Tuesday, July 16, 2019

நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கை 2019

நம் நாட்டில் மாற்றவே முடியாத சில அடிப்படை விதிகள் உண்டு.  எந்த ஒரு விசயத்தையும் மேலைநாட்டினர் சொல்லும் போது அதற்குக் கூடுதல் மரியாதையும் அதிக நம்பிக்கைத் தன்மையும் உருவாகும்.  அதே போல உலகளாவிய நிறுவனங்கள் இங்கே தங்கள் பொருட்களை அறிமுகம் செய்யும் போது இந்திய முழுக்க அறிமுகமான இரண்டு நபர்களை மட்டும் எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள்.  

ஒன்று நடிகர்கள், நடிகைகள்.  மற்றொருவர் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்.

இவர்கள் தான் இந்தியாவின் முகமாகப் பார்க்கப்படுகின்றவர்கள்.  வேறு எந்தத் துறையும் இங்கே மதிக்கப்படுவதே இல்லை.  

தமிழ்நாட்டில் மூன்றாம் நிலையில் உள்ள நடிகர்கள் இறந்தாலும், விருது பெற்றாலும் அது ஊடகங்களுக்கு முக்கியமான செய்தியாகும்.  இங்கு எல்லாமே சினிமா தான்.  எதிலும் சினிமா தான்.  அப்படித்தான் இங்கு ஊடகமும், பத்திரிக்கைகளும் மக்களைச் சிந்திக்க வைக்கின்றது.

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்பதே சென்ற முறை ஆட்சி புரிந்த பாஜக அரசு உருவாக்கி அதனை வெளியிடாமல் வைத்து இருந்தது.

கஸ்தூரி ரங்கன் தலைமையில் அந்தக் குழுவினர் இப்போது வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை வெளிவந்து பல வாரங்கள் கடந்து விட்டது.  இப்போது தான் திமுக ஒரு குழுவை அமைத்துள்ளார்கள்.  ஆளும் அதிமுகவினர் அதைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருந்து வந்தார்கள். துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் எவரும் பேசவில்லை.

பேச வேண்டிய எவரும் இதைப் பற்றிப் பேசாமல் இருந்த தருணத்தில் நடிகர் சூர்யா தன் கருத்ததாக அகரம் அறக்கட்டளையின் சார்பாக 40 வது பரிசளிப்பு விழாவில் முன் வைத்தார்.  அவர் பேசியதில் முக்கியமான சில கருத்துக்கள் இப்போது ஊடகம் பேசு பொருளாக மாற்றியுள்ளது.  

இப்போது தான் அமைச்சர்களும், கல்வியாளர்களும் தங்கள் வாயைத் திறந்தாக வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. எப்போது போலத் தமிழக பாஜக தலைவர் நடிகர் சூர்யா குறித்து நக்கலும் நையாண்டியாகப் பதில் அளித்துள்ளார்,  இணைய பாஜக ஆதரவாளர்கள் அகரம் அறக்கட்டளை குறித்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றார்கள்.

பாஜக. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நம்புபவர்கள் எப்போதும் போல மொத்த நடிகர் சிவகுமார் குடும்பத்தை அசிங்கப்படுத்தி தொடர்ந்து எழுதி வருகின்றார்கள்,

(அகரம் அறக்கட்டளை  வருடத்திற்கு 1000 க்கு மேற்ப்பட்ட பொறியியல் மாணவர்கள் 300 க்கு மேற்பட்ட மருத்துவ மாணவர்கள்,500 க்கும் மேற்பட்ட அறிவியல் துறை மாணவர்கள்...என வருடந்தோறும் சுமார் 2,500 மாணவர்களுக்கு, அதுவும் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களைத் தேடிக் கண்டடைந்து உயர்கல்வி தருகிற சமூகக் கடமையாற்றுகிறது)


***************

நடிகர் சூர்யா பேசிய மொத்த பேச்சில் முக்கியமான கருத்தாகச் சிலவற்றை தன் பார்வையாக எடுத்து வைத்தார்.

1. ஓராசிரியர் பள்ளிகளை மூடக்கூடாது. அனைவருக்கும் சமமான கல்வி இங்கே வேண்டும். அதனை உருவாக்க வேண்டும்.

2. கிராமப்புற மாணவர்கள் இந்த கல்விக் கொள்கையால் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள்.

3. ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு வைக்கக்கூடாது.

4. தரம் என்ற பெயரில் மாணவர்களைப் படுத்தி எடுக்கக்கூடாது.

5. கிராமப்புறம், சிறு நகரங்கள், பெரிய நகரங்களில் வாழக்கூடிய மாணவர்களின் வாழ்க்கைத்தரமும், வசதிகளும், கற்றுக் கொள்ள வாய்ப்பும் வெவ்வேறு விதமாக உள்ளது.  இவர்கள் அனைவருக்கும் ஒரே கல்வி என்பது இங்கே சாத்தியமில்லாத ஒன்று.  அதனை மறுபரிசீலனை செய்தே ஆக வேண்டும்.

6. அரசாங்கம் ஒவ்வொரு வகுப்பிற்கும் பொதுத் தேர்வு கொண்டு வருகின்றது.  கடைசியில் 12 ஆம் வகுப்பு முடிக்கும் போது மற்றொரு தேர்வை அறிமுகம் செய்து அதில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் கல்லூரிக்குச் செல்ல முடியும்? என்று சொல்வது முட்டாள்தனமானது மட்டுமல்ல. அது அயோக்கியத்தனமானதும் கூட.  (இந்த இடத்தில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு மயிர் என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டு மன்னிக்கவும் என்று கேட்டுக் கொண்டார்)

இப்போது அதிமுக அமைச்சர்கள் நடிகர் சூர்யாவை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள் என்றால்  அவருக்கு என்ன தெரியும்? அரசாங்கத்தின் கல்வி குறித்துப் பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது? என்கிறார்கள்.

தமிழக பாஜக இதற்கு ஒருபடி மேலே போய் நிற்கிறது.  அமைதியாக இருக்கும் தமிழக மக்களைக் கலவரப் பாதையில் நடிகர் சூர்யா அழைத்துச் செல்கிறார் என்கிறார்கள்.  ஊடகமும் இதனை முன்னிலைப்படுத்துகின்றது என்று மிரட்டல் தொனியில் பேசுகின்றார்கள்.

மேலே உள்ள விசயங்களில் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான் உள்ளது. அதாவது மத்திய அரசாங்கம் எது கொண்டு வந்தாலும் இங்கே உள்ளவர்கள் ஏதும் பேசக்கூடாது.  பேசினால் அவர்கள் தேசத் துரோகிகள்.  இப்படித்தான் ஹெச். ராஜா போன்றவர்கள் தொடர்ந்து இங்கே அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.  

ஆனால் தமிழக பாஜக மட்டுமல்ல அதிமுக, திமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் என்று எந்த கட்சிகளும் இதுவரையிலும் வரைவுத் திட்டம் குறித்து அதன் சாதக பாதக அம்சங்களைப் பொதுவெளியில் விவாதிக்கவே இல்லை.  இப்போது தான் அதற்கான ஏற்பாடுகளை திமுக செய்து கொண்டிருப்பதாகச் சொல்லி உள்ளனர்.

காரணம் என்ன?

நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் குடும்பத்திற்குச் சொந்தமாகக் கல்வி மற்றும் கல்லூரிகள் எதுவும் இல்லை.  அவர்கள் அரசாங்கத்திற்குப் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.  

ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை கட்சிகளுக்கும் பள்ளி, கல்லூரிகள் நேரிடையாக மறைமுகமாக உள்ளது. அரசாங்கத்தைக் குறிப்பாக மத்திய அரசாங்கத்தை எதிர்த்து எந்தக் கருத்தையும் சொல்ல முடியாத நிலையில்தான் உள்ளனர்.  ஆனால் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகப் பெயருக்கென்று அரசியல் செய்கின்றார்களே தவிர உண்மையில் இதன் தீவிரத்தை உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. தங்களுக்கு என்ன லாபம்? என்ற கணக்கு தான் இதில் உள்ளது என்பதனை வைத்துத் தான் அவர்கள் சமய சந்தர்ப்பத்திற்கேற்ப வார்த்தைகளை அளந்து பேசுகின்றார்கள்.

இப்போது வந்து புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக பாதக அம்சங்களைப் பற்றியும், ஒவ்வொருவரும் பேசாமல் இருக்கும் விசயங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

பாஜக அரசு கல்வியின் தரம் குறித்து அதிக அக்கறை கொள்கிறது. பழைய பஞ்சாங்கம் மாறிக் கொண்டிருக்கும் உலகில் செல்லுபடியாகாது.  இப்போதைய கல்வி உலக அளவில் போட்டிச் சூழலைச் சமாளிக்க வேண்டியதாக உருவாக்கப்பட வேண்டும். இதுவரையிலும் நாம் அது குறித்துக் கவலைப்படாமல் இருந்து விட்டோம்.  இப்போது அதனை மாற்றியே ஆக வேண்டும். அதன்படி தான் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது பாஜக அரசின் கொள்கையாக எடுத்துக் கொண்டால் இது குறித்து பாஜக அரசு தன் விருப்பமாகச் சிலவற்றைத் திணிக்க நினைக்கின்றது. அதன் மறைமுக எண்ணங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனைப் பற்றிப் பேசும் போது தான் உண்மை நிலவரம் நமக்குப் புரியும் என்பது எதிர்தரப்பு நபர்களின் வாதமாக எடுத்துக் கொள்வோம்.  

அது உண்மை என்பதாகவும் எடுத்துக் கொள்வோம்.

ஆனால் தற்போது (மற்ற மாநிலங்களை விட்டு விடுவோம்) தமிழக கல்வித்துறையின் நடந்து கொண்டு இருக்கும் எதார்த்த நடைமுறைகளையும் பற்றியும், ஏற்கனவே இங்கு கல்வி கற்றவர்கள் பெற்ற தரத்தினையும் நாம் பேசியாக வேண்டும். அப்போது தான் இரண்டுக்கும் இடையே உள்ள உண்மைகளைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.

புதிய கல்வி வரைவுத் திட்டத்தின் மீது குற்றச்சாட்டு வைப்பவர்கள் அனைவரும் இந்தக் கொள்கை கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் என்கிறார்கள். அது சரியென்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் நடைமுறையில் தமிழகம் கல்வித்துறையில் எப்படி உள்ளது என்பதனை நடைமுறை உண்மைகளை வைத்துப் புரிந்து கொள்வோமா?

1. மாநில கல்வித்துறை என்பது மாநில பட்டியலிலிருந்து மத்திய அரசின் பொதுப் பட்டியலுக்கு ஏற்கனவே மாறியாகி விட்டது.  அதற்குப் பின்னால் இருந்த அரசியலைப் பற்றியும் அதற்கு உறுதுணையாக இருந்த அரசியல்வாதிகளைப் பற்றியும் நாம் இங்கே பேச வேண்டாம்.  ஆனால் நம் உரிமைகள் அனைத்தும் பறிபோய் நீண்ட காலமாகிவிட்டது. 

2. தமிழக கல்வித்துறையில் ஒவ்வொரு வருடமும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது 28 000 கோடி ரூபாய்.  ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக நம் அரசுப் பள்ளியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே திரு. உதயச்சந்திரன் என்கிற தனிநபர் முயற்சியினால் மட்டுமே கடந்த ஒரு வருடமாகப் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. சில சீர்திருத்தங்கள் அறிமுகமானது. 

3, தனியார் பள்ளிகள் வருடந்தோறும் நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.  பணம் இல்லாதவர்களும் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து தனியார்ப் பள்ளிக்குக் கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளைச் சேர்க்கவே விரும்புகின்றார்கள்.  அப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது.

4. தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை இரண்டும் ஊழலில் மொத்த ஊற்றுக்கண்ணாக உள்ளது.  எந்த மாற்றத்தையும் உருவாக்கவும் இல்லை. அது குறித்து அக்கறைப்படவும் இல்லை.  இன்னமும் அரசு பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம் அங்கு பணிபுரியும் குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள் மற்றும் அங்கங்கே  பள்ளிக்கூடத்திற்கு தங்களால் ஆன நிதியை வழங்கி காப்பாற்றிக் கொண்டிருக்கும் தனி நபர்கள் மட்டுமே.

5. தனியார்ப் பள்ளிகள், அரசு பள்ளிகள் என்பதன் பிரிவினை எப்படி தமிழக மக்களால் பார்க்கப்படுகின்றது என்பது இங்கே முக்கியமானது.  சாதீய ஆதிக்கம் போல தங்கள் குழந்தைகள் தனியார்ப் பள்ளியில் படித்தால் அது உயர்சாதியினர் போலப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால் ஆதிக்க மனப்பான்மை மற்றும் தங்களின் கௌரவம் சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த உளவியலை வெற்றிகரமாக உருவாக்கியவர்கள் இங்கே ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் அரசியல்வாதிகள்.  காரணம் அவர்களுக்குக் கல்வி என்பது வருமானம் தரக்கூடிய தொழில் ஒன்று.

6. தமிழகத்தில் உண்மையிலேயே கல்வித்துறை என்பது எப்படிச் செயல்படுகின்றது?  

பரம ஏழைகள், ஏழைகள் என்பவர்களுக்கு ஒரு கல்வி.  

நடுத்தரவர்க்கத்தினர் என்பவர்களுக்கு ஒரு கல்வி.  

உயர் நடுத்தரவர்க்கத்தினருக்கான கல்வி. 

மிகப் பெரும் பணக்காரர்களுக்கென 

மொத்தத்தில் தனியான கல்வித் திட்டங்கள், கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள் என்று வெவ்வேறுவிதமாக பிரிந்துள்ளது, 

தமிழகத்தில் தான் சமூகநீதி, சம உரிமை என்ற வார்த்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதனையும் இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி பேசிக் கொண்டிருக்கின்ற எந்த அரசியல்வாதிகளின் பள்ளியில் இவை கடைப்பிடிக்கப்படுகின்றது?

******************

கல்வியின் தரம் குறித்து அனைவரும் பேசுகின்றார்கள்? சிலர் மாணவர்களுக்கு அது தேவையில்லை என்கிறார்கள்.  கற்பித்தல் என்பது வேறு? கட்டாயப்படுத்துதல் என்பது என்கிறார்கள். மாணவர்களைக் கசக்கிப் பிழிதல் தவறு என்கிறார்கள்.  எல்லாவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கின்றது? என்பதனைப் பற்றி நாம் அவசியம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2010 ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி மத்திய அரசால் (காங்கிரஸ் அரசாங்கம்) அமலுக்கு வந்தது.

ஆனால் தமிழக அரசு ..ஒருவருடம் கழித்து ..2011 ம் ஆண்டு நவம்பரில் தான் அதனை அமல்படுத்தும் அரசாணையை வெளியிட்டது.

இடைப்பட்ட ஒருவருட காலத்தில்..1500 ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர்.

தமிழகத்தில் 2011 நவம்பரில் தான் அரசாணை வெளியிடப்பட்டது என்பதால்..அக்டோபர் 23 , 2010 என்கிற கால வரையறை தங்களுக்குப் பொருந்தாது என்பது இந்த 1500 ஆசிரியர்களின் வாதம்.

அதனால்..TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இதுவரை 8 ஆண்டுகள் வரை அவகாசம் அளித்தும் ஏழரை லட்சம் பேர்கள் எழுதிய தேர்வில் 35 000 பேர்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.  

இவற்றுக்கு மேலாக..ஆசிரியர் பணியை எதிர்நோக்கி TET தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் பணிக்குத் தேவைப்படும் அனைத்து தகுதிகளோடும் வெளியில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 60,000 !

TET-லிருந்து விலக்கு கேட்டு வழக்காடும் ஆசிரியர்களிடம் ..இதனைச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்ட நீதிமன்றத்திடம்..

சிறுபான்மை கல்வி நிலைய ஆசிரியர்களில் 9000 ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்திருப்பது போல தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து பிரச்சினைகளிலும் ..'legal technicality' என்பதற்குள் நின்று விதிமீறலைச் செய்ய முடியும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

••••••••••••••••

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 31 மாவட்ட நீதிபதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற 3562 பேரும், புதுவையிலிருந்து கலந்து கொண்ட 558 பேரும் ஒட்டுமொத்தமாகத் தோல்வியடைந்துள்ளனர்.

மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்நிலைத் தேர்வை ஏப்ரல் 7&ஆம் தேதி தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் இணைந்து நடத்தின. 

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கானத் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும்,   பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 52.5 மதிப்பெண்களும், பட்டியலினத்தவருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாகத் தேர்வை எழுதிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தான் மிகவும் சோகமாகும்.

••••••••••••••

தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியது சிலவற்றை என்னால் பட்டியலிட முடியும்.

1. அந்தந்த கட்சியினர் வரைவுத் திட்டம் பற்றிய தங்களது பார்வையை தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

2. கல்வியாளர்கள், கல்வி சார்ந்த செயல்பாட்டாளர்கள் தமிழக கல்வித்துறையில் தாங்கள் எதிர்பார்க்கும் சீர்சிருத்தத்தை தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

3. தமிழக அரசு இவை இரண்டையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இரண்டிலும் உள்ள பொதுப்படையான அம்சங்களை வரைவுத்திட்டமாக மாற்றி சட்டசபையின் மூலமாக மத்திய அரசின் பார்வைக்கு அனுப்ப வேண்டும்.

4.  கட்டாயம் மேலே சொன்ன ஒவ்வொன்றும் சமூகவலைதளங்கள், பத்திரிக்கைகள் மூலமாக முழுமையாக மக்களின் பார்வைக்கு வர வேண்டும்.

5. அதன்பிறகு மத்திய அரசு தவறு செ
ய்யும் பட்சத்தில் நிச்சயம் உள்நோக்கில் தான் கல்விக்கொள்கையை வரையறை செய்துள்ளார்கள் என்று நாம் சொல்ல உரிமையுண்டு.

இவையெல்லாம் தமிழகத்தில் நடக்கும் என்று நம்புகின்றீர்களா? 

https://innovate.mygov.in/new-education-policy-2019/

தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்

30 comments:

ஜோதிஜி said...

சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் பார்த்த அரசுப் பள்ளிகளின் நிலைமை அநேகமாக இப்படித்தான் இருந்தது. பல நடுநிலைப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தினமும் பள்ளிக்கு வருகின்றனர். ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அநேகமான பள்ளிகளின் நிலைமைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களை நினைவூட்டுவதாக இருந்தன. சந்தித்த அனைவருமே முன்னொரு காலத்தில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அணியணியாக பள்ளிக்கு வந்து சென்றதையும், இன்றைக்கு சில பத்து மாணவர்களோடு காற்றாடுவதையும் நினைத்து வேதனைப்பட்டனர்.

ஜோதிஜி said...

உலக வங்கியின் கடன் பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்தின் சார்பில் 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது அரசே நிர்ணயித்திருக்கின்ற விகிதமாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொருத்தவரை, நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது. 21, 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படாமலேயே நீடிப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது, தனியார் கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.

ஜோதிஜி said...

“ஆசிரியர்களில் பலரும் முப்பது வருசம் முன்னே படிச்சதை வச்சிகிட்டு இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை ஒரு ஆசிரியர் மேலாண்மை செய்ய வேண்டுமென்றால், முதலில் அவருக்கு நடப்பு உலகின் நவீன மாற்றங்களைப் பற்றிய அறிவும், அவற்றை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து விளக்கும் ஆற்றலும், அந்த வகையில் கல்வியை சமூகக் கண்ணோட்டத்தோடு போதிக்கும் திறனும் அவசியம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது அறிவை கால மாற்றத்துக்கேற்ப வளர்த்தெடுக்கத் தவறுகிறார்கள்” என்கிறார் இமையம்.

ஜோதிஜி said...

”முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். ‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது?” என்கிறார் இமையம். “அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா?” இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும்? ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல?” என்று கேட்கிறார்.

ஜோதிஜி said...

”தற்போது அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால். 1947 க்கு முன் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப் பள்ளிகள் பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அவசரநிலைக் காலம் வரையில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேர் என்கிற என்.ஜி.ஓ நிதி வழங்கியது. அரசு வருடாந்திரம் ஒதுக்கும் நிதியானது புதிய பள்ளிகள் துவங்கவும், கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அவசர நிலைக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க நிதியின் வருகை நின்றது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசு நிதி சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் புதிய பள்ளிகள் கட்டுவது குறைக்கப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான உரிமங்களை அரசு வழங்கத் துவங்கியது. இப்படி துவங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் தான் இன்று ஆக்டோபஸ் போல வளர்ந்து தமிழகத்தை சுற்றி வளைத்துள்ளது. இன்று தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்புகளோ இல்லை என்கிறார் எஸ்.எஸ். ராஜகோபால். மேலும், இந்த தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் உரிய தகுதியற்றவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஜோதிஜி said...

https://www.vinavu.com/2013/09/02/fall-of-government-schools/?fbclid=IwAR018OOU3RH_ibmDL2Q8mYbzY54byVAOBeIHLzplrAJnAqkxOeG-KG10AyM

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கட்டுரை.

இங்கே கல்வியும் வியாபாரம் ஆகி விட்டது. பெரும்பாலான கட்சிகளின் முக்கியப் புள்ளிகள் கல்விட் தந்தைகளாக இருக்கின்றனர் - வருடா வருடம் காசு கொட்டுகிறது என்பதால் அரசுப் பள்ளிகளை காக்கவோ, அதிகரிக்கவோ ஆர்வம் காட்டுவதில்லை தான். மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விருப்பம் கொள்வதில்லை - ஆசிரியரே இல்லாப் பள்ளியில் எப்படிச் சேர்க்க முடியும் என்று வாதிக்க முடியும்.

சிறப்பான கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

//ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். //

ஜோதிஜி இது கிராமத்துப் பள்ளிகள் என்றில்லை. நகரத்துப் பள்ளிகள், அரசு உதவி பெற்று வரும் நகரத்துப் பள்ளிகளும் இதில் அடக்கம். மாநகரத்துப் பள்ளியைச் சொல்கிறேன். சென்னையில்.

என் வீட்டருகில் இருந்த வீட்டுப் பணி செய்யும் பெண்மணி தன் இரு பெண் குழந்தைகளையும் நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பழம் பெருமை வாய்ந்த...அரசு உதவி பெற்று வரும் பள்ளியில் சேர்த்தார். அக்குழந்தைகளிடம் பேசிய போதுதான் தெரிந்தது பள்ளியின் நிலை. எல்லாப்பாடங்களுக்கும் ஒரே ஆசிரியை. அதுவும் இரு வகுப்புகளை மேய்த்துக் கட்டும் பணி. அதற்கு அடுத்திருக்கும் வகுப்பைநோக்கும் ஆசிரியையுட்ன வம்பளத்தல், அரட்டை, டிவி சீரியல் பற்றி பேச்சு., அப்புறம் வாட்சப்பில் உரையாடல் என்று குழந்தைகள் நோட் செய்து சொல்லும் அளவிற்கு! குழந்தைகள் சந்தேகம் கேட்டால் எரிஞ்சு விழுதல் இல்லை பழைய மாணவ மாணவிகலின் நோட்ஸ் பார்த்து அதில் தவறு இருந்தாலும் அதையே எழுதச் சொல்லுதல் அவ்வளவே. கற்பித்தல் என்பது அறவே இல்லை.

அடிக்கோடிக் கிராமத்துக் குழந்தைகளின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை...

பள்ளியின் நிலை இதுவென்றால் இவர்கள் இருக்கும் வீடு ஒரே ஒரு அறைதான் அதை முழுவதும் ஆக்ரமிப்பது டிவி! அப்பன் குடிகாரன். எப்படி குழந்தைகளுக்குக் கற்கும் ஆர்வம் வரும்? நகரத்தில் வாழும் குடும்பங்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான். இது ஒரு வகை என்றால் பணக்கார வீட்டுக் குழந்தைகளின் நிலையும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அது வேறு ரகம்.

எனவே வீட்டுச் சூழல் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தால் மட்டுமே, நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் சூழல் இருந்தால் மட்டுமே, பள்ளியிலும் நல்ல தரமான ஆசிரியர்கள், நல்லொழுக்கத்திற்கு முக்கியத்ஹ்டுவம் கொடுக்கும் சூழல், குழந்தைகளை ஆசிரியர் பக்கம் ஈர்க்கும் சூழல் இருந்தால் மட்டுமே எந்தக் கல்விக் கொள்கையும் வெற்றி அடையும்.

நாங்கள் படித்த பள்ளி, ஆசிரியைகள் இன்றளவும் மனதில் இருக்கிறார்கள் அவர்கள் சொல்லிக் கொடுத்த நல்லொழுக்கம் மனதில் பதிந்திருக்கிறது என்றால் அப்படியான பள்ளி அது.

மதிப்பெண் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை விட கற்கும் ஆர்வம் தூண்டப்பட வேண்டும். இன்றும் மதிப்பெண் நிறைய எடுத்து முதலாவது என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லையா ஆனால் அப்படி வரும் குழந்தைகளை ஆராய்ந்து பார்த்ததுண்டுஆ?

எங்கள் வீட்டில் நிறையவே அந்த அனுபவம் உண்டு. குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் பெற்ற கல்வியின் தரம் அவ்வளவுதான். முதல் என்று வரும் குழ்னதைகள் அப்புறம் காணாமல் போய்விடுகிறார்கள். எனவே கல்வி என்பது கற்றல். லேர்னிங்க் ப்ராசஸ் அது கடைசிவரை தொடர வேண்டும். அதற்கான அடிப்படைதான் வித்திடப்பட வேண்டும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதோ இங்கு பெங்களூரில் அடுத்திருக்கும் வீடு மிக மிக மிக வறுமையில் இருப்பவர்கள். 6 குழந்தைகள். அம்மா வீட்டுப் பணி. அப்பா ஏதோ ஒரு பணி. குடியும் உண்டு. ஆறு குழந்தைகளில் நடுவாக ஓர் ஆண் குழந்தை. மூத்த பெண் மட்டுமே கல்லூரியை எட்டிப் பார்த்திருக்கிறாள். இரண்டாமவள் அருகில் இருக்கும் ஏரியாவிலி வீட்டோடு தங்கி வீட்டுப் பணிகள் செய்து சம்பாத்தியம். மற்ற பெண் குழந்தைகள் வகுப்பு என்னவோ ஒவ்வொரு வருடமும் பாசாகிறார்கள் ஆனால் என்ன சொல்ல? அடிப்படை எதுவுமே தெரியாது. அந்தப் பையனை அழைத்துப் பேசினேன். நான் இங்கு வந்த போது பள்ளி செல்லவில்லை ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இந்த வருட்ம போவேன் என்றான் உறுதி அளித்தான் ஆனால் போகவில்லை. 9 ஆம் வகுப்பு படிக்க வேண்டிய பையன். சரி ஏதேனும் முறையாகத் தொழில் கற்பதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று அரசு நடத்தும் பயிற்சிப் பள்ளியில் சேர விவரங்கள் கொடுத்தால் அதுவும் ஆர்வமில்லை.

எங்கள் இரு வீடுமே கை நீட்டித் தொட்டுக் கொள்ளும் அளவுதான். அங்கிருந்து இங்கு குதிக்கலாம் இங்கிருந்து அங்கு. அவர்கள் வீடு ஒரே ஒரு அறைதான் அங்கு இவர்களுக்கே இடம் கிடையாது ஆனால் டிவிக்கு உண்டு. எல்லோரும் சும்மா இருந்தால் டிவி முன் தான். எங்கள் வீட்டுச் செல்லம் இரவு மிகவும் குரைத்து அங்கும் இங்கும் ஓடுவாள். என்ன என்று பார்த்தால் இந்தப் பையன் எங்க வீட்டு மொட்டை மாடியில் இரவு பீடி குடிக்கிறான். பான் போடுகிறான். அடுத்த நாள் அங்கு பீடி சிகரெட் பாக்கெட்டுகள் தீப்பெட்டிகள், பீடித் துண்டுகள் என்று.

அவன் அம்மாவிடம் இவன் என்று சொல்லாமல் என் செல்லம் குரைப்பது பற்றி சொல்லி யாரோ வருகிறார்கள் சின்ன பையன் தான் என்று பொதுவாகச் சொன்னேன். அவரும் சொன்னார் ஆமாம் உங்கள் வீட்டு குத்தா குரைக்குதுனு நல்ல சேஃப்டி என்று. அட அம்மா உங்க பையனுக்குத்தான் பாதுகாப்பு தேவை என்று நா நுனி வரை வந்ததை சொல்லாமல் விட்டேன். இருட்டிப் பார்த்ததால் அவன் தான் என்பதை உறுதி செய்து கொண்டு பேசலாம் என்று. ஆனால் சொன்னாலும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் இதுதான் பல குடும்பங்களின் நிலை. இதில் கல்வி பற்றி எங்கு எப்படித் தொடங்க முடியும்? யார் புகுத்த முடியும்? சூழல் மாறாமல் அதற்கு முதலில் வழி வகுக்காமல் அடிப்படைக் கல்வி பற்றிக் கூடப் பேச முடியுமா? எங்கள் வீட்டில் நாங்கள் பல மாணவர்களைக் கண்டு வருவதால் சொல்வது இது.

கீதா

'பரிவை' சே.குமார் said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பான கட்டுரை அண்ணா...

இப்பக் கல்வி வியாபாரமாகிவிட்டது... அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தங்களின் சம்பாத்தியமே கல்வி மூலமாகத்தான் என்பதால் சூர்யாவை தீவிரமாக எதிர்ப்பார்கள்.
நாம் எதையுமே கேள்வி கேட்பதில்லை... இங்கே எல்லா முடிவுகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைக்குள் நம்மை வைத்திருக்கிறார்கள்... ஜனநாயகநாடு என்பதெல்லாம் வெறும் பேச்சுத்தான். அரசியல்வாதிகளுக்கான நாடாக மாறிவிட்டது.

இப்பப் பல தனியார் பள்ளிகளில் காலை முதல் மதியம் வரை நீட்டுக்கான வகுப்புக்கள் மட்டுமே... பாப்பா சேர்ந்திருக்கும் பள்ளியில் காலையில் நீட் வகுப்பு மட்டுமே.

இதை எங்க நண்பர் குழும வாட்ஸப் குழுமத்தில் பகிர்ந்திருக்கிறேன்.. நன்றி.

சில எழுத்துப் பிழை இருந்ததால் மேலே சொன்ன கருத்தை நீக்கினேன்...

ஜோதிஜி said...

சமகால எதார்த்த சூழலை அப்படியே நிஜமான உதாரணங்கள் மூலம் படம் பிடித்து காட்டுவது போல எழுதியிருக்கீங்க. இருவருக்கும் நன்றி.

ஜோதிஜி said...

தமிழக அரசாங்கம் உண்மையிலேயே தமிழக கல்விச் சூழலை மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களை விட சிறப்பாக முன்னேற்ற வேண்டும் என்று நினைத்தால் சில காரியங்கள் மட்டும் செய்தால்போதுமானது. சில விசயங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று உருவாக்கினால்போதுமானது. 90 சதவிகித பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்.

1. தமிழகத்தில் கல்விக்கூடங்கள் லாபம் இல்லாத அறக்கட்டளை என்கிற ரீதியில் அனுமதி பெற்று செயல்படுகின்றது. அவைகள் முழுமையாக வணிக நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று அரசாங்கம் கொடுத்த கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாகக் காட்டிக் கொண்டு முழுக்க முழுக்க வணிக்கொள்ளையில் ஈடுபடுகின்றது. இந்த திட்டத்தை நீங்க வணிக நிறுவனமாக செயல்படலாம். உங்கள் லாபத்திற்கு நீங்களே பொறுப்பு என்று மாற்ற வேண்டும். ஆனால் தனியார் பள்ளிக்கூட கணக்கு வழக்குகளை வெளிப்படைத்தன்மையாக மாற்ற வேண்டும். அவர்கள் கட்டணங்களை பொதுவில் வைக்க வேண்டும். குறைவு அதிகம் என்பதனைக் கடந்து தேவை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசாங்கம் கண்காணிக்க வசதியாக இருக்கும்.

2. தமிழக அரசு தனியார் பள்ளியில் மாணவர்களை 25 சதவிகிதம் அரசு பணத்தைக் கட்டி சேர்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். அந்தப் பணத்தை அரசு பள்ளிக்கூட உள்கட்டமைப்பு விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

3. திரு உதயச் சந்திரன் அல்லது அவரைப் போன்ற சிறப்பாக பணிபுரிபவர்கள் குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்களை தேர்ந்தெடுத்து செயலர் பதவியில் அமர்த்தி முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவரை முழுமையான ஆட்சி காலத்தில் எந்த அரசு வந்தாலும் மாற்றக்கூடாது.
5. கல்வித்துறை சார்ந்த எந்த டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடன் இணையம் வழியே மட்டும் எவர் வேண்டுமென்றாலும் கலந்து கொள்ளலாம் என்கிற நிலை உருவாக்கும் பட்சத்தில் விலை குறைவாக தரம் அதிகமான பொருட்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

6. அந்தந்த மாவட்ட அரசு பள்ளிக்கூடங்களை தனியார்கள் மூலம் சிறப்பாக பங்களிக்க வைத்து முன்னேற்ற முடியும். இது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
7. அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் என்பதனை உடனடியாக நீக்கி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
8. ஒரு ஆசிரியர் எக்காரணம் கொண்டும் மூன்று வருடங்கள் அந்தப் பள்ளியை விட்டு மாறுதல் ஆகக்கூடாது. வாய்ப்பு இல்லை என்பதனை சட்டமாக கொண்டு வர வேண்டும்.
9. ஆசிரியர்கள் பள்ளிக்கு அருகே கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி செயல்படும் சமயங்களில் சரியான நேரத்திற்கு அவர்கள் வருகின்றார்களா? என்பதனை கவனிக்க வேண்டும்.
10. கல்வித்துறையில் ஊழல் என்பதனை அறவே இல்லை என்பதனை கொண்டு வரும் பட்சத்தில் எல்லாமே இயல்பு நிலைக்கு வந்தே தீரும். குறிப்பாக ஆசிரியர் பணி இடங்களுக்கு லஞ்சம் என்பது சமூகத்தை மோசடிப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு உதவும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜோதிஜி said...

அறியாத பெற்றோர்களை கண்டதும் சொல்லி பல பள்ளிகள் நீட் என்ற வார்த்தையை வைத்து கொள்ளையடிக்கின்றார்கள் குமார். நன்றி.

G.M Balasubramaniam said...

கல்வி பற்றி நான் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் நம்சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை கல்வி போக்க வேண்டும் சில கருத்துகளுக்கு சுட்டி இதோhttps://gmbat1649.blogspot.com/2013/06/blog-post_5.html

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி! ஸ்ருதி டிவி அகரம் பரிசளிப்பு விழாவில் பேசிய மூவரது பேச்சை வீடியோவாக முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள். வசந்திதேவி சூர்யா பேசியது வலையேற்றப்படவில்லை என்றாலும் இங்கே இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் பொதுவாக ஒரு எதிர்ப்பு நிலை எடுத்திருப்பதில், இது பிஜேபி கொண்டுவந்திருப்பதால் எதிர்ப்புநிலை எடுத்திருப்பதாக மட்டுமே எனக்குப் படுகிறது. நீண்டநாட்களுக்கு முன்னாலேயே உமாநாத் செல்வனும் நண்பர்களும் சேர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பதைத் தரவிறக்கம் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். நான் கல்வியாளன் இல்லை, ஆனால் தொழிற்சங்க வாதியாக இருந்ததில் நம்மூர் வாத்திமார் என்னென்ன செய்வார்கள் என்பதைக் களத்திலேயே நேரடியாக அறிந்துவைத்திருக்கிறேன்.

புதியகல்விக் கொள்கை சூர்யா சொன்ன சின்னச்சின்னக் குறைகள் மட்டுமே அல்ல. அது ஒரு vision document இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதுமே கூட ஒரு வரைவறிக்கை மட்டும் தானே தவிர, இறுதியான வடிவம் அல்ல இடதுசாரிகள் கையில் இதுவரை தனிக்காட்டு ராஜ்யமாக காங்கிரசால் கொடுக்கப்பட்ட நிலை மாறுவதில் அவர்களுடைய எதிர்ப்பு இயல்பானதே. ராஜீவ் காண்டி காலத்து நவோதயா பள்ளிகளைக் கண்மூடித்தனமாக எதிர்த்த, பிரச்சார இயக்கம் நடத்திய ஒரு முன்னாள் மார்க்சிஸ்ட்டாக இழந்தது என்ன என்பதை என்னால் மிக்கது தாமதமாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது என்கிற அனுபவம் இந்தவிஷயத்தில் சூர்யா மாதிரி fringe elements பேச்சைக் கேட்டுத் திசைமாறிப் போய்விடக் கூடாது என்கிற பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது

ஸ்ரீராம். said...

சில வருடங்கள் முன்பு சரவணபவனில் வேலை செய்துகொண்டிருந்த சர்வர் ஒருவரிடம் பேசியபோது அவர் 'பாதி மருத்துவர்' என்று தெரிந்தது! விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அவர் தனது மருத்துவப் படிப்புக்குப் பணம் கட்டமுடியாமல் இரண்டு வருடங்கள் படித்தபின் பணம் இல்லாததால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, வாழ்க்கையைத் தொடர சரவணபவனில் மொபைல் யூனிட் டெலிவரி பாயாக இருந்தார்.

அவருக்காக அகரத்தை அணுகியபோது அவர்கள் போகாத ஊருக்கு வழி சொன்னார்கள். இரண்டு வருடம்வரை படித்த கல்லூரியில் சென்று அதற்கான சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு வந்தால் தங்களுக்குத் தெரிந்த கல்லூரியில் முதலாம் ஆண்டிலிருந்து படிக்க வைப்பதாகச் சொன்னார்கள். முடிந்தால் மருத்துவப் படிப்பு படிக்க வைப்பதாகச் சொன்னார்கள்.

அப்புறம் அந்த மாணவர் கி வீரமணி அவர்கள் சகோதரர் உதவியுடன் அதே கல்லூரியில் பணம் கட்டி படித்து வருகிறார். நாங்களும் எங்களாலியன்ற சிறு உதவி செய்து வருகிறோம்.

இது குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை. என் அனுபவம் ஒன்றாகச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி எனக்கு இதைப் பற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று சொல்லமுடியும்... நம் அரசாங்கம் மக்கள் எதிர்கால நலனுக்கு என்று உருப்படியாக எதுவும் செய்யாது.

Thulasidharan V Thillaiakathu said...

இதையும் காலையில் சொல்ல வந்தேன். வேறு பணிகள் வந்ததால் விட்டுப் போயிற்று. ஆசிரியர்கள் மாணவர்களை ஈர்க்கும் விதம் என்பது இதுதான்.

நான் படித்த பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது அது நம் மனதில் ஏற வேண்டி பல உதாரணங்கள் யதார்த்த உதாரணங்கள் செய்திகள் என்று கோர்வையாகச் சேர்த்துச் சொல்லித் தருவார்கள். கூடவே நல் வார்த்தைகள் என்று. நம் கற்பனைத் திறன் வாசிக்கும் ஆர்வம் என்று பலவற்றை வளர்த்தார்கள். வெள்ளி என்றால் பள்ளி நூலகம் சென்று ஆங்கிலப் புத்தகம், தமிழ்ப்புத்தகம் ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும். கதை என்றில்லை, கட்டுரைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். திங்கள் அன்று தமிழ் வகுப்பிலும் சரி, ஆங்கில வகுப்பிலும் சரி நாங்கள் என்ன வாசித்தோம் என்ன புரிந்து கொண்டோம் என்பதை எல்லோரும் சொல்ல வேண்டும். வாசித்ததைச் சுருக்கமாக எழுதியும் கொண்டு வர வேண்டும். இப்படிப் பல திறமைகள் வளர்க்கப்பட்டன.

கல்வி பற்றிய பதிவு என்பதால் ஆர்வம் மேலிட்டுவிட்டது. அழகான பதிவு.

இன்னும் நிறைய இது பற்றிச் சொல்லலாம்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் வாழ்த்துகள்! ஒரு மாணவரின் மருத்துவப்படிப்பிற்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்துவருவதற்கு.

கீதா

ஜோதிஜி said...

100 சதவிகிதம் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் தளத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள உமாநாத் பேசிய பேச்சு அனைத்தையும் கேட்டேன் நன்றி.

ஜோதிஜி said...

ராம் உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நிச்சயம் இது போன்ற நிகழ்வுகள் இருந்துருக்க வாய்ப்புண்டு. சப்பைக்கட்டு கட்ட விரும்பவில்லை.

ஜோதிஜி said...

பார்க்கிறேன். நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S said...

உமாநாத் செல்வன் பேசிய தொகுப்பை நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை ஜோதிஜி! அகரம் நிஜமாகவே கல்விப்பணியை மட்டும் செய்கிறார்களா அல்லது கருப்புப்பணத்தை வெளுப்பாக்கும் அறக்கட்டளைகளில் இதுவும் ஒன்றா என்பதிலேயே எனக்கு சந்தேகங்கள் இருக்கிறது. ஒவ்வொருவர் பேசுவதற்குப் பின்னாலும் உள்நோக்கங்கள் இருக்கிறது என்பது அனுபவ பாடம்.

சிவகுமாரையும் இதில் பேசவிட்டிருந்தால் சாயம் அப்போதே வெளுத்திருக்கும்! பேசினாரா என்பது வீடியோவாக என் கண்ணில் இதுவரை படவில்லை.

ஜோதிஜி said...

சிவகுமார் குடும்ப ( சிவகுமார் சூர்யா கார்த்தி) வருமானத்தில் மொத்தம் 25 சதவிகிதம் பொதுக் காரியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. சிவகுமார் பேசியுள்ளார். இணைப்பு சிவப்பு கலரில் கொடுத்துள்ளேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

படித்ததில் பிடித்தது :-

உம் புள்ள பிரைவேட்லதானே படிக்குதுன்னு சூர்யாவப் பாத்து கேக்கே!

அட நாயே, அவன் என்ன சொல்றான் தெரியுதா.. ’எனக்கு வசதி இருக்கு நான் படிக்க வைக்கிறேன்..
வசதி இல்லாதவன் எனன பண்ணுவான்? 'அவன, அரசு கை விட்ருச்சி' னு சொல்றான்..

அப்பறம் 'மூணு மொழி கஷ்டம்' னு சொல்றான். அது அவன் குழந்தைக்கும் பொருந்தும்.

அப்பறம் 3 வது, 5 வது, 8 வது ல பொதுத் தேர்வு இது தேவை இல்லாத ஆணி னு சொல்றான்..

அப்பறம் இவ்ளோ படிச்சும்.. கடைசியா பட்டயம் படிக்க, மருத்துவம் படிக்க ஒற்றை நுழைவுத் தேர்வு என்றால், என் பிள்ளையும் கடைக்கோடி கிராமத்துல இருக்குறவன் குழந்தையும் ஒன்னு இல்ல, ஒரே வாய்ப்பு கிடைக்கல, அப்பறம் எப்படி ஒரே தீர்வு..
அப்போ இவளோ நாள் படிச்சது என்ன மயிருக்கு னு கேக்குறான்..

சும்மா... 'அவன் புள்ள அங்க படிக்குது அதனால அவன் பேசக்கூடாது' னு சொல்ற நாயே... அரசு பள்ளில படிக்குற புள்ளையோட அப்பன் சொன்னா எத்தனை பேருக்குத் தெரியும்.

அதோடு அவன் ஆரம்பிக்கும்போதே சொல்றான். நான் படம் லாம் நடிச்சு கொஞ்சம் பிரபலம்; நான் சொன்ன நெறய பேருக்குப் போகும் னு சொல்றான், தெளிவா சரியா தன்னோட புகழைப் பயன் படுத்திருக்கான்..

மாட்டு மூத்தர குரூப்புக்கு எங்கே இதெல்லாம் தெரியப் போகுது...?

#KappikulamJPrabakar
நன்றி: பா.மீனாட்சி சுந்தரம்

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தளவு தீர்க்கமான சிந்தனையை, தங்களின் பேச்சினிலே அறிவேன்...

சிறு திருத்தம் - தமிழ் :-

// லஞ்சம் என்பது சமூகத்தை மோசடிப்பாதைக்கு //

'ச' நடுவில் வந்தது தவறு... சரி போகட்டும்... சங்கிகளுக்காக அதை அடைப்புக்குறிக்குள் வர வேண்டும் என்று சட்டம் வரும் போது, தங்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறும்...

நன்றி...

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி! இங்கே பெரும்பாலான அறக்கட்டளைகளும் NGOக்களும் எதற்குப் பயன்படுகின்றன என்பதை அறியாதவரா நீங்கள்?

சூர்யாவின் திடீர்க் கோபாவேசத்துக்கு நிஜமாக என்ன காரணம் இருக்க முடியும்? இந்த அறக்கட்டளைகள் எல்லாம் வருமானவரித்துறையின் லென்ஸின் கீழே! முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அறக்கட்டளை அந்தஸ்து ரத்து! 47% வரிவிதிப்பு என்ற அறிவிப்பு காரணமாக இருக்குமோ? இந்தக் கேள்விக்கு அந்த லிங்கில் பதில் இருக்கிறதா?

ஜோதிஜி said...

மாட்டு மூத்திரம் நல்லது. வயலுக்கு.

ஜோதிஜி said...

இது குறித்த தகவல்கள் என்னிடம் இல்லை. நிச்சயம் கிடைக்கும் போது பதிவாக எழுதுகிறேன்.

ஜோதிஜி said...

மோடி மோசடி என்று சொல்லவர்றீங்க. விட்டுத் தள்ளுங்க ஒரு குரூப் 60 வருசம் ஆட்டையப் போட்டுச்சு. இவங்க ஆறாவது வருசத்துல தான் இருக்காங்க. பொறுத்திருப்போம்.