Saturday, April 12, 2014

பெரிய மனிதர்கள் Vs எளிய மனிதர்கள்

பெரிதான ஆசைகள் இல்லை. தகுதிக்கு மீறிய லட்சியங்களோ ஏக்கங்களோ கூட இல்லை. இது தான் "தனக்குரிய வாழ்க்கை" என்று எளிதாக ஏற்றுக் கொண்ட மனம். தொழிலாளர் என்ற பெயரில் தினந்தோறும் அவர்கள் உழைக்கும் உழைப்பை பார்க்கும் போதெல்லாம் "இது போதும் எனக்கு" என்ற அவர்களின் எளிய நேர்மையான உள்ளம் தான் எனக்குத் தெரிந்தது. 

மனித மனம் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை எனக்கு முன்னால் இருந்தவர்கள் எவரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் தயாராக இல்லை. அவர்களின் புழுங்கிப் போன மனத்தை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கொண்டே வந்தேன். சில குறிப்பிட்ட நாளில் அவர்களின் தகுதிக்கு மீறிய வேலைப்பளூவை கொடுத்த குற்ற உணர்வு எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. 

இதை எப்படிச் சமன் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்த போது அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்து பார்த்தால் என்னவாகும்? என்று மனம் யோசித்தது. 

பெரிய பதவிகளில் இருக்கும் அத்தனை பேர்களும் எல்லாவிதமான அங்கீகாரமும் தனக்கே உரியதாகக் கருதிக் கொள்வதால் எளிய மனிதர்கள் "அங்கீகாரம் என்பதே தங்களுக்குரியது அல்ல" என்பதாகத் தங்கள் வாழ்க்கையை "உயிர் பிழைத்து இருப்பதற்கு என்பதற்காக மட்டுமே" என்பதாக வாழ்ந்து முடித்து விடுகின்றார்கள். 

இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது புதிய திட்டம். 

என் அதிகாரத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் அங்கீகார வார்த்தைகள், ஆறுதல் வார்த்தைகள், புழுக்கமான மனதில் நிரப்பப்பட வேண்டிய இதமான வார்த்தைகள் இதற்கு மேலாக உழைத்தவர்களுக்குச் சேர வேண்டிய ஊக்கத் தொகை என்று எல்லாவகையிலும் சிறப்பான ஒரு கூட்டத்தை நான் பணிபுரியும் பெரிய நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற் கூடத்தில் நடத்திய போது மனிதவளத்துறை அவசரமாக எடுத்த படங்கள் இது. 

இதே போல ஒவ்வொரு தொழிற்கூடத்திலும் மாதம் தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளர்களின் பாராட்டுகளையும் பெற்று எனது இருக்கையில் அமர்ந்த போது அடுத்தப் பிரிவில் இருந்த தொழிலாளர்களிடத்தில் இருந்து தொடர்ச்சியான அழைப்பு வந்தது. 

எங்கள் பகுதிக்கு எப்போது வருவீர்கள்? 

நேசிக்க, ரசிக்க, பரஸ்பரம் அங்கீகாரம் கொள்ளத்தானே இந்த வாழ்க்கை. தனி மனிதர்களின் மனதை அன்பால் நிரப்பிப் பாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல. உள்ளத்து எண்ணங்களில் கூட அழகு கூடும். 

#நினைத்தேன் செய்தேன் 

( APRIL 10 2014 GARMENT DIVISION. SECTION WISE BEST ACHIEVER PERFORMANCE MEETING)

71 comments:

ஸ்ரீராம். said...

பரிசுகள் தந்து, குறை தீர்க்கும் நாள் போல, கலந்துரையாடல் போல நிகழ்த்தினீர்களோ... பாராட்டுகள்.

நம்பள்கி said...

நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!
நீங்கள் முத்லலாளியாக இருந்தால்...உங்களுக்கு இதானால் லாபம் குறைந்தாலும் உழைக்கும் தொழிலாளிக்கு ஆங்கீகாரம்--ஊக்கத்தொகை கொடுங்கள் ...உங்கள் கம்பனி வளரும்.

இங்கு தொழிலாலிகளுக்கு கம்பனி ஷேர்கள் உண்டு--கம்பனி வளர்ந்தால் அவர்களும் வளர்வார்கள்--அப்படி வளர அவர்கள் மேலும் மேலும் உழைப்பார்கள்.!

saidaiazeez.blogspot.in said...

Child cry for recognition
Men die for recognition!
இங்கு வாழும் அனைவருக்கும் ஒர் அங்கிகாரம் தேவைப்படுகிறது.
பலருக்கு ஒரு சிறிய புன்னகையும் மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கின்றது.

திண்டுக்கல் தனபாலன் said...

பாராட்டுக்கள்...

இன்னும் பல திட்டங்கள் உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் சிறக்க வைக்கவும் வாழ்த்துக்கள்...

bandhu said...

மிகப் பெரிய விஷயம்.. இந்த செயல்களால் பலர் மனதில் இமயமாக உயர்வீர்கள்.

எம்.ஞானசேகரன் said...

//பெரிய பதவிகளில் இருக்கும் அத்தனை பேர்களும் எல்லாவிதமான அங்கீகாரமும் தனக்கே உரியதாகக் கருதிக் கொள்வதால் எளிய மனிதர்கள் "அங்கீகாரம் என்பதே தங்களுக்குரியது அல்ல" என்பதாகத் தங்கள் வாழ்க்கையை "உயிர் பிழைத்து இருப்பதற்கு என்பதற்காக மட்டுமே" என்பதாக வாழ்ந்து முடித்து விடுகின்றார்கள்.//

அருமையான வரிகளு ஜோதிஜி! இதைப்போல எல்லா பெரிய நிறுவனங்களில் இருக்கும் பெரிய அதிகாரிகள் உழைப்பவர்களுக்குரிய அங்கீகாரத்தைப் பாராட்டி கௌரவித்தாலே இது நம்முடைய நிறுவனம் என்கின்ற சந்தோஷச்சூழலில் தொழிலாளர்கள் முன்னெப்போதையும் விட நியாயமாய் உழைப்பார்கள்.

vishwa said...

Greetings, Keep it up sir, We are also enjoying & sharing this happiness every month by giving some gifts and applauds for 100% attendance, best quality & best performance since last five years in all departments even for the sweepers and load men's.

வடுவூர் குமார் said...

Good.

Amudhavan said...

எல்லா விஷயங்களுக்கும் 'கருத்துச் சொல்லும்' சிலர் நடைமுறை என்று வரும்போது அதற்கு நேர்மாறாகவே இருப்பார்கள்.

இந்த உலகில் பல கருத்துக்கள் எடுபடாமல் போவதற்கான காரணமே இதுதான்.

அதுபோல் இல்லாமல் நாம் என்ன சொல்கிறோமோ அதனை நாமே கடைப்பிடித்து அதற்கு முன்மாதிரியாக இருப்போம் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்பட்டு வருவதை உங்களின் ஒவ்வொரு செயலும் நிரூபிக்கிறது.

'இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்' என்ற எண்ணம் வரும்படி தொழிலாளத்தோழர்கள் மத்தியில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம் வியக்க மட்டுமல்ல பரவசப்படவும் வைக்கிறது. வாழ்த்துக்கள் ஜோதிஜி.

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான செயல் அண்ணா....
இது போன்ற நிகழ்வுகள் பரஸ்பரம் ஒரு இனிய உறவு தொடர வாய்ப்பாக அமையும்..
வாழ்த்துக்கள் அண்ணா.

சேக்காளி said...

வாழ்த்துக்கள் ஜோதிஜி.அங்கீகாரம் கொடுக்க மறுப்பவர்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதையும் ஒரு பதிவாக்கினால் உங்களை பின்பற்ற உதவியாய் இருக்கும்.

தருமி said...

மகிழ்ச்சி...
வாழ்த்துகள்.
மேலும் வளர வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பணி! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்களின் புது முயற்சி!

மகிழ்நிறை said...

ஒரு தீபத்தை கொண்டு மற்றொரு தீபம் ஏற்றுதல் போல உங்கள் இந்த பணி வளரட்டும் அண்ணா , பணியாளர் உள்ளம் மலரட்டும்! எழுதுவதையும், போதிப்பதையும் பின்பற்றுவோர் சிலரே!!! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு:))

Ranjani Narayanan said...

படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து நிறைந்து விட்டது. அங்கு உட்கார்ந்திருக்கும் அத்தனை பேர்களின் கண்களும் 'இவர் நமக்கு நல்லதே செய்வார், நல்லதே சொல்லுவார்' என்பது போல தலையை உயர்த்தி உங்களை பார்க்கும் பார்வையே உங்களின் சாதனையை சொல்லுகிறது.
உங்கள் இந்த சிறந்த செயல் மற்ற தொழிற்சாலை மேலதிகாரிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையட்டும். தொழிலார்களின் வாழ்த்துக்கள் உங்கள் ஏழேழு தலைமுறைகளை வாழ வைக்கும்.
மனம் நிறைந்த பாராட்டுகள், ஜோதிஜி!

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான வேலை .நான் லீசார்க்கில் 71/4 வருடம் பணிபுரிந்த போது நண்பர் பாலாஜி மற்றும் முதலாளி திருமதி கிரண்சா தவிர வேறு எவரும் இதை செய்யவில்லை .

வருண் said...

பாராட்டுக்கள் னு வெறும் வார்த்தையில் சொல்லத்தேவையில்லாத ஒரு கண்கூடான சூழல், இது! என்ன இப்படி வாய் நிறைய பாராட்டுக்கள்னு சொல்லவிடாமல் பண்ணீட்டீங்க, கணேசன்? :)

தொழிலாளர்களெல்லாம் தரையில் அமர்ந்து இருக்காங்க! பூமியில் பட்டும் படாமலும் நின்றுகொண்டிருக்கும் மேலதிகாரிகளைவிட நமது பூமியில் உரிமையோட உட்கார தகுதி பெற்றவர்கள் அவர்கள்தானோ? னோ எண்ணத்தோணுது.

ஊருக்குப் போகும்போது எங்க வீட்டில் குளிரும் சிமெண்ட் தரையில் அமர்வதில் தனி சுகம்தான், அகதியாக வெளிநாடு போனபிறகு அத்தகுதியை இழந்துவிட்டேன்! :(

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மிக நல்ல அணுகுமுறை. மற்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அங்கீகாரத்த்திற்காக ஏங்குவது மனித இயல்பு/ தொழிலாளர்களுக்கும் அந்த ஏக்கம் இருக்கும் என்பதை உணர்ந்து அதை தீர்க்க முயலும் உங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் பாராட்டுக்கள் .

Thulasidharan V Thillaiakathu said...

தனி மனிதர்களின் மனதை அன்பால் நிரப்பிப் பாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல. உள்ளத்து எண்ணங்களில் கூட அழகு கூடும். //

முதலில் இதை செயல்படுத்திய தங்களுக்கு எங்கள் உள்மார்ந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

நம்பிக்கையுடன் கூடியிருக்கும் அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமக இருக்கிறது! இதை வாசித்த போது, மேலநாடுகளில், எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும், அவர்கள் துப்புரவு தொழிலாளிகளுக்குக் கூட ஒரு புன்சிரிப்பை உதிர்த்து வணக்கம் தெரிவிப்பது உண்டாம்! அவர்களையும் சமமாக ந்டத்துவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம்!

அங்கீகாரத்தை விரும்பாதவர் யார்? உங்களது இந்த முயற்சி மிகவும் நல்ல ஒரு முயற்சி! இது மேன் மேலும் வளர், தொடர எங்கள் வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

இது குறித்து எங்கள் நிறுவனத்தில் உள்ள மனிதவளத்துறையில் பணிபுரியும் அத்தனை அலுவலர்களுக்கும் வாரத்தில் இரண்டு முறை பயிற்சி வகுப்பு போல எடுத்துக் கொண்டு வருகின்றேன். நீங்கள் எழுதியதும் அது தான் என் நினைவுக்கு வந்தது. நிச்சயம் எழுதுகிறேன் சேக்காளி.

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

நான் அலுவலக பணியாளர்களிடம் சொல்லிக் கொண்டு வருவதை நீங்க எப்படியே மோப்பம் புடுச்சுட்டீங்க. அடேங்கப்பா................. நன்றி மைதிலி

ஜோதிஜி said...

உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருப்பதை உங்கள் வரிகள் எனக்கு உணர்த்துகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன் இதே போல யாராவது பாராட்டுப் பத்திரம் வாசித்திருந்தால் நானும் உள்ளம் நெக்குறுகி அப்படியே நெகிழ்ச்சி போயிருப்பேன். ஆனால் இன்று ஒரு நாள் வாழ்க்கை. நமது ஒரு நாள் கடமை என்பதை கொள்கையாகவே வைத்திருப்பதால் அடுத்த ப்ரொஜெக்ட் ( இரண்டாவது திட்டம்) முடிந்தவுடன் அடுத்த கூட்டத்தில் இதை விட வேறென்ன சிறப்பாக செய்ய வேண்டும்? என்ன செய்தால் இன்னும் பலருக்கு ( மொத்த தொழிலாளர்களின் பாதிப்பேர்களுக்குச் சென்றடைய) எப்படி சென்றடையவைப்பது என்பதை இப்போதே திட்டமிட்டு நிர்வாகத்தில் அனுமதியும் வாங்கி வைத்து விட்டேன்.

உங்கள் அன்புக்கு ஆசிர்வாதத்திற்கு என் நன்றி. இந்த ஏழெழு ஜென்ம மேட்டரை வீட்டில் நிதி மந்திரியிடம் வாசிக்கச் சொன்னேன். நீங்களே அவங்கிட்டே பேசும் போது கேட்டுப் பாருங்க. (?)

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அப்படியோவ். இப்பத்தான் கொஞ்சம் உங்களை வெளிக்காட்டி இருக்குறீங்க. நீங்க சொன்ன திருமதி பாதி ஜெயலலிதா மீதி கமல்ஹாசன் செய்த கலவை.

ஜோதிஜி said...

நன்றி வருண்.

முதலில் அமர வசதியான இருக்கைகள் தான் போட மனிதவளத்துறை அனுமதி கேட்டார்கள். ஆனால் தொழிற்சாலையில் டைலர் தவிர அத்தனை தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் நிலையில் இருப்பதால் சேரில் அமர்ந்து கொண்டு இருக்கும் போது 45 வயதிற்கு மேற்பட்ட குறிப்பாக பெண்களுக்கு காலைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கும் போது உருவாகும் பிரச்சனைகளை உணர்ந்து வைத்திருப்பதால் தரையில் அமர்ந்து கேட்டால் பல வகையில் நல்லது என்பதற்காக இப்படி ஏற்பாடு செய்தேன்.

இரண்டாவது பத்தி (பாரா) ரொம்ப அற்புதமாக உணர்ந்து எழுதியிருக்கீங்க.

ஜோதிஜி said...

நன்றி முரளி. நீங்க சொன்ன மாதிரி மொத்தம் பத்து பகுதிகளில் முதல் பகுதியாக இதில் தொடங்கி உள்ளேன். இந்த மாதம் தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களில் இதன் பலன் மொத்தமாக பணிபுரியும் 5000 பேர்களுக்கும் சென்றடையும் என்று நம்புகிறேன்.

ஜோதிஜி said...

உங்கள் வரிகளை படித்தவுடன் கூட்டத்தில் நான் சொன்ன ஒரு வாசகம்.

இங்கே கூட்டிப் பெருக்கும் பணியில் இருக்கும் அம்மாக்கள் முதல் அலுவலக ஊழியர்கள் வரைக்கும் அத்தனை பேர்களும் சமமானவர்கள். எப்போது வேண்டுமானாலும் தங்களின் உண்மையான நேர்மையான குறைகளுக்காக என்னை எந்த நேரத்திலும் அழைக்கலாம். அணுகலாம்.

உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நிச்சயம். அவர்களுக்கு நான் ஒரு நெருக்கமான உறவுக்காரன் போலத்தான் உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஜோதிஜி said...

கடந்த ஐந்து மாதங்களாக நீங்க எனக்கு விமர்சனம் வழியாக எழுதும் எழுத்துக்கள் என்னை மேன் மேலும் நெறிப்படுத்திக் கொண்டு வருகின்றேன். உங்களின் (எதையும் நல்லவிதமாக பார்க்கும் மனோபாவத்தை) எண்ணங்களை எடுத்துக் கொண்டு பயணிக்கின்றேன். திருமதி ரஞ்சனி நாராயணன் சொன்னது போல (எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட) ஜென்ம பலன் உங்களுக்கு கிடைக்கட்டும்.

மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

எனக்கு முன்னோடியாக பலவகையில் நீங்க இருப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுரைகள் விஷ்வா. வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நீங்க சொன்னது உண்மை தான். யாரும் யாரையும் திட்டக்கூடாது என்பதை கொள்கையாக நடைமுறைப்படுத்தி உள்ளதால் ஒவ்வொரு நாளும் ஆர்வமாக வருகின்றார்கள். மகிழ்ச்சியான சூழ்நிலையில் புதிததாக வேலையில் சேர்ந்தது போலவே மாறி உள்ளனர்.

ஜோதிஜி said...

உங்கள் அங்கீகார வார்த்தைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நிச்சயம் தொழிலாளர்களின் நலன் சார்ந்த பலவிதமான திட்டமிட்டுள்ள விசயங்களை அமல்படுத்த நிர்வாகத்திடம் அனுமதியும் வாங்கி வைத்து விட்டேன் தனபாலன்.

ஜோதிஜி said...

மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. வீட்டில் குழந்தைகளுக்கும் நிதி மந்திரிக்கும் நடக்கும் முக்கிய விவாதமே நீங்க சொல்லியிருப்பது தான்.

ஏம்மா உங்களுக்கு யாரையும் அப்பா மாதிரி பாராட்டவே தெரியாதா? என்று சரிசமமாக மல்லுக்கு நிற்கின்றார்கள். நான் எதற்கெடுத்தாலும் அவர்களை பாராட்டித்தள்ளிவிடுவேன். அவரோ எதற்குத் தேவையோ அளவாகத்தான் பாராட்டுவார். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பது போல.

ஜோதிஜி said...

மிக்க நன்றி. நீங்க சொன்னது உண்மை தான். அந்த அளவுக்கு எல்லாம் இந்தியாவில் வர இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம்.

ஜோதிஜி said...

மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க. நல்ல வேளை எவரும் பெரிதான குறைகள் சொல்லவில்லை.

அப்பாதுரை said...

படிக்கும் பொழுதே நிறைவாக இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருந்திருகலாமே என்ற எண்ணம்.

லட்சியம் என்பதே தகுதிக்கு மிறியது தானே ?

ஊரான் said...

தொழிலாளர்கள் மட்டுமல்ல பெரும்பாலான இத்தகைய எளிய மனிதர்கள் இன்றைய சமூக-பொருளாதார கட்டமைப்பில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். பொருளாதாரத் தேவைகளை ஈடுகட்ட முடியாதது மட்டுமல்ல அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் தங்களின் முயற்சி அவர்களுக்கு ஆறுதளிக்கக்கூடியை என்றாலும் இந்த எளிய மனிதர்கள் வலியவர்களாவதற்கான காரண காரியங்களை கண்டறிந்து அதைக் களையவும் நாம் முயற்சி செய்வதே அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதே எனது கருத்து.

கிரி said...

அற்புதமான மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டிய செயல் அணைத்து, அலுவலங்களிலும் பின் பற்ற வேண்டிய முறை.... நம் நாட்டின் உண்மையான மனித வளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் உங்களது உண்மையான முயற்சிக்கு எனது உளமான வாழ்த்துக்கள்......

ஜோதிஜி said...

வாங்க அப்பாதுரை

உங்களின் உயரம் என் உயரத்தை விட பெரியது. வாழ்த்துரைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

இதற்கு பெரிதாக யோசிக்கத் தேவையில்லை. கணவன் மனைவி என ஜோடியாக பலரும் வேலை பார்க்கின்றார்கள். மது சார்ந்த பிரச்சனைகளை அது உருவாக்கும் சிக்கல்களைப் பார்தேன். அது குறித்து விரைவில் எழுதுகின்றேன்.

ஜோதிஜி said...

வாங்க கிரி. நீண்ட நாளைக்குப் பிறகு. நலமா?

உங்கள் வாழ்த்துக்கு என் நன்றி.

Neechalkaran said...

நல்ல முன்னெடுப்பு. உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். நானும் கற்றுக் கொள்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

நேசிக்க, ரசிக்க, பரஸ்பரம் அங்கீகாரம் கொள்ளத்தானே இந்த வாழ்க்கை. தனி மனிதர்களின் மனதை அன்பால் நிரப்பிப் பாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல. உள்ளத்து எண்ணங்களில் கூட அழகு கூடும். What a Amazing word All the best Jothi ji

கிரி said...

நன்றாக உள்ளேன் சார்.... இந்த முறை இந்தியா வரும் போது உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று ஒரு திட்டம் போட்டு உள்ளேன்... வருவதற்கு முன்பாக உங்களிடம் பேசி பின்பு வருகிறேன் சார்.....

நிகழ்காலத்தில்... said...

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அவசியம்..இந்த நிர்வாகம் அதிர்ஷடம் வாய்ந்தது :)

ஜோதிஜி said...

நன்றி நண்பா. உங்கள் மின் அஞ்சல் சோதிக்க.

ஜோதிஜி said...

வாழ்த்துகள் அய்யா.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே.

ஜோதிஜி said...

இதை நீடீத்து கொண்டு செல்ல வேண்டும் சிவா.

ஜோதிஜி said...

வழி மேல் விழி வைத்து. அவசியம் எதிர்பார்க்கின்றேன்.

அகலிக‌ன் said...

உங்களுடன் மிகச்சில நாட்கள் இருந்திருக்கிறேன் என்ற முறையில் எனக்கு தோன்றியது, உங்களிடம் பாராட்டு பெருவதற்கு முன்பைவிட பாராட்டு பெற்றபின் மேலும் கவனமாகவும் சிறப்பாகவும் செயல்படவேண்டும் என்ற உந்துதல்தான் எழுந்தது. சில நாட்கள் மட்டுமேயான எனக்கே இப்படியென்றால் உங்களை தினமும் கவனித்துக்கொண்டும் உங்களால் உள்ளெழுச்சி பெறுபவர்களும் எத்தகைய செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என்பதை மிகத்தெளிவாக உணர்கிறேன்.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் மற்றவரை பாராட்டவேண்டும் என எங்கள் பத்தாம் வகுப்பு வாத்தியார் அடிக்ககடி சொல்வார். அந்த வரிசையில் இப்போது நீங்கள் .

ஜோதிஜி said...

உங்கள் நட்பு எனக்கு பல வகையில் பெருமை சேர்த்தது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மகிழ்ச்சியையும் தந்தது. உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

இன்னும் பல இடங்களில். தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதே உண்மை. அரசு ஊழியர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பல தனியார் நிறுவனங்களில் இல்லை. இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதால் வருவதை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறர்கள். அவர்களுக்குள் இருக்கும் மனப்புழுக்கத்தையும் சூழ்நிலையையும் நீங்களே உங்கள் டாலர் நகரத்தில் மனம் வெதும்பி சொல்லி இருக்கிறீர்கள். ( குறிப்பாக பணம் துரத்திப் பறவைகள் ) அதன் எதிரொலிதான் உங்களின் கவுன்சிலிங் என்று நினைக்கிறேன். உங்கள் நல்ல பணி வெல்லட்டும்.தொழிற் சங்கவாதிகள் மூக்கை நுழைக்காதிருக்க வேண்டும்.

எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

sivakumarcoimbatore said...

sir.,நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

வாழ்த்துகள். மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

Pandiaraj Jebarathinam said...

நிச்சயமாக ஒவ்வொரு மனதும் எதிர்பார்க்கும் இப்படி ஒரு அங்கீகாரத்தை....தொடருங்கள் உங்கள் பயணத்தை..

இராஜராஜேஸ்வரி said...

நேசிக்க, ரசிக்க, பரஸ்பரம் அங்கீகாரம் கொள்ளத்தானே இந்த வாழ்க்கை. தனி மனிதர்களின் மனதை அன்பால் நிரப்பிப் பாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல. உள்ளத்து எண்ணங்களில் கூட அழகு கூடும்.

#நினைத்தேன் செய்தேன்///

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

ஜோதிஜி said...

இராஜராஜேஸ்வரி

நன்றி

ஜோதிஜி said...

ஜெ பாண்டியன்

நன்றி

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

உங்கள் முயற்சிகள் புதுமையாக மட்டுமிலலாமல், மற்றவரும் பின்பற்றலாமே என்னும் முன்னோடிச் செயலாகவும் தோன்றுகிறது. வாழ்த்துகள். ஒருவார்த்தை, ஒரு புன்னகை கூட அங்கீகாரம்தான். உங்களின் படைப்பாற்றல் இதுபோல உங்களைச் சிந்திக்க வைக்கிறது என்று நினைக்கிறேன். தொடர்ந்து செயலாற்றுங்கள். பகிரவும் மறக்க வேண்டாம்.

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நிச்சயம் பகிர்வேன்.

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://ranjaninarayanan.wordpress.com/2014/04/27/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/

test said...

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்