Monday, September 27, 2010

அறிமுகம் தமிழ்மணம் நட்சத்திரம்

இது 168 மணி நேர நட்சத்திரம்.  தேவியர் இல்லம் தமிழ் மண முகப்பில் ஒரு வாரம் நிரந்தரமாய் தெரியும். தமிழ்மணத்திற்கு வருகை தருபவர்களுக்கு நிச்சயம் அவர்களின் பார்வையில் பட்டு விடும். அட இப்படி ஒரு தளம் இருக்கிறதா என்றவர்களுக்கும், அடே இவரா என்பவர்களுக்கும் எனனுடைய வணக்கம்.

2004 ஆம் ஆண்டு முதல் வலையுலகில் எழுதிக் கொண்டுருப்பவர்கள் மேல்   சற்று பொறாமையாகக் கூட இருக்கிறது. 2002 முதல் தினந்தோறும் 15 மணிநேரத்திற்கு மேலாக தொழில் ரீதியாக கணினித் தொடர்பில் இருப்பவனுக்கு இப்படி ஒரு உலகம் இயங்கிக் கொண்டுருப்பதே 14 மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. 2009 ஜுலை மாதம் வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய எனக்கு செப்டம்பர் 24 அன்று இந்த இடுகையை நாகா உருவாக்கிக் கொடுத்தார். இவரும் ஏற்கனவே இந்த நட்சத்திரமாய் ஜொலித்தவர்.

திருப்பூர் கண்காட்சியில் வாங்கிய தமிழ் மென் பொருளை வைத்துக் கொண்டு எப்போதும் போல குழந்தைகளைப் பற்றி நாலு வரிகள் அடித்துப் பார்த்து விட்டு மறந்து போன நாட்கள் அது.. கல்லூரியில் மூன்று வருடமும் ஆண்டு மலரில் என்னுடைய கதை என்ற பெயரில் ஏதோ ஒன்று வந்துள்ளது. கல்லூரிக்கு என்னுடன் வரும் செந்திலுக்கு தினந்தோறும் பேரூந்தில் கூட்ட நெரிசலில் உள்ள பெண்களை இடித்துக் கொண்டே வர வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கல்லூரிக்குள் வருவான். இல்லாவிட்டால் மேய போய்விடுவான். அவனைப் பற்றி எழுதிய கதை அது.

கல்லூரியில் முதல் இரண்டு வருடமும் மொழிப்பாடம் சமஸ்கிருதம். காரணம் உடன் இருந்த பெண்கள்.  ஆனால் நான் அவன் இல்லை, கூட்டமில்லாத குறைக்கு என்னை கும்மி தட்ட வைத்து விட்டார்கள்.  . இந்த சமஸ்கிருதம் தான் என்னுடைய வாழ்க்கையையே மொத்ததில் மாற்றி விட்டது. இறுதியில் எழுதிய பத்து பேர்களின் விடைத் தாள்கள் எங்கேயோ தொலைந்து போய்விட் மக்கள் தெளிவாக சுழித்து விட்டு மறுபடியும் எழுத வைத்து விட்டார்கள். இல்லாவிட்டால் இன்று யுவர் ஆனர் என்று எவருக்காகவோ பொய் சொல்லிக் கொண்டு இருப்பேன்.
                                                                    (4 Tamil Media)
வேறு எந்த வகையிலும் எழுத்துலகத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மனதிற்குள் இருந்த நூற்றுக் கணக்கான ஆசையில் எந்த இடத்திலும் இந்த எழுத்து வாழ்க்கை இருந்ததும் இல்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏதோ ஒன்று எங்கேயோ இழுத்துக் கொண்டு சென்று கொண்டேயிருக்கிறது.  வாழ்வில் திட்டமிடுதலை முக்கியமாக கருதும் எனக்கு எப்போதும் மற்றவர்கள் நம்பமுடியாத எத்தனையோ "விளையாட்டுகள்" தான் இன்று வரைக்கும் நடந்து கொண்டுருக்கிறது.. நண்பர் சொன்னது போல் "ஏதோ ஒன்று".  அது தான் இந்த தேடலை அதிகப்படுத்தி இன்றைய சூழ்நிலையில் எழுத்து வடிவமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

தமிழ் ஆங்கில தட்டெழுத்துப் பயிற்சி இன்றுவரையிலும் பல நிலைகளில் எனக்கு உதவிக் கொண்டுருக்கிறது. இந்த இடுகை உருவாகி இடையில் நான் எழுதிக் கொண்டுருந்த தமிழ் மென்பொருளின் யூனிகோடை ரீடர் ஏற்றுக் கொள்ளாமல் அடம் பிடித்து துபாயில் இருந்த நாகாவை தூங்க விடாமல் படுத்தி எடுத்தது.

என் கணினியோடு இணைய வைத்து ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வந்தது.  நீங்கள் இடுகையில் எழுத வேண்டியவர் என்று தொடக்கத்தில் போராடிப் பார்த்த சுந்தர் ராமன் வேண்டுகோளை புறக்கணித்து தினந்தோறும் தட்டி எறிந்து கொண்டுருந்தேன்.  ஓரு நாள் நாகா பேசிய அரைமணி நேர பேச்சில் சர்வநாடியும் ஒடுங்கி அதன் பிறகே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.  அவர் கற்றுக் கொடுத்த தொடக்க பாடங்களின் நீட்சியே இன்றைய வளர்ச்சி. இந்த வளர்ச்சி கற்றுத்தந்த பாடத்தில் ஈழம் தொடர்பாக எழுதிக் கொண்டுருந்த போது கூகுள் தேடுதலில் தேவியர் இல்லத்தை கொண்டு சேர்த்தவர் சுடுதண்ணி நண்பரே. அவர் உருவாக்கிய புரிந்துணர்வு குறிப்பிட்ட காலத்தில் 36 சதவிகித புலம் பெயர்ந்தவர்களை கொண்டு வந்து சேர்த்தது.

நான் எழுதிய எழுத்துக்களை உணரும் வாய்ப்பு பெற்ற ஒவ்வொருவரும் செய்த உதவிகள் பட்டியலிட்டால் நீண்டு விடும். பதிவுலகத்திற்கு தேவைப்படும் மார்க்கெட்டிங் யுக்தியை விரும்பாமல் மனம் உணர்த்திய விசயங்களைத் தான் அதிகம் படைத்துள்ளேன். அதுவே இன்று தமிழ்மணம் முகப்பு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

நாகா பாடுபட்ட ரீடரில் தான் அதிகப்படியான நண்பர்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது நாகா அறிமுகப்படுத்தியது தான் என்ஹெச்எம்.  தமிழ் மென் பொருள். என்னுடைய வேகத்திற்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

நண்பர்கள் அதிகம் எழுதாத காரணத்தை இடையில் என்ஹெச்எம் பாதிப்பான போது தான் முழுமையாக உணர முடிந்தது.  ஹாலிவுட் பாலா சொன்ன போது தான் 90 சதவிகித நண்பர்கள் மொழிபெயர்ப்பு சமாச்சாரங்கள் மூலம் தான் இடுகை படைப்புகளை உருவாக்கிக் கொண்டுருப்பதும் அப்போதும் தான் புரிந்தது.,  அதன் மூலம் ஒரு வரி கூட என்னால் அடிக்க முடியவில்லை. 
                                                                           (4 Tamil Media)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளாமல், படபடப்பு, பரபரப்பு இல்லாத தேவியர் இல்லத்தோடு இணைத்துக் கொண்டவர்களுக்கும் மின் அஞ்சல் வாயிலாக படிக்கும் 90 பேர்களுக்கும் , ரீடர் தோழமைகளுக்கும் வணக்கம்.

"படிப்பார்கள். ஆனால் எதுவும் சொல்லமாட்டார்கள் நாமும் எதிர்பார்க்கக்கூடாது" என்று ஒவ்வொரு முறையும் இந்த எதார்த்த பதிவுலகத்தை புடம் போட்டு எனக்கு காட்டியவர் முதல் மற்றும் என்னுடைய இந்த வளர்ச்சியில் முதன்மை பூந்தளிர் கொடுத்தவரும், நிகழ்காலத்தில் எண்ணங்களை தன்னம்பிக்கை கருத்துகளால் உணர்த்திக் கொண்டுருக்கும் நண்பர்கள் வரைக்கும்  இருப்பதால் இன்று வரைக்கும் விடாமல் தொடர்ந்து கொண்டுருக்க முடிகிறது.

நான் எழுதத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே உங்கள் எழுத்துக்கள் தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகள் என்று சொன்ன அறிவுத்தேடல் கார்த்திகேயன்
பாலா போலவே இப்போது திரட்டிகளில் சேர்க்காமல் வலையுலகில் வளர்ச்சியடைந்துள்ளார்.

இன்று இடுகையில் வெளியிட்ட முதல் தலைப்பு வந்த தினம்.  இடுகையின் இரண்டாம் ஆண்டின் முதல் வாரம்.   வீட்டில் இரட்டைக் குழந்தைகளுக்கு பிறந்த தினம். வேறு சில தொழில் வாழ்க்கையில் வீசிய சூறாவளிக்குப் பிறகு தொடர்ந்து கொண்டுருக்கும் நல்ல செய்திகளோடு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மண குழுவினருக்கு தேவியர் இல்லத்தின் நல்வாழ்த்துகள்.

சில மாதங்களுக்கு முன் இரண்டு கணினிகளும் வைரஸ் பிரச்சனையால் பாதிப்பு அடைந்து செயல்படமுடியாமல் நின்ற போது தமிழ்மணத்தில் இருந்த வந்த இதே போன்ற நட்சத்திர அழைப்பு வந்துள்ளது. அன்று என் கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.  இந்த விசயமே இந்த அழைப்பு வந்த போது தான் தெரிய வந்தது. இந்தியா, ஈழம், திருப்பூர் தொடர் வரிசைக்குப் பிறகு இப்போது தான் இந்த பதிவுலகத்தைப் பற்றியும் இடுகையில் உள்ள தொழில் நுட்ப சமாச்சாரங்கள் குறித்தும் ஓரளவிற்கு தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நேரத்தில் வந்த இந்த அழைப்பு பொருத்தமாக அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதில் வரக்கூடிய கட்டுரைகள் கூட ஒரு தொடர் போலத்தான் நழுவிச்செல்லும்.. கட்டுரையின் தொடக்க எழுத்துகள் அரிச்சுவடி கற்றுத் தந்தவர்களின் நினைவாக தொடர்ந்து வரும்.
                                                                 (4 Tamil Media)
ஈழம் குறித்து எழுதிய விசயங்களை புத்தக வடிவமாக சற்று மேம்பட்ட தெளிவான பார்வையில் ஈழம் என்ற தீவு அறிவியல் மற்றும் ஆதாரப்பூர்வமான தகவல்களோடு உருவான கதை முதல் 2009 மே வரைக்கும் எழுதி முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் சாத்யமாகியுள்ளது.,

எதிர்பாரத விதமாக திருப்பூர் குறித்து எழுதியவைகளும் தகுதி என்று சொல்லி இரண்டு புத்தகங்களும் இப்போது இறுதிக்கட்ட தட்டச்சு எழுத்துப் பிழைகள் திருத்தும் வேலை நடந்து கொண்டுருக்கிறது. நிச்சயம் இந்த புத்தகங்கள் ஆவணம் போல உதவலாம். முழுமையான ஈழ வரலாறாக இல்லாத போதும் கூட முடிந்தவரைக்கும் பரபரப்பு பார்வையில் படைக்காமல் காரண காரியங்களோடு ஒவ்வொரு நிகழ்வுகளையும் தொடர்பு படுத்தி எதிர்மறை நியாயங்களையும் ஒன்றாக சோர்த்துள்ளேன்.

இந்த சுய விளம்பரம் வேறொரு சமயத்தில் பேசலாம். ஒரே ஒரு அறிந்த பிரபல்யம் தவிர என்னுடைய சக பயணியாய் பயணித்துக் கொண்டுருக்கும் நண்பர்கள் தரும் அணிந்துரை தான் புத்தகத்தில் வரப் போகின்றது. அத்துடன் ஒவ்வொரு தலைப்பிலும் வந்த முக்கியமான விமர்சனங்கள் அவரவர் தள முகவரியோடு தொடக்க பக்கங்களில் கோர்த்து முடித்துள்ளோம்.  புத்தக வாசிப்பு மட்டும் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் இப்படி ஒரு வலை உலகம் இருப்பதை உணர்த்தக்கூடும்.

தொடக்க கால கட்டுரைகளை துபாயில் உள்ள சுந்தர் ராமன், நாகா இருவரும் விடாமல் படித்து என்னை சங்கடப்படுத்தாமல் ஊக்குவித்த விமர்சனங்கள் என்றும் மற்க்கமுடியாத ஒன்று. காரணம் புத்தமாக்க கோர்த்து முடித்த போது தான் நான் எழுத்து என்ற பெயரில் செய்துள்ள அவசர கோலங்களை புரிந்து கொள்ள முடிந்தது. .மாற்றங்கள் பலவிதங்களிலும் என்னை மாற்றியுள்ளது.

இதுவரை வலைப்பூவில் எழுதிய மொத்தத்தில் 90 சதவிகித விசயங்கள் புத்தகமாக வருகின்றது.

பின்னூட்டம்,விமர்சனம்,ஓட்டு,பதிவுலக அரசியல் போன்றவற்றை தாண்டி என்னுடைய தனிப்பட்டசொந்த வாழ்க்கை முதல் தொழில் மற்றும் புத்தகம் வருவது வரைக்கும் எனக்காக உழைத்துக்கொண்டுருக்கும் நண்பர்களுக்கும் என் எழுத்துக்களை (சு) வாசித்துக் கொண்டுருக்கும் கண்களுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத அத்தனை நண்பர்களுக்கும் வணக்கம்.

முக்கியமானவர் என்னை மிரட்டியுள்ளார்.  "படுத்தி எடுக்காமல் பக்குவமாய் எளிதாய் கொடுத்து விடு" என்ற அன்பான மிரட்டல் வேறு. இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் இயல்பாய் இங்கு அமைந்து விட இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

இங்கு நண்பர் சாமிநாதன் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை கொடுத்தது இப்போது நினைவுக்கு வருகிறது.  "தினந்தோறும் இரண்டு என்று வெளியிட்டுக் கொண்டுருககிறீர்கள்.  பகிங்கரக்கடிதம் வரப் போகிறது" என்றார். ஓய்வில் தட்டியதில் எழுதி தொங்கவிட்டாகிவிட்டது. வாய்ப்பு இருக்கும் போது படித்துப் பாருங்கள்.

இதுவரையில் பகிர்ந்து கொள்ளாத ஒன்று உண்டு.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரே இங்கு தேடி வந்து பார்த்த ஒரு நபர் பற்றி எழுத இந்த வாரத்தை பயன்படுத்தலாம்,. என் அப்பாவுக்கு அடுத்தபடியாக என் வாழ்வில் அத்தனை மாற்றங்களை உருவாக்கியவர். இன்று வரையிலும் என்னை காத்துக் கொண்டுருக்கும் ஒரு நல்ல மனிதர்.. அப்பாவிடம் போட்ட சண்டைகளைவிட இவரிடம் அதிகப்படியான சண்டைகளை போட்டுக் கொண்டுருக்கின்றேன். மூத்த பத்திரிக்கையாளர்.  கலைஞர் அவர்களின் உள்வட்டத்தில் இருந்தவர்.  என எழுத்துக்களை அவர் பாராடட இன்னமும் பாடுபட்டுக் கொண்டுருக்கின்றேன்.  
                                                               (4 Tamil Media)
வாழ்ந்து கொண்டுருக்கும் ஊரைப்பற்றி எழுதியதைப் போல வாழ்ந்த ஊரைப்பற்றி சற்று பழைமைபேசிப் பார்க்கலாம். அது இறந்த காலம் என்றாலும் ஓரு ஊரிலே தொடங்கிய அந்த வாழ்க்கை என்பது அது ஒரு கனாக் காலம் போல் உள்ளது.

84 comments:

 1. நட்சத்திர வாழ்த்துகள் தலைவரே!! அடிச்சி ஆடுங்க... தினமும் வந்து மேட்ச் பார்க்கிறோம்:)

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஜோதிஜி..

  அன்புடன்
  அரவிந்தன்
  பெங்களுர்

  ReplyDelete
 3. ஜொலிக்க வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 4. முதல் வணக்கம், தங்களது நட்சத்திர நாளும், மகள்கள் பிறந்த நாளும் ஒன்றாக இருப்பது சிறப்பு. நல்வாழ்த்துகள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் நல்வாழ்த்துகள். உங்களிடம் தூங்கிக் கொண்டிருந்த எழுத்துத் திறமையை தட்டி எழுப்பி ஓடவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், பாய்ச்சல் நன்றாக வந்து கொண்டு இருக்கிறது

  ReplyDelete
 5. நட்சத்திர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்துக்களில் அனுபவ அறிவு எப்போதுமே வெளிப்படும்! இப்போதும்....

  ReplyDelete
 7. எனக்கு மிகவும் பிடித்த,என் தர வரிசையின் நம்பர்.1 பதிவர் நட்சத்திரமாய் ஜொலிக்கும் இவ்வேளையில் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. நட்சத்திர வாழ்த்துக்கள் ஜோதிஜி.. :)))

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் திரு ஜோதிஜி...

  உங்களை சந்திக்கும் நாள் தள்ளி கொண்டே செல்கிறது. வெகு விரைவில் சந்திப்போம்.

  நன்றி

  தமிழ் உதயன்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஜோதிஜி :-)

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்....முதல் பதிவே முத்தான ஒன்றானது

  ReplyDelete
 12. நண்பா........!

  நட்சத்திர வாழ்த்துக்கள்........! ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா தேவியர் இல்லத்தை நட்சத்திர அந்தஸ்தில் காண்பதற்கு...
  :) :) :)
  குட்டி குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்...!
  மேலும் மேலும் எழுத்துலகத்தில் மேலேறி செல்ல என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா..........!

  ReplyDelete
 13. நட்சத்திரவாழ்த்துக்கள்...தேவியர் வாழ்த்துக்கள்...தங்களின் தனித்துவமே....அலங்காரங்கள் அற்ற ஆர்ப்பாட்டம் இல்லாத எதையும் மிகைப்படுத்தாத அமைதியான இயலபான நடை. தமிழ்மண நட்சத்திர இடுகையாக வந்திருக்கிறது..வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. நட்சத்திரம் பாரெங்கும் ஜொலிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் ஜோதிஜி!

  ReplyDelete
 16. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏதோ ஒன்று எங்கேயோ இழுத்துக் கொண்டு சென்று கொண்டேயிருக்கிறது. வாழ்வில் திட்டமிடுதலை முக்கியமாக கருதும் எனக்கு எப்போதும் மற்றவர்கள் நம்பமுடியாத எத்தனையோ "விளையாட்டுகள்" தான் இன்று வரைக்கும் நடந்து கொண்டுருக்கிறது.. நண்பர் சொன்னது போல் "ஏதோ ஒன்று". அது தான் இந்த தேடலை அதிகப்படுத்தி இன்றைய சூழ்நிலையில் எழுத்து வடிவமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

  இதே தேடல்தான்.....பலர் எழுத வரும் காரணம் என் நினைக்கிறேன்.

  ReplyDelete
 17. ஜோதிஜி,
  உங்கள் புகழ் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. நட்சத்திரமே!!!! இனிய வாழ்த்து(க்)கள்.

  இந்த வாரம் தூள் கிளப்பப்போறீங்கன்னு முதல் இடுகையே கட்டியம் கூறுது!!!

  ஜமாய்ங்க.

  வாசகர்களுக்கு விருந்துதான்!!!!

  ReplyDelete
 19. நட்சத்திர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. இதான்யா மொத பந்துலயே சிக்ஸர் அடிக்கிறதுங்குறது! அங்கங்க இனிப்புத்துகள்களைத் தூவி தொடர்ந்து வர்ற எறும்பு மாதிரி எங்கள ஆக்கிட்டீங்க... கலக்குங்க தலைவரே! காத்துட்டே இருக்கோம் ஃபுல்மீல்ஸுக்கு! அதுவும் காரைக்குடி செட்டிநாட்டு மீல்ஸுக்கு!

  ReplyDelete
 21. நட்சத்திர வாழ்த்துகள் ஜோதிஜி.

  உங்கள் இடுகைகளில் தெரியும் உழைப்பு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று

  மென்மேலும் தொடருங்கள். நாங்கள் பல அரிய விசயங்களைத் தெரிந்துகொள்கிறோம்.

  நன்றி.

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் .... சும்மா பூந்து விளையாடுங்க ... வர்ரோம்

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் கணேசன்!!

  ReplyDelete
 24. விண்மீன் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் ஜோதிஜீ !!! காத்திருக்கிறோம், நிறைய எழுதுங்கள்...நன்றி.

  ReplyDelete
 26. I HAVE JUST ENTERED THE BLOG WORLD.I LEARN FROM YOUR BLOG. BEST WISHES.

  ReplyDelete
 27. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
  தமிழ் மண நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டதற்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
  --வானதி

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. ஜோதிஜி வணக்கம், தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள், நான் நினைத்ததை ப்போலவே உங்கள் பதிவுகள் புத்தகமாகி..ஆவணமாக பபோகிறதே அது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது..."நாளும் அன்பில் தொடர்வோம் ஜோதிஜி."

  ReplyDelete
 31. நான் மிக விரும்பும் பதிவர்.கண்டிப்பாக எனக்கு உங்களின் நட்சத்திர வாரம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. கலக்குங்க நண்பரே

  ReplyDelete
 32. ஜோதிஜி வணக்கம்.நீங்கள் அமர்ந்தியிருக்கும் இந்த நடசத்திரக் கதிரை நிறையவே யோசிக்கப்போகிறது இந்த வாரம் முழுதும்.இப்பவே இப்படி மூச்சு விடாமல் தன் மனசை கொட்டித் தீர்க்கிறாரே....
  இன்னும் என்னவெல்லாம் கொட்டப் போகிறார்.
  ம்ம்....நடக்கட்டும்.வாழ்த்துகள் மட்டும் இப்போதைக்கு.கலக்குங்க !

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் ஜோதிஜி. !!

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ஜோதிஜி..

  ReplyDelete
 35. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க ஜோதிஜி... உங்களைப்பற்றின அறிமுகமும் தாங்கள் இந்த வலைப்பக்கத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள சிரத்தையும் புரிகிறது. உங்களை ஊக்குவித்தவர் என்கிற முறையில் நாகாவையும் வணங்குகிறேன்.

  இந்த நட்சத்திரவாரமும் பயனுள்ளதாக அமையுமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 36. பாசக்கார பயபுள்ள ரவிக்கு

  குழந்தைகளை பிறந்த அந்த நேரத்தில் உண்டான மன உணர்வுகளை விட இன்று காலை அதிக அவஸ்த்தைகள். ஒரு இடத்தில் மின்சாரம் போய் விடும். மற்றொரு இடத்தில் நெடுஞ்சாலை பணி காரணமாக நெட் ஓயரை தினமும் பிடுங்கி விட்டுவாங்க.

  குறிப்பிட்ட நேரத்தில் இதை வெளியிட முடியுமா? என்று யோசித்துக் கொண்டே சர்வதேச நேரத்தை கண்க்கிட்டுக் கொண்டு ஏற்றி விட்டு முதலில் ஏழு பேர்கள் உள்ளே வந்ததும். அப்துல்லா சென்ஷி வரைக்கும் பார்த்த அப்புறம் நெட் ஒயரை மொத்தமாக பிடுங்கிட்டாங்க. வீட்டில் மின்சாரம் பணால். இப்பதான் வர விமர்சனம் கொடுத்த மக்கள் கூட யோசித்து இருக்கக்கூடும்.

  ஒரே சமயத்தில் கண்ணன், அரவிந்தன் தோழி, எஸ்கே,சென்ஷி ரொம்ப நன்றி மக்களே.

  ReplyDelete
 37. அப்துல்லா.........

  நீங்கள் கொடுத்த வாகனத்தில் பயணித்து வந்து என்னிடம் பேசிவிட்டு சென்ற நண்பர் (பெயர் போட்டால் கொன்று விடுவார்) முதல் இங்க என் மீது அதிக அக்கறையுடன் இருக்கும் நண்பர் உங்களைப் பற்றி சொல்லியுள்ள உங்களின் சேவை மனப்பான்மைகளைப் பற்றி நான் புரிந்து கொண்டது அதிகம். அதையே தான் உங்கள் விமர்சனம் மூலம் நிரூபித்து இருக்கீங்க. ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 38. பூந்தளிர் சாமிநாதன் உங்களுக்கு நான் தனியாகவே ஒரு இடுகை போட வேண்டும். என்னுடைய தொடக்க கிறுக்கல்களை அங்கீகரித்தவர் அல்லவா?

  நன்றி தமிழ் உதயன். நிச்சயம் சந்திப்போம். நீங்கள் கேட்டுக் கொண்டபடி முயற்சிக்கின்றேன்.

  வாங்க கிரி. ரொம்ப நன்றிங்க.

  நன்றி சதிஷ்குமார்.

  நண்பா லெமூரியா உன்னோட (உரிமையோட) விமர்சனங்களும் இந்த வார்த்தைகளைப் போலவே சிறப்பு.

  வால்பையன் ரொம்ப பெரிசா வாழ்த்து உங்ககிட்டே இருந்து கிடைத்து உள்ளது. நன்றி அருண்.

  திருப்பூர் தல ரமேஷ். படித்த வரிகளைக் கண்டு மனதிற்கு ஒரு சிரிப்பு லேசா வந்துருக்குமே?
  இப்பத்தான் எழுத முடிந்தது.

  கண்ணகி தொடக்கம் முதல் என்னையும் நம்பி தொடர்ந்து இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கீங்க. நன்றிங்க.

  ReplyDelete
 39. தமிழ் உதயம் ஈழம் சார்ந்த உங்கள் விமர்சனங்கள் புத்தக வடிவில் வருகிறது. என் எழுத்துக்களை விட உங்கள் விமர்சனம் தான் அதிக ஆழம். நன்றிங்க.

  டீச்சர் பயமுறுத்தாதீங்க. நீங்க போட்ட போடு என் முன்னால் பெரம்பு வச்சுக்கிட்டு யாரோ நிக்கிற மாதிரியிருக்கு. சுந்தர் நாகாவுக்குப் பிறகு நீங்க. உங்கள் அக்கறை வெளியுலகம் தெரிந்தால் பொறாமை பெருமை இடுகையாக மாறிவிடும்.

  கிளியனூர் இஸ்மத் ரொம்ப நன்றிங்க.

  ராசா விந்தை மனிதா நீ போட்ட போடுல எழுதிய செட்டிநாட்டு மீல்ஸ் டீச்சருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ரொம்ப நன்றி ராசா.

  பன்னிக்குட்டி ராமசாமி என்ற சில்பா குமார் , வாங்க வாங்க. குட்மாரினிங்க ஆபிசர் .ரொம்ப நாளா படிச்சு சிரிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.

  ReplyDelete
 40. சுந்தர். ரொம்ப நன்றி குருஜீ. வாழ்க்கை விளையாட்டை எல்லாத்தையும் நீங்களும் பார்த்தது தானே. பரமபதம் ஆட்டம் முடிஞ்சு ஏணிப்படி இப்பத்தான் கிடைச்சுருக்கு.... பார்க்கலாம்...

  வினவு

  நன்றி தோழர்களே..

  பழமைபேசி ரொம்பவே ரசித்தேன். நன்றிங்க..

  நித்திலம் சிப்பிக்குள் முத்து. உங்கள் தேடலுக்கு நன்றிங்க.. முயற்சிக்கலாம்

  முதல் வருகை தந்துள்ள பாலா வருக.

  ராஜநடராஜன் உங்கள் அடக்கமான வாழ்த்துரை ரொம்பவே என்னை பயமுறுத்துவதாக உள்ளது. முடிவு வரும் போது உங்களின் ஏதோவொரு தாக்கமான விமர்சனம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

  நன்றி வானதி. இளங்கோ.

  ReplyDelete
 41. நிறைய போ் நிறைய உங்களை பக்குவபடுத்தியுள்ளார்கள். நிறைய கஷ்டங்களுக்கு அப்புறம் பக்குவமாய் ஆகிவிட்டீர்கள். வாழத்துகள் ஜோதிஜி

  ReplyDelete
 42. ஆசிரியரே உங்கள் அக்கறைக்கும் ஆழ்ந்த புரிந்துணர்வு உள்ள தேடலுக்கும் நன்றிங்க. உங்க ஆசிர்வாதம்.

  நந்தா ஆண்டாள்மகள்

  உங்களைப் போன்றவர்களின் விருப்பங்கள் என்னைப் போன்றவர்களை எழுத வைத்துக் கொண்டுருக்கிறது.

  ஙே பாருங்க ஹேமா உங்க பேரை அடிச்சாலும் இரண்டு பேருக்கும் நடக்கிற சண்டை தான் இங்கே முதல் வார்த்தையாக வந்துள்ளது. மணிமகுட வாழ்த்துகள் ஹேமா.

  ரவி அதியமான வழக்கறிஞருக்கு என் வாழ்த்துகள் மற்றும் அன்பான மரியாதை.

  பாலாசி உங்கள் தாக்கம் எனக்குள் நிறையவே உண்டு. விரைவில் உங்களை இதே இடத்தில் பார்க்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 43. நட்சத்திர வாழ்த்துகள் ஜோதிஜி. :)

  ReplyDelete
 44. ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
  நன்றி செந்தில். நீங்களும் ஒரு காரணம்.

  வாங்க திருநாவுக்கரசு பழனிசாமி. நன்றி.

  தவறு............

  நன்றி. அனுபவமும் தவறுகளும் ஒன்றாக சேரும் போது சில சமயம் எழுத்தாக மாற வாய்ப்புண்டு.

  ReplyDelete
 45. வாழ்த்துக்கள் ஜோதிஜி

  ReplyDelete
 46. அன்பு அண்ணனுக்கும் குழந்தைகளுக்கும் என் நட்சத்திர முத்தங்கள்....

  ReplyDelete
 47. அன்பு அண்ணனுக்கும் குழந்தைகளுக்கும் என் நட்சத்திர முத்தங்கள்....

  ReplyDelete
 48. நம்ம வாழ்த்துக்களுக்கூட பதில் சொல்லிட்டீங்களே சார், ரொம்ப நன்றி!

  ReplyDelete
 49. ஒரு வார ஜொலிப்புக்கு சந்தோஷம்ண்ணே..! வாழ்த்துக்கள்ண்ணே..!

  ReplyDelete
 50. காலையிலே நேரத்தில பார்த்தேன், தமிழ்மணத்தில் நீங்கள் வரவில்லை. சரி பின்னர் வருவீர்கள் என்று நினைத்தேன்.

  மகிழ்ச்சி ஜோதிஜி. அதிலும் இடுகையின் இரண்டாம் ஆண்டின் முதல் வாரம். வீட்டில் இரட்டைக் குழந்தைகளுக்கு பிறந்த தினம். என்பது மிகமிக மகிழ்ச்சி..

  எல்லாமே பொருத்தமாக அமைந்து வந்திருக்கிறது
  வாழ்த்துகள்.

  இடுகையில் என்னைக் குறிப்பிட்டதற்கும் நன்றிகள்:)
  தொடர்ந்து கலக்குங்க :)

  ReplyDelete
 51. வணக்கம் ஜி

  தமிழ்மண நட்சத்திர வாரம் மிகவும் சிறப்பாக வரும் என நிச்சயமாக தெரிகின்றது.

  ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராக உறுவாகிக்கொண்டு இருக்கின்றீர்கள் என இந்த முதல் நட்சத்திர இடுகையே தெளிவாக்குகின்றது.

  குழந்தைகளுக்கும் உங்களுக்கும் அன்புடன்

  இராஜராஜன்

  ReplyDelete
 52. M...M..M.. another mile stone in 168hrs. Best Wishes!!

  My Birthday Wishes to your little princesses.

  ReplyDelete
 53. தமிழ் அனானிSeptember 27, 2010 at 6:38 PM

  வாழ்த்துக்கள் திரு. ஜோதிஜி அவர்களே. தமிழ்மணத்தில் தெரியவில்லையென்றாலும் நீங்கள் நட்சத்திரமே.

  ReplyDelete
 54. தமிழ் அனானிSeptember 27, 2010 at 6:40 PM

  குழந்தைகளுக்கும் எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பரே

  ReplyDelete
 55. செல்வநாயகி நான் அதிக மரியாதை வைத்துள்ள நீங்க வாழ்த்து சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

  தமிழ் அனானி

  யார் என்று தெரிந்தாலும் உங்கள் வாழ்த்துகளுக்கு என்னுடைய மரியாதையான வணக்கம்.

  வாங்க ரதி, குட்டி இளவரசிகளுடன் இப்போது தான் பட்டியல் படலம் முடிந்து உள்ளே வந்தேன்.

  இராஜராஜன் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துகிறேன். ச்சும்மா பயம் காட்டாதீங்க..........

  நன்றி சிவா.உங்கள் தனிப்பட்ட அக்கறை என்றுமே நான் மறக்கக்கூடாத ஒன்று.

  தமிழா வாங்க தமிழா. ஒரே ஒரு குறை தான் சரவணன். உங்க பங்காளி ஹாலிவுட் பாலா வராம இருக்காரே?

  ராமசாமி மீண்டுமா? அகெய்ன் குட் ஈவீனிங் ஆபிசர்.

  செந்தில் உங்களின் தனிப்பட்ட தொடர் உரையாடலுக்கும் அக்கறைக்கும் நன்றி ராசா.

  நசரேயன் வாங்க. வருகைக்கு நன்றி.

  ஷங்கா நட்சத்திர இடுகை அறிமுகத்தில் தல தலைப்பு. ஆகா..... நல்லாயிருக்குதுல்லே.......

  ReplyDelete
 56. நட்சத்திர வாழ்த்துக்கள் ஜோதிஜி.

  ReplyDelete
 57. நட்சத்திர வாரத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜோதிஜி. உங்கள் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு. உங்கள் வாரம் நல்ல பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  ReplyDelete
 58. நட்சத்திர வாழ்த்துக்கள். குழந்தைகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேடுதல் வேட்டை தொடரட்டும்.

  ReplyDelete
 59. நட்சத்திர வாழ்த்துக்கள் தலைவரே.. தூள் கிளப்புங்க..:))

  ReplyDelete
 60. சார்..தமிழ்மணம் நட்சத்திரம்..இதோட முக்கியத்துவம் நிஜமா எனக்கு தெரியாது..பின்னூட்டங்கள் பார்த்து தான் கொஞ்சமா புரியுது. வாழ்த்துக்கள் & நன்றி

  ReplyDelete
 61. நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 62. நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே..எப்பொழுதுமே கனமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் நீங்கள்.. இந்த வாரத்திலும் அசத்துவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. வாழ்த்துகள்

  ReplyDelete
 63. வேலுப்பிள்ளை பிரபாகரனே தேடி வந்து பார்த்த அந்த நபர் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்

  ReplyDelete
 64. நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 65. வாழ்த்துகள் ஜோதிஜி:). ஒரு நாளைக்கு ஒன்றென்பதில்லை. எல்லாமே நட்சத்திரப் பதிவென்பதால் இரண்டாவது பகிருங்கள். அவ்வளவு விடயமிருக்கிறது உங்களிடம்.

  ReplyDelete
 66. நன்றி பாலாஜி அய்யா. அய்யய்யோ யூத் பாலாஜி.... பாருங்க...........

  உங்களை கதிர் இப்படித்தான் அழைக்கச் சொல்லி இருக்கிறார். முயற்சிக்கின்றேன் ஐயா.

  வணக்கம் டிவி ராதாகிருஷ்ணன். உங்கள் வாழ்த்துரைக்கு நன்றி.

  வெற்றிவேல் வாங்க. உங்கள் அக்கறைக்கு நன்றி.

  நன்றி அன்பரசன்.

  கொழந்த

  ரொம்பவே வியந்து விட்டேன். நினைத்ததை அப்படியே சொன்ன போது ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தது. குழந்தை மனது உங்களுக்கு.

  வாங்க தேனம்மை கார்த்திக் தர்ற பட்டம் நீங்க தந்துட்டீங்க.

  கீதா..........

  தலைவர் உலகம் இந்தியா சுத்துற வாலிபனாக இருந்தாலும் முதல் ஆஜர் ஆயிட்டராரு. என்னை மாதிரியே கவுண்ட டவுன் பார்த்துக்கிட்டே இருந்துருப்பாரு போலிருக்கு. நீங்க? குழந்தைகளுக்கு என் வாழ்த்துகள்.

  வணக்கம் வல்லிசிம்ஹன். சமீப காலமாக பழகி ரொம்ப அக்கறையாய் மற்றொரு டீச்சர் போல. உங்கள் ஆசிர்வாதத்திற்கு நன்றிங்க.

  நன்றி மரா.

  ReplyDelete
 67. அன்பின் ஜோதிஜி

  தமிழ் மண நட்சத்திரத்துக்கு நல்வாழ்த்துகள்

  மேன் மேலும் ஒளி வீசி - வனம் முழுவதும் பிரகாசிக்க - நல்வாழ்த்துகள்

  அருமையான அறிமுகம்.

  இடுகையின் இரண்டாம் ஆண்டு முதல் வாரம் - இனிய இரட்டையரின் பிறந்த நாள் - நடசத்திரப் பதிவு. அனைத்துக்கும் நல்வாழ்த்துகள் ஜோதிஜி

  நட்புடன் சீனா

  ReplyDelete
 68. சீனா அய்யா

  உங்கள் வருகை எனக்கு கிடைத்த அங்கீகாரம். நன்றிங்க.

  ReplyDelete
 69. உளமார்ந்த மகிழ்ச்சிகளும், வாழ்த்துக்களும் ஜோதிஜி. இனிமையான துவக்கம், சிறப்பாக நடத்தி முடிக்க வாழ்த்துக்கள் :). சுருங்கக்கூறியிருக்கும் சுயவிளம்பர :D சங்கதிகள் குறித்து மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் தொடரவும், உயரவும் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 70. சுருங்கக்கூறியிருக்கும் சுயவிளம்பர :D சங்கதிகள் குறித்து மிக்க மகிழ்ச்சி

  வணக்கம் தல

  அப்புறம் நம்ம பீப்பீயை நாம ஊதுனா நல்லாவா இருக்கும்.

  நக்கல் ஜாஸ்தி.

  எப்ப எழுதப் போறீங்க.........

  குட்டி இளவரசிக்கு வாழ்த்துகள்.......

  ReplyDelete
 71. நட்சத்திர வாழ்த்துக்கள் தலைவரே.. பட்டையை கிளப்புங்க.....

  ReplyDelete
 72. வாழ்த்துகள் கணேசன் அண்ணே..

  ReplyDelete
 73. நட்சத்திர வாழ்த்துகள்.

  ReplyDelete
 74. தமிழ்மணத்தில் நட்சத்திரமாக
  மின்ன நல்வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே.

  ReplyDelete
 75. வாழ்த்துக்கள் ஜோதிஜி

  ReplyDelete
 76. வாழ்த்துக்கள்.
  4 நாட்கள் ஊரில் இல்லாததால் தாமதமான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 77. வாழ்த்துக்கள் நண்பா! சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள். எஞ்சாய்!! :)

  ReplyDelete
 78. பின்னோக்கி மற்றும் தெகா உங்கள் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

  பாலாஜி பாரி நீச்சல்காரம் அபுல்பசர் தாமஸ் ரூபன், மாதேவி ஸ்டார்ஜன் உங்கள் அணைவருக்கும் ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 79. நீச்சல்காரன் என்பது மாறி விட்டது நண்பா..

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.