Sunday, December 26, 2021

காசி புனித ஸ்தலம் (மோடி ஒரு கருவி)

"நாங்கள் அதிகாலையில் கங்கையில் மூழ்கி எழுந்த போது குளிரை விட நாற்றமும் சகித்த முடியாத வாடையும் கஷ்டமாக இருந்தது.  அதை விட லேசாக வெளிச்சம் வந்த பின்பு ஆற்றைப் பார்த்தேன். குழந்தை பிணம் பாதி எரிந்து மீதி எரியாமல் மிதந்து போனது.  அங்கங்கே தலை வேறு முண்டம் வேறு கிடந்தது".

இப்படித்தான் நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா காசி சென்று வந்த பயணம் பற்றி என்னிடம் கூறினார்.  அந்த சமயத்தில் (1984) அப்பாவும் அம்மாவும் தாஜ்மஹால் முன் எடுத்து வந்த படத்தை வேடிக்கை பார்த்தோம். பாடத்தில் படித்த மும்தாஜ் குறித்து சுவராசியமாக பேசிக்கொண்டோம்.

2014 முதல் தவம் போல படிப்படியாக நகர்ந்து இன்று வாரணாசி முழுக்க அங்கு வாழும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து விசயங்களையும் அந்தத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்துள்ளார்.  

நான் கடந்த 30 வருடங்களாக காசி குறித்த செய்திகளைக் கவனித்து வருகின்றேன். மதம் மற்றும் இறைவன் சார்ந்த ஆர்வம் என்பதனை விட ஒரு புனித நகரத்தை அரசியல்வாதிகள் ஓட்டுக்காக எப்படி சூறையாட முடியும் என்பதனை அங்கு சென்று வந்த பலர் மூலம் அறிந்தே வைத்துள்ளேன்.

பல நண்பர்கள் தனிப்பட்ட உரையாடலின் போது மோடி மிகவும் சிலாகித்துப் பேசுகின்றார்கள். அரசு நடக்கும் விதத்தை ஆச்சரியத்துடன் பேசுகின்றார்கள்.  அவர்கள் இணையத்தில் எழுதும் கட்டுரையில் எப்போதும் போலத் தூற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஏன் என்று கேட்டேன்.

பிழைப்பு முக்கியம் பாஸ் என்று சிரித்துக் கொண்டே சொல்கின்றார்கள்.

மோடி என்பவர் நமக்குப் பிரதமர்.  அவர் காசி விஸ்வநாதருக்கு ஒரு கருவி என்றே நான் நினைக்கின்றேன்.  அடுத்த சில வருடங்களில் அயோத்தி மற்றும் காசி இது தவிர வட இந்தியாவில் உள்ள இந்து புனித தலங்கள் அனைத்தும் தொடர்ந்து ஒரே புள்ளியில் (ரயில் மார்க்கமாக) இணைக்கப்பட்டு வருகின்றது.

அஷ்டலக்ஷ்மிகளும் அருள்பாலிக்கப் போகின்றார்கள்.

இனி வரும் இந்து மக்களின் ஆன்மீகப் பயணம் அதிகரிக்கும் என்பது ஒரு பக்கம். 

அரசுக்கு வரக்கூடிய வருமானம் பல மடங்கு கூடும் என்பது மறு பக்கம்.

(மூன்று பகுதிகள் காசி குறித்த காணொளி கீழே இணைப்பில் உள்ளது)

https://youtu.be/Mbk_ZG7CwUI

https://youtu.be/VW0lHR7bBqA

https://youtu.be/UxKzqQ8vrkg

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆத்தாடி...! சமீபத்திய புதிய ஆதிபராசக்தி தோற்று விட்டார்களே...!

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்