Tuesday, April 01, 2014

பசி முக்கியமா? மதம் முக்கியமா?

மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு அறிமுகமான "மின் நூல்" என்ற உலகம் நான் நினைத்தே பார்த்திராக விசயமது. நண்பர் சீனிவாசன் அறிமுகமாகி அதனைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்ட பிறகு அதற்காக என்னை தயார் படுத்திக் கொண்டேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் வலைபதிவுகளில் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளை நான்கு தலைப்புகளில் தொகுத்துக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது. நான்கு தலைப்புகள். நான்கும் வெவ்வேறு விசயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தேன். 
வடிமைப்பு  - நண்பர் அவர்கள் உண்மைகள்

அதன்படி ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் ஒரு தலைப்பு மின் நூலாக வெளி வந்தது. இன்று "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு "  என்ற எனது நான்காவது மின் நூல் வெளியாகி உள்ளது. 

ழத்தில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களா? இல்லையா? ஏன் பிழைக்கச் சென்ற இடத்தில் உரிமை வேண்டும் என்ற பெயரில் பிரச்சனை செய்கின்றார்கள்? என்ற பொதுப்படையான எண்ணத்தை மனதில் வைத்திருப்பவர்கள் புரிந்து கொள்ள ஈழ வரலாற்றின் நீள அகலத்தை மொத்தமாக ஒரே பார்வையில் பார்க்கும் பொருட்டு இந்த மின் நூல் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. (ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்)

னக்கு வலைபதிவுகள் அறிமுகமான பின்பு நம்மால் கூட எழுத முடிகின்றது என்று அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் முறைப்படி எழுதுவது எப்படி? என்பதையும் படிப்படியாகக் கற்றுக் கொண்டும் வந்தேன். எழுதுவதற்காகப் படித்த வரலாற்று புத்தகங்களின் மூலம் தமிழர்களின் வரலாற்றை அதிக அளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்க அது தொடர்பான பல புத்தகங்களைச் சிரத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். பெரிய அளவில் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. அது முடியுமா? என்று காலம் தீர்மானிக்கும். ஆனால் முடிந்தவரைக்கும் அடிப்படை விசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்காகத் "தமிழர் தேசம்" என்ற மின்நூலை உருவாக்க முடிந்தது. 

ன்னும் சில மாதங்களில் தற்போது ஆண்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் தெருவில் கிடக்கும் குப்பையாக மாறப் போகின்றது. இந்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்காகச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு செய்த கேடு கேட்ட சமாச்சாரங்களை மக்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. 

இவர்கள் உருவாக்கி உள்ள ஒவ்வொரு பன்னாட்டு ஒப்பந்தங்களின் விளைவை நிச்சயம் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா மொத்தமும் உணரும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. மீதம் இருக்கும் விவசாயிகள் இந்த நாட்டிற்குப் பாரமாக இருப்பவர்கள் என்கிற நிலைக்கு மாறியிருப்பார்கள். பத்திரிக்கைகள் வாயிலாக வெளியே தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பற்றி "வெள்ளை அடிமைகள்" என்ற மின் நூலில் எழுதியுள்ளேன். 

னால் இதனை விட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதி கொடுத்துள்ள திடீர் அமைச்சர் வீரப்ப மொய்லி (ஜெயந்தி நடராஜன் கையில் இருந்த சுற்றுச்சூழல் பொறுப்பு) செய்துள்ள காரியத்தின் பலனை அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு இந்தியனும் உணர முடியும்.  அதனைப் பற்றி இன்று வெளியான மின் நூலில் பேசியுள்ளேன்.

"கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" மின் நூலில் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகத்தில் உள்ள சுற்றுச் சூழல் சீர்கேட்டைப் பற்றியும், நான் பார்த்த இடங்களில் உள்ள அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். இதற்கு மேலாக மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலைப் பற்றி எழுதி உள்ளேன். பசி இல்லாத போது தான் பலவற்றையும் பற்றி யோசிக்கவே முடியும்.  பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும் என்கிறார்கள்.  ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் கையில் எடுத்துள்ள மரபணு மாற்ற விதைகளுக்கான அனுமதி என்பது மொத்த நாட்டையும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அடகு வைத்ததற்கு சமமாகவே கருதப்பட வேண்டும். 

காங்கிரஸ் வியாதிகள் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கிய ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் ஓட்டை உடைசல் திருட்டுத்தனத்தோடு மொத்தமாக ஒவ்வொரு இந்தியனையும் "நமக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து நாம் உயிர்வாழ முடியும்" என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒரு விவசாயி பக்கத்தில் உள்ள மற்றொரு விவசாயிக்குக் கூட விதைகளை விற்கக் கூடாது போன்ற "விதை விற்பனை தடைச் சட்டமெல்லாம்" கொண்டு வந்துள்ள இந்த அரசாங்கத்திற்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?

உங்கள் மனதில் நினைப்பதை தவறாமல் இந்த தேர்தலில் ஓட்டளித்து உங்கள் கடமையைச் செய்து விடுங்க. மாற்றம் வருமா? என்று யோசிப்பதை விட மாறுதல் உருவாவதற்கு நம் ஓட்டும் ஒரு காரணம் என்பதை மறந்து விடாதீங்க. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனநாயக நாட்டில் இது ஒன்று மட்டுமே நமக்கு கிடைத்த வாய்ப்பு என்பதையும் மறந்து விடாதீங்க.

த்துடன் என் மின் நூல் பயணம் முடிவுக்கு வந்து விட்டது.

நினைத்தபடியே மாதம் ஒரு மின் நூல் வெளியாக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியுள்ளது. பல வகைகளில் ஒத்துழைப்பு கொடுத்த நண்பர் திரு. சீனிவாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.  

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக என் எழுத்துப் பயணத்தில் பல வகைகளில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் சேலத்தைச் சேர்ந்த திரு. லெஷ்மணன் அவர்களுக்கும், தற்பொழுது ஒரிஸ்ஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கும், நச்சுப் பொருட்களுக்கு எதிராக களத்தில் வலுவாகப் போராடிக்குக் கொண்டிருக்கும் திரு. செல்வம் அவர்களுக்கும் இந்த மின் நூலை சமர்ப்பிக்கின்றேன். 

ற்கனவே வெளியிடுட்டுள்ள மூன்று மின் நூலும் 20,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. வலைபதிவு பற்றி அதிகம் அறிந்திராதவர்கள் கூட அழைத்துப் பேசினார்கள். ஆதரவளித்த அத்தனை நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி.

ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் எந்தச் சூழ்நிலையிலும் பின் வாங்காமல் சரியோ? தவறோ? அதனை முடித்து விடுவது என்பது என் இயல்பான பழக்கம்.
வலைபதிவு எழுத்துக்கள் குறித்து சமீபத்தில் நண்பர் சீனு அவர் தளத்தில் வெளியிட என் கருத்தை கேட்டு இருந்தார். இதனை அவர் தளத்திலும் வெளியிட்டுள்ளார். அதனை இந்த இடத்திலும் எழுதி வைத்து விடுகின்றேன்.

சில நினைவுகள் மட்டுமே நம் சாவின் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மோடு இருக்கும். தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களால் அவர்களின் கடைசி காலம் வரைக்கும் தமிழ் பதிவுலகம் மறக்க முடியாதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தைப் போல இங்கும் இரண்டு பிரிவினர்கள் உண்டு. அவர்களால் மட்டுமே நாள்தோறும் பதிவுலகம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கை என்பது ரசித்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று கொண்டாட்ட மனோநிலை கொண்டவர்களாலும், ரசிப்பதோடு சிந்திக்கவும் கூடியதாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்பவர்களாலும் நாள்தோறும் பதிவுலகத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே இருக்கின்றது.

பதிவுலகத்தின் பலமென்பது எந்த துறையென்றாலும் பட்டவர்த்தனமாக சிதறு தேங்காய் போல உடைத்து தேவைப்படுபவர்களுக்கு பொறுக்க்கிக் கொள் என்று சொல்லலாம். சமூகத்தில் கணவான் வேடம் போட்டுக் கொண்டிருப்பவர்களை கலங்கடிக்க வைக்க முடியும். அதேபோல கடைசி வரைக்கும் வாசிப்பவனை சிந்திக்கத் தெரியாத வெறும் விடலையாக, பொறுக்கியாகவே வைத்து விடவும் முடியும்.

தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தி வைப்பதில் காட்டிய தேக்க நிலையினால் 2000 ஆண்டு சரித்திரத்தில் பாதி பக்கங்கள் மட்டுமே இன்று வரையிலும் உள்ளது. மீதி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற நிலையில் தான் உள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பதிவுலகம் அறிமுகமான பிறகு எது தேவை எது தேவையில்லை என்பதையும் தாண்டி இங்கே அனைத்தும் ஆவணமாக மாறிக் கொண்டிருக்கின்றது. காலம் தீர்மானிக்கும். தேவையான விசயங்கள் தேவையான நபர்களுக்கு காலம் கடந்தும் அவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இங்கே உள்ள நவீன வளர்ச்சி நாள்தோறும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

உங்களால் தினந்தோறும் அரை மணி நேரம் ஒதுக்க முடியும் என்ற சூழ்நிலையில் உங்களைச் சுற்றியுள்ள, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவத்தை எழுதத் தொடங்கவும். அது உங்களுக்குப் பின்னால் இணையத்தில் புழங்கப் போகின்றவர்களின் பார்வையிலும் படப் போகின்றது என்ற அக்கறையுடன் எழுதிப் பழகுங்கள். 



எப்படி நேரம் கிடைக்கின்றது என்று கேட்பவர்களுக்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில். 

ஒரு நாள் வாழ்க்கையை மட்டும் வாழப் பழகுங்கள். 

உங்களின் உண்மையான ஆர்வம் கஷ்டப்பட்டு உழைக்க வைக்காமல் இஷ்டப்பட்டு உழைக்க வைக்கும். 

ஒவ்வொரு மணித்துளியையும் தெளிவாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முயன்று பாருங்க.

(விலையில்லா)மின் நூல் தரவிறக்கம் செய்ய, பகிர்ந்து கொள்ள, வாசிக்க




52 comments:

Amudhavan said...

பதிவுலகம் என்பதை ஏதோ 'பொழுதுபோக்க' என்ற அளவில் பலபேர் நினைத்துப் புழங்கிக் கொண்டிருக்க அதற்கும் அப்பால் தீவிரமான சிரத்தையுடன் அது வரலாற்றைப் பதிவாக்கும் ஒரு தளம் என்பதுடன் -

அதனோடு சேர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ஒரு அருமையான கலை இதனோடு பயணப்படும் அத்தனைப் பேருக்கும் வாய்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படுவதும் அதற்கான முன்னெடுப்புகளை வெகு தீவிரமாக எடுத்துவருவதும் ஆச்சரியமளிக்கிறது.
தங்கள் முயற்சியில் கைகோர்க்க நிறைய கரங்கள் தயாராக இருக்குமென்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அடுத்த மின்னூலுக்கு வாழ்த்துக்கள் . நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் ஆழ்ந்து படிக்க வேண்டியவை . ஈழம் வந்தார்கள் வென்றார்கள் மட்டும் முழுவதும் படித்துவிட்டேன். மற்றவற்றை டவுன்லோட் செய்து விட்டேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

புதிய மின் நூலுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
தரவிறக்கம் செய்து கொண்டேன்
நன்றி ஐயா

'பரிவை' சே.குமார் said...

அண்ணா வாழ்த்துக்கள்...

இதையும் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்...

துளசி கோபால் said...

மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

// இத்துடன் என் மின் நூல் பயணம் முடிவுக்கு வந்து விட்டது. //

முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்... காத்திருக்கிறோம்...

P.S.Narayanan said...

பணம், பகட்டு, படாடோபம், கூழைக்கும்பிடு, சாராயம், உருப்படி போடுவது, சூதாட்டம் என்றவற்றை மட்டுமே அறிந்த ஊர் திருப்பூர். அறிவுக்கும் இந்த ஊருக்கும் தொடர்பில்லை என்று நான் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியும். அந்த நிலையில் திரு கணேசனின் அறிமுகம் கிடைத்தது. எனக்குத் தெரிந்த வரை வாழும் மனிதர்கள் [மற்றெல்லாம் பிழைக்கும் விலங்குகள் - விலங்குகளைக் கேவலப் படுத்தி விட்டேன் - மன்னிக்க] வெகு சிலரே திருப்பூரில் உள்ளனர். அதில் இந்த செட்டிநாட்டு நண்பரும் அடக்கம். அவரது பணியில் என் பங்கு கடுகளவே. வாழ்த்துக்கள். அவரது பணி தொடரட்டும்.

அன்பன்
சங்கர நாராயணன்,
கலிங்கநாடு.

Anonymous said...

ஆன்மிகம் என்பது அனுபவம் மட்டுமே. உண்டு என்றால் தெய்வம் உண்டு, இல்லை என்றால் தெய்வம் இல்லை.. மனதில் தான் அனைத்தும் உண்டு, தம் மனமும், தம் எண்ணமும் மட்டுமே உயர்வானது என எண்ணிய மனித மனம் கர்வத்தையும் குரோதத்தையும் வளர்க்கும் இடமாய் அமைகின்றது.. ஆன்மிகம் தனி மனித ஆற்றலை வளர்க்குமானால் நல்லது, அதுவே மற்றவனை அழிக்கும் எனில் அது வெறும் குப்பை தான். மனிதாபிமானமே வாழ்வில் பிரதானமானது. மனிதத்துவம் தான் நம் மனித இனத்தையும் பண்பாட்டையும் சமூகத்தையும் காத்து வருகின்றது. மனிதமுள்ள ஆன்மிகம் தெய்வமாகிவிடும், மனிதமற்ற ஆன்மிகம் சூன்யமாகிவிடும்.. !

ஆன்மிகம் போலித்தனங்களையும் பொய்மைகளையும் கட்டுக்கதைகளையும் உள்ளடக்கி மனிதம் கொல்லும் போது, அங்கு நாத்திக வாழ்வியல் வளரத்தொடங்குகின்றது.. நாத்திகமோ ஆத்திகமோ மனிதமும் ஜீவகாருண்யமும் மாத்திரமே உள்ளங்களில் தங்கும் வாழ்வை உயர்த்தும்..

ராஜி said...

புதிய மின்னூலுக்கு வாழ்த்துக்கள். படிச்சுப் பார்த்துட்டு வரேன்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான அழைப்பு.
நான் உங்களிடம் கேட்டு கொள்ளும் வேண்டுகோள் மொத்த பதிவர்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா ?அதாவது பதிவர்களின் சங்கமம் என்பது போல .இது ஒரு விதத்தில் வழிகாட்டியாக புதிவர்களுக்கு அமையும் என்பதாக நினைக்கிறேன் .
காரணம் சமீபத்தில் குவாண்டம் தியரி பற்றி தேடி கொண்டு இருந்தபோது மிக அனாயாசமாக ஒரு பதிவர் பல வருடத்திர்க்கு முன்னரே போட்டு இருந்தார் .நம்மில் உள்ள அறிவு ஜீவிகளுக்கு பாராட்டு தெரிவித்தாவது ஊக்கப்படுத்தலாமே என்பதால் கேட்கிறேன் .நன்றி .

த. சீனிவாசன் said...

தங்களுடனான இனிய பயணத்திற்கு நன்றி.

விரைவில் மீண்டும் பயணிப்போம்.

”தளிர் சுரேஷ்” said...

தொடர்ந்து இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்! தரவிறக்கம் செய்து கொள்கிறேன்! நன்றி!

Ranjani Narayanan said...

கார்ட்டூன் பிரமாதம்!
மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள். வலைபதிவில் இருப்பவைகளை தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். இனி புதிய தலைப்பில் அசத்த வாழ்த்துகள்!
ஆசை இருக்கு தாசில் பண்ண என்பதுபோல எனக்கும் நீங்கள் எழுதும் வேகம் வரவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் எத்தனை விதமான பாத்திரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. முதலில் குடும்பத் தலைவி, மனைவி, அம்மா, பாட்டி (இன்று பேரன்கள் வருகிறார்கள்!). எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துவிட்டு எழுத உட்காரும்போது....அப்பாடா என்று இருக்கிறது. ஆனாலும் விடாமல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்!


kamalakkannan said...

உங்கள் பதிவுகளை தினமும் படிக்கும் போது !!! தவறாமல் தோன்றும் கேள்வி உன்னமையாக நீங்கதான் இதையெல்லாம் எழுதுரிங்களா இல்ல 10 பேர் கொண்ட குழு இருக்கன்னு :)

கிரி said...

நாளை நாமும் இருக்க மாட்டோம் நம் தளமும் இருக்குமா என்று தெரியவில்லை. எனவே இது போல மின் நூல் வெளியிடுவதன் மூலம் நம் எழுத்துக்கள் தகவல்கள் நம் அனுபவங்கள் காலத்தால் அழியாமல் இருக்கும். ஏனென்றால் இவையெல்லாம் இணையத்தில் காலம் இருக்கும் வரை சுற்றிக்கொண்டு இருக்கும்.

எனவே அனைவருமே மின் நூல் மூலம் தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக உங்களைப் போன்று தொடராக எழுதுபவர்கள் நிச்சயம் இதை செய்ய வேண்டும்.

மின் நூல் பயணம் முடிவிற்கு வருகிறது என்று கூறி இருந்தீர்கள். இதை நான் தற்காலிகமாக என்று அர்த்தப் படுத்திக் கொள்கிறேன். ஏனென்றால் இவையெல்லாம் முடிவில்லாதவை. பயணம் முடிவிற்கு வருகிறது என்றால் அது நீங்கள் எழுதுவதை நிறுத்தினால் மட்டுமே சாத்தியம் அது வரை இந்த மின் நூல் பயணமும் உங்களுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://tthamizhelango.blogspot.com/2014/04/blog-post_2.html

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

எழுதி தனக்கான இடத்தை அடையும் நபர்களை விட தமிழ் மொழிக்காக அதன் வளர்ச்சிக்காக வெளியே தெரியாமல் பல வகைகளில் தொழில் நுட்ப ரீதியாக நூற்றுக்கணக்கான பேர்கள் உழைத்துக் கொண்டிருப்பதை இந்த வருடம் அதிகம் பார்த்துள்ளேன். நிறைய நம்பிக்கைகள் உள்ளது. ஜனநாயகம் தற்பொழுது கலங்கிய குட்டை போல இருந்தாலும் எதிர்காலத்தில் தெளிவு நிலையை நோக்கி நகரும் என்பதற்கும் அதற்கான களப்பணிகள் சமூக வலைதளங்கள் செய்யும் என்ற நம்பிக்கைகயை எனக்கு உருவாக்கியுள்ளது. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

பலரும் இதையே தான் சொன்னார்கள் முரளி. ஆனால் இன்னும் நாலைந்து மாதத்திற்குள் தரவிறக்கம் செய்து வைத்துள்ளவர்கள் படித்து முடித்து விடுவார்கள் என்ற நம்புகின்றேன். உங்கள் வருகைக்கு தொடர்ந்த அக்கறைக்கும் மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

நன்றி டீச்சர்.

ஜோதிஜி said...

இந்த வருட இறுதிக்குள் சேர்வதை நீங்க சொல்வது போல மற்றொரு மின் நூலை போட்டு விட்லாம் தனபாலன். 650 பதிவுகள் வந்துள்ளது. ஆயிரத்தை தொட்டு விட முடியுமா? என்று யோசிக்கின்றேன்.

ஜோதிஜி said...

உங்கள் உழைப்புக்கு உங்கள் களப்பணிக்கு உங்கள் சமூக அக்கறைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஜோதிஜி said...

நீண்ட நாளைக்குப் பிறகு மிக அழகான விமர்சனம்.

ஜோதிஜி said...

நன்றி ராஜி

ஜோதிஜி said...

http://denaldrobert.blogspot.in/2012/11/blog-post_6171.html

http://dev.neechalkaran.com/p/periodicals.html

http://www.tamilblogger.com/

http://pattapattifollow.blogspot.in/


உங்கள் தேடுதலுக்கு என் வாழ்த்துகள். இதில் தேடிப்பாருங்க. உங்களுக்கு உதவக்கூடும்.

ஜோதிஜி said...

உங்கள் நிறைய கடமைப்பட்டுள்ளேன் சீனிவாசன்.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

இங்கும் அதே தான். ஆனால் உங்களை விட சவாலான வேலையில் இருந்து கொண்டு இதை செய்து கொண்டிருக்கினறேன். ஒரே காரணம் மனைவியும் குழந்தைகளும் என் வாசகர்களாக இருப்பதால் இது எனக்கு சாத்தியமாகின்றது. நீங்க இன்னும் பல உயரங்கள் தொட வேண்டிய காலம் மிக அருகில் உள்ளது.

ஜோதிஜி said...

அட, இது புதுவிதமாக இருக்கே. நான் இதை பாராட்டாக எடுத்துக்கேன் கண்ணன். மக்கள் கொளுத்தி போட்டு விடப் போறாங்க. நன்றி கமலக்கண்ணன்.

ஜோதிஜி said...

ஓரே மூச்சில் மொத்த பதிவையும் முடிச்சுட்டீங்க கிரி. நன்றியும் வாழ்த்துகளும்.

ஜோதிஜி said...

நன்றி ராம்.

ஜோதிஜி said...

படித்தேன். சிறப்பாக எழுதியுள்ளார்.

ஜோதிஜி said...

நன்றி

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா வணக்கம். தங்கள் நூல் எதையும் நான் படித்ததிலலை. விரைவில் படித்துவிட்டு வருகிறேன். பயணம் தொடரவேண்டும் என்பதே என் வேண்டுகோள். நான் அண்மையில் எழுதியுள்ள ஒரு கட்டுரைக்காகக் குறிப்புகள் எடுத்தபோது உங்கள் கட்டுரை கிடைத்தது. அதிலிருந்து ஒரு பத்தியை அப்படியே உங்கள் பெயருடன் நன்றிகூறிப் பயன்படுத்தி யிருக்கிறேன் பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_3.html நன்றி

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

கருத்துப் படம் வரைந்தவர் தி.வ.எனும் தி.வரதராஜன். அவரது பெயருடன், வெளிவந்த இதழ்ப்பெயரையும் (செம்மலர் (அ) தீக்கதிர்?) வெளியிட்டிருக்கலாமே?-நன்றி.

ஜோதிஜி said...

நீங்க சொன்ன பிறகே இது தீக்கதிரில் வந்தது என்று தெரிந்து கொண்டேன். நிச்சயம் உங்கள் மூலம் பெயர் வந்து விட்டதே?

ஜோதிஜி said...

நன்றி

மகிழ்நிறை said...

நாலும் நாலு வகையான நூல்கள் !
அதுவும் அர்த்தம் பொதிந்த படைப்புகள் !
//உங்களால் தினந்தோறும் அரை மணி நேரம் ஒதுக்க முடியும் என்ற சூழ்நிலையில் உங்களைச் சுற்றியுள்ள, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவத்தை எழுதத் தொடங்கவும்.// சரி தான். ஆனா உங்க பதிவுகளை படிக்கும் போது நாம் எழுத்துக்கு நியாயம் செய்கிறோமா என என் மனசாட்சி சிந்திக்கத்தொடங்கிவிடுகிறதே !!
அருமையான கார்டூன்!

தி.தமிழ் இளங்கோ said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்! சூழ்நிலை அப்படி! வலைப்பதிவில் தங்களின் பதிவுகள் குறித்து கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் – ஆகிய முக்காலம் குறித்து ஒரு சுயவிமர்சனம் யோசிக்க வைத்தது.

// சில நினைவுகள் மட்டுமே நம் சாவின் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மோடு இருக்கும். தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களால் அவர்களின் கடைசி காலம் வரைக்கும் தமிழ் பதிவுலகம் மறக்க முடியாதாக இருக்கும் என்றே நம்புகின்றேன் //

ஆமாம் அய்யா! நானும் வலைப்பக்கம் போய் என்ன ஆகப்போகிறது, என்று நினைத்தாலும் என்னையும் அறியாமல் கம்ப்யூட்டரில் கைவிரல்கள் கடைசியில் வலைப்பக்கமே செல்கின்றன.


Thulasidharan V Thillaiakathu said...

தயவு செய்து தாங்கள் இன்னும் எழுத வேண்டும்! ப்யணம் முடியக் கூடாது! நாங்கள் உங்கள் அபிமான வாசகர்கள்! இதோ தரவிரக்கம் செய்கிறோம்! பொழுது போக்கு அம்சமாக இல்லாமல் நல்ல தரமான, பயனுள்ள, தமிழ் அன்னையை அலங்கரிக்கும் விதமாகத் தரும் தங்கள் பதிவுகள் முடிவைக் காணக் கூடாது! மேலும் மேலும் பெருகி வருவதையே விரும்புகின்றோம்!

நன்றி! வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://sankaravadivu.blogspot.in/2014/04/blog-post_6.html

Pandiaraj Jebarathinam said...

பதிவுலகத்துக்கு தேவையான தகவல்கள் அதிகம் உள்ளன உங்களிடத்தில்.. தொடர்ந்து எழுதுங்கள்.. உங்கள் வாசகனாக அடுத்த பதிவின் எதிர்பார்ப்புடன்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள். மின் நூலாக்க முயற்சி மிகவும் சிறப்பாக உள்ளது.

ஜோதிஜி said...

மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

நன்றி பாண்டியன்.

ஜோதிஜி said...

உங்கள் உதவிக்கு நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி.

ஜோதிஜி said...

உங்களின் நட்பும், சிந்தனைகளும் எனக்கு அதிக தாக்கத்தையும் பொறுமையையும் கற்றுத் தந்துள்ளது. மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி மைதிலி