அந்த 42 நாட்கள் - 11
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மக்களிடம் இன்று (25 March 2020) பேசினார்.
" கொரோனா வைரஸ் உலக நாடுகளில் காட்டு தீ போலப் பரவி வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்போம். மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. 10,158 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக உள்ளன. அரசு சார்பில் 3,780 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
