Thursday, May 26, 2022

தமிழக கல்வி கூடங்களில் போதை கலாச்சாரம்

எம் ஜி ஆர் திமுக வில் இருந்து நீக்கப்படுகிறார். உலகம் சுற்றும் வாலிபன ரிலீசாக போகிறது. 

1973ல் திமுக சார்பில் மதுரையில் மணிநகரம் பகுதியில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க இரும்பு மனிதர் என அழைக்கப்படும் மதுரை முத்து அவர்களும், 

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கமும், எஸ்எஸ்ஆரும்...ஆற்றிய உரை... மதுரை முத்து: 

"அடேய் ராமச்சந்திரா... நீ சினிமாவுல தான் சண்ட போடுவ... ஆனா நா நிஜத்துல சண்டியர்... கலைஞரையா கணக்கு கேக்குற... உன்னை வாழவே விடமாட்டேன். உன் படம் ரிலீஸ் ஆனா நா சேலைய கட்டிக்குறேன்". டேய் ரசிக குஞ்சுகளா. உங்காளு கையில வச்சு சண்ட போடுறது ஒரிஜினல் கத்தி இல்லடா. வெறும் அட்டக்கத்தி. இனியாவது திருந்துங்கடா.. "(எம் ஜி ஆர் கட்சியை விட்டு விலகும்போது திணமணி கார்ட்டூன்... எம் ஜி ஆர் அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு இனி இதற்கு இங்கு வேவையில்லை என்கிறார். 

கருணாநிதி பக்கத்தில் இருந்த மதுரை முத்துவை காட்டி"இந்த அண்ணா என்னை காப்பார் "என்பது போல இருந்தது. மதுரை முத்து அந்த அளவு செல்வாக்கானவர்) 


 

எஸ்எஸ்ஆர்: "அன்றைய தினம் ராஜாதேசிங்கு படத்தில் பத்மினியுடன் நான் நெருங்கி நடிக்க கூடாது என எம்ஜிஆர் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா? " (மறுநாள் #சோ தன் 'துக்ளக்' புத்தகத்தில் "எஸ்எஸ்ஆர் சார். நீங்களும் பத்மினியும் நெருங்கி நடிப்பதை எம்ஜிஆர் தடுத்தாரா? எப்பேர்ப்பட்ட துரோகம் இது. 

இதனால் இந்த நாட்டுக்கே பேராபத்து வந்துவிடுமே!! இதை இந்த நாடு மறந்தால் இந்த நாட்டுக்கு விமோச்சனம் ஏது?" என கிண்டலடித்தார்) 

திண்டுக்கல் எம். பி. ராஜாங்கம் 

""எனதருமை நண்பர் எஸ்எஸ்ஆரை சினிமாவில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜிஆர் தான். எங்களை பகைத்துக் கொண்டதால் இனி எம்ஜிஆர் அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் வாழ முடியாது"... 

இதே ராஜாங்கம் அந்த கூட்டத்தை முடித்து திண்டுக்கல் திரும்பிப் செல்லும்போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. அதிமுக மாயத்தேவரை நிறுத்தி மாபெரும் வெற்றி பெற்று திமுக வேட்பாளர் பொன்முத்துராமலிங்கத்தை (வேட்பாளர் தேர்ந்தெடுத்தது மதுரை முத்து) டெபாசிட் இழக்க செய்தது. எந்த ராஜாங்கம் எதிர்த்தாரோ அவரே எம்ஜிஆரின் முதல் வெற்றிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். 

கருணாநிதி எம் ஜி ஆர் செல்வாக்கு காரணமாக அதிமுக வென்றது என்பதை மறைக்க "மதுரை மாவட்ட தலைமை வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது". என மேயர் முத்து மீது பழிபோடுகிறார். 

முத்துவுக்கு கோபம் வருகிறது. 

"தேர்ந்தெடுத்த போது மறுப்பு சொல்லாமல் தோற்றவுடன் என் மீது பழி போட்டால் என்ன நியாயம் என பகிரங்கமாக கேட்டார்.

உடனே கருணாநிதி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் சொல்வதை கேட்க வேண்டாம் என செக் வைக்க நொந்து போன மேயர் முத்து எம்.ஜி.ஆரிடமே சரணடைகிறார். 

தலைவரும் முத்துவை கட்டித் தழுவி வரவேற்கிறார். அதிமுகவிலும் மதுரை முத்துவே மேயரானார். எஸ்எஸ்ஆரும் தன் மனைவி விஷயத்தில் கருணா நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து எம் ஜி ஆர் இடம் சரணடைகிறார். 

1977 கழகம் வெற்றி பெற அதே மதுரைமணிநகரத்தில் மேயர் முத்து தலைமையில் கூட்டம். மேயர் முத்துவே இந்த தகவல்களை எல்லாம் கூறி "சென்ற கூட்டத்தில் இதே இடத்தில் நாங்கள் மூவருமே(ராஜாங்கம்,முத்து,எஸ்எஸ்ஆர்) எம்ஜிஆரை வாழ விட மாட்டோம் என முழங்கினோம். 


காலத்தின் கட்டளை படி நாங்க மூணுபேருமே எம்ஜிஆரிடம் சரணடைந்தோம்" தர்மம் தலைகாக்கும் படத்தில் "நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும்"என்ற எம்ஜிஆர் வார்த்தை இப்படி பலித்தது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா...?!