Tuesday, September 28, 2010

இனிய நினைவுகள்

பூங்காவில் இருந்து குழந்தைகளை வெளியே அழைத்து வர முடியவில்லை.

மரங்களும் அருகே தெரிந்த பொட்டல்காடுகளும் வேறொரு உலகத்தை பார்த்தது போல் இருந்துருக்கலாம். வீட்டுப் பாடங்களும் விளையாட முடியாத சோகங்களும் இன்று முடிவுக்கு வந்தது போலிருந்தது . அவர்கள் போட்டுருந்த செருப்புகள் எங்கோ அனாதையாய் கிடக்க அவர்களின் ஓட்டமும் கத்தலும் மரங்களில் இருந்த பறவைகளை படபடக்க வைத்தது.
பூங்காவை ஓட்டியிருந்த நண்பன் முருகேசனின் வீட்டின் முன்புறம் அவனின் தங்கை வெளியே நின்று கொண்டு எவருக்கோ எதிர்பார்த்து காத்துக் கொண்டுருப்பது தெரிந்தது. என்னை கவனித்தால் கடத்தப்படும் செய்தி மூலம் அவனின் அம்மா வீட்டுக்குள் வர அழைப்பு விடுப்பார்.  மொத்தமும் மாறிவிடும்.

பூங்காவில் இருந்த சறுக்கு மர தகரத்தில் நீட்டிக் கொண்டுருந்த துருப்பிடித்த கம்பிகள் என்னை யோசிக்க விடாமல் தடுக்க குழந்தைகளை பிரித்து வண்டிக்குள் அடைத்து பயணித்த தெருவின் இறுதிப் பகுதி பங்களா ஊரணித் தெரு. நடுநாயகமாக குளம் அருகே ஆலமரம். எப்போதும் போல மரத்தின் கீழே பிள்ளையார் சிலை.  ஒவ்வொரு பகுதிகளுக்கும் இருக்கும் வெட்டி ஆபிசர்களைப் போல இந்த சந்துக்குள் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக வந்தால் இரவு நேரம் தவிர எப்போதும் சீட்டாடி கோஷ்டிகள் நிறைய பேர்கள் இருப்பார்கள்.

ஒவ்வொரு சந்தின் பெயரும் வினோதமான பெயர்க்காரணமாக இருக்கும்.. நடுவீதி, நடராஜபுரம்,கீழப் பெருமாள் கோவில், மேலப்பெருமாள் கோவில், யெமு வீதி இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கும்.  ஒரு நீண்ட சந்தில் அதிகபட்சம் இருபது வீடுகள் இருக்கலாம்.  அடுத்த தெருவுக்கு பிரிக்கும் பாதைகள் எனபது ஒரு முழு வீட்டின் அளவு.  மொத்தத்தில் ஒரு வீட்டின் மொத்த அளவு முடியும் போது இடையில் உள்ள சந்து பிரிந்து அடுத்த வீட்டுக்கு தொடக்கமாக இருக்கும். முழுவீட்டையும் சந்தின் வழியே நான்கு புறமும் சுற்றி வரும் போது லேசாக மூச்சு வாங்கும..

குழந்தைகள் அருகே கட்டி வைக்கப் பட்டுருநத கைப்பந்து வலையுடன் ஒன்றிப் போயிருந்தார்கள்.பார்த்துப் பழகிய சிலர் கண்களுக்குத் தெரிந்தார்கள். என் பார்வையில் பட்டது எதிரே இருந்த வள்ளிக்கண்ணு வீடு.  என்னுடைய பள்ளித் தோழி.  அறிமுகம் இல்லாதவர்கள் பார்க்கும் முதல் பார்வையில் இவள் மனநலம் குன்றியவளோ? என்று தோன்றக் கூடும்.  எப்போதும் எதையாவது தின்று கொண்டு இருக்கும் வள்ளிக்கண்ணு.ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போதே மாவு அரைக்கும் எந்திரம் போல அவள் மட்டும் கமுக்கமாக தின்று கொண்டுருப்பாள். . 

வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 26 வயதுக்குள் வரிசையாக பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார். மிகப் பெரிய கோட்டை போன்ற வீட்டில் அவளும் குழந்தைகளும் கூட ஒரு வயதான வேலைக்கார பாட்டி உடன் சத்துணவு பணியாளராக வாழ்க்கையை குழந்தைகளுக்காக கடத்திக் கொண்டுருக்கிறார்..  ஏழு மணி இருட்டு என்பது வீட்டின் கடைசி வரைக்கும் சென்று வரமுடியாத பயத்தை தரும் அளவிற்கு விஸ்தாரமான வீடு.

படிப்பு மண்டையில் ஏறாது என்று உணர்ந்த அவளின் பாட்டி சேர்த்து வைத்து இருந்த நகைகளைக் காட்டி எவனோ ஒருவனின் தலையில் கட்டி வைத்து விட்டார். கட்டியவனின் கல்லீரல் கழுதை போல் சுமந்து ஒரு நாள் ரத்தமாக துப்பியது, . அன்று தான் அந்த மொடாக்குடியனின் மற்ற வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது.

வள்ளிக்கண்ணுவின் அப்பா பர்மாவில் மற்றொரு குடும்பத்துடன் இருக்க,  காத்து இருந்த அம்மா கண்கலங்கிக் கொண்டே போயும் சேர்ந்துவிட பாட்டி தான் வள்ளிகண்ணுவை வளர்க்க வேண்டியதாகி விட்டது. ஜாதி, சமூகம், இனம் என்பதற்கெல்லாம் மேலானது பணம் என்ற வஸ்து.  பங்களாளி சண்டையில் பெரிய வீடு இப்போது நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டுருக்கிறது. சொத்தில் சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியுடன்  முகப்பில் மட்டும் இருந்து கொள்ள வள்ளிக்கண்ணுவுக்கு அனுமதி கிடைத்து நண்டு சிண்டுகளுடன் வாழ்ந்து கொண்டுருக்கிறார். கைநிறைய காசு இருந்தால் அவர் நம்மவர்.  இல்லாவிட்டால் யார் அவர்?

அம்மா இல்லாத குறை போக்க அதிக செல்லம் கொடுத்து வளர்ந்த வள்ளிக்கணணுக்கு வெகுளித்தனம் அதிகம்.ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டுருக்கும் போது "டேய் கணேசா கடலை அச்சு வேண்டுமாடா?" என்று கேட்டவளை எப்படி மறக்க முடியும்?.

சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் இது போன்ற பிரமாண்ட வீடுகள் தான்..

முதல் இருபது வருட வாழ்க்கையில் அவஸ்ய தேவைகளைத் தவிர்த்து வெளியே எங்குமே சென்றது இல்லை. நான் பார்த்த ஊர்களை எளிதில் பட்டியலிட்டு விடலாம். 

கண்டணூர்,கோட்டையூர்,காரைக்குடி,தேவகோட்டை,,ஆர் எஸ் மங்கலம், திருவாடனை, பிள்ளையார்பட்டி,திருப்பத்தூர்,கல்லல், கோனாபட்டு கண்டரமாணிக்கம் கீழச்சீவல்பட்டி கீழப்பூங்குடி கானாடுகாத்தான் பள்ளத்தூர்,கோட்டையூர் என்று எண்ணிக்கைகளுக்குள் அடக்கி விடலாம். அரசாங்க ஊழியர்களுக்கு தண்டணைப்பகுதி என்று சொல்லப்பட்ட பிரிக்கப் படாத இராமநாதபுர மாவட்டத்தில் தான் பிறந்தேன்.  பசும்பொன் என்று மாறி இன்று சிவகங்கை மாவட்டம் என்று வந்து நின்றுள்ளது. 


பெயர்கள் மாறியதே நான் பார்த்தவரைக்கும் மிகப் பெரிய மாறுதல்கள் கால் நூற்றாண்டு காலத்தில் ஒன்றுமே நிகழவில்லை. துணை ,இணை அமைச்சராகி வர்த்தகம் நிதியாக மாறியது.  இன்று உள்துறை வரைக்கும் வளர்ந்த போதும் எப்போதும் மக்கள் சொல்லும் "கெட்டி"யாகத் தான் சீனாதானா மயிரிழையில் தப்பித்து மானங்கெட்ட வெற்றியில் மேலே கோலோச்சுக் கொண்டுருக்கிறார்.

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் இந்த சமூக மக்களின் வாழ்க்கை தொடங்கியதாக வரலாறு சொல்கிறது. காலமாற்றத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங் களைச் சுற்றிய 9 கிராமங்களில் தொடக்கத்தில் குடியேறினர். இன்று பொதுப் பெயராக மொத்தமாக செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது புதுக்கோட்டை, சிவகங்கை,இராமநாதபுரம் போன்ற ஊர்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றிலும் உள்ள 96 கிராமங்களில் பரவி வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

வியாபார நிமித்தமாக மன்னர் காலங்களில் வைசியர் குலம் என்று தொடங்கி இருக்க வேண்டும். வர்ணாசிர்மம் என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உழுத்துப் போன சமாச்சாரங்கள் இங்கு தேவையில்லை. மொத்தத்தில் தொழில் அடிப்படையில் இந்த ஜாதி மூலக்கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் இதில் மகத்தான் ஆச்சரியம் ஒன்று உண்டு.

தொடக்கத்தில் ஒவ்வொரு தனி மனிதர்களும் தாங்கள் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு தொழில் அடிப்படையில் உருவான சமூக அமைப்பில் உருவான சாதிகள் கிமு நாலாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகள் கோலோச்சிய புத்த சமண மதங்கள் முன்னிலையில் இருந்தாலும் இந்த ஜாதி மூலக்கூறு மட்டும் கவனமாக சிதையாமல் தொடர்ந்து வந்து கொண்டுருந்தது.  இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றும் பலரையும் படுத்தி எடுத்துக் கொண்டுருக்கிறது.

மன்னர்களுக்கு உதவும் வகையில் வைசியர் குலத்தில் உருவானது தான் இந்த செட்டி என்ற சொல்லாக வந்துருக்க வேண்டும். இதில் உள்ள பல கிளைநதிகளை முதன் முதலாக திருப்பூருக்குள் வந்த போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

24 மனை, தெலுங்கு, கன்னடம்,வளையல்கார என்று பிரிந்து போய்க் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நண்பன் சொக்கலிக்கத்தின் மகள் ”எனக்கு ஏன் மீனாள் என்று பெயர் வைத்தீர்கள்? நான் அனுஷ்கா என்று மாற்றிக் கொள்ளப் போகிறேன்” என்று அடம் பிடித்துக் கொண்டுருக்கிறாள்,  என்ன செய்ய முடியும்? காலமாற்றம் என்று கழிசடை எண்ணங்களையும் சேர்த்து தானே வளர்க்கும்.

ஏறக்குறைய 60 நகரத்தார் கிராமங்கள். 9 விதமான கோவில்களின் அடிப்படையில் 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டியை அடிப்படையாக் கொண்டு நிலைபெற்று உருவான சமூக மக்கள்.  ஒவ்வொரு விதமான பாரம்பரியம். 

சிங்கப்பூர் முருகன் கோவிலில் முன்புறம் உள்ள அந்த சிறிய கல்வெட்டை உற்று கவனித்தால் 1859 ஆம் ஆண்டு அங்கு வாழ்ந்த பெருமக்களின் சேவையை நமக்கு உணர்த்தும்.  அங்கு மட்டுமல்ல மலேசியாவில் உள்ள பினாங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி வரும் போது நாம் இருப்பது வெளிநாட்டிலா இல்லை தமிழ்நாட்டின் ஒரு பகுதியா என்று நம்மை திகைப்படைய வைக்கும். பர்மா வரைக்கும் சென்று பொருள் ஈட்டிய சமூகம் ,

இது எந்த அளவிற்கு இருந்தது தெரியுமா?  

ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.   அன்றைய காலகட்டத்தில இலங்கையின் மொத்த நிதி ஆதாரத்தில் 90 சதவிகித பங்களிப்பு நம்மவர்களின் கையில் தான் இருந்தது.  உச்சக்கட்டமாக இன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அண்ணாமலை செட்டியார் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்த நெல்லை விற்பதற்கு பயன்படுத்திய நாடு இலங்கை.

தமிழ் நாட்டில் இருந்து நெல் அரிசி மூட்டைகளை இலங்கைக்கு கொண்டு செல்ல தனியாகவே கப்பல்கள் வைத்து இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.

இன்று அத்தனை வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றது. தேக்கு மர கதவுகளும், பெல்ஜியத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அலங்காரங்களும் பொலிவிழந்து போய்விட்டது.  150 ஆண்டுகள் கடந்ததும் இன்று ஒரு சுவரில் கூட நான் விரிசலை பார்த்தது இல்லை. முட்டைச் சாற்றை குழைத்து முழுமையான அர்ப்பணிப்பும் கலைநுணுக்கமாய் கட்டிய மொத்த வீட்டின் வாரிசுகளும் புலம் பெயர்ந்து எதையோ தேடி எங்கேயோ வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 


வாழ்வின் கடைசி கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். 

வள்ளல் அழகப்பர் இல்லையென்றால் வரப்பட்டிக்காட்டு வாசியாக என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையும் முடிந்து போயிருக்கும். கவிஞர் கண்ணதாசன் இல்லையென்றால் வாய் உச்சரித்துக் கொண்டு இருக்கும் தமிழ் வார்த்தைகள் பாமரனுக்கு போய்ச் சேர்ந்துருக்குமா?  இல்லை நடிகரைத் தான் நாடாள வைத்துருக்குமா?  சமூக காவல்ர்களை நினைத்துக் கொண்டுருந்த போது எதிரே கீனா சானா என்றழைக்கப்பட்ட கிறுக்கு சண்முகம் வந்து கொண்டுருந்தான்.................பள்ளித் தோழன். பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன் .  இப்போது பார்த்துக் கொண்டுருக்கும் வேலை கிராமத்து டாக்டர்.

33 comments:

காமராஜ் said...

நட்சத்திரப்பதிவரானதற்கு வாழ்த்துக்கள் ஜோதிஜி.

அன்பரசன் said...

நினைவுகள் அருமை.

Thomas Ruban said...

//பெயர்கள் மாறியதே நான் பார்த்தவரைக்கும் மிகப் பெரிய மாறுதல்கள் கால் நூற்றாண்டு காலத்தில் ஒன்றுமே நிகழவில்லை//

அப்படியா!!!

//மானங்கெட்ட வெற்றியில் மேலே கோலோச்சுக் கொண்டுருக்கிறார்.//

உங்களுக்கு தைரியம் அதிகம்தான்...

அருமையான நடை,நூலிலை போல் மெல்லியதாய் நகைச்சுவை ரசித்துப் படித்தேன் பகிர்வுக்கு நன்றி சார்...

Thomas Ruban said...

//பத்தாம் வகுப்பை மூன்று முறை எழுதியும் தேறமுடியாமல் தவித்தவன் . இப்போது பார்த்துக் கொண்டுருக்கும் வேலை கிராமத்து டாக்டர்.//

பத்தாம் வகுப்பு எங்க செட்டில் ஒருவன்தான் பெயில் ஆனால் எங்கள் எல்லோரையும்விட நல்ல நிலையில் அரசாங்க வேலையில் உள்ளான்.

தமிழ் உதயம் said...

யார் இருக்க போகிறார்கள் என்கிற நம்பிக்கையில், இவ்வளவு பெரிய பெரிய வீடுகளை கட்டினார்கள். பார்த்து பார்த்து கட்டிய வீடு, இன்று பார்த்து கொள்ள ஆளில்லாமல். ஆளரவமற்ற அந்த வீடுகள் சொல்வதென்ன. "உலகில் ஏதும் நிரந்தரமில்லை. நானே நிரந்தரமானவன் என்று ஆடுகிறார்களே. அவர்களை பற்றி என்ன சொல்ல". என்று நினைக்குமோ.

Praveenkumar said...

மிகவும் விரிவான கட்டுரை. தமிழ்மணம் நட்சத்திரப்பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள் நண்பரே..!

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க.. ஊரை கைப்பிடிச்சு காட்டினமாதிரி இருக்கு.. மனதிற்குள் சம்மளமிட்டு அமர்ந்திருக்கும் மனிதர்களை போகிற பாதையில் காட்டியது நல்லாயிருக்குங்க.. எதையும் மேம்போக்காக சொல்லாமல் இண்டு இடுக்கு எதையும் விடாமல் பதியும் உங்களின் இடுகைகள் ஒன்வொன்று சிறப்பாக அமைகிறது..இதுவும்...

Unknown said...

/// கைநிறைய காசு இருந்தால் அவர் நம்மவர். இல்லாவிட்டால் யார் அவர்?///இதுதான் இன்றைய நிலைமை.மிகச்சிறந்த பதிவு நண்பரே,இது தொடர வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

காரைக்குடியை மீண்டும் உங்கள் கண்வழியே பார்ப்பதில் மனம் நிறைகிறது. வெகு நிதானமான அழகு நடையில் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துகள். ஜோதிஜி.

எஸ்.கே said...

//வாழ்வின் கடைசி கட்டத்தில் வாழும் பெரியவர்களுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் ஏக்கமான நினைவுகளைத் தவிர வேறொன்றும் துணையில்லாமல் துணிவே துணையாக வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். //
எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள். பல வரலாற்றின் சின்னங்கள் இன்று அநாதையாய் உள்ளன.

ஹேமா said...

காதலைச் சொன்னாலும் கருமாதியைச் சொன்னாலும் ஈழம் தொட்டுச் செல்லாமல் ஒரு பதிவு இல்லை.அதெப்படி ஜோதிஜி.உண்மை சொல்லுங்க.நீங்க ஈழத்தவர்தானே !

ஜோதிஜி said...

வாங்க காமராஜ் உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. அடர்கருப்பு போல வெயிலான் சொல்வது போல கரிசல் ராஜா அல்லவா?

தாமஸ் ரூபன் ஒவ்வொருமுறையும் வியக்க வைத்துக் கொண்டு.... நன்றிங்க

வாங்க அன்புக்கு அரசன். உங்கள் அன்புக்கு நன்றி.

தமிழ் உதயம் நீங்கள் சொல்வது போல பலமுறை இந்த வீடுகளைப் பார்த்து வெட்டவெளி வெறுமையாய் உணர்ந்து இருக்கின்றேன். ஒரு வீட்டை இடிக்க வேண்டுமென்றாலும் பல மாதங்கள் பிடிக்கும். அந்த அளவிற்கு பார்த்து பார்த்து கட்டிய வீடுகள்.

பிரவீண் குமார் உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

பாலாசி ஏற்கனவே நீங்க கலக்குற ஆளு. விமர்சனமும் உணர்ந்து கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க.

ஜோதிஜி said...

நந்தா ஆண்டாள் மகன்

உண்மை தானே நண்பா. பணம் பத்தும் செய்யும். இருந்தால் பங்காளி. இல்லாவிட்டால் பன்னாடை.

வாங்க வல்லிசிம்ஹன் இந்த நடை வெகு விரைவில் அரசியல் பக்கம் போகப்பபோகுது நீங்களும் டீச்சரும் வரமாட்டீங்க.

எஸ்கே உங்கள் விமர்சனமே ரொம்ப அருமையாக வந்துருக்கு.

பல வரலாற்றின் சின்னங்கள் இன்று அநாதையாய் உள்ளன.

Jerry Eshananda said...

ஆச்சரியம்...

ஜோதிஜி said...

ஹேமா நான் ஈழத்தவன் தான்.


என்னவொன்று அங்க உள்ளேயே வாழ்ந்து கொண்டு இன்னமும் கூட எதையும் உணராமல் அல்லது உணர விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவர்கள் போல் அல்லாமல் வாழும் வரைக்கும் வருவது போவது அத்தனையையும் கணக்கில் வைத்துக்கொள்ளும் ......... தமிழன்.

இது குறித்து தடம் மாறும் பதிவில்உண்டு ஹேமா

vinthaimanithan said...

வெகு நுணுக்கமாக ஒரு இனக்குழுவினரின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றீர்கள் ஜோதிஜி! அவர்களின் வாழ்வும் வளமையும்.... யம்மாடி! ஒவ்வொரு சமூகக்குழுவினருக்கும் இம்மாதிரியே சுவாரஸ்யமான வரலாறு இருக்கும் இல்லையா?! ஹ்ஹ்ம்ம்... எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுகின்றது.

vinthaimanithan said...

//ஹேமா நான் ஈழத்தவன் தான். // பூரிப்பாய் இருக்கின்றது கம்பீரமானைந்த முழக்கம் கேட்டு... உணர்வால் தமிழன் என்று எழுந்து நிற்கும் எல்லோரும் ஈழத்தவன் தானே?!

//என்னவொன்று அங்க உள்ளேயே வாழ்ந்து கொண்டு இன்னமும் கூட எதையும் உணராமல் அல்லது உணர விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டு செல்பவர்கள் //

யாரச் சொல்றீங்கன்னு எனக்கு ஏதோ வெளங்குற மாதிரி இருக்கு... நான் நெனக்கிறது சரியா???

லெமூரியன்... said...

ஜாதிய முறை இங்கு இவ்வளவு கடுமையாக பின் பற்ற படுவதற்கு இன்னொரு விளக்கம் கேள்விப்பட்டேன் ஒரு தோழனிடமிருந்து........
உலகின் பழமையான ஜீன்களை கொண்ட , அதாவது முதல் மனித இனம் இங்கிருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டும் என்ற கூற்றுகேர்ப்ப கண்டு பிடிக்க பட்ட மரபணுக்கள் தென்னகத்தில் உள்ள குறிப்பிட்ட இரு இனங்களில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டிருபதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிரதென்றான்.....

ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று உணர முடிந்தது.......
மரபணு சார்ந்தே அனைத்து விடயங்களும் அடங்கியிருக்கிறது ஒரு இனத்தில்......தங்களின் இன பழக்கவழக்கம் வீரம் காதல் காமம் என்று எதையும் வேறினதிர்க்கு கடத்தக் கூடாதென்ற ஒரு பார்வை இருதிருக்க வேண்டும் இந்த ஜாதிய வேறுபாடுகளுக்கு மூலக் காரணம்.......
அதில் சற்று குள்ளநரித்தனம் படைத்த இனங்கள் ஆதி இனத்தை அடிமையாக்கிவிட்டதேன்பது என் கணிப்பு...........

இலங்கையிலும் ஆதியினம் தமிழினமே .என்பது எப்படி சமயோசிதமாக பின்வந்த........, நீங்கள் சொன்னதைப் போல சிங்கத்தை புணர்ந்தவர்கள் தங்களை பூர்வாங்கக் குடிகள் என அடையாளப் படுத்தியதைப் போல்..........

லெமூரியன்... said...

ராமநாதபுர வட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்று அறிந்த உடனேயே எதிர்பார்த்தேன் இது போல் ஒரு பதிவை...........
கொடூரமான ஜாதிய அடக்குமுறைகள் இன்றும் பின்பற்ற படுகிற பகுதியாச்சே.......!

லெமூரியன்... said...

\\ஈழத்தில் சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் கொழும்புச் செட்டி என்ற தெருவில் நடந்த நிதி ஆதார பரிவர்த்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று......//

மிக சிறிய தொகையே கொண்ட யூத இனம் அமெரிக்காவிடம் பணத்தை அள்ளிகொடுத்து
ஆக்கிரமித்தார்கள்......
இவர்கள் வாரிக்கொடுத்து தேவைகளின் முக்கியத்துவைத்தை புரியவைத்திருந்தால் கூட நிலைமை
அங்கு சற்று வேறுபட்டு போயிருக்குமோ என்னவோ???

சுடுதண்ணி said...

மண் மணக்கும் பதிவு :). சென்று வந்தது போல் இருக்கிறது. தொடருங்கள் :)

பெருசு said...

மெர்ச்சண்ட் ஆர்டர் கிடச்சாலே சும்மா ரவுண்டு கட்டி அடிப்பீங்க.இப்போ டைரக்ட்.

அடி பின்னுங்க.

நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு.

கோவி.கண்ணன் said...

எங்கேயோ துவங்கி எங்கேயோ பயணித்திருக்கிறது பதிவு. இருந்தாலும் தொடர்ச்சி இருந்தது.

//வள்ளிக்கண்ணுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 26 வயதுக்குள் வரிசையாக பெற்றெடுத்த நாலைந்து பெண் குழந்தைகளுடன் இப்போது விதவை கோலத்துடன் தனியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.//

இது தான் இந்திய திருமண அமைப்புகளின் சிக்கல், 30 வயதுவரையிலும் கூட பெண்கள் பல்வேறு காரணங்களினால் திருமணமே ஆகாமல் இருக்க, அதே வயதில் எல்லாவற்றையும் முடித்ததாக மூலைக்குத் தள்ளப்படும் கைம்பெண்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

ஜோதிஜி said...

விந்தை மனிதன்

ராசா நீ பாட்டுக்கு சூடுவச்சுட்டு போயிடாதே. நான் குறிப்பிட்டுள்ள அர்த்தம் வேறு.அது ஈழம் சார்ந்த தொடரப்போகும் கட்டுரைகளில் வரும். இப்ப எழுத ஆரம்பித்தால் டீச்சர் திட்டுவாங்க. நேரம் இல்லாமல் தூரத்தில் இருக்கும் நட்புக்கூட்டம் அதிகம். அவர்கள் வேறு விதமாக நினைக்கக்கூடும்.

கண்ணன்

இது பற்றி நிறைய எழுத விசயங்கள் உண்டு.

பெருசு

இரண்டு மூணு நாளா எதிர்பார்த்து காத்து இருந்தேன். வார்த்தைகளை ரொம்பவும் ரசித்தேன்.

சுடுதண்ணி

இருவர் நிலம் வெவ்வேறு உருவம் வெவ்வேறு ஆனால் நோக்கம் ஒன்று. (இப்பத்தான் கொஞ்சம் புரியிற மாதிரி எழுத ஆரம்பிச்சு இருக்கேன் சொன்ன சாமி நாதன் இதை படித்து திட்டாதீங்க)

லெமூரியன்

சுயவிளம்புரம் (தமிழீழம் பிரபாகரன் கதையா புத்தகத்தில் உள்ளது நண்பா?)

வாங்க ஜெரி.

Ravichandran Somu said...

காரைக்குடி, சிவகங்கை நான் இதுவரை பார்க்காத ஊர்கள். உங்கள் நினைவலைகளுடன் செட்டி நாட்டை சுற்றிக்காட்டியதற்கு நன்றி. தென் தமிழகத்தில் மதுரை, பழநி, கொடைக்கானல் தவிர மற்ற ஊர்களுக்கு சென்றது கிடையாது. தென் தமிழகத்தைச் சுற்றிப் பார்க்க எப்போது நேரம் அமையப் போகிறதென்று தெரியவில்லை!

சிங்கப்பூரில் எனக்கு மிகவும் பிடித்த கோவில் டேங் ரோடு முருகன் கோவில்தான். நேற்று கூட கிருத்திகை என்பதால் கோயிலுக்கு போய் வந்தேன். போன வருட கடைசியில் கும்பாபிஷேகம் முடிந்து எல்லா பணிகளும் நிறைவு பெற்று கோவில் இப்போது மிக அருமையாக உள்ளது.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

நல்லதொரு இடுகை - செட்டி நாட்டின் அனைத்து ஊர்கKஉக்கும் சென்றிருக்கிறீர்கள். நன்று. இனிய நினைவுகளை அலசி அசைபோட்டு ஆனந்தித்து பகிர்ந்தமை நன்று

நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா

துளசி கோபால் said...

போங்க ஜோதிஜி.


இப்படி எழுதுனா, நாங்க வரிக்கு வரி சொல்லிப் பாராட்டத்தான் வேணும். அதுவே நாலு பதிவாகிருமே.

ஆனாலும், கானாடுகாத்தான் போய் அந்த அரண்மனைகளை (வீடுன்னு சொல்றமாதியா இருக்கு?) பார்த்து பிரமிச்சு நின்னுருக்கேன். அத்தாம் பெரிய வீட்டில் ஒரு அறையில்தான் இப்போ இருந்துக்கிட்டு வீடு முச்சூடும் பூட்டிவச்ச கோலங்களை நினைக்கும்போது மனசுக்கு பாரமாப் போயிருச்சு.

ஆமாம். டாக்குட்டர் இப்போவும் ப்ராக்டீஸ் செய்யறாரா?

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான நினைவுகள் ... அது ஒரு கனா காலம் .... நிறைந்த குளத்தின் புகை படம் மனதுக்கும் மிக நிறைவாக இருந்தது

ஜோதிஜி said...

ரவி உங்களைப் போல எனக்கு மதுரை தொடங்கி உள்ளே உள்ள கம்பம் போடி தேனி கடைசியில் குமுளி வரைக்கும் அந்தப் பகுதிகள் எப்படி இருக்கும் என்றே தெரியாது.

வாங்க சீனா ஐயா... நீங்க செட்டிநாட்டு வழித்தோன்றல் அல்லவா. வாழ்த்துகள்.

டீச்சர் உங்க கானாடுகாத்தான் அரண்மனை பார்த்து தான் நானே அந்த வீட்டைப் பற்றி புரிந்து கொண்டேன்.

சுந்தர் இந்த படமே ஆயிரம் கதைகள் சொல்லக்கூடியது. ஒருத்தர் கூட மிகப் பெரிய அளவிற்கு வந்து விடவிலலை. நடுத்தரவர்க்கத்து பிரதிநிதியாகத் தான் இருக்கிறார்கள்.

ரோஸ்விக் said...

எந்த ஊருண்ணே நீங்க. நம்ம ஊர்ப்பக்கம்னு தெரியுது... ஆனா? :-)

தொடர்புகொள்கிறேன் விரைவில்.

suneel krishnan said...

அடடா இப்படி நம்ம பகுதி பத்தி எல்லாத்தையும் எழுதிடீங்கலே :)
படிக்கும் போது எனக்கும் நம்ம பகுதிய பத்தி எழுதனும்னு ஒரு ஆர்வம் வருது ..சரியா நீங்கள் எந்த ஊரு ? கானாடுக்காதான் ?

Rathnavel Natarajan said...

Very Good Blog, Sir. You have provided with Map & available possible details. Previously to visit Karaikkudi I have enquired with one Dinamalar Friend Mr Ramachandran and visited during Karaikkudi during 2008. Please provide more informative blogs, Sir. My heartiest appreciations. Keep it up Sir.

Anonymous said...

நீங்க எந்த ஊரா இருந்தா எனன இப்ப. எங்க ஊரு பக்கத்த நல்லா எடுத்துச் சொன்னீங்க. எழுதுவது ஒரு கலை. உங்களுக்கு கை வநதிருக்கு. வாழ்க.வாழ்க.

காலம் எல்லாம் மாறி மாறி வரும். மீண்டும் வசந்தம் பிறக்கும்.