்.
சர்வதேச அரசியலும், நாடுகளும் உள்ளே புகாமல் இருந்து இருந்தால்.

இனப்போராட்டத்தின் எல்லாவற்றையும், உள்ளே உள்ள தவறுகளை, நிகழ்வுகளையும் புதைத்து விடுவோம்.

ஏன் இன்றைய இந்த நிலைமை?

"இன்று இவர்களின் மேலாண்மை ஆதிக்கத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ரா மூலம் பயிற்சி கொடுக்க முன் வருகிறார்கள்.  நாளை இவர்களே நமக்கு எதிராக திரும்புவார்கள்"

அன்றே மிக தீர்க்கதரிசனமாக இந்தியாவைப் பற்றிய பிரபாகரன் பார்வை இது.

"இந்தியா என்பது என்னுடைய தாய் தந்தை நாடு.  எங்களுடைய தமிழீழ உறவுக்கொள்கை என்பது இந்தியாவிற்கு சாதமாக இருப்பதில் தானே பெருமை"

பிரபாகரனின் அவஸ்யமற்ற ஆசை ஆச்சரியமாக இருக்கிறது.  வாழ்க்கை முழுக்க தீர்க்கமாய் இருந்தவர் எப்படி தீர்மானமாய் நம்பினார்?

ஆனால் மொத்த விதி ?  

ராஜிவ் காந்தி படுகொலை மட்டும் இங்கு நடக்காமல் இருந்தால் இங்கு பலர் இந்நேரம் டவுசர் பாண்டியாகி இருப்பார்கள்?  ஆதரவா?  இல்லையா?
அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாய் சூறாவளியாய் மாற்றி இருக்கும்??

உலக அரசியலை விட, இலங்கை அரசியலை விட பிரபாகரன் குறித்து முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இனி அவர் வந்து (?) சொந்தமாக சுயசரிதம் எழுதினால் தான் மொத்த சமூகத்திற்கும் புரியும்?

என்ன தான் மனதில் வைத்துருந்தார்?

27 வருடங்கள் சிறையில் பட்ட துன்பங்கள் அனைத்தும் நெல்சன் மண்டேலாவுக்கு உலகம் கொடுத்த மரியாதையில் மறந்து போயிருக்கும்.

அத்தனை கொடூர வாழ்க்கையிலும் யாசர் அரபாத் உலக மேலாதிக்க சக்திகளின் பார்வையில் உன்னதமானவர்.

படுக்கையில் இருந்தாலும் பிடல் காஸ்ட்ரோவை இன்னும் சாகடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படும் அமெரிக்கா

தென் அமெரிக்க சாவோஸ் இன்று வரைக்கும் கர்ஜிக்கும் சிங்கம்.

ஏன் பிரபாகரனுக்கு மட்டும் இந்த அங்கீகாரம் கிடைக்க வில்லை?

விஞ்ஞான தொழில் நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போராடிய இயக்கங்களுக்கு மத்தியில் அதுவும் வேண்டும்.  அதற்கு மேல் நம்முடைய வீரமும் வேண்டும் "

வீரனாக வாழ்ந்தவர் வாழ்க்கையின் இறுதி மர்ம முடிச்சு எப்போது அவிழும்?

காந்தி, தோட்டத் தொழிலாளர்களுக்காக சேனநாயகாவுடன் பேச நேருவை அனுப்பினார்.  அன்று தொடங்கிய தோல்வி.  இன்று வரையிலும் இந்தியா என்பது வெறுமனே பக்கத்து நாடு. பாசம் என்பது இந்த நிமிடம் வரைக்கும் வெறும் வேசம் தான்.

ஆயிரம் காரணங்கள்.  லட்சம் அச்சங்கள்.

உலகம் முழுக்க சர்வதேச அரசியல் நீக்கு போக்கு தெரிந்து கொண்ட இனப் போராட்டத்தின் முன்னேற்பாடுகளினால் கிடைத்த வெற்றிகளும், உருவான தோல்விகளும் நமக்கு பல படிப்பினைகளை பாடங்களைத் தருகிறது.

அமெரிக்கா இந்த மூன்றாம் தர வேலைகளை எப்போது தொடங்கியது?  அதன் தாக்கம் இன்று எங்கு வந்து முடிந்துள்ளது?

சீனா இப்போது தான் படபடப்பை ஆரம்பித்து உள்ளது.

இத்தனை விசயங்கள் இதற்கு பின்னால் உண்டா?

தொடரப்போகும் மூன்றாம் பாகம் முடியும் போது தமிழனத்தின் கோரிக்கையை பராசக்தியிடம் வைத்து விட்டு உலகத்தை உலா வருவோம்.
அதன்பிறகு பிரபாகரன் குறித்து, அவர் நடத்திய 33 வருட(1976/2009) போராட்டத்தை பார்க்கலாம்.

சரித்திரம் என்பது இரண்டு பக்கம் மட்டும் உள்ள பணமல்ல.  மூன்றாவது பக்கமும் உண்டு.  பிணத்தின் மேல் ஆளத் துடிக்கும் ஆளுமையாளர்கள்,

அது ரகஸ்யமான அசிங்கமான அந்தரங்கம்.

அத்தனை சீக்கிரமாய் வெளியே வந்து விடாது.  ஆனால் ஒரு நாள் உலகம் அறியும்..  

அதனால் தான் இன்று இந்த இனமான போராட்டம் பலருடைய பார்வையில் கேள்விக்குறியாக? கேலிக்குறியாக?

Tuesday, November 24, 2009

சூழ்ச்சியில் தொடங்கிய வளர்ச்சி

இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து  விடுதலை பெற்ற ஆண்டு 1948 பிப்ரவரி 4.
இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்றது சேனநாயகா (சிங்களர்களின் தந்தை)  1947 செப்டம்பர் 23.

ஆனால் ஆங்கிலேயர்கள் , படித்த மக்களின் மூலமும் , ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட  இலங்கை நாடாளுமன்ற செயல்பாடுகளும் தொடங்கிய ஆண்டு 1931  ஜுலை 10.

மற்றொரு ஆனால் என்பதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.  சிங்களர்களின் தந்தையான சேனநாயகா உருவாக்கிய கட்சியின் பெயர்  (1946 ஜுன் 4) "ஐக்கிய தேசிய கட்சி".  இவர் ஏற்கனவே இருந்த கட்சி மொத்தமாக தமிழர்களும் சிங்களர்களும் இருந்த, தமிழரால் உருவாக்கப்பட்ட "சிலோன் தேசிய காங்கிரஸ் கட்சி".

சர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் (பொன்னம்பலம் இராமநாதனின் சகோதரர்) தொழிலாளர்களுக்கென்று ஒரு நல வாரியம் முதல் முதலாக உருவாக்கப்பட்டு.  இலங்கையில் தமிழர்களுக்கென்று உருவானதும், மொத்தமாய் இன துவேசம் இல்லாமல் மொத்த தமிழர் சிங்களர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் என்று தொடங்கியவரும் இவர் தான்.

தொடக்க காரண கர்த்தாவும், தொடர்ந்து போராடியவரும் இவரே தான்.   "சிலோன் சீர்திருத்த அமைப்பு", "சிலோன் தேசிய சங்கம்"," யாழ்பாண சங்கம் " என்று தனித்தனியாக இருந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து "சிலோன் தேசிய காங்கிரஸ்" என்ற அமைப்பை நிறுவினார்.

தமிழர் உருவாக்கிய இந்திய இந்த "சிலோன் தேசிய காங்கிரஸ்" பிறகு (1920) சிங்களர்கள தலைவர்களின் கைக்கு மாறி அதுவே சிங்களர்களின் கட்சியாக மாற்றம் அடைந்தது.

தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த சிங்களர்களுக்கும் உரிமை என்பதை எவ்வாறு ஆங்கிலேயர்களிடம் இருந்து பெறவேண்டும் என்று பாலபாடம் நடத்தியவர் சர். பொன்னம்பலம் அருணாச்சலம்.

இவர் கேம்ப்ரிட்ஜ்ல் படித்தது கூட சிறப்பாக தெரியவில்லை.  மொத்த இலங்கையிலும் முதன் நபராக சிவில் சர்வீஸ் பதவியில் அமர்ந்தவரும் இவரே தான். இவருடைய தனிச்சிறப்பு தமிழர்கள் அனைவரையும் ஒரே பார்வையில் பார்த்து கொண்டு வந்ததோடு மொத்த சிங்களர்களையும் பாகுபாடு பார்க்காமல் ஒரே ஆளுமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று நம்பியது?

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட  மக்களுக்கான பிரதிநிதிகள்(1920) என்ற பொதுப் பார்வையில் உருவாக்கிய முன்னேற்பாடுகள் தமிழ் தலைவர்களால் முன்னெடுத்து கொண்டு செல்லப்பட்டது.

காரியம் ஆகும் வரைக்கும் இவர்கள் பின்னால் இருந்த சிங்கள தலைவர்கள், ஒரு அளவிற்கு மேல் திரும்பி விட ஆரம்பித்தனர்.  காரணம் உருவாக்கிய செடியில் பழுத்த பழம் உருவாகப்போகும் காலகட்டம் அது. சிங்களர்கள் இதற்கு கூறும் காரணம் "தன்னுடைய அரசியல் செல்வாக்கை இதன் மூலம் இவர் உயர்த்திக்கொள்கிறார்"

தமிழ் தலைவர்களை விட சிங்கள தலைவர்கள் மிகத் தெளிவாக இருந்தனர்.  தொடர்ந்து கொண்டுருந்த சிங்கள அவதூறுகளைக் கண்டு ஒரு அளவிற்கு மேல் சகித்துக்கொள்ள முடியாமல், பொது வாழ்க்கையில் இருந்து  "நான் மறுபடியும் சட்டமன்றத்தில் இடம் பெற விரும்வில்லை. ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்கிற அளவிற்கு நாசுக்காக நகர்த்தி விட்டனர்.

தனியாக கட்சி தொடங்கி அடுத்த அரை வருடத்திற்குள் திடீர் என்று பிரதமராகவும் சிங்களர்களின் தந்தையாக உருமாற்றம் அடைந்த சேன நாயகா ஏறக்குறைய முகமது அலி ஜின்னாவின் லக் பெற்று கிக்காக மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இலங்கையின் சரித்திர பக்கங்களில் இடம்பிடித்த கிங் தானே?

இலங்கை சுதந்திர வரலாற்றுக்கும் இலங்கை வரலாற்றுக்கும் உள்ள வித்யாசங்கள் குழப்பமாக இருக்கிறதா?   இதில் தான் ஆங்கிலேயர்களின் புத்திசாலித்தனமும், தொடக்கம் முதலே சிங்களர்களின் தந்திரங்களும் அடங்கி இருக்கிறது. மேலும் மொத்தமாக "பாடுபட்டுக் கொண்டுருந்த"  தமிழ் தலைவர்களின் தீர்ககதரிசனமும் நமக்கு பல விசயங்களை உணர்த்துகிறது.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது இலங்கை ஒரே நாடு.  பெரும்பான்மையினர் சிங்களர்கள்.  தமிழர்கள் என்பவர்கள் சிறு சிறு குழுக்களாக செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்கள்.  இதன் அடிப்படையில் ஆங்கிலேயர்களால் சட்ட மன்றத்தில் பிரதிநிதிகளுக்காக உருவாக்கப்பட்டது தான்  சிங்களர்களுக்கு இரண்டு,  ஒரு பங்கு தமிழர்களுக்கு. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் படித்த மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரதிநிதிகள் இவர்கள்.

அப்போது நடந்து கொண்டுருந்த  (கரைச்சல்) சட்டமன்ற நடவடிக்கைகள் திருப்தி அளிக்காத பிரிட்டன் ஆட்சியாளர்கள் டெக்னமோர் பிரபு (1927) மூலம் நேரிடையாக ஆராய்ந்து அறிக்கை அளிக்கச் சொன்னது.

அப்போது இருந்த நிலைமை.

கண்டியில் வாழும் சிங்களர்கள் தன்னாட்சி வேண்டும் என்றனர்.  பெரும்பான்மையான சிங்களர்கள் சொத்துக் கணக்கு, இலங்கையில் வாழ்ந்த கணக்கு அடிப்படையில் அத்தனை சிங்கள மக்களுக்கும் வாக்குரிமையை பரவலாக்கபட வேண்டும் என்றனர்.

மொத்த சிங்களர்களுக்கும் ஓட்டுரிமை என்றால் சிறுபான்மையினரான தமிழர்கள் தங்கள் மக்களின் ஓட்டு உரிமையில் சிறப்பு அதிகாரங்கள் வேண்டும் என்றனர்.  ஆனால்  இதை தொடக்கத்திலேயே டெக்னமோர் குழு நிராகரித்து விட்டது.  காரணம் , இதே போல் ஒவ்வொருவரும் பின்னால் வந்து நிற்பார்கள் என்று?

வாழ்ந்து கொண்டுருந்த தமிழர்கள், முஸ்லீம்கள் மக்களிடம் கருத்துக்கள் எதையும் கேட்காமல் (1928) பிரிட்டன் நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய அறிக்கை இது.  இதில் ஒரு ஆச்சரியம் ஆங்கிலேயர்கள் தோட்டத் தொழிலாளர்களையும் வாக்குரிமை பெற்றவர்களாக அறிவித்தார்கள்.

இந்த அறிக்கையின் மொத்த சாகத பாதக அம்சங்களை வயதான காலத்தில் கூட பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த சர் பொன்னம்பலம் ராமநாதன் லண்டன் சென்று வெள்ளையர்களுக்கு புரிய வைத்த போதிலும் அவர்கள் மனம் எப்போதும் போல கருப்பாகத் தான் இருந்தது.

அப்போது சிங்களர்கள் கையில் இருந்த "சிலோன் தேசிய காங்கிரஸ்" தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை உரிமையைப் பற்றி சொன்ன வாசகம் இது.  காரணம் தொடக்கத்தில் பத்து சதவிகிதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை மொத்த தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையையும் சேர்த்தால் வருவது 33 சதவிகிதம்.

"அவர்கள் நாட்டிலே அவர்களுக்கு வாக்குரிமை இல்லை. வாழ வந்த நாட்டில் வாக்குரிமையா?"

பிரதிநிதிகளிடையே வாக்குவாதங்கள். கடுமையான அமளி துமளி.

பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, பல்வேறு உபவிதிகள் உருவாக்கப்பட்டு (ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஏதாவது ஒன்ற பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும்........) உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் மேலே சொன்ன 1931.

ஆனால் இந்த பிரதிநிதிகளின் தேர்தலை உருவாகியிருந்த "யாழ்பாண தேசிய காங்கிரஸ்" முற்றிலும் புறக்கணித்தது.  அவர்களின் எண்ணம் தொடக்கம் முதலே (1915) மொத்தமாக வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவர்களின் இந்த சிந்தனைகளுக்குப் பிறகு தான் சிங்களர்களுக்கே அந்த எண்ணம் மேலோங்க ஆரம்பித்தது.
இங்கு உருவான சர் பொன்னம்பலம் ராமநாதன், சர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு பிறகு வந்தவர் தான் ஜீஜீ பொன்னம்பலம்.
உள்ளே நுழைந்த அத்தனை சிங்கள தலைவர்களும் தங்களை, தங்கள் அரசியல் வாழ்க்கையை வளர்த்துக்கொள்வதற்காக சாம்பிராணி புகை போல் கொண்டு வந்து கொண்டுருந்தது தான் தமிழர்களுக்கான எதிர்ப்பும், பௌத்த மதமே இலங்கையின் மதம் என்பதும்.
சிங்கள மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு சாதகமாகவும், இன துவேசத்தை வளர்ப்பதிலும் மிக கவனமாக 1910 முதல் படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும்  சிறப்பாக செயல்பட்டனர்.

இவர்கள் யார்?  அவர்கள் பின்புலம் என்ன?  அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள்?  சுய ஓழுக்க வாழ்க்கை கோட்பாடுகள் எதையும் சிங்களர்கள் பிரித்துப் பார்ப்பதே இல்லை.  பின்னால் வரப்போகும் பண்டாரா நாயகா என்ற தலைவருக்கு சிங்கள மொழி கூட சரியாக பேச வராது.  எவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அதிகமாக்குகிறாரோ அவரே அப்போது சிறந்த தலைவர்.  ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் போட்டி போட்டுக் கொண்டு அச்சப்படும் அளவிற்கு அவர்களால் முடிந்தவற்றை கர்மசிரத்தையோடு சொற்பொழிவுகள், கூட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரையில் மிகத் தெளிவாக விதையை செடியாக்கி வளர்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் "அவர்கள் நாட்டுக்கு ஓடிப்போக வேண்டியவர்கள்" என்ற கணக்கில் கொண்டு வந்தது முதல் இன்றைய இலங்கை பிரச்சனையின் மொத்தமும், மூலமும் முழுமையாக இங்கு தான் ஆரம்பம் ஆகின்றது.

பிரதமர் ஆனதும் தோட்டத் தொழிலாளர்களை நாடோடியாக்கியது சிங்கள முதல் பிரதமர் சேனநாயகா.  செய்வதற்கு ஆதரவு அளித்து மொத்த முழு காரணமாய் இருந்த தமிழர். ஜீஜீ.பொன்னம்பலம். 

இவர்தான் அப்போது இலங்கையில் வாழ்ந்த தலைவர்கள் மறைவுக்குப்பிறகு  (1931) தமிழர்களுக்கு ஆதர்சன தலைவராக உருவாகிக்கொண்டுருந்தார்.    தன்னை திராவிடன் என்று மொத்தமாக சொல்லிக் கொண்டாலும், தமிழர்களை  பார்த்தது என்னவோ அவர்களின் ஜாதி ரீதியாகத்தான்.  அவருடைய பார்வையில் இந்தியாவில் வந்த தொழிலாளிகள்  பூர்வகுடி தமிழர்களுக்கு  கீழே?  யாழ்பாண தமிழர்கள் மேலாதிக்கம் செய்பவர்கள் என்று "தெளிவற்ற புரிதலை" உருவாக்கியவரும் இவரே.

மேல்நாட்டுக்கல்வி.  மேல்தட்டு வர்க்கம். சற்று மேம்பட்ட சிந்தனைகள்?

இதே சமயத்தில் சிங்களர்களுக்கு என்று உருவான தலைவர் சந்திரிகா குமார துங்காவின் தந்தை (ஆக்ஸ்போர்டு கல்வி) SWRD பண்டார நாயகா. இவரின் பிறப்பு மூலமும் தமிழ்த் தோன்றல் வழியாகத் தான் இருக்கிறது.  இன்று வரையிலும் பண்டாரம் என்று சொல் குறித்து தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமானது.  இவருடைய முன்னோர்கள் (1454) தலைமை கோவில் பூசாரியாக இருந்துள்ளனர்.  சரித்திரத்தில் சிங்களரான யஸ்வின் குணரத்னே என்ற சிங்களர் தெளிவாக விளக்குகிறார்.

தொடக்கத்தில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்க,  என்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு ஆண்டு முழுக்க வேலையிருக்காது.  அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட தென்னை, காபி எஸ்டேட், இரயில் தண்டவாளம் அமைக்கும் பணி, மற்ற கட்டுமானப்பணி என்று ஒவ்வொரு மொத்த இலங்கையின் வளர்ச்சியிலும் இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் உயர்ந்து கொண்டே இருந்தது.  சிங்களர்கள் அச்சப்படும் அளவிற்கு.

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அன்று ஆங்கிலேயர்கள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்ததற்கு அவர்களின் யுத்த நெருக்கடியால் உருவான பொருளாதார திவால் நிலையும் ஒரு முக்கிய காரணம். இலங்கையிலும் தொடர்ச்சியாக அப்போது உருவாகிக் கொண்டுருந்த அத்தனை போராட்ட எழுச்சியும் அவர்களை யோசிக்க வைத்துக்கொண்டுருந்தது.

பிரிட்டன் ஜெர்மன் மீது(1939) படையெடுக்க தொடங்கிய போதே மொத்த இலங்கை நிர்வாகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து.  தோட்டத் தொழிலாளர்களுக்கு  என்று அப்போது இருந்த பல வேறு சங்கங்கள் ஒவ்வொரு சமயத்திலும் முட்டி மோதிக்கொள்வதும், பிறகு சூழ்நிலை சகஜமாவதும் வாடிக்கை என்ற போதிலும் ஒரு காவலரால் (மூல் ஓயா எஸ்டேட்)சுட்டுக்கொல்லப்பட்ட (கோவிந்தன்) சம்பவம் மொத்த நாட்டுக்கும் பரபரப்பு தீயை பற்ற வைத்து விட்டது.  இதே ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டமும் தொடங்கியது.

அப்போது இலங்கையில் உருவான வெள்ளம், போராட்டத்தை மட்டுப்படுத்தினாலும் (1940) மொத்த தொழிலாளர் பேரணி வரைக்கும் பல் வேறு இயக்கங்களால் மீட்டு எடுத்தி நடத்திக் கொண்டு வரப்பட்டது.

மற்றொரு மிகப்பெரிய ஆச்சரியம்.  தொடக்கத்தில் உருவான சிங்களர்கள் முஸ்லீம்கள் கலவரத்தில் ஆங்கிலேயர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு அன்று சிறையில் இருந்த அத்தனை சிங்களர்களையும் வெளியே கொண்டு வர போராடியது சர் பொன்னம்பலம் ராமநாதன்.

சிகிச்சைக்காக கொடைக்கானலில் இருந்தவரை கெஞ்சிக்கூத்தாடி சிரமமான கப்பல் பயணத்தை தொடங்க வைத்து லண்டன் அனுப்பி பேச வைத்தனர் சிங்கள தலைவர்கள்.  திரும்பி நாட்டுக்குள் வந்தவரை இழுத்து வந்த குதிரைகளை கழட்டி விட்டு தாங்களே வீதி முழுக்க ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அன்று முஸ்லீம் மக்கள் குறித்து சிங்கள தலைவர்கள் கூறியுள்ள அச்சப்படுத்தும் வாசகங்கள், அதுவே பின்னாளில் பிரபாகரன் மேல் ( முல்லை மார்க்கெட் இடம் பெயர்தல் காரணமாக) கொண்ட "புரிந்துணர்வு" என்று மொத்தத்தையும் கூர்ந்து பார்த்தால் எல்லாமே சரித்திர பக்கங்களின் எதிர்மறை நியாயங்கள்.

ஆங்கிலேயர்களுக்கு "சிலோன் தேசிய காங்கிரஸி" ல் இருந்த போதே சேனநாயகா மறைமுகமாக "ஆலோசனைகள்" சொல்லிக் கொண்டு வந்தவர் திடீர் என்று "நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன்" என்று நட்டாத்தில் விட்டு விட்டு "ஐக்கிய தேசிய கட்சி" யை தொடங்கி ஏற்கனவே மறைமுகமாக உருவாக்கியிருந்த வாய்ப்ப்புகளில் பயணம் செய்து இலங்கை வரலாற்றில் "சிங்களர்களின் தந்தை" என்ற பதவியையும் அடைந்து வெற்றி வீரனார். இன்றைய பிரபல வாசகமான மைனாரிட்டி  அரசாங்கம்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஸ்ரப்புக்கும் இவருக்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை.
பழைய தமிழ் மன்னர்களான பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழ , பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த, சொர்க்க தேசம், லவங்க தேசம், ஈழம், ஈழத்தவரின் கதையானது முதல் பிரதமர் சேனநாயகாவின் ஆட்சிகாலத்தில் முழுமையாக சிங்கள தேசமாக மாற்றம் பெற்றது.  அன்று முதல் இன்று வரையில் மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் கண்ணீர் தேசமாக.

(இரண்டாம் பாகம் முடிவு)