Wednesday, November 18, 2009

விவேகத்தின் எதிரி வேகம்


"தமிழர்கள் இயல்பிலேயே வீரத்தை அதிகம் பெற்றவர்கள்".

இந்த வாசகம் படிக்கும் போது இன்றைய சூழ்நிலையில் நம் வீட்டு வாசலில் வந்து நின்று யாசகம் கேட்பவரை நாம் பார்க்கும் பார்வை போல் உருமாற்றம் அடைந்துள்ளது.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் தமிழன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் நாம் அனைவருக்கும் தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல், அடைந்த வெற்றிகள், விவேகம் இல்லாத வாழ்க்கையால் அடைந்த துன்பங்கள் போன்ற எதையுமே நாம் படித்த பாடமும் கற்றுத் தரவில்லை.  கண்டு கொண்டுகின்ற காட்சிகளும் நம்பும் சூழ்நிலையை உருவாக்கவில்லை.

ஒன்று திரிபு.  மற்றொன்று இருப்பதை விட்டு பறப்பதை ஆ.... வென்று பார்த்துக்கொண்டுருப்பது.

பலவீனத்தை சொல்வது பல் இளிக்கும் சமாச்சாரம் அல்ல.

சீனாவுக்கு ஓபாமா ஆசிய பயணத்துக்கு உள்ளே போனாலும் மொழி பெயர்ப்பாளர் கத்தி முடிக்கும் வரைக்கும் பொத்திக் கொண்டு பொறுமையாகத் தான் நின்றுதான் தொலைக்க வேண்டியிருக்கிறது.  பேசியவருக்கும் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதும் தெரியாது.  கேட்க வேண்டியவருக்கும் என்ன சொல்ல வருகிறார் என்பதும் தெரியாது.

ஆனாலும் 4000 வடிவங்கள் (எழுத்துக்கள் அல்ல) கொண்ட சீன மொழியை இன்று வரையிலும் வைத்துக்கொண்டு ஐ.நா வரைக்கும் ஆட்சி செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் பாராளுமன்றத்தில் வேட்டி என்பதைக் கூட "அவிழ்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது" என்று அச்சப்படும் கோட்டு சூட்டு தான் தமிழர்களுக்கு அடக்கமாக இருக்கிறது?  தமிழுக்கு மொழி பெயர்பாளர்கள் விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தமிழனத்தை காத்துக்கொண்டுருப்பவர்களின் ஆசிர்வாத வார்த்தைகள்.
தமிழ் மட்டும் பேசினால் "ஆங்கிலம் தெரியாத புரியாத தலைவர் இவர்" என்று அடக்கமாக வார்த்தைகள் வரும்.  பதிலுக்கு அறிக்கை வந்தால் ஐயோ அம்மா என்று கூப்பாடும் வரும்?

என்ன செய்வது தமிழ் நாட்டில் தமிழ் என்பதே "இடை" யில் தான் தமிழ் வாழ்கிறது.

இலங்கையின் தொடக்க 2500 ஆண்டுகளில் மொத்தமாக வடக்கு பகுதிகள் அத்தனையும் தமிழ் மன்னர்கள் கைவசம் தான் இருந்தது.  பெயரில் தான் சிங்கள சிங்கமாக இருந்தார்களே தவிர எந்த சிங்கள மன்னனும் அடுத்த முறை எட்டிப்பார்க்க அஞ்சும் அளவிற்கு ஆளுமையை ஒவ்வொரு முறையும் தமிழ் மன்னர்கள் நிலை நாட்டினர்.

எல்லாளன் என்ற மன்னன் (இதில் வரும் பெயர்கள் அத்தனையும் பின்னால் பிரபாகரன் வாழ்க்கையில் வரும் பெயர்கள்) கொடுத்த ஒவ்வொரு அடியும் அவனுக்கு எப்போது சாவு வரும்? என்று ஏங்கித் தவித்த சிங்கள மன்னர்கள் பல உண்டு.  உண்மையிலேயே இவர் இறக்கும் தருவாயில் தான் பாதியளவு ஆமாம் பாதி நிலப்பகுதியை 25 வயதான துத்தகாமினி கைப்பற்ற முடிந்தது.

ஆனால் பிரிட்டன் ஆட்சியாளர்கள் அத்தனை சுலபமாக தன்னுடைய ஆளுமையை ஈழத்தில் நிலைநாட்ட முடியவில்லை.  ஏற்கனவே சொல்லியபடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வீரம் நிகழ்த்திக்காட்டிய அத்தனை சம்பவங்களும் இங்கே ஆண்டு கொண்டுருந்த தமிழ் மன்னர்கள் மூலம் நடந்தது.

இன்று வரையிலும் தன்னை, தன் மொழியின்,வாழ்க்கையின் சிறப்புகளை உணராத தமிழனின் இந்தியாவில் உள்ள தமிழர்களைப் போலவே, இலங்கையில் வாழ்ந்த தமிழ் முன்னோர்களையும் நாம் பார்த்தால் தான் இலங்கை மூலமும் நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.

1798ல் பிரிட்டன் மன்னரின் ஆளுமைக்கு கீழ் இந்த இலங்கை வந்துருந்த போதிலும் 1815 வரைக்கும் அங்கொன்றும் இங்கொன்றும் முடியாட்சி உள்ளே இருந்து கொண்டு தான் இருந்தது.
ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்க என்ற மன்னர்தான் கடைசி முடியாட்சி மன்னர்.  ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டு சிறையிலேயே இறந்தும் போனார்.

இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா?

இவருடைய உண்மையான பெயர் கண்ணசாமி. இவர் மதுரையில் ஆண்டு கொண்டுருந்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்.  இலங்கை சென்றடைந்தவர் கண்டியில் வளர்ந்து, மல்வட்டே கோவிலின் புத்தசாலி மாணவராக இருந்தார்.  பாலி, சமஸ்கிருதம் போன்ற பல மொழி திறமை பெற்றவர்.

தன்னுடைய பெயரை சிங்கள பெயராக புத்த குருவின் (மூத்த அமைச்சர் பிலிமத்தலாவா) ஆலோசனையின்படி மாற்றிக்கொண்டு, பௌத்த மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு வாழ்ந்தவர். பலபேர்கள் போட்டி போட்டும் அவர் கண்டியின் இளவயது (18) மன்னராக அரியணையில் அமர்ந்தார்.

இவரை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள அமைச்சர்களால் ஏராளமான இன்னல்பட்டு, காட்டில் தலைமறைவாக வாழ்ந்து இறுதியில் பல சிங்கள தலைவர்கள் "ஆலோசனையை" பெற்று கண்டியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

இவரை ஆட்சியை விட்டு விரட்ட ஆங்கிலேயர்களுக்கு உதவியபோதே, உதவியவர்கள் உள்ளே பல அம்ச கோரிக்கையையும் சிங்கள தலைவர்கள் உருவாக்கி வைத்து இருந்தனர்.

இன்று வரையிலும் அத்தனை சிங்கள தலைவர்களும் தந்திரம் நிறைந்தவர்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல.  அத்தனையும் தொடக்கம் முதலே வந்து கொண்டுருக்கும் மரபு சார்ந்த விசயங்கள்.  கலப்புச் செடி என்பது அதுவே கள்ளிச் செடியாக இருந்தால் விசமும், வீர்யமும் அதிகமாகத் தானே இருக்கும்?

அப்போது சிங்களர்கள் உருவாக்கிய ஓப்பந்த (12) கோரிக்கைகள் தான் இன்று வரை தமிழர்கள் உருக்குலைத்துக்கொண்டு இருக்கும் நீண்ட வாழ்வியலின் வர்ணனையில் கொண்டு வர முடியாத அவலங்கள். ஆங்கிலேயர்களுக்கு படையெடுக்க உதவிய பத்து பேர்களில் முக்கியப் புள்ளி ஒருவர்.  இவர் மட்டும் எளிதாக உங்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமார துங்காவின் கணவர் வழி பாட்டனார் ரத்வட்டே.

அந்த ஒப்பந்தத்தில் மற்ற அம்சங்கள்.

மன்னர் மற்றும் அவருடைய வாரிகள், சார்ந்தவர்கள் அத்தனை பேர்களும் தேசத் துரோகிகள். வேறு எவரும் உரிமை என்று எடுத்துக்கொண்டு வந்து நிற்கக் கூடாது.  என்னவொரு தீர்கக தரிசனம்?
கண்டியில் உள்ள அத்தனை தமிழர்களும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். மீறி வந்தால் உடனே அபதாரம் மற்றும் தண்டணைகள்.

ஐந்தாவது கோரிக்கையின்படி புத்தமதம் அங்கீகரிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு உதவுவதன் மூலம் தமிழர்களை அழிக்க, உருக்குலைத்த தொடங்கப்பட்ட முதல் திட்டம் இது தான்.

ஆங்கிலேயர்கள் இவர்களை விட கெட்டிக்காரர்கள். எதிர்பார்த்த சுகங்கள் எதுவும் கிடைக்காத சிங்களர்கள் உருவாக்கிய கலவரத்தில் (1817) முக்கிய காரணமான தலைமை வகித்த எலப்போலா என்ற சிங்கள தலைவரை மொரிசியஸ்க்கு நாடு கடத்தி சிறையில் அடைக்க அங்கேயே இறந்தும் போய்விட்டார்.

ஆட்டம் காலி.  படுதாவும் பறந்து விட்டது.  ராஜபாட்டை தொடங்கியது.

இன்று வரையிலும் மேலைநாட்டில் உள்ள தலைவர்கள் கடைபிடிக்கும் அர்ச்சுனன் குறிபார்த்த ஒரு காம்பு ஒரு பழம் அல்ல.  ஒரே உலுக்கல்.  மொத்த மர பழமும் கைக்கு வந்து விட வேண்டும்.

கெட்டிகாரர்களை சுட்டித்தனமாகத்தானே பாராட்ட வேண்டும்.

ஆச்சா.  அஸ்திவாரம் போட்டாச்சு. அடுத்து, தொடக்கம் முதல் அத்தனை சிங்கள தலைவர்களும் முயற்சித்துக்கொண்டு இருந்த ஆனால் முகமெல்லாம் காயத்தை மட்டுமே உருவாக்கிக்கொண்டுருந்த திட்டம்.

இலங்கை.  ஒரே நாடு.

எம்.ஜி. கோல்புரூக் என்பவரின் தலைமையில் மொத்த இலங்கையையும் ஆங்கிலேயர்கள் ஒரே ஒரு கண்ணாடியில் அடைத்த பழச்சாறு போல் பார்த்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் பருகி முடித்ததும் சக்கையாக இறுதியில் தமிழர்கள் மாற்றம் பெற்றார்கள்.

ஆமாம் இந்த நாடு சிங்கள நாடு என்று ஆங்கிலேயர்கள் பார்த்த பார்வையில் (உள்ளே உழைத்த சிங்கள தலைவர்களால்) மொத்தத்தை கைக்குள் அடங்கும் விரல்கள் (5) போல் அசால்ட்டாக தூக்கி எறிந்தனர்.

கொழும்பு, கல்லே, யாழ்பாணம், கண்டி,திரிகோணமலை.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிர்வாகக் குழு, சட்டமன்ற குழு.

இரண்டாயிரம் ஆண்டுகள் பல மன்னர்கள் முயற்சித்த அத்தனை முடியாத முயற்சிகளையும் செய்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள். இராஜராஜன், இராசேந்திர சோழன் வீரத்தால் உருவாக்கிய மொத்த இலங்கை சாம்ராஜ்யத்தையும் வெகு எளிதாக தங்களுடைய விவேகத்தால் ஆங்கிலேயர்கள் சாதித்தார்கள்.  ஏன் அவர்கள் சரித்திரங்கள் சாதனையாகவும் அதுவே நமக்கு தரித்திரமாகவும் இருக்கிறது என்பதை உணர்வீர்களா?

அவர்கள் பார்வையில் சிங்களர்கள் பெரும்பான்மையினர்.  தமிழர்கள் சிறுபான்மையினர்.  ஈழம் ஈழத்தவர்கள் தமிழர்கள் சிறு நாட்டில் சிறு தீவு போல் ஆக்கப்பட்டனர்.

இந்த இடத்தில் ஏன் ஆங்கிலேயர்கள் இப்படி அன்று பார்த்தார்கள் என்பதை வேறு விதமாக யோசித்துப் பார்க்கலாம். உள்ளே நுழைந்தது முதல் அவர்களுடன், அவர்களுக்கு விரும்பும் அளவிற்கு நடந்த சிங்கள தலைவர்கள் ஒரு காரணம்.  மற்றொரு காரணம் திருடன் திருடனுடன் தான் கூட்டு வைக்க முடியும்.  நம்மவர்கள் வீரத்தை விட, அறிவை விட, அவர்களின் விவேகம் அல்லது தந்திரம் பிடித்துப் போயிருக்கலாம்.

மேலும் நம்மவர்கள் ஐயா சாமி தொரை என்று பேச ஆரம்பித்தால் தொந்தி மண்ணில் விழுந்து புரளும் வரை எழ மாட்டார்கள்.

மேலும் அப்போதும் வாழ்ந்து கொண்டுருந்த தமிழ் மன்னர்கள் போல் வீரத்தை பெற பயிற்சி எடுக்க வேண்டுமானால் அது நடக்கக்கூடிய காரியமா?

இன்று வரைக்கும்?  மற்றொரு பொதுவான பார்வை?

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்கா போய் பாரிஸ்டர் பட்டம் வாங்கினாலும் ஆங்கிலேயர்களின் பார்வையில் கூலி பாரிஸ்டர்.  கப்பலோட்டிய தமிழன் சொந்தமாக கப்பல் வாங்கி ஓட விட்டாலும் அது கூலி கப்பல்.  அந்த அளவிற்குத் தான் நம்மை அந்த கால கட்டத்தில் மனதில் வைத்து இருந்தனர்.  முழுமையாக இன்று இல்லாவிட்டாலும் வேறு வழியில்லை என்பதால் தான் இன்று அவர்களின் எண்ணத்தில் இன்றும் சற்று வணிக வளரும் நாட்டை பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற மருகிக் கொண்ட பார்வை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் இன்று வரைக்கும் மேட் இன் இங்கிலாந்து என்று போட்டு இருந்தால் பத்து ரூபாய் சட்டையை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கத்தான் அத்தனை பேர்களும் முண்டிக்கொண்டு தான் போய் நிற்போமே? ஆனால் லேபிள் மட்டும் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும்.  தைத்தது  சீனா,தைவான், கொரியா, இந்தோனேசியா,  இந்தியா, இலங்கையாக இருக்கும்?

"அகப்பட்டவன் நான் அல்லவா"? என்று பாட்டு வருவதற்கு முன்பே தமிழர்களின் வாழ்க்கையும் பாட்டு போல் ஒலிக்க தொடங்கி விட்டது. இந்தியா = பாகிஸ்தான் , சிங்களர்கள் = தமிழர்கள்.

நம்பியார் வீரப்பா வருவதற்கு முன்பே சரியான போட்டியும் பூசலும் தொடங்கி விட்டது.  தொடங்க காரணமாக இருந்தவர்கள் இன்று தொலைவில் இருக்கிறார்கள்.  ஆனால் நாம் மட்டும் தான் தொலை நோக்கு பார்வையில்லாமல் மொத்த பிரச்சனைகளையும் தொல்லை நோக்கில் இன்று வரைக்கும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.  படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இன்று வரையிலும்.

இவர்களுக்கு மட்டும் உள்ளே இருந்த மூளையில் ந்யூரான்கள் தனித்தன்மையாக வலைபின்னலாக இருந்து தொலைக்குமோ?  எந்த நாட்டுக்குள் நுழைந்தாலும் அந்த நாடு வலைக்குள் சிக்கிக்கொள்வது போல் பாடுபடுகின்றதே?  அதனால் தான் அவர்கள் அணைவரும் வசதியாக வாழ்கிறார்கள்.  நாம் எப்போதுமே வலைக்குள் சிக்கிய எலியாக வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.

ஆனாலும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  அன்றைய இலங்கையின் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்திலும் சரி, அவர்களின் மொழி பெயர்ப்பாளர்கள் என்று பெரிய பதவிகளிலும் சரி இருந்தவர்கள் யார் தெரியுமா?

தமிழர்கள்?

13 comments:

லெமூரியன்... said...

என்னத்த சொல்றது...நம்மைப் போல ஆயிரத்தெட்டு உட்பிரிவுகளை கொண்ட இனம் அல்லவே அவன்.......

ஜோதிஜி said...

உண்மை. நன்றி லெமூரியன்.

அமர்ஹிதூர் said...

ஜோதிஜி, தங்கள் இடுகையை படிப்பதன் மூலம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இன்று நடப்பது வரை அறிய முடிகிறது. தமிழன் எங்கு சென்றாலும் அவனுடைய இனத்துக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. இந்த தமிழ் நாட்டிலும் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை, வீதிக்கு ஒரு சாதி அவர்கள் வசிக்கும் தெருவுக்கு ஒரு சண்டை இப்பவும் என் கண் முன்னே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா ? வேதனை தான் மிச்சம்.

vasu balaji said...

தமிழன். ராணி எலிசபெத்துக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர்களில் ஒரு ஈழத் தமிழனும் உண்டு. இது தவிர இன்னும் சிலர் இருந்திருக்கிறார்கள் ஆசிரியராக.

அது ஒரு கனாக் காலம் said...

திரும்பவும் அரிய ( அறிய வேண்டிய ) தகவல்கள். எல்லாமே திரும்ப திரும்ப , ஒற்றுமை, உழைப்பு, விடாமுயற்சி, ...இதன் முக்கியத்துவத்தை சந்தேகமில்லாமல் உணர்த்துகிறது.

அதே சமயம், வஞ்சகம், வன்முறை, இன்னும் மற்ற பிற ஆயுதங்களை பயன் படுத்தி, தன்னையும் தன இனத்தையும் வலுவாக்கிகொண்ட வெள்ளைகாரனை பார்த்தால், ...... இப்படியும் இருக்கலாமா ???? என்ற கேள்வி வருகிறது.

தொடர்ந்து வரும் ....

தமிழ் உதயம் said...

இலஙகையின் வரலாற்றை நாம் நேர்மையான முறையில் பார்த்தோமேயானால், காலங்காலமாய் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை அப்பட்டமாக உணர்ந்ததால் தான் தலைவர் பிரபாகரன் அழகாக, உண்மையாக சொன்னார். பிரபாகரனை ஏற்காவிட்டாலும், அவர் தம் கருத்தை ஏற்பீர்கள். "போராடினாலும் அழிவோம் தான். போராடாவிட்டாலும் அழிவோம் தான். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது" கடைசி வரியை பாருங்கள். பிழைத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொல்கிறார். பிழைத்து கொள்வோம் என்று சொல்லவில்லை. மேலும் ஒரு கருத்தை சொல்கிறார். உலகமே நமக்காக குரல் கொடுத்தாலும், நம்மிடம் ஒற்றுமையில்லை எனில் தமிழிழ கனவு நிறைவேறாது. அதே நேரம் உலகமே நம்மை எதிர்த்தாலும் நாம் ஒற்றுமையாக இருப்பின் நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு விதமான நிகழ்வையும் நாம் பார்த்துவிட்டோம்.

நிகழ்காலத்தில்... said...

\\ஜோதிஜி, தங்கள் இடுகையை படிப்பதன் மூலம் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இன்று நடப்பது வரை அறிய முடிகிறது. தமிழன் எங்கு சென்றாலும் அவனுடைய இனத்துக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. இந்த தமிழ் நாட்டிலும் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை, வீதிக்கு ஒரு சாதி அவர்கள் வசிக்கும் தெருவுக்கு ஒரு சண்டை இப்பவும் என் கண் முன்னே நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா ? வேதனை தான் மிச்சம்.\\

அப்படியே மறுக்கா சொல்லிக்கிறேன் (ரிபீட்டுங்கிறேன்)

ஜோதிஜி said...

சுந்தர் ராமனுக்கு, சிவாக்கு, பாகற்காய்க்கு நன்றி.

மூவருமே தெளிவான புரிதல் கூட விமர்சனத்தை அளித்தமைக்கு.

ஜோதிஜி said...

நாம் ஒற்றுமையாக இருப்பின் நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

(இரண்டு விதமான நிகழ்வையும் நாம் பார்த்துவிட்டோம்)

நண்பரே மொத்த இடுகையின் சராம்சத்தையும் நீங்கள் கொடுத்த இந்த ஒரு விமர்சனமே உள் அடக்கி விட்டது.

உண்மையும் கூட.

சீனர்களுக்கு இன்று மொத்த அச்சறுத்தல் அளித்துக்கொண்டுருப்பது முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக சீனாவில் வாழும் மாநில மக்கள். மறைக்கப்பட்ட விசயங்கள் இத்தனை தூரம் இருக்கிறதே உள்ளே உணர்ந்து எழுதியவர்கள் எழுத்துக்களை படித்துப் பாருங்கள். அவர்களின் வீர்யம் புரியும்.

பின்லேடன் இத்தனை நவீன வசதிகள் இருந்த போதும், கண் கொத்திப் பாம்பாக கவனித்துக்கொண்டுருந்த போதில் பல மில்லியன் டாலர்டகளம் ஒரு கண்டத்தில் இருந்து அடுத்த கண்டத்திற்கு தேவைப்படும் நேரம் குறிப்பிட்ட மணி நேரம் தான்.

இவை இரண்டும் தவறு சரி என்ற பார்வையில் பார்க்க வேண்டும். எது இணைத்தது? எவை சாத்யமாக்கியது? மதம். ஒரே பார்வை.

ஆனால் இந்து மதம் இன்று வரையிலும் இதனை உருவாக்காமல் உருக்குலைத்த விதங்களை 3000 ஆண்டுகளாக பார்த்து வந்த போது அத்தனையிலும் இந்த ஜாதி தான் முன்னோடியாக இருக்கிறது.

இந்த ஒரு வார்த்தைதான் சதியாக இன்றும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

தமிழன் என்பவன் எதையும் முயற்சிக்க வேண்டாம். முயற்சிப்பவர்களை விமர்சிக்காமல் இருந்தாலே போதும் என்ற எண்ணம் உருவாகிக்கொண்டுருந்தாலே போதும் போலிருக்கிறது. அந்த ஒரு பிடிமானத்தை பிரபாகரன் கெட்டியாக உணர்ந்த ஒரு காரணம் தான் இந்த அளவிற்கு வளர்த்து விட்டுள்ளது. வீழ்த்தியும் விட்டுள்ளது என்று நிணைப்பு வருகிறது.

ஆனால் உங்கள் கூற்று உண்மை. ஒற்றுமையாக இருந்த போதும் தொடக்க காலத்தில் செவிடன் காதில் ஊதிய சங்காக சிங்களர்கள், தமிழன் வாழ்க்கையை, மொத்த மக்களையும் ஊதி தொலைத்து இருக்கிறார்கள்.
ஆனால் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து, புரிந்து, உணர்ந்து இருந்தால் இந்த இத்தனை அவலங்களை வந்து தொலைத்து இருக்குமா?

இது தான் என்னுடைய தேடலின் தொடக்கம். நண்பரிடம் பேசியதை தான் உங்களிடமும் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஓட்டத்தில் முதல் இடத்தில் வந்து இறுதியில் வந்து வெற்றிக்கோட்டை தொட வேண்டிய சமயத்தில் முட்டி பிசகி கீழே விழுபவனை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

அழுவீர்கள் நீங்கள் உள்ளே வாழ்ந்த காரணத்தால்.
ஆற்றாமைப்படுகிறேன் அத்தனை பகுத்தறிவையும் ஒதுக்கி வைத்து விட்டு.

காரணம் பசில் ராஜபக்சே தமிழக தலைவர் ஒருவரிடம் "அந்த இறப்பு சான்றிதழ் குறித்து பிறகு வந்து பேசுகிறேன்" என்று தப்பித்து அவசரமாய் வெளியேறிய போதே அந்த இறையாண்மை இருப்பதாக இருக்கும் நல்ல தலைவருக்கும் மனதில் தோன்றி இருக்கும்? பிரபாகரன் இன்னும் இருக்கிறார்? என்று.

அறிவான விமர்சனத்திற்கு நன்றி தமிழா.

ஜோதிஜி said...

இன்னும் சிலர் இருந்திருக்கிறார்கள்

நன்றி ஐயா.

1951 ஆண்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பணத்தில் கையெழுத்து போடப்பட்டுள்ளது யாருடையது தெரியும்?

அப்போதைய நிதி செயலாளர் திரு முருகேசு.

தமிழர்.

சிரிப்பு சிரிப்பா வருது ஐயா. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தொடக்கத்தில் இருந்தே வெளிநாட்டிக்கு சென்று இன்று மூன்றாம் நான்காம் தலைமுறைக்கும் வந்து விட்டார்கள்.

ஆனால் இலங்கையில் தொடக்கத்தில் வாழ்ந்த அத்தனை பேர்களும் அங்கேயே ஜெயித்தும் இருக்கிறார்கள்?

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

HOME | Tamil | SEO Submit
Video Search | Top Blogs | Trends | Blog | Video | Images | India News

ஹேமா said...

ஐயா,உங்களோடு கலந்து கட்டிக் கதைக்கும் அளவிற்கு எனக்கு அரசியல் அறிவு இல்லை.
தெரியவில்லை.உங்கள் பதிவுகள் எல்லாம் ஆர்வமாய்ப் படிக்கிறேன்.இந்தப் பதிவு எவ்வளவு விளக்கம் தருகிறது.இன்னும் ஆவலாய் இருக்கிறேன் இதுபோல அறிய.

என் ஆதங்கம் எல்லாம் ஏன் என் மக்களின் அவலம்.
நான் ஏன் வேறு ஒரு நாட்டில் தனியாக.ஏன் என் பெற்றவர்கள் நால்வரைப் பெற்றும் அநாதையாக.
அதுவும் தாங்கள் விரும்பிய பிறந்த இடம் விட்டு இன்னொரு இடத்தில்.எத்தனை வருட காலங்களாக இந்த அவலம்.எப்போது சரி பிழை பேசிப் பேசி இரத்தம் சிந்தியும் ஓய்ந்தாகிவிட்டது.இன்னும் என்ன !இனி எப்படி !சலனமற்ற அடிமை வாழ்வு எப்போ இல்லாமல் போகும் !யார் பாதை திறந்து தர !இப்படி நிறையக் கேள்விகள் மட்டுமே.
தேடுகிறேன் உங்களைப் போன்றவர்களிடமாவது.

என் இறப்பாவது நின்மதியான என் தேசத்தில் வேணும்.இப்படியேதான் சந்தோஷம் இல்லாமல் என் தேசம் இப்படியே இருந்தால் இன்னொரு நாட்டில் இருந்தாலும் சுதந்திரமாய் இருக்கிறேன்.இங்கேயேயே மூச்சை நிறுத்திவிடலாம் விருப்பம் இல்லாமலே.

ஜோதிஜி said...

ஹேமா இதென்ன இத்தனை சீக்கிரம் அழுகுணி ஆட்டம்.

பாரதி சொன்ன "ரௌத்ரம் பழகு" என்பவராகத் தானே நினைவில் வைத்துருந்தேன்.

உங்கள் கவிதை வரிகளை ஒப்பிடும் போது இது ஒன்றும் மிகச் சிறப்பானது அல்ல. இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. உண்மையும் கூட.

அதென்ன வெளி இடங்களில் இறந்தால் ஆத்மா(நம்பிக்கை இருந்தால்?) சாந்தி அடையாதா. இலங்கை மண்ணில் இறந்தால் மட்டும் தான் மோட்சம் கிடைக்குமா? இதென்ன புதுக்கதை?

நீங்கள் அனைவரும் 4000 மைல்களுக்கு அப்பால் புது மொழி புது நபர்களுடன் பழகி வாழ்க்கையை வாழ்ந்து தான் தொலைக்க வேண்டும் என்று தினந்தோறும் வாழ்க்கையை விடியல் வராதா? என்று தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் என்னவாம்? 300 மைல்கள் 600 மைல்கள் கடந்து வாழ்ந்து விழி பிதுங்கி வாழ்க்கையை தேடிக்கொண்டு இருக்கிறோம்.

என்ன வித்யாசம்?

அதிகமான இறக்குமதியாளர்களுடன் பழகியவன் என்ற முறையில் உங்களுடைய தனித்திறமையின் மூலம் வெகு சீக்கிரம் அங்கேயே மேலே வரமுடியும். பலருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கவும் முடியும்?

இங்கே வட்டம் மாவட்டமாக இருந்தால் மட்டும் பொறம்போக்காக வாழ முடியும்? வீடும் கட்ட(?) முடியும். தொழில் மூலம் சம்பாரிப்பது எல்லாம் மின் வெட்டு மூலம் இருட்டுக்குள் வைத்து அழிந்து கொண்டு இருக்கிறது சகோதரியே.

நாம் இருவரின் வாழ்க்கையை விட திருப்தி இல்லாமல், இறந்து போனதற்கும் பிறகும் எவரோ ஒருவர் உருவாகித்தான் தீர வேண்டும். இலங்கை, இந்தியா என்று மட்டுமல்ல உலகம் முழுக்க.

மனம் கலங்கினால் தான் தெளிவும் வரும். கலக்கிய குட்டையில் மட்டும் தான் தெளிந்த நீரும் வரும்.

பிரபாகரன் ஒருவர் உலகில் தோன்றுவார் என்று 30 வருடங்களுக்கு முன் தமிழர்களுக்கு தெரியுமா?

நேதாஜி போல் இறுதி நிகழ்வுகளும் வாழ்கையும் புதிராக இருக்கும் என்று நினைத்து இருப்பார்களா?

நாம் புதிர் அல்ல. புனிதமும் அல்ல.

மொத்த மனிதமும் புழுத்துப் போய் விடக்கூடாது என்ற அவரவருக்குத் தெரிந்த முடிந்த தங்களால் ஆன சிறிய உழைப்பு.

கலவரத்தை உருவாக்கியவர் , முதன் முறையாக கலங்க வைத்து விட்டீர்கள்.

நீங்கள் பெற்ற வாசிப்பு அனுபவம் உங்களை சார்ந்தவர்களையும் சென்று அடையட்டும். வளர்க நலமுடன்.