Friday, June 04, 2021

7 ஆண்டுகள் (இந்திய வெளியுறவுத்துறை)

 முன் எச்சரிக்கை (ஆயிரம் வார்த்தைகள் கொண்ட முக்கியமான கட்டுரை)

7 ஆண்டுகள் (இந்திய வெளியுறவுத்துறை)

50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊரில் உள்ள நடைமுறை வாழ்க்கை குறித்து நமக்குப் புரியுமா? தெரிந்தாலும் உத்தேசமாகத்தான் பேசுவோம். ஆனால் தமிழர்கள் அசாத்தியமான புத்திசாலிகள். உள்ளூர் அரசியல் பற்றியே தெரியாதவர்கள் மோடி ஆட்சியின் வெளியுறவுத்துறையைப் பற்றி அலசி ஆராய்ந்து இறுதியில் மோசம் என்று முடிக்கின்றார்கள்.




நம் புத்திசாலி நண்பர்கள் கூடவே மோடி மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பின்வருமாறு பட்டியலிடுவேன்.

1. நாடு நாடாக சுற்றுகின்றார்.

2. விலை உயர்ந்த ஆடைகள் அணிகின்றார்.

3. ஆபூர்வ காளான் வகைகளைச் சாப்பிட்டு தன் மேனி அழகை பாதுகாக்கின்றார்.

5. தன் உருவத்தைப் பாதுகாக்க அதிகம் மெனக்கெடுகின்றார்.

இன்னும் பட்டியல் நீளும். 

என் நெருங்கிய படித்த நண்பர்கள் முதல் இப்போது தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகியிருக்கும் ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் டபுள்வாட்ச் டக்ளஸ் வரைக்கும் இது போன்ற காழ்ப்புணர்வுகளைச் செல்லும் இடங்களில் எல்லாம் கொட்டிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் ராகுல் முதல் உத்தமர் பாசி போன்றவர்கள் பொழுது  போகாமல் ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்திய வெளியுறவுத்துறை மானம் கப்பலேறிவிட்டது என்று எழுதும் பாசி அவர்களுக்கு சிவகங்கை தொகுதி மக்கள் வாங்கிய மானத்தை விட உத்திரப்பிரதேசத்தில் ஓடும் கங்கை நதி மாசு குறித்துத் தான் அதிக கவலைப்படுகின்றார். இவர் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் தூதர்களின் மன்றம், கடந்த காலங்களில் நமது வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளின் தலைமையில் இருந்தவர்கள் உட்பட, பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் இடைவிடாமல் விமர்சித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஏழாண்டுகளில் பாஜக அரசு எப்படித்தான் இந்திய வெளியுறவுத்துறையைக் கையாண்டுள்ளது?

1. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை என்பது உல்லாசிகள் சல்லாபிக்கும் துறையாக இருந்தது. வெளிநாடுகளில் வாழ்ந்த இந்தியத் தூதர்களின் வாழ்க்கை, நடைமுறை, சித்தாந்தம், பணி செய்யும் முறை என்று எதுவும் அங்கே வாழும் இந்தியர்கள் முதல் இங்கே இருந்து செல்லும் இந்தியர்கள் வரைக்கும் எவருக்கும் எந்தப் பலனும் இல்லாமல் தான் இருந்தது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கீழ் பாஜக அரசாங்கம் இந்தியாவை அணுசக்தி ஆக்கியது, அணுசக்தி பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்க அரசாங்கத்தை விவாதங்களில் ஈடுபடுத்தியது, இது இறுதியில் பிரதமர் மன்மோகன்சிங்கின் அரசாங்கத்தின் கீழ் இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் பாகிஸ்தானுடன் நடந்து கொண்டிருந்த உரையாடல்கள் முறிந்தது மற்றும் ஒவ்வொரு நிலையிலும் முட்டுக்கட்டை தான் நீடித்தது. ஆனால் பாஜக அரசு பாகிஸ்தான் கண்ணில் விரல் விட்டு ஆட்டியதுடன் அடங்கிப் போய்விடு. அமைதியாக இருந்து விடு என்று அறிவுரை சொன்னதுடன் புதிய கூட்டாளிகளை உருவாக்கியது. முக்கியமாக ரஷ்யா. நண்பராக மாறும் நாடுகளின் பட்டியல் அதிகரித்தாலும் இந்தியாவின் கொள்கைகளில் எந்த மாறுதலும் உருவாகவில்லை.

2, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வளைகுடா நாடுகளுடன் உருவாக்கியிருந்த தொடர்பு வட்டத்தை பாஜக அரசு  விரிவுபடுத்தியுள்ளது. 

ஜுன் 3 சிந்தனைகள்...

சவுதி ஆட்சியாளர்கள் தனிப்பட்ட முறையில் மோடியின் நண்பர்களாக மாறினர். இது மிகப் பெரிய சாதனை. பாஜக இஸ்லாமியர்களை வெறுக்கும் கட்சி என்ற அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகளுக்கு இது புரியாத புதிராகவே இருந்தது. இது மகத்தான சாதனையாக பார்க்கப்பட்ட மற்ற இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுடன் கூட்டாளிகளாக மாறினர்.

இதன் மூலம் பரஸ்பர வணிக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா அதிகப் பலன் அடைந்தது. அடைந்து கொண்டிருக்கிறது.

3. அமெரிக்காவுடன் இராணுவ ரீதியான பயிற்சிகள் 1990 முதல் தொடங்கியது. காங்கிரஸ் அரசாங்கம் அதனை முன்னெடுத்தது.  ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா உடன் உண்டான உறவில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியது. அதுவே இப்போது ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 

இந்தோ-பசிபிக் கருத்தை முதன்முதலில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2007 இல் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடிவமைத்தார், அடுத்த ஆண்டுகளில் இது காற்றில் கரைந்து காணாமல் போனது. கவனிக்க காங்கிரஸ் அரசாங்கத்தில் யாருக்கும் நேரமில்லை. ஆனால் பாஜக அரசு ஜப்பானுடன் பல புரிந்துணர்வுகளை உருவாக்கி புல்லட் ரயில் முதல்  தொழில் நுட்பப் பரிமாற்றங்கள், மிக மிக குறைவான வட்டியில் உண்டான கடன் வரைக்கும் பெற்றுள்ளது. முந்தைய அரசாங்கத்தை விட மோடி அரசு தனது அண்டை நாடுகளுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த போது இந்தியாவிற்குள் அவர் பயணித்த முக்கிய நகரங்களின் எண்ணிக்கையை விட மோடி பயணித்தது அதிகம். 

4, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இதைச் சிறப்பாக உறுதிப்படுத்தத் தேவையான திறன்களைப் பெறுவதில் அதிகக் கவனத்தை மோடி அரசின் நிர்வாகம் செய்து கொண்டு வருகின்றது. மேற்கு இந்தியப் பெருங்கடலில் பிரான்சுடன் ஒரு பெரிய கடல் கூட்டாண்மை நிறுவப்பட்டுள்ளது. வளைகுடாவில் உள்ள கடற்படைத் தளங்களுக்கான அணுகல் இப்போது இந்தியக் கடற்படைக்குக் கிடைக்கிறது.

ஆசிய நாடுகளுக்குண்டான உறவுகள் தொடர்ந்து மேலோங்கி வருகின்றது. அதன் அனைத்துத் தலைவர்களும் 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் இந்தியாவில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்தியா-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டின் மிகவும் தடைசெய்யப்பட்ட வடிவம் 2015 இல் 41 ஆப்பிரிக்கத் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் விரிவாக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன், மே மாதம் நடைபெற்ற 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் உச்சி மாநாட்டில், அனைத்து 27 தலைவர்களும் கலந்து கொண்டபோது, ​​2013 முதல் தடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது, ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் புவியியல் தொடர்பான ஒன்று குறி காட்டிகள். பிரெக்சிட்-க்கு பிந்தைய பிரிட்டனுடன் தனித்தனியாக மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

5. பிரதமர் மோடி தனது சிந்தனையையும் ஆளுமையையும் சர்வதேச மட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் திணித்திருப்பது இந்திய புலம்பெயர்ந்தோரின் தீவிரமான சலசலப்பில் உள்ளது. அவர் தனது சொற்பொழிவு மற்றும் இந்தியாவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் செய்தியால் அவற்றைப் பலப்படுத்த முடிந்தது. பிரதமர் மோடி இந்தியாவின் மென்மையான சக்தியையும் அதன் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தையும் வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக ஊக்குவித்துள்ளார், இதற்கு முன்னால் இங்கே ஆட்சியில் இருந்தவர்கள் இப்படி செய்தது இல்லை.

2014 ஆம் ஆண்டில், ஐ.நா ஜூன் 21 ஐ ஆண்டுதோறும் யோகா தினமாக அறிவித்தது. மோடி பதவிக்கு வந்த பின்பு நமது கலாச்சார மென்மையான சக்தியை மேம்படுத்துதல் போன்றவற்றை வாய்ப்பு கிடைத்த ஒவ்வொரு நாடுகளிலும் உருவாக்கி வந்தார். 

6, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இன்னமும் சீனாவை வைத்துக் கொண்டு, அதனை மையப்பொருளாகக் கொண்டு இந்தியா வெளியுறவுக் கொள்கைகளில் தோற்று விட்டது என்று கூச்சலிடுகின்றார்கள்.

சீனாவின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இந்தியா மீதான விரோதப் போக்கைப் பற்றித் தெரிந்து இருந்தாலும் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய விரும்பும் இங்குள்ள புத்திசாலிகள் எடுக்கும் முயற்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தானது. ஆனாலும் அவர்கள் அதனை இடைவிடாத பிரச்சாரச் சக்திகளின் மூலம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

பூட்டானில் உள்ள டோக்லாம் பீடபூமியின் ஒரு பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளது என்று வாதிடுகின்றார்கள். 

சீனா வடக்கு பூட்டானில் ஒரு நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு, லடாக்கின் பெரிய பகுதிகளுக்குள் ஊடுருவல் செய்வது, அருணாச்சலப் பிரதேசத்தின் பிராந்திய உரிமை கோரல்கள், சிக்கிமில் விரும்பத் தகாத சம்பவங்களைத் தூண்டுவதை நிறுத்தச் செய்வது என்று சீனாவின் செயல்பாடுகளை மோடி அரசு தொடர்ந்து பலவிதங்களில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே தான் வருகின்றது. 

சொல்லப்போனால் மோடி ஆட்சியில் இருப்பது என்பது சீனாவிற்குக் கண்ணில் விழுந்த தூசியாகவே உள்ளது.

சீனா இன்று வரையிலும் குளிர்காலம் உட்பட 50,000 துருப்புக்களை வைத்து கைலாஷ் மலைத்தொடரின் உயரங்களை ஆக்கிரமித்து இருப்பது வாடிக்கையாகவே இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தப் பகுதிகள் இந்தியாவின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி சுகம் காண்கின்றார்கள்.

காரணம் பேசக்கூடிய அனைவரும் சீனப் பொருட்களுக்கு ஆதரவாளராக இருக்கின்றார்கள். காரணம் என்ன என்பதனைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

சீனா மற்றொரு அண்டை நாடு மட்டுமல்ல. இது ஒரு சக்திவாய்ந்த விரோதி, பல தசாப்தங்களாக, ஒவ்வொரு திருப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது.

சீனாவுடனான எந்தவொரு சமாதானமும்  சீராக இருக்கும் என்பதனை உறுதியாக சொல்ல முடியாது. அதனைச் சீனா நீடிக்க விரும்புமா என்பதனைப் பொறுத்தே இருக்கும்.

தற்போதுள்ள எல்லை ஒப்பந்தங்களைச் சீனா அழித்துவிட்டது மற்றும் 1988 முதல் தொடர்ச்சியான சவாலை முன்வைக்கிறது, சீனா வலுவடைந்து அதன் லட்சியங்கள் பெரிதாகி வருவதால் இது இந்தியாவிற்கு எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும்.

ஜி 20 ஆக இருந்தாலும், ஜி 7 கூட்டங்களுக்கான அழைப்புகள், பிரிக்ஸ் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றின் சர்வதேச அரங்குகளில் இந்தியா தொடர்ந்து தீவிரமாக பங்கேற்கிறது. 

இப்போது இந்தியா காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகளில் ஒரு தற்காப்பு நிலைக்குப் பதிலாக ஒரு தலைமைப் பாத்திரத்தை எடுத்துள்ளது, ஐரோப்பாவுடனான உறவுகளை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனம் மேலோட்டமானது. எந்த நாடும் அதன் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளுக்கு இடையில் ஃபயர்வாலை உருவாக்குவதில்லை. அனைத்து அரசாங்கங்களும் வெளியுறவுக் கொள்கையை பல்வேறு உள்நாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன, 

7, சீனாவிற்குத் தனிப்பட்ட அபிலாசைகள் உள்ளது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குப் பளபளப்பாகவே தெரியும். உள்ளே நுழைந்து பார்த்தாலும் குழப்பமானதாகவே தெரியும். ஆனால் அதன் பாதை, இலக்கு என்பது தெளிவாக வரையறை செய்து நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே தான் இருக்கின்றது. 

சீனா ஏற்கனவே உருவாகியுள்ள வல்லரசுகளை மாற்ற நினைக்கின்றது.

தனித்தனியாக பிளவுபடுத்த நினைக்கின்றது.

ஆசியா நாடுகளிலிருந்து இந்தியாவைச் சீனா பிரிக்க முயன்று கொண்டே இருக்கின்றது.

ஓர் உறையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.

மோடி அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை மூலம் இந்தியா வெளி உலகத்துடன் மிகவும் தெளிவாக இணைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. அதைச் சிறப்பாகவே தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை செய்து வருகின்றது.

ஆனால் மோடி அரசு சீனா முழுமையாக கட்டுப் படுத்த முடியாது என்பதனை உணர்ந்து இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்த எத்தனை வாய்ப்புகள் உள்ளதோ ஒவ்வொன்றாக தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே வருகின்றார்.

செயலிகள் இயங்கத் தடை. பொருட்கள் உள்ளே தடை. அதிக இறக்குமதி வரி என்பதன் மூலம் உள்ளே தூசி படிந்து கிடக்கும் உற்பத்தித் திறனை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.

பாசி படர்ந்த இடத்தைச் சுத்தம் செய்வது சற்று கடினம் தான்.  அதுவும் 60 ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருந்த இடத்தை ஏழு ஆண்டுகளில் முழுமையாக சுத்தம் செய்ய முடியுமா?

தொற்றுநோயின் அழிவுகளை நாடு எதிர்த்துப் போராடும் ஒரு காலகட்டத்தில், குறிப்பாக நமது சுகாதாரத் துறையில் பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான கொடிய இரண்டாவது அலை வீசும் இந்தத் தருணத்தில் கூட ஆளும் அரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் செயல்படமறுப்பவர்கள் எதிர்க்கட்சிகள் அல்ல. மோடியின் எதிரியாகவே இருக்க விரும்புகின்றார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரதமரின் மரியாதையைக் குறைக்க இந்தியாவுக்கு எதிராக பாரம்பரியமாக சார்புடைய வெளிநாட்டு லாபிகளுடன் சேர்ந்து இவர்கள் செயல்படுவதைப் பார்த்து நாம் புரிந்து கொண்டாலே போதுமானது.



 · 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// பாசி படர்ந்த இடம் - 60 ஆண்டுகள் //

அடடே...!